Monday, December 24, 2012

வகுப்பு- முதல் நாள்

வகுப்பு:  மாணவி அறிமுகம்:

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

மூத்த பதிவர்களும், பிரபல பதிவர்களும் ஆசிரியர்களாக இருந்த வலைச்சரத்தில் நானும் ஒரு ஆசிரியரா? இது எனக்கே அதிகமாகதான் தெரிகிறது. பேனாவை மட்டும் பிடித்து பத்திரிக்கைகளில் எட்டி பார்த்து கொண்டிருந்த நான் வலைப்பூவிற்கான விதையை போட்டு அது இப்போதுதான் துளிர்த்து 10 மாதமாகியிருக்கிறது.  
 வகுப்பில் ஆசிரியர் வர தாமதமானால்,  ஒரு மாணவரை அவர் வரும் வரை பார்த்து கொள்ள சொல்லியிருப்பார். அது போல் தான் நான் இன்று ஒரு மாணவியாக வலைச்சரத்தில் ஒரு வாரம் வரை ஆசிரியர் பொறுப்பை பார்த்து கொள்ள போகிறேன்.
இந்த மாணவியிடம் பொறுப்பை ஒப்படைக்க  தேர்வு செய்து பரிந்துரைத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், நம்பி என்னிடம் ஒப்படைத்த அன்பின்.சீனா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி!
வலைப்பூவிற்கான  விதையை இட்டு துளிர்த்த போது அது வளர ஆலோசனைகளை சொல்லி நீர் ஊற்றிய சகோதரர் டி.என்.முரளிதரன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

இத்துடன் என்னை பற்றி முடித்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். நான் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க போகிறேன் என்றதும் என் தோழி விஜயலட்சுமி எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி அடுத்த நிமிடமே என்னை பற்றி சில வார்த்தைகள் சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார். கடிதம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. விஷயம் அறிந்ததும் அவசரமாக ஒரு கடிதம் மின்னஞ்சலில் அனுப்பினார். இந்த சமயத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும் இதை  நிச்சயம் நீங்கள் போட வேண்டும் என்றார். அவர் அன்பிற்காக அக்கடிதத்தை இணைக்கிறேன். அறிமுகத்தில் மிகைப்படுத்திக் கொள்வதாக நினைக்க வேண்டாம். அவர்கள் மீதுள்ள மரியாதை காரணமாகவே இக்கடிதங்களை பகிர்கிறேன்.

விடியல் ஓர் அறிமுகம்
       உஷா , பெயருக்கு  ஏற்றார்  போல  பல   இதயங்களின்  விடியலாய்  இருப்பவர் . சுறுசுறுப்பு  பேச்சில்  மட்டுமல்ல , செயலிலும்  கூட .  ஆரம்ப  காலத்தில்  பல சிற்றிதழ்களில்  எழுத  ஆரம்பித்தவரின்  பேனா  பெண்கள்  மலர் , வாரமலர் , கல்கி , பாக்யா  போன்ற  வார  இதழ்களிலும்  தன்  முத்திரையை  பதித்துள்ளது . itamil  போன்ற  இணைய இதழ்களிலும் தன் கதை மற்றும் கவிதைகளால் அறியப்பட்டவர் தோழி உஷா  அன்பரசு . எதற்காகவும் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காத கொள்கைவாதியாகவும் , அன்பிற்கினியவர்களை அரவணைத்து வழிநடத்தும் இனிய தோழியாகவும் உலா வருபவர் . சமூக அக்கறையை வார்த்தைகளிலும் , பேனா  முனையிலும் மட்டும் காட்டாமல் 
     " பிரார்த்திக்கும் உதடுகளை விட 
       உதவிக்கு நீளும் கரங்களே உயர்ந்தவை "
எனும் வரிகளுக்கு உதாரணமாய் வாழ்பவர் .
       ஆசிரியப் பொறுப்பு ஏற்றிருக்கும் தோழியின் பணிசிறக்க வாழ்த்துக்கள் !
                                       என்றும் அன்புடன் ,
                                         D. விஜயலட்சுமி .(ஆங்கில ஆசிரியை, வேலூர்)

உஷா அன்பரசு , தன் எழுத்தில் எவர் சாயலும் குளிர்காயக் கூடாது என்று நினைப்பவர்.பிறரிடம் தன்னை எப்பொழுதும் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள மாட்டார். ஏன் தெரியுமா? அப்போது தான் மற்றவர்களிடமிருந்து சில விஷயங்களை நம் மனதில் ஏற்றிக்கொள்ள முடியும் என்று சொல்வார்.பெரியாரை ரொம்ப பிடிக்கும். இருந்தாலும்  அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.அவர்  ஒரு தனிமை விரும்பி, அதே சமயம்,  நல்ல நட்பாக பேசுபவர்.எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவார். சந்தர்ப்பத்தில் கொஞ்சம் கடுமையாகவும் பேசுவதுமுண்டு.அலுவலகப் பணிகளுக்கிடையையேயும் குடும்பப்  பொறுப்புகளுக்கிடையேயும் கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றில் எழுதும் ஆர்வம் அதிகம். 
பாக்யா, தினமலர்-பெண்கள் மலர், தேவதை, ராணி வார இதழ், கல்கி, தினத்தந்தி- குடும்பமலர்
இவைகளில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கிறது. ஆசிரியப் பொறுப்பு ஏற்றிருக்கும்  உஷா அன்பரசு விற்கு  என்  வாழ்த்துக்கள் !
- கண்ணன்( பாக்யா வார இதழ்)

************************


இந்த நாள்:

எம்.ஜி.ராமசந்திரன் ( இன்று நினைவு நாள்)

எம்.ஜி.ராமசந்திரன் : தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. 

ஈ. வெ. இராமசாமி:( இன்று நினைவு நாள்)

 சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.


இனி  என் விழிகள் எழுத்தாக்கியவைகளில் சில:
சொந்த வீடு ஒவ்வொருக்கும் கனவு.  அப்படி கஷ்டபட்டு கட்டின வீட்டை பெற்ற பிள்ளையால்  விற்கும் சூழ் நிலைக்கு வந்த  வயது முதிர்ந்த தம்பதிகளின் உணர்ச்சிக் குவியலை எழுதும் போது எனக்கே மனம் கனத்து போனது.
வீடு

 காதல் இல்லாத மனிதர்களே கிடையாது. மனிதரா பிறந்த எல்லாருடைய வாழ்க்கையிலும் மனசுக்குள்ள எங்காவது மூலையில் காதல் அடையாளம் பதிச்சிட்டு போயிருக்கும்.  . காதலோடு பேசியதும், பழகியதும் கிடையாது என்று  யாரும் சொல்ல முடியாது. இவங்க என் வாழ்க்கையில்  இருந்தா நல்லாயிருக்குமே ன்னு  யாரோ ஒருத்தராவது உங்க மனசில ஒரு சில வினாடிகளாவது இடம் பிடிச்சிருப்பாங்க.. அது கூட நேசம்தான்.
சொல்லாம போச்சு

படிச்சிட்டு வேலைக்கு  அலையறதை விட மாடாவது  மேய்ச்சிருக்கலாம் என்று நினைக்கிற அளவுக்கு போய்ட்டாங்க, நம்ம இன்ஞினியரிங் ஸ்டூண்ட்ஸ்.. அதை ஒரு நகைச்சுவையா சொல்ல ஆசைப்பட்டேன்.
வேலை 

 சின்ன குழந்தையா இருந்து கால போக்கில நாமே ஒரு  தந்தையா, தாயா மாறினாலும் நம்ம அம்மா, அப்பா நமக்கு எப்பவும் அப்படியே இருக்கனும்னு  நினைப்போம்.  என் அப்பாவின் வயதான தோற்றத்தை  பார்த்து தனிமையில் உட்கார்ந்து கண் கலங்கியது.
"அப்ப போல அப்பா .."  


வேலைக்காக  வெளி நாடு போய், தாய் நாட்டையே மறந்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பிள்ளையால்  தாயும், தந்தையும் கனா காலங்கள் ஆகிவிடுகிறார்கள்.
 அது ஒரு கனா காலம் 

 காதல் மொழி பேசியவள் பிரிந்து போனாலும் மனதில் இருந்து கொண்டிருப்பதால்  ஏற்படும் வலியின்  குரல்.
 வலி ..!

 வயதான் தாயை பாரமாகவும், தந்தையை ஆதாரமாகவும் பார்த்த பிள்ளைகளுக்கு , தந்தையின் பதிலில் கிடைத்த தலைக்குனிவு.
தலைக்குனிவு


திருமணத்திற்கு முன்  காதல் மாயையில் விழுந்து வாழ்க்கையில் நல்ல கணவனை பெறும் பெண்ணின் மனசாட்சி. 
" நிழல் அது... நிஜம் இது..." 

அரசு பள்ளிகளின் நிலமை.
ஏழைகளின் கல்வி கூடங்கள் 

 குழந்தைகளுக்கு  நன்மை, தீமை தெரியாது. நாம்தான் எதிலும் கவனமாக இருந்து வழி நடத்த வேண்டும்.
தவறு யாருடையது..?

நாளை முதல் மற்ற பதிவர்களின்  சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போம்!

மீண்டும் நாளைய வகுப்பில்.

48 comments:

  1. Very nice student-teacher. your friend's comment and mr. kannan's introduction helps us to know more about you. some of your posts already read by me. some are new. I will folow that. My Heartiest wishes to you! Eagerly awaiting see your introductions from tomorrow because you are a good rasigai.

    ReplyDelete
  2. மின்னல் போல் அடுத்த நொடியே வந்து வாழ்த்துக்கள் சொல்லிட்டிங்க கணேஷ் சார்.. மிக்க நன்றி!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அன்புள்ள திருமதி உஷா அன்பரசு
    அவர்களே!

    வாருங்கள், வணக்கம்.

    தங்களை இன்று இந்த வார வலைச்சர
    ஆசிரியராகக் காண்பதில் நான்
    மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

    அன்புடன்
    VGK

    >>>>>>>>

    ReplyDelete

  5. இன்று 24.12.2012 திங்கட்கிழமை
    ================================

    இன்றைய நாளின் சிறப்புகளைப்
    பட்டியல் இட விரும்புகிறேன்:

    1] வைகுண்ட ஏகாதஸி திருநாள்.

    2] திருமதி உஷா அன்பரசு அவர்கள்
    வலைச்சர ஆசிரியராக பதவி
    ஏற்கும் நல்ல நாள்.

    3] தந்தைப் பெரியரின் நினைவு நாள்.

    4] புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல்,
    மக்கள் திலகம், மாண்புமிகு முன்னாள்
    தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர்
    அவர்களின் நினைவு நாள்.

    5] கிறிஸ்துமஸ் ஈவ் திருநாள்

    அன்புடன்
    VGK


    >>>>>>>>>

    ReplyDelete
  6. இனி மற்ற சக பதிவர்களின் தகவலுக்காக !
    ========================================

    ஆஹா!

    ”திருமதி உஷா அன்பரசு”

    என்ற பெயரில் தான் எத்தனை
    அன்பு அரசாட்சி செய்கின்றது
    பாருங்களேன் !

    அடடா ......

    “இது எங்க கோட்டை” என்ற
    படத்துடன் கொட்டை எழுத்துக்களில்
    வேலூரிலிருந்து பதிவுகள் எழுதுபவர் அல்லவா!

    இவரின் எழுத்தினைப் / பதிவினைப் படிக்காமல்
    கோட்டை விட்டவர்கள் துரதிஷ்டசாலிகளே!
    என்று எனக்குத்தோன்றுவது உண்டு.

    >>>>>>>>>

    ReplyDelete
  7. இவரின் ”வேலூர்” என்ற ஊர் பெயரே
    வேலனின் வேலினை நினைவு படுத்துதே!

    வேலனின் வேல் போல தன் அன்பினை
    அனைவரின் பேரிலும் வீசுபவர் தானே!

    இவரின் எழுத்துக்கள் யாவும் அதே
    வேல் போல கூர்மையானது அன்றோ!!

    “வேல் இருக்க பயம் ஏன்”

    ”வேலும் மயிலும் துணை”

    என்றெல்லாம் சொல்வார்கள்.

    எனக்கு வேலூர் உஷா
    அவர்கள் வேல் ஆகவும்

    அவரின் அன்பான ஆறுதலான
    மெயில்கள் மயிலாகவும்

    துணை என்பேன், அதுவும் துணிந்து
    என் வாழ்க்கைத்துணையிடமே!

    >>>>>>>>>>>

    ReplyDelete
  8. அறிமுகம் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. தினமலரின் “பெண்கள் மலர்” தான் எனக்கு ‘என் தாய் வீடு’ என என்னிடம் சொல்லியுள்ளார்கள்.

    அதிலேயே நான் இவர்களைப்பற்றி
    முழுவதுமாக அறிந்துகொள்ள முடிந்தது.

    இவரை அறிவதற்கு முன்பாகவே நான்
    இவர்களின் தாய் வீடான “பெண்கள் மலர்” பற்றி, முற்றிலும் அறிந்துள்ளவன் என்பதனால் ........

    பெண்கள் மலரில் இவரின் பெயரும் படைப்புகளும் இடம்பெற வேண்டுமானால், இவர் என்ன
    சாதாரணமான எழுத்தாளராகவா இருக்க முடியும்?

    அதற்கு சாத்தியமே இல்லை என்பது எனக்குத் தெரியும்.

    இது உங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  10. திரு. உஷா அன்பரசு அவர்களைப்பற்றி நான்
    அறிந்த மேலும் ஒருசில தகவல்கள்:

    இவர்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் போதாமல் உள்ளது. அந்த அளவுக்கு BUSY யோ BUSY யாக உள்ளவர்கள்.

    குடும்பம், அலுவலகம், எழுத்துலகம், பத்திரிகை உலகம், தன்னுடைய வளைத்தளம், பிறர் பதிவுகளை வாசித்தல் + கருத்துக்கூறுதல், சமூக நலப்பணிகளை மேற்கொள்வது
    என இவர் ஏராளமான வேலைகளை கவனிக்க வேண்டியதாக உள்ளது.

    இது தவிர இவரின் நட்பு வட்டம் மிகப்பெரியது.

    இவரை நேரில் நாடி வரும் தோழிகள் கூட்டமும், அலைபேசியில் அழைக்கும் சினேகிதிகளும் மிக அதிகம்.

    இவரிடம் தலைமைப்பண்புகள் [Leadership Qualities]
    நிறைந்து உள்ளது.


    >>>>>>>>>

    ReplyDelete
  11. நல்ல ஆரம்பம் தொடருங்கள் பெரியோர்களின் ஆசியும் பரிந்துரையும் இருக்கும்போது கவலை ஏன்? வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நான் திருச்சியிலேயே இருந்தும், திருச்சியிலேயே இருக்கும்
    திருமதி லலிதா சரவணன் என்ற ஓர் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளரை நேரில் சந்திக்கவோ தொலைபேசியில்
    தொடர்பு கொள்ளவோ முடியவில்லையே என நான்
    ஏங்கித்தவித்த நாட்கள் ஏராளம்.

    அந்த திருமதி லலிதா சரவணன் என்பவர் அடிக்கடி “பெண்கள் மலர்” பத்திரிகையில் எழுதுபவர்.

    சமீபத்தில் தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றவரும் கூட.

    வாரமலரில் வெளியிடபட்ட அந்த பரிசுபெற்ற கதை என்னை மிகவும் பாதித்ததோர் மிகச்சிறந்த கதை.

    அது ஓர் கற்பனைக்கதை என என்னால் நினைக்கவே
    முடியவில்லை.

    என் சொந்தக்கதையையும், என் இன்றைய சொந்த உணர்வுகளையும் சேர்த்து வ்டித்து ஓர் அழகான
    சொற்சித்திரமாக செதுக்கிக்கொடுத்துள்ளார்கள்.

    நான் அந்தக்கதையினை ரஸித்துப் படித்ததோடு மட்டுமல்லாமல், என் மனைவிக்கும் ஒருமுறை
    படித்துக்காட்டி, கண்கலங்கிப்போனேன்.

    இந்த நம் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு, இந்தத் திருமதி லலிதா சண்முகம் என்பவர் தாய் போலவாம்.

    பெண்கள் மலர் மூலமும், அடுத்தடுத்த வீடுகளில் வசித்த முறையிலும் ஒருவருக்கொருவர் மிகவும் பழக்கமாம்.

    இதை என்னிடம் திருமதி உஷா அன்பரசு அவர்கள் தெரிவித்துவிட்டு
    திருமதி லலிதா சண்முகம் அவர்களின் தொலைபேசி
    எண்ணையும் எனக்குக்கொடுத்து பேசச்சொல்லி உதவினார்.

    அன்று நான் அடைந்த மகிழ்ச்சியினை வார்த்தைகளில் என்னால் எடுத்துரைக்க முடியவில்லை.

    மிகவும் சந்தோஷமாக இருந்தது,
    எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தான்.

    முன்பின் பழக்கம் ஏதும் இல்லாமல்,
    ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியாமல். எங்கெங்கோ இருக்கும் நாம் நம் எழுத்துக்களால் மட்டுமே
    ஒருவருக்கொருவர் நண்பர்களாகி உரையாடிமகிழ்வதில் எவ்வளவு ஓர் இன்பம் உள்ளது என்பதனை
    நான் அன்று மிகவும் உணர்ந்தேன்.

    என்னைப்போலவே திருமதி லலிதா சண்முகம் அவர்களும் .....

    திருமதி உஷா அன்பரசு அவர்களும் உணர்ந்து கொண்டார்கள்.

    இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு மீண்டும் பதிவு செய்துகொள்கிறேன்.


    >>>>>>>>

    ReplyDelete
  13. இந்த நம் திருமதி உஷா அன்பரசு அவர்களின் தலைமைப்பண்புகளை தாங்கள் அறிய வேண்டுமா?

    இதோ ஓர் உதாரணம் :

    ooooooooooooooooo

    சென்ற ஆண்டு நம்பிக்கை இல்லம் சென்றது போல, இந்த ஆண்டும் வேலூர் தோழிகள் ஓ.ஆர்.டி. என்ற பெண்கள், முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்போகிறார்களாம்.

    நிறைய போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    நம் பெண்கள் மலர் சார்பாக நீங்களும் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் வேலூர் உஷா அன்பரசு.

    உஷா அன்பரசு தலைமையில் வேலூர் தோழிகள் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள்.

    மற்ற ஊர் தோழிகள் என்ன செய்யப்போகிறீர்கள்?

    தோழமையுடன்,

    ஸ்ரீ

    [பெண்கள் மலர் ஆசிரியர்]

    oooooooooooooooooo

    [சமீபத்திய 22.12.2012 தேதியிட்ட பெண்கள் மலரில் அதுவும் முதல் பக்கத்திலேயே ஆசிரியர் ஸ்ரீ அவர்களால் தன் தலையங்கத்தில் எழுதியுள்ள வாசகம் தான் நான் மேலே சொல்லியுள்ளது]

    >>>>>>>>>>

    ReplyDelete
  14. இன்றைய, திருமதி உஷா அன்பரசு அவர்களின் வலைச்சரப்பதிவினை இனிமேல் தான், நான் முழுவதுமாகப் படிக்கப் போகிறேன்.

    படித்து விட்டு மீண்டும் கருத்தளிக்க வருவேன். ஜாக்கிரதை ;)))))

    // இப்போது இடைவேளை //


    அன்புடன்
    VGK

    ReplyDelete
  15. பாராட்டுவதில் தாரளமான மனம் கொண்டவர் வை.கோ சார். மிக்க நன்றி!

    ReplyDelete
  16. மிக்க நன்றி! தொடந்து நெறிப்படுத்துங்கள்!

    ReplyDelete
  17. மற்றவர்களின் வாழ்த்தோடு என் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சகோதரி..

    ReplyDelete
  18. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. மிக்க நன்றி மதுமதி சார்! தொடர்ந்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்!

    ReplyDelete
  20. மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே! தொடர்ந்து கருத்துக்களை கூறுங்கள்.

    ReplyDelete
  21. சேக்கனா நிஜாம் அவர்களே தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி! தொடர்ந்து கருத்துக்களை கூறுங்கள்.

    ReplyDelete
  22. லக்ஷ்மி அவர்களுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து கருத்துக்களை கூறுங்கள்!

    ReplyDelete
  23. அசத்தலான துவக்கம்...

    வெற்றிகரமாக முடிக்க என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. ஆரம்பமே அமர்க்களம் ... தொடந்து கலக்குங்கள் தோழி ..

    ReplyDelete
  25. வணக்கம்
    திருமதி,உஷா அன்பரசு

    இன்று வலைச்சர பொறுப்பாசிரியராக கடமையாற்றுவதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது 1 வார காலமும் நல்ல வலைச்சர படைப்புகளை தரவேற்றம் செய்து பயன்னுள்ள நாளாக அமைய எனது வாழ்த்துக்கள்

    இன்று ஆரம்ப அறிமுகமே நன்றாக உள்ளது படிக்க நன்றாக உள்ளது அத்தோடு தமிழ் இனத்தின் விடிவுக்காக உழைத்த மகான்களின் நினைவு நாட்களையும் நினைவுபடுத்தி வைத்தீர்கள்

    இன்று தொகுக்கப்பட்ட தொகுப்புக்கள் அனைத்தும் அருமை, தொடருகிறேன் பதிவுகளை,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. அமர்க்களமான அறிமுகத்துடன், திரு வைகோ அவர்களின் ஆசியுடன் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    வெற்றிகரமான வாரமாக அமையட்டும்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. அன்பின் உஷா அன்பரசன் - இப்பதிவு இருமுறை பிரசுரமாகி இருக்கிறதென நினைக்கிறேன். சரி பார்த்து விட்டு ஒன்றினை நீக்கவும். மற்றொன்றில் லேபிள் இடவும் - ( விதிமுறைகளை மீண்டும் ஒரு முறை படிக்கவும் ) -

    இந்த நாள் என்ற தலைப்பினில் எழுதிய பத்திகள விதிமுறைகளுக்கு முரணானவை - ஆகவே அடுத்த பதிவுகளில் எல்லாம் விதி முறைகளைப் படித்து அதன் படி எழுதவும்.

    ந்ல்லதொரு சுய அறிமுகம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. //நான் வலைப்பூவிற்கான விதையை போட்டு அது இப்போதுதான் துளிர்த்து 10 மாதமாகியிருக்கிறது. //

    தாங்கள் போட்ட விதை மிகவும் வீரியமானது.

    அதனால் தான்
    பத்தே மாதங்களில்

    அழகாக
    அதிர்ஷ்டமாக
    அறிவாளியாக
    ஆரோக்யமாக

    வலையுலகுக்கு ஓர் குழந்தையாக "உஷா" என்ற திருநாமத்துடன் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

    >>>>>>>>>

    ReplyDelete
  29. //நான் இன்று ஒரு மாணவியாக வலைச்சரத்தில் ஒரு வாரம் வரை ஆசிரியர் பொறுப்பை பார்த்து கொள்ள போகிறேன்.//

    கற்றது=
    கைமண் அளவு.

    கல்லாதது=
    உலகளவு மைனஸ் கைமண் அளவு

    அதனால் நாம் அனைவருமே என்றுமே எப்போதுமே மாணவ,மாணவிகள்
    மட்டுமே தான்.

    தாங்கள் தங்களை மாணவியாக நினைத்து பொறுப் பேற்றுக் கொண்டாலும், நாங்கள் உங்களை இந்த வார வலைச்சர ஆசிரியராகவே கண்டு மகிழ்வோம்.

    ஆனால், யாரையும் குட்டாமல் திட்டாமல் பெஞ்சுமேல் ஏற்றாமல் நல்ல டீச்சர் என்று பெயர் வாங்கோணும். சொல்லிட்டேன். ;))))

    >>>>>>>>

    ReplyDelete
  30. //இந்த மாணவியிடம் பொறுப்பை ஒப்படைக்க தேர்வு செய்து பரிந்துரைத்த
    திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும்//

    திறமைசாலிகளைத் தேடி வாய்ப்புகள் அதுவாகவே வந்துசேரும் என்பதில் ஐயம் வேண்டாம்.

    மிகவும் திறமைசாலியான உங்களைத்தேடி இந்த வாய்ப்பும் அதுவாகவே தான் வந்துள்ளது.

    தேர்தலில் மக்களின் பேராதரவு எக்கச்சக்கமாக இருந்து பெரும்பான்மை இடங்களைப்பெற்று மாபெரும் வெற்றிகளைப் பெற்று விட்டாலும் கூட, ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கிடும் போது, மற்றொருவர் முன்மொழிந்து வழிமொழிவது என்பது, காலம் காலமாக உள்ள ஓர் மரபு.

    அது வெறும் சம்பிரதாயச் சடங்கு மட்டுமே.

    அது போலத்தான் இந்த என்னுடைய பரிந்துரையும் கூட.

    என் பரிந்துரையில் தாங்கள் இருபதாவது வலைச்சர ஆசிரியர் என்பதை நினைக்கும்போது எனக்கும் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது.

    பூவோடு சேர்ந்த நார் போல என்னையும் வலைச்சரத்தில் இங்கு குறிப்பிட்டு மணக்கச்செய்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    மற்ற எல்லாப்புகழும் நம் மதிப்புக்குரிய உயர்திரு.
    சீனா ஐயா அவர்களையே
    சேரும்.

    >>>>>>>>

    ReplyDelete
  31. உங்களின் அன்புத்தோழி வேலூர் ஆங்கில ஆசிரியை Ms. விஜயலட்சுமி அவர்களின் கடிதத்தாலும்,

    பாக்யா வார இதழின் திரு. கண்ணன் அவர்களின் பாராட்டு உரையினாலும்

    தங்களைப்பற்றி மேலும் பல தகவல்களை எங்களால் இங்கு
    அறிய முடிந்துள்ளது.

    அவர்கள் இருவருக்கும் என்
    அன்பான பாராட்டுக்கள்+
    வாழ்த்துகள்+ நன்றிகளை
    இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

    //உஷா அன்பரசு, தன் எழுத்தில் எவர் சாயலும் குளிர்காயக் கூடாது என்று நினைப்பவர்.//

    நானும் இதே போல நினைப்பவன் தான். அதனாலேயே இதுவரை எந்த பிரபலங்களின் எழுத்துக்களையும் நானும் தேடிப்போய் படித்தது கிடையாது.

    நம் ஸ்டைலில், ந்மக்கு மனதில் தோன்றுவதை நாம் சுதந்திரமாக எழுத வேண்டும் என்று தான் நான் எப்போதுமே நினைப்பேன்.

    பத்திரிகைகள் என் படைப்புகளை EDIT செய்தாலே எனக்குப் பிடிப்பதில்லை.

    அதனாலேயே நான் இப்போது
    [01.01.2011 முதல்] என் எந்தப்படைப்புகளையும், எந்தப் பத்திரிகைகளுக்கும் அனுப்புவதும் இல்லை.

    >>>>>>>>>

    ReplyDelete
  32. தங்களின் சுய அறிமுகமும் இன்றைய வலைச்சரமும் வெகு அழகாகத் தங்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

    தங்களின் சமீபத்திய படைப்புகள் பலவற்றை நான் படித்து மகிழ்ந்து கருத்தும் கூறியுள்ளேன்.

    விட்டுப்போன பதிவுகள் நிறையத்தான் இருக்கக்கூடும்.

    எனக்கு நேரம் கிடைக்கும் போது அவைகளை ஒவ்வொன்றாகப் படித்து கருத்து அளிப்பேன்.

    இன்று நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பதிவுகளில் படிக்காமல் விட்டுப்போய் உள்ளவற்றை முதலில் படிக்க ஆரம்பிப்பேன்.

    தங்களின் வலைச்சரப்பணி இந்த வாரம் முழுவதும் பிரகாசித்து ஜொலிக்க என் அன்பான ஆசிகள்+ வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    VGK

    -oOo-

    ReplyDelete
  33. //Ranjani Narayanan said...
    அமர்க்களமான அறிமுகத்துடன், திரு வைகோ அவர்களின் ஆசியுடன் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    வெற்றிகரமான வாரமாக அமையட்டும்.
    வாழ்த்துக்கள்!//

    வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம்.
    வணக்கம். தங்களின் கருத்து என்னை எங்கோ கொண்டுபோய் விட்டது!

    [வேறு எங்கே?

    பெங்களூர் விஜயநகர் ”இந்திரப்ரஸ்தா - மாடி - ஏ.ஸி - ரெஸ்டாரண்டுக்குத்தான். ;))))))

    ஞாபகம் இருக்கட்டும். மறந்துடாதீங்கோ OK யா?]

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  34. ஒரு நல்ல ஆசிரியரின் துவக்கமாகவே அமைந்துள்ளது. என்னையும் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்
    திரு,கோபாலகிருஷ்ணன் அவர்களின் எண்ணம் கவர்ந்த எழுத்தாள்ராக நீங்கள் விளங்குவதற்கு மிக்க மகிழ்ச்சி. அற்புதமான படைப்பாளரான அவரின் நல்லாசியுடன் பணியைத் தொடங்குகிறீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. Hearty Congratulations and My Best Wishes
    svsaibaba.blogspot.com
    svsbaba.blogspot.com

    ReplyDelete
  36. //வலைப்பூவிற்கான விதையை இட்டு துளிர்த்த போது அது வளர ஆலோசனைகளை சொல்லி நீர் ஊற்றிய சகோதரர் டி.என்.முரளிதரன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.//

    சகோதரர் திரு. டி.என்.முரளிதரன் அவர்களைத் தாங்கள் மறக்காமல் நன்றி கூறியிருப்பது அழகு.

    கணினி தொழில்நுட்ப அறிவு அதிகம் இல்லாமல் இருக்கும் எனக்கு இதுபோல அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லவும், சில புரியாத விஷயங்களை எனக்குப் புரியும் விதமாக எடுத்துரைக்கவும் நண்பர்கள் இல்லாமல் நான் மிகவும் சிரமப்பட்டுள்ளேன்; இப்போதும் கூட சிரமப்பட்டே வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    நம் வலையுலக பதிவர்களான திரு. ரிஷபன், திருமதி ஆச்சி மேடம், திரு. கே.ஆர்.பி. செந்தில், கற்றலும் கேட்டலும் ராஜி மேடம், திரு. வெங்கட் நாகராஜ், திருமதி இமா போன்றவர்கள் எனக்கு பல சிக்கலான நேரங்களில் பலவிதத்தில், தாங்களாகவே முன்வந்து உதவியுள்ளார்கள் என்பதை என்றும் என்னால் மறக்க முடியாது.

    தங்களுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவியுள்ள சகோதரர் திரு. டி.என். முரளிதரன் அவர்களுக்கு நானும் என் நன்றியினைக்கூறிக் கொள்கிறேன்.

    VGK

    ReplyDelete
  37. சிறப்பான சுய அறிமுகப் பதிவு.
    சக பதிவர் பதிவுகளின் அறிமுகங்களை அறிய ஆவல்.

    ReplyDelete
  38. //T.N.MURALIDHARAN said...
    ஒரு நல்ல ஆசிரியரின் துவக்கமாகவே அமைந்துள்ளது. என்னையும் குறிப்பிட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

    திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் எண்ணம் கவர்ந்த எழுத்தாளராக நீங்கள் விளங்குவதற்கு மிக்க மகிழ்ச்சி.

    அற்புதமான படைப்பாளரான அவரின் நல்லாசியுடன் பணியைத் தொடங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்//

    ஐயா, வாருங்கள், வணக்கம்.

    நம் எண்ணம் கவர்ந்த எழுத்தாளராக ஒருவர் அமைய நாமும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே, என் எண்ணமாக இங்கு அழுத்திச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  39. வணக்கம்!
    திருமதி உஷா அன்பரசு அவர்களே!

    நான் வலை உலகத்திருக்கு புதியவன், கடந்த மூன்று மாதமாகதான் எழுதிவருகிறேன், அதற்கு முன் வலைப்பதிவுகள் பக்கம் வந்ததே இல்லை என்றுகூட சொல்லலாம். நான் வந்த கொஞ்சநாட்களில் பலருடைய வலைப்பதிவு பக்கம் சென்று அவர்களின் படைப்புகளை படித்திருக்கிறேன். அதுபோல்தான் உங்களுடைய வலைப்பதிவையும் படித்தேன் உங்களுடைய எழுத்துகள் தனி சிறப்பை பெற்றிருந்தது, பத்துமாதமாக மட்டும் எழுதும் ஒருவரால் இப்படி எழுதமுடியாது, இவங்க மிகப்பெரிய எழுத்தாளாராகதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஒரு எழுத்துநடை ஒவ்வொரு பதிவிலும் இருக்கும். சொல்லவேண்டியதை மிக சிறப்பாகவும், சுருக்கமாகவும் சொல்லிருப்பிங்க, உங்களிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தேன்.

    இப்போது உங்களுடைய அறிமுகம் படித்ததும் எனது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. எத்தினை எத்தினையோ பத்திரிகைகளில் எழுதிய அனுபவமிக்கவர், உங்களுக்கு கிடைத்த இந்த ஆசிரியர் பொறுப்பு மிகவும் தாமதமாக கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

    அறிமுகம் அசத்தல், உங்களை ஊக்குவித்தவர்களையும் எழுத வைத்தவர்களையும், தோழியையும், குறிப்பிட்டு சொல்லியது மிக மிக அருமை.

    இன்றையநாள் என்று எம்ஜிஆர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் நினைவுக்கு கொண்டுவந்தது அழகு!

    தொடருங்கள்....

    ReplyDelete
  40. //ஐயா, வாருங்கள், வணக்கம்.
    நம் எண்ணம் கவர்ந்த எழுத்தாளராக ஒருவர் அமைய நாமும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே, என் எண்ணமாக இங்கு அழுத்திச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
    அன்புடன்
    VGK //
    மதிப்பிற்குரிய VGK ஐயா, அவர்களுக்கு,
    ஒரு வேண்டுகோள் என்னை ஐயா! என்றழைக்க வேண்டாம்.அதற்குரிய தகுதியும் வயதும் இல்லை எனக்கு, நீங்கள் சொல்வதுபோல் உஷா நம்மைப் போன்ற பலரையும் தன் எழுத்தால் கவர்ந்தவர் என்பதில் ஐயமில்லை. யதேச்சையாக என் பதிவுகளைப் பார்த்து விட்டு தன பதிவுகளை தமிழ்மணத்தில் திரட்டிகளில் இணைப்பது எப்படி என்று கேட்டார்.அவரது வலைப பக்கம் சென்று பார்த்தபோது ஆச்சர்யப்பட்டேன்.100க்கும் மேல் நல்ல நல்ல பதிவுகள் இட்டிருந்த அவர் பதிவுலகிற்கு தெரியாமல் போனது ஆச்சர்யமாய் இருந்தது,
    தமிழ் மணத்தில் இணைத்தல், வலைப்பக்க வடிவமைப்பில் சில மாறுதல்கள், கேட்ஜெட்டுகளை இணைத்தல் போன்றவற்றை செய்து
    என்னால் முடிந்த சிறு உதவிகளை செய்தேன்.இப்போது அவர் பரவலாக அறியப்பட்டுள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.கேட்டுக் கொண்டதின் பேரில் முகம் தெரிந்த/தெரியாத வேறு சில பதிவுலக நண்பர்களுக்கும் உதவி இருக்கிறேன்.நான் தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவன் அல்ல. என்றாலும் எனக்குத் தெரிந்ததைக் கொண்டு உதவி செய்யக் காத்திருக்கிறேன். தங்களுக்கும் ஏதேனும் உதவ முடியும் என்றால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன்.
    என் வலைப் பதிவில் மின்னஞ்சல் முகவரி உள்ளது. தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.நானும் தங்கள் மனம் கவர்ந்த பதிவர்தான்.எனக்கு தாங்கள் அளித்த விருதுக்கு நன்றி உடையவனாவேன்.
    டி.என்.முரளிதரன்

    ReplyDelete
  41. அழகான ஆரம்பம் உஷா அன்பரசு.. உங்களின் தளத்தின் சமீப பதிவுகளை படித்துள்ள நான் உங்களுக்கு பிடித்தமான பதிவுகளுக்குள் சுற்றுலா வந்துவிட்டேன் வாழ்த்துக்கள் உஷா அன்பரசு...

    ReplyDelete
  42. T.N.MURALIDHARAN said... to VGK

    //தங்களுக்கும் ஏதேனும் உதவ முடியும் என்றால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன்.//

    தங்களின் அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    //என் வலைப் பதிவில் மின்னஞ்சல் முகவரி உள்ளது. தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.//

    எனக்கு ஏதாவது சந்தேகங்கள் + என்னால் தீர்க்கமுடியாத சிக்கல்கள் என்றால் உங்களை நிச்சயமாகத் தொடர்பு கொள்கிறேன். நன்றி.

    //நானும் தங்கள் மனம் கவர்ந்த பதிவர்தான். எனக்கு தாங்கள் அளித்த விருதுக்கு நன்றி உடையவனாவேன்.
    டி.என்.முரளிதரன்//

    அநேகமாக எல்லோருமே என் மனம் கவர்ந்த பதிவர்களாகவே இருக்கின்றீர்கள் என்பதே உண்மை.

    என் சொந்தப்பிரச்சனைகள், என் குடும்பப்பிரச்சனைகள், என் உடல்நலம், என்னைச்சார்ந்தவர்களின் உடல் நலம், என் கணினியின் உடல் நலம், அவ்வப்போது ஏற்பட்டு வரும் மின்தடைகள், நெட் கிடைக்காமல் போகும் சாத்தியக்கூறுகள் போன்றவற்றால், நானும் அதிகமாக இப்போதெல்லாம் பதிவுகள் தருவது இல்லை.

    பிறர் பதிவுகளுக்கு ஓடிஓடிச்சென்று முன்புபோல கருத்துக்கூறவும் என்னால் முடிவதில்லை.

    டேஷ்போர்டு பக்கமும் நான் செல்வது இல்லை.

    மெயில் மூலம் அழைக்கும் ஒருசில பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே, அதுவும் மேற்படி கூறியுள்ள எல்லாக் காரணிகளும் என்னுடன் ஒத்துழைத்தால் மட்டுமே சென்று கருத்துக்கூறி வருகிறேன்.

    அதனால் தங்கள் பதிவுகள் பக்கம் நான் வராமல் இருந்திருக்கலாம். தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.

    நீங்களும் என் மனம் கவர்ந்த பதிவர் தான். புரிதலுக்கு நன்றிகள்.

    தானாகவே முன்வந்து உதவி செய்யத் துடிக்கும் உங்களை நான் மிக உயர்வாகவே நினைக்கிறேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  43. அருமையான அறிமுகம்
    இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியும்
    அருமையாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் உஷாஅன்பரசு.

    ReplyDelete
  45. வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து ஆலோசனை, கருத்துக்களை கூறி வகுப்பை சிறப்பாக்க இந்த மாணவிக்கு வழி காட்டுங்கள்! மீண்டும் மிக்க நன்றி!

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் திருமதி உஷா அன்பரசு.

    ReplyDelete
  47. JAYANTHI RAMANI said...
    வாழ்த்துக்கள் திருமதி உஷா அன்பரசு.//

    தங்களுக்கு ஸ்பெஷல் அழைப்பிதழ் கொடுத்து இங்கு இந்த ஒரு வாரம் நடைபெறும் கல்யாணத்திற்கு கட்டாயம் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்தது, நான் அல்லவா!

    அதனால் வாங்கோ, வாங்கோ, வாங்கோ என சந்தனம், சர்க்கரை கல்கண்டு கொடுத்து, பன்னீர் தெளித்து அழைக்க வேண்டியது என் கடமை.

    வாருங்கள் திருமதி ஜயந்தி ரமணி மேடம். தினமும் 30/12/2012 வரை அவஸ்யமாக இங்கு வாருங்கோ.

    இதனால் உங்களுக்கு பல நல்ல பதிவர்களின் அறிமுகங்கள் கிடைக்கலாம்.

    அன்புடன்
    VGK

    [வலைச்சர ஆசிரியர் திருமதி
    உஷா அன்பரசு சார்பாகவும் என் சார்பாகவும் இந்த என் ஸ்பெஷல் அழைப்பு.]

    ReplyDelete
  48. திருமதி. விஜயலட்சுமி

    (ஆங்கில ஆசிரியை, வேலூர்)

    அவர்களே,

    தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

    திருமதி உஷா அன்பரசு அவர்களைப்பற்றி தாங்கள் எழுதிய வாழ்த்துரை மிகச்சிறப்பாக உள்ளது.

    மீண்டும் ஒருமுறை இன்று படித்து மகிழ்ந்தேன்.

    மிகச்சரியாகவே தங்கள் தோழியைப்பற்றி எடை போட்டு வைத்துள்ளீர்கள்.

    உங்களின் வாழ்த்துரையில் உள்ள இந்த கீழ்க்கண்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

    //சமூக அக்கறையை வார்த்தைகளிலும்,
    பேனா முனையிலும்
    மட்டும் காட்டாமல்

    "பிரார்த்திக்கும் உதடுகளை விட
    உதவிக்கு நீளும் கரங்களே உயர்ந்தவை "

    எனும் வரிகளுக்கு உதாரணமாய் வாழ்பவர்.//

    மிக்க நன்றி,

    அன்புடன்,
    வை. கோபாலகிருஷ்ணன், திருச்சி.

    ReplyDelete