————————————————————————————————
முன்குறிப்பு : சிவப்பு எழுத்தில காணப்படுபவைகளைக் கிளிக்கி பதிவுகளைப் படிக்கலாம்!
————————————————————————————————
‘‘ஹாய்... வெல்கம் டு டீ வித் திவ்யா பவர்டு பை வலைச்சரம். இன்னிக்கு நிகழ்ச்சில நாம சந்திக்கப் போறது ஒரு பிரபல(!) வலைப்பதிவரை. இவர் ‘மின்னல் வரிகள்'ன்ற தளத்துல சிறுகதைகளும், கட்டுரைகளுமா எழுதி 300வது பதிவை நெருங்கிட்டிருக்கார். வெங்கம் டூ பாலகணேஷ் ஸார்...!" என்க, அவர் மெதுவாக நடந்து வந்து திவ்யாவின் எதிரில் அமர்கிறார்.
‘‘ஹாய் பாலா ஸார்... எப்படி இருக்கீங்க?" என்கிறார் திவ்யா.
‘‘பாத்தா தெரியலையா? கொஞ்சம் குண்டா இருக்கேன்" என்று பாலகணேஷ் கடிக்க, ‘‘கொஞ்ச மில்லை... ரொம்பவே" என்று திவ்யா பதிலுக்குக் கடித்துச் சிரிக்கிறார். பாலகணேஷ், ‘ழே' என்று விழித்தபடி இருக்கையில் அமர... ‘‘அப்புறம்... சொல்லுங்க பாலா ஸார்... நீங்க எப்போ எலுத ஆரம்பிச்சீங்க?"
‘‘அது... எனக்கு அஞ்சு வயசு இருக்கும். எங்கப்பா மங்கையர்க்கரசி மிஸ்கிட்ட என்னை சேத்து விட்டதும், அவங்க என் கையப் பிடிச்சு ஸ்லேட்டுல ‘அ’ போடச் சொல்லித் தந்தாங்க. அப்ப..."
‘‘அவ்வ்வ்வ்...! அதைக் கேக்கலை ஸார் நானு. இணையத்துல எப்ப எலுத ஆரம்பிச்சீங்கன்னு கேட்டேன்..."
‘‘ஓ... அதுவா? 2011ம் வருஷம் செப்டம்பர் மாசத்துலருந்து எழுத ஆரம்பிச்சேன். ஏதோ நான் கிறுக்கறதையும் நல்லாருக்குன்னு பல நட்புகள் பாராட்டறதால இன்னும் என் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்குது..."
‘‘உங்குலுக்கு கதை எழுதறது பிடிக்குமா? இல்ல... கட்டுரைகள் எழுதறது பிடிக்குமா?"
‘‘நான் எழுதறது கதையா, கட்டுரையான்னு பல சமயங்கள்ல எனக்கே புரியறதில்லீங்க... அதனால பொதுவா எழுதறது பிடிக்கும்னு வெச்சுக்கலாமே...!"
‘‘ஓ.கே. ஸார்... உங்க இன்டர்வியூ மேல தொடர்றதுக்கு முன்னால ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக்..." என்று திவ்யா க்ளோஸப்பில் சிரித்து பயமுறுத்த, திரையில் விளம்பரங்கள் ஓடுகின்றன...
‘‘பாத்தா தெரியலையா? கொஞ்சம் குண்டா இருக்கேன்" என்று பாலகணேஷ் கடிக்க, ‘‘கொஞ்ச மில்லை... ரொம்பவே" என்று திவ்யா பதிலுக்குக் கடித்துச் சிரிக்கிறார். பாலகணேஷ், ‘ழே' என்று விழித்தபடி இருக்கையில் அமர... ‘‘அப்புறம்... சொல்லுங்க பாலா ஸார்... நீங்க எப்போ எலுத ஆரம்பிச்சீங்க?"
‘‘அது... எனக்கு அஞ்சு வயசு இருக்கும். எங்கப்பா மங்கையர்க்கரசி மிஸ்கிட்ட என்னை சேத்து விட்டதும், அவங்க என் கையப் பிடிச்சு ஸ்லேட்டுல ‘அ’ போடச் சொல்லித் தந்தாங்க. அப்ப..."
‘‘அவ்வ்வ்வ்...! அதைக் கேக்கலை ஸார் நானு. இணையத்துல எப்ப எலுத ஆரம்பிச்சீங்கன்னு கேட்டேன்..."
‘‘ஓ... அதுவா? 2011ம் வருஷம் செப்டம்பர் மாசத்துலருந்து எழுத ஆரம்பிச்சேன். ஏதோ நான் கிறுக்கறதையும் நல்லாருக்குன்னு பல நட்புகள் பாராட்டறதால இன்னும் என் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்குது..."
‘‘உங்குலுக்கு கதை எழுதறது பிடிக்குமா? இல்ல... கட்டுரைகள் எழுதறது பிடிக்குமா?"
‘‘நான் எழுதறது கதையா, கட்டுரையான்னு பல சமயங்கள்ல எனக்கே புரியறதில்லீங்க... அதனால பொதுவா எழுதறது பிடிக்கும்னு வெச்சுக்கலாமே...!"
‘‘ஓ.கே. ஸார்... உங்க இன்டர்வியூ மேல தொடர்றதுக்கு முன்னால ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக்..." என்று திவ்யா க்ளோஸப்பில் சிரித்து பயமுறுத்த, திரையில் விளம்பரங்கள் ஓடுகின்றன...
‘‘வெல்கம் பேக் டு டீ வித் திவ்யா பவர்டு பை வலைச்சரம். ஸார்... உங்களுக்குப் பரிச்சயமான சில வலைப்பதிவர்கள் கிட்ட நீங்க எல்தினதுல அவங்கலுக்குப் பிடிச்ச பதிவு எதுன்னு கேட்டு ஒரு பேட்டி எடுத்தோம். அதை நாம இப்ப பாக்கலாம்" என்று திவ்யா சொல்ல... திரையில் காட்சிகள் விரிகின்றன.
‘‘மிஸ்டர் சீனு...! மின்னல் வரிகள்ல நீங்க படிச்சதுல உங்கல்க்குப் பிடிச்சதுன்னு எதைச் சொல்வீங்க?" என்று கேட்கப்பட, நீஈஈஈண்ட நேரம் யோசித்துவிட்டு (யோசிக்கிற நேரத்துல அவர் பார்வை அலைஞ்சதை எடிட் பண்ணியாச்சு! ஹி... ஹி...!) ‘‘வாத்தியார் எழுதினது எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னாலும்கூட, குறிப்பா... நானும் ஒரு கொலைகாரனும், கொன்னவன் வந்தானடி ரெண்டுமே எனக்குப் பிடிச்சவை’" என்கிறார் சீனு. ‘‘க்ரைம்ன்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கறதாலதான் ஒரு ‘ரகசியத்தை' இன்னும் முழுசாச் சொல்லாம இருக்கீங்களா?" எனக் கேட்கப்பட... ‘ஹீ... ஹீ.... ஹீ...!' என்று தன் ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி எஸ்கேப்பாகிறார் சீனு.
தன் மகனைப் போல முகமூடி ஒன்றை மாட்டியபடி கேமரா முன் தோன்றுகிறார் ஸ்கூல் பையன். ‘‘வணக்கம் மிஸ்டர் ஸ்கூல் பையன்! நீங்க ஏன் உங்க பையன் முகமூடிய மாட்டிட்டு நடமாடறீங்க?" எனக் கேட்கப்பட, ‘‘அதுவா... நான் ப்ளாக்லயும், டிவிலயும் வர்றதப் பாத்தா ஆஃபீஸ்ல என் மேனேஜர் திட்டுவாரு... மத்த ஸ்ஃடாப்லாம் அடிப்பாங்க... அதான்..." என்று ஸ்.பை. இழுக்கிறார். ‘‘சரி, மின்னல் வரிகள்ல உங்களுக்குப் பிடிச்ச பதிவு எது? யோசிச்சுச் சொல்லுங்க..." ‘‘யோசிக்காமலே சொல்வேங்க - மின்னலடிக்குது மீண்டும் பதிவுதான். தனக்கு நேர்ந்த கஷ்டத்தைக் கூட நகைச்சுவை ததும்ப சொல்லியிருந்தது எனக்கு ரொம்பவே பிடிச்சது" என்கிறார். ‘‘அப்படியா... சரி, உங்க ஆபீஸ் போன் நம்பர் என்ன?" என்று திவ்யா கேட்க, ‘‘அவ்வ்வ்வ்!" என்று அழுதபடியே ஓடுகிறார் ஸ்.பை.!
அதைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கிற பாலகணேஷை இந்த நேரம் பார்த்துத்தானா கேமராமேன் க்ளோஸப்பில் காட்டித் தொலைய வேண்டும்? பாதி வீடுகளில் பார்ப்பவர்கள் பயந்து ரிமோட்டைக் கையிலெடுக்க டி.வி. திரைகள் இருள்கின்றன. இப்போது திரையில் வருகிறார் கோவை ஆவி. ‘‘மிஸ்டர் ஆவி! உஙக பேரைக் கேட்டாத்தான் டெரரா இருக்கு. நேர்ல பாத்தா..." என திவ்யா இழுக்க... ‘‘என்ன... காமெடி பீஸ் மாதிரி இருக்கேன்னு சொல்ல வர்றீங்களா?" என்று கோபமாக நிமிரும் ஆவி, திவ்யாவின் சிரிப்பைப் பார்த்ததும் கூலாகிறார். ‘‘ரைட்... நீங்க சொல்லலாம்...! ஹி... ஹி...! நீங்க கேட்டதுக்கு பதில் : மின்னல் வரிகள்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் நடை வண்டிகள் தொடர்தான்...." என்கிறார்.
அடுத்ததாக திரையில் தோன்றும் அரசனிடம், ‘‘நீங்க எந்த நாட்டுக்கு அரசன் ஸார்?" என்று கேட்கப்பட... ‘‘எங்க ஊருல நான் ராஜாங்க. அதான் இந்தப் பேரு..." என்கிறார் அரசன். ‘‘ரைட்டு... மின்னல் வரிகள்ல உங்கல்க்குப் பிடிச்ச பதிவுன்னு எதைச் சொல்வீங்க?" என்கிற கேள்விக்கு கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘சிரித்திரபுரம் எழுதினாரு பாருங்க... அதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுல இருந்த நான்ஸ்டாப் காமெடியை ரொம்பவே ரசிச்சேன்..." என்கிறார் அரசன்.
பார்க் பென்ச்சில் நாட்டாமை போல கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் ரூபக்ராம் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்காகச் சிரித்தாரா, இல்லை கேள்வி கேட்ட திவ்யாவைப் பார்த்துச் சிரித்தாரா என்பது தெரியாதபடி ஒரு மர்மப் புன்னகையைச் சிந்திவிட்டு, ‘‘எனக்கு அவர் எழுதினதுல சரிதாயணமும், மொறுமொறு மிக்ஸரும்தான் ரொம்பப் பிடிக்கும்" என்கிறார். ‘‘அதுசரி மிஸ்டர் ரூபக்... நீங்க உங்க காருக்கு ஏதோ பேர் வெச்சிருக்கறதா கோவை ஆவி சொன்னாரு. அதென்ன பேரு?" என்று திவ்யா கேட்க, ‘‘அதை நான் இன்னும் வாத்தியாருக்கே சொல்லாம ரகசியமா வெச்சுட்டிருக்கேன்... போட்டு உடைச்சிராதீங்கம்மா..." என்றபடி ‘ஸ்டாப் ப்ளாக்'கில் காணாமல் போகிறார் ரூபக்.
பார்க் பென்ச்சில் நாட்டாமை போல கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் ரூபக்ராம் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்காகச் சிரித்தாரா, இல்லை கேள்வி கேட்ட திவ்யாவைப் பார்த்துச் சிரித்தாரா என்பது தெரியாதபடி ஒரு மர்மப் புன்னகையைச் சிந்திவிட்டு, ‘‘எனக்கு அவர் எழுதினதுல சரிதாயணமும், மொறுமொறு மிக்ஸரும்தான் ரொம்பப் பிடிக்கும்" என்கிறார். ‘‘அதுசரி மிஸ்டர் ரூபக்... நீங்க உங்க காருக்கு ஏதோ பேர் வெச்சிருக்கறதா கோவை ஆவி சொன்னாரு. அதென்ன பேரு?" என்று திவ்யா கேட்க, ‘‘அதை நான் இன்னும் வாத்தியாருக்கே சொல்லாம ரகசியமா வெச்சுட்டிருக்கேன்... போட்டு உடைச்சிராதீங்கம்மா..." என்றபடி ‘ஸ்டாப் ப்ளாக்'கில் காணாமல் போகிறார் ரூபக்.
க்ளிப்பிங்குகள் ஓடி முடிந்திருக்க, திவ்யா பாலகணேஷிடம் திரும்புகிறார். ‘‘ஸார்... எல்லாரும் சொன்னதைக் கேட்டீங்க... நீங்க எலுதினதுல உங்கலுக்குப் பிடிச்சது எதுன்னு சொல்லுங்க இப்போ..." என்க, ‘‘நான் எலுதின... ஸாரி, எழுதின எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகமா எனக்குப் பிடிச்சது என்னன்னா..." என்று இழுக்க... ‘‘என்ன ஸார்?" என்கிறார் திவ்யா. ‘‘நீங்க உங்கலுக்கு, எலுதினதுன்னு பேசாம ழகரத்தை சரியா உச்சரிச்சுப் பேசினா எனக்கு ரொம்பப் பிடிக்கும்..." என்ற பாலகணேஷிடம் அவசரமாக, ‘‘எங்க நிகல்ச்சில சிறப்பு விருந்தினரா கலந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி ஸார்..." என்று திவ்யா கை கூப்ப, கேமரா அவரின் மேல் ஃப்ரீஸாக... ரிமோட்டை உங்களின் கை நாட... டி.வி. திரை இருள்கிறது.
நாளைய சிறப்பு நிகழ்ச்சி :
கொஞ்சம் காபி, நிறைய இலக்கியம்!
காணத் தவறாதீர்கள்!
கணேசபாகவதரின் கச்சேரி-யைக் கேட்க விருமபுபவர்கள் இங்கே க்ளிக்கிப் படிககவும்!
எலுத என்று படித்ததும் முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைத்தேன், மீண்டும் வந்ததும் திவ்யாவின் தமிழ்ப் பிரயோகம் என்று உணர்ந்து அதியசித்தேன்.....
ReplyDeleteஅதுசரி ஸ.பை. உன்னோட படம் எப்படியிருந்துச்சுன்னு சொல்லியே...? டாங்ஸ்!
Deleteநான் கூட அப்படித்தான் நினைச்சேன்.. பால கணேஷ் சாரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதியிருக்காரேன்னு...முலுசும் படிச்சதும்தான்.... சேச்சே... முழுசும் படிச்சபிறகுதான் தெரிந்தது...வாழ்த்துக்கள் பால கணேஷ் சார்..
Deleteகலக்கிட்டீங்க பால கணேஷ் சார்...உங்களை பாராட்டி பேச வச்ச சாக்குல நண்பர்களை அறிமுகப்படுத்திய விதத்தை ரொம்ப ரசிச்சேன்.
ReplyDeleteஅடேங்கப்பா...ஒரே கல்லுல எத்தனை மாங்கா அடிக்கிறீங்க!!!!
சூப்பர்.வாழ்த்துக்கள்.
சுயதம்பட்டம் மட்டுமே அடிச்சுட்டா ரொம்ப ஓவராயிடும்னு தோணிச்சு. அதான் என் டீமை சந்தடிசாக்குல நுழைச்சாச்சு. ஐடியாவை ரசிச்ச உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஸார்!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா..
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்....தொடருகிறேன் பதிவுகளை.
புதிய பதிவாக-என் வலைப்பூ பக்கம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி.. வாருங்கள் வந்து பாருங்கள்
இதோ முகவரி-http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி ரூபன்!
Deleteஎன்னோட போட்டோ சரியா வரலையே வாத்தியாரே, தலை நேரா இருக்கு, முண்டம் பக்கவாட்டில இருக்கே....
ReplyDeleteசில பேர் கேப்பை தலைகீழா தலையில போடற மாதிரி... முகத்துல முகமூடி மாட்டியிருக்கறதக் காட்ட அப்டிப் பண்ணினேன் ஸ்.பை.!
Deleteபெசல் இன்ட்றீவ்வு படா சோக்கா கீதுபா... எடைல அட்வடேசுமண்டுலாம் குட்த்துனுகீற... அப்பாலிக்கா அல்லா பிச்சரும் சூப்பரா கீதுபா...
ReplyDeleteஇனட்றவ்வீயூவையும் அட்வடைஸ்மெண்ட்டையும் சேர்த்து ரசித்த நைனாவுக்கு மனம் நிறைய நனறி!
Deleteஅசத்தல் அறிமுகம் நண்பர்களுக்கு வாழ்த்துகள் (பட்டியலில் நீங்களும்) டமிலை மன்னிக்க தமிழை ஆங்கில நுனிநாக்கில் பேசுவதே நாகரீகமா போச்சு. கத்துகிட்ட சைனா காரன்களும் காரிகளும் அழகு தமிழில் தான் பேசுகிறார்கள், நம்மவர்கள் தான் இன்னமும் அல்கு டாமிலில் பேசி வருகின்றனர்
ReplyDeleteசில சமயங்களில் வேற்று மொழிக்காரர்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருப்பதை நானும் கவனித்ததண்டு. அந்த ஆதங்கத்தின் விளைவே இந்த நகைச்சுவையில் பிரதிபலிக்கிறது. வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி கலாகுமரன்!
Deleteமிக வித்தியசமாக அறிமுகப் பதிவு எழுதி கலக்கிட்டீங்க.... மின்னல் டிவி என்றதும் உண்மையில் இங்கு வரும் நம்ம மின்னல் டிவி என்றுதான் நினைத்துவிட்டேன் அதன் பின் தான் அதன் Logo வைப் பார்த்ததும் அது உங்கள் கைவண்ணம் என்று அறிந்து கொண்டேன் பாராட்டுக்கள். சரி தொடர்ந்து இது போல கலக்குங்க.. அதுக்குள்ள நானும் சரக்கை கலக்கிட்டு வந்துடுறேன்
ReplyDeleteமின்னல் டிவின்னு ஒண்ணு நிஜமாவே இருக்கா? நான் கற்பனையா எனக்காகத் துவக்கினேன். நல்லா இருக்குன்னு சொல்லி ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா!
Deleteவழக்கம் போல் உங்கள் பானியில் அருமை... போட்டோ எடிட்டிங் சூப்பர்... அதுலயும் நடுவுல வந்த விளம்பர இடைவேளை அசத்தல்.... முதல் பதிவே சிக்சர்....
ReplyDeleteவிளம்பர இடைவேளையையும் கூட ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteஎலுதினதுல உங்கலுக்குப் பிடிச்சது//
ReplyDeleteஅண்ணே கலக்கல்ஸ்.....சிரிச்சு உருண்டுட்டு இருக்கேன்.
அறிமுக பதிவர்கள் கொஞ்சம் பேர் தெரியாதவர்கள், பாக்கி எல்லாம் நம்ம பசங்கதான், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ரசிச்சுப் படிச்சு சிரிச்சு எங்களை வாழ்த்தின மனோவுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteவாத்தியார் ஸ்டைல்ல அசத்தலான ஆரம்பம்....
ReplyDeleteநன்றி ஸ்.பை.!
Deleteமுதல் நாளேஅடித்து தூள் கிளப்பிட்டீங்க.ஆவிக்கு ஒரு நஸ்ரியா மாதிரி இனி கணெஷண்ணாவுக்கு ஒரு பிரியாவா?
ReplyDeleteஇல்லம்மா... சும்மா ஜாலிக்கு இந்த முறை மட்டும் திவ்யா கேரக்டர்! தூள் கிளப்பிட்டேன்னு சொல்லி உற்சாகம் தந்தமைக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஅடிப் பொளியாயிட்டு ஒரு அறிமுகம் சாரே..... வளர நன்னாயிட்டுண்டு!
ReplyDeleteபடங்கள் எடிட்டிங் பிரமாதம் கணேஷ். வாழ்த்துகள்.
அறிமுகங்களை ரசித்ததுடன் படங்களின் கைவேலையையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி நண்பா!
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவித்தியாசமாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்!..
வித்தியாசம் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteநினைத்தது மாதிரியே
ReplyDeleteசுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும்
அற்புதமாகவும் கச்சேரியைத் துவக்கி இருக்கிறீர்கள்
ஜமாயுங்கள்
வாழ்த்துக்களுடன்....
ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇந்த தங்கச்சியை மறந்துட்டு ஆவி, ஸ்பை, அரசன், ரூபக், சீனு மட்டுதான் நினைவிருக்கு போல!!
ReplyDeleteமறக்கலைம்மா... உங்கிட்டயும் உஷா அன்பரசு கிட்டயும் கேக்கலாம்னு எண்ணம் இருந்தது. ஃபோட்டோ போடணும்கற காரணத்தால அதைச் செய்யாம விட்டுட்டேன். நன்றி!
Deleteகலகலப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டு விட்டீர்கள்!
ReplyDeleteசிரிப்புச் சிறையில் அகப்பட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி கே.ஜி. ஸார்!
Deleteவித்தியாசமாய்...
ReplyDeleteகலக்கலாய்...
நகைச்சுவையாய்...
திவ்யாவின் தமிலுமாய்...
தங்களின் தமிழுமாய்...
ஆஹா நகைச்சுவை மன்னர்
எங்கள் அண்ணன்
கலத்தில் குதிச்சாச்சு...
இனி இந்த வாரம்
சூப்பர் காமெடி வாரம்தான்...
வாழ்த்துக்கள் அண்ணா...
நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்து வாழ்த்திய தம்பிக்கு அண்ணனின் மனம் நிறைந்த நன்றி!
Deleteசெமையா கலக்கியிருக்கீங்க பாலா சார்... திவ்யான்னு சொல்லிட்டு நஸ்ரியா மாதிரியே இருக்கு அந்த பொண்ணு... ஆ.வி.க்கு போட்டியா சார்...உங்க பதிவுகளை உங்க நண்பர்களை விட்டு அறிமுகப்படுத்தியது... அருமை... இன்னம் சிரிக்க காத்திருக்கிறேன்.
ReplyDeleteநஸ்ரியாவோட என்னைப் பாத்து ஆவி காதுல கொஞ்சம் புகை வரட்டுமேன்னுதான்... ஹி... ஹி...! இந்த வாரம் பதிவுகளை என்னோட ‘டச்’ல எதிர்பார்க்கிறேன்னு நீங்க சொன்னதுமே அது ஹ்யூமர்தான்னு முடிவு பண்ணிட்டேன். சிரிக்க காத்திருக்கேன்னு சொல்லி தெம்பூட்டின உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteபுகையா.. இங்க ஒரு கணபதி ஹோமமே நடந்து முடிஞ்ச எபெக்ட் இருக்கு வாத்தியாரே.. ஹஹஹா (விளையாட்டுக்கு சொன்னேன்..வேற எப்படி மனச தேத்திக்கறதாம்? ;-) )
Deleteஅண்ணே உங்க எழுத்து எல்லாமே பிடிச்சது தான்.. பிரபல எழுத்தாளர்களுடன் உங்கள் நட்பில் ஆரம்பித்து சரிதாயணம் வரை அனைத்தும் ரசிக்கத்தக்கவையே...
ReplyDeleteமொத்தமாக என் எழுத்தை ரசிக்கும் பிரதர் சங்கவிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவாத்தியாரே செம, கிளாப்ஸ் கிளாப்ஸ் கிளாப்ஸ்
ReplyDeleteகரவொலி எழுப்பி உற்சாகமாகப் பாராட்டிய பிரதர் ஹாரிக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துச் சொன்ன தென்றல் மேடத்துக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteசுய அறிமுகமே இப்படியா...? அசத்துங்க சென்னை நண்பர்களின் வாத்தியாரே....!
ReplyDeleteபதிவர்களுக்கு எனர்ஜி டானிக் தரும் டி.டி.யின் வாழ்த்து மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி!
Deleteஎன்ன நடக்குது இங்க கலாட்டா..? ஒரு நாள் ஊர்ல இல்லைன்னா என்னன்னமோ நடக்குது... ஆபிஸ்ல ரொம்ப வேலை... சும்மா பேஸ்-புக் பக்கம் எட்டி பார்த்தா... அட நம்ம பாலகணேஷ் சார் வலைப்பதிவுக்கு வாத்தியாரா ஆகியிருக்க சேதி தெரிஞ்சது.. அவ்வளவுதான் ஒரே ஜம்ப்... வலைச்சரத்துக்கு...! வாவ்.. என்னமா கலக்கியிருக்கிங்க... மின்னல் வரி சானல் லோகோ, பேட்டி போட்டோ.... எல்லாமே ரொம்ப சூப்பர்...! புதுசா யோசிக்கிறதுல நீங்க வாத்தியாரேத்தான்..! சரி சரி என்ன வேலை இருந்தாலும் இந்த வாரம் முழுக்க ஆஜராயிடுவேன்..... ஏன்னா எனக்கு சிரிக்க பிடிக்கும்...!
ReplyDeleteஅவசியம் வரணும் உஷா...! நான் சரியா செயல்படறேனான்னு உறுதிப்படுத்திக்கறதுக்கு உங்களோட கருத்தும் மிகமிக அவசியம். சிரிக்கத் தயாராயிட்டேன்னு சொன்ன உங்களுக்கு சந்தோஷமா என் நன்றி!
Deleteவலைச்சர ஆ'சிரி'யருக்கு வாழ்த்துகள். ஆரம்பமே அசத்தலாயிருக்கு.
ReplyDeleteஉற்சாகம் தந்த உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி சாரல் மேடம்!
Deleteவலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்:)!
ReplyDeleteபதிவுகளில் ஐந்து சதம் தொட்ட உங்களுக்கு முதலில் என் மகிழ்வான நல்வாழ்த்துகள் மேடம்! மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஅப்படியே அதிசயித்து அசந்துபோய் நின்றேன் சகோதரரே!... உங்கள் திறமை மலையளவு!
ReplyDeleteகீழே ஒரு கூழாங்கல்லாக அண்ணாந்து பார்த்தேன்! ஆச்சரியம்தான்!
அறிமுகப் பதிவு டீவி ஷோ அமோகமாக இருந்தது. அறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோ!
ஹச்சச்சோ... நான் அவ்ளவ் உயரமான ஆளு எல்லாம் இல்லீங்கோ... கவிதைத் திறமைல உங்களுக்குப் பலபடி கீழதான்! ரசித்துப் பாராட்டின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இருமுறை வாழ்த்துச் சொல்லி மகிழ வைத்த வேதாம்மாவுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வணக்கம் வாத்தியார் அவர்களே ....
ReplyDeleteசற்று வித்தியாசமான அறிமுகங்கள் ... உங்களின் எழுத்து நடையில் பட்டைய கிளப்புது ....
பதிவு எழுத எடுத்துக்கொண்ட நேரங்களை விட போட்டோ தயார் பண்ண எடுத்துக்கொண்ட நேரம் அதிகமென்று படங்களே சொல்கின்றன ... வாத்தியார் னா சும்மாவா ?.... வாரம் முழுக்க களை கட்டட்டும் வாழ்த்துக்கள் சார் ...
உங்களனைவரின் ஆதரவுடன் களைகட்டும் ராஜா! படங்கள் தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட சிரத்தையை நீங்க புரிஞ்சு பாராட்டினது உற்சாகமா இருக்கு. மிக்க நன்றிப்பா!
Deleteதிவ்யா என்பதை மாற்றி ஸ்ரீ வித்யா என்று நான் படித்துக்கொள்கிறேன் ஹி ஹி .. நமக்கு இந்த அம்மிணி னா அலர்ஜி அதான் மாற்றிக்கொண்டேன் ... ஆவி கிட்ட சொல்லிடாதிங்கோ ///
ReplyDeleteநாஞ்சொல்ல மாட்டேம்பா... மலைய விட்டு இறங்கின ஆவி அவரா வந்தாத்தேங்...!
Deleteகொஞ்சம் ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்ன எல்லாம் நடக்குது இங்கே!!
Deleteசரியான நேரத்தில் தான் கச்சேரி வைச்சிருக்கிங்க பாகவதரே .. நான் டிசம்பர் சீசன் தொடங்கியாசின்னு சொன்னேன்
ReplyDeleteஅட... ஆமாம்ல... டிசம்பர் இசை, கச்சேரி சீசனாச்சே... சுட்டினதுக்கு நன்றி நண்பா!
Deleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். இந்த வாரம் அசத்தலாக இருக்கப் போகிறது என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ள முடிந்தது சார்...
ReplyDeleteபிரமாதம்.. படங்கள் எடிட்டிங், மின்னல் டிவி அனைத்தும் சிறப்பு..
எல்லாம் சிறப்பு என்கிற உங்களின் வார்த்தை மலையளவு தெம்பு தருகிறது தோழி! மிக்க நன்றி!
Deleteசூப்பரான அறிமுகம்...
ReplyDeleteகலக்குங்க...
பாராட்டி வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நட்பே!
Deleteமுதல்நாளே வித்தியாசமான முறையில் கலக்கி விட்டீர்கள். நாட்டில் மழை பெய்வதால் கரண்ட் கட் இல்லை. அதனால்தான் உங்கள் பதிவை உடனே படிக்க முடிந்தது.
ReplyDeleteஇன்றைய அடைமழையை நான் சற்றும் எதிர்பார்க்கலை. ஆனா மழைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்கறதால ஆனந்தமா இருந்துச்சு. அதைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டின உங்களுககு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஆரம்பமே அதிருது பால கணேஷ் சார் கை வண்ணத்தில். அதிலும் மற்ற நண்பர்களிடம் பேட்டி எடுப்பது போல் அமைத்திருந்தது சூப்பர்
ReplyDeleteபேட்டி ஸ்டைலை ரசித்த குடந்தையூராருக்கு இதயம் நிறை நன்றி!
DeleteJust now I heard that TRP rating of the new channel Minnal TV has touched Himalayan height. Is it so? Can u not at least use a better compere in your imaginary minnal channel? I stopped watching TV channels only for this purpose and that too in the so called traditional tamil channels (who claims that Tamil language still lives because of them) their pronunciation is so horrible. Above all, they kill the language of English also in some realty programmes.
ReplyDeleteடி.வி.யே பாக்காத உங்களைப் போன்றவர்கள் எனக்காக மின்னல் டிவியைப் பார்த்ததால டிஆர்பி ரேட்டிங் எகிறியிருக்கும். சானல்களில் பேச்சு வழக்கில் தமிழ் கடிபடுவதை சொன்னதை ரசித்த உங்களுககு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஅறிமுகம் வித்தியாசமாக அருமையாக இருந்தது. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்திய தங்கள் அன்புள்ளத்திற்கு உளம் கனிந்த நன்றி!
Deleteஒரு டிவி ஷோவே நடத்திடீங்களே.... சூப்பர் சார் ....
ReplyDeleteடி.வி. ஷோவை ரசித்த சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவணக்கம்...
ReplyDeleteநீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
புதிய தகவல் பகிர்ந்திருக்கீங்க. மிக்க நன்றி!
Deleteஅவனவன் போட்டோ போடலியேன்னு வருத்தமா இருக்கான்... ஆனா இஸ்கூல் மட்டும் வித்தியாசமா வருத்தப்படுறார் ஹா ஹா ஹா...
ReplyDeleteஎன்ன காரணத்துக்காக போட்டோவை மாத்திப் போட்டேன்னு சொன்னப்புறம் இஸ்கூல் கூல் ஆயிட்டாரு தம்பீ!
Deleteநீங்கள் இப்படி எழுதப் போகிறீர்கள் என்று தெரியும், ஆனால் இப்படித்தான் எழுதப் போகிறீர்கள் போயிற்று.. வித்தியாசமான முயற்சிக்குப் பின்னால் இருக்கும் படக் கலவைகள் பிரமாதம்... அத்தனை பொருத்தம்...
ReplyDeleteஎங்கேயும் எப்போதும் வாத்தியார் கலக்கு கலக்கு என கலக்க வாழ்த்துக்கள்
ஒரு அவுட்லைனாக மட்டும்தானே உங்கட்ட சொன்னேன். முழுசாச் சொல்லியிருந்தா இப்ப கெடைக்கற இந்த சுவாரஸ்யம் மிஸ்ஸாயிருக்குமே...! என்னை வாழ்த்திய அன்புக்கு என் நன்றி!
Deleteஆத்துக்காரி பர்மிஷன் வாங்கிண்டு தானே டி.வி. இண்டர்வ்யூ வுக்கு போனீர்கள்?
ReplyDeleteவீடு திரும்பி விட்டீர்களா/
ஏதாவது டோஸ் கிடைத்ததா ?
சுப்பு தாத்தா.
அத ஏன் கேக்கறீங்க சுப்புத்தாத்தா? கேமராவுக்கு முன்னால நான் வழிஞ்சதப் பாத்துட்டுப் பல்லைக் கடிச்சவ... அப்புறம் சீரியல் ஷுட்டிங் போனப்ப.... அதை ஏன் என் வாயால சொல்லணும்...? மின்னல் வரிகள்ல ரெண்டு நாள் விசிட் அடிச்சீங்கன்னா தானே புரிஞ்சுடும். மிக்க நன்றி!
Deleteஉங்க ஸ்டைலில் அசத்தி இருக்கீங்க.. ரொம்பவே ரசிச்சேன்
ReplyDeleteநீங்கள் ரசித்தது எனக்கு மிகமிக மனமகிழ்வு அண்ணா! என் இதயம் நிறை நன்றி!
Deleteநண்பர்களின் மூலம் உங்கள் பதிவுகளை அறிமுகப்படுத்தி வித்தியாசமான முறையில் மின்னல் டீவியில் மின்னிய உங்கள் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகத்தை ரசித்த நண்பர் சுரேஷுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteகலக்கல் ச்கோ..எழுத்துநடையை ரசித்தேன்..வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறுசுவை அரசி என் எழுத்து நடையை ரசித்துப் பாராட்டியதில் மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteஜூப்பரு ...! கைவசம் நெறைய சித்து வேலைகள் இருக்கும்போல ...?
ReplyDeleteஅப்புறம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுறதுக்கு ரெம்ப சிரமபட்டிருப்பீங்களே ....?
அரசனுக்கு - சிரித்துரபுரம்
சாப்பாட்டு ராமுக்கு - மொரு மொரு மிக்சர்
நல்லா கனெக்ட் ஆகுது ... அதென்ன சீனுவுக்கு - கொலைகாரன் ....? மொக்க அதிகமா போடுராப்புலையோ .....? சொல்லுங்க போட்டுருவோம் .... :)
கரெகட்டா கண்டுபிடிச்சிங்க தம்பீ! சரியா எழுதிட்டு அப்புறமா எழுத்துப் பிழை வர்றாப்பல திருத்தினது எனக்கு மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன்... சீனுவைப் போட்டுடறதா? வொய் திஸ் கொலவெறி டியர்?!
Deleteவித்தியாசமாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்!..
ReplyDeleteரசித்துப் பாராட்டிய சக்கரக்கட்டிக்கு மனம் நிறைய நன்றி!
Deleteவித்தியாசமாய் - புதுமையாய்
ReplyDeleteஅதே நேரம் கலக்கலாய்...
சிரிப்பாய்... சிறப்பாய்
நடந்தது டீ.வி. பேட்டி.
ம்.... தொடர்ந்து கலக்குங்கள்...
கலக்க வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!
Deleteகுறுகிய காலத்தில் நிறைய நண்பர்களை பெற்று இருக்கின்றீர்கள்... கணேஷ்.... அதுக்கு உங்க வெள்ளந்தி மனதுதான் காரணம்.... சிகரம் தொட வாழ்த்துகள்....
ReplyDeleteபிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நல்லதொரு சந்தர்ப்பத்துல கருத்துப் பெட்டியில உங்களைப் பாக்கறறதுல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருககு சேகர்! வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஹிஹிஹாஹாஹீஹீஹீஹ்ஹ்ஹ்ஹுஹாஹஹ்ஹுஹூஹா
ReplyDeleteபடித்து ரசித்ததை இப்படியும் சொல்ல முடியுமா அப்பா ஸார்? உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநஸ்ஸி பாப்பா புகைப்பட அறிமுகத்தோட அசத்தல் ஆரம்பம், (நஸ்ரியா, டீடீ ரெண்டு பேர் போட்டும் புகை மண்டலம் வர வச்சுட்டீங்க.. நான் ரெம்யாவை எதிர்பார்த்தேன்.. ஹிஹி )
ReplyDeleteஇந்த மாதிரி பேக்ரவுண்டுக்கு ரம்ஸ் சரியா அமையலபபா. அதான் நஸ்ஸி வந்துருச்சு. நான் எதிர்பார்த்த புகை மண்டலம் எழுந்ததுல மகிழ்ச்சியோட உனக்கு டாங்க்ஸ்ஸு!
Deleteசூப்பர் தொடக்கம்.
ReplyDeleteதனித்துவமான தொடக்கம் அண்ணாச்சி!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா .
ReplyDeleteஆரம்பமே அசத்தல் வாழ்த்துகள்.
ReplyDeleteமனோகரமாயிட்டுண்டு!!!
ReplyDeleteசுய அறிமுகம் மிகவும் வித்தியாசம்! அதுதான் வாத்தியார்!
ஆவி ஏன் கூலானார்!?? ஆமா பின்ன இப்படி நஸ்ரீயா படம் போட்டா கூலாகாம ......
அனைத்து சிஷ்யர்களையும் சூப்பரா சொல்லியிருக்கீங்க ! அசத்தல்....
வாழ்த்துக்கள்! தொடர்கின்றோம்.....
காமெடி வாரம் சும்மா அதிருதுல்ல.....!!! வலைச்சரம் சரவெடியாகிடுச்சுப்பா....
ReplyDelete