வணக்கம் அன்பின் சக வலை உறவுகளே! நான் வலை உலகிற்கு வந்த நாளிலிருந்து ஆச்சர்யப்படுவது இந்த பெண் படைப்பாளிகளைக் கண்டு தான்! ஆணுக்கு சளைத்ததல்ல எங்களின் படைப்புகளும் என்று போட்டி போட்டிக்கொண்டு எழுதி வரும் இவர்களின் வலைத்தளம் சென்று கைக்குலுக்கி வாழ்த்துக்கள் சொல்லிட்டு வருவோம்!
1) பவித்ரா நந்தகுமார் - பவித்ரா நந்தா குமார்
கவிதைகள், கதைகள் என்று 2010லிருந்து தொடர்ந்து எழுதி வருகிறார். எழுத்தின் நடை தெளிவாக அனைவருக்கும் விளங்கும் படி இருப்பது இவரின் சிறப்பு.
மின் [சீரியல்] வெட்டு, ஆபத்து அரக்கன் என்ற இரண்டு கவிதைகளே போதும் இவரின் சமூக அக்கறைக்கான சான்று!
2) ப்ரியத்தோழி
மனதை தொடும் நிறைய கவிதைகளை இவரின் தளத்தில் காண முடிகிறது!
எந்த சமரசமும் இன்று சொல்ல வந்ததை அழுத்தமாய் பதிவு செய்து வருகிறார் !
3) ஒற்றைக்குயில் - கல்யாணி சுரேஷ்
இவரின் தலைப்பே ஒரு கவிதை போன்று தான் உள்ளது! பெருமழை போலில்லாமல் சிறு சாரலாகவே இவரின் படைப்புகள் இருக்கின்றன! அனைத்தும் தரமானதாக இருப்பது இவரின் படைப்புக்கான சான்று!
4) மணம் (மனம்) வீசும் - ஜெயந்தி இரமணி
அனைத்துமே கலந்து கட்டி எழுது வரும் இவரின் தளத்தில் இன்னும் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்! சற்று சிரமம் பாராமல் எழுதினால் நன்றாக இருக்கும்!
இவரின் கவிதைக் கிறுக்கல்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்!
5) அக்ஷ்ய பாத்ரம் - மணி மேகலா
2009 லிருந்து எழுதி வந்தாலும் இவரின் தளம் எனக்கு புதிது... சமையல், கட்டுரை என்று பல்சுவை சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறும் இவரின் பாங்கு கண்டு வியக்கிறேன்!
6) பூசலம்பு - ஸ்வர்ண ரேக்கா
"பெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. என் கண்கள் (பூசலம்பு) மூலமாக நான் காண்பவை இங்கே..." என்று கூறும் இவரின் தளத்தை நீங்களே ஒரு முறை சென்று ரசித்து வாருங்கள் அவ்வளவு இனிமை பொதிந்துள்ளன! என்ன இப்பொழுது இவர் எழுதுவதில்லை எழுதினால் நன்றாக இருக்கும்!
7) விண்முகில் - தமிழ் செல்வி
இவரின் படைப்புகளை விட இவரின் அனுபவ பகிர்வு தான் மனதை பிசைகிறது அவ்வளவும் ஈரம் கலந்த எழுத்து!
என்றென்றும் உன்னோடு என்ற தொடர்கதையோடு, இதய திருமகனே போன்று கவிதைகளும் எழுதும் இவரை தளம் சென்று வாழ்த்திவிட்டு வாருங்கள் தோழர்களே!
8) ஒரு பெண்ணின் பயணம் - சீத்தாம்மா
நினைவலைகள் என்ற நெடும் தொடரோடு வரலாறு, பல்சுவை என்று நிறைய எழுதி வருகிறார்! நிறைய நல்ல படைப்புகள் காணக்கிடைக்கின்றன!
9) இவள் கல்யாணி - கல்யாணி
அனைத்தும் கலந்த பல்சுவை பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார்! நிறைய பயனுள்ள குறிப்புகளையும் நமக்கு வழங்கி வருகிறார்!
10) இது பவியின் தளம் - பவி
இவர் நீண்ட நாட்களாக பல பயனுள்ள பதிவுகளை நாம் அறிய கொடுத்துக் கொண்டிருக்கிறார்! இதில் கற்றாழையின் மகிமையோ மகிமை பற்றி மிக தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
11) அரசி கவிதைகள்
அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...ஒரு கண்ணி, காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா..? என்ற இரு படைப்புகளும் இவரின் எழுத்திற்கு சான்று!
12) தமயந்தி - நிழல் வலை - தமயந்தி
கவிதை, கட்டுரை, கதை என்று இவரின் எழுத்துக்களால் இவரின் தளம் நிரம்பி வழிகிறது. நிறைய நல்ல படைப்புகள் இருக்கின்றன, நேரம் இருக்கையில் வாசித்து மகிழுங்கள்!
13) நினைவின் விளிம்பில்... - கவிநயா
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய், என்று இவரின் தள விளக்கமே சிறப்பாக இருக்கிறது!
14) தூரிகைச் சிதறல். - கவிக்காயத்ரி
கவிதை, சிந்தனை என்று சிறந்த படைப்புகளை தொடர்ந்து எழுதி வருகிறார்!
சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற ஒரு கவிதை போதும் இவரின் எழுத்தாளுமைக்கு ....
இவர்களை தவிர்த்து
அருணா செல்வம்
இவரின் படைப்புகளை விட இவரின் அனுபவ பகிர்வு தான் மனதை பிசைகிறது அவ்வளவும் ஈரம் கலந்த எழுத்து!
என்றென்றும் உன்னோடு என்ற தொடர்கதையோடு, இதய திருமகனே போன்று கவிதைகளும் எழுதும் இவரை தளம் சென்று வாழ்த்திவிட்டு வாருங்கள் தோழர்களே!
8) ஒரு பெண்ணின் பயணம் - சீத்தாம்மா
நினைவலைகள் என்ற நெடும் தொடரோடு வரலாறு, பல்சுவை என்று நிறைய எழுதி வருகிறார்! நிறைய நல்ல படைப்புகள் காணக்கிடைக்கின்றன!
9) இவள் கல்யாணி - கல்யாணி
அனைத்தும் கலந்த பல்சுவை பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார்! நிறைய பயனுள்ள குறிப்புகளையும் நமக்கு வழங்கி வருகிறார்!
10) இது பவியின் தளம் - பவி
இவர் நீண்ட நாட்களாக பல பயனுள்ள பதிவுகளை நாம் அறிய கொடுத்துக் கொண்டிருக்கிறார்! இதில் கற்றாழையின் மகிமையோ மகிமை பற்றி மிக தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
11) அரசி கவிதைகள்
அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல...ஒரு கண்ணி, காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா..? என்ற இரு படைப்புகளும் இவரின் எழுத்திற்கு சான்று!
12) தமயந்தி - நிழல் வலை - தமயந்தி
கவிதை, கட்டுரை, கதை என்று இவரின் எழுத்துக்களால் இவரின் தளம் நிரம்பி வழிகிறது. நிறைய நல்ல படைப்புகள் இருக்கின்றன, நேரம் இருக்கையில் வாசித்து மகிழுங்கள்!
13) நினைவின் விளிம்பில்... - கவிநயா
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய், என்று இவரின் தள விளக்கமே சிறப்பாக இருக்கிறது!
14) தூரிகைச் சிதறல். - கவிக்காயத்ரி
கவிதை, சிந்தனை என்று சிறந்த படைப்புகளை தொடர்ந்து எழுதி வருகிறார்!
சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற ஒரு கவிதை போதும் இவரின் எழுத்தாளுமைக்கு ....
இவர்களை தவிர்த்து
அருணா செல்வம்
சின்ன சின்ன சிதறல்கள் - அகிலா
பெண் என்னும் புதுமை கோவை சரளா
கீதமஞ்சரி
ஹேமா
தென்றல் சசிகலா
மாதேவி
நிகழ்காலம் எழில்
போன்ற படைப்பாளிகள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்! படைப்புகள் பெரும்பாலும் நமக்கு பரிச்சயம் என்பதால் தனியாக குறிப்பிடவில்லை!
வளர்ந்து வரும் உலகில் இது போன்ற படைப்பாளர்களின் பங்கும் அவசியம் என்பதால் தொடர்ந்து இவர்களை எழுதுமாறு உங்களோடு சேர்ந்து நானும் கேட்டுக்கொண்டு நகர்கிறேன்! மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு பதிவில்!
நெஞ்சு நிறை நன்றிகளுடன்
அரசன்
உ. நா. குடிக்காடு
அறியாத தளங்கள் நான்கு... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி... உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...
முடிவில் உள்ள (14) தலைப்பின் (தளத்தின்) இணைப்பு மட்டும் சரி செய்யவும்... நன்றி...
ReplyDeleteஅருமையான தோழிகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி... வாசிக்கப்போகிறேன் அவர்களையும் ....
ReplyDeleteபெரும்பாலும் நான் அறிந்திராத தளங்கள் சகோதரரே...
ReplyDeleteநிச்சயம் சென்று பார்க்கிறேன்...
உங்களின் பதிவின் மூலம் நிறைய பதிவரகளை
தெரிந்துகொள்ள முடிகிறது...
தொடரட்டும் உங்களது சிறப்பான வலைச்சரப்பணி...
வாழ்த்துக்கள்...
நிறைய புதுமுகங்கள். . நன்றி. . .
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteமின்வெட்டால் அனைத்து தளங்களுக்கும் செல்ல முடியவில்லை... புதிய தளங்களுக்கு மட்டும் சென்று வந்தேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteபுதிது புதிதாய இத்தனை தள அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி அன்பரே!
அறியாத தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அரசன் இத் தளங்கள் சென்று படிக்கிறேன் தங்களின் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் அரசன்.
ReplyDeleteதொடருங்கள். க்கும்...
(இந்த “க்கும்“ எதற்காக என்பதைப் பற்றி பிறகு அறிவீர்கள்.)
வணக்கம்
ReplyDeleteசே,அரசன்(அண்ணா)
இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புதியபுதிய அத்தியாயங்களை படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் இதை யாரும் மறக்கவும் மறுக்கவும் முடியாது, அந்தவகையில் இன்று அறிமுகமான வலைப்பூக்கள் எல்லாம் புதியவை எனக்கு ,அழகான வலைப்பூக்களை தேடிஎடுத்து வலைப்பூ கதம்ப அரங்கில் அறிமுகம் செய்துவைத்த சே,அரசன்(அண்ணா) அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்அத்தோடு அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவருக்கும் வாழ்த்துகள், அரசன் அவர்களுக்கு நன்றிகள்!
ReplyDeleteசிலதளங்கள் புதியவை கண்டுகொள்வேன். நன்றி.
ReplyDeleteமிகவும் நன்றி, விண்முகில் தளம் குறித்து கருத்து பகிர்ந்தமைக்கும் பிற தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கும்.
ReplyDeleteஇன்றைய அறிமுகத்தில் நிறைய பேர் நான் அறியாதவர்கள்! சென்று பார்க்கிறேன்! அறிமுக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅறியாத தளங்கள் நான்கு... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் நன்றி... உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்..//
நன்றிங்க சார்
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமுடிவில் உள்ள (14) தலைப்பின் (தளத்தின்) இணைப்பு மட்டும் சரி செய்யவும்... நன்றி...//
அது அவரின் தளத்தின் பிரச்சினை சார்
ezhil said...
ReplyDeleteஅருமையான தோழிகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி... வாசிக்கப்போகிறேன் அவர்களையும் ....//
நன்றிங்க மேடம்
மகேந்திரன் said...
ReplyDeleteபெரும்பாலும் நான் அறிந்திராத தளங்கள் சகோதரரே...
நிச்சயம் சென்று பார்க்கிறேன்...
உங்களின் பதிவின் மூலம் நிறைய பதிவரகளை
தெரிந்துகொள்ள முடிகிறது...
தொடரட்டும் உங்களது சிறப்பான வலைச்சரப்பணி...
வாழ்த்துக்கள்...//
மிகுந்த நன்றிகள் அண்ணா ..
என் ராஜபாட்டை : ராஜா said...
ReplyDeleteநிறைய புதுமுகங்கள். . நன்றி. . .//
நன்றிங்க ஆசிரியரே
அம்பாளடியாள் said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .//
நன்றிங்க சகோ
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமின்வெட்டால் அனைத்து தளங்களுக்கும் செல்ல முடியவில்லை... புதிய தளங்களுக்கு மட்டும் சென்று வந்தேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....//
அப்படியா சரிங்க சார்
NIZAMUDEEN said...
ReplyDeleteபுதிது புதிதாய இத்தனை தள அறிமுகங்கள்.
நன்றி அன்பரே!//
நன்றிங்க தோழரே
ReplyDeleter.v.saravanan said...
அறியாத தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அரசன் இத் தளங்கள் சென்று படிக்கிறேன் தங்களின் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்//
நன்றிங்க சார்
அருணா செல்வம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அரசன்.
தொடருங்கள். க்கும்...
(இந்த “க்கும்“ எதற்காக என்பதைப் பற்றி பிறகு அறிவீர்கள்.)//
என்னங்க மேடம் ...சொல்றிங்க ...
சின்ன பையனுக்கு விளங்கலை ...
எதுவாக இருந்தாலும் சேதாரம் இல்லாம பார்த்துக்கோங்க ...
வீட்டுக்கு ஒரே குழந்தை ...
2008rupan said...
ReplyDeleteவணக்கம்
சே,அரசன்(அண்ணா)
இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புதியபுதிய அத்தியாயங்களை படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் இதை யாரும் மறக்கவும் மறுக்கவும் முடியாது, அந்தவகையில் இன்று அறிமுகமான வலைப்பூக்கள் எல்லாம் புதியவை எனக்கு ,அழகான வலைப்பூக்களை தேடிஎடுத்து வலைப்பூ கதம்ப அரங்கில் அறிமுகம் செய்துவைத்த சே,அரசன்(அண்ணா) அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்அத்தோடு அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
தொடர்ந்து கருத்திடும் உங்களுக்கு என் நன்றிகள் ரூபன்
கவிநயா said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள், அரசன் அவர்களுக்கு நன்றிகள்!//
மிகுந்த நன்றிகள் மேடம்
மாதேவி said...
ReplyDeleteசிலதளங்கள் புதியவை கண்டுகொள்வேன். நன்றி.//
என் நன்றிகள் மேடம்
thamilselvi said...
ReplyDeleteமிகவும் நன்றி, விண்முகில் தளம் குறித்து கருத்து பகிர்ந்தமைக்கும் பிற தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கும்.//
உங்களுக்கும் என் நன்றிகள் தோழி
நேற்று புதிய தளங்களுக்கு சென்று வந்தேன். இன்றும் நிறைய புதிய அறிமுகங்கள் கடின உழைப்பு தெரிகிறது சகோ. வாழ்த்துக்கள்.
ReplyDeletes suresh said...
ReplyDeleteஇன்றைய அறிமுகத்தில் நிறைய பேர் நான் அறியாதவர்கள்! சென்று பார்க்கிறேன்! அறிமுக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!//
பாருங்கள் அண்ணா .. நன்றி
Sasi Kala said...
ReplyDeleteநேற்று புதிய தளங்களுக்கு சென்று வந்தேன். இன்றும் நிறைய புதிய அறிமுகங்கள் கடின உழைப்பு தெரிகிறது சகோ. வாழ்த்துக்கள்.//
நன்றிங்க அக்கா
பெரும்பாலும் புதிய தளங்கள் தான் நீங்கள் குறிப்பிட்டவை நன்றிகள்
ReplyDeleteநிறைய புதிய தளங்களுக்கு நடுவே பாலைவனச்சோலை போல சில தெரிந்த தளங்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கும், அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்!
மகளிர் ஷக்தி! நல்ல அறிமுகங்கள்..... அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.ae/2013/03/burj-khalifa-abaya-burka-model.html
அண்ணா இன்றைய கவிதாயினி வரிசையில் சசிகலா ,ஹேமா.அருணா,விண்முகில் என நான் வாசிக்கும் பலர் தொடரட்டும் பணி !
ReplyDeleteஅரசன், அஷ்யபாத்ரத்தை இங்கு அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு என் அன்பினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஉங்கள் தயவால் நான்கு பேர் இணைந்தும் கொண்டிருக்கிறார்கள்!!மகிழ்ச்சியாக இருக்கிறது.
அரசன் வாழ்க! :)
naan pathivu eluthi vegu natkal irupinum, ennai arimugapaduthiyamaiku nandri...
ReplyDeletethodarnthu elutha kandipaga muyarchikiren...
nandrigal pala..
அனைத்துமே கலந்து கட்டி எழுது வரும் இவரின் தளத்தில் இன்னும் நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறேன்! சற்று சிரமம் பாராமல் எழுதினால் நன்றாக இருக்கும்!//
ReplyDeleteஎன் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தங்கள் அறிவுரையை ஏற்றுக் கொண்டேன்.
ஆனால் அலுவலகப்பணி, வீட்டுப்பணி, புதிய பொறுப்பாகிய பாட்டி என்னும் அருமையான பதவி உயர்வு ஆகியவை என் படைப்புகளுக்கு கொஞ்சம் முட்டுக்கட்டை போடுகிறது.
ஆனால் இங்கு வலைச்சரத்தில் என் அறிமுகம் தூண்டுதலாய் இருக்கிறது. கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.
Nanri nanba :)
ReplyDeletehttp://nithyavani.blogspot.com/ நேரம் இருப்பின் இந்த வலைப்பகுதியையும் வலம் வாருங்கள்
ReplyDeleteபுதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்... மேலும் நல்ல படைப்புகளை எழுத வாழ்த்துகள்
என்னையும் ஒரு பதிவராக அறிமுக்கப்படுத்தியமைக்கு நன்றி அரசன் .
ReplyDeleteதங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் .
அறிமுகமான அனைத்து வலைப்பூ தோழமைகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
ReplyDelete@அரசன்...எம்மை அறிமுகப்படுத்திய தோழர் அரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...பெண்களை மையப்படுத்தி வித்தியாசமான அறிமுகம். :) நன்றியும், மகிழ்ச்சியும். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி சகோதரனே....!!!
ReplyDeleteஎன் தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி..!!!
அத்துடன் நின்றுவிடாது எனது படைப்புக்களுக்கு கருத்துக்களை வழங்கி என்னை வளர வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்,,
நான் மிகவும் தாமதமாக இன்று தான் தங்கள் பதிவை எனது வலைதளத்தில் பார்த்தேன் . மிக்க நன்றி ஐயா ! என் தளம் பற்றிய இந்த அறிமுகத்திற்கு ..
ReplyDeleteஎன்றும் அன்புடன் ,
ஜெ . ஜெய கல்யாணி