இன்றைக்கு உங்களுக்கு 'பிலிம்' காட்டலாம் என்று இருக்கிறேன். தயாரா?
இது ஒரு சங்கத்தமிழ்
குறும்படம்.
பெயர்: கண்டீரோ? கண்டோம்!
மூலக் கதையாசிரியர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
திரைகதை, வசனம், இயக்கம்:
திரு சொக்கன்
கதை என்ன?
காதலனும்
காதலியும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள்.
காதலியின் தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள், வழியில் சந்தித்த சிலரிடம் விசாரிக்கிறாள்.
“என்னுடைய மகள்
ஒருத்தியும், இன்னொருத்தியின்
மகனான ஒருவனும் காதல் கொண்டார்கள். இன்றைக்கு அந்தக் காதல் வெளிச்சத்துக்கு
வந்துவிட்டது. ஆகவே, ஊரை விட்டுக்
கிளம்பி இந்தக் காட்டுப் பாதையில் சென்றுவிட்டார்கள். அப்படிப்பட்ட
யாரையும் நீங்கள் பார்த்தீர்களா? சொல்லுங்கள்!”
பதில் என்ன? என்ன
ஆனார்கள் அந்தக் காதலனும், காதலியும்? தாய் சேர்த்து வைத்தாளா? இல்லை ‘மரியாதைக்
கொலையா’? அங்கு நடந்தது என்ன?
வெள்ளித்திரையில்
காண்க!
மன்னிக்கவும்!
திரு சொக்கன் அவர்களின் வலைத்தளத்தில் காண்க!
இவரும் 365பா என்று தினமும்
ஓரு ‘தமிழ் பா’ வை எழுதி விளக்கமும் கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி டெக்கான்
கிரானிக்கல், சென்னை பதிப்பில் ஒரு கட்டுரையும் வந்திருக்கிறது.
இந்த 365பா-வின் ரசிகர்களுக்கும் போட்டி, பரிசு உண்டு. இவரும் திரு கண்ணபிரான்
ரவிசங்கரும் சேர்ந்து போட்டி நடத்தி, இருக்கிறார்கள்.
அவர்கள் இருவருடைய முயற்சியையும் பாராட்டுவோம்.
இந்தக் கண்டீரோ? கண்டோம் பற்றி ஒரு சின்ன தகவல்:
நாச்சியார் திருமொழியின் (ஆண்டாள் பாடியது - நாலாயிர திவ்யபிரபந்தத்தில் முதலாயிரத்தில் வருவது) கடைசி பத்துப்
பாட்டுக்கள் இப்படி கேள்வி பதிலாகவே அமைந்திருக்கும்.
‘மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.’
எல்லோரும் தேடும் இறைவனை விருந்தாவனத்தில் கண்டேன் என்கிறாள் ஆண்டாள்.
காதலர்கள் என்ன
ஆனார்கள் என்று தெரிந்ததா? நன்று, நன்று!
திரைப்படம் பார்த்து
விட்டு, மனம் போன போக்கில் நடந்தால் என்ன வரும்? திரு என்.சொக்கன் அவர்களின் ‘மனம் போன போக்கில்’ வலைப்பதிவில் வந்து
நிற்போம்.
வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஒன்று நம்மை பிடித்து நிறுத்துகிறது.
மாற்றுத் திறனாளிகளிடம் நாம் காட்டும்
பாரபட்சம் பற்றியும் நாம் என்ன செய்ய வேண்டும் இவர்களின் உலகம் விரிய என்பது
பற்றியும் பேசுகிறார் திரு.சொக்கன் இந்தக் கட்டுரையில்.
******************************************************************************
******************************************************************************
இன்றைய சிறுகதை:
எழுதியவர் சித்ரன் ரகுநாத்
அசோக், வசந்தனைச் சந்தித்த கடைசி நாளை யோசித்துப் பார்த்தான். முன்னொரு
காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள்தான். ஒன்றாய் சுற்றி, உரையாடி சந்தோஷமாகக் கழிந்த நாட்கள். ஒருநாள் ஏதோ விஷயத்தில் ஏற்பட்ட சின்ன
விவாதம் பெரிய பிரச்சனையாய் விஸ்வரூபம் கொண்டுவிட்டது. வார்த்தைகள் தடித்தன.
இருவருக்குமிடையே இனம்புரியா வன்மம் ஒன்று திடுக்கென முளைவிட்டது. சட்டென்று ஒரு
கணத்தில் பிரிந்துவிட்டார்கள். நண்பர்களின் சமரச முயற்சிகள் தோல்வியில்
முடிவடைந்தன. இருவரும் சமாதானமாகாமல் விரோதம் தொடர்ந்தது.
அதற்கப்புறம் யாருக்கும் யாருடனும் சுத்தமாய் தொடர்பில்லாமல் எந்தத் தகவல்
பரிமாற்றங்களும் இல்லாமல் வருடங்கள் உருண்டன. இப்போது ரொம்ப நாள் கழித்து நடராஜ்
மூலமாய் வசந்தனைப் பற்றிக் கேள்விப் படுவது இப்படியொரு சோகச் செய்தியாகத்தான்
இருக்கவேண்டுமா?
என்னவாயிற்று
நடுவில்? முடிவு என்ன? சஸ்பென்ஸ்! கதையைப் படியுங்கள்.
***********************************************************************************************************
ஒரு குறும்படம்
பார்த்து, ஒரு கட்டுரை படித்து, ஒரு கதையை ரசித்து......சுற்றிவரப் பார்த்தால் நம்
கண்மணி அன்போடு நம்மைப்
பார்த்துப் புன்னகைக்கிறார்.
யாரிந்த கண்மணி?
இவரது அறிமுகமும் கவிதையிலேயே!
யாரிந்த கண்மணி?
இவரது அறிமுகமும் கவிதையிலேயே!
நிலா அரசனின் மகள்;
நீல வானின் நிழல்;
நிலம் பார்த்து
நடப்பேன் ,
நாணத்தோடு சில நேரம் ;
உரக்கப் பேசி ,
உயரம் சேர்வேன் சில
நேரம்;
சிரித்துக் கொண்டே.,
சுற்றி வரும்.,
சிறகடிக்கும்.,
வண்ணத்துப் பூச்சி
நான்!!
எட்டிப் பிடிக்க.,
எட்டா வானவில் நான்
தான்!!!
நேசமாய் என்றும்.,
வார்த்தைகள்
உதிர்க்க.,
விருப்பம் உண்டு .,
கண்ணீர் சிந்தும்.,
கண்கள் கண்டு!
♥ ♥ கண்மணி அன்போடு ♥ ♥
இவரது இன்னொரு கவிதை:
முடிந்தால் உதிரம் வழிய,
என் நெஞ்சில் குத்திவிடு.
முதுகில் ரணமாக்காதே!
மன்றாடிக் கேட்கிறேன்!.
சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சி, எட்டா வானவில் என்னவாயிற்றம்மா? என்றால் என் முதுகு அழுகிறது. படித்துப் பாருங்கள் என்கிறார்.
தென்றலின் தமிழ்விழி
வானலையில் இவர் தன் கவிதைகளை வாசிப்பதை சனி ஞாயிறு களில் கேட்கலாம்.
************************************************************************************************************
கவிதாயினிக்குப் பிறகு ஒரு கவிஞன்:
பதிவர் மாநாட்டில் இந்த இளைஞரை சந்தித்துப்
பேசிக் கொண்டிருந்தேன். ‘எங்கள் ஊரில் எங்கு போனாலும் கடற்கரை தான். அதனால் தான்
என் வலைத்தளத்திற்கு ‘கடற்கரை’ என்று பெயர் வைத்தேன்’ என்றார்.
மிக எளிய நடையில், கணணி அறிவிலியான எனக்கும்
புரியும் வகையில் ‘ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்’ என்று இணையம் தொடர்பான தொடர் கட்டுரை
எழுதுகிறார்.
உன்னை
பிடித்துப்போய்…
உன்னை பிடித்து
கொண்டு…
விடாப்பிடியாக,
கன்னம் கிள்ளி
முத்தம் கொடுத்து,
கட்டியணைத்து
உன் பிரியத்தை
திருட முயலும்
உள்ளங்கள்
உன்னிடம் கேட்பதே
இல்லை
உனக்கு அவர்களை பிடித்திருக்கிறதா என்று!
********************************************************************************
********************************************************************************
இன்றைக்கும் ஒரு எச்சரிக்கை உண்டு: குழந்தைகளுக்கான எச்சரிக்கை!
‘இன்றைய உலகில்
கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம்
தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு
அபாயகரமானது.
பாலியல்
தளங்களும், வன்முறையை
போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.
இவற்றைப்
பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது
இயலாது.’ என்று சொல்லும் தோழி பிரஷா,
***********************************************************************************************************
இல்ல அண்ணாச்சி அப்படி இல்ல...
நான் சொல்ல வந்தது அனு என்பவர் எழுதிய சற்று
வித்தியாசமான கதை.
இவரது வலைத்தளம் பெயர்: பிதற்றல் என்று இருந்தாலும் அது நிஜமில்லை என்று தன் எழுத்துக்களால்
நிரூபிக்கிறார்.
தான் எழுதும் கதைகளுக்கு எது உந்துதலாக இருந்தது
என்றும் குறிப்பிடுகிறார் இவர்.
....................................................................................................................................................
இதழ்கள் என்ற பெயரில் வலைபதிவு செய்துவரும்
அனிதா
ஜெயகுமார் கொஞ்சம் கவிதை நிறைய நினைவுகள் என்று தன் வலைத்தளம் பற்றிக் கூறுகிறார்.
இவரது இன்னொரு கட்டுரை
************************************************************************************************************
அறிவுப் பசியை ஆற்றிவிட்டோம். சற்று வயிற்றுக்கு போடலாமா? (சாப்பாட்ட மறக்கவே
மாட்டேன்! நல்ல ‘வெயிட்’ உள்ள ஆளுதான்!)
ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இருநாளைக்கேலேன்றால் ஏலாய் – ஒரு நாளும்
என் நோவறியாய் இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது!
அவ்வைக்கே இப்படி என்றால் நான் எம்மாத்திரம்?
இவரது வலைத்தளம் ‘கம கம தான்!’
எத்தனை வகை சமையல் உண்டோ அத்தனையையும் கற்கலாம். கல்யாணம் ஆகாத
பிரம்மச்சாரிகள் சுலபமாக இவரது வலைத்தளத்திலிருந்து சமையல் கற்கலாம். திருமணம்
ஆனவர்களும் (மனைவிக்கு சமைக்கத் தெரியாதென்றால்...!) கற்கலாம். அல்லது மனைவிக்கு
இவரது வலைத்தளத்தை அறிமுகப் படுத்தலாம். மதுரையா, சிதம்பரமா? தீர்மானியுங்கள்!
இவரது சமையல் குறிப்புகளில் சைவம்,
அசைவம் இரண்டும் உண்டு.
சமையலறையிலிருந்து வெளியே வந்து வேறு விஷயங்களையும் எழுதுங்கள் என்று – வேறு
யார்? நான்தான்- சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
சீக்கிரமே இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்க இருக்கும் இவருக்கு இப்போதே வாழ்த்துக்கள்! முதல் தலைப்பை
கொடுத்த பெருமையும் எனக்கே! (ஹி...ஹி...)
*********************************************************************************************************
இன்னொரு பன்முகக் கலைஞர் திருமதி மஹி.
மஹி கிச்சன் என்று தலைப்பு இருந்தாலும் சமையல்
குறிப்புகள் தவிர சற்று வித்தியாசமாக பரமபதம், பல்லாங்குழி பற்றியும் எழுதுகிறார்.
இயற்கையையும், பறவைகளையும் தானும் ரசித்தும்
நம்மையும் ரசிக்க வைத்துவிடுகிறார் தன் பதிவுகள் மூலம்!
கிக் கிக்
கீ...கிக்கீ...கீ!
சமையல் குறிப்புகளும் அசத்தல் தான்: சேனைக்கிழங்கு வறுவல் எப்படி கலர்ஃபுல் ஆக இருக்கிறது பாருங்கள்!
சமையல் குறிப்புகளும் அசத்தல் தான்: சேனைக்கிழங்கு வறுவல் எப்படி கலர்ஃபுல் ஆக இருக்கிறது பாருங்கள்!
பன்முகத் திறமை உள்ள இவர் கைவேலைகள் செய்வதிலும்
கைதேர்ந்தவர்.
******************************************************************************
என்ன பேரு மறந்து போச்சா? இல்லையில்லை, இந்த
மாதிரி தலைப்புல ஒருவர் தனது கவிதைகளைப் படைக்கிறார்.
எத்தனையோமுறை
கண்ணீரால் கழுவியும்,
இன்னும் நீங்கவில்லை....!
என் இதயத்தில் ஒட்டியிருக்கும்
உன் நினைவுகள்....
முதல் நாளும்
இரண்டாம் நாளும் என்னுடைய பதிவுகளைப் படித்து விட்டு பாராட்டிய தோழமைகளுக்கு
நன்றி!
நாளை நாற்சந்தியில்
நின்று தமிழ் படிக்கலாம், சரியா?
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாய் அருமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்..
என்னுடைய இரு வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகத்துக்கு மிகவும் நன்றி Ms. ரஞ்சனி,
ReplyDelete: என். சொக்கன்,
பெங்களூரு.
ஓ!....பிலிம் தொகுப்பா!....அத்தனை அறிமுகத்திற்கும் இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteதொகுத்த தங்களுக்கும் வாழ்த்து..
அன்புடன்
வேதா. இலங்காதிலகம்.
எப்படி இத்தனை சீக்கிரம் வர முடிகிறது,
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி?
நன்றி!
வணக்கம் திரு சொக்கன்!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
நன்றி வேதா.இலங்காதிலகம்!
ReplyDeleteவலைச்சரத்துல இணைத்ததற்கு ரொம்ப நன்றி ரஞ்சனி :) வேலை விட்டு வீட்டுக்கு போனதுக்கு அப்பறம்...சரத்துல இருக்கற மற்ற மலர்களின் வாசனையையும் நுகரனும் :)
ReplyDeleteதங்களின் தொகுப்பு வியக்க வைக்கின்றது சகோ.!
ReplyDelete"கதையாங் கதையாங் காரணம்.. காரணத்தின் மேலே தோரணம்" என்று சிறுவர்களுக்கு கதை சொல்வது போல தாங்கள் எங்களுக்கு கதை கதையாய் வலைப்பூக்களின் பெருமைகளை எடுத்துரைக்கின்றீர்கள்.. அதுவும் எந்த வித அலங்காரமின்றியே!..
எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.!
முத்தான தொகுப்பு ரஞ்சும்மா....
ReplyDeleteஇதுவரை நான் அறியாத பதிவர்கள், நிதானமாய் சென்று பார்க்கிறேன்மா..
இயல்பான நடையில் மிக அருமையாக அறிமுகங்களை சொல்லி இருக்கிறீர்கள்....
அன்புவாழ்த்துகளுடன் நன்றிகள் ரஞ்சும்மா..
என்னுடைய கவிதைகள் பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி... :)
ReplyDelete-இப்படிக்கு அனீஷ் ஜெ...
வணக்கம் சிவஹரி!
ReplyDeleteஇன்று பதிவேற்ற நேரம் ஆகிவிட்டது. நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டு அலுவலகம் செல்ல வேண்டுமே என்று நினைத்துக் கொண்டேன்.
நன்றி!
பாட்டி இல்லையா, கதை சொல்லுவதில் விருப்பம் அதிகம்!
நன்றி மஞ்சு!
ReplyDeleteநன்றி அனீஷ்!
ReplyDeleteஉங்கள் கவிதைத் திறனுக்கு பாராட்டுக்கள்!
இன்றும் மிக அருமையான அசத்தலான அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete//இவரது இன்னொரு கட்டுரை
பெங்களூருவில் இன்று மழை //
மொத்தத்தில் உங்கக் காட்டிலே நல்ல மழை ... அதுவும் இந்த வாரம் ...
கொஞ்சம் காவிரி தண்ணீரை எங்கத் தமிழ்நாட்டுப்பக்கம் திருப்பி விடச் சொல்லுங்கோ ... ப்ளீஸ்.
அன்புடன்
VGK
நிறைய புது அறிமுகங்கள். மெல்லச் சென்று பார்க்கிறேன். மிக்க நன்றிம்மா.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களால், அறிமுகப்படுத்தப்ப்ட்டு, அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஅன்புடன்
VGK
இன்றைய ஜனநாயகக் கடமை அலுவலகத்தில் இருந்தே முடிக்கப்பட்டது. ( நேரம் கிடைத்ததால்).
ReplyDeleteநாளைய பொழுதினை எதிர்பார்க்கும்..
எல்லாம் நல்முத்துக்களாவே இருக்கு!
ReplyDeleteநிறைய பதிவர்களை இப்போதான் பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்பின் ரஞ்ஜனி - எல்லாமே அருமையான சுட்டிகள் - சென்று படித்துவிடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteThanks a bunch for introducing me here Ranjani Madam!
ReplyDeleteNice collection of blogs..thanks for the links.
நன்றி சிவஹரி! உங்கள் கடமை உணர்வைப் பாராட்டுகிறேன்.
ReplyDeleteநன்றி சீனா ஐயா!
ReplyDeleteஅன்புள்ள வை.கோ. ஸார்!
ReplyDeleteஎனக்குத் திறந்துவிட ஆசைதான். சாவி என்னிடம் இல்லையே!
ஒன்று மட்டும் மிகவும் உண்மை. இந்த வருடம் பெங்களூரில் மழை ரொம்பக் கம்மி. காவேரி நீர் பிடிப்பு இடங்களில் மழை கொட்டு கொட்டென்று கொட்டி நீர் தமிழ்நாட்டுக்கு பாய வேண்டுமென்று தினமும் காவேரி ரங்கனை வேண்டிக் கொள்ளுகிறேன்.
நிதனாமாகப் பாருங்கள் கணேஷ்! அவசரமில்லை.
ReplyDeleteவருகைக்கு நன்றி!
எல்லாத்தையும் கையோடு கையா பாக்காட்டா அப்புறம் முடியறதோ இல்லையோ? நல்லநல்ல பதிவுகள்.
ReplyDeleteஇந்த வீட்டுக்கு வாசப்படி வேணும்,வயதானவர்களுக்கான வக்காலத்து, கொடுத்துச் சென்றது அம்மாக்களின் அருமை, மரணம்கொடுக்கும் அனுதாபம், உயிர் கொடுக்காதது, கவிதைகள்,என்னை அம்மா என்று
அழைக்கும் சித்ரா,மஹியின் ப்ளாகுகள்,
இன்னும் அனேக வலைப்பதிவுகளைச்
சுற்றி வலையில் சிக்க வைத்துக் கொடுத்திருப்பது நீள எங்கெங்கோ
சுற்றி வந்த மாதிறி இருக்கிறது.
பேரெல்லாம் எழுதி வைச்சுக்கணும்.
நன்றி,நன்றி நன்றி என்று சொல்லணும். அருமையான தேர்வுகள், அன்புடன் சொல்லுகிறேன்.
வருக வருக துளசி!
ReplyDeleteவலைபதிவுலகம் எத்தனை பெரியது என்ற ஆச்சரியம் இன்னும் நீங்காமலேயே இருக்கிறது.
இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது அசாத்தியமானது என்று கூடத் தோன்றுகிறது.
நன்றி!
வாருங்கள் அனு! (பிதற்றல் என்று சொல்ல முடியாதே!)
ReplyDeleteநிதானமாகப் படியுங்கள்.
நன்றி!
வாருங்கள் மஹி!
ReplyDeleteஎன்ன surprise என்று கண்டு பிடித்தீர்களா?
நன்றி!
வாருங்கள் காமாட்சி அம்மா!
ReplyDeleteநிதானமாகப் படியுங்கள்.
நீங்களே நேரில் பேசுவதுபோல இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.
நன்றி!
வாருங்கள் காமாட்சி அம்மா!
ReplyDeleteநிதானமாகப் படியுங்கள்.
நீங்களே நேரில் பேசுவதுபோல இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.
நன்றி!
அன்புள்ள ரஞ்சனி அவர்களுக்கு, எனதி சிறுகதை அறிமுகத்திற்கு நன்றிகள் பல.
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு ரகுநாத்!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள்!
நல்ல அறிமுகங்கள்.அனைவரையும் சென்று படிக்கிறேன்.
ReplyDeleteநன்றி திருமதி வெங்கட்!
ReplyDeleteவணக்கம் (ரஞ்ஜனி)அம்மா.
ReplyDeleteஒவ்வெரு படைப்பாளிகளின் அறிமுக விளக்கம் மிகவு நன்றாக உள்ளது ..மிக்க நன்றியம்மா.
பூத்தையல் பற்றிய பதிவில் (நிழலும் நிஜமும்)என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிகவும் பிரமாண்டமாக உள்ளது.
நீங்கள் தரமான வலைப்பதிவை மிகவும் நேர்மையாகவும் நிதனமாகவும் பதிவு செய்துள்ளிர்கள்.
இந்த புத்தி கூர்மை யாருக்கு இருக்கம்மா? அது உங்களுக்குத்தான் மூன்றாம் நாளும் வலைச்சரம் வலைப்பூ பூத்து குலுங்குதம்மா. நான்கம் நாளும் நன்றாக அமைய எனது வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்களில் பல நான் படித்திராதவை... ஒவ்வொன்றாய் படிக்க வேண்டும்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிம்மா.
My attendance : உள்ளேன் மாமி. Amazed @ writing skills and the way of introduction and the flow of the content in the post. Opening n Closing too good!!! Hope I learn to write from U :-)
ReplyDeleteசெம பதிவு! அனைத்தையும் படித்து விட்டு மீதம் சொல்கிறேன்.
Twitter பாஷையில் : ரஞ்சினி மாமி பாறைகள்!
அன்புடன் அம்பி,
ஓஜஸ்
அம்பி, காணுமேன்னு பார்த்தேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி!
அதென்னவோ சொல்றீங்களே, twitter பாஷை அது என்ன?
நன்றி ரூபன்.
ReplyDeleteஒவ்வொரு நாளும் தவறாது வந்து கருத்துரை கொடுக்கிறீர்கள். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.
முதலில் முத்தான வணக்கத்தில் அறிமுகமாகியுள்ள அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteரஞ்ஜனி,
வலைப்பதிவை அழகா அறிமுகப்படுத்தியிருக்கீங்க.ஔவையின் சங்கப்பாடலுடன் ஆரம்பித்து, இதைவிட வேறெப்படி அறிமுகப்படுத்த முடியும்!நன்றி.
தொகுப்பு அருமை ரஞ்ஜனி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நிறைய வலைப்பூக்கள் உங்களால் நான் வாசிக்க ஒரு வாய்ப்பு நன்றி திருமதி ரஞ்சனி.
ReplyDeleteநன்றி சித்ரா!
ReplyDeleteஉங்கள் தோழியைச் சந்தித்தீர்களா?
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி இமா!
ReplyDeleteநன்றி ஷைலஜா!
ReplyDeleteRanjani Madam, I could not find the surprise. Not having enough time to browse leisurely..don't mistake me!
ReplyDeleteSurprise ennannu neengale sollirungalen,please! :)
அன்புள்ள மஹி,
ReplyDeleteஉங்களையும், உங்கள் தோழி சித்ராவையும் ஒன்றாக அறிமுகப் படித்தி இருக்கிறேனே, அதைத்தான் சொன்னேன்.
அதென்ன பெரிய surprise என்கிறீர்களா?
ரஞ்ஜனி அவர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்!!
ReplyDeleteநன்றி 'பழமை பேசி'!
ReplyDeleteஉங்கள் பெயர் மணியா?
உங்களுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
உங்களது கவிதைகள் மிக அருமை.
நிறைய படித்தேன். எனக்குப் பிடித்த இரண்டை பகிர்ந்து கொண்டேன்.
நான் இன்னிக்கு தான் கல்லூரி விடுதில இருந்து வந்தேன்... அறிமுகத்திற்கு மிக்க நன்றி அம்மா..
ReplyDeleteஎன்ன அருமையா எழுதறிங்க, கண்மணி கண்ணு வச்சுட்டா சுத்திப் போட்டுகோங்கம்மா :)
மீண்டும் நன்றிகள்! :)
உங்களுக்குப் பிடித்ததா என் அறிமுகம்?
ReplyDeleteவாழ்த்துக்களு பாராட்டுக்களும் கண்மணி!
மகிழ்ச்சியுடன்,
ரஞ்ஜனி
அருமையான அறமுகங்கள்.. எனது தளத்தையும் அறிமுகளம் செய்தமைக்கு நன்றி அம்மா
ReplyDelete