இன்று நாம் சில பயனுள்ள வலைத்தளங்களைப் பார்க்கப் போகிறோம்.
பொன்மலர் பக்கம்: கணினி, தொழில்நுட்பம், மென்பொருட்கள் தொடர்பான பல பதிவுகளைத் தமிழில் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் வரும் புதுப் புது மென்பொருள் அப்டேட்களை உடனே தமிழில் தருகிறார்.
`ஜிமெயிலில் புதிய வசதிகள்` என்ற பதிவில் கூகுள் புதிதாக அளித்திருக்கும் வசதிகளைப் பற்றி எழுதியுள்ளார்.
`ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்` என்ற பதிவு நமக்கு அவசரத்தில் உதவுவதாக இருக்கும்.
`Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்` கணினியில் அதிகமாகப் பாடல்கள் கேட்பவருக்கு உபயோகமாக இருக்கும் பதிவு.
அவசரத்தில் தவறுதலாக, தேவையான கோப்புகளை அழித்துவிட்டீர்களா? இதோ மீட்டெடுப்பதற்கென சில மென்பொருட்களை `இந்தச் சுட்டியில்` தந்திருக்கிறார்.
சாதாரணமானவள்: அறிமுகமான இரண்டு நாட்களிலேயே இவரது அனைத்துப் பதிவுகளையும் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு யதார்த்தமான ஜாலியான எழுத்து இவருடையது.
`இந்தப் பதிவில்` பல்கலைக்கழகத் தேர்வில் ஜெயிப்பது எப்படி என்று தன் அனுபவத்தை வைத்து ஒரு பதிவெழுதி இருக்கிறார். படித்துப்பாருங்கள்.
மருத்துவமனைகள் வியாபார ஸ்தலங்களாக மாறிவிட்ட கொடுமையை `இந்தப் பதிவில்` ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார். நிச்சயம் ஒருமுறை படிக்கவேண்டிய பதிவு இது.
உழவன்: இவரது வலைத்தளத்தில் பல உபயோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சில பதிவுகளைப் பார்ப்போமா?
`ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி` என்று இந்தப் பதிவில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
`பட்டா சிட்டா அடங்கல்` போன்ற நில ஆவணங்களில் காணப்படும் தமிழ் ஜார்கன்களுக்கு அழகாக விளக்கமளித்துள்ளார். உபயோகமான பதிவு இது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றியும் குடும்ப அட்டை பெறுவதற்கு அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் `இந்த`ப் பதிவில் எழுதியிருக்கிறார்.
கண்மணி அன்போடு: கல்லூரி மாணவியான இவரது எழுத்து வெகுளித்தனம் வாய்ந்தது. நிறைய பதிவுகள் இருக்கும் இவரது வலைப்பூவைப் படித்துக்கொண்டே இருக்கலாம்.
இவர் அப்பா செல்லம் போல. அப்பாவைப் பற்றிய நிறைய பதிவுகள் வலைப்பூ எங்கும். `இதுவும்` அப்படி ஒரு பதிவுதான்.
ஆங்கில வழிக்கல்வியா, தமிழ்வழிக் கல்வியா? எது சிறந்தது என்பதைக் கேட்டு ஒரு பதிவிட்டிருக்கிறார் `இங்கே`.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து
ரத்னவேல் நடராஜன்: பதிவுலகைத் தாண்டி இவர் ஒரு பண்பாளர். தமது அன்பிற்குரிய பலரையும்
தம் மகன், மகள் போலவே பாவித்து நன்மை புரிபவர். இவரது விருந்தோம்பல் ஆச்சர்யப்பட வைக்கும்
ஒன்று. இப்போது அவரது பதிவுகளைப் பார்க்கலாம்.
`சதுரகிரி (சித்தர் மலை)` எனக்கு மிகவும் பிடித்த
பதிவு.
`பேராசிரியர் மோகனா` அவர்கள் புற்றுநோயிலிருந்து
மீண்டு வந்ததைப் பற்றி எழுதியுள்ளதை இந்தப்பதிவில் பகிர்ந்திருக்கிறார் திரு.ரத்னவேல்
அவர்கள்.
`நடைப்பயிற்சியின் நன்மைகள்` இந்தப் பதிவில்.
ஸ்ரீவல்லிப்புத்தூரில் ஒரு திருவண்ணாமலை இருக்கிறது
தெரியுமா? இது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில். மேலும் அறிந்துகொள்ள `இங்கே` பாருங்கள். இப்போது பதிவுகள் வருவதேயில்லை. தொடர்ந்து பதிவிட வலைச்சரம் சார்பில் அவரை வேண்டிக்கொள்கிறேன்.
மீண்டும் பல பதிவுகளுடன் நாளை சந்திக்கலாம் :-)
uzhavan is new to me! tks!
ReplyDeleteநன்றி!
Deleteநிறைய பேரை படித்தது இல்லை! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநன்றி!
Deleteநல்லது வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி!
Deleteஅனைத்தும் தொடரும் தளங்கள்... பலரும் அறிய அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி!
Deleteஎனது பதிவுகளைக் குறிப்பிட்டமைக்கு நன்றி. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteமுகநூல் நண்பர்கள் இந்த பதிவில் உள்ள பதிவுகளை படிக்க வேண்டுகிறேன்.
நன்றி நண்பர்களே.
நன்றி பா!
Deleteஇன்றைய பதிவில் பயனுள்ள வலைப்பூக்களின் அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி!
Deleteபயனுள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்..
நன்றி!
DeletePlease add the Tool for enroling Email id.
ReplyDeleteசீனா அய்யாவிடம் தெரிவிக்கிறேன். நன்றி!
Deleteமிக அருமையான் தொகுப்பு
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநான் வெகுளியா????? என்ன சொல்றிங்க? :) அறிமுகத்திற்கு நன்றிகள்! :)
ReplyDelete