Tuesday, December 3, 2013

கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்

‘‘கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்' நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நமது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பேராசிரியர் சொல்வீரன் அவர்களை வரவேற்கிறேன். வணக்கம் சார்..." என்று பிரவீணா பேச கேமரா சற்றே பின்வாங்கி அருகில் அமர்ந்திருக்கும் பேராசிரியரைக் காட்டுகிறது. ‘‘வணக்கம்மா. இணையத்தில் இலக்கியம்ங்கற தலைப்பில இன்னிக்கு உரையாடணும்னு சொன்னீங்க. அதுக்கு துணையா என்னோட நண்பர் ஒருவரையும் அழைச்சிட்டு வந்திருக்கேன்." என அவர் சொல்ல... ‘‘கூப்பிடுங்க ஸார்..." என்கிறாள் பிரவீணா. பேராசிரியர் குரல் கொடுகக வந்த உருவத்தைக் கண்டதும் வியக்கிறாள். ‘‘வாட்... இவரைப் பாத்தா ஆட்டோ டிரைவர் மாதிரில்ல இருக்குது...?" என அவள் வியக்க, ‘‘ஆமாம்... எனக்கு வழக்கமா ஆட்டோ ஓட்டறவர்தான் இவர். ஆனா இலக்கியம் நிறையப் படிக்கிறவர். எல்லா எழுத்தாளர்களையும் படிச்சிருககார். பேரு மாரி. ஆட்டோ டிரைவர்னு சாதாரணமா நினைச்சுடாதம்மா... இவனுக்கு திருக்குறள் 133 அதிகாரமும் அத்துப்படி. எந்தக் குறளை வேணுமனாலும் சொல்லிப்பாரு... கரெக்ட்டா அர்த்தம் சொல்லிடுவான்...’’

‘‘அப்படியா? ரைட்டு... இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் -இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லுங்க ஆட்டோ ஸார்...!’’

‘‘எந்த ஒர்க்கா இருந்தாலும் அத்த யாரு அட்டகாசமா முட்ச்சுக் குடுப்பாங்கன்னு கரீக்ட்டாக் கண்டுக்கினு அத்த அவனான்ட வுட்ரணும்! --இதாம்மே அர்த்தம். கரீக்கட்டா?’’

‘‘சூப்பர் ஸார்...’’ என்று பிரவீணா வியக்க, பேராசிரியர்,‘‘உனக்காக ரொம்ப நேரம் காத்திருந்தேன் மாரி. ஏன் லேட்?" என்கிறார்.


‘‘இன்னாத்தச் சொல்ல... வர்ற வழில பைக்காரன் இட்ச்சுக்கினாம்ப்பா. இன்னான்னு கேட்டா, எகிர்றான். இன்னா சொன்னாலும் எடுபடாதுன்னுட்டு உட்டேன் ஒரு வுடு... இன்னான்ற நீயி?" என மாரி துவங்க, ‘‘முதல்ல இந்த இன்னா நாற்பதை நிறுத்திட்டு ஒழுங்காப் பேசு. இணையத்துல எப்படி புகுந்து கதைகள்லாம் படிக்கலாம்னு போன தடவை சொல்லித் தந்தேனே... ஏதாச்சும் படிச்சியா?"

‘‘அத்த ஏம்பா கேக்குறே? புத்சா வாங்கின கம்பூட்டர்ல ஏதாச்சும் கதை படிக்கலாம்னு உக்காந்தா... என் பையன் இந்த சைட்டப் புடிச்சிக்கிட்டு வுட மாட்டேங்கறான். இதுல படத்தோட கதைய அவங்க ஆயா சொல்ற மாதிரி பேசறாங்களாம். அழகழகா பாட்டு இருக்குதாம்... என்னியக் கிட்டவே வுடலைப்பா..." என்று சலித்துக் கொள்கிறான் மாரி. ‘‘அடக்கடவுளே... இந்தக் காலத்துல சின்னப் பசங்ககூட இன்டர்நெட்டைப் புடிச்சுக்கிட்டா விட மாட்டேங்குது..." என்று பேராசிரியர் கூற... ‘‘அக்காம்பா... அத்த மட்டுமா பாக்கறான். இந்த தளத்துல போனா நிறைய புரியாத தகவல்கள் வேற வேற சப்ஜெக்ட்ல கொட்டிக் கிடக்குதுன்றான். அத்தல்லாம் படிச்சா நல்ல மார்க்கு எடுப்பேன்றான். ஒண்ணுமே சொல்ல முடியல்லே... இன்னா நாஞ் சொல்றது?" என்று மாரி கேட்க, ‘‘கரீக்கட்டுப்பா, ச்சே... கரெக்ட்டுங்க" என்கிறாள் பிரவீணா.

‘‘அப்ப எதுவுமே படிக்கலியா நீ? நான் சமீபத்துல இந்த தளத்துல போய் நிறையச் சிறுகதைகள் படிச்சேன்ப்பா..." என்று பேராசிரியர் தன் லேப் டாப்பில் அதைக் காட்டுகிறார். ‘‘ஸார்... நான் கதைகள் படிக்கணும்னா வழக்கமா இந்தத் தளத்துல போய்த்தான் படிப்பேன்’’ என்று பிரவீணா சொல்ல... ‘‘நீ இங்கிலீஷ்ல படிக்கிறவம்மா. நாங்கல்லாம் தமிழ்ல படைப்புகளைப் படிக்கறவங்க. என்ன மாரி...?’’ என்கிறார் பேராசிரியர். ‘‘அடப் போ சாரு... நீ சொல்ற தாவுல போனா சிறுகதைங்களப் படிக்கத்தான் முடியும். நான் ஒரு தாவக் கண்டுக்கினேன் தெர்யுமா... இத்தப் பாரு... இங்க போனயின்னா இன்னா ரைட்டர் உனுக்குப் புடிக்குமோ அல்லாத்தோட கதையயும் டவுன்லோடு செஞ்சிக்கலாம்ப்பா. அதான் நான் இன்னா பண்ணேன்னா... ஊட்ல பையன் தொல்ல தாங்கலையே, மொபைல்ல படிக்கலாம்னுட்டு ஒரு அன்ட்ராயரு மொபைல் வாங்கிக்கினேம்ப்பா..."

‘‘அடேய்... அது அன்ட்ராயர் இல்லடா.... அன்ட்ராய்டு மொபைல்...!"

‘‘இன்னாவோ ஒரு கர்மம்ப்பா... சவாரி வலிக்காம சும்மா இருக்கச் சொல்லோ படிக்க சோக்காத் தாம்ப்பா கீது! இன்னாம்மா... நீ கம்னே கீற? நீ எதுனாச்சும் பட்ச்சத சொல்வன்னு பாத்தா..."

‘‘நானும் அப்பப்ப நெட்ல மேயறதுண்டு ஸார். சமீபத்துல ஒரு கல்லூரிப் பேராசிரியை எழுதின சிறுகதை ஒண்ணைப் படிச்சேன். எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. அப்புறம் பாத்தா... தனியா இனனொரு தளம் வெச்சுக்கிட்டு அதுல கவிதைங்களும் எழுதிக்கிட்டிருக்காங்களாம். அதையும் படிச்சேன்... நீங்களும் படிச்சுப் பாருங்க..." என்று திறந்து காட்டுகிறாள் -- அட... லேப்டாப்பில் லிங்க்கைத் திறப்பதைச் சொன்னேங்க!

‘‘மாரி... நான் படிச்சு ரசிச்ச இந்த சிறுகதைய டயம் இருக்கறப்ப அவசியம் படிச்சுப் பாரு. சமூகக் கதைல சரித்திரத்தை லேசாக் கலந்து கொஞ்சம் திகிலையும், கொஞ்சம் நெகிழ்ச்சியையும் சேர்த்து சூப்பரா ஒரு மிக்ஸர் பண்ணியிருக்காங்க. இந்தக் கதை சிறப்பான ஒரு பரிசும் வாங்கியிருக்கு" என்கிறார் பேராசிரியர்.

மாரி, ‘‘இன்னாதான் சொல்லுப்பா... சரித்திரக் கதைன்னா சாண்டில்யன் ஸார் மாதிரி வராது. இன்னா அயகா லவ்வையும், ஃபைட்டையும் சொல்லிக்கினாரு. படிக்கச் சொல்லோ சவாரி வந்தாக்கூட இன்னாடா குறுக்கால வர்றாங்களேன்னு சலிப்பாக் கீதுப்பா...." என்க, ‘‘சாண்டில்யனோட நின்னுட்டா எப்படி... அங்கருந்து கல்கி, அகிலன், நா.பா., கோவி மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், விக்கிரமன்னு ஒரு ரவுண்ட் அடிச்சாத்தான் எல்லார் ரசனையும் தெரியும்டா முண்டம்...!" என்று கோபமாகக் குறுக்கிடுகிறார் பேராசிரியர். ‘‘முண்டம்னதும் ஞாபகம் வர்துப்பா... தலையில்லா முண்டத்தோட கதைன்னு ஒருத்தரு... யாரோ முட்டா நைனாவாம்... -- எங்க நைனா முட்டாதான்றது இவருக்கெப்படிப் தெரியும்னு பேரப் படிச்சதுமே தோணிச்சுப்பா -- சூப்பராச் சொல்லிக்கினு வர்றாரு இந்தத் தொடரை..."

‘‘முண்டம்னாலே தலையில்லாதது தானங்க? அப்புறம் என்ன தலையில்லா முண்டத்தோட கதை...?" என்று பிரவீணா கிண்டலிக்க, ‘‘இப்ப பெரீவரு என்னைய முண்டம்னு சொல்லியாக்கும்... நான் தலையுள்ள முண்டம், அது தலையில்லா முண்டம்னு வெச்சுக்கயேன். நடுசென்டர்ல அவர் இன்னா சொல்ல வர்றாருன்னு படிச்சுப் பாரும்மே..." எனவும் சட்டென வாய் மூடுகிறாள். ‘‘அப்பாலிக்கா... நானு குயந்தைங்களோட சைகாலஜிய அருமையாச் சொன்ன இந்தக் கதையப் படிச்சேன் சாரே... ரொம்பப் புட்ச்சிருந்துச்சு...’’ என்கிறான் மாரி.

‘‘படிச்ச கதைகளைப் பத்திப் பேசச் சொன்னா, இன்னிக்கு பூராவும் கூடப் பேசிட்ட இருக்கலாம்தான்... ஆனா நமக்கு நிகழ்ச்சிக்கு ஒதுக்கின நேரம் முடியப் போவுதே... அதனால சமீபத்துல நான் படிச்ச ரசனையான ஒரு விஷயத்தை உங்க ரெண்டு பேரோடயும் ஷேர் பண்ணிக்கறேன்..." என்று மடிக்கணினியைக் காட்டுகிறார் பேராசிரியர். ‘‘சாப்பாட்டு ரசனையை திருநெல்வேலி ஜனங்களோட நடையில இவர் எழுத்துல படிக்கிறதே தனி சுகம்தாங்க... அதுவும் கடைசிப் பாராவுல ஒரு பன்ச் அடிச்சு அங்க மனித இயல்பைத் தொட்டுக் காட்டறாரு பாருங்க... அங்கதாங்க நிக்கிறாரு ரைட்டர்!"

‘‘அட... நீல்லாம் படிச்சவங்க. சொன்னா கரீக்கட்டாத்தாம்ப்பா இருக்குது..." என்று மாரி வியக்க, ‘‘மீண்டும் சுவாரஸ்யமான விஷயங்களோட அடுத்த வாரம் ‘கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்’ நிகழ்ச்சியோட சந்திக்கறோம். பை டு ஆல்..." என்று கை கூப்புகிறாள் பிரவீணா.

63 comments:

  1. தமிழ் இணைய பல்கலைக் கழகத் தளம் முதல் முட்டா நைனா வரை அனைத்தும் அருமை.. ஒவ்வொன்றும் சென்று பார்க்கிறேன் சார்... தொகுத்த விதம் சூப்பர்... மாரி போன்ற ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொகுத்த விதத்தையும் ரசித்தமைக்கு என் மனம் நிறைய நனறி ஸ்.பை.!

      Delete
  2. பல தளங்கள் பயனுள்ளவை... முக்கியமாக : http://www.did-you-knows.com/

    நன்றி வாத்தியாரே... உங்களின் உரையாடல் பாணி மிகவும் அருமை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தளங்களை ரசித்ததோட என் எழுத்து பாணியையும் பாராட்டின நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. சுபத்ரா சொன்ன கதை தான் சூப்பர்.

    படிக்கும்போதே கொஞ்சம் பயம், திகில், நிறைய அடுத்தது என்னவோ என்ற ஆவல் எல்லாமே இருந்தது.

    பால கணேஷ் தான் பக்கத்துலே இருக்காரே என்கிற தகிரியத்திலே படித்துகொண்டு அவர் கையை பிடித்துகொண்டு என்று நினைத்து கொண்டு திரும்பினேன்.

    நீங்க பயப்படாம இருங்க.. நான் இருக்க பயமேன் என்று ஒரு குரல் .

    பின்னாடி அவர் .

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுபத்ராவின் கதை எனக்கும் ரொம்பவே பிடிச்சிருந்தது. அதை கதை மாதிரியே சொல்ல முடியற சுப்புத்தாத்தாவையும் வியந்து பாக்கறேன் நான்! டாங்ஸுங்கோ...!

      Delete
    2. "பின்னாடி அவர் " என்பதற்கு பின்னாலும் ஒரு வரி எழுதி இருந்தேன்.

      அது எப்படி விட்டுப்போயிற்று என்று தெரியவில்லை.


      பின்னாடி அவர்

      கை மட்டும் இருந்தது.


      சுப்பு தாத்தா.

      Delete
    3. மெய்யாலுமே ‘திடுக்’ திருப்பம்தான்!

      Delete
    4. என் கதைக்கு இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில் சந்தோஷம்.... சுப்பு தாத்தா & பால கணேஷ் :-)

      பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.... :-)

      Delete
  4. மின்னலு டிவி காண்டி, நம்ப பொரபசர் சொல்லுவீரேன் ஐயா நம்பளப் பத்தி சொல்லிகினாரா...? சூப்பருப்பா... மொண்டித் தோப்பு மாரி கூட சைட்ல கீறான் போல..? யக்கா பெரவீனா யக்கா... ரெம்ப டேங்க்ஸ்க்கா... டி வி ஓனரூ பால கணேஷ் கைல முட்டா நைனா டேங்க்ஸ சொல்லிருக்கா...

    ReplyDelete
    Replies
    1. அவுங்க அல்லாரும் முட்டா நைனாவோட டாங்க்ஸை நம்ம கைல சொல்லிக்கினாங்கப்பா... படா குஷியாப் பூட்ச்சு! பதிலுக்கு நானும் நைனாவுக்கு டாங்க்ஸ் சொல்லிக்கறேன்!

      Delete
  5. எத்தனை எத்தனை தளங்கள்..... ஆதிராவின் கவிதை பக்கம் தவிர மற்ற அனைத்து தளங்களும் எனக்குப் புதியவை.... அறிமுகத்திற்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலனும், நீங்களும் நான் பார்க்கும் தளங்களில் எல்லாம் எனக்கு முன்னால் காணப்படுவதை வியந்திருக்கிறேன் நான். நீங்களும் அறிந்து கொள்ள ஒருசில உண்டு என்பதில் மகிழ்ச்சி! இவ்வாரம் முழுவதும் தொடர விழைகிறேன். மிக்க நன்றி நண்பா!

      Delete
  6. சுவாரஸ்யமான விஷயங்களோடு ‘கொஞ்சம் காபி நிறைய இலக்கியம்’
    நிகழ்ச்சி அருமை..! பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நிகழ்ச்சியை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  7. அறிந்திரத நிறைய வலைப்பூக்களை அறியத்தந்து இருக்கின்றீர்கள்.அறிமுகப்படுத்திய விதம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை ரசித்த தங்கைக்கு அகமகிழ்வுடன் நன்றி!

      Delete
  8. அன்ட்ராயர் மொபில்ல படிக்க சொல்லோ ஓட்டு போடா மிடிலபா... அத்தான் அப்பாலிக்கா வந்து...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1

    ReplyDelete
    Replies
    1. படித்துக் கருத்திடும் உங்கள் ஆதரவே மகிழ்வு தருவது. ஓட்டளிப்பது கூடுதல் போனஸ்! டாங்ஸுப்பா!

      Delete
  9. வாத்தியாரே, ஊட்டாண்டே எப்போ வர்றே.. ஊர்காரங்களுக்கு கதை சொல்லி முடிச்சிட்டு அப்பாலிக்கா சட்டுன்னு வா வாத்தியாரே.. ரொம்ப நாள் ஆச்சி கண்டுகினு.. சோக்கா இன்றோட்யுஸ் பண்ணியிருக்கே வாத்தியாரே!

    ReplyDelete
    Replies
    1. உன் வூட்டாண்ட நான் வர்றது உனுக்கே தெர்லியா? ஆவி எந்த ஒலகத்துல கீதோ? இன்ட்றோட்யூஸ் பண்ணதை ரசிச்சதுக்கு டாங்ஸுப்பா!

      Delete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    http://samaiyalattakaasam.blogspot.com/2013/12/expo-2020-42nd-uae-national-day.html

    ReplyDelete
    Replies
    1. அனைவரையும் வாழ்த்திய ஜலீலா அவர்களுககு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. இன்னா சாரே இப்பிடி அல்லாம் சூப்பரா கலக்குறீங்கோ... நெஜமாலுமே மின்னலு டி.வி புச்சா ரிலே ஆவுற மாரி....பீல் ஆவுது..!

    ReplyDelete
    Replies
    1. இத்தத்தாங்க நானும் விரும்பினேன். டாங்ஸு!

      Delete
  12. குழந்தைகள் படிக்கிற தளத்துல ஆரம்பிச்சு பல பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. சுபத்ரா பேசுகிறேன், ஆதிரா இந்த தளங்களை எல்லாம் நான் இப்பத்தான் தெரிஞ்சிகிட்டேன்.. மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. இவங்க எல்லாருமே அருமையா எழுதறவங்க. கூடவே என் ஃப்ரெண்ட் உஷா அன்பரசுவையும் சொல்லிருக்கேனே... அவுங்க மட்டும சும்மாவா...?

      Delete
  13. விஷூவலா கற்பனை பண்ணிக்கிற மாதிரி சொல்றது ரொம்ப சுவாரஸ்யம்... ! நாளைக்கு மின்னல் டி.வி யில் என்னன்னு எதிர்பார்க்க வச்சிட்டிங்க..... சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்ற மகிழ்வு தந்த வார்த்தைக்கு மனம் நிறைய நனறி! நாளைக்கு ஒரு சேஞ்சுக்கு மின்னல் டிவிக்கு லீவு விட்டுட்டு வேற ஸ்டைல்ல வரலாம்னு ஆசை...!

      Delete
  14. இவங்க யாரு.. அவங்க யாருன்னு தேட வச்சு.. அறிமுகம் செஞ்ச விதம் ரொம்ப கரீக்ட் தலிவரே.. உங்கள இன்னான்னு புகழறதுன்னே புரில.. அப்பால கண்டுக்கிரேன்..

    ReplyDelete
    Replies
    1. எப்ப வேண்ணாலும் வாங்க அண்ணாச்சி...! இது உங்க பிரதர் இடம்! டாங்ஸுங்கோ...!

      Delete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய வெற்றிவேலுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. இலக்கியம் என்றவுடன் கொஞ்சம் உள்ளூர பயம் இருந்ததது என்னவோ உண்மைதான் வாத்தியார் அவர்களே ... இங்க வந்து பார்த்ததும் தான் இலக்கியம் இனிப்பு லேகியம் கணக்கா சுவையா இருக்கிறது ... மெட்ராஸ் செந்தமிழில் வெளுத்து கட்டியிருக்கும் அட்டகாசமான பதிவு சார் ...

    சில வலைப்பக்கங்கள் எனக்கு இன்றுதான் அறிமுகம் ஆகின .. கடின உழைப்புக்கு நன்றிகளும் , அறிமுகம் ஆன தோழமைகளுக்கு என் வணக்கங்களும் ...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த நல்ல கருத்துக்கு மனம் நிறைய நன்றி ராஜா!

      Delete
  17. சிறப்பான அறிமுகங்கள். ஒவ்வொரு தளத்திற்கும் பொறுமையா சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சென்று பாருங்கள்... நான் ரசித்தவற்றை நீங்களும் ரசிப்பீர்கள்! மிக்க நன்றி தோழி!

      Delete
  18. அட. டா.. இதுல.. அதுல.. ன்னு அசத்தலா பதிவர்களை அறிமுகப்படுத்திட்டீங்க சகோதரரே!

    உங்க திறமையோ திறமை! வாழ்க!

    உங்களுக்கும் அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் பகிர்தலை ரசித்து, அனைவரையும் வாழ்த்திய உங்களுககு என் இதயம் நிறை நன்றி சிஸ்!

      Delete
  19. எவ்வளவு அழகான நடை. பொருத்தமான படம். திரும்பத் திரும்ப நான்கு முறை படித்தேன். புரியாமல் அல்ல. பிடித்ததால்...

    நகைச்சுவையிலும் சரி (சரிதாயனம் படித்ததால் சொல்கிறேன்) இது போன்ற நடையிலும் சரி உங்கள அடிச்சுக்கவே முடியாது.


    என் இரு வலைப்பூக்களையும் அறிமுகம் படுத்தியுள்ளீர்கள். எல்லாத்துக்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகச் சொல்வதென்றால் உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம்தான் நகைச்சுவை என்ற தளத்தில் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. ரசித்துப் படித்தேன் என்ற உங்களின் வரிகள் எனக்கு எனர்ஜி டானிக்! மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  20. அறுமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    நல்ல பயனுள்ள பதிவுகளை அறிமுகப் படுத்திய கணேஷ் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. இடைவிடாத பணிகளுக்கிடையிலும் இதைப் படித்து அனைரையும் வாழ்த்திய உங்களுக்கு நானில்ல நன்றி சொல்லணும்!

      Delete
  21. பகிர்ந்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
    பொறுமையாகப் போய் படித்துப்பார்க்கிறேன்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நிதானமாக நேரம் கிடைக்கும் போது படித்து ரசியுங்கள் அருணா...! ஐயான்னுல்லாம் சொல்லி என்னை முதியவனாக்க வேண்டாமே... கணேஷ்னே சொல்லுங்க, பரவாயில்ல... அதுக்காக டேய் கணேஷ்னு சொல்லிராதீங்க. ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  22. ஷோக்கா கீது வாத்யாரே உங்க எழுத்து ஸ்டைலு. நெசமாலுமே சூப்பரா கீது ப்பா

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுப் பட்ச்சு பாராட்டிகிற உனுக்கு படா டாங்ஸுப்பா!

      Delete
  23. சென்னைத் தமிழுக்கும் சீர் செய்த செம்மலே வாழ்க!...

    ReplyDelete
    Replies
    1. சென்னைத் தமிழை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  24. இப்படியாக சென்னைத் தமிழில் பல தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி!
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனைவரையும் பாராட்டிய உங்களுக்கு அன்புடன் என் நன்றி!

      Delete
  25. பால கணேஷர்,

    அறிமுகங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது ,வாழ்த்துக்கள்!

    ஒரு சிலது மட்டுமே ஏற்கனவே நமக்கு அறிமுகமானவை, ஆனால் இன்னாரைத்தான் அறிமுகம் செய்கிறோம் என்பது தெரிகிறார்ப்போல செய்திருந்தால் தேவலாம்னு எனக்கு தோனுது ,, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் அவ்வ்!.

    சோக்கான இஸ்டைல்ல எயுதி கலக்கிட்ட தல, ஆமாம் மாம்பலத்துல குந்திக்கினு எப்டி இந்த பாஷைலாம் புடிச்சிங்க அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியாவாதான் குட்த்துக்கிறீங்க...! அடுத்த பதிவுலயே மாத்திடறேனுங்கோ...! ரொம்ப டாங்ஸு!

      Delete
    2. வவ்வால்
      இன்னாருடைய பதிவு என்று சொல்லிவிடுவது வழக்கமான முறை. அதை மாற்றி பதிவை மட்டும் சொல்லி இருப்பது புதுமைதான். இதுவரை இப்படி யாரும் செய்ததாக தெரியவில்லை

      Delete
  26. வித்தியாசமான முறையில் பலநல்ல அறிமுகங்கள் இனித்தான் சில தளங்கள் படிக்க வேண்டும் அண்ணாச்சி!

    ReplyDelete
  27. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிதானமாய்ப் படித்து ரசியுங்கள் நேசன்! அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  28. ஆதிரா பக்கங்கள், உஷா அன்பரசு தளம் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள். தளங்களைப் படித்து என் இணைப்பில் இணைத்து விட்டு வருகிறேன் அதற்குள் அடுத்த பதிவு வந்துவிட்டது. என் சுவைக்கேற்ற பல பதிவர்கள்... சூப்பரா இருந்திச்சிங்க சென்னைத் தமிழ் மின்னல் டி.வி. நாளைக்கு என்னன்னு முன்னோட்டம் வரலைங்க...

    ReplyDelete
  29. அருமை கணேஷ் சார்! மாரி பிரவீணா என்ற பாத்திர படைப்புகளும், சொன்ன விதமும் சொல்லப்பட்ட தளங்களும் அருமையானவை.

    ReplyDelete
  30. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. சிறந்த முறையில் பகிவிட்டுள்ள தங்களுக்கும் இங்கே அறிமுகமான
    தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  32. பல அறிமுகங்கள். நன்றி .

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. வாத்தியாரே இன்னாபா! வூடுகட்டி அடிக்கிற! மெய்யாலுமே டக்கரா கீதுப்பா.....மின்னலு டிவி வூட்டுல வருமா?!! செட்டாப் பாக்சு வைக்கினுமா? அஹஹஹ்ஹ

    சார்! எல்லா தளங்களுமே மிகவும் அருமையான தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete