தமிழன்
என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம்
அவனுடைய வழியாகும் ;
அன்பே அவனுடை மொழியாகும்.
அறிவின்
கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத்
திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின்
ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய
நூல்கள் உரைத்திடுவான்.
கலைகள்
யாவினும் வல்லவனாம்
கற்றவர்
எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள்
பற்பல அடையாளம்
நின்றன
இன்னும் உடையோனாம்.
மானம் பெரிதென உயிர்விடுவான் ;
மற்றவர்க்
காகத் துயர்படுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ;
'தருவது
மேல்' எனப் பேசிடுவான்.
- நாமக்கல் கவிஞர்
1. தமிழரின் பெருமைகளுள் ஒன்று விருந்தோம்பல். இன்று விருந்தோம்பல்
என்றால் என்னவென்று தெரியாதது மட்டுமல்ல, வீட்டு உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து
கொண்டிருக்கிறோம். துரித உணவுகளில் நாட்டம் பெருகி சத்து மிகுந்த பாரம்பரிய உணவுவகைகளைப்
புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம். உணவே மருந்து என்ற வாழ்க்கை மாறி மருந்தே உணவு என்று
வாழத் தலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம் வீட்டிலும் தோட்டத்திலுமே நம் நோய்களுக்கான
மருந்துகள் உள்ளன என்பதை அறிந்திருக்கிறோமா? சமையலறையில் நம் கைக்கெட்டும் தூரத்தில் காணப்படும் ஏராளமான மருந்துகளை நமக்கு அடையாளம் காட்டுகிறார் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள்.
2. வர்மம், ஆதித்
தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக்
கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இருக்கும் இடத்தில் இருந்து
1000 கி.மீ. அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக்
கலைகள் படைத்தவர்கள் நாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வியுடன் துவங்குகிறது
வர்மக்கலை பற்றிய பதிவு வரலாற்றுப் புதையல் தளத்தில்.
3. பாரம்பரியப் பெருமை வாய்ந்த நம்முடைய கலாச்சாரப் பழக்கவழக்கங்களை ஒத்த கலாச்சார மற்றும் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் ஜப்பானியர் என்றால் வியப்பு ஏற்படுகிறது அல்லவா? சோற்றைப்
பிரதான உணவாக உண்பது, காலணிகளை வாசலிலேயே விடுவது, பாயைப் பயன்படுத்துவது, கூட்டுக்குடும்ப
வாழ்க்கை முறை என்று தமிழ் கலாச்சாரத்துக்கும் ஜப்பானியக் கலாச்சாரத்துக்கும் உள்ள பல ஒற்றுமைகளைக் குறிப்பிடுகிறார் உண்மையானவன் தளத்தில் எழுதும் திரு. சொக்கன் அவர்கள்.
4. சங்க காலத்தில் தமிழர் திருமணம் எப்படி நடைபெற்றது என்ற ஆய்வினை மேற்கொண்டு அழகாக அளித்துள்ளார் முனைவர்
ப.சரவணன் அவர்கள். சான்றுக்கு ஒரு பத்தி.
பெரிய பந்தல் அமைத்தனர். அதன் கீழே வேற்றிடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புதுமணலைப் பரப்பினர். வீட்டில் விளக்கினை ஏற்றி வைத்தனர். மாலைகளைத் தோரணமாகத் தொங்கவிட்டனர். உழுத்தம் பருப்புடன் சேர்த்துச் சமைத்த குழைதலையுடைய பொங்கலினை வைத்தனர். சந்திரன், ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நன்நாளின் விடியல் காலையில் மணச்சடங்குகளைத் தொடங்கினர். மணம்செய்துவைக்கும் மங்கலமுடைய முதிய மகளிர் தங்களின் தலையில் குடத்தினையும் கைகளில் அகன்ற “மண்டை“ என்ற கலத்தினையும் வைத்துக்கொண்டு, ஆரவாரத்தோடு முறைப்படி பலவற்றை வழங்கினர். நன்மக்களைப் பெற்ற நான்கு மகளிர்கூடி, மணமகளைக் “கற்பினை வழுவாது நன்பேர் பெற்று கணவனை விரும்பிப் பேணுக“ என வாழ்த்தினர் என்ற செய்தினை அகநானூற்று 86ஆவது பாடலில் நல்லாவூர்க் கிழார் கூறியுள்ளார்.
5. காதலரைப் பிரிந்த பெண்கள் பசலை நோயால் பாதிக்கப்படுவதாக இலக்கியங்கள் பகர்கின்றன. காதலரைப் பீடிக்கும் மற்றொரு நோய் காம நோய். பசலை நோய் பற்றியும் காமநோய்க்குக் கண்கண்ட மருந்தாக தமிழ்
இலக்கியங்கள் பகரும் தகவல்கள் பற்றியும் அறிய
ஆவலாக உள்ளீர்களா? தோழி ஆதிரா முல்லையின் பார்வையில் அரங்கேறியுள்ள அழகான ஓர் இலக்கியப்
பகிர்வின் மூலம் அறிவோம், வாருங்கள்.
6. அய்யாவழியினர்
பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தென்தமிழகத்தில் சாமித்தோப்பு என்னும் அழகிய கிராமமானது,
இந்துமதத்தின் வருணாசிரமம் என்னும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகத்
தனிக்களத்தை அமைத்த அய்யாவழியின் முக்கிய பதியாக இருக்கிறது.
அய்யாவழியினரின் நூல்
அகிலத்திரட்டு என்பதாம். "இந்த நாள் முதல்,
உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள்,
வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு
காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து
சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர்,
உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு. அய்யாவழியினர் பற்றி மேலும் அறிந்துகொள்ள முனைவர் இர.வாசுதேவன்
அவர்களின் தமிழ்மன்றம் தளத்துக்கு வாருங்கள்.
7. காளைமாடுகள்
ஏர் உழுவதைப் பார்த்திருக்கின்றோம். எருமைகள் ஏர் உழுவதும் சில
இடங்களில் உண்டு. இப்போது சில
இடங்களில் பால் மறுத்த ஆக்களையும்
கூட ஏர் உழப் பயன்படுத்துவதையும்
பார்த்து வருகிறோம். ஆனால், கழுதை ஏர்
பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்ற முன்னுரையுடன் பண்டைக்காலத்தில்
நடைபெற்ற கழுதை ஏர் உழவு பற்றி நம்மை அறியச் செய்கிறார்
தமிழநம்பி ஐயா அவர்கள். புறநானூறு
முதல் சிலப்பதிகாரம், மணிமேகலை வரையிலும் கூட கழுதைகளைக் கொண்டு ஏர் உழும் வழக்கம்
காட்டப்பட்டுள்ளது என்று ஆதாரம் காட்டுகிறார்.
8. சிலப்பதிகாரக்
காப்பிய நாயகியான கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம்
நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின்
முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காரணத்தாலோ என்னவோ அருளும், வீரமும் நிறைந்த
கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம் என்ற முன்னுரையோடு கோவலனின் மறுபக்கத்தை நாமறியத் தருகிறார் தோழி மேகலா இராமமூர்த்தி. கருணை மறவன் என்றும் செல்லாச்
செல்வன் என்றும் இல்லோர் செம்மல் என்றும் கோவலனை சிலம்பு போற்றும் சிறப்பு, அதை அறியாதோர்க்கு
வியப்பு அல்லவா?
9. அன்று கடல் கடந்து சென்று
ஆட்சியை நிலைநாட்டினார்கள் தமிழக மன்னர்கள். இன்று
பிழைக்கவோ, பிழைப்புக்காகவோ கடல் கடந்து சென்று
வாழும் சூழலிலும் தாய்மொழியை மறவாது தம் சந்ததியினருக்குக்
கற்பித்து உயிர்ப்பிக்கின்றனர் புலம் பெயர் தமிழர்கள்.
ஆஸ்திரேலியாவிலிருந்து
தமிழ்ப்பணியாற்றும் திரு. அன்புஜெயா அவர்கள்
ஆஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ்ப் பள்ளிகள் பற்றியும்,
தமிழ்க் கல்வி வளர்ச்சி, அதற்கான
வாய்ப்புகள், மற்றும் சவால்கள் பற்றியுமான
பல தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை
தனது தமிழ்ப்பந்தல் தளத்தில் பதிந்துள்ளார். இக்கட்டுரையானது, இந்த ஆண்டு ஜனவரி
மாதம் கோவை மாநகரில் நடைபெற்ற
'தாயகம் கடந்த தமிழ்' மாநாட்டில்
படைக்கப்பட்டு மாநாட்டு மலரில் வெளியிடப்பட்டது என்பது
சிறப்பு.
கம்பன் காட்டும் அற்புத உவமைகள் பற்றியும்
ஒரு தொடர் எழுதிப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார். களையெடுக்கச்
சென்று எடுக்காமல் தடுமாறும் உழவர்கள் பற்றிய கம்பனின் உவமையை
ரசிக்க வாருங்கள்.
10. கம்பராமாயணத்து
நிகழ்வுகளை ஒலி வடிவில் கேட்க
வேண்டுமா? பல முனைவர்களும் தமிழறிஞர்களும்
மிகவும் சுவைபட பேசிப் பதிவு
செய்துள்ள கம்பன் வானொலியைக் காதுகுளிரக்
கேட்டு மகிழுங்கள். கம்ப ராமாயணம் பற்றிய
ஒலிப் பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்துவைக்கும்
முயற்சி என்கிறது தள அறிவிப்பு.
11. இராமாயணம்
பார்த்தாயிற்று. அடுத்து மகாபாரதம் பார்ப்போமா?
மகாபாரதத்தின் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவ
குணாதிசயத்துடன், தனித்த கிளைக்கதையுடன் சுவாரசியமாகப்
படைக்கப்பட்டிருக்கும். மொத்தக் கதையும் ஒரு
அழகிய பின்னலாய் எந்த இடத்திலும் இழை
விடுபட்டுவிடாதபடிக்கு அழகாகப் பின்னப்பட்டிருக்கும். மகாபாரதத்தின் பாத்திரங்களை
சிறப்பிக்கும் விதமாகவும் மகாபாரத வாழ்வியலை நமக்கு
அறிமுகப்படுத்தும் விதமாகவும் நாகூர் ரூமி ஐயா
அவர்கள் புதிய தரிசனம் இதழில்
எழுதிவருகிறார். தந்தைக்காக பிரம்மச்சரியம் பூண்ட பீஷ்மனையும், காதலியை
உடன்பிறந்தாளாய் ஏற்ற கசனையும் பற்றி
அறிய பறவையின் தடங்களில் பறப்போம் வாருங்கள்.
12. மஹாபாரதம்
போன்ற இதிகாசங்களில் சொல்லப்பட்ட, ஆனால் பரவலாக அறியப்படாத
ஜராசந்தன், ஜெயத்ரதன் போன்ற பாத்திரங்கள் பற்றி
எழுதிய திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா தற்சமயம் எழுதிக்
கொண்டிருக்கும் கீதைப்பதிவு வலையுலகில் ஒரு வரப்பிரசாதம்.
இயற்கை
எனும் கொலைக்களத்தில் வாழ்வு எனும் கொலைத்
தொழிலை நன்கு இயற்றுவதற்கு பகவத்
கீதை எனும் கொலை நூலை
ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம்.
ஏனெனில் வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவனென்பது
கீதையின் கோட்பாடு என்ற முன்னுரையுடன்
கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் தெளிந்த தமிழில் தொடராக
எழுதிவருகிறார் திரு. ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்.
பகவத்
கீதை பற்றி அறியாதவர்க்கு ஒரு
அறிமுகத்தையும் அரைகுறையாய் அறிந்தவர்க்கு நல்ல தெளிவையும் தரும்
அரிய தொடர் இது. இதுவரை
ஏழு அத்தியாயங்களை எழுதியுள்ளார். போகிற போக்கில் வாசித்து
போகும் பொழுதுபோக்குப் பதிவுகள் அன்று. இவற்றை வாசித்துப்
புரிந்துணர பொறுமையும் நிதானமும் அவசியம் தேவை. முதல் அத்தியாயம் இங்கே
இன்றைய பதிவுகளை
இனிதே வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாளை மற்றொரு பதிவுடன் சந்திக்கிறேன்.
நன்றி.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமர ராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை
கெட்டு,
நாமமது தமிழரெனக்
கொண்டு
இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ?
சொல்லீர்!
- பாரதி
(படங்கள்; நன்றி இணையம்)
அன்னைத் தமிழே - எம்
ReplyDeleteஅன்புத் தமிழே
ஆருயிர் வளைத்து - எமை
ஆலிங்கனம் செய்யும்
ஆசைத் தமிழே...
எம்மொழியாம் தீந்தமிழின் சிறப்பு கூறும்
பதிவர்களின் அறிமுகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது சகோதரி.
இன்றைய சரம் தமிழ்மணம் வீசுகிறது.
உங்கள் உழைப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தங்கள் அழகான கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மிகவும் நன்றி மகேந்திரன்.
Deleteஆதிரா முல்லையின் பகிர்வையும், கழுதை ஏர் உழவையும் மிக ரசித்தேன். மற்றவற்றைப் படித்து அன்னைத் தமிழைச் சுவைக்கிறேன். இனிய தொகுப்பிற்கு என் அழுத்தமான கைக்குலுக்கல்களும் பாராட்டும் கீதா.
ReplyDeleteபதிவை ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..வித்தியாசமான அசத்தல்கள்...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteதங்களது பாணியில் அசத்தலான அறிமுகம் சகோதரி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇவர்களை தொடர்கிறேன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மது.
Deleteஇன்றும் சிறப்பான தளங்களின் தொகுப்பு..
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுகள்..
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபதிவிற்கு மிக்க நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஎங்கள் கம்பன் ஒலிப் பதிவு வலைத்தளத்தை இங்கே அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி.
ReplyDelete: என். சொக்கன்,
பெங்களூரு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஉங்களின் அயராத உழைப்பு மிக அருமை!
ReplyDeleteஎவ்வளவு தேடல்கள்! அருமையான பதிவர்களின் அறிமுகம்!
மிகச் சிறப்பு!
அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்!
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இளமதி.
Deleteஅனைவரையும் அறிமுப்படுத்திய விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteஇனிய நண்பர் திரு. சொக்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Deleteஅசத்தலான பகிர்வு...
ReplyDeleteஅருமையான பதிவர்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமார்.
Deleteஇன்று அறிமுகப்படுத்திய பதிவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஜனா சார்.
Deleteசிறந்த பல தளத்தொகுப்புகள். உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்களுக்கு பாராட்டுக்கள்+நன்றிகள்
பதிவை ரசித்து வாழ்த்திப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி ப்ரியசகி.
Deleteதினமும் தங்களின் அறிமுகங்கள் யாவும் பயனுள்ளவைகளாகவும், அறிமுகம் செய்யும் முறைகள் புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன.
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் என்றால் அவை எப்படி அமைய வேண்டும் என்பதைத்தாங்கள் பாடம் நடத்துவதுபோலவும் உள்ளன.
இதிலும் தங்களின் கடினமான உழைப்பினையும் ரஸனையையும் நன்கு உணர முடிகிறது.
>>>>>
தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி கோபு சார். என் கணினி பழுதாகாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பேன் என்று ஆதங்கமாக உள்ளது. முடிந்தவரை நன்றாக செய்திருக்கிறேன் என்பதை தங்கள் வரிகள் மூலம் அறிகிறேன். மிகவும் நன்றி சார்.
Deleteபயன் தரும் சிறப்பான அறிமுகங்கள் !அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிகவும் நன்றி அம்பாளடியாள்.
Deleteஇதில் முதலிலும் முடிவிலுமாகக் காட்டியுள்ள ஓரிருவரை மட்டும் நான் நேரில் சந்தித்துள்ளேன். பரிச்சயம் உண்டு. மற்றவர்கள் இதுவரை அறியாதவர்கள்.
ReplyDeleteஅனைவரும் என் பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள்.
>>>>>
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
Deleteமுதலில் காட்டியுள்ள இதழ் விரித்த தாமரைப்படமும் அதன் மேல் உள்ள சுவடிகள் படமும், அவை ஒவ்வொன்றிலும் உள்ள எழுத்துக்களும் ...... :) மிகவும் அற்புதமான படத்தேர்வாக உள்ளன.
ReplyDeleteமிகவும் ரஸித்தேன். என் ஸ்பெஷல் பாராட்டுகள்.
>>>>>
பதிவோடு படத்தேர்வையும் ரசித்த தங்களுக்கு என் அன்பான நன்றி.
Deleteஆரம்பத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் பாடலும், இறுதியில் உள்ள பாரதி பாடலும் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகவும், தலைப்புக்கு ஏற்றதாகவும் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteஅனைத்துக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
ஊக்கம் தரும் உங்கள் வார்த்தைகளுக்கு நெகிழ்வான நன்றிகள் கோபு சார்.
Deleteஅருமையான தமிழ் பதிவர்களின் தளங்களை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ்.
Deleteஎம் வலைப் பதிவிலிருந்து (http://thamizhanambi..blogspot.com) "கழுதை ஏர் உழவு கட்டுரையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி ஐயா.
Deleteஎன் வலைத்தளத்தினை இங்கே அறிமுகப்படுத்தியிருப்பதற்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!! வலைச்சர ஆசிரியராய் ஆகியிருப்பதற்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி மனோ மேடம்.
Deleteஅருமையான பதிவுகள்.பகிர்வுகள் தமிழ்மணம்வீசுகிறது
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteதலைப்பும் பதிவுகளும் மிக அருமையான தேர்வு கீதமஞ்சரி.
ReplyDeleteஅருமையான பதிவுகளை தேடி தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஊக்கம் தரும் தங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி. அதனை தெரியப்படுத்திய உங்களுக்கும் நண்பர் கில்லர்ஜீ அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சொக்கன்.
Deleteகடின உழைப்பு தெரிகிறது அக்கா! கொடுத்த பணியை நிறைவாய் செய்ய உங்களிடம் தான் கற்க வேண்டும்:)
ReplyDeleteஊக்கம் தரும் உங்கள் வரிகள் மகிழ்வைத் தருகின்றன. நன்றி மைதிலி.
Deleteநன்றி ஐயா.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Delete