அறிமுகப்
பதிவிற்கு வாழ்த்து சொல்லியுள்ள அத்தனை நல்லிதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
வைட்டமின் டானிக் பருகிய உற்சாகம் கிடைத்துள்ளது.
தீபாவளி
முடிந்து விட்டது. வண்ணமயமாய் வாண வேடிக்கைகளும் முடிந்து விட்டது. வெடித்துச்
சிதறிய பட்டாசுகளின் துகள்கள் போல பட்டாசுத் தொழிலாளர்கள் சிதறுண்ட போது பதறிய
நெஞ்சங்கள் கூட பட்டாசுகளும் புஸ்வாணங்களும் எழுப்பிய ஒளியிலும் ஒலியும் அந்த
சோகத்தை மறந்து விட்டன. போனவர்கள் வாழ்வே நிம்மதி, இருப்பவர்களின் துயரம் இன்னும்
மோசம் என்பதை நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் அன்பிற்குரிய எழுத்தாளர் தோழர்
ச.தமிழ்ச்செல்வன் தமிழ்வீதியில் நான் சிரித்தால் தீபாவளி என்று எழுதிய நான் சிரித்தால் தீபாவளி என்ற இந்த பதிவை அவசியம்
படியுங்கள். வலைப்பக்கத்தில் ஏன் அதிகம் எழுதுவதில்லை என்று சண்டையும் போடுங்கள்.
அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிய அவரது வழியெங்கும் புத்தகங்கள் பட்டியல் நல்லதொரு வழிகாட்டி.
நான்
வலைப்பக்கம் எழுதத் தொடங்கிய போது தவறாமல் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய
பெரியவர் என்.ரத்னவேல் அவர்களின் வலைப்பக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் பல சுவாரஸ்யமான பதிவுகளைக் கொண்டது. நடைப் பயிற்சி பற்றிய அவர்களின் இந்த பதிவு
பயனுள்ள ஒன்று.
நான் தவறாது
படித்து வந்த இன்னொரு வலைப்பக்கம் தீராத பக்கங்கள் தீராத பக்கங்கள். என்னை அறிமுகம் செய்து எனது வலைப்பக்கத்திற்கான
போக்குவரத்தை அதிகப்படுத்திய தோழர் மாதவராஜ் இப்போது என்னவோ எழுதுவதை மிகவும்
குறைத்துக் கொண்டு விட்டார். வாராது வந்த மாமணியாய் கடைசியாய் வந்த இந்த நூல்
அறிமுகம் நூல் அறிமுகம், புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது.
பத்திரிக்கை
ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் சொல்வார்.
பள்ளி
ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் கேட்பார்.
பதில் சொல்வதை
விட கேள்வி கேட்பது எப்போதுமே எளிதானது.
ஆகவே நான் கேள்விகள்தான் கேட்கப் போகிறேன்.
மும்பை
தீவிரவாதத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது வீர மரணம் அடைந்த
ஹேமந்த் கர்கரேவையும் யாரும் மறந்திருக்க முடியாது.
ஹேமந்த்
கர்கரே எல்.ஐ.சி நிறுவனத்தில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிஸி
எடுத்திருந்தார். இன்னொரு தனியார் கம்பெனியிலும் அதே தொகைக்கு பாலிஸி
எடுத்திருந்தார்.
அவர் இறந்த
மூன்றாம் நாள் எல்.ஐ.சி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று அந்த பாலிஸிக்கான
கேட்புரிமத் தொகைக்கான காசோலையை கொடுத்து விட்டு வந்தனர். இது அதிசயமான செய்தி
ஒன்றுமில்லை. எல்.ஐ.சி யின் இயல்பான செயல்பாடுதான். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு
வெடிமருந்து தொழிற்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு முப்பது தொழிலாளர்கள் இறந்த போது
இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அவர்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்தோம்.
ஆனால் அந்த
தனியார் நிறுவனம் வெளிநாட்டுக் கம்பெனியோடு கூட்டு வைத்துள்ள ஒரு நிறுவனம் ,ஆறு
மாதங்கள் இழுக்கடித்து கடைசியில் பணம் கிடையாது என்று கை விரித்து விட்டார்கள்.
அவர்கள் நிராகரித்ததற்கு என்ன காரணம் தெரியுமா?
உயிருக்கு
ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கர்கரே, தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷனில்
ஈடுபட்டார். எனவே அவருடைய பாலிசிக்கான பணம் கிடையாது என்று மறுத்து விட்டார்கள்.
இப்போது என்
கேள்விகள்
அந்த தனியார்
நிறுவனத்தை என்ன செய்யலாம்?
இது போன்ற
தனியார் கம்பெனிகளில் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை இன்னும் அதிகமாக்க
மத்தியரசு முயற்சிக்கிறதே, இது நியாயமா?
சரி இனி
நீங்கள் யாரிடம் பாலிஸி எடுப்பீர்கள்? எல்.ஐ.சி யிடமா இல்லை சால்ஜாப்பு சொல்லி
நிராகரிக்கும் தனியார் கம்பெனிகளிடமா?
பதிவர் அறிமுகம் ஊடே உங்கள் பணியையும் செவ்வனே செய்துவிட்டீர்கள்! புத்திசாலிதான் நீங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறந்த அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதனியார் கம்பெனிகளில் பாலிசி எடுப்பவர்களிடம் தான் தவறு உள்ளது...
வணக்கம்
ReplyDeleteஇராமன்(அண்ணா)
இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் (அண்ணா) இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கர்கரே, தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷனில் ஈடுபட்டார். எனவே அவருடைய பாலிசிக்கான பணம் கிடையாது என்று மறுத்து விட்டார்கள்.
ReplyDeleteஇப்போது என் கேள்விகள்
அந்த தனியார் நிறுவனத்தை என்ன செய்யலாம்?//
சாதாரணமாக, இன்சூரன்சு ஆயுள் பாலிசி நிறுவனம் ஒருவருடைய அன்றாடைய தொழில் அதன் தன்மை இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் பாலிசி வழங்குகிறது. தொழில் ஆபத்தானதாக இருந்தால் அதற்கான உபரி பிரிமியம் வசூலிக்கப்படும். எல். ஐ.சி. இது போலத்தான் பாலிசி வழ்ங்குகிறது. மற்ற கம்பெனிகளும் இதுபோன்ற விதிகளைத்தான் வைத்திருக்கின்றன.
திரு ஹேமந்த அவர்கள் தனது ப்ரொபோசலில் தனது தொழில் பற்றிய விவரங்களை கண்டிப்பாக அளித்திருப்பார் என்றே நம்பவேண்டும். அவர் தனது தொழிலையே குறிப்பிடாது இருப்பின் மட்டுமே உரிமைத் தொகையை நிராகரிப்பது சாத்தியம்.
அவர் தன்னைப்பற்றிய தகவலகளைச் சரிவர் சொல்லியிருக்கும் பட்சத்தில், நீங்கள் சொல்லும் காரணம் ஒப்புக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவர் தனது தொழில் ரீதியாக இந்த சூழ்னிலைகளை சந்திக்கத்தான் வேண்டும் என்பது பாலிசி எடுக்கும்பொழுதே தெரிந்த ஒன்றே.
அதை இப்பொழுது கம்பெனி காரணம் காட்டி உரிமைத்தொகையை தராது இருப்பது சரியல்ல. இந்த கம்பெனியின்
முடிவு அதுவே இருக்குமானால், முதற்கண் இன்சூரன்சு ஓம்புதுஸ்மான் என்னும் அமைப்புக்குச் சென்று முறையிட வேண்டும். அதற்குப்பின் நீதிமன்றங்களை அணுகலாம்.
எதுவும் காலக்கெடுவுக்கு முன்னதாக செயல்படுதல் தேவை.
சுப்பு ரத்தினம்.
(Retd VP,ZTC )
தப்பு நம்மகிட்ட தாங்க இருக்கு
ReplyDelete