Wednesday, March 20, 2013

மரபிற்கு மகுடன் சூட்டுபவர்கள்!!

by   அருணா செல்வம்





நட்புறவுகளுக்கு வணக்கம்.

     சொற்களை மிக நல்ல ஒழுங்கு வரிசையில் அமைப்பது உரைநடை!
     மிக நல்ல சொற்களை மிக நல்ல ஒழுங்கு வரிசையில் அமைப்பது கவிதை!
    மிக நல்ல சொற்களை மிக நல்ல ஒழுங்கு வரிசையில் இலக்கண விதிகளுக்கு உட்பட்டு அமைப்பது மரபுக்கவிதை.
     ஆக, படைப்புகளில் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பது மரபுக்கவிதை. மரபுக்கவிதையை நம் வலைக்குள் எழுதும் ஒரு சிலரும் என்னை விட வயதில், திறமையில், பதவியில் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்களை நான் எப்படி வரிசைப்படுத்தி எழுதுவது என்று தெரியாமல் விழித்தப் போது இந்தக் கதை ஞாபகத்தில் வந்தது.

    ஒரு குறுநில மன்னனின் தம்பி புகழ் பெற்ற கவிஞர். நாடே அவர் புகழைப் பற்றி பேசுவதால் மன்னனுக்கோ தம்பியின் மேல் பொறாமை வந்தது. அதனால் தம்பியை எந்த அரசாங்க விசயத்திற்கும் கூப்பிட மாட்டார்.
    அப்பொழுது ஒரு நாள் இந்த மன்னன் கப்பங்கட்டும் பெருநில மன்னன் ஒருவர் இந்த மன்னரைக் காண வந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது பெருநில மன்னன், “உங்களின் தம்பி அருமையாக கவி புனைவார் இல்லையா...? அவரின் கவிதைகளையும் நான் வாசித்து இருக்கிறேன். அவரை வரச் சொல்லுங்கள். நேரில் காண எனக்கு வெகுநாள் ஆசை.என்றார்.
   இந்த மன்னன் வேறு வழியில்லாமல் தம்பியை வரவழைத்தார். அந்தக் கவிஞர் வரும் பொழுது பெருநில மன்னரின் முன் தன் தமையன் மரியாதைக்காக நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார். இவரும் பெருநில மன்னரை வணங்கிவிட்டு நின்று கொண்டே பேசினார். அப்பொழுது பெருநில மன்னர் கவிஞரே... ஏன் நிற்கிறீர்கள்...? உட்கார்ந்து பேசுங்களேன்... என்றார்.
    என் அண்ணன் நின்று கொண்டு இருக்கும் பொழுது நான் உட்கார்ந்து உங்களுடன் பேசுவது மரியாதை இல்லை.என்றார் கவிஞர்.
     திறமையுள்ள மகா கவிஞரை நிற்க வைத்து தான் மட்டும் உட்கார்ந்து பேசுவது முறையில்லை... என்று எண்ணிக் கொண்டே பெருநில மன்னரும் உடனே எழுந்து நின்று பேசினாராம். முன்று பேருமே நின்று கொண்டே பேசினார்கள்.
     அதனால் திறமைக்கும், வயதுக்கும், பதவிக்கும் மரியாதை எப்பொழுதும் உண்டு. என்ன... மரியாதையைப் பணியோடு தருவது தான் பெருமை என்று கூறி...  மரபுக் கவிதைகளுக்கு மகுடம் சூட்டுபவர்களில் எனக்குத் தெரிந்தவர்களை உங்களின் முன் பணிவுடன் கொண்டு வருகிறேன்.


      இவரைப்பற்றி எழுத வேண்டும் என்றால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே இருக்கலாம். இவரின் தமிழ்ப்பற்றைக் கண்டு நான் வியந்ததுண்டு. எனக்குத் தமிழ் உணா்வையும், இனவுணா்வையும், தனித்தமிழ்ப் பற்றையும் ஊட்டியவா். இவருக்குத் தமிழ் உயிர் மூச்சு.
    பிரான்சு நாட்டில் நடைபெற்றுள்ள தமிழ்ப்பணியைக் கி.பாரதிதாசனுக்கு முன்பு என்றும் கி. பாரதிதாசனுக்குப் பின்பு என்றும் வரையரை செய்யும் வண்ணம் தமிழ்த்தொண்டில் தன்னை அளித்துச் செயற்படுபவா்.
    பிரான்சுக் கம்பன் கழகத்தின் தலைவராகவும், கம்பன் இலக்கிய இலக்கணத் திங்களிதழின் நிறுவுநராகவும் இருப்பவா். பிரான்சில் யாப்பிலக்கண வகுப்பை நடத்தி என்போன்ற பல கவிஞா்களை உருவாக்கியவா்.
    இவா் தலைமையில் நடைபெறும் கம்பன் விழா, பொங்கல் விழா ஆகியன தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் தலைமேல் சுமப்பன!
    தமிழ் இலக்கணத்தை முறையாகப் புதுவைப் பெரும்புலவா்களிடம் கற்றுத தெளிந்தவா்! நான்குவகைக் கவிகளையும் சிறப்பாக எழுதும் ஆற்றல் பெற்றவர்! தமிழுக்காகப் பாடிய பாடல்களைக் கேட்டால் ம் குருதியில் தமிழ் உணர்வு ஓங்கும். (பாடல்களைச் சி டி யாக வெளியிட்டுள்ளார்)




    அவரின் காதல் கவிதைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஏதோ விளையாட்டிற்கு உங்களுக்குக் காதல் கவிதையெல்லாம் எழுதத் தெரியாதா?“ என்று கேட்க... ஒன்றென்ன? ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் என்றார்! அதுவும் வெண்பாவில் எழுதுவேன்என்றார்!  
    வெண்பாவில் எவ்வளவு இலக்கணம் இருக்கிறது என்று அவரிடம் படித்த எங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் போய் ஆயிரமா... நிச்சயமாக உங்களால் முடியாதுஎன்று நாங்கள் சொன்னதற்காகவே எழுதினார்.
   
கவிஞரின் காதல் ஆயிரம்


இவை இரண்டையும் பெண்கள் படித்தால்.... நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. நீங்களே சென்று படித்துப் பாருங்கள்.


இவரைப்பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நம்மில் அனைவருக்கும் மிக மிக தெரிந்து பழம் பெருங்கவிஞர். இவரின் கவிதைகள் கலிங்கத்து பரணி பாடல்களை ஒத்து இருக்கும்.
    இவரைப் போல் மற்றவர்களால் எழுத முடியுமா என்று வியந்திருக்கிறேன். இன்றைய சமுதாய சிந்தனைகளை யாருக்கும் பயமின்றிப் படைக்கும் திறமை மிக்க கவிஞர். இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பெருமை என்னுள் இருக்கிறது.
    இவரின் அனைத்துக் கவிதைகளுமே சிறப்பானது என்றாலும்




    இப்படி எல்லா கவிதையையும் சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் கவிதைகள் இளைய சமதாயத்தின் திறவுகோல்கள் என்றே சொல்லுவேன்.


    பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,... என்று தன்னை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
    இவரின் கவிதைகள் சுவை மிகுந்த மரபுக் கனிகள். கவியின் சுவையை இரசித்துக்கொண்டே இருக்கலாம்.





இவையெல்லாம் நான் இரசித்துச் சுவைத்தவைகள். நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.

4.  கவிஞர் எம். எஸ். பிரதாப் சிங்கின் செழுங்காரிகை

இவரின் மரபுக் கவிதைகள் அனைத்தும் அருமையான சுவை கொண்டவை. அதிலும் பாட்டி வடை சுட்ட கதை
மிக மிக இரசிக்கத்தக்கது..




இது போன்ற மற்ற இவரின் படைப்புகளும் அருமையான படைப்புகள். நீங்களும் சென்று படித்துப் பாருங்கள்.


5.   மரபுக்கவிதைகள் புனைவது எப்படி என்று தன் வலை தளத்தில் சொல்லிக் கொடுக்கிறார்
கவிதா அவர்கள்.
    கவிதை எழுத மிக முக்கியமானது உணர்ச்சி. ஒரு கவிஞன் எதனை   இலக்காகக் கொள்கின்றானோ  அதுவே இலக்கிய அறிவாக அவனுக்கு அமைகிறது. வாழ்க்கையில் உண்டாகும் அனுபவமே அவனுக்கு   இலக்கிய அறிவைப் புகட்டுகின்றது.  என்று தன் முன்னுரையைத் தொடர்ந்து யாப்பருங்கலக் காரிகையை முழுமையாகவும் விவரமாகவும் பதித்துள்ளார்
   மரபுக் கவிதை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் அந்த வலையில் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

6.  யாப்பறிந்து பா புனைய வாருங்கள் என்றழைத்து கவிதை எழுத கற்பிக்கிறார் யாழ்பாவாணன் அவர்கள்.
    பா புனைய உதவும் அறிஞர்களின் பாடல்களை அறிமுகம் படுத்தியும் குறும் பாக்கள் எழுதுவதையும் சொல்லித்தருகிறார்.
அந்தாதி எழுதுவோமா...? என்று கெட்டு நம்மை அழைத்து அந்தாதி சொல்லிக் கொடுக்கிறார். படித்துக் கற்றுக் கொள்வோம்.

7.  தமிழ் பிறந்தக் கதையைச் சொல்லிக் கொடுக்கிறார்.

இவர்களைத் தவிர மரபுக்கவிதைகள் தெரிந்திருந்தும் வலையில் பதியாத பதிவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்கள்.




போன்றோர்கள் மரபுக் கவிதைகள் தெரிந்திருந்தும் எழுதுவதில்லை. இன்னும்  இதே போல் அல்லது இவர்களைவிட உயர்வாக மரபுக்கவிதைகள் படைப்பவர்கள் வலையுகத்தில் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்தவர்களை மட்டும் எழுதியுள்ளேன்.
     அவர்களைச் சென்று பார்த்து வாழ்த்துக்களைச் சொல்லி நம்மின் இலக்கண அறிவையும் வளர்த்துக் கொள்வோம்.

    நண்பர்களே.... நாளை வெளிநாட்டில் வாழும் வலைப் பதிவர்கள் ஒரு சிலரைப்பற்றி எழுதுகிறேன்.

    நட்புடன்
அருணா செல்வம்.
   
 




   

67 comments:

  1. என்னைக் குறித்தெ ழுதிய எழுத்துக்கள்
    அன்னைத் தமிழின் அருளென்பேன்! - பொன்மனம்
    சோ்ந்த புகழ்அருணா செல்வம்! வலைச்சரத்தில்
    தோ்ந்த பதிவுகள் தேன்!


    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. சிறப்பான அறிமுகங்கள் !எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் சகோ உங்களும் மேலும் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

  3. வணக்கம்!

    பொன்னணி பூட்டும் புகழ்க்கம்பன் நற்கழகம்!
    வன்னணி யாக வளா்ந்தோங்கும்! - என்னணியில்
    ஒன்றிச் செயலாற்றும் ஒண்ணருணா செல்வமே!
    நன்றி நவில்கின்றேன் நான்!


    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. அன்பின் அருணா செலவ்ம் - மரியாதையைப் பணியோடு தர வேண்டுமா அல்லது பணிவோடு தர வேண்டுமா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  5. உங்கள் குருநாதர் மரபுக் கவிதை மன்னராக திகழ்கிறார்.புலவர் ராமானுஜம் ஐயா அவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சிவகுமாரன்.சிறந்த கவிஞர். தங்களைப் போன்றோரும் இருகிறீர்கள்.இவர்களுக்கு மத்தியில் எனது கவிதை எடுபடுமா என்ற சந்தேகம் உண்டு. மேலும் மரபில் நான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.என்றாலும் எப்போதேனும் ஒன்றிரண்டு எடுத்து விடுவதுண்டு. பிரதாப் சிங்கின் கவிதைகள் படித்ததில்லை. இனி படிக்கிறேன்.
    என்பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி.
    அருணா செல்வம்

    ReplyDelete
  6. மரபுக்கவிதை மன்னர்களை அறிமுகம் செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள் சகோதரி... அருமையான அறிமுகங்கள்...

    ReplyDelete
  7. அன்பின் அருணா செலவ்ம் - மரபுக் கவிதை பற்றிய அறிமுகமும் - மரபுக் கவிஞர்கள் அறிமுகமும் நன்று - சில மரபுக் கவிஞர்கள் ஏனோ மரபுக் கவிதைகளை அவர்கள் தளத்தில் வெளிட்யிடுவதில்லை - அவர்களையும் நினைவு கூர்ந்தது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள் ஆரம்பம்... நீங்கள் சொல்வது போல் அனைவரையும் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. எனக்கு கவிதைன்னாலே பிரமிப்பு (ஏன்னா நமக்கு எழுதவரலைங்கறதால) அதிலயும் மரபுக் கவிதைகள் எழுதறவங்க மிக பிரமிப்பு தரும் மனிதர்கள். இவர்களில் பாரதிதாசன் ஐயா மற்றும் புலவர் இராமானுசம் ஐயா தவிர மற்றவர்களை அறிந்திலேன். நன்றி அருணா! அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. சிறப்பான அறிமுகங்கள்.

    தொடரட்டும்.....

    ReplyDelete
  11. இன்று வலைச்சரத்தில் தங்களால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + ந்ன்றிகள்.

    ReplyDelete
  12. தாங்கள் இன்று கூறியுள்ள சிறுகதையும் சிறப்பாகவும் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. Pathivulakin perumaikkuriya kavignarkalai mika arumaiyaaka arimukam seithamaikku manamaarndha nanri

    ReplyDelete
  14. மிக அருமையான அறிமுகஙக்ள் அனைவருக்கும் வாத்துக்கள்

    ReplyDelete

  15. நல்ல அறிமுகங்கள் அருணா
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அன்புத்தோழி வலைச்சர ஆசிரியை அருணா செல்வம்! உங்களின் இன்றைய சிறுகதையும் அதனைத்தொடர்ந்த மரபுக்கவிஞர்களின் அறிமுகங்களும் அருமை. சிறப்பு.

    நீங்கள் குறிப்பிட்ட பாரதிதாசன் ஐயாவின் தளம் பார்த்து பிரமித்தவள். மற்றும் ஏனைய கவிஞர்களில் ஒரு சிலர் வலைகளுக்கே சென்றிருக்கிறேன். இதோ நீங்கள் அறிமுகப்படுத்திவிட்டிருக்கும் அவர்களிடமும் போய் வாழ்துகிறேன்.
    உங்கள் கவிதை கதைகளிலும் எனக்கு மயக்கம் உண்டு. உங்கள் ரசிகையும் நான்.

    தொடருங்கள்..... வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. மரபு அறிமுகம் ...நன்று அனைவருக்கும் இனிய வாழ்த்து. தங்கள் ஆசிரிய வாரத்திங்கும் இனிய வாழ்த்து.'
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. மரபின் பெருமைக்கு மகுடம் சூட்டிவிட்டீர்கள் சகோதரி....
    அற்புதமான மரபுக் கவிஞர்களின் அறிமுகம்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. நல்ல கவிஞ்சர்களின் அறிமுகங்கள் நன்றி குட்டி கதை மிகவும் உயர்ந்த கதை

    ReplyDelete
  20. நல்ல அறிமுகங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. "மரபிற்கு மகுடன் சூட்டுபவர்கள்!!" என்ற தலைப்பில் மதிப்புக்குரிய அருணா செல்வம் அவர்களின் பார்வை, பலருக்கு நல்ல வழிகாட்டலை தரும். அருணா செல்வம் அவர்களின் இலக்கியப் பார்வை தொடரவேண்டும்.

    “யாப்பறிந்து பா புனைய வாருங்கள்“ (http://paapunaya.blogspot.com/) தளத்தை தற்போது தான் வெளிக்கொணருகிறேன். சில மாதங்களின் பின் அருணா செல்வம் அவர்களின் கருத்திற்கேற்ப எனது பதிவுகள் இணைக்கப்பட்டுவிடும்.

    எனது நோக்கம் புதுக்கவிதை எழுதுவோரை எதிர்பதல்ல, நானும் புதுக்கவிதை நடையில் மரபுக்கவிதையை அறிமுகப்படுத்தி; நளைய வழித்தோன்றல்கள் மரபுக்கவிதையைப் பேணுமாறு கேட்டு நிற்கிறேன்.

    எனது முயற்சிகளையும் கருத்திற்கொண்ட மதிப்புக்குரிய அருணா செல்வம் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

    இவ்வண்ணம்
    சின்னப்பொடியன் யாழ்பாவாணன்

    ReplyDelete
  22. ஏதோ நானெல்லாம் வரிகளை மடக்கிப்
    போட்டு கவிதைன்னு சொல்லிட்டிருக்கேன்...நீங்க எழுதும் மரபுக் கவிதைகள் என்னை பிரமிக்க வைத்துள்ளன. இப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ளோரையும் சென்று பார்க்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அறிமுகம்கள் எல்லாரும் தனித்துவம் மிக்கவர்கள் அருணா !இவர்களை நானும் பின் தொடர்வதில் ஆனந்தமே!

    ReplyDelete
  24. அன்பின் இனிய அருணா!என்னைத் தகுதிக்கு மேலாக உயர்த்தி விட்டீர்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  25. சிறந்த கவிஞர்கள் அறிமுகம்! அருமையான வலைப்பக்கங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

  26. அன்பின் அருணா ,
    கவிஞர் கி. பாரதிதாசன், இராமானுசம் அய்யா வரிசையில் என் பெயரைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் இனம்புரியா உணர்ச்சிக்கு ஆளானேன். பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையில்அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு தங்களின் அங்கீகாரம் மேலும் எழுத வேண்டும் என்ற உற்சாகத்தையும் தெம்பையும் தருகிறது.
    மனமுவந்த நன்றிகள்

    ReplyDelete
  27. நானும் திரு பாலகணேஷ் அவர்கள் கட்சி தான். கவிதை எழுதுபவர்களை பிரமிப்புடன் பார்ப்பேன்.

    கவிஞர் திரு பாரதிதாசன், புலவர் ஐயா, திரு முரளிதரன் இவர்களைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள்.

    எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

    ஒரு கவிஞனின் பெருந்தன்மையை அழகாக ஒரு சின்னக் கதை மூலம் விளக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. புலவர் ராமானுசம் ஐயாவின் கவிதைகளை பார்த்து வியந்திருக்கிறேன்.பாரதிதாசன் ஐயாவின் கவிதைகளையும் எனக்கு பிடிக்கும்.
    மரபுக் கவிதையா? புதுக்கவிதையா என்று தெரியாமல் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்த மரபுக் கவிதை எழுதுவது தொடர்பான வலைத்தளங்கள் பயனுள்ளவையாய் அமைந்தன.நன்றி

    ReplyDelete
  29. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    கண்ணிமைபோல் கன்னித் தமிழ்காக்கும் பாவலரை
    விண்மதி என்றே வியக்கின்றார்! பெண்ணிவள்
    உம்பணியை நானெழுத ஊர்உலகம் போற்றிடும்!
    எம்பணி என்றெனக்கு ஏது?

    நன்றி.

    ReplyDelete
  30. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  31. வணக்கம் சீனா ஐயா.

    மரியாதையைப் பணிவோடு தான் தர வேண்டும். ஆனால் என் காலச் சூழலுக்குத் தகுந்தார் போல் பணியோடு என்று தானாகவே வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    தங்களின் வருகைக்கும் திருத்தத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சீனா ஐயா.

    தவிர, நேற்றே என் இடுக்கைகள் பலவற்றைப் படித்து உடனுக்குடன் கருத்திட்டமைக்கும் இங்கேயே நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
    மீண்டும் நன்றி ஐயா.

    ReplyDelete
  32. வணக்கம் மூங்கில் காற்று.

    நான் குறிப்பிட்டுள்ள “கவிதா“ வலைக்குள் சென்று பாருங்கள். அழகாக மரபெழுதுவதை விளக்கியுள்ளார்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

    ReplyDelete
  34. மீண்டும் நன்றி சீனா ஐயா.

    ReplyDelete
  35. வணக்கம் தனபாலன் ஐயா.

    என் வார்த்தையை ஏற்று என் அறிமுகங்களிடம் போய் சொன்னதற்கு மிக்க நன்றி.
    தயவு செய்து முடிந்தவரையில் இந்த வாரம் முழுதும் எனக்காகச் செய்யுங்கள்.
    இதற்காக நான் இப்பொழுதே நன்றி சொல்லிவிடுகிறேன்.
    இது தவிர...
    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபாலன் ஐயா..

    ReplyDelete
  36. வணக்கத்திற்க்குரிய அறிமுகங்கள். சிறப்பு தோழி தொடருங்கள்.

    ReplyDelete
  37. இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  38. அருணா!
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தேன்!

    வாழ்க வளர்க உங்கள் தமிழ் சேவை!

    ReplyDelete
  39. நல்ல கவிஞர்களின் அறிமுகங்கள் திருமதி.அருணா தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
  41. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நாகராஜ் ஜி.

    ReplyDelete
  42. தங்களின் வருகைக்கும் கதையைப் படித்துச் சுவைத்து வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

    ReplyDelete
  43. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.

    ReplyDelete
  44. என்னது...????
    வாத்துக்களா...?

    திட்ட வேண்டும் என்றால் என்னை நேரடியாக திட்டிவிடுங்கள். ஒட்டு மொத்தமாக.... வேண்டாம் கமல்.

    வரவிற்கும் திட்டுதலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  45. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே.

    ReplyDelete
  46. இளமதி தோழி.... உங்களைப் போன்ற இரசிகர்கள் எங்களின் மனங்களிலும் நின்று விடுகிறார்கள். நீங்கள் வரவில்லை என்றால் தான் எங்களுக்குக் கவலை வரும்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  47. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

    ReplyDelete
  48. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மகி அண்ணா.

    ReplyDelete
  49. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

    ReplyDelete
  50. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா.

    ReplyDelete
  51. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி யாழ்பாவாணர் ஐயா.

    ReplyDelete
  52. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி எழில்.

    ReplyDelete
  53. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனிமரம்.

    ReplyDelete
  54. உண்மையை மறைக்காமல் சொன்னேன் ஐயா.
    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  55. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

    ReplyDelete
  56. கவிஞரே... நீங்கள் இன்னும் நிறைய எழுதி எங்கள் மனங்களை நிரப்புங்கள்.
    உங்கள் கவிதைகளை உண்மையில் நிறையப் பேர் வாசிக்க விரும்புகிறார்கள்.

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கவிஞர் சிவக்குமாரன்.

    ReplyDelete
  57. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனி அம்மா.

    ReplyDelete
  58. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி டினேஷ்சாந்த்

    ReplyDelete
  59. எங்கே சசிகலா இன்னும் வரவில்லையே.. என்று நினைத்தேன்.

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  60. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  61. தங்களின் லேட்டஸ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நம்பள்கி.

    ReplyDelete
  62. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ”உண்மைகள்“

    ReplyDelete
  63. சிறப்பான அறிமுகங்கள்

    ReplyDelete
  64. நல்ல ஆரம்பம் தொடருங்கள்.

    ReplyDelete
  65. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தியாவின் பேனா.

    ReplyDelete
  66. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  67. சிறப்பான மரபுக்கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete