இன்றுடன் 7 நாட்கள் முடிவடைந்து விட்டன. இப்போது நினைத்துப்
பார்த்தால் வேகமாகப் போய்விட்டது போலத் தோன்றுகிறது.
அறிமுகம் என்று சொல்வதைவிட இந்த 7 நாட்களும் நான்
வலைச்சரத்திற்காக தேடித்தேடி (பி)படித்ததை உங்களுடன் பகிர்ந்து
கொண்டேன் என்பதே சரியாக இருக்கும். தெரிந்த முகங்களுடன், தெரிந்து
கொண்டதை பகிர்ந்து கொண்டேன்.
********************************************************************************************
வலைபதிவுலகத்தில் மற்ற இணையதளங்களை அறிமுகம் செய்ய
என்றே ஒருவர் இருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்தவர்தான் திரு
சைபர்சிம்மன். 'இணைய உலகிற்கான உங்கள் சாளரம் எனது
வலைத்தளம்' என்கிறார் திரு சிம்மன்.
‘எமக்கு தொழில் கவிதை' என்னும் பாரதியின் வாக்கை போல நான்
எழுத்தையும் வலைபதிவையும் கருதி வருகிறேன். இணைய உலகில்
கண்டு வியக்கும், ரசிக்கும் விஷயங்களையும் மற்றவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும் என கருதும் இணையதளங்களையும் இன்னும்
பிற இணைய போக்குகள் குறித்தும் எழுதி வருகிறேன்.’ என்று சொல்லும்
இவரது தளத்தை வேறு ஒரு இணையதளம் அறிமுகப் படுத்திப்
இருக்கிறது!
திருநெல்வேலிக்கே அல்வா! திருப்பதிக்கே லட்டு!
********************************************************************************************
தன்னைப் பற்றி சாக்பீஸ் வலைத்தளம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறது.
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கும், மாணவர்களுக்கும்
பயன்படக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் கிடைக்கின்றன.
********************************************************************************************
நம் எல்லோருக்குமே நம் மாணவப் பருவம் என்பது பசுமையான
நினைவுகளைத் தரும். அப்போதிருந்த பசுமை இப்போது இருக்கிறதா?
‘நினைத்து பாருங்கள்...நாம் சிறுவயதில் பஸ்சில் செல்லும்போது
கூடவே
ஓடி வரும் மரங்களை. பஸ் பயணத்தில் நமக்கு வெயில்
தெரியா வண்ணம் காற்று வருவதற்கு அந்த மரங்கள் காரணம்’ என்கிறார்
திரு சுரேஷ்குமார்.
நெடுஞ்சாலையோர புளிய
மரம்...! பற்றி இவர் சொல்வதைப் படியுங்கள்:
‘மரங்களில் புளியங்காய் அடித்து தின்னும் சிறுவர்கள்
எல்லாம் இன்று
ஹோட்டல்களில் டேபிள் துடைக்க சென்று விட்டனர். ஆயா
மரத்தினடியில் சுட்ட வடைகள் எல்லாம் இன்று மரமே இல்லாததால்
காகம் கொத்த வழியில்லாமல் போய் விட்டது, சிட்டு குருவிகள் எல்லாம்
இன்று லேகிய டப்பாக்களில் மட்டுமே பறக்கின்றன...’
.முக்கியமாய் என் மகனோடு காரில் செல்கையில் எந்த மரமும் கூட ஓடி
வருவதில்லை. அவனும் ஏன் மரங்கள் பின்னோக்கி ஓடுகின்றன என்று
கேட்பதுமில்லை ?!!?’
ஒரு கூடுதல் செய்தி: இவரும் எங்களூரில் கிடைக்கும் தோசை பற்றி
எழுதியிருக்கிறார் படியுங்கள்! இந்த தோசை எங்கே கிடைக்கும் என்று
வீதி வரைபடத்துடன் விலை என்ன என்றும் எழுதி இருக்கிறார்.
(வலைச்சர வாரத்தை தோசையில் ஆரம்பித்து, தோசையில் முடித்த
பெருமை என்னையே சேரும்!)
********************************************************************************************
விடியாத இரவுகள், தொலைந்து போன கனவுகள் என்று எல்லாக்
கவிதைகளும் கிடைக்காததைப் பற்றிப் பேசுகின்றனவே, எத்தனையோ
இரவுகள் விடிந்திருக்கின்றனவே, நாம் காணாத பல கனவுகள்
பலித்திருக்கின்றனவே அவை பற்றி ஏன் யாரும் கவிதை
எழுதுவதில்லை என்று இந்த ஒரு வாரமாக என்னுள் ஒரு கேள்வி
எழுந்து கொண்டே இருக்கிறது. கவிதைக்கு அழகு சோகமோ?
கவிதை சோகமாக இருந்தால் ரசித்துவிட்டு மறந்தும் போகலாம்.
ஆனால் வாழ்க்கையை வாழ வேண்டிய வயதில் சோகமே
வாழ்க்கையானால்?
‘எனது 9-ஆம் வயதில் இந்நோயின் பாதிப்பு
என்னை கொஞ்சம்,கொஞ்சமாக
ஆக்கிரமித்து கடந்த 10 வருடங்களுக்கு மேல் என்னை வீட்டிலேயே
முடக்கி போட்டு வைத்திருக்கிறது.' என்கிறார் மாற்றுத் திறனாளி.
‘இவ்வலைப்பூவில் நான் என் வாழ்வில் கண்ட நிகழ்வுகளையும், உணர்ந்த
வலிகளையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.ரொம்ப சோகமா இருக்கும்னு
பயப்படாதீங்க. அவ்வப்போது நகைச்சுவை பதிவுகளும், தொழில்நுட்ப
பதிவுகளும் இடம் பெறும் (பேசிக்கலி ஐ எம் எ காமெடி பெர்சன்) :)’
என்கிறார் இவர்.
நாட்டின் 5 முட்டாள்கள் முகநூலில் படித்த இந்த விஷயத்தை பகிர்ந்து
கொள்வதன் மூலம் தான் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று
நிரூபித்து இருக்கிறார் இவர்.
********************************************************************************************
இவரைப் பற்றிப் படித்த பின் மனிதனின் உண்மையான
ஊனம் எது? என்று
நமது பின்னூட்டப் புயல் எழுதியதன் உண்மையான பொருள் புரிகிறது.
இவரைப் பற்றி தெரியாதவர்கள் வலைபதிவுலகில் இல்லவே இல்லை
என்று அடித்துச் சொல்லலாம். அத்தனை வலைபதிவர்களும்
சரியாச் சொன்னீங்க! என்பார்கள்.
வலைப்பதிவுலகில் இவரது எழுத்துக்கள், பின்னூட்டங்கள் மட்டுமல்ல
இவரது மீசையும் கூட பிரபலம்!
திருமதி மஞ்சு பாஷிணியின் இவரைப்பற்றிய அறிமுகத்திற்கு திரு
அப்பாதுரை எழுதிய பின்னூட்டம் காண்க!
‘தனபாலனுடைய இன்னொரு முக்கியமான feature ஐச் சொல்லாம
விட்டீங்களே? என்னமா மீசை வளர்த்திருக்கிறார்! . இதைவிட
நேர்த்தியான மீசையை நான் பார்த்ததே இல்லை. அவரை நேரில்
சந்திக்கும் பொழுது அசல் தானா என்று மென்மையாக இழுத்துப்
பார்த்துவிட வேண்டும் என்று தோன்றவில்லை? பதிவுலகில் இப்படி
யாராவது மீசை வைத்திருக்கிறார்களா?’
மிகவும் அருமையான மனிதர். இவரை குறிப்பிடாவிட்டால் இந்த வார
வலைச்சரம் முழுமை பெறாது.
********************************************************************************************
அருமையான மனிதரைப் பற்றிப் பேசியவுடன் அருமையான தன்பாட்டியைப் பற்றி பேச வருகிறார் திருமதி கீதமஞ்சரி
‘என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச்
சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும்
சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும்
அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே,
கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை
இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில்
தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர்.
உங்கள் கட்டுரை எனக்கு என் பாட்டியை நினைவு
படுத்தியது.
********************************************************************************************
-என்னவனுக்கு என்கிறார் திருமதி பத்மா.
‘இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின்
இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு
உண்போம்.’
‘பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே
நீரில் திளைப்போம்.’
‘பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே
சமைக்கும் நேரம் கொஞ்சம் கவிதையும் வாசித்து பார்ப்போம்.’
என்று கவிதையில் கடிதம் வடிக்கிறார் திருமதி பத்மா.
********************************************************************************************
மேலே இருப்பது. ஆனால் கீழே இருக்கும் கடிதம் நிஜத்தைச்
சொல்லுகிறது.
ஆசையில் ஓர்
கடிதம்...,
'ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ, நீ என் பென்சிலை
பிடிச்சுக்கிட்டு “ங்கா”ன்னு சொன்னே. அது எனக்கு ”அக்கா”ன்னு கேட்டுச்சு.
அப்போதாண்டா செல்லம் உன்மேல் எனக்கு பாசம் வர ஆரம்பிச்சது.
‘என்னதான் நாம சண்டை போட்டு வீட்டை அதகளம் பண்ணி.., அடி
வாங்குனாலும் அடுத்த பிறவியிலயும் நீயே எனக்கு தங்கச்சியா
பொறக்கனும். உன் இம்சைகளை நான் தாங்கனும்ன்னு சாமிக்கிட்ட
வேண்டிக்குறேன்.’
‘ஆனா, உன் இம்சைலாம் நான் எப்படி அக்காவா தாங்குறேன்னு ஒரே ஒரு
பிறவியில் நீ எனக்கு அக்காவா பிறந்து என் இம்சைகளை நீ தாங்கனும்.’
இப்படிக்கு தூயா
********************************************************************************************
ஒருவாரமாக பலரின் பதிவுகளை படித்துக் கொண்டு வருகிறேன். ஒரு
பதிவரின் மன நிலை எப்படி இருக்கும் என்று காட்டுகிறார் திருமதி
ஸ்ரவாணி
‘கருத்தை ஆவலாய் எதிர்நோக்கையில்
முதலில் முந்திக் கொண்டு வந்த
உங்கள் சொந்த அனுபவமா
என்ற கத்திரிக் கேள்வி
நம் நொந்த அனுபவமானது’
எல்லாப் பெண்களுக்கும் இந்த ‘நொந்த’ அனுபவம் உண்டு!
********************************************************************************************
கொண்டார்.
இந்த முறை பெங்களூரில் மழை ரொம்பவும் கம்மி என்பது
வருத்தப்பட
வேண்டிய நிஜம். என்ன செய்வது?
‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்
என்று மழைக் கடவுளை வேண்டிக்கொண்டு
மறுபடியும் வா என்று மழையையே கேட்டுக்
கொள்ள வேண்டியதுதான்'
என்கிறார் பாலச்சந்தர். இவரது
மழை கவிதை இதோ:
சொட்ட சொட்ட பெய்தாலும்
சரம் சரமாய் பெய்தாலும்
சின்ன சின்ன உயிருக்கும்
உலகாளும் உயிருக்கும்
உயிர் துளி நீ தானே
.......................................
......................................
மழையே மனம் குளிர
மறுபடி ஒரு முறை வருவாயா!
இவரது இன்னொரு கவிதை:
இந்நாளில் பாரதி
........................................
.........................................
சுதந்திர இந்தியாவை
வளம் பெற்ற இந்தியாவை
காணவந்த கருவிழியில்
ஊழல் பிசாசையும்
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்
ஒற்றுமை இல்லா மக்களையும்
காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!
இன்றைய இந்தியாவின் அவலத்தை பாரதியின் பார்வையில் தனது
கவிதையில் வடிக்கிறார் இவர்.
********************************************************************************************
விடை பெறும் நேரம் என்பது எப்போதுமே கொஞ்சம் வேதனையான
அன்பின் திருமதி ரஞ்ஜனி நாராயணன் மேடம்.
ReplyDeleteவணக்கம்.
தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியினை வெற்றிகரமாக கடந்த ஒரு வார காலமாக நடத்திக்கொண்டு வந்து மிகச்சிறப்பாக நிறைவாக, இன்றைய நிறைவு நாளையும் எட்டி, இன்றைய அறிமுகங்களையும் காட்டி அசத்தி விட்டீர்கள்.
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள், உங்களுக்கும் சேர்த்துத்தான்.
தொடரும்....
[2] From VGK
ReplyDeleteMrs. RANJANI FROM WORDPRESS
TO
WORLD PRESS REPORTERS
-oOo-
எங்கோ WORDPRESS என்ற வலைத்தளத்தில் சிறப்பாகவே எழுதிக்கொண்டு குடத்தில் இட்ட விளக்காக மட்டும் இருந்து வந்தீர்கள்.
உங்களுக்கும் பலரைத் தெரியாமல் இருந்தது. அதுபோல பலருக்கும் உங்களைத் தெரியாமல் இருந்து வந்தது.
ஆனால் இன்று, இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர் பதவி, உங்களை குன்றில் இட்ட விளக்காக அடியோடு மாற்றி, ஜகத் ஜோதியாக பிரகாஸிக்கச் செய்து விட்டது.
WORLD LEVEL PRESS REPORTERS உங்களைச் சிறப்புப் பேட்டி எடுக்க ஓடோடி வந்து கொண்டிருப்பது போல நேற்று நான் ஓர் கனவு கண்டேன். அது இன்றோ நாளையோ பலித்தாலும் பலிக்கலாம். ;)))))))))
உலகெங்கும் இன்று உங்களைப்பற்றியே பேச்சாக உள்ளது [அதாவது நம் தமிழ் வலை உலகில்].
தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
பிரியமுள்ள,
VGK
தொடரும்
3] From VGK
ReplyDeleteமறந்துட்டேனே! எப்போ என்னை பெங்களூர் விஜயநகர் ஏ.ஸி. ரெஸ்டாரண்ட் “இந்திர ப்ரஸ்தா” வுக்கு அழைத்துச் செல்வதாக இருக்கேள்? ;)))))
[இந்தப்பதிவிலேயே திருநெல்வேலி அல்வாவும், திருப்பதி லட்டும், மீண்டும் தோசையும் கொடுத்துட்டேனே என்று சொல்லாதீங்கோ.]
ஆனாலும் இதற்காக நீங்கள் ரொம்பவும் சிரமப்படாதீங்கோ. கவலைப்படாதீங்கோ.
ஸ்ரீரங்கத்திலேயோ அல்லது திருச்சியிலேயோ நானே நல்ல சுவை மிகுந்த இடமாக அழைத்துச் செல்கிறேன்.
மிகப்பெரிய TREAT தருகிறேன். அன்பின் சீனா ஐயாவுக்கும் அழைப்புக் கொடுத்திடுவோம். O.K. யா? ;))))))
பிரிய்முள்ள
VGK
WORLD LEVEL PRESS REPORTERS உங்களைச் சிறப்புப் பேட்டி எடுக்க ஓடோடி வந்து கொண்டிருப்பது போல நேற்று நான் ஓர் கனவு கண்டேன். அது இன்றோ நாளையோ பலித்தாலும் பலிக்கலாம். ;)))))))))
ReplyDeleteநல்ல ஜோக்!
உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி.
நீங்கள் எப்போது எங்கள் அகத்துக்கு வருகிறீர்களோ, அன்றே அப்போதே 'இந்திரபிரஸ்தா' விற்குப் போகலாம்.
நிறைய பதிவர்களை நான் தெரிந்து கொண்டேன் என்பது மிகவும் நிஜம்.
அடுத்த ஆசிரியர் யார்?
எனக்கு மட்டும் சொல்லுங்களேன்!
திரு அன்பின் சீனா அவர்களுக்கு பெங்களூரிலும் விருந்து.. திருச்சியிலும் விருந்து!
நெஞ்சு நனைந்த நன்றியுடன்,
ரஞ்ஜனி
//அடுத்த ஆசிரியர் யார்?
ReplyDeleteஎனக்கு மட்டும் சொல்லுங்களேன்!//
அவரும் எங்க ஊர்க்காரர் தான். மிகச்சிறந்த நகைச்சுவையாளர். என் இனிய நண்பர். நாங்கள் ஒரே அலுவலகத்தில் பல்லாண்டு சேர்ந்து பணியாற்றும் பாக்யம் பெற்றிருந்தோம்.
மேற்படி டிபன் SKC விஷயம் அவருக்கான ஹிண்ட் ஆகவே கொடுத்துள்ளேன்.
அவர் யார் என்று நான் இங்கு சொல்லக்கூடாது. இப்போது தனியாக மெயிலில் தெரிவிக்கிறேன்.
பிரியமுள்ள
VGK
ஒரு வார காலத்தில் உன்னதமான சேவையாற்றியிருக்கின்றீர்கள் சகோ.! பல பயனுள்ள தளங்களையும், தகவல்களையும் தங்களின் பதிவுகளின் வழியே பெற முடிந்தது.
ReplyDeleteஅத்தோடன்றி இயல்பான எழுத்து நடை எப்படியெழுதுவது என்று சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருக்கின்றீர்கள் சகோ.!
பின்னூட்டப் புயலைக் குறித்த அறிமுகத்திற்கும் நன்றி. அவரது சேவை அளப்பரிய சேவை தான். எப்படித்தான் தேனீயாய் இணையத்தில் உலா வந்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருக்கின்றாரோ என்று பொறாமை ( :) ) பட்டதுமுண்டு.
பல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பலவே.!
ஒரு வாரம் தங்களோடு நானும் பயணித்து ஜனநாயக் கடமைதனை சிறப்பாகச் செய்ய வேண்டிய முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஅடுத்த கொஞ்சம் நாட்களுக்கு மிக முக்கியமான பணிகள் இருப்பதால் (என்ன பணி என்றால்.. தூங்குறது தான்) பின்னொரு நாளில் சந்திப்போம்.
வாருங்கள் சிவஹரி!
ReplyDeleteஇனி உங்களது பின்னூட்டங்களை காண முடியாது என்பது கொஞ்சம் வருத்தமே!
என் வலைத்தளத்திற்கு அவ்வப்போது வாருங்கள்!
தினமும் வந்து உங்கள் கடமையை செய்து என்னை மகிழ்த்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்!
நன்றியுடன்,
அன்புள்ள
ரஞ்ஜனி
தங்களது வலைத்தளத்திற்கு நான் வந்து சில முறை பின்னூட்டம் போட முயற்சித்தேன். ஆனால் அதற்கு வேர்ட்ப்ரஸ் கணக்குதான் வேண்டுமென்று திருப்பி விட்டது.
ReplyDeleteஇனிமேல் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
விரைவில் வந்து கருத்திடுகின்றேன் சகோ.! (ஜிமெயில் கணக்கில் வேர்ட்ப்ரஸ் வலைப்பூவில் பின்னூட்டம் போட முடியுமா என்று வல்லுநர்கள் சொன்னால் எனக்கு எளிதாக இருக்கும் :) )
நன்றி
முதலில் என் தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி அம்மா...
ReplyDeleteஇந்த வாரம் முழுவதும் பல புதிய தளங்களின் அறிமுகம்... எனது தளத்திலும் வந்து கருத்திட்டார்கள்... Followers ஆகி விட்டார்கள்... நன்றி...
மின்சாரம் போவதற்கு முன் தங்களின் இன்றைய அறிமுகங்களை பார்த்து விடுகிறேன்...
நன்றி... நன்றி அம்மா...
நிறைவான வாரமா இருந்தது.
ReplyDeleteஇனிய பாராட்டுகள்!!!!
அட! எனது தளமும் வலைச்சரத்திலா? இவ்வளவு சீக்கிரம் எனது தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று நினைக்கவேயில்லை.
ReplyDeleteதங்களது அறிமுகத்திற்கு மிகுந்த நன்றிகள். உங்களைப் போன்றோரின் அறிமுகம் என்னை மேலும் உழைக்கவும், எழுதவும் தூண்டுகிறது. இதைத் தங்களது அறிமுகமாக அல்லாது ஆசியாகவே கருதுகிறேன்.
வலைச்சரத்தின் ஆசிரியர் பதவியை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். பல நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வேர்டுபிரஸ் வலைக்குழுமத்தில் தங்களைப் போன்றோர்களுடன் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி. வேர்டுபிரஸ் குழும உறுப்பினராக தங்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அட! எனது தளமும் வலைச்சரத்திலா? இவ்வளவு சீக்கிரம் எனது தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று நினைக்கவேயில்லை.
ReplyDeleteதங்களது அறிமுகத்திற்கு மிகுந்த நன்றிகள். உங்களைப் போன்றோரின் அறிமுகம் என்னை மேலும் உழைக்கவும், எழுதவும் தூண்டுகிறது. இதைத் தங்களது அறிமுகமாக அல்லாது ஆசியாகவே கருதுகிறேன்.
வலைச்சரத்தின் ஆசிரியர் பதவியை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். பல நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வேர்டுபிரஸ் வலைக்குழுமத்தில் தங்களைப் போன்றோர்களுடன் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி. வேர்டுபிரஸ் குழும உறுப்பினராக தங்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி திருமதி துளசி!
ReplyDeleteவாருங்கள் தனபாலன்,
ReplyDeleteஉங்களை அறிமுகப் படுத்தி நான் பெருமை பெற்றேன்.
நன்றி தனபாலன்!
வாழ்த்துக்கள் சாக்பீஸ் தள நிர்வாகிக்கு!
ReplyDeleteஅருமையான நிறைவான நாள் இன்று.... ஒருவாரமும் வீட்டில் விஷேஷம் என்பது போல் வாசலில் அழகாய் கோலமிட்டு எல்லோரையும் அன்பாய் வரவேற்று நிறைந்த அன்புடன் உபசரித்து காஃபி தோசையில் ஆரம்பித்து அற்புதமான வித்தியாசமான வலைதளங்களை அறிமுகப்படுத்தி அதோடு கொடுத்த அருமையான அறிமுகப்பதிவும் ஏழு நாட்களும் நவராத்திரி முடிந்தது போல் ஒரு ஏக்கம் வருகிறது அம்மா...
ReplyDeleteரசிக்க வைத்து ருசிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த நிறைவான ஏழுநாட்களும் மிக மிக அருமை...
இன்று அறிமுகப்படுத்தியதில் ஒருசிலர் நானறிந்த தளங்கள்....
திண்டுக்கல் தனபாலன் அவர்களை யாராலும் மறக்கவோ அவரது சேவையை மறுக்கவோ முடியவே முடியாது.. யாரும் கேட்காமலேயே ஓடிவந்து உதவும் ஆத்மநண்பர்... என்றும் சௌக்கியமும் இருக்க இறைவனிடம் வேண்டுதல்....
வை.கோ அண்ணா பரிந்துரைத்த வைரம் தாங்கள்..... வைரத்தின் மதிப்பை அதன் சிறப்பை அறிந்தோர் மட்டுமே உணரமுடியும் என்பது போல் தங்களின் எழுத்துகளின் ஆளுமையை ரசித்து அனுபவித்தோம் அம்மா...
பின்னூட்டங்களில் தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்புநன்றிகள்....
வித்தியாசமாகவும் அழகாகவும் க்ரியேட்டிவிட்டியாகவும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்த ரஞ்சனிம்மாவுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்...
இன்னும் எழுத்துலகில் உங்கள் எழுத்துகள் இதே அற்புதத்துடன் பவனிவர அன்புவாழ்த்துகள் அம்மா...
புதிய தளம் இப்போதுதான் தொடங்கி உள்ளேன்.ஊக்கப்படுத்து விதமாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
ReplyDeleteநிறைய எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது.தொடர்கிறேன்.
மேலும் நிறைய தளங்களை அறிமுகப்படுத்தி உங்கள் பணியை சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.... :)
பலரினை அறிமுகம் செய்து நிறைவாக பணியை முடித்தீர்கள். வாழ்த்துக்கள் .தனபாலன் சார் பற்றி உண்மையில் சரியாகச் சொன்னீர்கள் நல்ல நண்பர்.
ReplyDeleteஅப்பா ஒரு கல்யாணத்தை சுயமா முடித்து வைத்த மாதிறி இருக்கும். எவ்வளவு அறிமுகம். வேர்ட்ப்ரஸ்லே
ReplyDeleteஉட்கார்ந்தே
இவ்வளவு பேரைப் பற்றி தெறிஞ்சுக்க முடிந்தது. ரொம்ப ஸந்தோஷத்தைத்
தரும் பதவியை அருமையாக நிர்வகித்து பல தளங்களை வசப்படுத்தி
ஓஹோன்னு சொல்லும்படி கமென்டும்
எழுதி பிரமிக்க வைத்து விட்டாய்.
வலைப்பூவரசி என்பதை நிரூபித்து விட்டாய். இன்னும் மேன்மேல் வளர எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கும் அன்புடன் சொல்லுகிறேன்.
‘திக்குத் தெரியாத காட்டில்’ தேடி அலைந்து அருமையான அறிமுகங்கள் அளித்தமைக்குப் பாராட்டுக்கள்... வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம் (ரஞ்ஜனியம்மா)
ReplyDeleteவலைப்பதிவு பகிர்வு என்ற பசுவிக் சமுத்திரத்தை இன்றுடன் கடந்து விட்டிர்கள் அம்மா எவ்வளவு சுமைகளுக்கு மத்தியில் இரவு பகல் என்று பாராமல் கண் விழித்து துள்ளிய சிந்தனையுடன் பலவகைப்பட்ட படைப்பாளிகளின் வலைப்பதிவை உலகமே வியக்கும்படி பிரபலியப்படுத்திவிட்டிர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
அடுத்து வருகிற பொறுப்பாசிரியர்(சைபர்சிம்மன்) அவர்களை நாளை இன்முகத்தடன் வரவேற்கிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி மஞ்சு!
ReplyDeleteவெகு அழகாக முடிவுரை கூறி உள்ளீர்கள்.
நாளையிலிருந்து நவராத்திரி. இந்த ஆசிரியர் பொறுப்பு நல்லபடியாக முடிந்த திருப்தியுடன் நவராத்திரிக்கு தயார் ஆகிறேன்.
என் அகத்து கொலு பார்க்க வாருங்கள் மஞ்சு!
அன்புடன்,
ரஞ்ஜனி
இன்னும் நிறைய எழுதி உங்கள் உணர்வுகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாற்றுத் திறனாளி அவர்களுக்கு.
அருமையாக வலைச்சரம் தொடுத்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்! இன்றைய அறிமுகங்களில் சைபர்சிம்மன், கீதமஞ்சரி, தூயா மற்றும் சிலர் நான் அறிந்தவர்கள். சிலர் அறியாதவர்கள். அழகான சரம்.
ReplyDeleteநன்றி தனிமரம் பதிவாளருக்கு!
ReplyDeleteநீங்கள் சொன்னது ரொம்பவும் சரி காமாட்சி அம்மா!
ReplyDeleteபணியை நிறைவேற்றிய சந்தோஷத்தில் ஒரு தூக்கம் போட்டு விட்டு வந்தேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி!
நன்றி இராஜராஜேஸ்வரி!
ReplyDeleteஉங்களது பின்னூட்டம் நிறைய பலத்தைக் கொடுத்தது.
அன்புடன்,
ரஞ்ஜனி
வாருங்கள் ரூபன்.
ReplyDeleteதினமும் பின்னூட்டம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தியதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும.
வாழ்த்துக்கள்!
வாருங்கள் துரை!
ReplyDeleteஉங்கள் எல்லோருடைய அன்பினாலும், பின்னூட்ட உற்சாகத்தாலும் பணியை நல்ல விதமாக முடித்திருக்கிறேன்.
உங்களது கட்டுரைகள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கின்றன.
மிகவும் ரசித்துப் படித்தேன்.
இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி!
ஒரு வாரப் பணியை சிறப்பாக முடித்துள்ள தங்களுக்கு என் வாழ்த்துகள்...
ReplyDeleteரஞ்ஜனி,
ReplyDeleteவெற்றிகரமா முடிச்சிட்டீங்களா! ஒவ்வொரு நாளும் பதிவர்களுக்கான அறிமுக வர்ணனை எப்படி இருக்கும்! என்ற ஆவலில் வந்து பார்ப்பேன்.
"விடைபெறுகிறேன்:வணக்கம்!"_பார்த்தவுடன் கொஞ்சம் வேதனை என்றாலும் ப்ளாக் மூலமாக சந்தித்துக்கொள்வோம் என்பதில் மகிழ்ச்சி.
இப்பகுதியில் அறிமுகம் மட்டுமல்லாது மிகச்சிறு உதவிக்கு நன்றி கூறியதும் மறக்கமுடியாதது. பாராட்டுக்கள்.
நன்றி இரவின் புன்னகை பதிவருக்கு!
ReplyDeleteஆவலுடன் வந்து படித்ததாகச் சொல்லியது சந்தோஷத்தை கொடுக்கிறது.
ReplyDeleteஇந்த வலைபதிவு மூலம் சில புதிய நட்பு பூக்கள் மலரும் என்ற நம்பிக்கை.
உங்கள் எல்லோரது உதவியும் சேர்ந்துதான் என்னை இந்த அளவுக்கு செய்ய வைத்தது என்று நம்புகிறேன்.
நன்றி சித்ரா,
கண்டிப்பாக ப்ளாக் மூலம் சந்திப்போம்!
நன்றி! மீண்டும் வருக!
ReplyDeleteதிரு.வி.கி.கோ. மூலம் தங்களின் வலை அறிமுகம் கிடைத்தது. தினமும் வர இயலவில்லை. தங்களின் தளம் பார்க்க அருமை.
ReplyDelete//சந்திர வம்சம் said...
ReplyDeleteதிரு.வி.கி.கோ. மூலம் தங்களின் வலை அறிமுகம் கிடைத்தது. தினமும் வர இயலவில்லை. தங்களின் தளம் பார்க்க அருமை.//
அன்புள்ள மேடம்,
திரு. வை.கோபாலகிருஷ்ணன் அல்லது வை.கோ அல்லது வி.ஜி.கே. அலல்து கோபு சார் என்று இருக்க வேண்டும்.
அவசரத்தில் திரு.வி.கி.கோ. என என் பெயரை மாற்றி விட்டீர்கள்.
அதனால் பரவாயில்லை.
அன்புடன்
VGK
நன்றி திரு திரு தமிழ் இளங்கோ!
ReplyDeleteநன்றி சந்திரவம்சம் அவர்களுக்கு!
ReplyDeleteமுதலில் தங்கள் பணியை செவ்வனே நிறைவேற்றியதற்கு
ReplyDeleteஎன் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ரஞ்சனின் மேடம்!
இயன்றவரையில் மற்றவர் தளங்களுக்கும் சென்று பார்க்கிறேன்.
என்னை நினைவில் வைத்து
என் பதிவையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு
மகிழ்வுடனும் மனதார
நன்றி கூறுகிறேன் அன்பு ரஞ்சனி மேடம் !
உங்கள் எழுத்துக்கள் மனதை கவர்கின்றன ஸ்ரவாணி!
ReplyDeleteஉங்களது படைப்புகளைப் பகிர்ந்ததில் எனக்கு பெருமை.
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
இந்த வாரம் இனிமையான வாரமாக இருந்ததும்மா. பாராட்டுகள்.
ReplyDeleteஎளிமையான நடையில், தெளிவாக , சுவையாக , எழுதி, எங்களை அசத்தி விட்டீர்கள்!
ReplyDeleteநன்றி ஆதி!
ReplyDeleteநன்றி பட்டு!
ReplyDeleteமிக்க நன்றி ரஞ்சனி மேடம்.பணிச் சுமை காரணமாய் உடன் பதில் கூற இயலாமல் போய் விட்டது.
ReplyDeleteரொம்ப சந்தோஷமாய் இருக்கு.
நன்றி.
உங்களை சந்தோஷப் பட வைத்தது எனக்கும் சந்தோஷமே!
ReplyDeleteநன்றி பத்மா!
உங்கள் எழுத்துக்களைப் படிக்க முடிந்ததற்கு நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.