Saturday, August 2, 2014

வருங்கால ப்லாக் உலகம்..

வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்!

ப்லாக் மிகப் பெரிய சக்தி வாய்ந்த ஊடகமாக வளர்ந்துள்ளது. ஃபேஸ்புக், ட்டுவிட்டர் போன்றவற்றால் பின்னடைவுகள் சந்தித்தாலும், புதிதாக எழுதுபவர்களால் வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்தில் ப்லாக் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்றால், புதிதாக பலர் எழுத வர வேண்டும். அதற்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தம் குழந்தைகளுக்கு ஊக்கமளித்து, அவர்கள் படைப்புகளை தனி ப்லாக் பக்கமாக வைத்திருக்கிறார்கள். குழந்தை ஆசிரியர்கள் வைத்திருக்கும் ப்லாக் பற்றிய இடுகை இது.

தேவதையின் கனவுகள் வைத்திருக்கும் தூயா, காணாமல் போன கனவுகள் ராஜியின் மகள். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழியை உண்மையாக்குபவர். அவரின் ஆசையில் ஓர் கடிதம், அம்மாவின் அடக்குமுறை இனி என்னிடம் செல்லாது மற்றும் பெண்வேங்கை பாருங்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள் தூயா!

தருமி அய்யாவின் பேத்தி ஜெஸிகா வைத்திருக்கும் பக்கம் I am no Picasso. எழுதுவதிலும் வரைவதிலும் திறமை உள்ளவர். கோடு ஓவியங்கள், இரட்டை இலை, A very precocious titleஅவரின் புத்தகத்தைப் பார்த்து வரைந்தது, Acrylic paintings என்று ஒவ்வொரு படைப்புகளிலும் அவரின் தனித்திறன் தெரிகிறது. மேன்மேலும் ஜெஸிகா சிறக்க வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் மற்றும் ஆதி வெங்கட் அவர்களின் மகள் ரோஷ்ணி வைத்திருக்கும் வலைத்தளம் வெளிச்சக்கீற்றுகள். ரோஷ்ணி வரைந்த ஓவியங்கள் தளத்தை அலங்கரிக்கின்றன. பேப்பரிலும் கணணியிலும் அழகாக வரைகிறார். அவர் வரைந்திருக்கும் பிள்ளையார்The Story of Magic Chiselமானின் விடுதலை பாருங்கள். மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் ரோஷ்ணி!

மதுரைத்தமிழன் மகள் ஷ்ரேயா கடந்த வாரம் தொடங்கி இருக்கும் தளம் Light it up. தளத்தில் Don't change என்று ஒரு இடுகை தான் இருக்கிறது ஆனால் அருமையாக எழுதியிருக்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் ஷ்ரேயா!

குழந்தைகள் வைத்திருக்கும் ப்லாக் என்று தனியாக கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. நிறைய இருக்கலாம். தங்களுக்குத் தெரிந்தாலும் மறுமொழியில் தெரியப்படுத்துங்களேன். குழந்தைகளுக்கு ஊக்கமளித்தது போல் இருக்கும். ஊக்கமளித்தால் அவர்கள் நிறைய சாதிப்பார்கள்.

அப்டேட்: ஆதி வெங்கட் அவர்களின் மறுமொழி பார்த்து இணைத்திருக்கிறேன். நன்றி ஆதி!

காகித பூக்கள் ஏஞ்சல் அவர்களின் மகள் ஷரனின் தளம் Flowers Crafty Room. Quilling எனப்படும் காகித வேலைப்பாடு அழகாக செய்கிறார். அவர் செய்த மெரிமேட் பூனை, வாத்து, முகம், பொம்மைகள். அசத்தி இருக்கிறார். அபார திறமை இருக்கிறது. வாழ்த்துகள்!


மீண்டும் நாளை சந்திப்போம்!


36 comments:

  1. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    தொடரும் தளங்கள்தான் அறிமுகம்செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. புதிய குழந்தை பதிவர்களை அறிமுகப்படு்திய தங்களுக்கும், நன்றியும், அவர்களுக்கு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது சரி!..
    வளரும் பிள்ளைகளின் வலைத் தளங்கள் என்பதை அறிவது சிரமம் தான்.. நிச்சயம் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கத் தான் வேண்டும்... அந்த வகையில் - இன்றைய தொகுப்பு தொலை நோக்குடன் திகழ்கின்றது.

    அறிமுகமாகியுள்ள கண்மணிகளுக்கு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜூ

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எனது மகளின் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி வித்தியாசமான முறையில் வித்தியாசமான தலைப்புகளில் பதிவுகளை அறிமுகப்படுத்தும் உங்கள் பாணி மிக அருமை.பலரும் வலைத்தளங்கள் வைத்து பல பதிவுகளை தினமும் எழுதி வருகின்றனர். அப்படி எழுதி வரும் பதிவுகளை படித்து வரும் பலரும் குறை பட்டுகொள்வது ஒருத்தரும் உருப்படியா தரமாக எழுதுவதில்லை என்பதுதான். உண்மையில் சொல்வது என்றால் படிப்பவர்கள்தான் தரமற்ற பதிவுகளை தேடி படித்து குறை கூறுகிறார்கள். அப்படி குறை கூறுபவர்கள் இந்த வாரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளை தளங்களை பார்பார்களானால் அப்படி குறை கூறமாட்டார்கள் என்பது நிச்சயம். காரணம் நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்கள் எல்லாம் மிகவும் பயன் தரக் கூடிய பதிவுகளாகவே இருந்து வருகிறது

      எப்படி அன்னம் பாலில் உள்ள நீரை தனியாக பிரித்து எடுத்து பாலை மட்டும் அருந்துமோ அது போல நீங்கள் பல நல்ல பதிவுகளை எழுதி வருவது மட்டுமல்லாமல் இந்த பதிவுலகில வரும் கச்சடா பதிவுகளில் இருந்து நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தி பெரிதும் பாராட்டுக்குரியது, பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

      Delete
    2. நன்றி மதுரைத் தமிழன்! ஆனால் நீங்கள் புகழும் அளவிற்கு நான் ஒர்த் இல்லைங்க :-)

      Delete
    3. அட மதுரக்கார புள்ளைக்கு இருக்கும் தன் அடக்கத்தை பாருங்களேன் ஹீ.ஹீ

      Delete
    4. நான் யாரையும் எளிதில் புகழ்ந்துவிடமாட்டேட்ன் அப்படி நான் புகழ்கிறேன் என்றால் நிச்சயம் அவர்களிடம் "நிறைய' திறமைகள் இருக்கும்

      Delete
  6. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    ReplyDelete
  7. அறிமுகங்களைக் கண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள். எங்கள் மகளின் வலைப்பூவையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி. இது அவளுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரும். நன்றி தியானா.

    ReplyDelete
  9. காதிகப் பூக்கள் ஏஞ்சலின் அவர்களின் தளம் - http://kaagidhapookal.blogspot.in/2014/07/seed-dumplings.html

    இது அவரது மகளின் தளம். - http://craftyflower.blogspot.in/2013/04/quilled-mermaid-hello-kitty.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆதி

      Delete
    2. நன்றி ஆதி! ஏஞ்சல் அவர்களின் மகள் தளத்தையும் இணைத்துவிட்டேன்.

      Delete
  10. எனது மகளின் தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தியானா...

    ReplyDelete
  11. வருங்கால ப்லாக் உலகம் - வலைச்சரத்தில் புதுமைதான் என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ

      Delete
  12. இளம்பதிவர்களை அறிமுகம் செய்த விதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அனைத்துக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்!
    என் மகன் பிளாக் எழுத ஆரம்பித்திருந்தான்..அவன் படிக்கும் புத்தகங்கள் பற்றி இருக்கும்..நானே ஒரு மின்னஞ்சல் முகவரி பதிவு செய்து கொடுத்திருந்தேன்...ஒருநாள் என் கணவர் அருகிருக்க ஏதோ எழுதிக்கொண்டிருந்தான்..அப்புறம் பிறந்த நாள் கேட்கிறது, கொடுக்கவா எனக் கேட்க இவரும் சரி என்று சொல்லிவிட்டார்...அவ்வளவுதான்....கூகிள் disable செய்து விட்டது..வயது குறைவு என்பதால்..ஒரே அழுகை என் பையனுக்கு..இன்னொன்று திறந்துகொடுக்க வேண்டும்..அவன் ஆசையாக வைத்திருந்த பெயர்(http://supremeoverlordoftheuniverse.blogspot.com) திரும்ப கிடைக்குமா என்று அவனுக்கு சந்தேகம்..பார்க்கவேண்டும்..எழுத ஆரம்பித்தவுடன் பகிர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. அடடா!

      நான் இந்த இடுகை எழுதும் பொழுது உன் மகன் தொடர்ந்து எழுதுகிறானா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். கண்டிப்பாக மீண்டும் ஒரு தளம் ஆரம்பித்து கொடுத்துவிடு கிரேஸ்!

      Delete
    2. முன்னால் ஒரு 'the' சேர்த்து ஆரம்பித்துவிட்டோம் :) http://thesupremeoverlordoftheuniverse.blogspot.in/

      Delete
  14. http://unmaiyanavan.blogspot.com/
    இது சகோதரர் சொக்கன் அவர்களின் அன்பு மகள்களின் ஆக்கங்களை பகிரும் பக்கம்

    http://unmaiyanavan.blogspot.com/oviyavinpage.blogspot.com.au/2014/07/1.html


    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி ஏஞ்சல்! தங்கள் மகள் அருமையாக செய்திருக்கிறார். என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்து விடுங்கள்!

      Delete
  15. அருமையான விஷயம் தியானா ..
    குழந்தைகளை நாம்தான் உற்சாகப்படுத்தி எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கணும்
    என் மகள் ஆரம்பத்தில் ரொம்ப ஆர்வமாக இருந்தாள் ..கொஞ்சம் படிப்பில் பிசியானதால் ஒரு சிறு ப்ரேக்
    கண்டிப்பா மீண்டும் தொடர்வாள் .
    ஆங்கிலத்தில் எழுதினாலும் பராவாயில்லை நாம் ஊக்குவிப்போம் அவர்களை
    நிறைய பெற்றோர் அவர்கள் பக்கத்தில் தங்கள் பிள்ளைகளின் ஆக்கங்களை பதிவு செய்றாங்க ..
    அதையும் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தணும் ..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நாம் செய்ய வேண்டியது. நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete
  16. இளம் வலைஞர்களை அறிமுகப்படுத்திய பதிவு இன்று.
    நல்ல உற்சாகமூட்டும் செயல்.
    நன்று!

    ReplyDelete
  17. இளம் பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! பதிவுலகம் விரிகின்றது! மிகவும் வித்தியாசமான அறிமுகம் தியானா! அழகாய் தொடுத்தீர்கள் வலைச்சரத்தை!

    ReplyDelete