Thursday, January 16, 2014

வி.ஐ.பி`ஸ்


வணக்கம்! நேற்றைய தொடர்ச்சியாக இன்றும் சில வலைத்தளங்களைப் பார்க்கலாம்.

    வேணுவனம் – இவருக்கு விளம்பரம் என்றால் அது சூரியனுக்கு டார்ச் லைட் அடிப்பது போன்றது தான். இவர் ஒரு இயக்குனர், எழுத்தாளர், இசை மேதை, இன்னும் பல. `தி இந்து` நாளிதழ், ஆனந்த விகடன் என முக்கிய இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுவருவன. திருநெல்வேலியைச் சேர்ந்த இவரின் `தாயார் சன்னதி` மற்றும் `மூங்கில் மூச்சு` புத்தகங்கள் இன்றும் டிமாண்டில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது புத்தகமான `சாமானியனின் முகம்` இப்போது வெளிவந்துள்ளது. புத்தகக் கண்காட்சிக்குச் சென்றால் வாங்கத் தவறாதீர்கள். இவர் ஒரு வலைத்தளத்தையும் எழுதிவருகிறார் என்பது வலைஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

`தேவனின்கோயில்` பதிவைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. படித்துப் பாருங்கள். கூடவே அந்தச் சுட்டிகளையும் கேளுங்கள். புத்தகமாகப் படிக்கும்போது இவ்வசதி இல்லை.

`மூப்பு` பதிவில் இவரது சினிமா அனுபவங்களை எப்படி ரசனை பொங்க எழுதியிருக்கிறார் பாருங்கள்.

இதுவும் சினிமாவுக்கு `லொக்கேஷன்` பார்ப்பதைப் பற்றிய மற்றுமொரு ரசனையான பதிவு தான்.

சொல்வனத்தில் வெளிவந்த இந்தப் பதிவு `செண்பகத்தக்காவின் குரல்`.


குடியைப் பற்றிய ஒரு பதிவு `இங்கே`. 

தேவதேவன் கவிதைகள்: கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? அவை இலவசமாக வலைத்தளத்திலும் வெளியிடப்படுகின்றன. அவரது ரசிகர்கள் இருவர் இப்பணியைச் செய்துவருகிறார்கள். படித்ததேயில்லை என்றால் உதாரணத்திற்கு இந்தக் கவிதைகளைப் படித்துப் பாருங்களேன்.


கடுகு தாளிப்பு: இவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர். அந்தக் காலத்தில் இவரது எழுத்துகள் வெளிவராத பத்திரிகையே இல்லையென்று சொல்லலாம். இன்றும் இளமையாக எழுதிக் கொண்டிருக்கும் இவர் ஒரு மிகச்சிறந்த `மனிதர்`. பல்வேறு புனைப்பெயர்களில் எழுதும் இவர் கடுகு-அகஸ்தியன் என்று நன்றாக அறியப்படுபவர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா?

இவரது `கமலா-தொச்சு` கதைகள் மிகப் பிரபலமானவை. `இந்தச் சுட்டியில்` இருக்கும் எல்லாக் கதைகளிலும் கமலா வருவார்.

எழுத்தாளர் `ரா.கி.ரங்கராஜன்` பற்றிய இரங்கல் பதிவு இது. படித்துப் பாருங்கள்.

பல ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் வசித்த இவர் அவ்வனுபவங்களை `அன்புள்ள டில்லி` என்ற தலைப்பில் நிறைய பதிவுகளில் எழுதியுள்ளார்.

பிரபலங்களுடன் இவரது அனுபவங்களை `நானும்` என்ற தலைப்பில் நிறைய கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார். படித்து ஆச்சர்யப்பட்டுக் கொள்ளுங்கள் :-)

  தினம் ஒரு பா: என்.சொக்கன் அவர்களின் வலைப்பூ இது. பழந்தமிழ் நூல்களிலிருந்து எடுத்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ள பதிவுகள் இந்த வலைத்தளம் முழுதும் இருக்கின்றன. (இவை தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகத்தால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது).

`சாப்பிடும்முறை` பற்றிய ஒரு பாடல் திருமந்திரத்தில் இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

காதலியைச் சந்தித்துவிட்டு வந்த காதலன் தன் நண்பனிடம் கூறும் ஒரு பாடல் பற்றிய பதிவு `காவல்காரி,காதல்காரி`.

`பந்திக்கும்முந்து, படைக்கும் முந்து` என்ற தலைப்பில் புறநானூற்றுப் பாடல் ஒன்றை விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

திருப்பாவையின் `இன்னம் உறங்குதியோ` பாடலுக்கு எளிமையாக அழகாக விளக்கம் கூறியுள்ளார், இதையும் பாருங்களேன். 

தமயந்தி - நிழல் வலை: RJ தமயந்தியை அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். இவர் எழுத்தாளரும் கூட. வலைத்தளமும் நடத்திவருகிறார். மிகவும் சுவாரசியமான எழுத்து இவருடையது.

இவரது `நினைவுறுத்துகிறது` கவிதை எனக்கு எங்கோ படித்த வேறொரு கவிதையை நினைவுபடுத்துகிறது.

ஆனந்த விகடனில் வெளியாகிய இவரது `நூலிழை இறகுகள்` சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா?

`அண்ணன்மார்களின் கதா` என்ற பதிவில் பதியப்பட்டிருக்கும் இவரது விசும்பலைப் படித்துப் பாருங்கள்.

`கவுரவக் கொலைகள்` என்ற தலைப்பில் முக்கியமான ஒரு சமூகப் பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார்

சாவின் உதடுகள்நிர்மலா கொற்றவையை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். M.A.S.E.S. என்னும் இயக்கத்தை நடத்திவரும் பெண்ணியவாதி. அவரது வலைத்தளத்திலேயே அவரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார்.

`தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை` பதிவில் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கிறார். சுவாரசியமான பதிவு.

`திராவிடர் பூர்வக் குடியல்லர் : ஓர் எதிர்வினை` ஒரு மிக முக்கியமான பதிவு. படிக்கத் தவறாதீர்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அவரிடம் காணப்பட்ட பேட்டி ஒன்றை அவரே வெளியிட்டிருக்கிறார் `இந்தப் பதிவில்`.

`காதல், திருமணம், பெண்ணுரிமை` பதிவை எல்லாப் பெண்களும் எல்லா ஆண்களும் நிச்சயமாகப் படிக்கவேண்டும்.


கருந்தேள்: ராஜேஷின் இந்தத் தளத்தை அனைவரும் அறிந்திருக்கலாம். தமிழில் ஹாலிவுட் படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுவதில் இவரை அடித்துக்கொள்ளவே முடியாது. அந்தளவு ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பார். தமிழ், இந்தி, உலக சினிமா என்று எல்லா முக்கியப் படங்களைப் பற்றிய பதிவுகளும் அவரது தளத்தில் இருக்கும். சில புத்தக விமர்சனங்களும். தற்போது தினகரனின் வெள்ளி மலரில் `திரைக்கதை எழுதலாம் வாங்க` என்ற தொடர்பதிவை வெற்றிகரமாக எழுதி வருபவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது அவரது பதிவுகளைப் பார்ப்போம்.

`வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்` என்ற தலைப்பில் எட்டுப் பதிவுகள் இருக்கின்றன. ஏலியன்ஸ் மற்றும் யு.எஃப்.ஓக்கள் பற்றி ஆர்வம் இருப்பவர்கள் விரும்பும் பதிவுகள் இவை.

`எட்கர் ஆலன் போ` பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

`சூது கவ்வும்` திரைப்படத்தின் விமர்சனத்தை ஓர் உதாரணத்துக்குப் படித்துப் பாருங்கள்.

`என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்` பதிவில் ஒரு சமூகப் பிரச்சனைப் பற்றி அலசியிருக்கிறார்.

`இந்தச் சுட்டியில்` ஒரு உலக சினிமா விமர்சனம்


கவின்மலர்: இவர் ஒரு பத்திரிகையாளர் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் ஒரு வலைத்தளத்திலும் எழுதிவருகிறார். பல விமர்சனங்களைக் கடந்துவரும் இவர் ஒரு பெண்ணியவாதியும் கூட. இவரது பதிவுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

`விதிகளுள் அடங்குமா காதல்?` என்ற பதிவில் தற்போது நாடெங்கும் விமர்சனத்துக்குள்ளான சட்டம் ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறார்.

`வஞ்சியர் காண்டம்` கொஞ்சம் தீவிரமான பதிவு.

இந்தியா டுடேயில் வெளியான `என்ன ஆனது திருநங்கைகள் நலவாரியம்` என்னும் கட்டுரையில் ஒரு சமூகப் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்துள்ளார்.

`அற்புதங்கள் நிகழட்டும்` என்ற கவிதையையும் படித்துப் பாருங்கள்.

மீண்டும் பல பதிவுகளுடன் நாளை சந்திக்கலாம் :-) 

8 comments:

  1. தேடித் பிடித்து நல்ல தளங்களையும், அதில் நல்ல பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றாக விரிவாக எழுதுகிறீர்கள்... வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சுகா, கடுகு, என்.சொக்கன் என்று எனக்கு அறிமுகமான/நட்பானவர்களின், தொடர்ந்து நான் படிக்கும் தளங்களை இங்கே பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கு. தமயந்தி எனக்கு நெல்லையில் இருந்த நாட்களில் பலமுறை பார்த்துப் பேசியதுண்டு. தளத்தில் அவர் இயங்குவதை இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். தேவதேவன் அவர்களின் தளமும் புதுசு. பாத்துடறேன் அவசியம்...! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. அருமையான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete