படிப்பது அனைத்து இடுகைகளையும்தான், ஏற்றுக்கொள்வது பொருத்தமான கருத்துகளை மட்டுமே, மற்றவை செய்திகளைப் போல்தான்,
அவர்களோடு முரண்பாடு கொள்வது எப்போதும் கிடையாது.
எங்கும் எதிலும் நல்லவைகளே என் கண்ணுக்கு தெரிகின்றன
இதோ நீங்கள் ஏற்கனவே அறிந்த வலைப்பதிவுகள் தான், பிடித்த இடுகைகள் மாறுபடலாம். மீண்டுமொரு முறை இங்கு..
தினமும் படிப்பது 115 பேரின் இடுகைகள், இது நாள்தோறும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது அதில் சில
ஷண்முகப்பிரியன்-
பழகுவதற்கு எளிமையானவர், திரைத்துறைக்கு இவர் கிடைத்தது அதன் பாக்கியம் என நான் நினைக்கிறேன்
யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இது வரை நீங்கள் சந்தித்திராத எதிரி
ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு
உடல்,உள்ளம்,உலகம்
இறந்து விடு,யோகியே இறந்து விடு.(நூல் அறிமுகம்)
லதானந்த்-
இவரைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவரது இடுகைகளைப் படிக்கும்போதே உற்சாகம் பற்றிக்கொள்ளும். கடைசிவரியில் லதானந்த் ’டச்’ இருக்கும். வனத்துறையில் இருந்தாலும் அனைத்தையும் நன்றாக அவதானித்து எழுதுபவர்.
பதிவர்கள் பலவிதம்!
வாஹனப் ப்ராப்தி
கேள்வி பதில் போட்டாச்சு
இரு வாட்சிப் பறவை
வெற்றியா தோல்வியா?
ஓம்கார்
இவரின் எழுத்துக்கள் நவீன காலத்திற்கேற்ப புரியும்படி வாழ்வை ஆன்மீகவாழ்வாக, வேதகால வாழ்வாக வாழ்வது என்ற விசயங்களை எந்த சிரமும் இல்லாது நாம் அறியத் தருபவர்.
ஸ்ரீ சக்ர புரி - ஆன்மீகத் தொடர்
விசேஷ கால தாத்பர்யம்
இளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்
ப்ராண சக்தி
ஹதயோகம்
ஜோதிடத்தில் பரிகாரங்கள் வேலை செய்யுமா?
கோவி.கண்ணன்
யாதும் நாடே யாவரும் பாரீர் - 1
பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1
இறைவன் படைக்கிறானா ?
இறை நம்பிக்கை முற்றிலும் தவறா ?
மதுரை திருக்காட்சி பகுதி 1
என் கணேசன் -
இவரது ஒவ்வொரு இடுகையும் ஏதாவது ஒரு வாழ்வை உயர்த்தும் சிந்தனைகளை தாங்கி நிற்கும், தொடர்ந்து படித்து வந்தால் மனதில் மாற்றம் உறுதி.
விதியை வென்ற விடாமுயற்சி
மனதோடு போராடாதீர்கள்!
மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?
கொடுங்கள்.. பெறுவீர்கள்!..
இதுவும் கடந்து போகும்.
கதிர்,
தனியாக எந்த இடுகையையும் சுட்ட வேண்டியதில்லை, சமுதாய விழிப்புணர்வுக்கு நம் பங்கு என்ன எனபதை தெளிவாக உணர்த்தக்கூடிய வகையில் அற்புதமாக எழுதுபவர்.
இவரைப் பற்றி கிராமப்புறத்தில் வழக்கில் இருக்கும் கொங்குதமிழின் சிறப்புச் சொற்களை
நமக்கு மறக்காமல் இருக்கவும், வருங்கால சமுதாயம் உணரவும் எழுதி வருபவர்.
படித்துப் பாருங்கள், இணையமும், வலைப்பதிவும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நம் கையில்தான், தேர்ந்தெடுத்து வாசியுங்கள், நாளை சந்திப்போம், நட்புகள் பெருகட்டும்
நிகழ்காலத்தில் சிவா
:)
ReplyDeleteநீங்கள் சுட்டிய அனைத்தையும் படிக்க முயற்சிக்கிறேன்.
வாழ்த்துகள்
சண்முகப்ரியன், ஓம்கார் இருவரையும் சொல்லவே வேண்டாம். நம்மால் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள முடியுமோ அது தான் பலம்.
ReplyDeleteகோவி கண்ணன், லதானந்த மற்ற இடுகைகள் உள்ளே நுழைந்து சில பதிவுகள் படித்து பார்த்து இணைக்கப்பட வேண்டிய தரம் இருந்தது.இணைத்து விட்டாகியாச்சு..
முருகா முன்னேறுங்கள்.
//கோவி.கண்ணன் said...
ReplyDelete:)
நீங்கள் சுட்டிய அனைத்தையும் படிக்க முயற்சிக்கிறேன்.
வாழ்த்துகள்//
அவ்வ்வ்வ்வ்....
அப்ப இத்தன நாளா நீங்க எழுதறத நீங்களே படிக்கிறதில்லையா..:))))
சரி.. ஓட்டல் வைத்திருக்கிறவர் தன் ஓட்டலில் சாப்பிடத மாதிரி..:))))))
//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...//
ReplyDeleteஎந்த இடுகையாக இருந்தாலும் பின்னுட்டத்தையும் சேர்த்து படிப்பது என் வழக்கம் நண்பரே
சிலசமயம் இடுகையை விடவும் பின்னூட்ட உரையாடல் சுவாரசியம் தரும்..
நன்றி ஜோதிஜி
மிக்க நன்றி சிவா....
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஎன்னையும் மதிச்சு சான்றோர்களில் வரிசையில் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்பின் சிவசு
ReplyDeleteஅருமையான இடுகைகள் - அனைவருமே அறிந்தவர்கள்தான் - இருப்பினும் இன்னும்பொரு முரை படிப்பதற்கு வாய்ப்பளித்தமைகு நன்றி
நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவிஜய்
தாங்கள் அறிமுகப் படுத்திய அனைவருடனும் நான் தொடர்பு பூண்டுள்ளேன்.
ReplyDeleteபழமைபேசி நம் ஊர்க்காரராயிருப்பதால் நான் அவரை மட்டும் பிடிக்க முடியவில்லை!அவரைப் பின்னூட்டங்களில் மட்டும் தரிசிக்கிறேன்.
மற்றபடி எனது நண்பர்கள் உங்களுக்கும் நண்பர்களே என்பதில் எனக்கு ரெட்டை மகிழ்ச்சி,சிவா.
ஆமாம் இந்த ’வலைச்சரம்’ என்றால் என்ன?
இரண்டாம் நாள் வாழ்த்துகள். சிறப்பான சுட்டிகளுக்கு நன்றியும்.
ReplyDeleteநல்ல வார்த்தைகள் சொல்லி குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி சிவா அவர்களே. வாழ்த்துகள்.
ReplyDelete\\கதிர் - ஈரோடு said...
ReplyDeleteமிக்க நன்றி சிவா..\\
வாழ்த்துக்கள் கதிர்...
@திகழ்
ReplyDelete@கவிதை(கள்)
@வானம்பாடிகள்
வாழ்த்துக்கள் நண்பர்களே
@ஸ்வாமி ஓம்கார் said...
கடமையைச் செய்கிறேன், அவ்வளவுதான் :))
@cheena (சீனா)
@ஷண்முகப்ரியன்
@N.Ganeshan
நன்றியும் வாழ்த்துக்களும்..