Thursday, July 31, 2014

தோட்ட உலாவிற்கு வருக வருக!

வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள்!

அனைவரும் நலமா? தோட்டமும் நூலகமும் அமைப்பது எங்கள் கனவு என்று நேற்று நூல்கள் வாங்கும் முன் படித்துப் பார்க்க நூல் அறிமுகத்தளங்கள் பற்றி எழுதியிருந்தேன். இன்று வீட்டுத் தோட்டம் பற்றி தகவல் தரும் தளங்கள் பற்றிப் பார்ப்போமா?

தோட்டம் என்கிற பெயரிலேயே எழுதும் சிவா, எப்படி இருந்த இடத்தை தன் வீட்டுத் தோட்டமாக மாற்றி இருக்கிறார் என்று பாருங்கள். தோட்டம் அமைப்பதற்கான தகவல்களை இங்கு மற்றும் இங்கு தந்திருக்கிறார். மாடித் தோடம் அமைப்பது பற்றிய தன் அனுபவத்தை இங்கு மற்றும் இங்கு பகிர்ந்து இருக்கிறார். அவரின் வீட்டில் விளைந்த தர்பூசணியைப் பாருங்கள்!

நான்கு பெண்கள் தளத்தில் மருத்துவம், பொருளாதாரம், சினிமா என்று வித விதமான தகவல்கள் கிடைக்கும். அவர்கள் தோட்டம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள் ‍- பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு, தண்டுக்கீரை வளர்ப்பு, மிளகாய்ச் செடி வளர்ப்பு. உரம் எப்படி தயாரிப்பது என்ற தகவலும் இருக்கிறது.

Home garden tamil என்கிற தளத்தில் ஐந்து பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் ஐந்திலும் வீட்டுத்தோட்டத்திற்கான உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட யோசனை, வீட்டு காய்கறி தோட்டம், விதைத்தல் மற்றும் நடவு செய்தல் மற்றும் வீட்டு மூலிகைத் தோட்டம் படித்துப் பாருங்களேன்!

கனவு இல்லம் எனும் தளத்தில் வெந்தய கீரை வளர்ப்பது, கோதுமை புல் வளர்ப்பது பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவர்களின் காய்கறித் தோட்டத்தையும், பூந்தோட்டத்தையும் பார்த்து மகிழலாம்.

மகி சமைப்பது எப்படி என்று மட்டும் எழுதுவதில்லை. சமைப்பதற்கு தேவையான காய்கறிகள் விளைப்பது பற்றியும் எழுதுகிறார்கள். குடை மிளகாய், மணம் வீசும் சாதிமல்லி, ஸ்ட்ராபெர்ரி, தொட்டியில் வளர்ந்த காரட்,தொட்டித் தோட்ட அறுவடை போன்ற பதிவுகள் நமது தோட்ட ஆசைக்கு உரம் போடுகின்றன.

இது ப்லாக் இல்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளம். தோட்டம் அமைப்பதற்கான தகவல் இருப்பதால் அதையும் இங்கு தந்திருக்கிறேன்.

தங்களின் தோட்டம் நல்ல முறையில் செழித்து வளர வாழ்த்துகள்! நாளை மீண்டும் சந்திப்போம்!

27 comments:

  1. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் ஒரு ரவுண்டு போயிட்டு வருகிறேன் வலைப்பூ பக்கம்
    சிறப்பாக வித்தியாசமான தலைப்பில் அசத்தும் திறமைக்கு வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்

    அனைத்தும் தொடரும் தளங்கள்... இறுதியாக அறிமுகம் செய்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்தின் இணைப்பை சரிசெய்யுங்கள்.. இணையத்தளம் திறக்கவில்லை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்! வேளாண்மை தளத்தின் முகப்புப் பக்கமே வேலை செய்யவில்லை. சர்வர் டவுன் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை முயற்சித்துப் பார்க்கிறேன். இப்பொழுது லிங்க்கை மாற்றவில்லை.

      Delete
  3. இனியதொரு தொகுப்பு.. தொடரட்டும் தங்கள் பணி..
    வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கான இணைப்பு திறக்கவில்லை..
    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜூ

      Delete
  4. பசுமை கொஞ்சும் தொகுப்புகள்...
    பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  5. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிதே செல்கிறது தங்களது பணி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தோட்டம் பிடித்தமான ஒன்று தான். நன்றி தியானா

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு...................

    ReplyDelete
  9. சிறந்த அறிமுகங்கள்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  10. பயனுள்ள பதிவு, வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கும்மாச்சி

      Delete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  12. காய்கறிகளில் ரசாயணம் பரவி வரும் வேளையில் வீட்டுத்தோட்டம் நன்மையான ஒன்று! அதற்கு வழிவகுக்கும் பதிவுகளை அறிமுகம் செய்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. நல்லதொரு பதிவு. நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்களை எட்டிப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  14. எனது வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி தியானா. உங்கள் அறிமுகம் மூலமாக கூட இரண்டு பேருக்கு எனது தோட்டம் பற்றிய பதிவுகள் பயன்படும். நன்றி

    ReplyDelete
  15. வித்தியாசமான அறிமுகங்கள்! வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete