அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கவிநயா, தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் சுய அறிமுகப் பதிவு , கதைச்சரம், கவிதைச்சரம், சுவைச்சரம், பகவற்சரம், கதம்பச்சரம், நன்றிச்சரம் என ஏழு பதிவுகள் எழுதி உள்ளார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ எழுபத்து மூன்று பேர். அறிமுகப் படுத்தப்பட்ட இவர்களின் பதிவுகளோ தொன்னூற்றைந்து. பெற்ற மறுமொழிகளோ இருநூற்று முப்பத்தைந்து - இவரது வலைச்சரப் பதிவுகளை வந்து பார்வை இட்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்.
கவிநயாவை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சமுத்ரா.
இவரது சொந்த ஊர் கோவை. இப்போது வேலை நிமித்தமாக பெங்களூரில் இருக்கிறார். ஏழு ஆண்டுகளாக கணினித்துறையில் பணியாற்றுகிறார். கலை, இலக்கியம், தத்துவம், ஆன்மிகம், அறிவியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர். " பெரிய கவிஞரோ , எழுத்தாளரோ ஒன்றும் கிடையாது -. ஜன மகா சமுத்திரத்தில் ஒரு சாதாரணன். " என தன்னை தன்னடக்கத்துடன் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
இவரை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கவிநயா
நல்வாழ்த்துகள் சமுத்ரா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteசமுத்ரா அவர்களே... வருக வருக... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசமுத்ரா சகோ..!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வலைச்சரப் பணியேற்றமைக்கு வாழ்த்துகள், சமுத்ரா!
ReplyDeleteசமுத்ரா அவர்கள்
ReplyDeleteவலைச்சரப் பணிக்கு
வாழ்த்துகள் ...!
சமுத்ரா அவர்களே... வருக வருக... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள் சமுத்ரா.
ReplyDelete