Monday, April 30, 2012

நாகரீகக் கோமாளி வந்தேனய்யா!

ஏ வந்தனம் வந்தனம்
வந்த ‌சனம் குந்தணும்
அடே தம்பி சந்தானம்
அள்ளிக் குடு சந்தனம்!


ல்லாருக்கும் வணக்கம் சொல்லி வந்தேனுங்க ‘மின்னல் வரிகள்’ வலைப்பூவின் பா.கணேஷ்.

உங்கள்ல சிலருக்கு என்னைத் தெரியும். நிறையப் பேருக்கு என்னைத் தெரியாது. அதனால... என்னை அறிமுகப்படுத்திக்கற மாதிரி என்னோட பதிவுகள் சிலவற்றை இங்கே குடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுககு முன்னால... ‘மாதா பிதா குரு தெய்வம்னு’ ‌சொல்லுவாங்க. என்னோட மாதா, பிதா ஆசிகள் எப்பவும் என்னோட இருககு. அதனால குரு, தெய்வத்தை போற்றிட்டு என் பதிவுகளுக்கு வரலாம்னு நினைக்கிறேன்.

எனக்கு ஒவ்வொரு விஷயத்துலயும் நல்ல நல்ல குரு அமையற ராசி உண்டுங்க. வலைத்தளம் ஒண்ணைத் துவங்கி எழுதணும்னு நான் நினைச்சப்ப, வலைத்தளத்தை துவங்கிக் குடுத்ததோட மட்டுமில்லாம, என் பல ஆரம்பகாலப் பதிவுகளையும் திரட்டிகள்ல இணைச்சு, எப்படில்லாம் எழுதணும்(முக்கியமா எப்படி எழுதக்கூடாதுன்னு)கறது வரைக்கும் எல்லாத்துலயும் வழிகாட்டியா இருந்தவர்...  சேட்டைக்காரன். அன்னா(ண்ணா)ரின் ஆசி‌யோட துவங்கறேன்.

சரி, குரு வணக்கத்துக்கு அடுத்ததா... இப்ப இறை வணக்கம்! முழுமுதற் கடவுள் விநாயகர் கிட்டருந்து துவங்கலாம். உங்களையெல்லாம் ‘மாங்கனி விநாயகரை’ தரிசனம் பண்றதுககு இராஜராஜேஸ்வரி கூப்பிடறாங்க. போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க. ஆச்சா... இப்போ நான் உங்களை தந்தைககு உபதேசித்த சுவாமிநாதனை’ தரிசனம் பண்ணக் கூட்டிட்டுப் போறேன். வாங்க...  சரி, புள்ளைங்களை தரிசனம் பண்ணிட்டு அப்பனை தரிசிக்காட்டா அவர் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே... அதனால ‘பித்தா! பிறைசூடி!’ன்னு ஷைலஜா அக்காவோட தளத்துக்குப் போய் தரிசனம் சிவனை பண்ணிடுங்க. அப்புறம்... புவனேஸ்வரி ராமநாதன் உங்களை மகரநெடுங்குழைக்காதரைத் தரிசிகக கூட்டிட்டுப் போறாங்க. போய் பெருமாள் தரிசனத்தையும் முடிச்சுககங்க.

இறை வணக்கம் முடிச்சாச்சா... அடுத்ததா இப்ப தமிழ்த் தாய் வாழ்த்து. முனைவர் இரா. குணசீலன் அவர்களும், புலவர் சா.இராமாநுசம் அவர்களும் தமிழ்த் தொகுப்பு-களும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அழைக்கறாங்க. நற்றமிழைப் பருகிட்டு வாங்க நண்பர்களே...

இப்ப... என் எழுத்தைப் பத்திச் சொல்றதுக்கு முன்னால... ‌இணையத்துல எழுதணும்கற என்னோட ஆர்வத்துக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த ரெண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்லணும்.. ரெண்டு பேர் மேலயும் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அதைப் புறந்தள்ளிட்டு பிஸியா எழுதிட்டு வர்ற பிரபலங்கள். ஜாக்கிசேகர்சி.பி.செந்தில்குமார் - இந்த ரெண்டு பேருக்கும் என் நன்றி! அப்புறம்... வலைச்சரத்துல என் பதிவுகளை அறிமுகப்படுத்திய ராம்வி, ஷக்திப்ரபா, மதுமதி, துரை டேனியல், கீதமஞசரி, ஸாதிகா, வெங்கட் நாகராஜ்- இந்த நட்புகள் அனைவருக்கும் மனநெகிழ்வுடன் கூடிய என் நன்றிகள்!

இப்ப சென்னை வாசியா இருந்தாலும் என்னோட வேர் மதுரை. ‘மதுரை’ ங்கற ஊர் பேரைச் சொன்னாலே, ஊரை நினைச்சாலே மனசுக்குள்ள பூப் பூக்கும் எனக்கு. என்னோட ஊரைப் பத்தி நான் எழுதின என்னோட இந்த ஆரம்பகாலப் பதிவைப் படிச்சு நீங்களும் மதுரையைக் கொண்டாடுங்க.

எழுத்தார்கள் பேரைச் சொன்னா சில கேரக்டர்கள் நினைவுக்கு வரும். உதா: சங்கர்லால் - தமிழ்வாணன்! அப்படி கணேஷ்னா நினைவுக்கு வர்ற மாதிரி ஒரு தொடர் கதாபாத்திரத்தை அமைககணும்னு நான் நினைச்சப்ப வந்ததுதான் சரிதா கேரக்டர். சரிதா கேரக்டரை வெச்சு நான் முதன்முதலா எழுதின இந்தக் கதையை நிறையப் பேர் பார்த்திருகக வாய்ப்பில்லை. இப்ப படிச்சு சிரிங்க.

‌மலரும் நினைவுகளுக்குள்ள போய்ட்டு வர்றது எல்லாருக்கும் பிடித்தமானதுதான். நான் முதல் முறையா என் பள்ளி நாட்களை இந்தப் பதிவு மூலமா பின்னோக்கிப் பாத்தப்ப எல்லாத் தரப்பிலருந்தும் வரவேற்பு கிடைச்சது. அந்த ஆதரவுதான் இப்ப நடைவண்டிகள்-ன்னு நினைவுத் தொடரே எழுதற தைரியத்தைக் குடுத்திருக்குங்க.

800. 1000 பக்கங்கள் கொண்ட நாவலை படிக்கறதுக்குப் பொறுமையில்லாதவங்களுக்கும், படிக்க விருப்பமிருந்தும் அந்த மாதிரி புத்தகங்களோட உள்ளடக்கம் என்னன்னு தெரியாம இருககறவங்களுக்கும் பயன்படுமேன்னு கேப்ஸ்யூல் நாவல்-ங்கற பேர்ல நான்கைந்து பக்கஙகள்ல சுருக்கித் தந்தேன். நாவலோட பொருளும், சுவையும் கெடாம சுருக்கறது எவ்வளவு கஷ்டம்கறதை உணர்ந்து எல்லாரும் பாராட்டறப்ப ‌மனசு லேசாயிடுது.

வழக்கமான முறையில எண்ணங்களைச் சொல்றதைவிட கொஞ்சம் வித்தியாசமாச் சொல்லலாமேன்னு நினைச்சு இந்தப் பதிவை எழுதினேன். எல்லாத் தரப்பிலருந்தும் பாராட்டுக்களை பெற்றுத் தந்து என்னை மகிழ்வு கொள்ள வைத்தது இது.

ஒன்பான் சுவைகள்ன்னு சொல்வாங்க. அதுல எனக்குப் பிடிச்சது நகைச்சுவை. நகைச்சுவையா எழுதணும்னு விருப்பப்பட்டு நான் எழுதிய இந்தப் பதிவும், இந்தப் பதிவும் அனைவராலும் வரவேற்கப்பட்டதில எனக்கு நிறைய சந்தோஷம்.

நகைச்சுவை தவிரவும் உணர்வுகளை மையப்படுத்தி நான் எழுதின இந்தச் சிறுகதையும், இந்தச் சிறுகதையும் நிறையப் பாராட்டுகளை பெற்றுத் தந்ததால அப்பப்ப இப்படியும் எழுதணும்கற ஆசையும் உள்ள ஓடிட்டிருக்கு.

இன்னும் நிறையப் பதிவுகளைப் பத்திச் சொல்லிட்டே இருப்பேன். ஆனா என்னோட தன்னடக்கம்(!) தடுக்குது. அதனால இன்னிக்கு இதோட நிறுத்திக்கிட்டு .உத்தரவு வாங்கிக்கறேன். நாளைலேர்ந்து பதிவுகளை அறிமுகப்படுத்தணும்.

என்னை மாதிரி ஒரு சாதாரண ஆள் அறிமுகப்படுத்தறதை விட, பிரபலங்கள் அறிமுகப்படுத்தினா நல்லா இருக்கும்னு தோணிச்சு எனக்கு. அதனால சில பிரபல ஜோடிகளுக்கு அழைப்பு விடுத்தேன். அவங்களும் தினம் ஒரு ஜோடியா வந்து தாங்கள் ரசிச்ச பதிவுகளை அறிமுகப்படுத்தறதா சொல்லியிரு்க்காங்க. நாளைக்கு வரப்போற பிரபல ஜோடியைப் பார்க்க... தவறாம வந்துடுங்க!

74 comments:

  1. ஆஹா, தொடக்கமே களை கட்டிவிட்டது.... இந்த வாரம் முழுவதும் அசத்தலான பதிவுகள் வரப்போகுதுன்னு கட்டியம் சொன்ன முதல் பதிவு.

    வாழ்த்துகள் கணேஷ். உங்கள் முந்தைய பதிவுகளை ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.

    மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. களைகட்டி விட்டது என்று சொல்லி எனக்கு முதல் வரவேற்பும் வாழ்த்தும் வழங்கிய உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி வெங்கட்!

    ReplyDelete
  3. சரி, குரு வணக்கத்துக்கு அடுத்ததா... இப்ப இறை வணக்கம்! முழுமுதற் கடவுள் விநாயகர் கிட்டருந்து துவங்கலாம். உங்களையெல்லாம் ‘மாங்கனி விநாயகரை’ தரிசனம் பண்றதுககு இராஜராஜேஸ்வரி கூப்பிடறாங்க. போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க. ////


    முதல் பதிவாக எமது பதிவினை அறிமுகப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் இந்த வாரம் ஆரவாரமாக அமையட்டும் கணேஷ்! இது உங்களது வலைப்பதிவுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய அங்கீகாரம்; இனி கிடைக்கப்போகிற பல அங்கீகாரங்களுக்கான அச்சாரம்!

    புகுந்து விளையாடுங்க! வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. அன்புத் தோழரே.. வருக! வருக!
    அருமையானதொரு ஆசிரியப் பணி தருக! தருக!..
    இந்த மாத தொடக்கத்திலிருந்து வலைச்சர ஆசிரியராக யார் பதவியேற்கிறாரோ அவரது புகைப்படத்தையும் வலைப்பூவின் பெயரையும் எனது தளத்தின் சைட்பாரில் அவ்வாரம் முழுவதும் வைக்கலாமென முடிவு செய்திருந்தேன்..என்ன ஆச்ச்ர்யம் பாருங்கள்..முதலாவதாக நீங்கள் வந்துவிட்டீர்கள்..மிக்க மகிழ்ச்சி..உங்களில் இருந்தே ஆரம்பிக்கிறேன்..நேரமிருப்பின் பார்த்து செல்லவும்..

    ReplyDelete
  6. @ இராஜராஜேஸ்வரி said...

    இறை வணக்கம்னா முதல்ல விநாயகர். ஆன்மீகப் பதிவுன்னா முதல்ல நீங்கதானே... உங்கள் பதிவைக் குறி்ப்பிட்டதுல எனக்குத்தான் மகிழ்வு அதிகம். உங்களுக்கு என் இதய நன்றி!

    @ சேட்டைக்காரன் said...

    உங்களைப் போன்றோரின் ஆதரவால் ஆரவாரமாக அமைய வேண்டுமென்பதே என் விருப்பமும் அண்ணா. இன்னும் பல அங்கீகாரங்கள் நான் பெற வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  7. @ மதுமதி said...

    அதென்ன ‘நேரமிருப்பின்?’ இதைவிட வேறென்ன பெரிய வேலை இருந்துவிட முடியும் கவிஞரே எனக்கு... உடனே பார்த்து ரசிக்கிறேன். தங்களின் வருகைக்கு உளம்கனிந்த நன்றி தெரிவிப்பதோடு, இந்த வாரம் முழுமையும் படித்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தும்படி வேண்டுகிறேன் தங்களை!

    ReplyDelete
  8. இதுவரை வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றவர்களில், நான் நேரில் சந்தித்தவர், நீங்கள் ஒருவர்தான். கலக்குங்க!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் மதுரைக்கார நண்பரே... தொடர்ந்து பதிவுகளில் கலக்குங்க.

    ReplyDelete
  10. @kg gouthaman said...

    உங்கள் போன்றோரின் வாழ்த்துக்கள் இருக்கும் போது எங்கள் போன்றோர் கலக்கிவிட முடியும் என்பதே என் நம்பிக்கை. தங்களுக்கு என் இதய நன்றி!

    @விச்சு said...

    தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் என் உளம் கனிந்த நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. தம்பி சந்தானத்திடமிருந்து நிறைய சந்தனம் பெற்றுக்கொண்டேன். சந்தனம் போலவே மணக்கிறது பதிவுகளும். கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் கலக்கலாய் போகவிருக்கிறது வரும்நாட்கள் என்பதைக் கட்டியம் கூறும் அழகே சொல்கிறது. வாழ்த்துக்கள் கணேஷ்.

    ReplyDelete
  12. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்! ஆரம்பமே அமர்க்களம்.
    நடத்துங்கள்!!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் பொறுப்பு பெற்றமைக்கு

    ReplyDelete
  14. என்னை மாதிரி ஒரு சாதாரண ஆள் அறிமுகப்படுத்தறதை விட, பிரபலங்கள் அறிமுகப்படுத்தினா நல்லா இருக்கும்னு தோணிச்சு எனக்கு. அதனால சில பிரபல ஜோடிகளுக்கு அழைப்பு விடுத்தேன். அவங்களும் தினம் ஒரு ஜோடியா வந்து தாங்கள் ரசிச்ச பதிவுகளை அறிமுகப்படுத்தறதா சொல்லியிரு்க்காங்க.//

    வித்தியாசமாக இருக்கும் போலிருக்கு.நாளைக்காக வெயிட்டிங்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!ஆரம்பமே அட்டகாசமாக கலக்கலாக உள்ளது.உங்களுக்கே உரித்தான கலகலப்புடன் நகைசுவையுடன் உள்ளது.தொடருங்கள்!

    ReplyDelete
  16. மின்னல் வரிகளே-வானில்
    மின்னலின்றி இடியுண்டா
    கன்னல் வரிகளாய்-நல்
    கணேசர் வலைச்சரத்தில்
    என்னைக் குறிப்பிட்டார்-என்
    இதயத்தில் தடமிட்டார்
    அன்னை தமிழுக்கே-பணி
    ஆற்றுகின்ற நீர்வாழ்க!

    முன்போல் வலைதன்னி்ல்-நாள்
    முழுதும் செலவழிக்க
    என்னால் இயலவில்லை-தடை
    என்வயதில் வரும்முதுமை
    பொன்னை விரும்பியல்ல- வேறு
    பொருளை விரும்பியல்ல
    கன்னல் மறுமொழிகள்-தினம்
    காணவே எழுதுகின்றேன்

    ஏற்ற பணிதன்னை-மிக
    எழிலோடு செய்கின்ற
    ஆற்றல் மிக்கவரே-நல்
    அறிமுகமே செய்வீரே
    சாற்றும் புதியவரை-இச்
    சமுதாயம் அறிந்திடவே
    போற்றும் வலையுலகம்-அவர்
    போற்றுவர் உமையென்றும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. @கீதமஞ்சரி said...

    சந்தனம் பெற்று மகிழ்வுடன் வாழ்த்தி எனக்குப் புத்துணர்வளித்த தோழிக்கு மனம் நிறைந்த நன்றி.

    வே.நடனசபாபதி said...

    வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி.

    @PREM.S said...

    தங்களின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ ஸாதிகா said...
    உங்கள் எதிர்பார்ப்புக்கேற்றபடி சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல முயல்வேன் தங்கையே, வருகை தந்து உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நனறி.

    @புலவர் சா இராமாநுசம் said...

    அழகுத் தமிழால் என்னை வாழ்த்திட்ட தங்களின் ஆசியுடன் தொடர்கிறேன் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  18. நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. இறை வணக்கத்துடன், குரு வணக்கத்துடன், தமிழ்த்தாய் வணக்கத்துடன் அருமையாக ஆரம்பித்திருக்கும் உங்களின் ஆசிரியப்பணி மிகச் சிறப்பாக நடந்தேற மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. வலைச்சர வாத்தியாருக்கு நல்வரவு!

    ReplyDelete
  21. அறிமுகமே அருமையாக உள்ளது. ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  22. மின்னல் வரிகள் கணேஷ் அவர்களே! வருக! வணக்கம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  24. முழுமுதற் கடவுள் விநாயகர் கிட்டருந்து துவங்கியுள்ளீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி.

    அந்த முழுமுதற் கடவுளின் பெயரே இந்த வார வலைச்சர ஆசிரியராகிய தங்கள் பெயராகவும் அமைந்துள்ளது மிகச்சிறப்பாக பொருத்தமாக உள்ளது.

    நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. @ ராமலக்ஷ்மி said...

    வாழ்த்தி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ மனோ சாமிநாதன் said...

    வலைச்சரத்தை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி.

    @ Abdul Basith said...

    ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமுவந்த நன்றி நண்பா.

    துளசி கோபால் said...

    நல்வரவு சொன்ன உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.

    ReplyDelete
  26. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்! ஆரம்பமே அமர்க்களம்.
    நடத்துங்கள்!

    ReplyDelete
  27. @ தி.தமிழ் இளங்கோ said...

    வாழ்த்தி மகிழ்வளித்த நண்பருக்கு என் இதய நன்றி.

    @ செய்தாலி said...

    வாழ்த்திய தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

    @ வை.கோபாலகிருஷ்ணன் said...

    நான் சிந்தித்திராத கோணத்தை எனக்குக் காட்டி வாழ்த்திய தங்களின் அன்பிற்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  28. @ Lakshmi said...

    ஆரம்பமே அமர்க்களம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  29. Congratulations on your 100th article. I feel really great when I noticed that you remembered everyone who stood by you and who instigated you,who were instrumental and provided necessary inspirations and support to continue your journey in the internet. They are the ones who made you not to lose interest in writing articles. Thanks to you and others who were behind and in front of the screen.

    ReplyDelete
  30. வாங்க வாத்தியாரே,

    ஆரம்பமே அமர்க்களமாத் தொடங்கியிருக்கீங்க,.. இந்த வாரம் முழுக்க கச்சேரிதான். வாசிச்சுக் களிக்கக் காத்திருக்கோம், ஜமாய்ங்க :-))

    ReplyDelete
  31. @ mohan baroda said...

    உண்மைதான் மோகன். எனக்கு உற்சாகம் தந்து எழுத வைக்கும அனைவரையும் (நீங்கள உட்பட) என் இதயம் வாழ்த்திக் கொண்டு தானுள்ளது. தங்களின் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ அமைதிச்சாரல் said...

    காத்திருக்கோம் என்ற சொல்லின் மூலம் என்னை மகிழ்ச்சியடைய வைத்த சாரல் மேடத்துக்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  32. வந்தோம் ஐயா வந்தனம்
    வருகை தருவோம் வாரம் முழுமையும் ...நூறாவது பதிவு , அடுத்து வலைச்சர ஆசிரியர் ம்ம் எல்லாமே புதுசு கண்ணா புதுசு கலக்குறிங்க போங்க . நாங்களும் மாணவர்கள் தாங்க அடிக்காம சொல்லிக்கொடுங்க சரியா .

    ReplyDelete
  33. என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
    கணேஷ் சார். தாங்கள் அறிமுகம் செய்வித்த அத்தனைப்
    பதிவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது
    ஆசிரியப்பணி இனிதே தொடர வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. @ சசிகலா said...

    வாரம் முழுமையும் தொடர்வேன் என்று சொல்லி உற்சாகம் தந்த தென்றலுக்கு மனமார்ந்த நன்றி.

    @ புவனேஸ்வரி ராமநாதன் said...
    என்னையும் மற்றவர்களையும் மனமார வாழ்த்திய தங்களின் அன்புள்ளத்திற்கு என் இதய நன்றி.

    @ arul said...

    தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி அருள்.

    @ மனசாட்சி™ said...

    மனசாட்சியைப் பெரிதும் மதிப்பவன் நான். எனக்கு மகிழ்வைத் தந்த வாழ்த்துச் சொன்ன உஙகளுக்கு என் உளம்கனிந்த நன்றி.

    ReplyDelete
  35. வணக்கம் ஐயா. கலக்குது பதிவு! நாளைக்கு எப்படி! ஆவலாக உள்ளது. அறிமுகவாளர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள். பணி தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  36. அசத்தலான ஒரு வாரம் தொடங்கி விட்டது!கலக்குங்க கணேஷ்.

    ReplyDelete
  37. @ kavithai (kovaikkavi) said...

    கலக்குது பதிவு என்ற வார்த்தையே தெம்பூட்டுகிறது. மிக்க நன்றி சகோதரி.

    @ மதுரை சொக்கன் said...

    மதுரைக்காரனான என்னை எஙகள் தெய்வத்தின் பெயர் கொண்ட நீங்கள் வாழ்த்தியிருப்பதில் கொள்ளை மகிழ்வு ஐயா... தங்களின் வாழ்த்துக்களுக்கு இதயம்நிறை நன்றி.

    ReplyDelete
  38. துவக்கமே அசத்தல் .. கலக்குங்க தல

    ReplyDelete
  39. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    வாழ்த்திய உங்களுக்கு... என் மனமார்ந்த நன்றிகள் ராஜா!

    ReplyDelete
  40. வாத்தியாரின் முதல் வகுப்பே வெகு அமர்க்களம்.
    வாழ்த்துக்கள் கணேஷ் சார் !

    ReplyDelete
  41. @ ஸ்ரவாணி said...

    வாழ்த்துக்களால் எனக்கு உற்சாக டானிக் தந்த தோழிக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  42. வணக்கம் வாத்தியாரே!

    மொத இன்னிங்ஸே செஞ்சுரி போல தெரியுதே!

    கிளப்புங்கள் பட்டையை!

    ReplyDelete
  43. இவ்ளோ பிந்திட்டேனா ஃப்ரெண்ட்.....பிந்தினாலும் இந்த வார வலைச்சர் ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்துகள்.பிடியுங்க ஒரு சொக்லேட் !

    ReplyDelete
  44. முதல் இன்னிங்க்ஸ் செஞ்சுரி இல்லை Mr. சத்ரியன், டபுள் செஞ்சுரி.., அடிச்சு தூள் கிளப்புங்க தலைவா ..!

    ReplyDelete
  45. உங்கள் பதிவுகளை இப்போதான் படித்தேன். இத்தனை நாள் தவறவிட்டு விட்டோமே என்று தோன்றியது.
    அடுத்தடுத்த உங்கள் அறிமுகங்களையும் காண ஆவலாக இருக்கிறேன். தொடருங்கள்...

    ReplyDelete
  46. @ சத்ரியன் said...

    மனம் நிறைய வாழ்த்தியதற்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி பிரதர்.

    @ ஹேமா said...

    எவ்வளவு பிந்தினா என்ன ஃப்ரெண்ட். நீங்க அன்போட தர்ற சொக்லேட் எனக்குப் முக்கியமாச்சே. அதனால சந்தோஷத்தாட கூடிய என் நன்றியைப் பிடியுங்கோ...

    ReplyDelete
  47. @ வரலாற்று சுவடுகள் said...

    மிகப் பெரிய பாராட்டை எனக்கு வழங்கி உற்சாக இஞ்செக்ஷன் போட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

    @ தமிழ் மீரான் said...

    வாருங்கள் தமிழ் மீரான். வலைச்சரம் எனக்கு உங்களையும் புதிய நட்பாக அறிமுகம் செய்துள்ளதில் மகிழ்வு கொண்டு என் இதய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  48. ஸ்முத்திரத்தில் நீச்சலடிப்பவர்களுக்கு
    குளம் ஒரு பொருட்டா என்ன ?
    ஜமாயுங்கள்
    ரசிக்கக் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  49. @ Ramani said...

    என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து வாழ்த்தியுள்ளீர்கள். இதைத் தக்க வைத்துக் கொள்ள நிச்சயம் முயல்வேன். தெம்பூட்டி கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸார்.

    ReplyDelete
  50. வலைச்சரத்தில் கலக்கல் அறிமுகம் கணேஸ் அண்ணா . இத்தனை பேரையும் உடனே படிக்க முடியாவிட்டாலும் சேர்த்துவைத்துப் படிக்கின்றேன் பின்.

    ReplyDelete
  51. ஆரம்பமே அசத்தலாக இருக்கு கணேஷ். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. இந்த வாரமே அசத்தலாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. உங்கள் பழைய பதிவுகளை பொறுமையாக படிக்க வேண்டும்....

    அந்த ஜோடிகள் யார்! ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    கலக்குங்க சார்.

    ReplyDelete
  53. @ தனிமரம் said...

    நேசத்துககுரிய நேசனின் பாராட்டில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி தம்பி!

    @ RAMVI said...

    எனக்கு முதல் அங்கீகாரம் தந்த உங்களின் வாழ்த்துககளில் அகமகிழ்ந்த என் உளம்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    @ கோவை2தில்லி said...

    இந்த வாரம் அசத்தலாய் அமையுமென்று என்மேல் நம்பிக்கை வைத்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  54. வாழ்த்துகள்.

    இனிய வாரம். படிக்கக் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  55. அன்பு கணேஷ்,வலைச்சர ஆசிரியர் ஆனதை எதேச்சையாகத் தெரிந்து கொண்டேன்.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    நிறைய பதிவுகள் படிக்கவேண்டியிருக்கிறது. அடுத்த நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  56. நான் வலைசாரம் பக்கம் வருவது உங்களை போல உள்ள பதிவாளர்கள் வலைச்சாரத்தில் பதிவு இடும் போதுதான். அதனால்தான் நான் கடைசியாக வந்து வாழ்த்து சொல்கிறேன். உங்களை போல நல்ல வாத்தியார் வரும் போது வகுப்புக்கு மட்டம் போடாமல் வந்துவிடுவேன் .உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. @ மாதேவி said...

    இனிய வாரத்திற்காய் காத்திருப்பதாகச் சொல்லி எனக்கு உற்சாகமூட்டிய தோழிக்கு என் மனமார்ந்த நன்றி!

    @ வல்லிசிம்ஹன் said...

    ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஆனமட்டும் முயல்வேன். மிகக நன்றி வல்லிம்மா!

    @ Avargal Unmaigal said...

    டியர் ஃப்ரெண்ட்! வகுப்புகளுககு மட்டம் போடாமல் வந்துவிடுவேன் என்று நீங்கள் சொன்னதைவிட மகிழ்வான வார்த்தை வேறென்ன எனக்கு? உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  58. கோமாளியோட எழுத்து போல தெரியலியே அண்ணா. சுதம்பட்டம் நல்லாவே இருக்கு. உங்க அறிமுகத்துல நானும் உண்டுதானே

    ReplyDelete
  59. ஆர-வாரம்-ஆன வாரம்!
    தொடங்கினீர்கள் - தொடர்ந்து
    வரவுள்ளேன், இறை நாட்டம்.

    ReplyDelete
  60. பிரபலங்கள் அறிமுகப்படுத்த போறாங்களா!!!!

    ஆரம்பமே கலக்கலா இருக்கே...looking forward!!!

    ReplyDelete
  61. வணக்கம் நண்பரே..
    வலைச்சரத்தில் அறிமுகம்
    அருமையாய் உரைத்து விட்டீர்கள்...
    வரும் நாட்களில் உங்கள் கைவண்ணத்தில்
    வலைச்சரத்தின் மனம் சுவாசிக்க நிச்சயம்
    தினம் வருவேன்...
    வாழ்த்துக்கள் கோடியுடன்...

    ReplyDelete
  62. தங்களுக்கே உரிய தனித்துவமான நடையில் அறிமுகம் அருமை அன்பரே.

    என் பதிவையும் அறிமுகம் செய்த தங்கள் அன்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  63. வாழ்த்துகள் கணேஷ். உங்கள் பதிவுகளில் நான் பார்க்காத சிலவற்றை எடுத்துக் காட்டியிருப்பதில் அவற்றைப் பார்த்து வந்தேன்! தொடர்ந்து கலக்குங்கள். கோடை மழை பொழியட்டும்!

    ReplyDelete
  64. @ ராஜி said...

    நீயெல்லாம் இல்லாமலாம்மா? எப்பன்றதை தெரிஞ்சுக்க வெயிட் ப்ளீஸ்!சுய தம்பட்டத்தையும் ரசிச்ச தங்கைக்கு என் இதய நன்றி!

    @ NIZAMUDEEN said...

    அழகாய் கவிதை நடையில் எழுதி என்னை ஊககப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    @ Shakthiprabha said...

    ரொம்ப நாளைக்கப்புறம் வந்தாலும் சரியான சமயத்துல வந்து என்னை வாழ்த்தினதுல மகிழ்ச்சி தோழி! நீங்க வலைச்சரம் ப்ரஸண்ட் பண்ணின ஸ்டைல்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனே! உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி!

    @ மகேந்திரன் said...

    அவசியம் வந்து உற்சாகப்படுத்துங்கள் மகேன்! தங்களுக்கு என் இதய நன்றி!

    @ guna thamizh said...

    அறிமுகம் செய்த நடையைப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி முனைவரையா. உண்மையில் உங்கள் பதிவை அறிமுகம் செய்ததில் எனக்குத்தான் மிக்க மகிழ்வு. என் தமிழ்த் தாகத்துக்கு தண்ணீர் தரும் தளமல்லவா உங்களுடையது!

    ReplyDelete
  65. நன்றி கூறும் அரிய பண்புடன்
    வித்தியாசமான அறிமுகங்களாக
    அருமையான ஆரம்பம்.

    ReplyDelete
  66. @ ஸ்ரீராம். said...

    என் பதிவுகளில் பழையன சிலவற்றைப் படித்து ரசித்தீர்களா? மிக மகிழ்வான விஷயம். உங்களுக்கு என் இதய நன்றி!

    @ Muruganandan M.K. said...

    My Goodness! இது அரிய பண்பா? ஒவ்வொரு மனிதனிடமும் இருகக வேண்டிய அவசியமான பண்பு என்பதல்லவா என் எண்ணம்! இருப்பினும் இதைப் பாராட்டி எனக்கு ஊககமளித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  67. வாழ்த்துக்கள்....

    தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  68. ஐயா! "நாகரீக கோமாளி வந்தேனையா" என்னும் நகைச்சுவை தொடர் நான் சிறுவனாக இருந்தபோது லண்டன் பி.பி.சி யின் தமிழோசையில் ஒலி பரப்பப்பட்டு வந்தது. அதோ என்று நினைத்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  69. வலைச்சரத்தின் முக்கியமான வாரங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  70. @ Blogger சே. குமார் said...

    மகிழ்வளித்த வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!

    @ Maria Selvaraj said...

    என்.எஸ்.கிருஷ்ணனின் பாடலில் வரும் இந்த வரி. எனக்கு மிகப் பிடித்ததால் வைத்தேன். நன்றி ஐயா!

    @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாங்கண்ணே... உங்களின் ஆசிகள் இருந்தால் இதுவும் நல்ல வாரமாகப் பெயர் வாங்கி விடும். மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  71. ஆரம்பமே அருமை அதிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு என்னுடைய தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்
    அன்புடன்
    சிங்கமணி

    ReplyDelete