நட்புறவுகளுக்கு
வணக்கம்.
என் வலைச்சர பதிவைக் காண வந்த
அனைவரையும் வருக.. வருக என்று கைகூப்பி வரவேற்கின்றேன்.
முதலில் எனக்கு இந்தப் பொறுப்பைக்
கொடுத்த அன்பின் சீனா ஐயாவுக்கு முதற்கண் நன்றி.
என்னைக்
“குட்டிக் கதை ராணி“ என்ற பட்டப்பெயருடன் அழைப்பதால் ஒரு குட்டிக் கதையுடன் பதிவைத்
தொடங்குகிறேன்.
ஒரு நாள் நல்ல வெயில். இரை
தேடச்சென்ற எறும்புகள் சூடேருவதற்குள் தன் புற்றுக்குள் போய்விட வேண்டும் என்று
சுறுசுறுப்பாக ஓடின.
அப்பொழுது ஒரு புழு வெயிலின்
கொடுமைத் தாங்க முடியாமல் மிகவும் வேதனையுடன் மிக மிக மெதுவாக
நிழலைத் தேடி நகர்ந்து கொண்டு இருந்தது.
அதைக்கண்ட ஓர் எறும்பு
மனக்கவலையுற்று தன்னுடன் வந்த மற்ற எறும்புகளைப் பார்த்து “இந்தப் புழு பாவம். இது
மெல்ல நகர்ந்து நிழலை அடையும் முன் வெயிலின் கொடுமையால் இறந்து கூட விடலாம்.
அதனால் நாம் அனைவரும் சேர்ந்து இந்தப் புழுவைத் தூக்கிச் சென்று நிழலில்
விட்டுவிட்டுச் செல்லலாம்“ என்றது.
அதைக் கேட்ட இன்னொரு எறும்பு “நாமே
நம் இடம் போக இந்த வெயிலில் வேதனையுடன் நடக்கிறோம். இப்பொழுது போய் இந்தப்
புழுவைக் காப்பாத்துவதா...? இது வேண்டாத வேலை. வா போகலாம்“ என்று சொல்ல மற்ற
எறும்புகளும் ஆமோதித்தன.
ஆனால் முதல் எறும்பு விடவில்லை. “நாம்
எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இழுத்தால் கொஞ்ச நேரம் தான் ஆகும்.
விருப்பமிருப்பவர்கள் வாருங்கள்...“ என்று சொல்லியபடி செல்ல மற்ற எறும்புகளும்
கூடவே சென்று அந்தப் புழுவை நிழலில் இழுத்துப் போட்டுவிட்டுச் சென்றன.
மழைக்காலம் வந்தது. மழைநீர்
எறும்பு புற்றுகளில் நுழைந்துவிட எறும்புகள் எங்கே செல்வது என்று அறியாமல் மழையில்
தத்தளித்தன. அப்பொழுது அங்கே வந்த ஒர் அழகான பட்டாம் பூச்சி, “எறும்புகளே என் இறக்கையில்
ஏறிக்கொள்ளுங்கள். நான் உங்களை மேடான இடத்தில் விட்டுச் செல்கிறேன்..“ என்று
சொன்னது. எறும்புகள் ஏறியதும் அவைகளை
ஒரு மேடான இடத்தில் இறக்கிவிட்டது. எறும்புகள் மகிழ்ந்து தன் நன்றியைச் சொல்ல
வாயெடுக்கும் பொழுது... பட்டாம் பூச்சி சொன்னது... “நண்பர்களே என்னை யார் என்று
தெரியவில்லையா...? அன்றொரு நாள் வெயிலில் கிடந்த புழுவைத் தூக்கி நிழலில்
விட்டீர்களே... அந்தப் புழு தான் இன்று உங்களின் முன் பட்டாம் பூச்சியாக
சிறகடித்து உயிர் வாழ்கிறேன். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்“ என்று
சொல்லி சிரித்தபடிப் பறந்தது.
எறும்புகளும் மகிழ்ந்தன.
நட்புறவுகளே....
அந்தப் பட்டாம் பூச்சியின் நிலை
தான் என்னுடையது. இனி என்னைப் பற்றி சொல்கிறேன்.
எனது வலைப்பதிவின் தலைப்பு “அருணா செல்வம்“ நான் என் வலையை என்னுடைய சுயநலத்திற்காகத் தான்
திறந்தேன். நான் படைத்தப் படைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற சுயநலம் தான். ஏன்
என்றால் நான் முதலில் எழுதிய இரண்டு புத்தகங்களின் பிரதி கூட என்னிடம் இல்லை.
ஆதலால் என் படைப்புகளை எப்படி
சேமிப்பது என்று யோசித்து நண்பர்களின் அறிவுரையின் படி மின்வலையைத் திறந்தேன்.
அதில் கொஞ்ச காலம் எழுதியதும் அதைத்
தமிழ்மணத்தில் சேர்த்தால் என்ன... என்ற நண்பரின் யோசனையை ஏற்று இணைத்தேன்.
துவக்கத்தில் யாருமே
படிக்கவில்லை. அந்தப் புழுவின் நிலையில் தான் காய்ந்தேன். சில சமயங்களின் ஓரிருவர்
படித்துப் பின்னோட்டங்களும் வர ஆரம்பித்ததும் எனக்கும் எழுதும் ஆவல் அதிகமானது.
முக்கியமாக என் துவக்ககால பதிவுகளைப் படித்துப் பின்னோட்டங்கள் இட்டு எனக்கு
ஊக்குவிப்புக் கொடுத்த
திரு. இரமணி ஐயா, (தீதும் நன்றும் பிறர்தர வாரா)
சசிகலா (தென்றல்)
இவர்களை நினைவுக் கூர்ந்து நன்றி கூறுகிறேன்.
துவக்கத்தில் என் பதிவைப்
படித்தவர்கள் பெயர் குழப்பத்தால் என்னை “ஆண்” என்று நினைத்துக் கருத்துக்கள்
இடவும் இதுவும் நல்லதே என்று ஆண்களைப் போல் பதிவெழுதினேன். அப்படி எழுதிய காதல்
கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அப்பொழுதும்
அதிக பார்வையாளர்கள் வராததால் தலைப்பில் சிறிய மாற்றங்களை அமைத்துப் பதிவிட்டேன். சும்மா
சொல்லக் கூடாது... உண்மையில் அதற்கு தான் அமோக வரவேற்பு.
ஒரு
நாளைக்கு ஐம்பது பேர் வந்து கவிதையைப் படித்தால்.. மாற்று தலைப்பில் வந்த
பதிவிற்கு நாநூறு ஐநூறு பேர் வந்து போனார்கள்.
அவைகளின் லிங்க் இதோ...
நான்
தவறெதுவும் செய்யவில்லை என்றாலும் சில நேரங்களின் என்மனமே என்னைக் குத்தும். அதனால்
உண்மையைச் சொல்லி விட்டேன்.
ஆனால்
நான் உண்மையைச் சொன்னப்பிறகு தான் நிறைய இரசிகர்கள் உண்மையாய் வந்தார்கள். அப்பொழுது
தான் “உண்மை தான் என்றுமே உயர்வானது“ என்று புரிந்து கொண்டேன். (ஆனாலும் ஒரு சிலர்
இன்னும் என்னை நம்பவில்லை.)
அதன் பிறகு
இங்கு (பிரான்சில்) நடந்த நகைச்சுவையான நிகழ்வுகளைப் பதித்தேன். அதற்கும் நிறைய வரவேற்பு கிடைத்தது.
அவைகள்...
இதைத் தவிர...
சிறுகதைகள்....
நிமிடக்கதைகள்....
குட்டிக்கதைகள்....
ஒரு தொடர்கதை (போகப் போகத் தெரியும்)
இப்படித் தொடர்ந்து எழுதி என் பொழுதைப்
போக்கிக்கொண்டு வருகிறேன்.
கடைசியாக...
வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்ற படைப்பாற்றல் கொண்ட பெண்கள் ஆண்கள் அனைவருக்கும்
வலைப்பதிவு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
நான்
வெயிலில் வாடிய புழுவாக இருந்தபோது உங்களின் பாராட்டுகளும் ஊக்கங்களும்
பார்வைகளும் தான் என்னைத் தூக்கி நிழலில் இட்டது. இன்று அழகிய இறக்கையை விரித்துப்
பறக்கிறேன்.
இதற்கு
காரணமான உங்களின் அனைவருக்கும் என் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து இன்று
விடைபெறுகிறேன்.
நாளை...
மரபிற்கு மகுடம் சூட்டுபவர்களைப் பற்றிய பதிவுடன் சந்திக்கிறேன்.
நட்புடன்
அருணா செல்வம்.
sako...!
ReplyDeletemanamaarntha vaazhthukkal..!
thodarungal..!
thodara muyalkiren!
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் மின்னும் அறிமுகம் தந்தாய்!
அமுதென உண்டேன் அதனை! - குமுதம்
மலா்ந்தாடும் காடாய் வலைச்சரம் செய்க!
குளிர்ந்தாடும் நெஞ்சம் குழைந்து!
நல்லதொரு கதையுடன் சுய அறிமுகம் அருமை சகோதரி...! நீங்கள் சொல்லும் சுயநலம் அனைவருக்கும் இருப்பதால் தான் பகிர்ந்து கொள்கிறோம்... இதில் முக்கியமானது : "என்மனமே என்னைக் குத்தும்" இவ்வாறு இருந்தால் என்றுமே, எதுவுமே நன்மையே... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர்ந்து சிறப்பாக அசத்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் குட்டிக் கதை ராணி.
ReplyDeleteஇத்தனை நாள் தொடர்ந்து படிக்காமல் போனதற்கு வருந்த வைக்கும் தன்னறிமுகம். சபாஷ்.
சொக்குவரியின் சொந்தக்காரர் கவிஞர் கி. பாரதிதாசனுக்கும் சபாஷ்.
ReplyDeleteநல்ல குட்டிக் கதை; வாழ்த்துக்கள்
ReplyDeleteபலர் தொடர்ந்து பதிவெழுத ஊக்கம் தந்தவர்களுள் மிக முக்கியமானவர்கள் ரமணி சாரும் திண்டுக்கல் தனபாலனும் அவர்களுடைய தொடர்ச்சியான வருகையே பலருடைய வருகைக்கு காரணமாக பல பதிவர்களுக்கு அமைந்திருக்கிறது.
அருமையான சுய அறிமுகம்... வலைச்சரத்தில் கலக்குங்க சகோதரி...
ReplyDeleteசுய அறிமுகம் அருமை.
ReplyDeleteசெமக்கட்டை படங்கள் கலக்கல்
ReplyDeleteSurukkamaaka ayinum suya arimukam arumai lvvaara aasiriyar pani sirakka vaazhththukkal
ReplyDeleteஉங்களை பற்றிய அறிமுகம் அருமை!! எனக்கு கதை படிப்பதில் ஆர்வம் அதிகம்!! உங்கள் பதிவுகளை தொடர்கிறேன்..
ReplyDeleteவாழ்த்துக்கள் நன்றி!
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் .செமையா சிறப்பாதொடருங்க
ReplyDeleteவலைச்சரம் பணி ஏற்க வந்த சகோதரி அருணா செல்வம் அவர்களுக்கு ( http://arouna-selvame.blogspot.com ) வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கை அருணாவுக்கு
ReplyDeleteஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆசிரியருக்கு வணக்கம். தங்கள் கதையுடனான அறிமுகம் அசத்தல் தோழமையை நினைவுகூர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க. தொடருங்கள் தொடர்கிறோம். தங்களிடத்தில் எனை மிகவும் கவர்ந்தது மரபுக்கவிதைகள் தான் தினம் அதையும் பகிர்ந்தால் ஆர்வமுடன் ஓடோடி வருவேன்.
ReplyDeleteஅழகிய சுய அறிமுகமுடன்
ReplyDeleteஇனிமையான பயணம் ஆரம்பம்.
உங்கள் பணி சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி!
வாழ்த்துக்கள் அருணா..உங்களின் பதிவில் கொஞ்ச நாளாக குட்டிக் கதைகள் காணோமே என்ற ஏக்கத்தை வலைச்சரத்தின் மூலம் தீர்த்து விட்டீர்கள்....தொடர்கிறேன்....
ReplyDelete
ReplyDeleteவருக அருணா! வாழ்த்துக்கள்!
குட்டிக்க்தையும் சுய அறிமுகமும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தவார வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.
வாருங்கள் வாருங்கள்
ReplyDeleteவலைச்சர தோரணம் கட்ட வாருங்கள்...
மணமிக்க மலர்கள் கொண்டு
வாசமிக்க பூமாலை தொடுத்திடுங்கள்...
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்!
ReplyDeleteWell said T.N.Muralidharan!
ReplyDeleteதலைப்பிலேயே பஞ்ச் வச்சிடீங்க சூப்பர் குட்டி கதையும் அருமை உண்மை சொல்வதற்கு தான் அதிக தைரியம் வேண்டும் தோழி பாராட்டுகள் ஆசிரியர் பணி சிறப்புடன் செய்ய வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சரத்தில் பவனியுலா வர வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteலேட்டாக வந்தாலும் லேடஸ்ட் ஆக வந்திருக்கிறீர்கள் அருணா!
ReplyDeleteகுட்டிக் கதையுடன் உங்கள் அறிமுகம்
அருமை.
உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களின் பதிவுகளைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
திரு முரளிதரனின் கமென்ட்டை அப்படியே வழி மொழிகிறேன்.
சும்மா சொல்லக்கூடாது.நன்றாகவே கவிதை எழுதுகிறீர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் அருணா செலவ்ம் - அறிமுகமா சுயநலமா - பதுவு அருமை - மிக மிக,மிக இரசித்தேன் - உண்மை இயல்பாக நடைபோடும் பதிவு. துவக்க காலத்தில் ஊக்கமூடீயவர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் நற்குணம் நன்று. சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, பாராட்டி மறு மொழி இட்டு வர விரும்புகிறேன். உடனே துவங்குகிறேன் பணியினை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துகள் அருணா.
ReplyDeleteஆசிரியர் அருணாவுக்கு எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! அசத்துங்க அருணா!
ReplyDeleteநல்ல சுய அறிமுகம்.
ReplyDeleteவாரம் முழுவதும் வலைச்சரத்தில் அசத்திட வாழ்த்துகள் அருணா.
வணக்கம்
ReplyDeleteஅருணா,செல்வம்(சகோதரி)
நல்ல சுய அறிமுகத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள் இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சீனி ஐயா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கவிதையால் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி கவிஞர்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் ஐயா.
இனி தினமும் வந்து படிக்க அன்புடன் அழைக்கிறேன் அப்பாதுரை ஐயா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை தான் மூங்கில் காற்று.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி ஸ்கூல் பையன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி கவியாழி ஐயா.
நன்றி பிரேம்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி இரமணி ஐயா.
நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது வந்து படித்திட்டு எனக்கு ஊக்கம் கொடுங்கள் தோழி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சமிரா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி செய்தாலி அண்ணா.
சசிகலா.... உங்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி இளமதி தோழி.
தோழி... வலைச்சரத்திலும் குட்டிக் கதை எழுதலாம் தான். ஆனால் பதிவு நீண்டு விடுகிறது. அதனால் கொஞ்சம் தயக்கம்.
ReplyDeleteதேவைப்படும் இடத்தில் அவசியம் எழுதுகிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி புலவர் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி மகி அண்ணா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி கே.பி. ஜானா ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி மலர் பாலன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி அரசன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி ரஞ்சனி அம்மா.
ஆமாம் தனபாலன் ஐயாவின் பணியும் உயர்ந்தது தான். அனைவருக்கும் இந்த மனம் வராது.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி டினேஷ்சாந்த்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி உஷா அன்பரசு அவர்களே.
தங்களின் வருகைக்கும் ஊக்கமூட்டும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சீனா ஐயா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி மாதேவி தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி பால கணேஷ் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி நாகராஜ் ஜி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ReplyDeleteமிக்க நன்றி ரூபன்.
//ஏன் என்றால் நான் முதலில் எழுதிய இரண்டு புத்தகங்களின் பிரதி கூட என்னிடம் இல்லை//
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே!
உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என் அறிய ஆவல்.
நட்புடன்
பின் தொடர
ReplyDeleteநண்பர் கரிகாலன் அவர்களுக்கு...
ReplyDeleteநான் எழுதிய ஆறு புத்தகங்களும் “மணிமேகலை“ பிரசுரத்தில் தான் அச்சடித்து வெளியிட்டனர்.
கிடைத்தால் எனக்கும் தெரிவிக்கவும்.
(ஏன் என்றால் நான் போய் கேட்டற்கே எல்லாம் விற்றுவி்ட்டது என்றார்கள்)
தற்போது என் நான்காவது புத்தகமான “போகப் போகத் தெரியும்“ என்ற நாவலைத்தான் எனது கவிமனம் என்ற தளத்தில் தொடராக வெளியிட்டுக் கொண்டு வருகிறேன்.
இந்தத் தொடர் முடிந்ததும் யார் படிக்கிறார்களோ இல்லையோ.... அடுத்த என் நாவலின் தொடரைத் துவங்கி விடுவேன். அதற்காகத் தான் என் வலையை ”சுயநலத்திற்காக“ என்று குறிப்பிட்டுள்ளேன்.
நன்றி.
வலைச்சரம் பணி சிறக்கட்டும் !
ReplyDeleteஅன்பின் அருணா செலவ்ம் - அனைத்து அறிமுகங்களுக்கும் சென்று படித்து மறுமொழி இட்டு விட்டேன் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் அருணா செல்வம் - லேபிள் இட வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன - சற்றே ஒரு லேபிள் இடுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete