என்னைப் பற்றி என்பதனை பதிவுலகில் நான் என்கிற அர்த்தத்தில் இதை எழுதுகிறேன்
கல்லூரி நாட்கள் முதலே எனக்கு எழுத்தில் அதிக நாட்டம் கொண்டு எழுதி வந்தாலும் கூடஎழுதியதைக் கொண்டு பத்திரிக்கையைத் தீர்மானிப்பது அல்லது குறிப்பிட்ட பத்திரிக்கைக்கென யோசித்து அதற்கேற்றார்போல எழுதுவது எல்லாம் கொஞ்சம் பித்தலாட்டமாகப் பட்டதால்
எழுதுவதில் கொஞ்சம் நாட்டம் குறைந்து கொண்டு வந்தது
அதேசமயம் படிப்பின் நிமித்தமும் வேலையின் நிமித்தமும் பெண்கள் அதிகமாக அடுப்படி விட்டும் வீடு விட்டும் வெளியேறத் துவங்க அவர்களது நடை உடை பாவனைகள் காலத்திற்கு ஏற்றார்போல மாறி யாக வேண்டிய அவசியம் நேர்ந்ததை போல ,அவசர யுகத்தில்இலக்கியத்தின்பால் மக்கள் கொண்டிருந்த அதிகப் பிடிப்பு குறைந்து மிக இலகுவாகச் சொல்லக் கூடிய விஷயங்களை மட்டுமே படிப்பது ரசிப்பது என்று உண்டான
மாறுதல் கூட என்னுள்ளும் ஒரு மாறுதலை ஏற்படுத்திப்போனது
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் பதிவுலகு பற்றி நண்பர்கள் மூலம் அறிந்து
படிக்கத் துவங்கியபோது எனக்கு இது சரியாக வரும் போலப் பட்டது
இப்பதிவுலகில் யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய சிந்தனையை
மாற்றிக் கொள்ளவேண்டியதில்லை.நாம் சொல்ல நினைப்பவைகளை
சொல்ல நினைக்கிற வகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சொல்லக் கூடிய
சுதந்திரம் இருக்கிறது.அதனாலேயே நமக்கு பொறுப்பும் அதிகம் இருக்கிறது
எனவே இதில் கொஞ்சம் முயன்று பார்க்கலாமே என கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்பதிவிடத் துவங்கினேன்
கனமான விஷயங்களையே கருவாக எடுத்துக் கொள்வது என்றும்
அதனை எத்தனை எளிதாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல முயல்வது என்றும்முடிவெடுத்து எழுதத் துவங்கினேன்.அதற்காகவே வசன கவிதைக்கும் உரை நடைக்கும் இடையிலான ஒரு நடையை அமைத்துக் கொண்டு தொடர்ந்து எழுதி வருகிறேன்
சிவாஜி நடித்த மோசமான படங்கள் உண்டு ஆனால் சிவாஜி மோச மாக நடித்த
படங்கள் ஏதும் இல்லையென நடிகர்திலகம் நடிப்புக் குறித்து சொல்வார்கள்
அதை போலவே சில விஷயங்களை மிகச் சரியாக என்னால் நான் பதிவில்
சொல்ல முடியாது போனாலும் கூடநான் மோசமான விஷயங்களை பதிவிட்டதில்லை இனி பதிவிடப் போவதும் இல்லை என்கிற மன உறுதியோடு தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்
மாதம் சராசரியாக நான்கு அல்லது ஐந்து பதிவுகள் என்ற கணக்கில் இதுவரை சுமார்ஐம்பது பதிவுகள் மட்டுமே எழுதி உள்ளேன் முதல் பத்து பதிவுகள் வரை
பின் தொடர்பவர்களோ பின்னூட்டம் இ டுபவர்களோ இல்லை
ஆயினும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வந்தேன்.
பின்னர் தொடர்பவர்கள் தொடர்ந்து வர வர முன்னர் எழுதிய பதிவுகளையே
மீள்பதிவு எனச் சொல்லாமல் புதிய பதிவாகப் போட்டு அனைவரின் அங்கீகாரத்தை பேற்றேன் என் கதைச் சுருக்கம் அவ்வளவே
மிக குறைந்த காலம்தான் பதிவுலகத் தொடர்பில் இருக்கிறேன் என்றாலும்
மிகக் குறைந்த பதிவுகளே கொடுத்துள்ளேன் என்றாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித் துவலைசர ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புக் கொடுத்த பதிவுலகத் தந்தை திரு சீனா ஐயா அவர்களுக்கு ம்வலைசர ஆசிரியர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இதுவரை என் பதிவினைத் தொடராதவர்கள் கீழ்குறித்த பதிவுகளை வாசித்து
நான் மேலே சொன்னவைகளுக்கு ஒத்துப் போகிறதா என மதிப்பிடலாம்
5.தாய்மை