சில விளையாட்டு
வீரர்கள் விடாப்பிடியா இடத்தை
பிடிச்சுகிட்டு நகரமாட்டேன்னு
இருப்பாங்க.
இதுக்கு ஆங்கிலத்தில
வொய் ன்னு கேட்கிறப்பவே ரிடயர்
ஆகிடணும்;
வொய் நாட் ன்னு
கேட்கிற காலம் வரை இருக்கக்கூடாதுன்னு
சொல்வாங்க!
அதே போலத்தான்
வொய் ன்னு கேட்கிறா மாதிரி
சிலர் வலை உலகத்திலேந்து
காணாமபோயிட்டாங்க.
ஆமாம்.
இப்ப எழுதப்போறது
காணாமல் போனோர் பட்டியல்!
என்ன
செய்யறது?
இயற்கையா பல
மாற்றங்கள் வரும்.
வேலை மாறும்,
வேலை செய்யும்
இடம் மாறும்,
சூழ்நிலை மாறும்;
திருமணம் ஆகும்,
குழந்தை பிறக்கும்.
இப்படி பல
மாறுதல்கள்.
அந்த சமயங்களில்
பதிவுகள் எழுத வாய்ப்பு இல்லாம
போய்,
அப்படியே
நின்னுபோயிடும்.
அப்பப்ப எங்கேயாவது
தலையை காட்டினாலும் இவங்க
இன்னும் எழுதக்கூடாதான்னு
மனசு ஏக்கத்தோட நினைக்கும்.
முன்னேயே
சொன்னபடி ஆன்மீகம் எழுதின
மதுரையம்பதி சந்த்ர மௌலி
ஒத்தர்.
மதுரைக்காரர்.
அப்புறமென்ன?
மீனாக்ஷி,
மீனாக்ஷி,
மீனாக்ஷிதான்.
குறிப்பா நவராத்ரி
குறித்து எழுதின பதிவுகள்
அருமை!
வேலை மாற்றங்கள்,
நேரமின்மைன்னு
விட்டுட்டார்.
ரொம்பவே
மிஸ் பண்ணுகிற பதிவுகள்
ஜாம்பஜார் ஜக்குவோடது.
http://jambazarjaggu.blogspot.in/2008/04/blog-post_29.html
புதிர்கள்
ஜோக்குகள்....
ஒவ்வொரு பதிவுக்கும்
2000
3000 ஹிட் கிடைச்சுகிட்டு
இருந்தது!
அவ்வளோ பாப்புலர்.
திடுதிப்புன்னு
2010 ல
நின்னுபோச்சு!
இவர் யாருன்னு
கூட தெரிஞ்சுக்க முடியலை!
இவர் இன்னும்
இருக்கத்தானே இருக்கார்;
இன்னும் எழுதக்கூடாதான்னு
நினைக்க வைக்கிறவங்க பெனாத்தல்
சுரேஷ்,
இலவச கொத்தனார்.
பெனாத்தல்
சுரேஷோட வைபாலஜி பதிவுகள்
உலகப்புகழ் பெற்றவை.
இவர் சீரியஸா நாவல்கள் எழுத
ஆரம்பிச்சார்.சீவாக சிந்தாமணி எளிய தமிழ் நடையில் புத்தகமா வந்திருக்கு. அல்வா ன்னு தமிழ்பேப்பர்ல தொடர் கதையும் எழுதி இருக்கார்.
வித்தியாசமான
பெயருடன் எழுதிகிட்டு இருந்த
இலவச கொத்தனார் ஆங்கிலத்துல
வேற பார்மேட்ல எழுத ஆரம்பிச்சுட்டார்.
குறிப்பா இவர்
பதிவு செய்த குறுக்கெழுத்து
போட்டிகள் மிகவும் சுவையா
இருந்தன.
அப்பப்ப வெண்பா,
அது,
இதுன்னு வித்தியாசமா
ஏதாவது செஞ்சுகிட்டு இருப்பார்.
இந்த
பதிவுக்காக போய் ஆராய்ஞ்சா,
இப்பவும் ரெண்டு
பேரும் ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு
ஒண்ணுன்னு பதிவு போடறாங்கன்னு
தெரியுது!
நல்லாயிருக்கட்டும்!
ஹ்யூமருக்கு
பேர் போன அம்பி என்கிற ரெங்கா
பாய் என்கிற ரங்கராஜன் கோவிந்தன்
அம்மாஞ்சி என்கிற வலைப்பூ
எழுதிகிட்டு இருந்தார்.
இள வயசுக்காரங்களுக்கு
பிடிக்கிற மாதிரி நகைச்சுவை
கலந்து எழுதுவார்.
வேலை மாறி
அமேரிக்கா போனதோட பதிவுகளும்
காணாம போச்சு.
ஊருக்கு போறப்ப
பெண்களூரே திரண்டு கண்ணீரும்
கம்பலையுமா வழி அனுப்பி
வெச்சதா கேள்வி!
இவங்க
பத்தியெல்லாம் ஏன் எழுதறேன்னு
கேட்கறீங்களா?
யாரேனும் இவங்க
ஏம்ப்பா திரும்ப எழுதக்கூடாதான்னு
கேட்டு,
அவங்களும்....
சரி சரி விடுங்க!
வரட்டா?
thundu :)))))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் வரதுக்குள்ளே ரெண்டு பேர் முந்திட்டாங்கப்பா! :))))
ReplyDeleteஎல்லாரையும் காணோமேனு நானும் நினைச்சுப்பேன், என்ன செய்யறது? அம்பி இல்லாமல் தீபாவளிக்குத் துணி வாங்கினாப்போலயே இல்லை. :)))))
தொடர
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஎன்ன செய்வது 2 பேர் முந்தி பின்னூட்டம் போட்டாங்கள் கவலையை விடும் நீங்கள் 3ம் இடம் மனதில் கவலை வேண்டாம் ஆறுதல் பரிசு கிடைக்கும்
(Geetha Sambasivam )ஓ ஓ ஓ
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காணாமல் போன பதிவர்கள்... தலைப்பே புதுசா இருக்கே... எல்லாரும் திரும்பவும் வந்து எழுதுங்க.... நன்றி...
ReplyDeleteஜாம்பஜார் ஜக்கு, முத்து பக்கங்கள் பார்த்ததில்லை. இலவசக் கொத்தனார் எப்போதோ ஒருமுறை பார்த்திருக்கிறேன்!
ReplyDeletejambajar jaggu really beautiful
ReplyDeleteஅம்பி சாருக்கு உண்மையாவே நேரமில்லைன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஇ.கொ,சுரேஷ்,வெட்டிப்பயல்,இன்னும் சில பதிவர்கள் திருமணபந்தத்தில் சேர்ந்த பிறகு எழுதுவது குறைந்துவிட்டது.
என்ன செய்கிறது நமக்குத்தான் நஷ்டம்.
புதிதாக வருபவர்களை வரவேற்று சந்தோஷம் அடையலாம்.
பல தளங்கள் புதியவை... நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...
ஜாம்பஜார் ஜக்கு அருமையான தளம் அறிந்து கொண்டேன்
ReplyDeleteமாதவிப்பந்தல் கே ஆர் எஸ் , பினாத்தல் சுரேஷ்,தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ இன்னும் மழை ஷ்ரேயா, ன்னு ஏகப்பட்ட பேரைக் காணோம்:(
ReplyDelete