Friday, October 12, 2012

ஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்!


ரஞ்ஜனி நாராயணன் 

ஐந்தாம் நாள்:






‘நதி பல மாநிலங்களை கடந்து தன் போக்கில் பாய்ந்து பல சிற்றாறுகளுடன் 


சேர்ந்து சிற்சிலகிளையாறுகளாகி செல்லும் இடமெல்லாம் வளங்கொழித்து 


இறுதியாக கடலில் சங்கமிக்கும்.  அதுபோல பல பேராறுகள் சிற்றாறுகளின் 

துணையுடன் நானும் என் எண்ணங்களின் சிதறல்களை முடிந்தவரை 

கரையேற்றுகிறேன்.. தடைகளற்று பயணிக்கும் இடமெல்லாம் விட்டு 

செல்கிறேன்.. இந்த நதிக்கரையை நாடி வருவோரில் ஒருவர்க்கேனும் வளம் 

தருமெனில் அது தன் பிறவி பயனை அடையும்...’


இதைப் படித்தவுடன் பல வருடங்களாக எழுத்து  அனுபவம் உள்ள பிரபலமான 

பதிவரின் வார்த்தைகள் என்று தோன்றும்.


2 மாதங்களுக்கு முன் வலைபதிவு செய்ய ஆரம்பித்த (நதிக்கரையில்) – 

சமீராவின் வார்த்தைகள் இவை என்றால் நம்புவது கடினம்.




பதிவு எழுதுவதற்கு முன் அத்தனை வலைபதிவுகளையும் படித்து கருத்துரை 

எழுதுவதை தன் பொழுது போக்காக வைத்திருந்தார் இவர். பதிவர் மாநாட்டில் 

இவரது செல்வாக்கு தெரிந்தது.  இவருக்குத் தெரியாத வலைபதிவர்கள்,  இவர் 

பின்னூட்டம் போடாத  வலைபதிவுகள் வலைபதிவுலகத்தில் இல்லையென்று 

சொல்லலாம்.


இவரது தனிமையும் தவிப்பும் வாசிக்க வேண்டிய ஒரு பதிவு!


*******************************************************************************

நானும் பதிவுலகத்திற்கு புதிதுதான் என்கிறார் திருமதி விஜயா




இவர்

'என்னை பார்த்ததும் உன் உதட்டில் விரியும் ஒரு புன்னைகைகாக

நடுஇரவில் உறக்கம் கலைந்தால் வரபோகும் விடியலுக்காக
உன் மௌனம் உடையபோகும் நிமிடங்களுக்காக....'

காத்திருக்கிறேன்’  என்கிறார்.




இவர்கள் இருவரையும் பதிவுலகத்திற்கு வரவழைத்ததில் எனக்கும் சிறு 

பங்குண்டு என்பது எனக்கு மன நிறைவைத் தரும் விஷயம்!

புதுசு கண்ணா புதுசு – சமீராவுக்கும், விஜயாவிற்கும்  பாராட்டுக்கள்!


*******************************************************************************


என் இனிய இல்லம் 





‘மங்கையராய் பிறப்பதற்கே நாள் மாதவம் செய்திட வேண்டுமம்மா!' 

என்னும்  திருமதி ஃபாயிஷா காதர் வெறுமனே சமையல் குறிப்புகள் மட்டும் 

கொடுப்பதுடன் நின்று விடாமல், வலைப்பதிவர் களிடையே ‘சமையல் ராணி’ 

போட்டியையும் நடத்திப் பரிசும் கொடுக்கிறார்.

கை எம்பிராய்டரி சில மாடல்களையும் சொல்லித்தருகிறார். 



*******************************************************************************

 திருமதி கீதா ஆச்சல்

அவர்களின் சமையல் அறைக்குள் போனால் 25 வகையான ஆரோக்கியமான  

டயட் குறிப்புகள் கிடைக்கும்.



நம் வீடுகளில் நாம் எத்தனை நன்றாக சமைத்தாலும், உணவகங்களில் 

கிடைக்கும் ருசி வருவதில்லை என்று உலகெங்கும் உள்ள ஆண்களின், 

குழந்தைகளின் புகார். அதனால் இவர்  தனது கைவரிசையைத் தவிர பிரபல 

உணவகங்களில் கிடைக்கும் சிறப்பு உணவுகளையும் எப்படி செய்வது என்று 

சொல்லித்தருகிறார்.

******************************************************************************* 



சமையல் அறைக்குள் போனால் தீக்காயம் படாமல் இருக்குமா? இதோ 

திருமதி குந்தவை அதற்கு மருந்து கூறுகிறார்  தனது ‘சட்டி சுட்டதடா’ என்ற 

பதிவில். 

இவரது கண்மணி இவருடன் பேசும் மழலைப் பேச்சுக்களையும் இவரது 

பதிவில் ரசிக்கலாம்.




இவர் தொடர்ந்து  எழுதுவதில்லை என்பது கொஞ்சம் வருத்தப் பட வேண்டிய

 விஷயம்.



*******************************************************************************


இரவு கடந்த பின்னும்....... என்ன செய்கிறார் தமிழ்செல்வி?




கொஞ்சமே கொஞ்சம் நாள்,

இணைய உலக சஞ்சாரத்தினின்று,

விலகி நடந்த பயன்,

குவிந்து விட்ட வலைமலர்களின்,

எழுத்தோவிய மாலைகள்,

படிக்க மாளாது தவித்து பார்க்கிறேன்...!
............................................
............................................
எழுத்து பதியனில்,

எண்ணத்தின் உயிர் ரோஜாக்கள்.



இவர் எழுதிய கவிதையைப் படித்துவிட்டாவது எழுதுவதை 

நிறுத்தியவர்கள் மறுபடி எழுத வருவார்களா? 


இவரது இன்னொரு கவிதை முதுகு வரை குளிர்கிறது



*******************************************************************************

‘இன்றைய இளைய சமுதாயம் தோல்வியை தாங்கும் மனதை இழந்து 

வருகிறதுதாங்கள் (7) செய்யும் செயலில் தோல்வி அடைந்தால் உடனே 

அதிலிருந்து பின்வாங்கின்றனர். முதல் முயற்சியால் வெற்றியை கண்டவர் 

வெகுச்சிலரேஅடுத்தடுத்த முயற்சியில் வெற்றியை கண்டவர்கள் 

இங்குப்பல கோடியுண்டுதோல்வியால் முயற்சியிலிருந்து பின்வாங்கி 

விதியை குறைகூறுபவர் மூடரே! துவள வேண்டாம் அன்பர்களே! வெற்றி 

உங்கள் அருகில்!!! என்று சொல்லும் ஆயிஷா மனமதை திறக்கலாம் என்கிறார் தனது 

கவிதையில்



திருநங்கைகள் பற்றிய தொடர் ஒன்றும் எழுதுகிறார் இவர்.





*******************************************************************************
நான் பெண்ணாக இருப்பதால் அந்த கோணத்திலேயே பார்த்துச் சொல்கிறேன்.

 முதலில் ஒரு மகளாய் பெற்றோரை திருப்தி படுத்த வேண்டியுள்ளது. 

அவர்களுக்குப் பிடிக்காத ஒருத்தனைக் காதலித்துத் திருமணம் செய்ய 

நினைத்தால்உன்னை பெற்று வளர்க்க எவ்வளவு பாடு பட்டிருப்போம்இப்படி 

ஒரு காரியத்தைச் செய்கிறாயே என்பார்கள். இந்த சூழ்நிலையில் பெண் என்ன 

செய்ய வேண்டும்? 


கேட்பவர் திருமதி சுஷீமா சேகர்  






கண்ணனின் கீதை என் கண் படி!

 ஒரு பெண்ணின் கோணத்தில் இவர் எழுதி இருப்பது புரிந்து கொள்ள 

எளிதாகவும் சுவையாகவும் இருக்கிறது


ஸ்ரீதேவியின் இங்க்லீஷ் விங்க்ளிஷ் படத்திற்கு இவர் எழுதிய மீளாய்வு 

படியுங்கள். இன்றைக்கே அந்தப் படத்தை பார்த்து விடுவீர்கள்!

சொல்ல மறந்து விட்டேனே! DOSA365  - கேயாராஸ் நடத்தும் போட்டிகளில் 

பங்கு பெற்று பரிசும் பெற்றவர் இவர். (செம்புல பயநீர்போல)


******************************************************************************* 


வீட்டுத் தோட்டம் ரொம்ப சுலபம் என்கிறார் திருமதி கௌசல்யா.

'கொஞ்சம் கேளுங்க....இந்தப் பதிவு 'மண்ணுல கையை வச்சிக்கிட்டு, தினமும் 

தண்ணியை ஊத்திகிட்டு, இது நமக்கு ஒத்து வராது' என்று 

சொல்பவர்களுக்காகவே' என்கிறார் இவர்.  




 வீட்டுத் தோட்டம் - அறிமுகம் - 1



'எல்லாருடைய வீட்டுக்குள்ளும் என்ன இருக்கோ இல்லையோ, டென்ஷன் 

இருக்கும். உங்கள் உடலையும், மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, 

உற்சாகப்படுத்துகிற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு தோட்டம் 

போடுவதுதான்'  என்கிறார். முயற்சி செய்யலாமே?



*******************************************************************************



தயிர் பானைக்குள் பிரியாணி சட்டி 

அதானே பார்த்தேன், என்னடா இன்னும் குழப்ப ஆரம்பிக்கலையேன்னு... 

என்று மனதுக்குள் நினைக்கும் தோழமைகளுக்கு ....




எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் திருமதி சாதிகா, உங்கள் 

குழப்பத்திற்கு விடை தருவார்.




*******************************************************************************


எதையேனும் சார்ந்திரு

கவித்துவம்

தத்துவம் காதல்

இங்கிதம் சங்கீதமிப்படி 

எதன் மீதேனும் சாய்ந்திரு

இல்லையேல் உலகம் 

காணாமல் போய்விடும்.

-----வண்ண நிலவனின் 

இந்தக் கவிதையுடன் இன்று விடை பெறுகிறேன்.....


மீண்டும் நாளை.....!




52 comments:

  1. எல்லாமே நல்ல அறிமுகங்கள்.. தொடருங்கள்

    ReplyDelete
  2. சில தளங்கள் அறியாதவை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  3. பகிர்வை தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  4. புதிய பதிவுதளங்கள் ...நன்றி மேம்....

    ReplyDelete
  5. அம்மா... உங்களின் அறிமுகங்கள் அனைத்தையும் பார்த்தேன்... அருமை. இது என்னையும் உங்கள் அறிமுகத்தில் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி... அறிமுகம் ஆனா அணைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் , அறிமுகம் செய்து வைத்த அன்பு அம்மா ரஞ்சனி அவர்களுக்கு என் மனமார நன்றி.. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. எல்லாம் புதியவையாக உள்ளதே!. வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. வாருங்கள் மணிகண்டவேல்!

    கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  8. அன்புள்ள தனபாலன்,
    உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் தேட வேண்டும்.

    வேறென்ன சொல்லுவது என்று தெரிய வில்லை. நன்றி, நன்றி.

    தமிழ்மணத்தில் இணைத்து, ஓட்டும் போட்டதற்கு இன்னொருமுறை நன்றி!

    ReplyDelete
  9. நன்றி அகிலா!

    உங்களுடைய முதியவர்கள் பற்றிய கவிதை வேண்டுமே, கொஞ்சம் அனுப்புங்களேன்!

    ReplyDelete
  10. வாருங்கள் ஆயிஷா!

    உங்களுக்கு நான் அறிமுகப்படுத்திய விதம் பிடித்திருந்ததா?

    மிகவும் வலுவான எழுத்துக்கள் உங்களுடையது.

    பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  11. வாருங்கள் வேதா!

    பிடித்திருந்ததா?

    நன்றி!

    ReplyDelete
  12. ரஞ்சனி ரெம்ப நன்றிங்க. :)

    இதை நான் எதிர்பார்க்கவேயில்லை :) . இதில் அறிமுகபடுத்தபட்டிருக்கும் அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    கண்டிப்பாக எழுத முயற்ச்சி பண்ணுகிறேன்.

    ReplyDelete
  13. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.. வார்த்தைகளுக்கு திடீர் பஞ்சம் ஏற்பட்டு விட்டது.. ஒரு வேலை இது தான் மகிழ்ச்சி பெருக்கா??
    சொல்லாத வார்த்தைக்கு என்றுமே மதிப்பு அதிகம்!! எனக்கும் சொல்ல வார்த்தை இல்லை.. என்னை ஒரு வலைபதிவராக ஏற்று அங்கீகரித்து அறிமுகபடுத்திய என் இனிய அம்மாவிற்கு நன்றிகள்!!! நேற்று கணேஷ் சார் அழைத்து இந்த அறிமுகம் பற்றி சொன்ன போது திக்கு முக்காகி விட்டேன்..


    என்னை போல அறிமுகம் ஆகி இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அம்மாடியோவ்......இத்தனை அறிமுகங்களா?????

    மலைத்தேன் ! ரசித்தேன்!!!

    ReplyDelete
  15. எல்லாமே எனக்குப் புதிய தளங்கள் தான் சகோ.! ஏனெனில் நான் எங்கேயும் போய் பார்ப்பதே இல்லையே :(

    காலம் கிடைப்பின் போய் பார்க்க முயற்சிக்கின்றேன். தங்களின் எழுத்தமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. கற்றும் கொண்டிருக்கின்றேன்.


    நன்றி

    ReplyDelete
  16. அன்புள்ள குந்தவை,
    வாருங்கள். மறுபடியும் எழுத ஆரம்பியுங்கள்.

    நன்றியுடன்!

    ரஞ்ஜனி

    ReplyDelete
  17. வாருங்கள் துளசி!

    உங்களுக்கு பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி.

    நன்றி!

    ReplyDelete
  18. அன்புள்ள சமீரா!

    நீ என் மேல் காட்டிய பரிவுக்கு என்னால் ஆன சிறு கைம்மாறு.

    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

    ReplyDelete
  19. நன்றி சிவஹரி என்னும் என் எழுத்தின் விசிறிக்கு!

    எல்லோருமே கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்!

    வாழ்க்கையைவிட சிறந்த ஆசிரியர் ஏது?


    ReplyDelete
  20. எண்ணத்தின் உயிர் ரோஜாகளாய் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. நம்ம குடும்ப நண்பர்களும் இருப்பாங்க போலிருக்கே..?

    நல்ல அறிமுகங்கள் அம்மா,,

    எப்ப வருவீங்க..?

    ReplyDelete
  23. நன்றி இராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  24. வாழ்த்துக்களுக்கு நன்றி திரு சௌந்தர்!

    ReplyDelete
  25. திங்கட்கிழமையிலிருந்து...

    நன்றி தொழிற்களம் குழுவினருக்கு!

    ReplyDelete
  26. ரன்ஞ்சனி மேம் நலமா?அதி அற்புதமாக என்னையும் வலைச்சரத்தில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி நன்றி.

    ReplyDelete
  27. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. வாருங்கள் சாதிகா,

    மிகவும் நலம்.

    மிகவும் அருமையான பதிவு இது!
    அதனால் என் பதிவும் அருமையாக அமைந்து விட்டது!

    ReplyDelete
  29. நன்றி லக்ஷ்மி!

    ReplyDelete
  30. அன்பு வாழ்த்துகள் அம்மா... இன்றைய பகிர்வும் அறிமுகப்படலமும் மிக மிக அருமை அம்மா.....

    இதில் சில தளங்கள் சென்று பார்த்தேன். ஸாதிகா எழுதிய தயிர் சட்டிக்குள் பிரியாணி அசத்தலான பதிவு....

    ஆயிஷா ஃபரூக் மேடம் அவர்களின் தளம் சென்று பார்த்தேன். உண்மையே அவரின் எழுத்துகள் வலுவானவை அவரின் தன்னம்பிக்கை மன நிறைவை தருகிறது....

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும்...

    ReplyDelete
  31. எண்ணத்தின்
    உயிர்
    ரோஜாக்களாய்
    அருமையான
    பகிர்வுகள்
    கொடுத்து
    ஜொலிக்க
    வைத்துள்ளீர்கள்.

    தாங்களும்
    ஜொலிக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    இங்கு தொடர்ந்துவரும்
    மின் தடையால்
    என் வருகையிலும்
    தாமதமாகி விட்டது.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  32. சிறப்பான அறிமுகங்கள்.....

    வாரம் முழுவதும் தொடரட்டும்....

    ReplyDelete
  33. வாருங்கள் வை.கோ. ஸார்!
    உங்கள் கருத்துரை வந்தபின் தான் பதிவில் ஒரு உயிரோட்டமே வந்திருக்கிறது.

    நன்றி!

    ReplyDelete
  34. சிறப்பான கருத்துரைக்கு நன்றி மஞ்சு!

    எல்லாத் தளங்களிலும் போய் பார்த்ததற்கு இன்னொரு நன்றி!

    ReplyDelete
  35. நன்றி வெங்கட்!

    ReplyDelete
  36. சிறந்த அறிமுகங்கள்..

    ReplyDelete
  37. அருமையான பகிர்வுகள். நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  38. வணக்கம் (ரஞ்ஜனியம்மா)


    ஐந்தாம் நாளும் வலைப்பூ வலைச்சரம் பூத்து மலர்வதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா.

    01) நதிக்கரையில்:-சமீராவின் படைப்புக்கள் மிக அருமையம்மா.அதிலும் (தனிமையும் தவிப்பும்)என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மனிதனாப் பிறந்த ஒவ்வெருவரும் அறிய வேண்டிய விடயம்.அதிலும் ஒருமனிதன் தனிமையில் உள்ளபோது ஏற்படும் முக்கிய பிரச்சினை (மாரடைப்பு) அந்த வேளையில் அந்த மனிதன் எப்படி செயற்ப்பட்டால் தான் தப்பிக்க முடியும் என்ற கருத்தை அழகாக சொல்லப்பட்டுள்ளது.அதை தொகுத்து வளங்கிய அம்மாவுக்கு நன்றி.

    02)திருமதி விஜயா:- பதிவுலகத்துக்கு புதியவர் என்றாலும் அவரால் படைக்கப்பட்ட படைப்பானது.அருமை அருமை.அதிலும் (காத்திருக்கிறேன்)என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறு கவிதையானது.அழகான சொற் பிரயோகங்கள் கொண்டு அமையப்பெற்றது. எடுத்துக்காட்டாக.
    (அன்பை சுமந்து வரும் கடிதங்களுக்காக
    வானம் இருளும் போது வீசப்போகும் துளிகளுக்காக
    நடு இரவில் உறக்கம் களைந்தால் வரபோகும் வியலுக்காக.
    என்னை பார்த்தும் உதட்டில் விரியப் போகும் புன்னகைகாக
    போன்ற வரிகளை குறிப்பிடலாம்.)

    03)திருமதி கீதா:- அவர்களின் வலைப்பதிவை நோக்கினால். சமைக்க தெரியாத மனிதன் கூட சமைத்து பார்களாம் (என்னைப் போன்ற பையன்கள்(ரூபன்)

    04)திருமதி குந்தவை அவர்களின் பதிவில் அருமையான விளக்கம் அதாவது என்னைப் போன்று (ரூபன்) சமைக்க தெரியாத மனிர்கள் சமைத்தால் கட்டாயம சட்டி சுட்டே தீரும்..எவராலும் மறுக்கமுடியாது ஆனால் இனி என்ன கவலை.(திருமதி :-குந்தவை ) சொல்லிச்சென்ற மருதாணி எண்ணை இருக்கே.. நல்ல மருத்துவக் குறிப்பம்மா.இதை தொகுத்து வழங்கிய ரஞ்ஜனியம்மாவுக்கு நன்றி.

    05) என் இனிய இல்லம்:- என்ற வலைப்பூவில் அழகான தையல் முறைகளை சொல்லிருக்கிறது.அதிலும் தையல் வகைகளும் .அவற்றை எப்படி தைத்து பழக வேண்டும் என்ற முறையை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது இந்த பதிவானது தைல் கலை தெரியத பெண்கள் பார்த்து சுய தொழில் செய்யலாம்.
    நான் படித்த முடித்த படைப்புக்களை பற்றி எழுதியிருக்கேன் அம்மா மிகுதி படித்து கொண்டிருக்கேன் ஐந்தாம் நாள் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது ஆறாம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் தரமான பதிவுகளை தேடி கண்விழித்து படித்து வலைச்சரம் என்ற வலைப்பதிவில் படைத்துள்ளிர்கள்...... மிக்க நன்றியம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-









































    ReplyDelete
  39. அன்பின் ரஞ்ஜனி - வலைச்சர அறிமுகங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது - அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் / பதிவுகள் அத்தனையுமே புதிய - இது வரை நான் படிக்காத பதிவுகள் - நல்ல பதிவுகள் - நன்று நன்று - நல்வாழ்த்துக்ள் ரஞ்ஜனி - நட்புடன் சீனா

    ReplyDelete
  40. அன்பின் ரஞ்ஜனி - அத்தனை அறிமுகச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - படித்து - இரசித்து -மறுமொழி இட்டு மகிழ்ந்தேன் - நன்று நன்று ரஞ்ஜனி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  41. ரஞ்ஜனி,

    இன்றைய பகுதியையும் சிறப்பாக அமைத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    இன்றைய பெண்ணே வணக்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. அன்புள்ள ரூபன்,
    என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, எல்லாத் தளங்களுக்கும் சென்று வாசித்து வந்ததற்கு நன்றி!

    உங்கள் கருத்துரைகளும் சிறப்பாக இருக்கின்றன.

    அந்தந்த பதிவுகளிலேயே உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அவர்கள் உங்கள் தளத்திற்கு வருவார்கள்.

    உங்கள் எழுத்துப் படைப்புகள் நிறைய நபர்களை சென்று அடையும்.

    வாழ்த்துக்கள் ரூபன்!

    ReplyDelete
  43. அன்பின் சீனா ஐயா,
    உங்களின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது.

    நானும் உங்களை மறுமொழி பார்த்தேன்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  44. நன்றி திரு துரை டேனியல்!

    ReplyDelete
  45. நன்றி சித்ரா!

    ReplyDelete

  46. 1. இதய வலி வந்தா
    இருமச்சொன்ன இனிய நண்பரே !!
    இருமின்ன்டே இருக்கேன் !!
    இனியும் பதில் காணேன்.
    ஏன் இன்னும் தாமதம் !!

    வந்து என் கருத்துக்கு
    மருந்து என்ன சொல்லுங்கள். !!

    2. காத்திருக்கிறேன் !
    கவிதையா !! என்னைக்
    கலக்கிவிட்டீர்கள். கண்களைக்
    குளமாக்கிவிட்டீர்கள்.

    காத்தடைத்த பை என்னுள்ளே
    காலம் காலமா காத்திருக்கிறேன்.
    காலன் வரும் வேளை அறியா
    கடிகாரம் பாத்திருக்கிறேன்.

    தொகுப்பு பற்றி:

    முடியப்போகிறதே என்றிருக்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  47. வாங்க சுப்பு தாத்தா!

    உங்கள் கவிதை இரண்டு நாளா காணுமேன்னு பார்த்தேன்.

    எனக்கும் கூட அப்படித்தான் இருக்கிறது! இந்த இரண்டு நாட்களில் எத்தனை பதிவர்களின் பதிவுகளை பகிர முடியும் என்று மலைப்பாக இருக்கிறது!

    ReplyDelete
  48. அழகான அறிமுகங்கள். ஒவ்வொன்றாய் சென்று படிக்கிறேன்.

    ReplyDelete
  49. ரஞ்சனி அம்மா மிக அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. வாருங்கள் ஜலீலா!
    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete