ரஞ்ஜனி நாராயணன்
‘அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?’
ஆஹா.. எங்கேயோ கேட்ட பாடல்....!
பாடலைப் பாடியபடி யார் வருவது? பூங்குழலி! அவளைத் தொடர்ந்து ஒரு
கூட்டமே வருகிறதே! யாரிவர்கள்?
வந்தியத்தேவன், குந்தவை, பொன்னியின் செல்வன்,
வானதி, ஆதித்த கரிகாலன், நந்தினி, சுந்தர சோழன், சேந்தன் அமுதன்,
பூங்குழலி.....நடுவில் யார்? மிகவும் தெரிந்த முகமாக இருக்கிறதே!
ஒரு நிமிடம் மூச்சு விடவும் மறந்தேன். என்
கண்களை என்னால் நம்பவே முடியவேயில்லை. அவரா? அவரேதான்! சாட்சாத் ‘கல்கி’ அவர்கள்தான்!
வணங்கினேன். “தாங்கள் எப்படி ஐயா இங்கு?”
தயங்கித் தயங்கிக் கேட்டேன்.
“நீ இன்றைக்கு ‘நாற்சந்தி’ யில் ‘தமிழ்’ எழுதப் போகிறாய் என்று ஒரு பறவை சொல்லிற்று. நான் இல்லாமல் அவர்கள் எங்கே? அதனால்
வந்தேன்” என்றார்.
“நல்லது ஐயா, ஒரே ஒரு புகைப்படம்....?”
“எடுத்துக் கொள்...” என்றவாறே அவர் நடுவில் அமர,
அவரது கதாபாத்திரங்கள் அவரை சுற்றி அமர்ந்தனர். இதோ அந்தப் புகைப்படம்
உங்களுக்கும்:
‘நாற்சந்தி’ எழுதும் திரு ஓஜஸ் சொல்லுகிறார்:
‘பொன்னியின் செல்வன்’ படித்து
முடித்ததிலிருந்து, பல முறை யோசித்தது உண்டு : “இப்படி ஒரு அழகான
பாத்திரத்தை கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு
முன்னோடி யார்…. யாரை ‘ரோல்-மாடல்’ஆகக் கொண்டு அவன்
படைக்கப்பட்டான்…..”.
ஒரு அருமையான சம்பவம் கல்கி அவர்களின் வாழ்வில்
நிகழ்ந்தது உங்களுக்காக அங்கே காத்திருக்கிறது.
பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவனை
எல்லோருக்கும் பிடிக்கும். ராமாயணத்தில் வரும் சொல்லின் செல்வனையும் எல்லோருக்கும்
பிடிக்கும், இல்லையா? இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறது என்று திரு ஓஜஸ் அவர்களின் ஆசான் திரு ராமாயணம் ராமமூர்த்தி சொன்னாராம். என்ன ஒற்றுமைகள்? இதோ உங்கள் முன்னால் வந்தியத்தேவனும், சொல்லின் செல்வனும்!
மனிதர்களுக்குள் நட்பு உண்டு. எழுத்துக்களுக்குள்?
உண்டு என்கிறார் திரு ஓஜஸ். அதையும் படியுங்கள். உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்
கொடுங்கள். தவறில்லாமல் தமிழ் எழுதுவார்கள். நட்பும் எழுத்துக்களும்
************************************************************************************************************
************************************************************************************************************
“வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு
விரைந்து வருது
வேடிக்கை
பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு
வருது காண
வாருங்கள், பாங்கியரே!”
இந்தப் பாட்டுக் கேட்டால் நாம் இப்போது தமிழ் என்ற
வலைபதிவு எழுதும் திரு தமிழ் அவர்களின் வலைதளத்தில் இருக்கிறோம் என்று பொருள். இவரது
ஆடித்திருநாள், சுழல்
காற்று நினைவுகள் முதலானவை பொன்னியின்
செல்வனை ஒட்டியே (சுருக்கி என்றும் சொல்லலாம்.) எழுதப் பட்டிருக்கின்றன.
இவைதவிர சில
தொடர்களும் டெமுஜின் கதை, கோவர்த்தனன் எழுதி வருகிறார் திரு தமிழ்.
கோவர்த்தனன்
கதையை படிக்கும் முன்:
ஒரு
வேண்டுகோள்: இப்பதிவை/கதையைத் தொடர்வதற்கு
முன் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் என்கிற பதிவைப் படித்துவிட்டு தொடரவும். காரணம்
இந்த தொடருக்கான முன்னுரையைப் படித்து, பிறகு கருத்து சொல்லலாம்.
வந்தியத்தேவன்
படிக்கும் முன்:
இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள்
இந்த பதிவை படிக்க வேண்டாம் என நாற்சந்தி அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
இப்படி அன்புக்
கட்டளை இட இவர்கள் இருவரால் மட்டுமே முடியும்!
இருவருக்கும்
சேர்த்து ஒரு ஓ!
************************************************************************************************************
இன்றைக்கு புதிய பதிவு போட நேரம் ஆகிவிட்டது. என் ரசிகர்கள் எல்லாம் காத்திருப்பர்களே (!!??!!) என்று அவசரம் அவசரமா வந்து கணணியைத் திறந்தால் ‘வணங்கான்’ என்ற பெயரில் எழுதும் திரு
சுதாகர் முத்துகிருஷ்ணனின் கவிதையும் அதையே சொல்லுகிறது.
யாருக்காகவோ, எதற்காகவோ காத்திருக்கும்போது
பழையதை அசைபோடுவோம். பழமை பேசுவது
என்பது எல்லோருக்குமே பிடித்த ஒன்று. அதனாலோ என்னவோ, மணியின் பக்கம் என்று பெயர்
கொடுத்திருந்தாலும் ‘எழிலாய் பழமை பேச’ இதோ என் வலைபதிவு என்கிறார் இந்த வலைப்பூவின்
சொந்தக்காரர்.
இவரது இருக்கை
என்ன சொல்லுகிறது?
இவரது சின்ன சின்னக் கவிதைகள் ரசிக்க வைக்கின்றன!
************************************************************************************************************
பழமை பேசியவுடன் அந்த
நாள் ஞாபகம் நெஞ்சிலே வரத்தானே செய்யும்? திரு தமிழ் இளங்கோ வுக்கும் தனது காமிரா
பற்றி அந்த நாள் ஞாபகம் வந்ததே!
தமது இளமைக்
காலத்தில் தாம் வைத்திருந்த காமிரா பற்றிப் பேசுகிறார்:
************************************************************************************************************
நான் இல்லீங்கோ! திரு பிரசன்னா எழுதும் வலைபதிவு இது. இவரும் கூட
பழமை பேசத்தான் வந்திருக்கிறார்.
‘கார்ல ஏறின உடனே
நான் சொல்ற முதல் வார்த்தை..”அந்த எப் எம்ம
அமத்திட்டு பாட்டுப் போடுப்பா”ங்குறது தான்.
நாம கேக்கலனாலும்
காதுக்குள்ள பாடுற எப் எம் எங்க?
முக்கால் மணி நேரம்
சைக்கிள் அழுத்தி நண்பன் வீட்டுல உக்கார வெச்சு நம்மளக் கேக்க வெச்ச பாட்டுங்க
எங்க? என்கிறார் திரு பிரசன்னா’. அவருக்கு எப் எம்
ரேடியோ பிடிக்காது என்கிறார்.
உங்க கருத்து
என்ன!
************************************************************************************************************
ஆங்கிலத்திலும்
வலைபதிவுகள் செய்யும் டாக்டர் ராஜண்ணா மோகன் தமிழில் எழுத வேண்டும் என்பதற்காக
துவங்கிய வலைபதிவு இது: தே’மதுர’ தமிழ் என்கிறார்.
எப்போதும்
புத்தகங்களிலேயே கழியும் எனது ரயில் பயண இரவுகள், நேற்று சற்று
வித்தியாசப்பட்டது. நானும் சுந்தரும் அமர்ந்து காந்திமதியுடன் பேசிக்கொண்டே வந்தோம்.
எங்கள் பரிபாஷையின் நோக்கம் எதுவுமில்லை....
சில நேரங்களில்
என்ன சொல்ல வருகிறாள் என்று எனக்கு புரியவில்லை. இன்னும் கற்க வேண்டும்.
தேவைப்படுகிறது”.
இவரது ஆண்டெனா நினைவுகளும் நம்மை அந்தக்
காலத்திற்குக் கூட்டிப் போகிறது.
“இந்த வயலும்
வாழ்வும் வரப்போ கூட டிவி ஒழுங்காதான்யா தெரியும். என்னைக்கு ஒளியும் ஒலியும்
போடுறானோ அன்னைக்கு தான் தாலியறுக்கும். இருட்டு நேரத்துல மரத்துல ஏறி அதுல
இருந்து மாடிக்கு தாவி, ஆண்டெனாவ தடவி தடவி மாத்திட்டு வரதுக்குள்ளே
ஒலியும் ஒளியுமே முடிஞ்சுடும்....”
************************************************************************************************************
இன்றைய
எச்சரிக்கை திரு ரூபன்
அவர்களிடமிருந்து வருகிறது. பார்க்காமலே காதல், கடிதத்தில் காதல்
என்கிற திரைப்படங்களின் தாக்கங்கள் மாறி
இணையத்தில் முகம் அறியாமலேயே காதல் பிறக்கிறது. இது பற்றி வலைபதிவாளர்கள் பலர் கதைகள்,
கட்டுரைகள், கவிதைகள் எழுதி இருக்கிறார்கள்.
முகவரி அறிந்து காதல் செய் என்கிறார் ரூபன்.
" நம்
மனதில் இருக்கும் பசுமை, வீட்டில்
பரவட்டும் குறும் மரங்களாய்,
அப்புறம் என்ன
நம் நாடும் பசுமை தானே..."
"
காட்டில் மரம் கழிந்து போனது, வீட்டில் குறும் மரம் குன்று ஆகட்டும்"
வீட்டுக்குள்ளே
மரம் வளர்ப்போம் என்று கூப்பிடும் செழியன் இணையம் பற்றியும் நிறைய தமிழில் எழுதுகிறார்.
இன்றைக்கு ரொம்பவும் 'பழைய நெனப்புடா பேராண்டி' ஆகிவிட்டது.
அரசூரான் எழுதிய இந்தக் கவிதையை படித்து இன்புற்று இருங்கள்.
நாளை நதிக்கரையில் சந்திப்போம்! இன்று ஒரு விசேஷம், என்னவென்று தெரிந்ததா? நாளையும் ஓர் விசேஷம் தான், ஊகியுங்கள்!
ஏன் தாமதம் என்று கேட்பவர்களுக்கு: கல்கியும் அவரின் கதாபாத்திரங்களும்
வந்தாங்க ன்னு முதல்லேயே சொல்லல? (ஹி....ஹி...!)
அட்டகாசமான நான்காம் நாள் ரஞ்சும்மா...
ReplyDeleteதொடக்கமே அசத்தல்....
தொடர்ந்து அழகிய அறிமுகங்கள்...
அறிமுகப்படலம் மிக அழகாய் சொல்லிருக்கீங்க ரஞ்சும்மா...
உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்புவாழ்த்துகள்....
காத்திருந்து
ReplyDeleteஅறிமுகப்பதிவர்களைப் பார்த்தேன்..
அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி அவர்களை தன் வட்டத்திற்குள்ளே கொண்டு வந்து ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்களுக்கும் காட்டியிருக்கின்றீர்களே சகோ.! இது உன்னதமான பணி.!
ReplyDeleteஓலியும், ஒளியும் ஒளிபரப்பாகிடும் சமயத்தில் அலைவரிசையில் குழப்பம் ஏற்பட்டால் அந்த நேரம் ரசிகர் படும் மனக் கலக்கத்தை அருமையாய் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றது இந்தப் பதிவு.
எச்சரிக்கையிலிருந்து என்றுமே தப்பித்த.
சிவஹரி
நன்றி மஞ்சு!
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி!
ReplyDeleteவாழ்த்துகள் இரஞ்சனியம்மா. புதிய சில பதிவுகளைக் கண்டு கொண்டேன். மிக்க நன்றி!!
ReplyDeleteசிறப்பான கருத்துரை போட்டதற்கு நன்றி சிவஹரி!
ReplyDeleteவணக்கம்! நான்காம் நாள் வலைச்சரத்தில் எனது வலைப் பதிவினை அறிமுகப்படுத்திய சகோதரி ரஞ்ஜனி நாராயணன்
ReplyDeleteஅவர்களுக்கு நன்றி!
தாங்கள் பதிவர்களை அறிமுகபடுத்திய விதம் நல்லாருந்துச்சு பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் அறிமுகபடுத்திய தங்களுக்கு நன்றி
ReplyDeleteஎல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு.
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு தமிழ் இளங்கோ!
ReplyDeleteநன்றி திரு சரவணன்!
ReplyDeleteநன்றி காமாட்சி!
ReplyDeleteநினைவினை விட்டு நீங்காத கல்கியின் கதாபாத்திரங்களுடன் நீங்கள் தொடுத்திருக்கும் நான்காம் நாள் சரம் அருமை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நாளைக்கு நதிக்கரைக்கு அழைத்துப் போகிறீர்களா... நானும் உடன்வரத் தயாராகி விட்டேன்.
ReplyDeleteவணக்கம் (ரஞ்ஜனி)அம்மா
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியம்மா.இப்படிப்பட்ட இளம் படைப்பாளிகளின் படைப்புக்கள் வலைப்பூ கதம்பத்தில் வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் அம்மா
இன்று நான்கம் நாளும் வலைப்பூவலைச்சரம் மிகவும் அழகாக துள்ளிய விள்க்கத்தடன் வலம் வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் (ரஞ்ஜனி)அம்மா
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றியம்மா.இப்படிப்பட்ட இளம் படைப்பாளிகளின் படைப்புக்கள் வலைப்பூ கதம்பத்தில் வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் அம்மா
இன்று நான்காம் நாளும் வலைப்பூவலைச்சரம் மிகவும் அழகாக துள்ளிய விளக்கத்துடன் வலம் வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காத்திருந்து
ReplyDeleteகாத்திருந்து
பிறகு
கரண்ட் போய்
மீண்டும்
காத்திருந்து
அறிமுகப்பதிவர்களைப் பார்த்தேன்..
அனைவருக்கும்
பாராட்டுக்கள்..
வாழ்த்துகள்..
தங்களுக்கும் சேர்த்துத்தான்.
VGK
அசத்தலா இருக்கும்மா. நல்லதொரு அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி திரு பால கணேஷ்!
ReplyDeleteநன்றி ரூபன்!
ReplyDeleteஇந்தத் தளங்களுக்கு எல்லாம் போய் வாசியுங்கள்.
எழுதுகிறவர்களுக்கு வாசிப்பு மிகவும் முக்கியம்.
உங்கள் எழுத்துப் படைப்புகள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!
வாருங்கள் வை.கோ. ஸார்!
ReplyDeleteகாலையில் கணணி என் 're-start' தொழில் நுட்பத்திற்கு அடி பணியவில்லை.
அதுதான் இந்த தாமதத்திற்குக் காரணம்.
இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... எப்படி தெரிய வில்லையே!
இன்னும் மூன்று நாட்கள் நல்லபடியாக நடக்க வேண்டும்!
வருகைக்கு நன்றி!
நன்றி ஆதி!
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி லக்ஷ்மி!
ReplyDeleteஅறிமுகம் ஆன அணைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.... நல்ல அறிமுகங்கள் அம்மா... தொடருங்கள்
ReplyDeleteஅறிமுகம் ஆன அணைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.... நல்ல அறிமுகங்கள் அம்மா... தொடருங்கள்
ReplyDeleteரஞ்ஜனி,
ReplyDeleteநான்காம் நாள் நல் வணக்கத்தையும், தேவையான இடங்களில் படங்களுடன்,அழகா வடிவமைச்சிருக்கீங்க.பாராட்டுக்கள்.இன்று இடம்பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இன்றைய எல்லா வலைப்பதிவுகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும்.நன்றி, தொடருங்கள்.
நாற்சந்தியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. கல்கியால் நான் கற்றவை , பெற்றவை மிக அதிகம், அதில் இது புதிய சேர்கை. மீண்டும் நன்றிகள் பல மாமி!!!
ReplyDeleteநாற்சந்தியிலிருந்து நட்புடன்,
ஓஜஸ் :-)
வாருங்கள் ஆயிஷா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நன்றி சித்ரா
ReplyDeleteவருக திரு ஓஜஸ்!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
கல்கி அவர்களே உங்களுக்காக வந்தபின்
என் அறிமுகம் எதற்கு?
இந்த வலைசரப் பணியில் வலைபதிவர்களை அறிமுகம் செய்கிறேன் என்று சொல்வதைவி விட, நான் படித்து மகிழ்ந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் என்பதே சரி.
நன்றி அம்பி!
சிறப்பான நான்காம் நாள். அதுவும் கல்கி அவர்கள் முதலிலேயே வந்தமர்ந்திருக்கிறார்...
ReplyDeleteதொடரட்டும் அசத்தலான பகிர்வுகள்.
சுவாரசியமான எழுத்து. வித்தியாசமான அறிமுகங்கள். அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் நன்றிகள் ரஞ்சனி அம்மா.
ReplyDeleteநன்றி வெங்கட்!
ReplyDeleteவாருங்கள் இமா!
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றி!
நன்றி அம்மா என்னை அறிமுகப் படுத்தியதற்கு...
ReplyDeleteஅம்மா,
ReplyDeleteவலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றியுடையவனாகிறேன். இளம் பதிவர்களை அறிமுகம் செய்ய மிகவும் பெரியதோர் மனது வேண்டும். அனைவராலும் அனைவரையும் அறிமுகம் செய்ய இயலாது. நீங்கள் அறிமுகம் செய்து வைத்ததால் எங்களது பொறுப்பு இன்னும் கூடியுள்ளதாக நான் கருதுகிறேன். அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வருமாறு அழைக்கிறேன். அனைவரையும் மகிழ்விக்கும் அளவுக்கு என்னால் எழுத முடியாவிட்டாலும் அவர்களை துன்புறுத்தாமல் எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நேரமும் செயலும் கூடி வந்துவிட்டால் எழுத்துக்கு தடையேது?
பதிவுகளை படித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅன்புள்ள டாக்டர் ராஜண்ணா,
ReplyDelete'எங்களது பொறுப்பு இன்னும் கூடியுள்ளதாக கருதுகிறேன்' என்று நீங்கள் எழுதியுள்ளது மிகவும் பாராட்ட வேண்டிய வார்த்தைகள்.
இங்கு வந்து நன்றி சொல்லியது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
வாழ்த்துக்கள்!