சற்று அதிகமான பணிச்சுமை, மின் தடை, இணைய ஒத்துழையாமை ஆகியவற்றின் காரணமாக நேற்றிரவு எழுத வேண்டிய இப்பதிவு இன்றிரவு எழுதும் படியாக ஆகிவிட்டது.
நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சே.அரசன், தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் மண் வளம், புதியவர்கள், புதுமைப் பெண்கள், கவிதை சிற்பிகள், கதை சொல்லிகள், பதிவுலா, சுய அறிமுகம் எனற் பல தலைப்புகளில்
ஏழு பதிவுகள் இட்டு அறுபத்தைந்து பதிவர்களை அறிமுகப் படுத்தி ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.
நண்பர் அரசனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் திருமதி அருணா செல்வம்.
இவர் “அருணா செல்வம்” மற்றும் ”கவிமனம் ” என்ற தளங்களீல் எழுதி வருகிறார்.
இவரது பெயர் அருணா - கணவர் பெயர் செல்வம். பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தற்போது வசிப்பது பிரான்சு. இவர் M.A மற்றும் B.Lit பட்டப் படிப்புகள் படித்திருக்கிறார்.
இவர் நான்குநாவல்கள், இரண்டு மரபுக் கவிதை நூல்கள், பல தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல இலக்கிய படைப்புகள் தந்துள்ளார்.
கம்பன் பட்டயம், கவிதைப் பெண், உலக மகா சாதனையாளர் என பல்வேறு விருதுகள் பிரான்சு கம்பன் கழகம், கோவை தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளால் பெற்றுள்ளார்.
இவர் கம்பன் இலக்கண இலக்கியத் திஙகழிதளின் ஆசிரியராகவும் இருக்கிறார். கதை கவிதை மேடைப்பேச்சு ஆகியவற்றில் பெரு விருப்பமுடையவர்.
திருமதி அருணா செல்வத்தினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சே.அரசன்
நல்வாழ்த்துகள் அருணா செல்வம்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteபல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்த சே.அரசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... நன்றிகள் பல...
ReplyDeleteஅருணா செல்வம் அவர்களை வரவேற்கிறேன்... அசத்த வாழ்த்துக்கள்...
கம்பன் இலக்கண இலக்கியத் திஙகழிதளின் ஆசிரியராக இருக்கும் நீங்கள் வலைச்சரத்திலும் ஆசிரியராகவும் ஆகி இருக்கிறீர்கள், உங்கள் திறமையை இங்கும் வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் அருணா
ReplyDeleteபதிவுலக பெண்பாற் புலவர் அருணா செல்வம் அவர்களின் அறிமுகங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பருக்கு ...
ReplyDeleteசே. அரசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஅருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்.....
சே. அரசன் அவர்களுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஅருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்.....
Valthukkakal
ReplyDeleteஉங்களின் இவ்வாரப் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருணா செல்வம் அவர்களே!
ReplyDelete