Friday, July 19, 2013

பதிவுலக பெரியோர்கள் -என் ரசனையில் ..


அன்பர்களுக்கு வணக்கம்

பதிவுலகில் இளம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் வயதில் மூத்தவர்களும் கலக்கி கொண்டு இருக்கிறார்கள் .இவர்கள் வயதில்  தான் மூத்தவர்கள் எழுத்துகளில் இளமை ஊஞ்சலாடுகிறது .அப்படி பட்ட சில  வலைபூக்கள் இங்கே


நினைத்து பார்க்கிறேன் 

திரு .வே.நடன சபாபதி  அவர்களது தளம் இது .தனது வங்கி அனுபவங்கள் கவிகள் என பலவற்றை எழுதி வருகிறார் .ஒரு சக வங்கியாளனாக நானும் இவரது வயதில் இப்படி தான் எழுதுவேனோ என்னமோ !

 பூவையின் எண்ணங்கள் 

திரு .பாலசுப்ரமணியம்  அவர்களது வலைப்பூ .பெண்களுக்கு  மிகவும் பயன்படும் .பல   சமையல் குறிப்புகளை எளிதாக கொடுக்கிறார் .உடம்பை சிறப்பாக பேணி காக்க இது உதவும்
  • முளைபயறு கூட்டு எப்படி செய்வது இங்கே படியுங்கள் 
  • மொளகூட்டல் இஞ்சி புளி செய்வது பற்றி இங்கே 


ஹாய் நலமா 

திரு.முருகானந்தம் அவர்களது வலைப்பூ .அறிவியல் தகவல்கள் கொட்டி கிடக்கிறது .இவர் ஓர் மருத்துவர் எனபது கூடுதல் சிறப்பு 



இன்னும் பல பெரியோர்கள் பதிவுலகை கலக்கி கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுள் புலவர் ராமனுஜம் ஐயா ,சென்னை பித்தன் ,திருமதி ரஞ்சனி நாராயணன்  போன்ற பதிவர்கள் உள்ளனர் .மீண்டும் ஓர் பதிவில் நாளை சந்திப்போம்

                                                                                                                     -பிரேமத்துடன்- 
                                                                                                                     பிரேம்குமார் .சி  

19 comments:

  1. பெரியோர்களின் தளங்கள் அனைத்தும் அருமையான தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இன்றைய வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி திரு பிரேம்.சி அவர்களே!

    ReplyDelete
  3. என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி, பிரேம்!
    டாக்டர் முருகானந்தம் அவர்களின் பதிவு படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.நான் மிகவும் விரும்பிப் படிக்கும் தளம் அவரது.
    திரு நடனசபாபதி, திரு சுப்பிரமணியன் அவர்களின் தளத்தையும் படிக்கிறேன்.

    அறிமுகமானவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. திரு GMB அவர்களின் தளமும் நான் படிப்பதுதான். நீங்கள் திரு சுப்பிரமணியம் என்று குறிப்பிடவே நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன். இணைப்பில் போய் பார்த்தவுடன் தெரிந்தது.
    நல்ல அறிமுகங்கள்,பிரேம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எனது ஹாய்நலமா புளக்கையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, பிரேம்.

    திரு.வே.நடனசபாபதி, ரஞ்சனி நாராயணன் அறிமுகமானவர்கள். படிக்கிறேன்.

    ஏனையவைற்றைப் பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete

  6. வலைச்சரத்தில் பூவையின் எண்ணங்கள் அறிமுகமாவது இது இரண்டாம் முறை. அண்மையில் துவங்கியது. முழு கவனமும் செலுத்த முடிவதில்லை. என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் gmb writes தளத்துக்கே என் முன்னுரிமை. என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பிரேம்.

    ReplyDelete
  7. ஹாய் நலமா திரு.எம்.கே.முருகானந்தனின் தளம் சிறந்த உளநல வழிகாட்டலைத் தருகிறது.

    ReplyDelete
  8. நம்ம சேட்டைகாரன் அவர்களும்

    ReplyDelete
  9. பெரியோர்களின் அறிமுகங்கள் மிக்க நன்று.

    ;பாட்டை மாத்துங்க கவிஞரையா! (1)

    ReplyDelete
  10. சிறப்பான அறிமுகங்கள் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. @திண்டுக்கல் தனபாலன்,//,நன்றி அன்பரே

    ReplyDelete
  12. @வே.நடனசபாபதி //நன்றி அன்பரே வருகைக்கு

    ReplyDelete
  13. @Ranjani Narayanan //நன்றி மேடம் உங்கள் கருத்துரை பார்த்தேன் ன் ம் ஆக்கினேன் பாலசுப்ரமணியம்

    ReplyDelete
  14. @Muruganandan M.K.//நன்றி ஐயா

    ReplyDelete
  15. @G.M Balasubramaniam//எழுதுங்கள் ஐயா

    ReplyDelete
  16. @ Jeevalingam Kasirajalingam //உண்மை தான்

    ReplyDelete
  17. @சக்கர கட்டி //உண்மை தான் நன்றி

    ReplyDelete
  18. @கலையன்பன் //உங்கள் வரவும் நன்று ..

    ReplyDelete
  19. @ Ambal adiyal//நன்றி அன்பரே

    ReplyDelete