முன்பெல்லாம் நாம் சொல்ல வந்த கருத்தை சொல்வதற்கு வழியின்றி தவித்த நமக்கு இப்போது இணையம் என்ற பெருங்களம் எளிதில் கிட்டியமையால் நம் எண்ணங்களை பகிர்ந்து, நண்பர்களின் எண்ணங்களை படித்துக்கொள்ள பெரும் வசதியாய் இருக்கிறது!
நித்தம் எண்ணற்ற இணையதள பக்கங்கள் திறக்கபடுகிறது, எல்லாவற்றையும் நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை, ஒன்றிரண்டு மட்டுமே வெளிச்சமாகிறது, மற்றவை ஆரம்பித்த சில நாட்களிலே ஆதரவில்லாமல் மூடப்படுகிறது!
இன்றைய தினத்தில் இணையத்தில் முளைத்திருக்கும் புதியச் சிறகுகளை என்னால் இயன்றவரை உங்களுக்கு அறிய கொடுத்திருக்கிறேன்! முடிந்தவரை அவர்களுக்கு தோள் தட்டி ஆதவரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! வாருங்கள் அவர்களோடு கை குலுக்க!
1) பூவிழி - மலர் பாலன்
கடந்த வருட இறுதியில் வலைப்பூ தொடங்கி இருக்கும் இவர் அனைத்து விதமான பதிவுகளையும் இவருக்கே உரிய பாணியில் கலந்து கட்டி எழுதுகிறார்.
என் வீட்டு சுவர் போல் வருமா , வாழ்க்கை நடைபயணத்தில் இரண்டும் சிறப்பாக இருக்கிறது.
2) தமிழ் கவிதைகள் - சாந்தி பாலாஜி
சென்ற வருட நவம்பரில் வலை தொடங்கி எழுதி வருகிறார்! பெரும்பாலும் கவிதைகளையே பதிந்து வருகிறார்!
வாழும் என் உயிர், வாழ்க்கை தத்துவம், என்று குறுங்கவிதைகள் நிறைய எழுதி வருகிறார்.
3) மதியழகன் கிறுக்கல்கள் - மதியழகன்
இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கி இருக்கிறார், ஆனால் அதிகம் எழுதாமலே இருக்கிறார், நண்பர்கள் ஊக்கம் தந்தால் எழுதுவார் என்று நம்புகிறேன்!
கனவு,நினைவு..., இதயம்.. என்ற கவிதைகள் இவரின் படைப்புகளுக்கு ஓர் சான்று !
4) தமிழ் ஆவணம் - தினேஷ் பாபு
"என் காதோடு வருடிய தமிழை (இலக்கியம்,பாடல்,இசை) ஆவணப் படுத்தும் புதிய முயற்சி" என்று அவரே தன்னைப்பற்றியும், அவரின் வலையைப் பற்றியும் விளக்கமளிக்கிறார்!
இவரின் வலையை ஒரு ரவுண்டு வருகையில் எண்ணற்ற விடயங்களை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக கண்ணதாசனை பற்றி நிறைய பகிர்ந்து இருக்கிறார்!
5) ஒரு பக்கக் கதைகள் ஓர் ஆயிரம் - பசி பரமசிவம்
சத்தமே இன்றி எண்ணற்ற படைப்புகள் இவரது தளத்தில் புதைந்து கிடக்கின்றன. எதை சொல்வது , எதை விடுவது.... நீங்களே ஒரு எட்டு பார்த்துடுங்க...
6) விசித்திரன் - டினேஷ் சாந்த்
வலையுலகத்துக்கு இவர் புதியவர், "என் மனதில் உதிப்பவையும், படித்தவற்றில் பிடித்தவையும் உங்கள் முன் பதிவுகளாக" என்று இவரே தன் அடையாளாமாக கூறி இருக்கிறார். வரும்காலத்தில் பெரும் எழுத்தாளராக வர வாழ்த்துவோம்....
7) சிகரம் - சிகரம் பாரதி
சென்ற வருடத்திலிருந்து எழுதி வருகிறார், நிறைய நல்ல படைப்புகளை வழங்கி வருகிறார். சிறுகதை, அனுபவம், நிகழ்வுகள், கவிதை போன்று பல்சுவை பதிவுகளை வழங்கி வரும் தோழரை பாராட்டுவோம்!
8) புலோலி
பெயரே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, மிக சமீபத்தில் தான் வலைத்தளம் தொடங்கி இருக்கிறார் ... மேலும் சிறக்க நண்பர்களாகிய நேசக்கரம் நீட்டுவோம் ....
9) பூக்கூடை - ஆரோக்கியதாஸ்
சென்ற வருடத்தில் வலைப்பூ தொடங்கி இருக்கும் இவரின் படைப்புகள் நிறைய வார இதழ்களில் வெளிவந்துள்ளன! அதையும் இவரின் தளத்தில் பகிர்ந்து வருகிறார்!
10) வாங்க.வாசிங்க..யோசிங்க - ஜே தா
சென்ற மாதத்தில் தான் வலைப்பூ தொடங்கி இருக்கிறார்! அனுபவம் , கட்டுரை போன்று எழுதி வருகிறார்! புதியவரை வாழ்த்தி வரவேற்போம்!
11) எத்தனம் - சேகர்
அனைத்தும் கலந்து எழுதி வருகிறார்! அனுபவம் , அரசியல் போன்று எழுதி வந்தாலும் அரசியல் நன்றாக எழுதுகிறார்!
12) அடுத்த வீட்டு வாசம் - கோமகன்
சென்ற வருடத்திலிருந்து நிறைய எழுதி வருகிறார்! பல்சுவைகள் ததும்புகிறது இவரின் வலைப்பூவில்!
இப்புதிய பதிவுலக மன்னர்கள், நல்ல எழுத்தாளுமையோடு பதிவுலகை வலம்வர உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்கொண்டு நகர்கிறேன்!
இன்னொரு பதிவோடு உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் கிராமத்தான்
அரசன்
உ. நா. குடிக்காடு
சென்ற வருடத்திலிருந்து எழுதி வருகிறார், நிறைய நல்ல படைப்புகளை வழங்கி வருகிறார். சிறுகதை, அனுபவம், நிகழ்வுகள், கவிதை போன்று பல்சுவை பதிவுகளை வழங்கி வரும் தோழரை பாராட்டுவோம்!
8) புலோலி
பெயரே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, மிக சமீபத்தில் தான் வலைத்தளம் தொடங்கி இருக்கிறார் ... மேலும் சிறக்க நண்பர்களாகிய நேசக்கரம் நீட்டுவோம் ....
9) பூக்கூடை - ஆரோக்கியதாஸ்
சென்ற வருடத்தில் வலைப்பூ தொடங்கி இருக்கும் இவரின் படைப்புகள் நிறைய வார இதழ்களில் வெளிவந்துள்ளன! அதையும் இவரின் தளத்தில் பகிர்ந்து வருகிறார்!
10) வாங்க.வாசிங்க..யோசிங்க - ஜே தா
சென்ற மாதத்தில் தான் வலைப்பூ தொடங்கி இருக்கிறார்! அனுபவம் , கட்டுரை போன்று எழுதி வருகிறார்! புதியவரை வாழ்த்தி வரவேற்போம்!
11) எத்தனம் - சேகர்
அனைத்தும் கலந்து எழுதி வருகிறார்! அனுபவம் , அரசியல் போன்று எழுதி வந்தாலும் அரசியல் நன்றாக எழுதுகிறார்!
12) அடுத்த வீட்டு வாசம் - கோமகன்
சென்ற வருடத்திலிருந்து நிறைய எழுதி வருகிறார்! பல்சுவைகள் ததும்புகிறது இவரின் வலைப்பூவில்!
இப்புதிய பதிவுலக மன்னர்கள், நல்ல எழுத்தாளுமையோடு பதிவுலகை வலம்வர உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்திக்கொண்டு நகர்கிறேன்!
இன்னொரு பதிவோடு உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் கிராமத்தான்
அரசன்
உ. நா. குடிக்காடு
அசத்தல் அறிமுகங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும்...
கலக்கு அரசன்..
நல்ல அறிமுகங்கள் முனைவர் பரமசிவம் அவர்கள் அபார திறமை பெற்றவர்: பேராசிரியர்.ஒரு பக்கக் கதைகளை அற்புதமாக திறானாய்வு செய்பவர்.சிறந்த எழுத்தாளரும் கூட.
ReplyDeleteஒரு சிலரைத் தவிர இதரர் அனைரும் நான் அறிந்தவர்கள்தான் என்பதில் மகிழ்ச்சி.
நன்றி அரசன்.
பலர் எனக்குப் புதியவர்கள். நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசே,அரசன்(அண்ணா)
இன்றைய வலைச்சரப் பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். ஒன்று இரண்டுதவிர மற்றவை புதியன.
ReplyDeleteபுதியவர்களின் தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
நன்றி அரசன் சே.
ReplyDeleteமகத்தான பாராட்டை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்.
அதற்கான முழுத் தகுதி பெறத் தொடர்ந்து முயல்வேன்.
புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கும் என் மனப்பூர்வ நன்றி.
உங்களுக்கும் புதிய அறிமுகங்களுக்கும்
ReplyDeleteஎன் இனிய வாழ்த்துக்கள் அரசன்.
(இப்பொழுது நான் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை... கொலைவெறி வந்துள்ளது “பசி்“ பரமசிவம் முகத்தைப் போல்!)
இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் எனக்குப் புதியவர்கள்தான் தொடருகிறேன் நன்றி...
ReplyDeleteநண்பர் முரளிக்கும் தங்களுக்கும் மட்டுமல்ல, என் முகத்தை அறிமுகப்படுத்திய அருணா செல்வத்துக்கும் நன்றி.
ReplyDeleteபுது மலர்களுக்கு வாழ்த்துக்கள்! சிறப்பாக அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்!
ReplyDeleteபல புதிய தளங்களை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபுதியவர்களுக்கும் அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்!
பல புதிய தளங்கள்... udanz பிரச்சனையால் (http://www.bloggernanban.com/2013/03/malware-on-udanz.html) வலைச்சரம் வரமுடியவில்லை...
ReplyDeleteசரிசெய்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி...
அனைத்து புதுமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள் பல...
இன்றும் புதிய அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஅறிமுகத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல கோடி
ReplyDeleteஅறிமுகபட்டியலில் என்னையும் இணைத்ததற்கு நன்றி சகோ. மற்ற அறிமுக பகிர்வுக்கும் நன்றி. நிறைய தெரிந்து கொள்ள விஷயங்கள் அளித்து உள்ளீர்கள் அனைத்து பகிர்வுக்கும் நன்றி
ReplyDeleteஎனது வலைசரத்தையும் அறிமுக படுத்தியதுக்கு எனது நன்றிகள்..
ReplyDeleteபல புதியவர்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழரே ! :)
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeletehttp://tamilaavanam.blogspot.com/
என் பதிவுகளை படித்தவர்க்கும் / தொடர்பவற்கும் மிக்க நன்றி.
புதிய படைப்பாளிகளுக்கு தங்களின் பாராட்டும், வாழ்த்தும் தரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி...! - மதியழகன்
ReplyDeletewww.mathiazhagan-kirukalgal.blogspot.com
'மதியழகன் கிறுக்கல்கள்' எனும் எனது வளைப்பதிவின் பெயரை 'நிரலன் கிறுக்கல்கள்' என மற்றியுள்ளேன்....!
ReplyDeleteniralan-kirukalgal.blogspot.in
niralan-kuviyangal.blogspot.in
நன்றி...!