நட்புறவுகளுக்கு
வணக்கம்.
தாய் நாட்டைவிட்டு வெளிநாட்டில் பல
வருடங்களாக தங்கி வாழ்கிறவர்களை நிறைய பேர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களின்
பேச்சில் வாழ்க்கை முறையில் பழக்க வழக்கங்களில் தான் வாழும் நாட்டிற்குத்
தகுந்தார் போல் தன்னை மாற்றி வாழ்கிறார்கள். தனக்கும் தன் தாய் நாட்டிற்கும் எந்த
உறவும் இல்லை என்பது போல் பேசுகிறவர்களும் உண்டு.
ஆனால் இது வெறும் பேச்சின்
வெளிபாடு தான். உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. அது நீருபூத்த நெருப்பு மாதிரி
தான். சற்று தீண்டி விட்டால் தான் அந்த உணர்வின் உண்மை புரியும்.
ஒரு முறை.... எனக்குத் தெரிந்த
ஒருவர் கிட்டத்தட்ட நாற்பத்து ஐந்து வருடமாகப் பிரான்சில் இருக்கிறார். அவரின்
பிள்ளைகள்.. பேரப்பிள்ளைகள் வாழ்க்கை முறை அனைத்துமே முழுமையான மாற்றங்களை அடைந்து
விட்டது.
சில நேரங்களின் “என்ன பெரிய இந்தியா? என்ன பெரிய தமிழ் நாடு?“ என்று அலட்சியமாகவும் பேசுவார்.
அவர் கால்பந்து மற்றும்
விளையாட்டுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் தொலைக்காட்சியில் பார்க்கும்
பழக்கமுள்ளவர். அப்படி ஒரு நாள் பிரான்சுக்கும் பிரேசிலுக்கும் கால் பந்து போட்டி
நடந்து கொண்டு இருந்தது. அவரின் பிரான்சு நண்பர்கள் பலருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் அப்பொழுது, “மாமா... இப்பொழுது யார் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?“ என்று கெட்டேன். “இது என்ன அசட்டுத் தனமான கேள்வி? பிரான்சு தான் ஜெயிக்க வேண்டும்“ என்றார். அன்று பிரான்சு தான் வெற்றி பெற்றது.
மிகவும் மகிழ்ந்து நண்பர்களுடன் பார்ட்டி வைத்து மகிழ்ந்தார்.
நான் சற்று பொறுத்து “மாமா நாளைக்கு பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் போட்டி நடந்தால்... எந்த நாடு
ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்?“ என்று கெட்டேன். அதற்கு
உடனே அவர் “இந்தியா தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி ஜெயித்தால்
இவனுகளுக்கெல்லாம் (பிரான்ஸ் நண்பர்களைக் காட்டி) இன்னும் பெரிய பார்ட்டி
கொடுப்பேன்“ என்றார் தமிழில்.
“இது தான் தாய் நாட்டு பற்று
என்பது“ என்று சிரித்தபடி நகர்ந்து விட்டேன். தாய்ப்பற்று, தாய் நாட்டுப்பற்று, தாய் மொழிப்பற்று இல்லாத மனிதர்கள் யாருமே
இருக்கமுடியாது என்பது என் கருத்து.
அதிலும் தாய் நாட்டை விட்டு விலகி
இருப்பவர்களுக்கு இந்தப் பற்றுகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதற்கு சாட்சிகளாக
ஒரு சிலரை உங்களுக்கச் சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
இன்று நான் சொல்லக் போகிறவர்களில் பலர்
உங்களுக்கு எல்லாம் நன்கு தெரிந்தவர்கள் தான். நான் இவர்களை உங்களுக்கு அறிமுகப்
படுத்தவில்லை. பூக்கடைக்குப் போக வழி கெட்கத் தேவையில்லை என்பது போல் இவர்களின்
பதிவு வாசத்தை நான் மகிழ்ந்து சுவைத்ததால் அதை உங்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன்.
மணி (பிரான்சு) “சப் டைட்டில் என்னான்னா ---
அதாவது... அதாகப்பட்டது.... ஒன்னுமே இல்லை!“ என்று தலைப்பிலேயே சிரிக்க வைக்கக்
கூடியவர். இவரைப்பற்றி அனைவருக்குமே தெரிவதால் நான் வேற என்ன சொல்வது?
போன்ற கவிதைகள்(???) எல்லாம் நான் இரசித்துச் சிரித்தவை. எப்படித் தான் இப்படி
மாற்றி யோசிக்கிறார்களோ...!!!
“இலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள
கடப்பாட்டினால் சம்பாதிப்பது“ என்ற தராக மந்திரத்தை தலைப்புடன் வைத்துள்ளார். இவர்
தன் “நீலகடல்” என்ற வரலாற்று நாவலுக்கு வெளிநட்டு படைப்பளிகளுக்கான தமிழக
அரசின் விருதைப் பெற்றவர். இவரின் கட்டுரைகள் அனைத்தும் பயனுள்ள பாதுகாக்க
வேண்டியவைகள். அவைகளில் ஒரு சில...
“இந்தியாவில் பிறந்து வளர்ந்து பிரான்சில் குடிபெயர்ந்த ஒரு சராசரி தமிழச்சி“
என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு எழுதுகிறார்.
இவரின் இடுகைகள்.
போன்ற இடுகைகளை நான்
இரசித்துப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.
(ஐக்கிய
அமெரிக்க குடியரசு) “எழுதத் துடிக்கிறேன்.... அனுதினமும் என் உள்ளந்தனில்
எழும் கற்பனைகளை.... ஒரு புதிய பரிணாமம் கொடுக்க
எண்ணுகிறேன்... என் மனதில் அலைமோதும்
எண்ணங்களுக்கு....... வார்த்தை மலர்களைக் கோர்த்துக் கவிதைச்
சரம்தொடுக்க விழைகிறேன்...... நான்.... எழுதத் துடிக்கிறேன்.....“ என்று தன்
எண்ணங்களை கவிதைகளில் வடித்துள்ளார். இவரின்,
நட்பு
பெண்கள் என்ன நாய் குட்டிகளா?
கவிதைகளுடன் அனைத்தம் இரசிக்கத்தக்கவைகள்.
5. கிரேஸ்சின் தேன்மதுரத் தமிழ்!
ஜார்ஜியா – ஐக்கிய அமெரிக்க குடியரசு
“செந்தமிழ்
கருவூலத்திலிருந்தும் என் உள்ளத்திலிருந்தும் சில துளிகள்!“ என்று தலைப்பில் எழுதி இருக்கும் இவரின் படைப்புகள் அனைத்தும்
தேன்மதுரத் தமிழின் தேன் துளிகள் எனலாம். இவரின்
இவைகள் மட்டுமல்லாது
அனைத்துக் கவிதைகளும் அருமையாக உள்ளது.
“இதயத்தின்
தீக்குளிப்பில் ஆயிரம் கவிதை முத்துக்கள் பிறக்கும். அவை முத்துக்களாக மட்டுமன்றி வாழ்வின்
தத்துவங்களாகவும் இருக்கும். உன்னைப் படைப்பதர்க்காகத் தான் இறைவன் இதயத்தையும் படைத்திருக்க வேண்டும். இதுவரை காலமும் ஏவு கணைகளுக்கும் எரிகின்ற
நெருப்பிற்கும் இரையாகிப் போன உறவுகளையும் எங்கள் உணர்வுகளையும் எண்ணி மானமுள்ள தமிழனாக நேசமுள்ள தமிழனாக வீரமுள்ள தமிழனாக தாய் மண்மீது காதலுள்ள தமிழனாக பலமுறை இறந்து பிறந்தும் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் "தமிழ்" இந்தப் பற்று, இந்தக் காதல்தான் கவிதையாக, பாடலாக, கதைகளாக என்னையும் என் இனத்தையும் வாழ
வைப்பதாகக் கருதுகின்றேன். இதற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் என் இதயம் தீக் குளிப்பதை
மகிழ்ச்சியாகக் கருதுகின்றேன்.“
என்ற இவரின் அறிமுகமே நம்மை வியக்க
வைக்கும். அதன் பின் பாடல்களைச் சொல்லவா வேண்டும்.... இருந்தாலும் சில...
|
“ஆடிக் கொண்டே இருக்கிறது தராசுமுள்! சில சமயங்களில், மனசாட்சிக்கும் செயலுக்கும் இடையில்.!!!!
என்று தலைப் பங்கத்திலேயே சொல்லியிருக்கும் இவர் எழுதும் அனைத்தும் “கியுபிசம்“
கவிதைகள்.
இப்படிப்பட்ட கவிதைகளை உண்மையில் ஒரு சிலரால் மட்டுமே எழுத
முடியும் என்பதால்... என்னால் இவரைப் போல் ஒரு கவிதையைக் கூட எழுத முடியவில்லையே
என்ற ஆதங்கம் எனக்குள் இன்றும் உண்டு.
இளமதி (ஜெர்மன்) “நிழல்கள் எப்பொழுதும் நிஜத்தைக் காட்டுவ
தில்லை“ என்று தன் முன்னுரையில் பதித்து இன்று முழு நிலவாக வலை வானில் வலம்
வருகிறார்.
இவரின் பதிவுகள் சில...
ரொபர் (துபாய்) வீழ்வேனென்று நினைத்தாயோ...? எனது சமுதாய கோபங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு காரணியாய்,
ஒரு வடிகாலாய் இந்த
தளம் உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும்!!!. என்று தன் சமுக சிந்தனைகளை வித்தியாசமாக விமர்சித்து
வெளியிடுகிறார்.
இவரின் பதிவுகளில் நான் இரசித்தவைகள்...
வேதா. இலங்காதிலகம்.(ஓகுஸ், டென்மார்க்.) “செந்தமிழ் நூலெடுத்துக் கவி மாலிகை, பாமாலிகையென பாக்களால் மாலை, சிந்தனை மொழி, கட்டுரை, கதை என்று பல வகைகளாகப் புனையும் இணையச் சாலையில் எனது இடுகைகளை வாசியுங்கள். வாசிப்பதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யுங்கள். உங்கள் ஒவ்வோரு சொல்லும் என்னை மேலும்
மேலும் எழுத ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாகும் அனைவருக்கும் நல்வரவு கூறுகிறேன்.“ என்று தன்னை அறிமுகம் செய்து நிறைய கவிதைகள் பயணக்
கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இவர்களைத் தவிர
உங்கள் அனைவருக்கும் தெரிந்த இந்த பிரபல இடுகையாளர்களையும் என் பதிவில்
சுட்டிக்காட்டி மகிழ்கிறேன்.
நம்பள்கி (அமேரிக்கா)
செய்தாலி (துபாய்)
இன்னும்
நிறைப் பேர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு தங்களின் தாய்மொழியை மறக்காது எழுதிக்
கொண்டு அனைவருடனும் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் அவர்களுடன்
கைகோர்த்து உறவாடுவோம்.
நாளை எனக்குத் தெரிந்த “சமுக சிந்தனைகளையும்,
மருத்துவத்தையுமும்“ மின்வலையில் இடுகிறவர்களைப் பற்றி எழுதுகிறேன்.
நட்புடன்
அருணா செல்வம்.
ReplyDeleteவணக்கம்!
அயலார் நிலத்தில் அருந்தமிழை எண்ணி
இயலாய் இசையாய் இனிப்பவரைத் தேடி
அழகாய் அளித்தார் கவிஅருணா செல்வம்!
விழுதாய்த் தமிழை விளைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
எந்த மண்ணில் வாழ்ந்தாலும் அன்னைத் தமிழைப் பிரியாமல் எம்முடன் இணைந்திருக்கும் இவர்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட்! அருமையான அறிமுகங்கள் தந்த உங்களுக்கு நன்றி!
ReplyDeleteஅயல் நாட்டில் வாழ்ந்து தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர்கள்... தெரியாத நிறைய பேர்... அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கு ..
ReplyDeleteஒவ்வொரு வலைப்பதிவாகச் சென்று படித்துக்கொண்டே வந்த எனக்கு இனிய அதிர்ச்சி, என் பெயர் பார்த்து. ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteகதையுடன் அழகாகத் தொகுத்து வழங்குகிறீர்கள்!
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteசிலர் தெரிந்தவர்கள். தெரியாதவர்களை தெரிந்து கொள்ள வேண்டும்! சுட்டி தந்தமைக்கு நன்றி.
அருணா எனது தளத்தை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபல புது தளங்கள்... இணைந்து விட்டேன்... அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
எம்மண்ணின்
ReplyDeleteமேல் நின்றாலும்
தமிழனிடம்
தமிழில் பேசுங்கள்
ஆழ் வேர்விட்டு வளரும் தமிழ்
கடல் கடந்தும்
தமிழ் வளப்பவர்கள் பட்டியல் அருமை
நல்ல அறிமுகங்கள் அருணா
அந்த பட்டியலில் நானும்
உங்கள் தமிழ் அன்புக்கு நன்றி
மிக அழகாக எல்லோரது மனதையும் கவரும் வண்ணம்
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்துள்ளீர்கள் .நான் எழுதிய பாடலாக
இருந்தாலும் மீண்டும் மீண்டும் என் நெஞ்சுக்குள் நின்றாடுகிறது
இதன் கானம் .நன்றி மிக்க நன்றி அருணா இன்று என்னையும்
அறிமுகம் செய்து வைத்தமைக்கு .அறிமுகமான அனைவருக்கும்
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !.........
எங்கு சென்றால் என்ன தன்னை தொலைக்க முடியுமா தொலைத்தால் மனம் அமைதி பெறுமா ?இவர்கள் எல்லோரும் நிம்மதியை கண்டுபிடித்தவர்கள் என் நண்பர் வட்டத்தில் அல்லாதவர்களை அறிந்து கொண்டேன் நன்றி
ReplyDeleteவணக்கம் அன்புத்தோழி அருணா செல்வம்!
ReplyDeleteதாயகம் கடந்தும் தமிழ் காப்போரென இத்தனை அறிஞர்களுக்கு மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியது ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.
முதற்கண் உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தையும் வாழ்த்தினையும் தெரிவிக்கின்றேன்.
தாயகம் கடந்தும் தமிழ் காப்போரென
தாயே இங்கு தந்தனை நல்லறிமுகங்களே - தவளும்
சேயான என்னையும் சேர்த்திங்கு கூறினை
வாய்ப்பேச மறந்தே வணங்கினேன் உனையே!
உங்கள் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறேன் தோழி!
இங்கு என்னுடன் இன்னும் தெரிந்த தெரியாத பல பதிவர்களை அறிமுகஞ்செய்துள்ளீர்கள். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
எனை வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் அன்பு நன்றிகள்!
எனது வலைப்பக்கத்தை தமிழ் உறவுகட்கு அறிமுகம் செய்து வைத்த அருணா அவர்கட்கு என் நன்றிகள் பல.இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பக்கங்களில் அறிந்தவர்கள் சிலர்.அறியாதோர் பலர்.புதியோர் பலரை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதோழி இளமதிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
http://samaiyalattakaasam.blogspot.ae/2013/03/kanchipuram-idli.html
வாங்கோ ஜலீலாக்கா! மிக்க நன்றி உங்களுக்கும்!
ReplyDeleteஅதென்ன எனக்கு மட்டும் ஸ்பெஷல் வாழ்த்து...
ஓ... காஞ்சிபுரம் இட்லியா...:)
நன்றி! நன்றி!!!
ஏதோ எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். அனைவருக்கும் , தங்களிற்கும் இனிய வாழ்த்து. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கும் இனிய நன்றி. இதை முகநூலிலும் பதிந்துள்ளேன். பணிதொடரட்டும் பாராட்டகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தமிழ்ப்பற்று உள்ளவர்களை சிறப்பாக அறிமுகம் செய்தீர்கள் நன்றி தோழி.
ReplyDeleteஇன்று தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அத்தனை பதிவர்களுக்கும் பாராட்டுக்களும்,இனிய வாழ்த்துக்களும்.
ReplyDeleteவளர்ந்து வரும் எங்கள் தோழி இளமதியையும் அறிமுகப்படுத்தியதில் நானும் பெருமையடைகிறேன். இது அவர்களுக்கு உற்சாகத்தையும் , ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரையும், ஏனைய பதிவர்களையும் அறிமுகப்படுத்திய தாங்களுக்கு என்
நன்றிகள்.வாழ்த்துக்கள்.
வித்தியாசமான தலைப்பில் அறிமுகங்கள்.. நீங்களும் எனக்கு இன்று தான் அறிமுகம் !!
ReplyDeleteதாய் மண்ணை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தாய் மொழியை, தாய் நாட்டை மறக்காத இவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்!
ReplyDeleteதிருமதி வேதா, திருமதி அம்பாளடியாள் ஆகியோரைத் தவிர மற்றவர்களை அவ்வப்போது படிப்பதுண்டு.
இனிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
மனதின் எரிச்சல்களை,எண்ணங்களைக் கிறுக்கிக்கொண்டிருக்கும் என்னையும் எல்லோரோடும் இணைத்தமைக்கு நன்றி அருணா டீச்சர்.போர் கலைத்துப் புலம் பெயர்ந்தபோதும் உயிர் ஊசலாவது பிறந்த மண்ணில்தானே !
ReplyDeleteவெளிநாட்டில் இருந்து கொண்டு தங்களின் தாய்மொழியை மறக்காது எழுதிக் கொண்டு அனைவருடனும் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் அவர்களுடன் கைகோர்த்து உறவாடுவோம்.//
ReplyDeleteவாழ்த்துகள்..
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! பலரின் அற்புதமான படைப்புகளைப் படிக்க உதவிய அருணா மேடமிற்கு மிகவும் நன்றி. என்னையும் இங்கு குறிப்பிட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி! குறிப்பிடப்பட்ட சக நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்தாயை மறக்காது படைப்புகளை தருபவர்களை போற்றுவோம்.
ReplyDeleteஅறிமுகங்செய்த உங்களுக்கு வாழ்த்துகள்.
மொழிக்கு பெருமை சேர்ப்பவர்களை நீங்கள் பொறுமையாய் சிறப்பு செய்திருக்கிறிர்கள் மேடம் ...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் தமிழை மறக்காத இதயங்களை வாழ்த்துவோம்.
ReplyDeleteAnaivarum naan virumpith thodarum pathivarkal enach sollik kolla perumaiyaaka ullathu thodara vaazhththukkal
ReplyDeleteகவிஞர் அவர்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பிரேம்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நாகராஜ் ஜி.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் அறிமுகங்களைச் சென்று என் சார்ந்து அழைத்ததற்கும் மிக்க நன்றி தனபாலன் ஐயா.
ReplyDeleteநல்ல பதிவர்கள் அறிமுகம்...
ReplyDeleteஉங்கள் அறிமுகங்களில் பலர் நான் படித்தவர்கள் ... சிலர் படிக்காதவர்கள்...
படிக்கிறேன்...
அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
தன் உயிர் போனாலும் தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள் வந்த இனம் எம் இனம் இனவாத இலங்கையில் நாட்டில் இனி என்னாகும் என் நிலை என்ற போது பாரிஸ் ஓடிவந்தாலும் உயிர் தமிழ் உணர்வில் கலந்து தனிமரமாக வலையில் வருகின்றேன் ஒரு சின்னவன் நான் !என்னையும் மகுடம் சூட்டிய உங்களின் அன்புக்கு நன்றிகள் பலகோடி அருணா டீச்சர்!
ReplyDeleteபலரின் அறிமுகத்துக்கு நன்றிகள் கடல்கடந்து பதிவூடாக தமிழில் கலப்பதால்!
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி செய்தாலி அண்ணா.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் தோழி.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி இளமதி.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி முகில் அவர்களே.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கமல்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சசிகலா.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.
ReplyDeleteகனா காண்கிறேன் தளத்தை பலரின் கண்களுக்கு கொண்டுச் சேர்த்த தோழி அருணாவுக்கு என் நன்றிகள்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பிரியசகி.
ReplyDeleteதங்களின் முதல் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி விஜயன் அவர்களே.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் ஊக்கமளிக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனி அம்மா.
ReplyDeleteஎன் இனிய தோழி ஹேமா...
ReplyDeleteஉங்களின் புலம்பல்கள்
எங்களுக்கு ஆச்சர்யப்படும் பொக்கிஷங்களாக இருக்கிறது.
(அது என்ன அருணா டீச்சர்..? இந்த ஒரு வாரம் தான் வலைச்சர ”ஆசிரியர்“ பொறுப்பு...)
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஹேமா.
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கிரேஸ்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அரசன்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மூங்கில் காற்று.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சே.குமார் அவர்களே.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனிமரம்.
ReplyDeleteதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆதிரா அவர்களே.
ReplyDeleteஎங்கெல்லாம் தேடிப் பொறுக்கினீரோ
ReplyDeleteஅங்கெல்லாம் தமிழ் பரப்புவோரை...
திக்கெட்டும் தெறிகெட்டுப் பரவினாலும்
திக்கெட்டும் தமிழ் பேணுவோரை
வலைச்சரத்தில் படிக்க வைத்தீர்களே...
வலைச்சர ஆசிரியருக்கு நன்றிகள்!
எந்த மண்ணில் வாழ்ந்தாலும் தமிழைப் பிரியாமல் இணைந்திருக்கும் இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவலைச்சரம், ஆசிரியருக்கு நன்றி