Sunday, July 7, 2013

உடம்பு முழுதும் விஷம்....உடனே வெட்டுங்க!

இன்றைய வலைச்சரத்தில் இன்று உலக மக்களுக்கு மிகவும் தேவையான விழிப்புணர்வான  சுற்றுசூழல்  பாதுகாப்பு பற்றிய பதிவுகளைப் பகிர்கின்றேன்.  

முதலாவதாக சுற்றுசூழல் விழிப்புணர்வை சிறப்பாக ஏற்படுத்திவரும் மரம் வலைத்தளத்தில் இடப்பட்டுள்ள அரச மரத்தின் சிறப்பு  என்ற பதிவு . 

அடுத்தபடியாக பிரபல எழுத்தாளர் தேனம்மை லட்சுமணன் அவர்கள் தளத்தில் எழுதியுள்ள மின்சார சிக்கனம் தேவை இக்கணம் பதிவு மிகவும் அருமையாக உள்ளது . மின்சாரத்தை வீணடிப்பவர்களுக்காக சாமானிய மக்கள் துன்பத்தை  அனுபவிக்கவேண்டுமா என்ற சிந்தனையைத் தூண்டுகிறார். 

அடுத்தபடியாக தண்ணீரை வீணடிப்பதன் தீங்கையும் தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தையும் விளக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே தளத்தின் தண்ணீர் தண்ணீர் கட்டுரை  அருமை. 

அடுத்ததாக பிளாஸ்டிக்கை தவறாக உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளை மிக அருமையாக பிளாஸ்டிக் உலகம் என்ற பதிவின் மூலமாக திரு மதிவாணன் அவர்கள் அருமையாக விளக்குகிறார்கள். 

அடுத்தபடியாக வாகனப் புகையின் தீங்கை அருமையான முறையில் விளக்கியுள்ள வாகன புகை என்ற தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் கட்டுரை சிறந்த விழிப்புணர்வு. 

அடுத்தபடியாக சுற்று சூழல் அக்கறையை எழுத்து மூலமாக மட்டுமல்லாமல் செயலிலும்  வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்  பசுமை விடியல் அமைப்பின் நிறுவனர் சகோதரி மனதோடு மட்டும் கௌசல்யா ராஜ் அவர்களைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் தளத்தில் வெளியான மரங்களை வெட்டுங்கள் பதிவை நான் அகில இந்திய வானொலியில் பேசி பாராட்டப்பெற்றேன் . 

நிறைவாக எனது தளத்தில் பதிவு செய்துள்ள நம் சந்ததிகளைக் காக்க நாம் உடனடியாக செய்யவேண்டிய 10 என்ற பதிவைப் பகிர்ந்து வலைச்சர ஆசிரியர் பணியைக் கொடுத்து என்னை பெருமைப்படுத்திய வலைச்சரம் நிர்வாகிகள் திரு . சீனா ஐயா மற்றும் நண்பர் பிரகாஷ் குமார் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்து  இவ்வாரம்  முழுவதும் கருத்திட்டு ஊக்கப்படுத்திய பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும்  நன்றியைத் தெரிவித்து  விடை பெறுகிறேன் .

9 comments:

  1. நல்ல பதிவுகளின் தொகுப்பு,நன்றி.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள்...
    சிறப்பான தொரு வாரமாக கொண்டு சென்றீர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவர்கள்! சிறப்பான பதிவுகள்! பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சிறப்பான பல தளங்களை அறிமுகம் செய்து வைத்தீர்கள்... நன்றி... இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. பல முக்கிய த[கவல் த]ளங்களை அழகாய் அறிமுகப்படுத்தினீர்கள்
    பாராட்டுகளும் நன்றியும்.

    www.nizampakkam.blogspot.com

    ReplyDelete
  6. அறிமுகங்கள் சூப்பர்!

    http://kalaiyanban.blogspot.com/2013/07/blog-post.html

    ReplyDelete
  7. சிறப்பான வலைச்சர வாரம்....

    வாழ்த்துகள் பாலா.....

    ReplyDelete
  8. உங்களின் சுற்றுச்சூழலின் மீதான ஆர்வம் பற்றி எல்லோரும் அறிவர், வலைசரத்தில் இதற்காக ஒரு நாளை ஒதுக்கி பதிவுகளை அறிமுகபடுத்தியதற்கு மகிழ்கிறேன்...

    எனது தளத்தையும் இதில் ஒன்றாக சேர்த்ததற்கு என் மனமார்ந்த
    நன்றிகள் பாலா...

    இதனை தெரிவித்த தனபாலன் சார் அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete