நேத்து கூட்டாஞ்சோறு“னு தலைப்ப பாத்துட்டு ஏதோ சமையல் குறிப்பு தான் சொல்லப்போறன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வந்து ஏமாந்து போனவங்களுக்காக.. இன்னைக்கு சமையல் செய்றது தொடர்பான பதிவுகளப் பத்தி பகிர்ந்துக்கப் போறேன். (நேத்து ஏமாந்துபோய் திட்டினவங்க எல்லாரும், திட்னத வாபஸ் வாங்கணும் சொல்லிப்புட்டேன்..).
நமக்கு எவ்ளோ தான் பிரச்சனைகள் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு அப்புறம் சாப்பிடாம இருக்கவே முடியாது. கோவிச்சுகிட்டு சாப்பிடமாட்டேன்னு கவுந்தடிச்சு படுத்துக்குறவங்க கூட, பசி தாங்க முடியாம திருட்டுத்தனமா எதையாவது சாப்பிட்டுக்குவாங்க. (ஹிஹி.. எல்லாம் ஒரு அனுபவம் தான்..).
ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி, “நா கிச்சன் பக்கம் போனதே இல்லை“னு நாகரிகமா சொல்லிக்கிறவங்க கூட, ஏதாவதொரு சந்தர்ப்பத்துல சமைத்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுடும். அந்த மாதிரியான சமயங்கள்ல சமைக்கத் தெரியாம திரு திருனு முழிக்காம இருக்கணும்னு சமையல் குறிப்பு இருக்குற பதிவுகள உங்களுக்காக இங்க பகிர்ந்துக்குறேன்.
முதல்ல, சமைக்கலாம்குற முடிவெடுக்கணும். அப்படி தைரியமா முடிவெடுக்குறதுக்கே உங்கள பாராட்டலாம். அப்புறம் ஒவ்வொன்னா செஞ்சு பாக்கலாம். என்ன சரிதானே???
முதல்ல ஒரு வெஜ் சூப்ப போட்டுத் தாக்குங்க.. அப்புறம் மிச்ச சமையல ஆரம்பிக்கலாம்.
2. சாதம் வச்சாச்சுனா அடுத்தது என்னவா இருக்கும்? சாம்பார் தான்.
3. சாம்பார்க்கு அப்புறம் வத்த குழம்பு ஊத்தி சாப்பிடாதவங்க இருக்க முடியுமா என்ன? அதுனால அதையும் செஞ்சுடலாமே..
4. அடுத்ததா வேறென்ன வைக்கிறது?? ரசம் தான்.
5. பொறியல் வைக்க மறந்துடக் கூடாதுல்ல.. என்ன பொறியல் வைக்கலாம்??? ம்ம்ம்... பீக்கங்காய் பொறியலும் கத்தரிக்காய் பொறியலும் வைக்கலாமா???
6. எல்லாம் வச்சாச்சு.. பாயாசம் வச்சு அப்பளத்தையும் பொறிச்சுட்டா இன்னும் நல்லா இருக்கும்ல..
என்னடா.. ஒரே சைவமா இருக்கேனு யோசிக்கிறீங்களா???
7. தினமும் வெள்ளை சாதத்தை பார்த்து போர் அடிச்சிடுச்சுனா, ஒரு நாள் பிரியாணி செஞ்சு பாக்கலாமே.. என்ன பிரியாணி பண்ணலாம்???? மீன் பிரியாணி கூட முயற்சிக்கலாம்ல..
8. சாதமே வேணாம்னு தோணுதா? பேசாம சிக்கன் நூடுல்ஸ் பண்ணிடுங்க பாஸ்..
9. ஒரு வழியா சமச்சாச்சு.. சாப்பிட்டுட்டு குடிக்கிறதுக்கு ஜூஸ் போடலாமா?
10. அது வேணாம்னு நெனைக்கிறவங்க ஐஸ்கிரீம் செய்யலாமே..
என்ன??? எல்லாரும் சமைச்சுப் பாத்துட்டீங்களா??
சாப்பிட்டு (நல்லாயிருந்தா) ஒரு குட்டி தூக்கம் போடுங்க.. அப்புறம் சாயந்திரத்துக்கு இனிப்பும், கூடவே காரமும் செஞ்சு சாப்பிட்டுட்டு அதோட டீ“யும் குடிச்சா அட.. அட.. என்னா ஒரு ஆனந்தம் தெரியுமா??
இது எதுவுமே வேணாம்.. எதுக்கு வெட்டி வேலை.. எனக்கு உப்புமாவே போதும்னு சொல்றீங்களா??? அது உங்க இஷ்டமுங்க..
அப்புறம் ஒரு விசயம்.. இதையெல்லாம் சமைச்சுப் பாத்துட்டு நல்லாயிருந்தா எனக்கு அனுப்பி வையுங்க.. இல்லாட்டி மனசுக்குள்ள (கெட்ட வார்த்தையெல்லாம் இல்லாம) திட்டிட்டு வேலையப் பாருங்க.. (இப்ப தலைப்போட காரணம் புரியுமே.. ஹிஹி).
கிளம்புறதுக்கு முன்னாடி வழக்கம்போல ஒரு குட்டி தத்துவம்.. (ஓடாதீங்க.. ஓடாதீங்க..)
1. யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
2. எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயெனப் பார்.
3. சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம். (சரக்கடிக்கிறத பத்தி சொல்லலங்க..)
நாளைக்கு இன்னொரு வகை சரம் தொடுக்கலாம்.. கிளம்புறேங்க..
.
.
நல்ல சமையல் விளக்கங்கள்...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி சார்..
இந்திராவுக்கு வாழ்த்துக்கள்..
எல்லாத்தையும் ஒரு கை பாத்தாச்சீங்க...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நல்ல சமையல் குறிப்பு அறி முகங்கள்.
ReplyDeleteநல்லா இருக்கு.
பேஸ் பேஸ்......
ReplyDeleteபிரமாதம் :))
அறுசுவை., அமர்க்களம்...
ReplyDeleteதத்துவம் அருமை...
ஜூப்பரு.. நல்ல அறிமுகங்கள்..
ReplyDeleteசுவையான பகிர்வுகள் .பாராட்டுக்கள்.
ReplyDeleteகூட்டாஞ்சோறு அறிமுகங்கள் மிக அருமை இந்திரா
ReplyDeleteஒவ்வொரு லிங்குலயும் போய் பார்த்து அத்தனையும் சாப்பிடனும் போல இருந்துச்சு பொருமையா ஒரு நாள் செஞ்சி சாப்பிட்டுக்கலாம்... அப்புறம் தத்துவம் போட்டு கலாய்ப்போடு கலக்குறீங்க எப்படிங்க... அசால்ட்டா பின்றீங்க போங்க... தொடர்ந்து கலக்குங்க....
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.
ReplyDeleteமிக்க நன்றி
குட்டி தத்துவங்கள் எல்லாம் கெட்டி தத்துவங்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :))
ReplyDeleteபயனுள்ள சமயல் குறிப்புகளுக்கு நன்றி.
ReplyDeleteவயிறு நிரம்பிடுச்சிங்க..
ReplyDeleteசமையற்கலையை இத்தனை பதிவர்கள் சொல்கிறார்களா..!!!!!!!!!!!
ReplyDeleteசமையற்கலையை இத்தனை பதிவர்கள் சொல்கிறார்களா..!!!!!!!!!!!
ReplyDeleteசமையல் பற்றிய அறிமுகத்தில் என் டீக்கடை பதிவா? நன்றி தோழியே..
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு, எனது பெட்டகம் வலைப்பூவை கண்ணுற்ற தங்களுக்கு நன்றிகள் பல! பல பயனுள்ள தகவல் இன்னும் நிறைய அதில் உண்டு நாளும் கண்ணுற்று பயன் படுத்துங்கள் வாழ்த்துக்கள். அன்புடன் முஹம்மது அலி
ReplyDeletevazhthukkaL.arumaiyaana pakirvukaL.Thanks Indra.
ReplyDelete//vidivelli said...
ReplyDeleteநல்ல சமையல் விளக்கங்கள்...
அறிமுகத்திற்கு நன்றி சார்..
இந்திராவுக்கு வாழ்த்துக்கள்..//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..
//# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎல்லாத்தையும் ஒரு கை பாத்தாச்சீங்க...//
அப்படியா??? ரொம்ப சந்தோசமுங்க.
வருகைக்கு நன்றி.
//Lakshmi said...
ReplyDeleteநல்ல சமையல் குறிப்பு அறி முகங்கள்.
நல்லா இருக்கு.//
தொடர்ந்த உங்கள் வருகைக்கு நன்றிங்க.
//ஆமினா said...
ReplyDeleteபேஸ் பேஸ்......
பிரமாதம் :))//
நன்றிங்க..
//சங்கவி said...
ReplyDeleteஅறுசுவை., அமர்க்களம்...
தத்துவம் அருமை...//
வாங்க நண்பரே..
வருகைக்கு நன்றி.
//அமைதிச்சாரல் said...
ReplyDeleteஜூப்பரு.. நல்ல அறிமுகங்கள்..//
நன்றிங்க..
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசுவையான பகிர்வுகள் .பாராட்டுக்கள்.//
பாராட்டுக்கு நன்றிங்க..
//Jaleela Kamal said...
ReplyDeleteகூட்டாஞ்சோறு அறிமுகங்கள் மிக அருமை இந்திரா//
வருகைக்கு நன்றிங்க..
//மாய உலகம் said...
ReplyDeleteஒவ்வொரு லிங்குலயும் போய் பார்த்து அத்தனையும் சாப்பிடனும் போல இருந்துச்சு பொருமையா ஒரு நாள் செஞ்சி சாப்பிட்டுக்கலாம்... அப்புறம் தத்துவம் போட்டு கலாய்ப்போடு கலக்குறீங்க எப்படிங்க... அசால்ட்டா பின்றீங்க போங்க... தொடர்ந்து கலக்குங்க....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
//புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.
மிக்க நன்றி//
நன்றிங்க..
//சத்ரியன் said...
ReplyDeleteகுட்டி தத்துவங்கள் எல்லாம் கெட்டி தத்துவங்கள்.//
வருகைக்கு நன்றிங்க..
//வைகை said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
//baleno said...
ReplyDeleteபயனுள்ள சமயல் குறிப்புகளுக்கு நன்றி.//
நன்றி நண்பரே..
//முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteவயிறு நிரம்பிடுச்சிங்க..//
சந்தோசமுங்க..
//முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteசமையற்கலையை இத்தனை பதிவர்கள் சொல்கிறார்களா..!!!!!!!!!!!//
இன்னும் நிறைய பேர் இருக்குறாங்க.. நேரம் தான் பத்தல..
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteசமையல் பற்றிய அறிமுகத்தில் என் டீக்கடை பதிவா? நன்றி தோழியே..
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி நண்பரே..
//Mohamed Ali Blog said...
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு, எனது பெட்டகம் வலைப்பூவை கண்ணுற்ற தங்களுக்கு நன்றிகள் பல! பல பயனுள்ள தகவல் இன்னும் நிறைய அதில் உண்டு நாளும் கண்ணுற்று பயன் படுத்துங்கள் வாழ்த்துக்கள். அன்புடன் முஹம்மது அலி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
//asiya omar said...
ReplyDeletevazhthukkaL.arumaiyaana pakirvukaL.Thanks Indra.//
வருகைக்கு நன்றிங்க..
ஹாய் இந்திரா...நீண்ட நாட்களுக்கு பிறகு எனது பக்கம் வர தங்களின் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.மிகவும் அருமையான தொகுப்புகளாக தந்து பலர் பக்கத்தையும் அறிய ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் பல.
ReplyDeleteஅதில் என் பக்கத்தையும் சேர்த்தமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்திரா.
அன்புடன்,
அப்சரா.
வலைச்சர அறிமுகத்திற்க்கு மிக்க நன்றிங்க...மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...அனைவரும் புதிய அறிமுகங்கள்...
ReplyDelete