சத்தமே இன்றி மிகப்பெரும் தொண்டினை செய்வர்! அந்த வகையினரை தான் நாம் இன்று காண இருக்கிறோம்! விவசாய நலன் சார்ந்த பதிவுகளை காண கிடைக்கலையே என்று வருந்திக் கொண்டிருந்த எனக்கு இத்தனை பதிவர்கள் மண் சார்ந்து, உழவர் நலன் சார்ந்து எழுதுவது மன நிறைவை தந்தது, இருந்தாலும் இத்தனை நல்ல உள்ளங்கள் வெளிச்சத்திற்கு வராமலே இருக்கிறார்கள் என்று மனம் சற்று கனக்கிறது!
அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இன்றைய தினத்தை நான் எடுத்துக்கொண்டேன்! நாம் ஆதரவு கரம் நீட்டினால் இவர்கள் இன்னும் நிறைய பயனுள்ள செய்திகளை நாடறிய தருவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை! நண்பர்கள் ஆதரவாக இருப்போம்!
அன்னை பராசக்தி கோசாலை - மீ. இராமச்சந்திரன்
விவசாயம் பற்றி படிக்கவே நம்மவர்களில் பலர் முகம் சுழிக்கும் கால கட்டத்தில் மிக நேர்த்தியாய் இயற்கை விவசாயம் பற்றி எழுதிகிறார்! பயனுள்ள பக்கம்!
ராசி பயோ டெக் - காந்திமதிகுமார்
மண்புழு வளர்ப்பு பற்றியும், மண்ணை பற்றியும் அதிகம் இவரின் தளத்தில் காணலாம்! சிறந்த முறையில் அனைவருக்கும் புரியும்படி எழுத்து இருப்பது இவரின் சிறப்பு! அவசிய பக்கம்!
ஆன்லைன் ராஜ் - இராஜ சேகர் குணசேகரன்
இவரின் தளத்தில் நிறைய செய்திகள் புதைந்துள்ளன, யாளி - ஒரு புரியாத புதிர் இது போன்ற பகிர்வுகளை இவரின் தளத்தில் நாம் காண முடியும்!
நான்கைந்து பேர் இணைந்து நடத்தும் தளமிது! விவசாயிகளின் பொக்கிச பக்கமிது! பயிர் வளர்ப்பு முறைகள், சந்தேகங்களை கேள்வி பதில் மூலம் களைகின்றனர்! மனசார பாராட்ட வேண்டிய தரமான தளம் இது!
தமிழர் இயற்கை விவசாயம் - ஆனந்த ராஜ்
மண்ணின் நலன் குறித்து விழிப்புணர்வு கொடுக்கும் இவர், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்து நிறைய எழுதி இருக்கிறார்! நிச்சயம் இது போன்ற பக்கங்கள் இப்போதைய நிலைக்கு தேவை!
உழவர்களின் நலன் சார்ந்தே இந்த தளம் இயங்குகிறது! பலதரப்பட்ட உழவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை !
இந்த தளத்திலும் பலதரப்பட்ட செய்திகள் நிரம்பி வழிகின்றன! நல்ல முயற்சிகள் இங்கு நடந்தேறிக்கொண்டுள்ளன!
கொஞ்சம் சிரிக்க:
நிஜாம் பக்கம் - முஹம்மது நிஜாமுதீன்
இவரின் பக்கத்தில் எண்ணற்ற படைப்புகள் பொதிந்துள்ளன, நேரம் கிடைக்கையில் தவறாமல் பாருங்கள் மனம் இறுக்கம் கொஞ்சமேனும் குறையும்!
போதும்... ஆனா... போதாது! இவரின் படைப்புக்கு சான்று!
சென்ற வருடம் என்னால் இயலாமல் போனது இங்கு எழுத அந்த வருத்தத்தை இந்த வருடம் பூர்த்தி செய்தது! எந்த வித திட்டமிடலுமின்றி மனதில் உதித்த வகையில் அப்படியே உங்கள் முன் கொட்டினேன்! இந்த ஒரு வாரத்தில் சிரமம் பாரமால் வந்து என்னை ஊக்குவித்த நட்புகள் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்!
நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சொந்த வேலை காரணமாக பக்கத்து மாநிலத்தில் இருக்கிறேன்! வந்து வாசித்து செல்லும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் முன் கூட்டிய நன்றிகள்.
கடந்த ஏழு நாட்களாக இங்கு எழுத களம் தந்த அய்யா சீனா அவர்களுக்கும், என்னோட தொந்தரவுகளை பொறுத்து, என்னை பின் தொடர்ந்த, தொடரும் வலையுலக அன்பு நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றிகளும், வணக்கங்களும்! மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு சந்தர்ப்பத்தில்!
ஏற்றுக்கொண்ட பணியினை ஓரளவு முழுமை செய்திருக்கிறேன் என்ற மனநிறைவோடு விடை
அன்புடன்
கிராமத்தான்
அரசன்
உ. நா. குடிக்காடு!
அறியாத பதிவர்கள் நன்றி
ReplyDeleteஇன்றைய அறிமுகம் அனைத்தும் அருமை அதிலும் காந்திமதி குமாரின் பதிவு அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ள பதிவு இது போன்ற பதிவுகள் பகிர்வதன் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்
ReplyDeleteஅருமையான பதிவர்கள்! ஒருவார பணியில் நிறைய புதியவர்களை அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிய வேண்டிய... அறியப்பட வேண்டிய தளங்கள்... பல தளங்கள் அறியாதவை... நன்றி...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சிறப்பாக பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... வாழ்த்துக்கள் பல...
வெகு சிறப்பாக தங்கள் பணியை முடித்தீர்கள் சகோ. மீண்டும் அடுத்த வாரமும் நீங்களே இருந்தாலும் நன்றாகவே இருக்கும் அறிமுக தளங்கள் அல்லாது புதிய புதிய அறிமுகங்களை அறிமுகப்படுத்தியது சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteதகவல்களும்,பதிவர்கள் அறிமுகமும் அருமை.
இன்றைய வலைச்சர மண் சார்ந்த அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைந்திருந்தது அரசன். மண் வளம் காப்போம் விவசாயி தம் துயர் துடைப்போம் என்ற வகையில் எழுதி வரும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியர் பணியை சிறப்பாய் செய்திட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசே,அரசன்(அண்ணா)
இன்றைய பதிவானது மண் நலன் சார்ந்த பதிவுகள் மிக அருமையாக உள்ளது அறியாத புதிய தளங்கள்
ஒரு வார காலமும் பல சிரமங்களுக்கு மத்தியில்சிறப்பாக பலவகைப்பட்ட பல பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பலபுதிய தளங்களை தினந்தோறும் அறிமுகப்படுத்தி எமக்கு தந்திருந்தீர்கள்.
ReplyDeleteசிறப்பான அறிமுகவாரம். இனிதாக அமைந்தது. பாராட்டுகள்.
மிக்கநன்றி.
விவசாயத்திற்கான தளங்களை அறிமுகப் படுத்திதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி.
கவனிக்கப் படாதத விவசாயம் சார்ந்த பதிவுகளை அறிமுகம் செய்தது பாராட்டுக்குரியது.
ReplyDelete'கொஞ்சம் சிரிக்க" என்று குறிப்பிட்டு எனது நிஜாம் பக்கம் தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு
ReplyDeleteநன்றி அன்பரே!
ஒரு வாரம் உங்கள் பணியினை சிறப்புற நிறைவேற்றி, மன நிறைவுடன் விடைபெறும் உங்களுக்கு
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
விவசாயம் சார்ந்த பதிவுகளை அறிமுக படுத்தியதற்கு நன்றி. மருதம் பதிவில் சில நாட்களாக தொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் http://tamilfuser.blogspot.com பதிவில் ஒரு சில விவசாயம் சார்ந்த பதிவுகளை எழுதி வருகிறேன். கூடிய விரைவில் மருதம் பதிவை தொடரும் நம்பிக்கை உள்ளது
ReplyDeleteசிறப்பான வலைச்சர வாரம். வாழ்த்துகள் நண்பரே...
ReplyDelete"வலைச்சரம்: மண் நலன் சார்ந்து........" என்ன ஓர் அழகிய தலைப்பு ! அழகு என்றால் அகமிகு அழகு ! இன்றைய தேவை ! நம் மண் பன்னாட்டு முதலைவாய்ப் போகக் காத்திருக்கும் இவ்வேளை இல்லை எனில் அழிவின் விம்பே நம் முடிவே !
ReplyDeleteஉறந்த ராயன் குடிகாடு என்றுதான் அந்த கிராமத்தான் எழுதினால்தான் என்ன ? ஆனால் உ.நா .குடிகாடு என்றால் ? அப்படி என்ன சிக்கனம். என்னைப் போன்ற தஞ்சாவூரானால் கூட குழம்பி நிற்கிறேனே !
பயனுள்ள பணி.
ReplyDeleteமனித வளம் வளர்க்கப்படும் உன்னதப் பணி. இனி நானும் ஓர் பார்வையாளராகத் தொடர்வேன்
சீதாலட்சுமி