வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்!
எங்கள் வீட்டில் தோட்டமும் நூலகமும் அமைக்க வேண்டும் என்பது எங்கள் வருங்கால கனவு. நூலகம் அமைக்க ஒன்று இரண்டாக நூல்களைச் சேர்க்க ஆரம்பித்து இருக்கிறோம். நூல்களை வாங்கும் முன்பு யாராவது படித்தவர்கள் அந்த நூலைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பது எங்கள் வழக்கம். படித்த புத்தகங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் சில தளங்கள் உங்கள் பார்வைக்கு :
தளத்தின் பெயரே புத்தகம் தான். கிமு.கிபி, வெயில் மற்றும் மழை, பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள், நடந்து செல்லும் நீரூற்று, அடியாள், தூங்காமல் தூங்கி போன்ற கட்டுரைகள் நூல்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
புத்தக விமர்சங்கள் என்ற தளத்தில் சரியாக முடிவெடுக்க, வேலை விதிகள், மெட்ராஸ்-சென்னை, என் ஜன்னலுக்கு வெளியே, ராமகியன் போன்ற புத்தக விமர்சனக் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டு வருடங்களாக தளம் புதுப்பிக்கப் படவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
புத்தக அலமாரி எனும் தளத்தை கேவசமணி எழுதி வருகிறார். அவரின் தளத்தில் புத்தக விமர்சனங்கள் மட்டுமில்லாது சில சிறுகதைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. நிமித்தம், யாமம், அப்பாவின் துப்பாக்கி, எட்டுத் திக்கும் மதயானை, ஒரு புளியமரத்தின் கதை போன்றவற்றை படித்துப் பாருங்கள். அவர் தளத்தை வாசித்தவுடன் உங்கள் வாங்க வேண்டிய புத்தக லிஸ்ட் கண்டிப்பாக மாறும்.
தமிழ் பேப்பர் எனும் இணைய இதழில் வெளியாகியுள்ள வேல ராம்மூர்த்தி கதைகள், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு, காவல் கோட்டம், துருவ நட்சத்திரம் பற்றிய கட்டுரைகள் அந்தப் புத்தகங்களுக்கான நல்ல அறிமுகம்.
ஆம்னிபஸ் தளம் சில வருடங்களாக நாங்கள் வாசித்து வரும் தளம். எழுத்தாளர் பெயரில் க்ளிக் செய்தால் அவர்களின் புத்தக விமர்சனம் வருவது போல் வடிவமைப்பு உள்ள அவர்கள் மெனு எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுவர்கள் கதை மேல் ஆர்வமுள்ள எனக்கு அவர்களின் தேக்கடி ராஜாவைப் பற்றிய அறிமுகம் கவர்ந்தது எனச் சொல்லத் தேவையில்லை. கண் பேசும் வார்த்தைகள், அம்மா வந்தாள், பாரதியார் சரித்திரம் போன்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது அவர்கள் அறிமுகங்கள் தான். யாமம் பற்றி இன்னொரு கட்டுரை. ஒரே புத்தகத்திற்கு இரு வேறு கருத்துளைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு. நாம் முன்பே படித்திருக்கும் புத்தகத்திற்கு என்ன மாதிரி அறிமுகம் கிடைத்திருக்கிறது என்று ஆர்வம் பொங்க தியாக பூமி படித்தேன்.

கடந்த ஜனவரியில் ஆரம்பித்த வாசகர் தளத்தில், கர்ணனின் கவசம், குற்றப்பரம்பரை - பேரன்பும் பெருங்கோபமும், கோபல்ல கிராமம்- இனிமையான மனிதர்களின் இருப்பிடம், சுபாவின் விறு விறு த்ரில்லர்கள், ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகனுக்கு ஒரு வாசகனின் கடிதம், தூப்புக்காரி என்று பலவித வடிவங்களில் நூல் அறிமுகங்கள் இருக்கின்றன.
என்ன நண்பர்களே, அறிமுகமான இடுகைகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நாளை மீண்டும் சந்திப்போம்.
தோட்டமும் நூலகமும் உள்ள வீடு - ஒரு சொர்க்கத்துக்குச் சமம் என்பார்கள்..
ReplyDeleteஅவரவர் வாசித்த புத்தகங்களைப் பற்றி அறியத்தரும் தளங்களை அறிமுகம் செய்தது சிறப்பு.. தொடருங்கள்.. நல்வாழ்த்துக்கள்..
நன்றி துரைசெல்வராஜூ
Deleteபுளியமரத்தின் கதை, ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் போன்ற நூல்களை படித்துள்ளேன். மேலும் சில நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி கும்மாச்சி
Deleteதோட்டமும் நூலகமும்... வேறென்ன வேண்டும் நமக்கு ..இனிமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்.!
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி
Deleteநூலகம் வைப்பது சாலவும் நன்று.
ReplyDeleteThanks Killergee
Deleteஏக பட்ட நூலகங்கள்..
ReplyDeleteநன்றி
நன்றி ஹாரி
Deleteநல்ல வலைத்தளங்கள்! அறிமுகம். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி Thulasidharan
Deleteஇனிமையான அறிமுகங்கள்.............
ReplyDeleteநன்றி Anuradha
Deleteஇன்றைய தள அறிமுகங்கள் எனக்கு புதியவை! சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஆஹா என் கருத்து எங்கே போனது??? ஓட்டு மட்டும் பதிவாகியிருக்கு..அதுவரைக்கும் பரவாயில்லை :)
ReplyDeleteஆர்வத்தைத் தூண்டும் அறிமுகங்கள் தியானா, இன்று நேரம் இல்லை, ஆனாலும் குறித்துக் கொள்கிறேன். கண்டிப்பாகப் பின்னர் பார்க்கிறேன்
ஏன் கருத்து வரலைனு தெரியல கிரேஸ்.. இரண்டாவது கருத்தும் வாக்குக்கும் நன்றிகள் :-)
Deleteஅட வித்தியாசமாய் புத்தக விமர்சனம் குறித்து எழுதும் பதிவர்கள் குறித்த பதிவு. அருமை. நானும் பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி Ezhil
Deleteபுத்தக விமர்சனம் குறித்த வலைப்பூக்களை நான் அதிகம் அறிந்ததில்லை. அந்த குறையை போக்கிய நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி
சாமானியன்
நன்றி Saamaaniyam Saam
Deleteஎங்கள் வீட்டில் தோட்டமும் நூலகமும் அமைக்க வேண்டும் என்பது எங்கள் வருங்கால கனவு.//
ReplyDeleteகனவு நன்வாக வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலாவது நூலகம் வேண்டும்.
இன்று இடம் பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி Kasirajalingam
Deleteஅட வாசகர் கூடம்.. ஜாம்பவான்களுக்கு மத்தியில் நேற்று பிறந்த குழந்தைக்கும் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி + நன்றி :-)
ReplyDelete