இன்றைக்கு ஒரு
நாள், நாளை – இரண்டு தினங்களில் எத்தனை பதிவர்களை
அறிமுகப்படுத்தி வைக்க முடியும்?
யாரை சொல்வது, யாரை விடுவது? என்னடா இது
எனக்கு வந்த சோதனை? என்று திருவிளையாடல்
பாலையா மாதிரி சொல்லிக் கொண்டே
ஆறாம் நாள் என் வலைபதிவு பயணத்தை தொடங்குகிறேன்.
*******************************************************************************
என்னைப் போலவே தஞ்சைக்
கவிதை எழுதும் திருமதி கிருஷ்ணப்ரியா
வும் முதலில்
சற்றுக் குழம்பித்தான் போனாராம்.
‘எனக்கு
இப்போதும் என்ன சொல்வதென்று
தெரியவில்லை.....!
அடுத்து வந்த
நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாகக்
கூற ஆரம்பித்தேன்,
இந்த பிரஷர்
மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல’
முதலில் குழம்பி
இப்போது தெளிவாயிட்டேன்
என்கிறார்.
அவரவர் மனநிலையைப்
பொறுத்தது, இல்லையா?
இவரது ஆனந்தத்தை
பரிந்துகொண்ட நாம் இவரது ஆதங்கத்தையும் புரிந்து
கொள்ளுவோம்
‘பொதுவாகவே அரசு
மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே
தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய
நாம் சிந்திக்கிறோம்.’
இப்படி எல்லாம்
ஏன் நடக்கிறது என்று நாம் யோசிக்கிறோமா? அரசு மருத்துவமனைகளில்
நடப்பது வெளிச்சத்துக்கு
வந்து விடுகிறது, அரசை விமர்சிப்பதற்காக.... என்றால் தனியார்
மருத்துவமனைகளில் தவறுகள் நடப்பதில்லையா? ஏன் அது பற்றி எதுவும் வெளியில்
வருவதில்லை?
இந்தாப்
பாருப்பா, உனக்கு சக்கரை
வேற இருக்கு, சரியா புண்ண கவனிக்கலன்னா கால்
போயிடும் ஜாக்கிரதை என்று எடுத்துச் சொன்னபடி
காயத்தை சிரத்தையாக சுத்தம்
செய்து கட்டி விடும் ஊழியர் என்று அரசு
மருத்துவமனைகளிலும் நல்ல இதயங்கள்
இருக்கத் தான் செய்கிறது. என்ன செய்வது?
*******************************************************************************
இவருக்கு என்ன
தடுமாற்றம்?
‘சில நேரங்களில், வாழ்க்கை
எதிர்ப்பாராத அதிர்ச்சி கொடுக்கிறது. நான் நல்ல திடகாத்திர
உடல் வாகுடன், பெரிய வியாதிகளோ
உபாதைகளோ இல்லாமல், மும்முரமாக வாழ்ந்து
கொண்டிருந்தேன். அதில்
அலட்டல் என் வயதில் ஒரு மருந்து மாத்திரை இல்லாமல்
இருப்பது என்ற வீண் பெருமை வேறு..’
திடீரென்று.....
‘இரவு
நேரங்களில் உடம்பு சோர்வு, கால் பாதங்கள் ஒரே சூடு வேறே. வியர்வை அடிக்கடி
கால் விரல்கள், அதிக நேரம் வேலை செய்தால் மரத்து போக, ஆரம்பித்தன.’
என்ன செய்தார் என்பதை மிகவும் சரளமான
நடையில் தனது அனுபவம், அதிலிருந்து
தெரிந்து கொண்டவை என எழுதும் திருமதி பட்டு
தமிழில் அதிகம் எழுதாமலிருப்பது
தமிழ் வலைபதிவு உலகத்திற்கு பெறும் இழப்பு.
இவரிடமும் “தொடர்ந்து
எழுதுங்கள்’ என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.
இவரிடம் எனக்கு
மிகவும் பிடித்த குணம் ஓர் நல்ல பதிவைப் படித்தவுடன் தனது
தளத்தில் இணைப்பு
கொடுத்துவிடுவார். ஆங்கில பதிவுகளில் செலுத்தும் கவனத்தை தமிழ்
பதிவுகளுக்கும்
கொடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.
*******************************************************************************
இந்தக்
குழப்பம், தெளிவு, ஆனந்தம் இதுக்கெல்லாம் காரணம் உங்கள் பக்கத்தில் நிற்பவர்
என்கிறார் திரு சிவஹரி
கொஞ்சம்
கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக
இருந்தாலும்
ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது
உங்களால் உற்சாகம்
பெறுபவராக இருக்க வேண்டும்.
*******************************************************************************
சிவஹரி யின்
கட்டுரை படித்து விட்டு வெளியே வந்தால்
ஆஹா .. அப்படிச்
சொன்னால் கண்டிப்பாகப் படிப்போம். சொல்ற பேச்ச கேட்கறப்
பழக்கமே
கிடையாதே...(அப்புறம் உங்க குழந்தை மட்டும் எப்படி உங்க பேச்சை கேட்கும்?)
இவர் தொகுத்துக்
கொடுக்கும் ‘கதம்பம்’
நன்றாக இருக்கிறது.
திரு வெங்கட் நாகராஜ்
வெள்ளிக்கிழமைதோறும் அளிக்கும் ப்ரூட்சாலட் போல!
*******************************************************************************
ராஜபாட்டையில்
நடந்து, கதம்பத்தை முகர்ந்து, ப்ரூட்சாலட் ருசித்துவிட்டு வந்தால்
‘என்னவளே, அடி
என்னவளே...’ பாட்டு கேட்கிறது. யார் என்று பார்த்தால் தமிழுக்குத்
அன்பு நிறைந்த
முகம்
ஆசை குறைந்த
மனம்
பொன்னின் திறந்த
குணம்
தேனின் இனிய
மணம்....
இவருக்கும் ஒரு கவலை: கேட்கலாமா என்னவென்று?
எதற்கு
விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின்
எதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது,
என்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.
*******************************************************************************
இதே போலவே
சமுதாயத்தைப் பற்றிக் கவலைப் படும் வெங்கட்
ஸ்ரீனிவாசன் சொல்வது
என்ன?
‘சாதாரணமாக ஒரு
நாளில் சுமார் 10 நோயாளிகள் உடலுறுப்புகள் மாற்றப்படாததால்
இறக்கின்றனர். அதே
நேரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு நோயாளி உடலுறுப்பு
மாற்ற வேண்டியத்
தேவைக்காக காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.
தற்பொழுது, சுமார் 10
லட்சம் நோயாளிகள் உடலுறுப்புத் தேவைகளுக்காகக்
காத்திருக்கிறார்கள். ஆனால்
வருடத்தில் சுமார் 3500 உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைகள்
தான் செய்யப்படுகின்றன.’
கையளவு மண்
என்று எழுதும் அவரது உடல் உறுப்பு
தானம் பற்றிய கட்டுரை படிக்க
வேண்டிய
கட்டுரை.
படித்து விட்டு
நின்று விடாமல் செயல்படுத்தவும் முன் வர வேண்டும்.
இவரது பறவைகள்
பலவிதம் படித்து விட்டு நீங்கள் என்ன பறவை என்று தெரிந்து
கொள்ளுங்கள்!
*******************************************************************************
இதெல்லாம் வேண்டாம் எனக்கு வானொலி கேட்டலும் ஊருக்குச்
செல்லுதலும் ரொம்பப் பிடிக்கும்
என்கிறார் திரு அறிவு.
‘சங்கீதம் தந்து வந்த
ரேடியோ, முத்துவேலுக்கு சந்தேகம் ஒன்றையும் தந்தது."அது எப்புடி
பாடுது?அந்த
பேட்டரில எழுதியிருக்கத வச்சு பாடுதா?" என்பதே அது!
மணிக்கு ஏற்பட்ட சந்தேகம் வேறுமாதிரியானது. ரேடியோவை வேலு விற்க
முற்படுகையில்,"அது எனக்கு வேண்டாம், நல்ல
நல்ல பாட்டெல்லாம் உன்வீட்டுலயே
பாடிட்டே,என்கிட்டயும் அதுமாறி பாடுமா? எத்தினி
நாளுக்கு பாடும்?" என்றார்.
பாடுபொருள் ஒன்றை விற்க படாதபாடு பட்டவர் அவராகத்தான் இருப்பார்.’
பாடுபொருள் ஒன்றை விற்க படாதபாடு பட்டவர் அவராகத்தான் இருப்பார்.’
ஏன் ஊருக்கு
செல்லுகிறோம் என்பதற்கு இவர் கொடுக்கும்
விளக்கம்:
‘பிறந்த
ஊருக்கும் பிழைக்கும் ஊருக்குமான ஒப்பீடுகள்
ஒருவரை தன் ஊருக்கு
வருவதற்கான ஆர்வத்தை ஒருவருக்குள் கிளர்ந்தெழச்செய்யும்
சக்தி உடையது.
அப்படித்தான் அது என்னை
ஊருக்கு அனுப்பி வைத்திருந்தது. தீபாவளிக்குப் பிறகு
இம்முறை வருவது
பொங்கலுக்கு.’
*******************************************************************************
நிஜம் தான்.
ஊருக்குப் போவதும், கதைகள் பேசுவதும் தரும் இன்பத்திற்கு ஈடு இணை
தான் ஒரு கதை
சொல்லி! என்கிறார்.
"பதினாறு
வயசுப்பொண்ணுக்கு கதை சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே" என்று
கேட்ட தன்
தோழிக்கு இவர் சொன்ன பதில் நம் எல்லோரையுமே சிந்திக்க வைக்கிறது:
"கதை
சொல்றதுக்கும் கேக்கறதுக்கும் கூட வயசெல்லாம் உண்டா என்ன?"
"எல்லாருக்கும்
புத்தகங்கள் படிக்கற வழக்கம் இருக்கறதில்லை. அப்படியே இருந்தாலும்
கூட இப்ப
இருக்கற இந்த தலைமுறைகள்ல முக்கால் சதவிகிதம் பேர் ஆங்கில
புத்தகங்கள் மட்டுமே
படிக்கறாங்க. ஹாரி பாட்டரையும் எனிட் ப்ளைட்டன் ஸ்டோரிசும்
படிக்கற அளவு
இளந்தலைமுறைகள் எத்தனை பேர் பொன்னியின் செல்வனையோ
வியாசர் விருந்தையோ படிப்பாங்கனு
நினைக்கற?”
கலக்கிடீங்க
ராஜி! நானும் கூட உங்களை மாதிரி ஒரு கதை சொல்லி தான்! திருமணம்
ஆகி இரண்டு குழந்தைகள்
பெற்ற என் பெண்ணுக்கும், என் பிள்ளைக்கும் – புதிதாக
வந்திருக்கும் மாட்டுப்
பெண்ணிற்கும் கதை சொல்பவள் நான்!
*******************************************************************************
ஊருக்குப்
போவது, கதை சொல்லுவது, நம் அனுபவத்தை பதிவு செய்வதும் நம் மனதை
மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்
என்பது சரியே! ஆனாலும் சில சமயம் ‘ஹாய்
நலமா?’ என்று கேட்க ஒருவர் இருந்தால்
நன்றாக இருக்கும் இல்லையா?
‘நான்
மருத்துவம் என்ற கூட்டிற்குள் நிறைவாக வாழும் ஒரு குட்டிக் குருவி. 63
வயதிலும் 26 வயதினனான உணர்வுதான்.’ என்ற அறிமுகத்துடன் நானிருக்கிறேன்
என்கிறார் டொக்டர்
திரு முருகானந்தன்.
இவர் வெறும்
உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் நமது மனநலத்திற்கும் வைத்தியம்
சொல்பவர்.
'ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக விமரிசனங்களை எதிர் கொள்ளுவது எப்படி?
‘விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது
உண்மைதான்.
ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது.
விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத்
திருத்திக் கொள்ளவும்
அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.
விமர்சனமானது உங்கள் செயற்பாடு
சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள்
உங்கள் பெயரைப் புகுத்தி, அது
தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத்
தவிர்க்க வேண்டும்.’
ஓடாத வண்டியையும் உருட்டிப் பார்ப்பது போல என் தளத்தையும் உருட்டிப் பார்த்து விட்டீர்களோ என்று எண்ணிடத்தோன்றுகின்றது சகோ. அதற்காக எந்தன் முதற்கண் நன்றிகள் பற்பலவே.!
ReplyDeleteயார் யாரையெல்லாம் சொல்வது என்று குழம்பிக் கொள்வதை விட எத்தனையோ நற்பதிவுகளை/ வலையகங்களை அறிமுகப் படுத்தினோம் என்று நிறைவு கொள்வது சாலச் சிறந்தது.
இயல்பான நடையிலே எங்களோடு நேரிடையாகப் பேசுவது போன்ற வலையகங்களை அறிமுகப் படுத்தியிருக்கின்றீர்கள்.
காலம் கிடைக்கும் போது மற்ற தளங்களையும் பார்ப்பேன். (எப்படியும் 2014க்குள் பார்க்க முயற்சிக்கின்றேன்.)
ஜனநாயக் கடமையினையும், தமிழ் மணத்தில் இணைத்தலையும் இன்று நானே நம்ம பின்னூட்ட புயலுக்கு முந்திக் கொண்டு செய்து விட்டேன்.
பின்னூட்ட புயல் வந்து பார்ப்பதற்குள்ளாக ஓடும்....
நீங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் இந்த வாரத்தில் என்னையும் என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
ReplyDeleteஎனது தில்லி நண்பர் [Bachelor Days-ல் நானும் அவரும் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள்] திரு வேங்கட ஸ்ரீனிவாசன் அவர்களையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
தொடரட்டும் நாளையும் அறிமுகங்கள்....
எனக்கு உங்களிடம் பிடித்தது ஒரு நல்ல குடிமகனாக இருக்கிறீர்கள்.
ReplyDeleteநல்ல அர்த்தத்தில்தான் சொல்லுகிறேன்.
உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
நன்றி!
வாருங்கள் வெங்கட்!
ReplyDeleteகுடும்பத்துடன் வலைபதிவு உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறீர்களே!
உங்கள் ப்ரூட்சாலட் விசிறி நான்!
அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteநன்றிகள் பல...,
ஒவ்வாருவரையும் மிக அழகாக விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
நன்றி திரு ஓம்போகர்!
ReplyDeleteவாருங்கள் டாக்டர் ஐயா!
ReplyDeleteஉடனடியாக கருத்துரை போட்டதற்கு நன்றிகள் பல.
உங்கள் சேவை எல்லோருக்கும் மிகவும் அவசியம்.
உடல், மன நலத்திற்கு மருந்திடும் உங்களின் பகிர்வுகளை இங்கு பரிமாறிக் கொண்டதற்கு நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.
நன்றியுடன்,
ரஞ்ஜனி
”ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ! பூத்தது! ரெண்டு குடம் தண்ணி ஊத்தி .... “ பாட்டைப் போல ஆறுநாள் ஓடியதே தெரியவில்லை. நீங்கள் அறிமுகப்படுத்திய வலைப்பதிவர்களின் கட்டுரைகளை நேரம் கிடைக்கும்போதும், மின்சாரம் இருக்கும் போதும் சென்று பார்க்க வேண்டும்! நன்றி!
ReplyDeleteக்ருஷ்ணபிரியா தஞ்சை கவிதை படித்தேன்.'
ReplyDeleteகரைந்தேன்.
கண்ணா கண்ணா எனக்குழையும் இந்த்க்
கீதம் நவ
நீதம்.
நித்தம் இதைப்பாடி மகிழத்தோன்றியது.
இந்தக்கிழவனுக்கு
சொல்லும் சரியில்லை.
பல்லும் சரியில்லை.
இருந்தாலும் ஏதோ தெரிந்த இலக்கணத்தை வைத்து
பாடுகிறான்.
நேரமிருந்தால் இங்கே
கேளுங்கள்.
நன்றாக இருந்தால்,
ஹே க்ருஷ்ணா என்று குரல் கொடுங்கள்.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
வணக்கம் (ரஞ்ஜனியம்மா)
ReplyDeleteஇன்று வலைச்சரம் வலைப்பூவானது 06 வது நாளில் வெற்றி நடை போடுவதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா.
06வது நாளில் (10 )வலைப்பதிவாளர்களின் ஆக்கங்களை வெளியிட்டு அதற்கு அழகான விளக்கங்களையும் அள்ளி விதைத்துள்ளிர்கள் அதிலும் பறவைகள் பல விதம் என்ற தலைப்பில் உள்ள படைப்பு என்னை ஒரு கனம் சிதற வைத்து விட்டது அம்மா.அப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்......
உங்கள் பக்கத்தில் யார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிக அருமையாக உள்ளது.
07 வது நாளும் வலைப்பூ வலைச்சரம் பூத்து மலர எனது வாழ்த்துக்கள் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எல்லா அறிமுகங்களையும், அதன் விவரங்களையும், நீள படித்து வரும்போது இதுவும் ஒரு வலைச்சரம் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
ReplyDeleteஅதுவே பெறும் வெற்றி என்று தோன்றியது. யோசித்து எழுதாமல் உடனே தோன்றிய வரிகளிவை.
திரும்ப யோசித்தால் அது ஸ்வாரஸ்யமாக எழுத முடியாது.
இதுதான் யதார்த்தம்.
கட்டாயம் உங்கள் பாட்டைக் கேட்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு சுப்பு!
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. எப்படி எழுதப் போகிறேனோ என்று நினைத்தேன்.
ReplyDeleteநல்லபடியாக 6 நாட்கள் முடிந்து விட்டன. நாளைய பொழுதும் நல்லபடியாக முடிய 'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மையை' - 'இடர்கள் வாராது காக்கும்'படி இறைஞ்சுகிறேன்.
நன்றி உங்களது வருகைக்கு!
அழகாக கருத்துரை தொகுத்த விதம் நன்றாக இருக்கிறது ரூபன்.
ReplyDeleteநன்றி!
வாருங்கள் காமாட்சி!
ReplyDeleteஉங்களின் சிறப்பான கருத்துரைக்கு நன்றி.
இன்றைய ஆறாம் நாள் அறிமுகங்கள் யாவும் அருமையே.
ReplyDeleteஅதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான அன்புத் தோழி பட்டு [SILK] வைப்பற்றிக் கூறியுள்ளது எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
எவ்வளவு அருமையான சுவாரஸ்யமான நட்பு தெரியுமா எங்களுக்குள்?
அதெல்லாம் மிகப்பெரிய கதை.
இங்கு சொல்லவது எளிதல்ல.
அவர்களிடமே மெயில் மூலம் கேட்டுக்கொள்ளுங்கள்.
//அதிலிருந்து
தெரிந்து கொண்டவை என எழுதும் திருமதி பட்டு தமிழில் அதிகம் எழுதாமலிருப்பது
தமிழ் வலைபதிவு உலகத்திற்கு பெறும் இழப்பு.//
ஆம் ... சாதாரண இழப்பு அல்ல.
பேரிழப்பு தான்.
//இவரிடமும் “தொடர்ந்து எழுதுங்கள்’ என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.//
நானும் உங்களுடன் சேர்ந்துகொண்டு அதே கோரிக்கையை வைக்கிறேன். அதை வழிமொழிகிறேன்.
பிரியமுள்ள
VGK
வாருங்கள் வை.கோ. ஸார்!
ReplyDeleteநம் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி பட்டு தமிழிலும் நிறைய எழுத வேண்டும்.
நன்றி!
அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் !
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி!
ReplyDeleteஅறியாத சில தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அம்மா...
///எதற்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற சுய சிந்தனையில்லாத இந்த இளைஞர்களின்
ReplyDeleteஎதிர்காலத்தில் தான், நம்முடைய சமூகத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது,
என்றெண்ணும் பொழுது தான் சமூகத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கிறது.///
ஏனோ மனது கனக்கிறது,,,
அருமையான அறிமுகங்கள். அருமையாக வலைச்சரம் தொடுத்து வருகிறீர்கள். அருமை.
ReplyDeleteநான் வலைசரத்தில் பகிர்ந்து கொள்ளும் எல்லாத் தளங்களுக்கும் போய் பின்னூட்டம் போட்டுவிட்டு வரும் உங்களுக்கு மிகப் பெரிய நன்றி!
ReplyDeleteஉங்கள் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.
நன்றி!
தமிழ் ராஜா நம் குழுமத்தை சேர்ந்தவர் தானே?
ReplyDeleteவருகைக்கு நன்றி தொழிற் களம் குழுவினருக்கு!
வாருங்கள் துரை டேனியல்!
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றி!
இந்த சிறுவனின் பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி,
ReplyDeleteவாருங்கள் ராஜ பாட்டை.
ReplyDeleteஉங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்!
வாழ்த்துக்கள்!
என்னவென்று தெரியவில்லை. நேற்றே இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிட்டேன். எங்கோ தவறு நடந்துவிட்டது.
ReplyDeleteரஞ்சனியம்மா உங்கள் எழுத்துக்களின் மூலம் தமிழத்தொட்டிலை இத்தளத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.
என் வலைத் தளத்தை (கையளவுமண்) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteரன்ஜனீஈஈஈஈஈ!
ReplyDeleteகொன்னூட்டீங்கபா!
என்னையா? இத்தனை அழகாக தமிழை கையாண்டு, பல வாசகர்களை வசீகரிக்கும், இந்த புகழ் வாய்ந்த பதிவர்கள் பட்டியலில் என்னையும் அறிமுகப் படுத்தி ...மலைத்து போயிருக்கிறேன்!
அதை உடனே கூட படிக்க முடியாமல், இன்று கவனித்ததற்கு, கொஞ்சம் வெட்கப் படுகிறேன்.;-(.
உங்கள் அன்புக்கும், வை.கோ.சாரின் பரிவுக்கும் , ...மனசு நிறைஞ்சு போச்சு.
கட்டாயம் உங்கள் அன்பு கட்டளை, என்னை, ஊக்குவிக்கும். விரைவில், தமிழில், மாடியில் தோட்டம் பற்றி விரிவாக எழுத , எண்ணம். மீதி ஆண்டவன் அருள்.
இப்போது நீங்கள் அறிமுகப் படுத்திய பதிவர்களை படிக்க வேண்டிய அவசரம்.ஆவல்!
நன்றிம்மா!
பெரிய ஜாம்பவான்களுக்கு நடுவே என் போன்ற குட்டியூண்டு "கதை சொல்லி" யையும் அறிமுகப் படுத்தி ஊக்குவித்தமைக்கு நன்றி மேடம்.சில வேலைச்சுமைகளால் உடனடியாக பதிலளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்
ReplyDeleteவாருங்கள் பட்டு! நானும் உங்களைப்போலவே மிகவும் தாமதமாக இன்று தான் உங்கள் கருத்துரையைப் பார்த்தேன்.
ReplyDeleteநன்றி பட்டு!
வாருங்கள் ராஜி!
ReplyDeleteஎனக்கு உங்கள் எழுத்து ரொம்பவும் பிடித்திருக்கிறது.
உங்களின் ஸ்ரீ ராகத்தை ரொம்பவும் ரசித்தேன். திருமதி ஜானகி பாடிய பாடலை ரசித்துக் கொண்டே!
நன்றி ராஜி!