சமுதாய
விழிப்புணர்வு என்பது நம் எல்லோரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. முதலில்
விழிப்புணர்வு என்பது
என்னவென்றால் ஒரு விஷயத்தை பற்றிய ஞானம் – அவ்விஷயத்தினைப் பற்றி நமக்கு
தெரிந்ததும், தெரிய வேண்டியதும், என
வைத்துக் கொள்ளலாம். நாம் வாழுகிற சமுதாயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கடைபிடிக்க
வேண்டியவைகளை பற்றிய பகிர்வுகளை வலைச்சரத்தில் இரண்டாம் நாளான இன்று பார்க்கலாம்.
சமூக விழிப்புணர்வு
பக்கங்கள் என்ற தளத்தில் சிறப்பான பல விஷயங்கள்
உள்ளன. சில நண்பர்கள் சேர்ந்து நடத்தும்
இந்த வலைப்பூவில் சிறப்பான பல விழிப்புணர்வு தகவல்கள் அடங்கியிருக்கிறது. அவற்றில் சில - குளங்களின் இன்றைய நிலை, வழி விடுங்க ஆம்புலன்ஸுக்கு,
குடும்ப அட்டையை பெறுவது எப்படி?, கூகிள் பேராண்டிக்கு தாத்தா எழுதிய
கடிதம்! நீங்களே சென்று
பாருங்களேன்.
நான்
தொடர்ந்து வாசித்து வரும் வலைத்தளங்களில் ஒன்று - நான்கு பெண்கள்
- இந்த தளத்தில் சமையல், சினிமா, கைவேலை, கோலங்கள், மருத்துவம்
என பலதரப்பட்ட விஷயங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார்கள். அதில்
நோய் நாடி நோய் முதல் நாடி என்று ரஞ்சனிம்மா எழுதும் தொடரில் உறுப்பு
தானம் பற்றி எழுதி இருக்கிறார். நாம் இறந்த
பின்னோ, அல்லது
இருக்கும் போதேவோ பிறருக்கு பயன் தரும் வகையில் இப்படி உடல் உறுப்பு தானம் செய்யலாமே.
”தங்கள் நிலையில் இருந்து மாற நினைக்கும்
திருநங்கை சகோதரிகளுக்கு சமூகமும் நல்ல வரவேற்பை அளித்து, முடிந்த அளவு உதவிட நல்ல
உள்ளங்கள் முன்வர வேண்டும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம். மனமுடைய பேசாமல்,
மனமுவந்து நீங்கள் வரவேற்க வேண்டும். ஏனென்றால் நாங்களும் வாழ பிறந்தவர்களே.
திருநங்கைகளை பணிக்கு அமர்த்துங்கள், அப்போது தான் வாழ்வாதார சூழ்னிலை மாறும்
தோழர் தோழிகளே!” என்று
சொல்லும் – ஆயிஷா ஃப்ரூக், தன்னுடைய தளத்தில்
திருநங்கைகளை பற்றி விழிப்புணர்வு தொடர் எழுதி வருகிறார். சாதனையாளர் திருநங்கைகளை
பற்றியும், அவர்களும்
நம்மைப் போல் தான், அவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால்
சமுதாயத்தின் நிலை மாறும் என்று சொல்கிறார்.
திருநங்கை
– விழிப்புணர்வு தொடர் ஐந்து பதிவில் வெற்றி
பெற்ற சில திருநங்கைகள் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
சமூக
அக்கறை உள்ளவரா நீங்கள்? என்று
கேட்டு, உணவு
கலப்படம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியதன் அவசியத்தை
குறிப்பிடுகிறார் மூங்கில் காற்று எனும் வலைப்பூவில் பதிவுகள் எழுதி வரும் திரு டி.என்
முரளீதரன் அவர்கள்.
நீங்க
பழங்கள்/காய்கறிகள் தொடர்ந்து வாங்குவதுண்டு. அதன் மேலே ஒரு வெள்ளைப் பூச்சு
இருப்பதைப் பார்த்ததுண்டா? உணவு உலகம் என்ற தளத்தில் உணவு
பாதுகாப்பு - நுகர்வோர் கவனத்திற்கு
என்ற தொடர் எழுதி வருகிறார். அதில் காய்கனிகளில் உள்ள நச்சுத்தன்மையும், அதன்
பின் விளைவுகளும் பற்றி தொடரின் மூன்றாம் பகுதியில் எழுதியிருப்பதை இங்கே
பார்த்தால் நிச்சயம் இத்தனை நாள் இந்த விழிப்புணர்வு நமக்குள் இல்லையே என்ற எண்ணம்
வந்துவிடும்....
தென்றல்
என்ற தளத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு
பற்றி எழுதியிருக்கிறார்கள். இச்செடிகளால் வருகின்ற ஆபத்துகளும், பின்
விளைவுகளும் இங்கே
உள்ளது. படித்து
பார்த்து விழிப்புணர்வோடு இருங்கள்.
மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!
இப்படி
நமக்கு சொல்பவர் யார்? முனைவர்
இரா.குணசீலன்
அவர்களின் வேர்களைத் தேடி வலைப்பூவில் அதனால்
மரங்களை வெட்டாதீர்கள் என்ற கவிதை வழியாக
நம்மிடம் இப்படிச் சொல்கிறார். நீங்களும்
பாருங்களேன்.
உலகெங்கும்
மரங்களை வெட்டாதீர்கள், காடுகளை
காப்பாற்றுங்கள் என்று கோஷம் ஒலித்துக் கொண்டிருக்க, இங்கு மரங்களை
வெட்டுங்கள் என்று சொல்கிறார்கள்… என்னவென்று
பார்க்கலாமா?
தடாகம்
என்ற தளத்தில் அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை
பற்றிய விழிப்புணர்வு எனும் ஒரு பதிவு
படித்தேன். நம் எல்லோருக்கும் சிட்டுக்
குருவிகள் பற்றிய விழிப்புணர்வு வர, அதன் பிறப்பு, அமைப்பு, உணவு, அழிந்து
வருவதற்கான காரணங்கள், அதை
தடுக்கும் வழிகள் என பல தகவல்கள் நமக்கு தரப்பட்டுள்ளன. நீங்களும் படிக்கலாமே!
புவியின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்தை விளைவிப்பதில்
பிளாஸ்டிக்கும் பெரும் பங்காற்றுகிறது. இன்றைய நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க
முடியாதது என்ற போதிலும் அதன் கழிவுகள் அணுகுண்டுக்கு நிகரான மோசமான பல விளைவுகளை பூமியில்
ஏற்படுத்துகின்றன. அவற்றில் சில அதிர்ச்சி தரும் தகவல்களை பிளாஸ்டிக்கால்
விளையும் கேடுகள்
என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள் புவி எனும் தலைப்புடைய வலைப்பக்கத்தில்.
என்ன நண்பர்களே, இந்த வார வலைச்சரத்தில் நான்
தொடுத்த இரண்டாம் மலர்ச்சரம் இது. விழிப்புணர்வு பற்றிய சில தளங்களை உங்களுடன்
பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நாளை வேறு
சில தளங்களைப் பார்க்கலாம்!
நட்புடன்
ஆதி வெங்கட்.
திருவரங்கம்.
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் சார்...தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ...
Deleteஎல்லோர் தளங்களுக்கும் சென்று தகவல் தெரிவித்ததற்கு மிக்க நன்றி..
வணக்கம்
ReplyDeleteஎல்லாம் செல்லும் தளங்கள் தான்.... சிறப்பான அறிமுகள் வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும் வந்து கருத்திட்டதற்கு...மிக்க நன்றி ரூபன் சார்...
DeleteValachchara arimugangalukku vazhththukkal. Arimugapaduththiyadhal pala vizhayangal therya vandhulladhu. Arimugapadalaththukku manamarndha paarattukkal.
ReplyDeleteவாங்க உஷா சித்தி.. பொறுமையாக எல்லா தளங்களுக்கும் சென்று படித்து கருத்து சொல்லுங்கள்.. எல்லாமே அருமையான விஷயங்களை சொல்லும் தளங்கள்..
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ..
மிக்க நன்றி திரு ஆதி வெங்கட்
ReplyDeleteசிறந்த தொகுப்பு !
சிறந்த படைப்பை வழங்கிய எழுத்தாளர் - கவிஞர் சபீர் அஹ்மது அவர்களுக்கும், எங்களின் படைப்பை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும், இவற்றை தாங்கி வந்துள்ள வலைசரத்திற்கும், இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சகோதர வலைதளங்களுக்கும், கருத்திட்டு ஊக்கப்படுத்தி வாசக நேசங்கள் அனைவருக்கும் நன்றி !
கவிஞர் சபீர் அஹமது அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும்...
Deleteசமுதாய விழிப்புணர்வு பக்கங்களில் எழுதுபவர்களுக்கு...
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
சமூகத்திற்கு மிகவும் பயன்தரும் சிறந்த படைப்புகளை பல்வேறு சமூக வலைதளத்திலிருந்து தொகுத்து நமக்கு அளித்துள்ளீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி திரு ஆதி வெங்கட்
பயனுள்ள பகிர்வுகளாக இங்கே பகிர வேண்டும் என்று நினைத்தேன்..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேக்கனா M.நிஜாம்...
சமுதாய விழிப்புணர்வு அறிமுகங்கள் அனைத்தும் அருமை. தோழி ரஞ்ஜனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்று அறிமுகமானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான்கு பெண்கள் தவிர்த்து ஏனைய எல்லா தளங்களுமே எனக்குப் புதிதுதான். நேரமிருக்கும்போது சென்று பார்க்கிறேன்.
அனைத்தும் அருமையான தளங்கள்.. நேரம் கிடைக்கும் போது சென்று படித்து கருத்திடுங்கள்..
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..
தாங்கள் அறிமுகம் செய்துள்ள
ReplyDeleteவலைதளங்கள் அனைத்தும் நான் விடாது
தொடர்கிற அற்புதமான வலைத்தளங்கள்
அறிமுகம் செய்யப்பட்ட வலைப்பதிவர்கள்
அனைவருக்கும் அருமையாக அறிமுகம் செய்த
தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்
தாங்கள் தொடர்ந்து தொடரும் தளங்களை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி..
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...
அருமையான தளங்களின் அணிவகுப்பு ..பாரட்டுக்கள்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறந்த விழிப்புணர்வுத் தளங்களை தாங்கள் தளத்தில் தாங்கி அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி. சகோதரர். திரு.ஆதி வெங்கட். இதில் எங்களைப்போன்ற வர்களின் ஆக்கங்களும் அனைவரிடத்திலும் சென்றடைய காரணியாக இத்தளம் இருக்க மீண்டும் நன்றியினை தெரியப்படுத்திக் கொள்கிறேன்
ReplyDeleteஅறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன்..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்..
சிறப்பான செய்திகளைத் தரும் வலைத்தளங்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட வலைப் பதிவர்களுக்கும்
அறிமுகம் செய்த - தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்...
DeleteMathi, Puvi - இவர்களின் தளம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களுக்கு புதிய தளங்கள்!!! அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..
தங்களின் பரந்த வாசிப்பு வியப்பளிக்கிறது... சில சுட்டிகளை குறித்து வைத்துளேன்.. பின்பு படிக்க வேண்டும், திருநங்கை பற்றிய தொடரும், சிட்டுகுருவி கட்டுரையும் அவசியம் படிக்க வேண்டும்
ReplyDeleteஎல்லாவற்றையும் பொறுமையாக படித்துப் பார்த்து கருத்திடுங்கள்...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சீனு..
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க...
ReplyDeleteஇரண்டாம் நாளுக்கு
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்.
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..
Deleteநல்ல உபயோகமான, எல்லோருக்கும் பயன் படக்கூடிய பகிர்வு. வாழ்த்துக்கள்
ReplyDeleteடெல்லி விஜய்
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்..
Deleteதேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
ReplyDeleteபெறுவது எப்படி ?
என்று சொன்னால் நல்லது.
ஹெல்ப் லைனுக்கு சென்று அங்கே தொலை பேசி எண் வாங்கி கொண்டு அங்கே போன் செய்தால்,யாரும் எடுப்பதில்லை.
எடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் எந்த விதத்திலும் உதவுவதில்லை.
www.menakasury.blogspot.com
சமுதாய விழிப்புணர்வு பக்கங்களுக்கே சென்று கருத்திட்டு கேளுங்கள்... உதவி கிடைக்கலாம்...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா..
சமூக விழிப்புணர்வு பதிவுகள் அனைத்தும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொகுத்து அளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..
Deleteசில புதியவர்கள் இருககிறார்கள் அவர்கள் தளம் சென்று வாசிக்கிறேன் ஆதிவெங்கட்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது, சென்று படித்து கருத்திடுங்கள் அம்மா...
Deleteசமூக விழிப்புணர்வுப் பக்கமான இன்றைய உங்களின் அறிமுகங்கள் பல புதிது. சென்று பார்க்கிறேன் ஆதி.
ReplyDeleteபுதிய தளங்களுக்கு சென்று படித்து கருத்திடுங்கள்.
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..
மனம் நிறைந்த நன்றி தோழி .வலைச்சரத்தில் எனது வலையையும் கோர்த்ததற்கு .சமூக அக்கறை நிறைந்த பதிவுகளை அறிமுகம் செய்ததற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகப்படுத்த எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா...
சமூக விழிப்புணர்வு பற்றிய அறிமுகங்களெல்லாம் மிக நன்றாக உள்ளது. ரஞ்ஜனி எழுதுவது தவிர மற்றெல்லாம் படிக்க வேண்டும். சிட்டுக் குருவிகளைப் பற்றி படித்தது ஞாபகம் வருகிறது.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். நன்றாக தேர்நதெடுத்து எழுதுகிறாய். மிக்க ஸந்தோஷம். அன்புடன்
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்ட தலைப்புகளே எப்படியான சமூக விழிப்புணர்வு கொண்டவை எனப் புரிகிறது அவற்றை கண்டிப்பாகப் படிக்கிறேன்.. தேடிப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க எழில்..
Deleteஅறிமுகப்படலம் வித்தியாசமான சிந்தனை விழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்...
Deleteவிழிப்புணர்வு அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி...
DeleteDear Adhi, I wonder at your consistent hardwork to bring us all these names and ARIMUKAMS.
ReplyDeletetHANK YOU MA.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு என் நன்றி கலந்த
ReplyDeleteபாராட்டுக்களும் தோழி !
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்
Deleteசமூக விழிப்புணர்வுள்ள பதிவுகளைத் தரும் தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆதி!
ReplyDeleteஅதில் நான் எழுதிய பதிவும் இடம்பெற்றது இன்னும் சந்தோஷமான விஷயம். எத்தனை தளங்களை படிக்கிறீர்கள், ஆதி! பாராட்டுக்கள்!
தங்களைப் பற்றி அறிமுகப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ரஞ்சனிம்மா..
ReplyDeleteஎன் வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி....
ReplyDelete