அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
முதலில் என்னை வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக இருக்க அழைத்து இன்ப அதிர்ச்சி தந்த சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுக பதிவிட்ட கயல்விழி முத்துலெட்சுமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவு.
நான் மூன்று மாத காலத்திற்கு முன்பு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன். எழுத்தின் மீது இருந்த ஆசையால் எழுத வந்தவன். ஆரம்பத்தில் எனக்கு பிடித்த மூன்று இசைத்திரட்டுகள், என்னை அழவைத்த கருவாச்சி காவியம் என சில பதிவுகளை எழுதிவிட்டு யாராவது வந்து பார்ப்பார்களா? கருத்து சொல்வார்களா? என்று காத்திருப்பேன். philosophy prabhakaran அவர்களும் ரஹீம் கஸாலி(என்னை வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்தவர்) அவர்களும் தான் முதன் முதலில் கருத்திட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
குறிப்பாக பிரபாகரனுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் 10 நபர்களாக இருந்த பின்தொடர்பவர்களை ஒரே நாளில் 38 நபர்களாக மாற்றியது அவர் என்னைப்பற்றி அவரது வலைப்பூவில் தனியாக இட்ட பதிவினால் தான். பலரிடம் என்னை கொண்டு சென்றது அவர் தான். நான் முன்னேற பலமுறை ஆலோசனை கூறியுள்ளார். இந்த வாரம் நான் எழுதப்போவது கூட அவரின் ஆலோசனையோடுதான்.
விருதகிரி விமர்சனம் தான் நான் எழுதிய ஒரே திரைப்பட விமர்சனம். ஏர்டெலின் மறுஅடையாளச்சூடு என்னும் என் பதிவு தான் அதிகம் பேர் படித்த என் பதிவாகும். பிறகு MNP ஐ பற்றியும் நான் ஒரு பதிவிட்டேன். முதியோர் இல்லம் மற்றும் சிறுவனும் நாய்குட்டியும் என இரண்டு சிறுகதைகளும், காதல் என்றால் என்ன என ஒரே ஒரு கவிதையும் எழுதியுள்ளேன். தற்போது Operation ஆரியபட்டா என்னும் சிறு தொடர்கதை ஒன்றை எழுதிவருகிறேன். மேலும் சில மென்பொருள்களைப்பற்றியும் எழுதியுள்ளேன்.
ரொம்ப நல்லவங்க என்னும் பெயரில் மூன்று பதிவுகள் இட்டுள்ளேன். அதில் ஒன்றைத்தான் திரு எல் கே அவர்கள் வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தார்(அவருக்கு என் நன்றிகள்). மேலும் நேரு குடும்பம் மற்றும் மு.க.குடும்பம் என இரு பதிவுகளும் இட்டுள்ளேன். என்னைப்பற்றி அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
இந்த ஒருவார காலத்தில் எனக்கு முன்பே வலைப்பூவை ஆரம்பித்தவர்களும் பல நாட்களாக எழுதிக்கொண்டிருப்பவர்களும் குறிப்பிடப்படுவார்கள். அதனால் அவர்கள் ஒரு சிறுவன் நம்மைப்பற்றி எழுதுகிறான் என்று எண்ணி வருந்தவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி
குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com