Monday, October 15, 2012

”ஆரண்ய நிவாஸ் “  ஆர் ராமமூர்த்தி ஆசிரியப் பொறுப்பை ரஞ்ஜனி நாராயணனிடம் இருந்து ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமைச் சகோதரி ரஞ்ஜனி நாராயணன் தான் ஏற்ற பொறுப்பினை மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள் : 7
அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 68
அறிமுகப் படுத்திய ப்திவுகள் : 86
சுய அறிமுகப் பதிவுகள் : 11
பெற்ற மறு மொழிகள் : 332

சகோதரி ரஞ்சனி நாராயணனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் மிகக் குறுகிய காலத்தில் இணக்கம் தெரிவித்த நண்பர் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

இவர் திருச்சியில் புகழ் பெற்ற பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராகப் பணியாற்றுகிறார். 


1981 முதல் எழுதிக் கொண்டிருக்கிறார்.. முப்பது கதைகள் பிரசுரம் ஆகி இருக்கிறது.  எழுதுவது குறிப்பாக கல்கி மற்றும் தினமணிக்திர். 2000 முதல் பத்திரிகைக்கு எழுதுவது கிடையாது.. மூன்று வலைத்தளங்கள் , ட்விட்டர், ஃபேஸ்புக் என்று அகலமாய் கால்களை விரித்துக் கொண்டு இருக்கும் இவர்  ஒரு ஆக்டோபஸ்!
          இவரது  முகவரிகள்:

          4. https://twitter.com/sridar57

         சிரத்தையாய் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு அதிகம்..
          ரஸத்தில் கொத்தமல்லி இதழ் தூவுவது போல், எழுத்தில் நகைச்சுவை தூவ இவருக்கு மிகவும் பிடிக்கும். இருந்தாலும் இவர்  ஒரு சூப்பர் மார்க்கெட் ஆக இருக்க விரும்புகிறவர். கட்டுரை..கதை..பிலாஸபி..என்று எதுவும் இவரிடம் கிடைக்கும்.

 இவருடைய எழுத்துகளுக்கு இவரே பொறுப்பு என்கிற சிறந்த கொள்கை உடையவர்.  

இவர் தன் பதிவுலக வாழ்க்கையினை 2009 நவம்பரில் துவக்கி, இது வரை 254 பதிவுகள் எழுதி இருக்கிறார். 

அருமை நண்பரினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி நாராயணன்

நல்வாழ்த்துகள் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி

நட்புடன் சீனா 

 

14 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக, ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்களே.

    ReplyDelete
  3. varuka varuka!

    vaazhthukkal!

    ReplyDelete
  4. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியை வரவேற்கிறோம். கல்கி, தினமணி கதிரில் எல்லாம் எழுதி வரும் அவரது பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி நாராயணன்

    நல்வாழ்த்துகள் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள்
    திருமதி
    ரஞ்ஜனி நாராயணன்
    மேடம்.

    நல்வாழ்த்துகள்
    ஆரண்ய நிவாஸ்
    திரு. ஆர் ராமமூர்த்தி
    சார்.

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
  7. ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி அவர்களது பதிவுகளை ஆவலோடு வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஆசிரியர் பொறுப்பினை ஏற்று நவராத்திரி வருமுன்பே நவராத்திரி கொண்டாட்டத்தை எங்கள் கண்முன் கொண்டுவந்து அசத்தலாய் பதிந்த ரஞ்சனி அம்மாவுக்கு அன்பு வாழ்த்துகள்.

    இந்த வாரம் ஆசிரியர் பணி ஏற்கும் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி ஐயாவுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நன்றி வேங்கட ஸ்ரீனிவாஸ்!

    ReplyDelete
  10. வருக வருக ராமமூர்த்தி சார்!

    ReplyDelete
  11. சிறப்பாக பணியை முடித்த ரஞ்ஜனி நாராயணன் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    இந்த வாரம் ஆசிரியர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...

    (TM 2)

    ReplyDelete

  12. அனைவருக்கும் வணக்கம் ....
    வந்து கொண்டே இருக்கிறேன்....


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  13. வணக்கம் ஆரணிய நவாஸ்(ஆர்.ராமமூர்த்தி)

    வலைச்சரம் வலைப்பூவில் ஒருவாரகாலம் பொறுப்பாசிரியராக கடமையாற்றுவதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வருகிற இரண்டாம் நாளும் வலைச்சர வலைப்பூ சிறப்பாக பூத்து மலர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete