Sunday, August 3, 2014

ஊக்கமளித்தவர்களுக்கு நன்றிகள்!

வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்!

வலைச்சர ஆசிரியராக என் இறுதி இடுகை.

நான் பதிவு எழுத வந்த புதிதில் ஆதரவு தந்தவர்களை இந்த நாளில் நினைத்துப் பார்க்கிறேன். என் நன்றி அவர்களுக்கு உரித்தாகுக!

அமிர்தவர்ஷினி அம்மா அவர்களின் தளத்தின் பெயர் மழை. உப்பு, நாலணா, அம்மா வீடு, பத்மா படித்தவுடன் அவற்றின் தாக்கம் அகல சற்று நேரம் எடுப்பது உண்மை. திரும்பவும் எழுதுங்கள் அமித்து அம்மா!

என் வானம் பக்கத்தில் எழுதும் அமுதா, கதை, கவிதை, கட்டுரை, குட்டீஸ் உலகம் என்று கலக்குபவர். அவரின் சின்ன சின்ன கேள்விகள், டாம் அண்ட் ஜெர்ரி, என் பெண் வளர்கிறாள், இறைவனுக்கு நன்றி, கற்றுக் கொடுங்கள் கற்றுக் கொள்ளுங்கள் படித்துப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று உங்களுக்குப் புரியும்.

ஆகாயநதி தளத்தில், பொழிலன் அப்பேட்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். பிற கட்டுரைகள் எழும்பூர் இரயில் நிலையமும், முன்னேறும் இந்தியத் திருநாட்டின் அதிர்ச்சியான மறுபக்கம், வாழ்த்துகள் அப்பா,ஒரு சமையல் கில்லாடியும் சில அப்பாவிகளும் பிடித்தவை. ஆகாயநதியும் கடந்த ஒரு வருடமாக எழுதவில்லை.

பதிவுலகில் சந்தித்து நான் தொலைபேசியில் பேசியிருக்கும் ஒரே பதிவர் சித்திரக்கூடம் வரையும் சந்தனமுல்லை.  நேரில் பார்த்ததில்லை. சந்தனமுல்லை பதிவு எழுதுவது குறைத்துக் கொண்டாலும் அவ்வப்பொழுது எழுதுகிறார். நகைச்சுவை ததும்ப எழுதுவதில் வல்லவர். நிலாவுக்கு வந்த சோதனை, பப்பு டைம்ஸ் படித்துப் பாருங்கள். என் மனதின் பிரதிபலிப்பு மனம் ஒரு குரங்கு (அ) Parental anxiety .தன் குழந்தையின் ஆர்வத்துக்கு ஏற்ப சுற்றுலா அழைத்துச் செல்லுபவர். நாங்கள் சக்கரத்தை கண்டுபிடித்த கதை மற்றும் "காணி" பழங்குடியினர் சொன்ன கதைகள் படித்துப் பாருங்கள். தன் குழந்தைக்கு எத்தகைய அனுபவத்தைத் தந்திருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

என்ன நண்பர்களே, இறுதி இடுகை உங்களுக்குப் பிடித்திருந்ததா?

தொடர்ந்து ஒரு வார காலமாக படித்து வந்த அனைவருக்கும் நன்றிகள். வாய்ப்புக் கொடுத்த சீனா ஐயாவிற்கும் நன்றிகள்!

வணக்கம்!




5 comments:

  1. சிறப்புடன் பணி செய்து விடை பெறும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! சில பழம்பெரும் பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    இன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அமிர்தவர்ஷ்னி அவர்கள் மீண்டும் நிறைய எழுத வேண்டும்.
    சந்தனமுல்லையும் நிறைய எழுத வேண்டும் பப்பு டைம்ஸ் நன்றாக இருக்கும்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete