ரஞ்ஜனி நாராயணன்
இவரது கவிதை:
*********************************************************************************************
*********************************************************************************************
காலை வணக்கம் எல்லோருக்கும்!
எங்களூரான பெங்களூரில் இரண்டு பொருட்கள் மிகச்
சிறப்பாக இருக்கும். ஒன்று காபி: கோதாஸ் காபி என்றால் ஊரே மணக்கும்.
அடுத்து தோசை! தோசா என்பார்கள்; இல்லை தோசே என்பார்கள்
நம்மைப்போல தோசை என்று சொல்ல மாட்டார்கள். முருமுறுவென்று அழகிய நிறத்தில் விதம்
விதமாக கிடைக்கும். அதிலும் ஓபன் மசாலா என்று ஒரு வகை. மசால் தோசையை உள்ளே ஆலு கறி
வைத்து மூடி இருப்பார்கள், இல்லையா? இது திறந்திருக்கும். தோசையின் மேல் எங்க ஊர்
சட்னி பொடி தூவி, அதன் மேல் காய்கறிகள், அதன் மேல் ஆலு கறி இருக்கும் அதன்மேல் ஒரு
உருண்டை வெண்ணை இருக்கும். படத்தைப் பாருங்கள். வாயில் ஜலம் ஊறுகிறது, இல்லையா?
வலைபதிவிலும் ஒரு தோசா, காபி உறிஞ்சல்! 365 நாட்களும்
கிடைக்கும் இந்த தோசா365 ( சங்கத் தமிழ் தேடல்..) பதிவை எழுதும் கண்ணபிரான்
ரவிஷங்கர் என்ன சொல்லுகிறார் காபி
உறிஞ்சல் பற்றி?
சங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை
* காபியை
"மொடக்" என்று குடிப்போன்= "குடியன்" :)
* இரண்டு இரண்டு இழுப்பாய், உறிஞ்சி, அசை
போடுவோன்= "சுவைஞன்"
* அதே போல் தான் சங்கத்
தமிழும்!
* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியா உறிஞ்சுங்கள்
= படிக்க எளிமை, பருகச் சுவை!
இதுவே, சங்கத் தமிழ் - "காபி உறிஞ்சும் கலை"!
சரி, அதென்ன தோசா? Dinam
Oru SAngath
thamizh!
உங்களுக்காக தோசாவிலிருந்து ஒன்றிரண்டு விள்ளல்கள்:
தினம் ஒரு பதிவு என்று ஒரு
வருடம் முழுவதும் இந்தப் பதிவை எழுத இருக்கிறார் இவர். தமிழ் இலக்கணம், இலக்கியம்
என்று சுவைபட எழுதும் இவர், வெறுமனே எழுதிக்கொண்டே போகாமல் போட்டி வைத்துப்
பரிசும் கொடுக்கிறார்
பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்
இவரது வலைப்பதிவின் செல்வாக்கு! ‘அருமை சகோ’, ‘நல்ல பகிர்வு!’ என்றெல்லாம்
பின்னூட்டம் வராது. இவருக்கு இணையாக பதில் சொல்லுவோரை, கேள்வி கேட்போரை அங்கு
காணலாம்.
மண்டோதரி பற்றிய ஒரு
அலசல்.
எதுகை, மோனை சொல்லிக்
கொடுத்து வீட்டுப் பாடமும் கொடுப்பார்
இவர்!
வீட்டுப் பாடம்:
1. கற்க கசடறக் கற்பவை
கற்றபின் = என்னாது இது?:)
2. கீழ்க்கண்டவற்றுக்கு இலக்கணக்
குறிப்பு வரைந்து, எதுகை-
மோனைகளைக்
காட்டுக:))
பிகரும், பிலிமும், பிள்ளைப்
பருவம்
அகமும் அதனில் அனுஷ்கா
உருவம்!
விடையையும் அவர்
வலைத்தளத்திலே காணலாம்.
“இன்னிக்கி தேதியில்
ஆண்டாள் கதை, ஒரு Fairy Tale!.....ஆனால் அன்று?
* ஏலாப் பொய்கள் உரைப்பானை-ன்னு இறைவனைத் திட்டுறா!
* ஏலாப் பொய்கள் உரைப்பானை-ன்னு இறைவனைத் திட்டுறா!
* மானமிலாப்
பன்றி-ன்னு எம்பெருமானை வசை பாடுறா!
* பெண் கொடியை வதை
செய்தான் என்னும் சொல், வையகத்தார்
மதியாரே-ன்னு சாபம் விடுறா!”
தோசாவை ருசித்து, காபி குடித்து இலக்கியம், இலக்கணம்
படித்தாயிற்றா?
இனி அடுத்த பதிவரைப் பார்ப்போம்.
************************************************************************************************************
வலைச்சரத்திற்காக வலைத்தளம் வலைத்தளமாக பிரயாணித்ததில்
நிறைய பூங்கொத்துக்கள் – கவிதைப் பூங்கொத்துகள் கிடைத்தன.
எத்தனை திறமைசாலிகள்! அடுப்படி யையும்
கவனித்துக்கொண்டு, அடுக்கடுக்காய் கவிதையும் எழுதுவேன் என்கிறார் வண்ணசாரல் அகிலா!
கவிதை எழுதுபவர்களைக் கண்டால் நிறைய வியப்பு;
அதைவிட நிறையவே பயம்.
வியப்பு – எப்படி 4 பக்கக் கதையை 4 வரிகளில்
சிறைப்படுத்தி, நமக்குப் புரியவும் வைக்கிறார்களே என்று.
பயம்: நமக்கு இதெல்லாம் வராது. நான் இந்த
விளையாட்டுக்கு வரலே....என்று ஓடத்தோன்றும்!
‘அடுத்தவர்களின்
வட்டத்திற்குள்
அடியெடுத்து
வைக்காதவரை
எல்லாமே
அழகுதான்...’
இன்னொரு கவிதை: பிள்ளையாரின்
பிறந்த நாள்:
இந்தக் கவிதையின் கடைசி வரிகள் நம்மை புன்னகைக்க
வைக்கின்றன.
'ம்ம்ம்....
குடைக்குள் என் நண்பன்....
சந்தோஷமாய்....
நானும் அவனை
வாழ்த்தி சந்தோஷமாய்...'
முழு கவிதையையும் வாசித்து அவருக்கு வாழ்த்தும் கூறுவோம்.
முழு கவிதையையும் வாசித்து அவருக்கு வாழ்த்தும் கூறுவோம்.
*********************************************************************************************
ஒரு சிறுகதைச் சரம்
அன்பின் அடி
நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம்
சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். இவரது சிறுகதை
தொகுப்பிலிருந்து ஒரு கதை: கிடைக்காமல் இருக்காது...
படித்து விட்டீர்களா? இன்னும் பயணிப்போம்.
படித்து விட்டீர்களா? இன்னும் பயணிப்போம்.
ஒரு வித்தியாசமான எழுத்துச் சரம்
இதயம்
பேத்துகிறது ஜவகர் -ரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு என்று இவரது வலைத்தளம் ‘நச்’ சென்று சொல்லுகிறது.
படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும் நான் ஏன்
வித்தியாசமான எழுத்து என்று சொல்லுகிறேன் என்று.
*********************************************************************************************
அனுபவச்சரம்
சொல்லுகிறேன் : காமாட்சி
அம்மா
“ஒரு விஷயம்
தெரியுமா? எனக்கு ஒரு வருஷம் முன்வரை கணினி உபயோகிக்கத்
தெரியாது, இப்பொழுது
சிறிது தெறிகிறது. முன்பு சுதேசமித்திரன் பாரததேவி, போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும்
எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறேன்..”
“விளையாட்டாக
ப்ளாக் என்றால் என்ன என்று கேட்க, என் பிள்ளை உனக்கு ஒரு ப்ளாக் ஆரம்பித்துக் கொடுக்கட்டுமா
என்று சொல்லி ஒரு பேர் சொல்லு, சொல்லு என்று சொல்ல, சரி, சொல்லுகிறேன் என்று சொன்னேன்’
என்கிறார் திருமதி காமாட்சி.
சமீபத்தில் திரு
சைபர் சிம்மன் அவர்களால் வெகு சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டார். ‘அவள்’ விகடனிலும் இவரது
அறிமுகம் வந்தது.
நிறைய சமையல்
குறிப்புகள் எழுதும் இவர், சமையலறையை விட்டு வந்து எழுதுங்கள் என்று என் போன்ற
பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘பஜனை நினைவுகள்’ என்று எழுதி இருக்கிறார்.
வெறும் ரசம், சாம்பார், முறுக்கு என்று மட்டும் எழுதுவார் என்று நினைத்தால் தவறு. பிட்ஸா செய்வது பற்றியும் மிக விரிவாக எழுதி இருக்கிறார். 'பேஸ்' (Base) செய்வதிலிருந்து!
வெறும் ரசம், சாம்பார், முறுக்கு என்று மட்டும் எழுதுவார் என்று நினைத்தால் தவறு. பிட்ஸா செய்வது பற்றியும் மிக விரிவாக எழுதி இருக்கிறார். 'பேஸ்' (Base) செய்வதிலிருந்து!
இவரைப் பற்றியே
வலைச்சரத்தில் ஏழு நாட்களும் எழுதிவிடலாம். அத்தனை விஷயங்கள் உள்ளன இவரிடம்.
*********************************************************************************************
தொழில் நுட்ப
சரம்:
நேற்று என் தோழி
பூர்ணிமா போன் செய்திருந்தாள். “என்னோட கம்ப்யூட்டர் அப்படியே நின்னுடுத்து.
கொஞ்சம் வரீங்களா?” என்று.
என் பிள்ளைக்கு
ஒரே சிரிப்பு. ‘உன்னைப் போயி .......’
எப்போது
பார்த்தாலும் கணணி முன் உட்கார்ந்திருப்பதால் பலர் என்னை ஒரு டெக்கி (techie) என்று
நினைத்துவிடுகிறார்கள்! எனக்குத் தெரிந்த ஒரே கணணி தொழில் நுட்பம் கணணி பாதியில்
நின்று விட்டால் ‘re-start’ பண்ணுவதுதான்!
போன வாரம் என்
லேப்டாப்- பில் உட்கார்ந்த என் பிள்ளை, ‘ஸ்லோ ஆயிடுத்தா லேப்டாப்?’ என்றான். ‘ஒரு
தடவை re-start பண்ணிடு’ என்றேன். ‘ரொம்பத் தேறிட்டமா நீ...!’ என்று கண்ணில் நீர் வரச் சிரித்தான்.
என்னைப்போன்ற
தொழில் நுட்ப அறிவிலிகளுக்காகவே தங்கம்பழனி கணணி பற்றிய விஷயங்களை எளிதாகக் சொல்லிக் கொடுக்கிறார். தமிழில் வெகு
எளிமையாக HTML முதற்கொண்டு விளக்குகிறார்.
********************************************************************************************
எச்சரிக்கைச்சரம்:
எங்களைப்போன்ற வயதானவர்கள்
இணையத்தில் பொழுது போக்குவது இப்போதெல்லாம் வெகு சகஜமாகிவிட்டது. எங்களுக்கும்
முகப் புத்தக பக்கங்கள் உண்டு; நாங்களும் ட்வீட் செய்வோம் என்று வயதானவர்கள் பந்தாவாகச்
சொல்லிக் கொள்ளும் காலமிது.
‘சிக்கல்
இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.’ என்று எச்சரிக்கை விடுக்கிறார் பாஸ்டன் பாலா. இவர் எழுதி புதிய தலைமுறையில் வெளியான
கட்டுரையை தனது வலைப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாஸ்டன் பாலா.
‘ ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று
யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.’
‘ அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை
உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.’ என்கிற இவரது எச்சரிக்கை
இணைய தளமே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு தேவையான எச்சரிக்கை!
‘இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல்
சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில
வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து
அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.’ என்று கட்டுரையை
முடிக்கிறார்.
நன்றி பாலா!
இவரது இன்னொரு தளம் :10hot.wordpress.com
டாப் டென்-னிலிருக்கும் பல விஷயங்களைப் பட்டியல் இடுகிறார் இந்த வலைதளத்தில்.
இவரது எழுத்துக்கள் இவரது பன்முகத் திறமைகளை நமக்குக் காட்டுகிறது.
டாப் டென்-னிலிருக்கும் பல விஷயங்களைப் பட்டியல் இடுகிறார் இந்த வலைதளத்தில்.
இவரது எழுத்துக்கள் இவரது பன்முகத் திறமைகளை நமக்குக் காட்டுகிறது.
*********************************************************************************************
குழந்தைகளுக்கான சரம்:
வயதானால் தனிமை என்பது தவிர்க்க முடியாத
ஒன்று. தனிமையைக் குறைக்க என்ன செய்யலாம்? முதலிலிருந்தே
ஏதாவது பொழுதுப்போக்கு இருந்தால் அதை தொடரலாம். இல்லை எங்களைப்போல கணணியின் மூலம்
உலகத்தை வலம் வரலாம்.
அப்படி வலம் வருவதையும் பயனுள்ளதாக செய்கிறார் திருமதி ருக்மணி சேஷசாயி.
தனது இரண்டாவது குழந்தைப் பருவத்தில் இருக்கும் இவர் சின்னக் குழந்தைகளுக்குச் சுட்டிக் கதை சொல்லுகிறார்.
அப்படி வலம் வருவதையும் பயனுள்ளதாக செய்கிறார் திருமதி ருக்மணி சேஷசாயி.
தனது இரண்டாவது குழந்தைப் பருவத்தில் இருக்கும் இவர் சின்னக் குழந்தைகளுக்குச் சுட்டிக் கதை சொல்லுகிறார்.
'எதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள்' என்கிறார் திருமதி ருக்மணி சேஷசாயி.
சமீபத்தில் என் வீட்டுக்கு வந்திருந்தார்.
சிறிது நேரம் ஆன பின் ‘என்ன சாப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
‘ஒண்ணும் வேணாம். நீ உன்னோட வலைத்தளத்தில்
என்னன்னமோ கலர்கலராகப் போட்டுக்கொண்டு இருக்கிறாயே, அதையெல்லாம் எப்படிப் போடுவது (தமிழ்
பதிவுகளின் வலைத்திரட்டிகள்) என்று சொல்லிக் கொடு’, என்றார். (என் பிள்ளையின்
சிரிப்போலி கேட்குதா?) வெள்ளை உள்ளம்! தெரியாததை தெரிந்து கொள்ள தீராத ஆசை!
சுட்டிகளுக்குக் கதை எழுத வேறென்ன தகுதி வேண்டும்?
*********************************************************************************************
குழந்தைகளின் உலகமே தனி. அதில் நுழைவதற்கு
கதை என்பது விசா. அது கிடைத்த மகிழ்ச்சியில் சற்று தோட்டத்திற்குப் போலாமா?
எங்கள் ஊர் தோட்டங்கள் நிறைந்த ஊர். தோட்டத்தைப்
பற்றி எழுதாவிட்டால் எப்படி?
தென்னை
மரம் பற்றிய பதிவு.
‘தென்றல்’ எழுதிய சிறிய கவிதையுடன் இன்று
விடை பெறுகிறேன்.
எங்கோ மலைப் பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த திராட்சைக்
செடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
எனது பால்கனியில்!
கவிதையை ரசித்துக்
கொண்டிருங்கள். நாளை மனம் போன போக்கில்......!
.
தங்களுடைய இவ்வாக்கத்தினைப் படித்துக் கொண்டு வருகையிலே திடிரென்று வாய்விட்டுச் சிரித்தேன். ஏனெனில் தாங்கள் ஒரு சிறந்த டெக்கியாக இருப்பதைக் கண்டு.
ReplyDeleteசிலருடைய வலைப்பூக்களில் நான் என் கருத்தினைப் பதித்திருக்கின்றேன். தங்கம் பழனி அவர்கள் குறித்து அறியச் செய்தமைக்கு நன்றி சகோ.!
நான் என் ஜனநாயகக் கடமையினை முடித்து விட்டு அலுவலகம் செல்ல வேண்டும்.
ReplyDeleteஓட்டுபெட்டியினை காணலீயே!
தமிழ் மணத்தில் பதிவை இணையுங்க சகோ.!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஎல்லாவிதமான ரஸங்களுடனும் பலப்பல தளங்கள். இயல்பான நகைச்சுவை ததும்பும் எழுத்தில் நீங்க அசத்தறீங்கம்மா. புதியவை நிறைய. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்,
உங்களுக்கும் சேர்த்துத்தான்.
//உங்களுக்காக தோசாவிலிருந்து ஒன்றிரண்டு விள்ளல்கள்://
ஒன்றிரண்டு விள்ளல்கள் ..... அதெல்லாம் எனக்குப்பத்தாதும்மா ...
நானே அடிக்கடி பெங்களூர் விஜயநகருக்கு வந்து போனவன் தான்.
அங்குள்ள மிகப்பிரபலமான ”இந்திரப்ரஸ்தா” என்ற ஹோட்டலின் குளுகுளு அறையில், தோசை, காஃபி முதலியன சாப்பிட்டுக்கொண்டே தான் என்னை யாரும் [என் மகன் கூட] பார்க்க முடியும். அதை விட்டு வெளியே வரவே எனக்கு விருப்பம் இருக்காது.
பெங்களூர் என்றாலே என் நாக்கில் ஜலம் வரவைப்பது அங்குள்ள “விஜயநகர் இந்த்ரப்பிரஸ்தா” உணவகம் மட்டுமே.
இப்போது பெங்களூரில் என் மகன் இல்லாவிட்டாலும், என் நினைவலைகளில் நீங்காமல் இருப்பது
இந்த “இந்திரப்ரஸ்தா” உணவகமும், அங்கு நான் விரும்பி சாப்பிட்ட அருமையான, எனக்கு மிகவும் பிடித்த தோசாசை.
[தோசை+ஆசை=தோசாசை]
பூரிமஸால் முதலியன மட்டுமே.
நாக்கில் *நீர், நீர் ஊற வைத்து விட்டீர்கள்.
[*நீர் = நீங்கள்]
அன்புடன்
VGK
ஆஹா ஆரம்பமே தோசா தானா? சூப்பர்மா.. அதுவும் வாயில் ஜலம் வரவைச்சுட்டுதே....
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அத்தனையும் எனக்கு புதியவர்களே...
எல்லாமே பயனுள்ள பகிர்வுகள் அம்மா. கண்டிப்பாக சென்று பார்க்கிறேன்.
ஆஹ் டெக்கி தான் நீங்க, ரீஸ்டார்ட் செய்யும் டெக்னிக் தெரிஞ்சிருக்கே..
இரண்டாம் நாளும் சிறப்பாக செய்தமைக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு பதிவர்களுக்கும்
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அம்மா.
அன்புள்ள திரு சிவஹாரி,
ReplyDeleteதினும் முதல் நபராக வந்து பின்னூட்டம் கொடுக்கும் உங்களுக்கு நன்றி!
தமிழ்மணத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது என்று தெரிகிறது.
வோட்டுக்கும் நன்றி!
நன்றி லட்சுமி அம்மா!
ReplyDeleteஎன் வலைதளத்தில் கருத்துரை போட வந்ததா?
நன்றி திரு பாலகணேஷ்!
ReplyDeleteஅன்புள்ள திரு சிவஹரி,
ReplyDeleteஉங்களை சிவஹாரி யாக மாற்றியதற்கு மன்னிப்பு!
வாங்கோ VGK!
ReplyDeleteநான் வாங்கோன்னு சொன்னது - எங்களூருக்கு! எங்கள் அகத்திற்கு!
எல்லோருமா சேர்ந்து 'இந்திரபிரஸ்தா'
போவோம்!
நன்றி!
வாங்கோ மஞ்சு!
ReplyDeleteஒவ்வொரு வலைத்தளத்திலும் எத்தனை எத்தனை திறமை கொட்டிக் கிடக்கிறது, தெரியுமா?
ஒரு வாரமாக ஏகத்துக்கும் படித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கிறேன்.
அடுத்த வாரமும் நானே ஆசிரியையாக இருக்கிறேன் என்று திரு சீனா அவர்களிடம் சொல்லலாமா என்று தோன்றுகிறது.(சும்மா...ஒ ள ளா கட்டிக்கு!)
அத்தனை திறமைசாலிகள்!
இனிய அறிமுகத்துக்கு நன்றி-ம்மா!
ReplyDeleteஎனக்கு கூச்சம் கொஞ்சம் சாஸ்தி:)
இத்துடன் அமைகிறேன்:)
உங்கள் கழுத்தில் சூடியிருக்கும் வலைச்சர மாலை, நன்கு மண/னம் கமழட்டும்! வாழ்த்துக்கள்!
அறிமுகங்கள் அனைத்தும் அருமை..எங்கவீட்லயும் கோதாஸ்தான்! பேர்லயே கோதா(கோதை எனும் ஆண்டாள்) இருந்தால் காபியும் தமிழ்போல மணக்குமே!(அன்புத்தம்பி கே ஆர் எஸ்சுக்கு ஆண்டாள் என்றால் மூக்கில் வியர்க்கும்:) இயல்பாக அருமையாக எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்!
ReplyDelete//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஇனிய அறிமுகத்துக்கு நன்றி-ம்மா!
எனக்கு கூச்சம் கொஞ்சம் சாஸ்தி:)
இத்துடன் அமைகிறேன்:)
//// இப்படி சொல்லியே எஸ்கேப் ஆகும் ரவியை விடாதீங்க:)
வாருங்கள் ரவி,
ReplyDeleteபறந்து வந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் இணைப்பு கொடுத்து திரும்புவதற்குள் இங்கு உங்கள் கருத்துரை.
உங்கள் பதிவுகளில் தமிழ் கற்கும் மாணவி நான் என்று சொல்லிக் கொள்ளுவதில் பெருமை எனக்கு.
நன்றி ரவி உங்கள் தோசா-விற்கும் காபி உறிஞ்சலுக்கும்
உங்கள் கிளி வெகு அழகு ஷைலஜா!
ReplyDeleteஉங்களுக்கும் கோதை நினைவோ!
நீங்கள் தானே ரவி நடத்திய போட்டிக்கு தீர்ப்பாளர்,மறந்தே விட்டேன்.
உங்களுக்கும் நன்றி!
அறிமுகங்கள் அழகாக செய்து , எனக்கு , தமிழில் படிக்கவேண்டிய, ரசிக்க வேண்டிய, பதிவுகளை சுட்டுக்காட்டியதற்கு, நன்றி.
ReplyDeleteஇன்னும் வரப்போகும் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாருங்கள் பட்டு!
ReplyDeleteஅறிமுகங்கள் நன்றாக இருந்ததாக நீங்கள் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி!
ReplyDeleteதங்களின் வலைச்சர பணிக்கு என உளங்கனிந்த வாழ்த்துக்கள்!இன்றைய பதிவு நன்று!
வாருங்கள் புலவர் ஐயா!
ReplyDeleteவணக்கம்.
நீங்கள் வந்தது ரொம்பவும் மகிழ்ச்சி.
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
பன்முகத் திறமைகளை அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅத்தனை அறிமுகதாரருக்கும், தங்களுக்கும் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அனைத்து அறிமுகங்களும் சிறப்பாக இருந்தன...
ReplyDeleteஇன்று அவ்வளவு தான்... ஒரு மணி நேரம் ஆகி விட்டது... இப்போது மின்சாரம் போய் விடும் என்று நினைக்கிறேன்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அம்மா...
T.M. 4
ReplyDeleteஅட! நீங்களா இந்தவார வலைச்சர ஆசிரியர்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை!
இனிய வாழ்த்து(க்)கள்.
அருமையாக அறிமுகப்படுத்தினீர்கள். வாழ்த்து.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி வணக்கம். வாருங்கள்.
ReplyDeleteநேற்று என்னுடைய எல்லாப் பதிவுகளையும் படித்து கருத்துரையும் சொல்லி இருந்தீர்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
பாராட்டுக்களுக்கும் நன்றி!
வாருங்கள் வேத.இலங்கா திலகம்!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி!
கோவைக்கவியின் பாராட்டு கிடைத்தபின் வேறென்ன வேண்டும்?
தமிழ் மனம் வோட்டிற்கு நன்றி தனபாலன்!
ReplyDeleteவாருங்கள் துளசி!
ReplyDeleteநீங்கள் எழுதிய ஒரு 'அட!'- வில் உங்கள் ஆச்சரியங்கள் அத்தனையும் தெரிகிறது.
60 வருட பூர்த்திக் கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள். இத்தனை நாள் சின்ன வயசு புகைப்படத்தையே போட்டு...
இப்போது போட்டுள்ள புகைப்படம் மிக அருமை.
பல்லாண்டு வாழ்க!
நன்றி துளசி!
நன்றி கலையன்பன்!
ReplyDeleteமுதலில் தோசா365 வில் தோசையை மூக்கப்பிடிக்க சாப்பிட்டுவிட்டு,மாதவிப் பந்தலில் இளைப்பாறி, பிள்ளை, கதைகளைப்யார் பிறந்த நாளை அனுபவித்துக் கொண்டாடிவிட்டு,ஜாக்கிரதையா வேறெ
ReplyDeleteவட்டத்தில் நுழைந்து,கதைகளைப்படித்து ரஸித்து,என்னுடைய அபிமான இதயம் பேத்துதலைச் செவிமடுத்து,என் பஜனையையும் தூரயிருந்து கேட்டுவிட்டு,முக்கியமான
கணிணியைஸ்டார்ட் செய்துவிட்டு
குழந்தைக்கதைகளையும் கேட்டுவிட்டு
இன்னும் மீதியையும் படித்துவிட்டு
ஒரு தமிழெழுதும் நல்லுலகத்தை
சுற்றி வந்த மகிழ்ச்சியுடன் பின்னூட்டம். எப்படி இவ்வளவையும்
கோர்த்தனை?மாலை அருமையாக இருக்கு.நிறையபேரை தெறிந்துகொள்ள முடிந்தது. ரஞ்ஜனிக்கு ஒரு ஜே போடத்தோன்றியது.உனக்கும்,யாவருக்கும் பாராட்டுகளை அன்புடன் சொல்லுகிறேன்.
காபி முதல் கம்ப்யூட்டர் வரை,,,
ReplyDeleteகலங்குறீங்க அம்மா...
நல்ல அறிமுகங்கள்...
தங்கம்பழனி அறிமுகத்திற்கு நன்றி அம்மா,, ( நம்ம குழுவாச்சே அதான் அவர் சார்பாக)
சிறப்பான அறிமுகங்கள்..... ஒவ்வொருவரையும் படிக்கவேண்டும்....
ReplyDeleteஅன்புள்ள காமாட்சி அம்மா,
ReplyDeleteஆஹா நீங்கள் எத்தனை அழகாகக் கோர்த்து இருக்கிறீர்கள்!
நன்றி!
தொழிற் களத்தில் பதிவு எழுதும் எல்லோருக்கும் அறிமுகம் உண்டு.
ReplyDeleteஇளையதலைமுறையை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.
நன்றி!
வணக்கம் (ரஞ்ஜனி)அம்மா.
ReplyDeleteவலைச்சரம் வலைப்பூவை பொறுப்போற்ற சிறிது காலத்தில் இருந்து வலைச்சரம் வலைப்பூவானது. சிரித்து பூக்குதம்மா.... நினைக்கயில் மிக்க மன மகிழ்ச்சியாக இருக்குது வாழ்த்துக்கள் அம்மா.
நம் தழிழர்களின் தேசிய உணவு காலையில் தோசையும் சட்னி.சாம்பாரு. காப்பியும் அது எங்கு தமிழ்கள் வாழ்கின்றார்கள் அங்கே எல்லாம் இருக்கும் இலங்கை சிங்கப்பூர் மலேசியா.இந்தியா போன்ற நாடுகளில் காலையில் தோசையும் சட்னியும்.சாம்பாரு.காப்பி.மூக்கில் மனம் வீசும்.
அதுமட்டுமா சாப்பாட்டில் இருந்து தொழிநூற்பம் வரை விரிவான விளக்கத்தையும் வாசகர் உள்ளங்களில் புரியக் கூடிய வகையில் விளக்கங்களை அளித்துள்ளிர்கள் வளர்ந்து வரும் இளையவலைப்பதிவாளர்களின் வலைப்பூக்களையும் நீங்கள் அறிமுகம் செய்வதை நினைத்துமிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்கநன்றியம்மா இந்த எழுத்துலகில் உங்கள் பணி தொடர எனது மனமார்த வாழ்த்துக்கள் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல அறிமுகங்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்-மா!!
நாளை எழுத்தாளர் என்.சொக்கன் தானே!!
இன்னும் 6 நாட்கள் இருக்கின்றன. இன்றோடு சேர்த்து!!
ஆறு மனமே ஆறு!!
நீங்க நீங்கதான்....என்ன அழகாக அறிமுகபடுத்தி இருக்கிறீர்கள்...
ReplyDeleteநிறைய தளங்கள்...
நிறைய வாசிப்புகள்...
உங்களின் வட்டத்திற்குள்
என்னையும் என் அடுப்படியையும்
என் கவிதைகளையும் இருத்தி
என்னையும் பெருமைபடுத்திவிட்டீர்கள்....
நன்றி ரஞ்சனி மேம்....
அன்பின் ரஞ்ஜனி - அழகாக வலைச்ச்ரம் தொடுக்கப் பட்டிருக்கிறது - பல்வேறு பூக்களைத் தேடிக் கண்டு பிடித்து மணம் ப்ரப்பஇயது நன்று. அத்தனையையும் சென்று படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஇன்றைய சரத்தில் கோர்க்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.அழகான அறிமுகம்.
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது அனைத்து வலைப்பதிவுகளுக்கும் சென்று படிக்க வேண்டும்.
உங்கள் பதிவுகளை அவ்வளாகப் படித்ததில்லை. தற்போது அவ்வபோது உங்கள் பழைய பதிவுகளை படித்து வருகிறேன். தங்களின் அறிமுகப் படுத்தியவர்களையும் படித்து வருகிறேன்.
ReplyDeleteஜனா தவிர பிற புதியவை. அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteதோசா சாப்பிட வேண்டும், அடுத்த முறை.
இதயம் பேத்துகிறது படித்த ஞாபகம் :)
ReplyDeleteஅறிமுகங்களுக்கு தோசை கொடுத்து ஆரம்பித்த விதம் அருமைங்க தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteநன்றி ரூபன்
ReplyDeleteவாருங்கள் தமிழ்!
ReplyDeleteஉங்கள் ஊகம் சரியே!
நாளை யாரென்று தெரிந்ததா? (நான்காம் நாள்)
ரொம்பவும் ஆற வேண்டாம்!
நன்றி!
நன்றி சித்ரா!
ReplyDeleteநன்றி அகிலா!
ReplyDeleteவாருங்கள் சீனா ஐயா!
ReplyDeleteநன்றி!
நன்றி வெங்கட்!
ReplyDeleteவாருங்கள் முரளிதரன். என்னையும் ஒரு பொருட்டாக்கி வலை உலகத்திற்குக் கட்டிய திரு சீனா விற்கும், திரு வை.கோ. அவர்களுக்கும் என் நன்றிகள்!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
வாருங்கள் அப்பாதுரை!
ReplyDeleteநன்றி!
ஒவ்வொரு முறை பின்னூட்டம்/பதில் எழுதும்போதும் என் முதுகும் வளைவது போல பிரமை!
வாருங்கள் 'தென்றல்' கவிதை சசிகலா!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
அருமையான அறிமுகங்கள். ஒவ்வொன்றும் ஒரு சுவை.
ReplyDeleteவருகைக்கு நன்றி திருமதி வெங்கட்!
ReplyDeleteஉங்கள் பெயர் தெரியவில்லை. நன்றி கோவை டூ தில்லி என்று கூற மனம் ஒப்பவில்லை.
என் பெயர் ஆதிலஷ்மி. ஆதி என்று அழைக்கலாம்.
ReplyDeleteநன்றி ஆதி!
ReplyDeleteஎன் தோட்டம் வலைத்தளம் பற்றி இனிய அறிமுகத்துக்கு நன்றி அம்மா. எனக்கு பிடித்த தோட்டம் பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஅன்புடன்,
சிவா
தங்களின் ஒவ்வொரு அறிமுகமும் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteநிறைய பயன்மிக்க வலைப்பூக்களை அறிமுகம் செய்து, அவற்றை அழகாய்த் தொடுத்து, அனைவருக்கும் பகிர்ந்த விதம் அருமை...
வலைச்சரத்தில் தங்கம்பழனி வலைப்பூவை சரத்தில் தொடுத்து வழங்கியமைக்கு என்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
மிகத் தாமதமாக வந்து கருத்திட்டமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்..
தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வலைச்சரத்திற்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி அம்மா..!
உங்கள் தோட்டத்தில் நான் உலா வந்ததற்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்?
ReplyDeleteஉங்கள் தளத்தை அறிமுகப் படுத்தியவர் திருமதி பட்டு ராஜ். வெற்றிமகள் என்ற பெயரில் தமிழிலும்,gardener@60 என்று ஆங்கிலத்திலும் எழுதுகிறார்.
இவரது ஆங்கிலத் தளம் இவரது தோட்டத்தைப் பற்றி பேசும்.
ஒருமுறை உலாவி விட்டு வாருங்கள்!
late ஆக வந்தாலும், latest!
ReplyDeleteநன்றி தங்கம் பழனி.
உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!
பாராட்டுக்கள்!