அன்பின் சக பதிவர்களே
ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் "பிரியமுடன் வசந்த்" தனது பொறுப்பினை, அருமையான முறையில், மிக அழகாக, படங்களுடன், பல நல்ல பதிவர்களை பல தலைப்புகளில் வரிசைப்படுத்தி, அறிமுகம் செய்து அவர்களீன் பல நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்தும், விளக்கம் அளித்தும், நிறைவேற்றி, நம்மிடமிருந்து மிக மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன்.
அடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் தண்டோரா பொறுப்பேற்க வருகிறார்.
தண்டோரா அவர்களின் பெயர் "மணிகண்டன்". திருமணமாகி ஒரே ஒரு மகள். சென்னையில் வசிக்கிறார். சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு அறியப்பட்ட விளம்பரப்பட இயக்குனர். குறும்படங்களும் இயக்கியுள்ளார். அதில் குடியின் விளைவை மூன்றே நிமிடங்களில் முகத்தில் அறையும் "சியர்ஸ்" எனும் குறும்படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தற்போது "வருகை" எனும் குறும்படம் எடுத்து வருகிறார். மேலும் கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே கவிதையாக மாற்றும் வல்லமை படைத்தவர். அரசியலில் தீராத ஆர்வமுடையவர். அரசியல் குறித்த சூடானவிமர்சனங்கள், வயிற்றை வலிக்க செய்யும் நகைச்சுவையென பின்னிப் பெடலெடுப்பார்.
அவரை வலைச்சரத்தின் சார்பினி்ல் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நட்புடன் சீனா
நல்வாழ்த்துக்கள் தண்டோரா!
ReplyDeleteநன்றிகள் வசந்த்!
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் தண்டோரா!
ReplyDeleteதண்டோராவுக்கு வலைச் சர வாழ்த்துக்கள்.
ReplyDeleteமணிஜீ.. கலக்குங்க...
ReplyDeleteவாழ்த்துகள்.
வாழ்த்துகள் தண்டோரா..
ReplyDeleteவருக... வருக
Thank you, Vasanth. Best wishes, Thandora.
ReplyDeleteகலக்குங்க தலைவரே. வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் தண்டோரா..!
ReplyDeleteவாழ்த்துக்கள்...மணி அண்ணே...
ReplyDeleteவாழ்த்துரைத்த அன்பு உள்ளங்களுக்கு காலைவணக்கம்..நன்றியும் கூட...
ReplyDeleteவசந்த்க்கு நன்றிகள்,தண்டோராவுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDelete