Sunday, April 6, 2014

மகளிர் மட்டும்



இன்றைய நாள் மகளிர் மட்டுமாக மலர்ந்திருக்கிறது :)

நினைவுகளின் பிரதி.;

‘மயூ மனோ’ எட்ட நின்று பார்த்த கவிதாயினி. பெண்மை இதழில் இவரது கட்டுரைகள் மிகப்பிரபலம். ரொம்ப சிக்கலாகத்தான் இருக்கும் இவரது கவிதைகள். தமிழ் கொஞ்சி விளையாடும் போலிருக்கிறது இவர் முற்றத்தில். அத்தனை கவிதைகளும் தமிழுக்குப்பெருமை சேர்ப்பன.

எடுத்துக்காட்டுக்காக ஒன்று :)

சூடில்லா சூரியன்
நிழலில்லா மரங்கள்
வெளியில்.
இளவேனிலின் ஈரம்
உடலில்
இது/இத்யாதி தவிர்த்து
மனதின் வெப்பியாரத்தை
சொல்லிவிடக்கூடிய ஒரு சொல்
என்னிடமில்லை

முழுக்கவிதையையும் வாசிக்க


“நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை”, என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், கட்டுரைகள்,நூல் மதிப்புரைகள் என இவரது வானம் இன்னும் விரிகிறது.

இது அவர் எழுதிய சிறுகதையில் ஒரு பகுதி. இயக்குநர் ஷங்கர் எப்போதும் கூறுவார். எழுத்தாளர் சுஜாதா எந்தவித ஒப்பனையுமின்றி, எந்தவித அரங்குகளுமின்றி, அவற்றில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் என எவற்றையும் காணவைக்கவியலாத எழுத்தில் அனைத்தையும் உணரவைத்துவிடுவார் பத்து பைசா செலவின்றி என. அதுபோல இந்தக்காட்சி விளக்கப்பட்டிருக்கிறது.

“தூரத்தில் அவன் தலை தெரிந்தது. முதலாவது தொடர்மாடி தொடங்கும் குறுக்குச்சந்தின் அந்தத்தில் இருந்து மூன்றாவதாய் இருக்கும் சைந்தவியின் குடியிருப்பு வரை அவன் நடந்து வந்து தெருவை குறுக்கால் கடந்து எதிர்க்கடையில் நின்று கொள்வது வரை அவனை இவள் தெளிவாகப் பார்க்கலாம். பிறகு பார்க்க முடியாது. ஏனென்றால் இவள் பார்ப்பதை யாராவது மேலிருந்து பார்த்துவிட்டு வீட்டுக்கு சொல்லிவிடுவார்கள். இல்லை என்றால் அப்பா வீட்டிலிருந்தால் அவர் இவளை எழுப்பிவிட்டு தான் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்க, அல்லாட்டால் இங்காலப் பக்கம் பார்க்கும் பெடியங்களைத் அவர்கள் குடும்பத்துடன் குலப்பெருமையுடன் சேர்த்து வையத் தொடங்கிவிடுவார்.

இதன்பிறகு என்னவாயிற்று என படபடப்பாக இருக்கிறதல்லவா ? அதுதான் எழுத்தின் வெற்றி. தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்குங்கள்.


ஈழதேசம் என்ற தலைப்பிலான கவிதைகளும், கட்டுரைகளும் மயங்கவைப்பன. இங்கே சொடுக்கி அனைத்தையும் வாசிக்கலாம்.

பாலும் பசுநெய்யும்
பழமும் பன்னீரும்
பட்டுங் குஞ்சரமும்
பறித்தெடுத்த புதுப் பூவும்
கொட்டும் விபூதியும்
குளிர்க்க வைக்கும் அபிசேகமும்
நாவினிக்கும் தமிழ்ப் பாவும்
நாழிக்கொரு பூசையுமாய்
உங்களுக்கு நாங்கள்
என்னதான் குறை வைத்தோம்?

_______________________________________________________________________________________________________________________________

இளவேனில்

‘இளவேனிற்காலப்பஞ்சமி,வானில் வந்த பௌர்ணமி’ என்ற பாடல் தான் ஞாபகத்துக்கு வரும். பல காலமாக, அவங்க மொழில சொல்லணும்னா ‘கன காலமா’ தொடர்ந்துகிட்டு வர்றேன் இவங்க வலைப்பூவை. ஒவ்வொரு பதிவையும் விடாது வாசித்துக்கொண்டு வருகிறேன். இவங்க விவரிக்கும் பெரும்பாலான விஷயங்கள் எல்லாம் என்னோட அக்காகாரிகள் செய்த விஷயமாத்தான் இருக்கும். நேர்ல பார்த்ததை எழுத்தில் பார்ப்பது போல எப்போதும் தோணும். அவர் தான் தமிழ்நதி’. விவரிக்கவோ இல்லை விளக்கவோ’ல்லாம் என்னால இயலாது. படித்து நீங்களே அனுபவித்துக்கொள்ளுங்க. :)  ஒரு தடவை இவரது பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வாசித்தவர் ‘இவர் பெரியபயலா’ வருவார்னு வாழ்த்தினது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. இதோ வலைச்சரத்திற்கு கௌரவ ஆசிரியர் பொறுப்பு வரை வந்திருக்கிறேன் :)

என்ன ஒரு குறை இப்போல்லாம் கணினிலருந்து காகிதத்துக்கு ஷிஃப்ட் ஆகிட்டார். எப்போதாவது தான் இங்க வந்து பதிவதை வழக்கமாக வைத்திருக்கிறார். முகநூலில் அவ்வப்போது பகிர்வார், பின்னூட்டச் சண்டையுமிடுவார். ( இப்ப இத ஏன் எழுதினேன்னு சண்டைக்கு வருவார்னு நினைக்கிறேன் )

எடுத்துக்காட்டுக்கு ஒன்று

இடையமர்ந்த குடத்தினின்று
புதுப்பெண்ணின் வெட்கமென
தெருவெல்லாம் தளும்பும்.
சேலைநுனிவிரல்
செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்.
பொசிந்து வேரிறங்கி

முழுக்கவிதையும் இங்கே

நிறைய வெளிநாட்டுகவிஞர்களின் பெயரையும், அவர்களின் எழுத்தையும் கட்டுரைகள் மூலம் எனக்கு அறிமுகப்படுத்தியவர். கொஞ்சம் தமிழ் சுணங்குகிறது, சொற்கள் கிடைக்காது தடுமாறுகிறது என்றால் இவரின் தளத்தை ஒரு எட்டு போய்ப்பார்த்துவிட்டு வந்தால் போதும் எனக்கு :)

“படைப்பாற்றலுக்கும் நடைமுறை வாழ்வுக்கும் தீராத இழுபறி நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதிலும் படைப்பாளி பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கவிதைகள் உருவாகிச் சில பொழுதில் சருகாகி உதிரும் நிலமாகவே மனம் இருக்கிறது. கவிதையின் குரல் இரகசியமாக அழைக்கவாரம்பித்து மெதுமெதுவாக உயர்ந்துசெல்கிறது. புளி கரைக்குமொரு நேரத்தில் அது உச்சம் கொள்கிறது. சமையல் முடிந்து துணிகளைத் துவைத்துக்கொண்டிருக்கும் பொழுதில் தலைகுனிந்தபடி இறங்கிச் செல்கிறது. அதன் குரல் மெல்ல காலவெளியில் கரைந்துபோகிறது. அழைத்த குரலைப் புறந்தள்ளிவிட்டு நமக்கு நேரம் கிடைக்கிற போது எழுத உட்கார்வதென்பது புதைத்த பிணத்தைத் தோண்டி வைத்து அழுவதற்கொப்பானதாகும்.

இப்டீல்லாம் எழுதினா நாங்கல்லாம் என்ன பண்றது ?! முழுசா இங்க வாசிங்க


இவர் எழுத்து அச்சேறாத தமிழ்ச்சிற்றிதழ்கள் இல்லை,வணிக இதழ்களும் இல்லை எனக்கூறலாம்.
தொடர்ந்து வாசிக்கும் எனக்கு கிடைத்த அனுபவங்கள் போல உங்களுக்கும் கிடைக்க இங்கே சொடுக்குங்க :) இவரது வலைப்பூவின் நிரந்தரச்சுட்டி எனது.!


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொசல்

எல்லாரையும் எழுதீட்டு இவரை எழுதாமல் விட்டால் என்னவாகிறது ? அதனால் இங்க இவரின் வலைப்பூ. பிரபல பத்திரிக்கையில் பணி. தமிழ்த்தொண்டு ஆற்றுகிறார் J கவிதா சொர்ணவல்லி. கூடவே முகநூல்ல வந்து ஆவேசமா சண்டை பிடிப்பார். என் பைக்கை எவனோ தொடர்ந்துவர்றான்னு இங்க வந்து எழுதுவார். இது மாதிரி பல விஷயங்களை சொல்வார். நமக்கு என்ன செய்வது என்று தெரியாது J சிறுகதைகள் வாசிக்க நன்றாக இருக்கும். நீங்களும் வாசிங்க

‘நான் அவன் அது’ எனக்கு ரொம்பப்பிடிச்ச கதை அதிலிருந்து ஒரு பகுதி.

“இங்கதான் ஆயிரம் வருஷமா ஒரு பாம்பு வாழுது. வெள்ளையா இருக்கும். அதுக்கு றெக்கைகூட இருக்கும். அப்படியே உடம்பெல்லாம் முடி முடியா முளைச்சு இருக்கும். பறந்துவந்து கொத்தும்!என்று அந்த ஆயிரம் வருட பாம்பைப் பற்றி கதை சொல்லிக்கொண்டே போனான். நான் பயத்தில் சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டேன்.நான் அழுவதைப் பார்த்தும் கொஞ்சம்கூட எந்த  உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்… ‘நாம அந்தப் பாம்ப பாக்கத்தான் இங்க வந்திருக்கோம்என்று. வீட்டைவிட்டு வெளியே போக வழியே தெரியாத நிலையில் அவனுடன் அன்று நாள் முழுக்கக் காத்துக்கிடந்தேன். வெள்ளை பாம்பை’ப் பார்ப்பதற்காக. எதுவும் வரவில்லை. ஆனால், வீடு போனவுடன் எனக்கு  முதுகில் நாலு சாத்து விழுந்தது அம்மாவிடம் இருந்து.

முழுதாக வாசிக்க இங்கே


இவர் எழுதிய ஒரு கவிதை

ஒரு காடு எப்படி எல்லாம் ஆக்கும் என்றால்
கோதுமைநிற மேனியின் பெருமிதம் உடைக்கும்
கருப்பின் அழகை காட்டி கொடுக்கும்
வறண்ட இலையின் ஸ்பரிசம் உணர்த்தும்
மரங்களிடை சூரியன் பார்க்க சொல்லும்
வெப்பம் தரிசிக்க வைக்கும்
நிழலை பருக தரும்
பார்த்திரா பூக்கள் காண்பிக்கும்
பாறைகளில் நடக்க பணிக்கும்
மிருகங்களை கடக்க வைக்கும்
நதியில் மிதத்தல் சொல்லி அமரும்
கால் பெருவிரலில் குதிக்க கற்று கொடுக்கும்
பேண்டோரா காடுகளின் ராணியாக்கும்
வனம் பழக்கும்.
நதி பழக்கும்.
மிருகமும் பழக்கும்.
முடிவில்
வனப்பேச்சியாய் வாழ உத்தரவிடும்

இவரின் கவிதைகளை விடவும் உரைநடை சிறுகதை மொழி சுவாரசியமானது. தொகுப்பாக தொகுத்து வைத்திருக்கிறார் தொடரலாம் இங்கே

 
 
__________________________________________________________________________________________________________________________

நிலம் புகும் சொற்கள்

இவரைப்பற்றி தெரியாதவர் என எவரும் இருக்கவியலாது, அநேகம் கவிதைகள் நான் முகநூலில் பகிர்ந்தவை இவருடையதாகத்தானிருக்கும். சமூக ஆர்வலர், கவிஞர், எனப்பல முகங்கள் இவருக்கு.
அவர்தான் சக்திஜோதி. இவர் எழுதும் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவன். இவரது கவிதைகளிலிருந்து பெற்ற சில கருத்துகளை வைத்து நிறைய எழுதியிருக்கிறேன். அதெல்லாம் கமுக்கம் J

எடுத்துக்காட்டுக்காக ஒன்று

கேள்விகளுக்கான பதில்
ஒன்றுமில்லையென
ஒலித்துச்சிதறுகின்றன  எப்பொழுதும்
அது மன  வெளியின்
அழுத்தங்களற்று
மிதந்து  நகர்கின்றது
அன்பு நட்பு காதல் காமம்


இவரின் கவிதைத்தொகுப்பை பற்றி பிறர் எழுதிய கட்டுரைகளின் சுட்டி


என்னால் எப்போதும் மறக்கவியலாத கவிதை ஒன்று :)

நாங்கள் வேறு வேறு திசைகளில் பயணிப்பவர்கள் .
சிலபோது  எதிரெதிரே கடந்து செல்வோம்
எங்களை நாங்கள் பார்த்தவாறு .
அவன் கண்களில் மின்னல் பூக்கும்
என் கண்கள் அதைத் தாங்கித் கொள்ளும் .
மீண்டும் நாங்கள் எதிர்கொள்கையில்
என் கண்களில் மின்னல் பூக்கும் .
அவனால் தாங்கவே இயலாது


இவரின் வலைப்பூவைத்தொடர


____________________________________________________________________________________________________________________

குரல்

இவரின் நிறையக்கவிதைகளை வாசித்தவன்.தொடர்ந்தும் எழுதி வருகிறார். இப்போது தான் எனக்கே தெரிகிறது இவருக்கும் வலைப்பூ இருப்பதை.! ‘உமா மோகன்’ இவருடைய கவிதைகள் ‘உயிரோசை’யில் பார்த்து பின் தொடர்ந்தும் வாசிக்கலானேன். சிக்கலில்லாத மொழி இவருடையது. கவிதைகள், கட்டுரைகள் என பிரபலமானவர். கவிதைத்தொகுப்பு, மற்றும் பயணம் குறித்த ஒரு தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார்.

எனக்குப்பிடித்த அருமையான ஒரு கவிதை

மயில் நீலச்சேலை.
டிசைனர் ரவிக்கை,
பொருத்தமாய்த்தேடிவாங்கிய 
அணிகலன்கள்,
செருகிய பூச்சரமும் 
ஒப்பனைப்பூச்சுகளும்
பொருத்தமும் ,திருப்தியும் 
கண்ணாடி மட்டுமன்றி 
உறவும்,நட்பும் மெச்ச
பெருமிதமாய்த்தான் இருந்தது
எச்சில் இலை
எடுத்துப்போன 
பள்ளித்தோழியை
அடையாளம் காணும் வரை


எத்தைனையோ கவிதைகள், கட்டுரைகள் என எழுதிக்குமிக்கிறார் இங்கே :)


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்னும் நிறையப்பெண் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் யாருக்கும் வலைப்பூ இல்லை :) எல்லாம் முகநூலில் பதியப்படுகிறது. அதனாலேயே தரவு தேடிப்பார்ப்பதென்பது இயலாத காரியமாகப் போகிறது. சீக்கிரமாக ஒரு வலைப்பூவை இவர்கள் ஆரம்பித்தனர் என்றால் :) நன்றாக இருக்கும். அதில் நான் தொடர்ந்து வாசிப்பது இவர்களின் பதிவுகளை.

சுஜாதா செல்வராஜ் https://www.facebook.com/sujatha.selvaraj.7
கனிமொழி ஜி ( இவர் அவர் இல்லைங்கோ :) )  - https://www.facebook.com/kani.mozhi.79025648?fref=ts
பிரிந்தா சேது - https://www.facebook.com/brindha.sethu.1?fref=ts ( இவர் இப்போது வலைப்பூ தொடங்கியிருக்கிறார் – http://sebrindha.blogspot.com
நிலவுமொழி செந்தாமரை - https://www.facebook.com/kayal.senthamarai
ஆர்த்தி வேந்தன் https://www.facebook.com/arthi.vendan

 __________________________________________________________________________________________________________

இவை தவிர நான் தொடரும் பிரபலங்களின் வலைப்பூக்கள் மற்றும் வலைத்தளங்கள், இவற்றை வாரமொருமுறை அல்லது இருமுறை எனத்திறந்து பார்த்தால் போதும். இவர்களெல்லாம் தொடர்ந்தும் பல தளங்களில் இயங்குவதால் இங்கு புதுப்பிக்கப்படுவது நமதைப்போல் அடிக்கடி நிகழ்வதில்லை.

வண்ணதாசன் http://vannathaasan.blogspot.com/
ராணி திலக் http://raanithilak.blogspot.com/
பவா செல்லத்துரை http://bavachelladurai.blogspot.com/
லீனா மணிமேகலை http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/
ஷோபா சக்தி http://www.shobasakthi.com/shobasakthi/
அழியாச்சுடர்கள் http://azhiyasudargal.blogspot.com/
கலாப்ரியா http://kalapria.blogspot.com/
கவின் மலர் http://kavinmalar.blogspot.in/
குமரேசன் அசாக் http://asakmanju.blogspot.com/
எம்டிமுத்துக்குமாரசுவாமி http://mdmuthukumaraswamy.blogspot.com/
குட்டி ரேவதி http://kuttyrevathy.blogspot.com/
சுஜாதா தேசிகன் http://sujathadesikan.blogspot.com/
நேசமித்ரன் http://nesamithran.blogspot.com/
தேவதேவன் http://poetdevadevan.blogspot.in/
லக்ஷ்மி சரவணக்குமார் http://iruthisuvaasam.blogspot.com/
ரியாஸ் குரானா http://maatrupirathi.blogspot.in/
ஜெயமோகன் http://www.jeyamohan.in/
சாரு நிவேதிதா http://charuonline.com/blog/
எஸ்ராமகிருஷ்ணன் http://www.sramakrishnan.com/

இந்தச்சுட்டிகளைக்குறித்து வைத்துக்கொண்டு நீங்களும் தொடரலாம்.புதிய அனுபவங்களைப்பெறலாம் என்னைப்போல. இதுவரை எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த தமிழ்வாசிக்கும், அன்பின் சீனா’ விற்கும் நன்றி!

3 comments:

  1. அறியாத சில தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பல புதியவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அன்பின் ராம் சின்னப்பயல் தோழர் முதலில் வலைச் சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள் என் கவிதைகளுக்கான உங்கள் தொடர் கவனிப்புக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி .புதிய வலைப்பூ முகவரிகள் சில எனக்குக் கிட்டியுள்ளன அதற்கு அடுத்த நன்றி

    ReplyDelete