யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
1. காதழியம்
கண்களை மூடிக்கொள்ளுங்கள்,
இவர் கவிதை படிக்கும்போதல்ல....!படித்தபின்...
அப்பொழுதுதான்
அவிழ்த்து விட்ட கூந்தலின்
அவிழ்ந்து விழுந்த கனவுகளின்
சுகந்தமான மனம் தெரியும்
2. நீ அறிவாயா..?
மோகனனின் கவிதைகள்
காதலியைப் பார்த்த பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்கிறார்....அழகான மழலைகள்
3. தூறல்
கவிதையை சிந்தித்ததை
அழகாக விளக்கி
மரங்கொத்தி சிரிப்பு
என்று பதிவிட்டு இருக்கிறார்
அழகான மழைச் சாரல்
நீங்களும் நனைந்து பாருங்கள்
4.இணைய வானத்தில் பகல் நிலா என்கிற வலையில்
காதலியின் பெயரை பிழையாக எழுதிய சிறுமியை
திருத்துகிறார்...இந்த வானில் என்னற்ற நட்சத்திரங்கள்.
(Wordpress)
5. குகன் பக்கங்கள்
காதலியுடன் சதுரங்கம்
விளையாடும் போது
திணறுவது படைகள் மட்டுமா?
உங்கள் மனதின்
பக்கங்களுமா?
6.வசந்த மண்டபத்தின் துளையில்லா புல்லாங்குழல் மனதை பிசையும் இசை வாசிக்கின்றது.....இது தன்னம்பிக்கையின் தனல் தனியாது,
இவரின் கவிதையில் விடுகதை சிறந்த முயற்சி!
7.தோழிஅருள்மொழி பல சமூகம்,காதல், என அனைத்தையும் அலசும் வலை தென்காசிபைங்கிளி. இவருடைய கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...தேவதையின் பிச்சை நிதர்சனத்தை கூறுகிறது.
8.குடும்பங்கள் இங்கே இருக்க குழந்தைகளை பிரிந்து இருக்கும் வேதனை சொன்னால் புரியாது,மகளை பிரிந்து வெளிநாட்டில் வாழும் தந்தையின் பாசம்
என்னுள் கண்ணீரை வரவழைத்தது நிசம்,கவிதையாக இந்த அருவாளுக்குள் இருக்கும் பாசம் வெளிப்படுத்தியது.
9.மாலதியின் பக்கங்கள் விழிப்புணர்வு சமூக அக்கறை என்று பன்முகங்களில் கவிதை வடிப்பவர்,இவரின் மலட்டு விதை மான்சேன்டோ ஒரு உதாரணம்
10.ஒரு பெண்ணின் வாழ்வு திருமண பந்தம் என்பது வேறோடு பிடிங்கி நடும் மரம் போன்றது, என்பதை விளக்கிய கவிதை. இது என்னை பாதித்த கவிதை!
11.வள்ளுவர்vsஜொள்ளுவர் என்று திருக்குறளுக்கு புது விளக்கம் தந்த நம்ம லொள்ளுவர், மயில் மனிதர்களின் மருத்துவர், மனம் பிடிக்கும் கவிஞர்,
மயிலிறகு தமிழின்பம் மட்டுமல்ல, விழியின்பமும் தரும், இரசித்த புகைப்படங்களில்!
12.ரிஷ்வன் கவிதை துளிகள் திருக்குறளை கவிதைவடிவில் தருகிறார் நல்ல முயற்சி.
13.ரமணி அவர்கள் பட்டவைகள் துளிர்க்க...கவிதையில், பழகபழக பாலும் புளிக்கும் என்பதை சொல்கிறார்..சிந்திக்க வைக்கின்றது.
வணக்கம் நண்பர்களே! இது நீங்கள் படித்தவைகளாக கூட இருக்கலாம், ஆனாலும் நான் இரசித்தது நன்றி!