Thursday, September 18, 2014

உள்ளத்து உள்ளது கவிதை


கவிதைகள் என்பவை சோர்ந்த கணங்களில் ஒரு தாயைப் போல பரிவுடன் நம்மைத் தூக்கி நிறுத்துபவை. வேதனையுற்ற வேளைகளில் ஒரு தகப்பனைப் போல தாங்கிக் கொள்பவை, ஆவேசங்கொண்ட பொழுதில் இசையைப் போல ஆசுவாசப்படுத்துபவை. ஆசானைப் போல குழப்பங்களைத் தெளிவிப்பவை. உடன்பிறந்தானைப் போல பீதியகற்றிப் பெருந்துணிவை வளர்ப்பவை. நெஞ்சம் நிறைத்து காதலுணர்வு பெருக்குபவை. கோமாளியைப் போல வேடிக்கை காட்டி நம்மைக் குதூகலிக்கச் செய்பவை, ஒரு குழந்தையைப் போல மடியேகி மகிழச் செய்பவை, தோழனைப் போல தோள் சாய்த்து தேறுதல் தருபவை. ஒரு செல்லப்பிராணி போல நம்மோடு எப்போதும் எந்தத் தருணத்திலும் அகலாது தொடர்பவை. பகைவனைப் போல அறைகூவல் விடும், ஒரு காட்டு மிருகத்தைப் போல வசப்படாமல் நம்மை மிரளச் செய்யும் கவிதைகளும் உண்டு. மொத்தத்தில் கவிதை என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட நம் வாழ்வியல் யதார்த்தம். 



கவிஞனின் கண்களுக்கு காணும் பொருளெல்லாம் கவிப்பொருளே. அற்பமென்று எதுவும் இல்லை. யாவும் அற்புதமே. கவிதை பற்றிய கவிமணியின் வரிகள்.

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
     மாடும் அற்புதப் பொருளாம்;
வண்டி பூட்டும் கயிறும் - என்றன்
     மனத்துக் கற்புதப் பொருளாம்.

ஈயும் எனக்குத் தோழன் - ஊரும்
     எறும்பும் எனக்கு நேசன்;
நாயும் எனக்குத் தோழன் - குள்ள
     நரியும் எனக்கு நண்பன்.

அலகில் சோதி யான - ஈசன்
     அருளி னாலே அமையும்
உலகில் எந்தப் பொருளும் - கவிக்கு
     உரிய பொருளாம்ஐயா!

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
     உருவெ டுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
     தெரிந்து ரைப்பது கவிதை!


சொல்நிலை அர்த்தம், உணர்வுக் கூறுகள்,. உள்நிலை அர்த்தங்கள் என்று இம்மூன்றும் இருக்க வேண்டியது கவிதையின் அவசியமாகும். இதுகளில் உள்நிலை அர்த்தங்கள் இல்லாவிட்டாலும் குற்றமில்லை. முன்னிரண்டு கூறுகளும் தவறாமல் இருந்தாக வேண்டும். இதையெல்லாம் கவனம் கொள்ளாமல் கவிதை பண்ண முற்படுகிற பலரும் தோற்றுத்தான் போகிறார்கள். புலம்பல், கொக்கரிப்பு முதலிய மெய்ப்பாட்டுக் கழிவுகளாகவும் வாரிக் கொட்டிய தத்துவக் கக்கல்களாகவும் நேர்ந்து விடுகிறது அவர்களுடைய எழுத்து வெளிப்பாடுகள். – ராஜ சுந்தரராஜன்.

சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை செயல்படும் தளங்களுக்கு அப்பால் சில மேல்நிலைத் தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்களில் கவிதை செயல்படுகிறது. இது மிகவும் சூட்சுமமான தளம். அதிக அதிர்வுகள் கொண்ட தளம். படைப்பின் அளவிற்குச் சம்பந்தமில்லாத விரிவை மனதில் உருவாக்கும் தளம். – சுந்தர ராமசாமி

புதுக்கவிதை என்ற பெயர் தற்காலிகமானது. கவிதையின் பெயர் கவிதையே. கவிதை எல்லா வகையான சொற்களையும் உதறுகிறது. நிதர்சனத்தில் திளைக்கிறது. - பிரமிள்

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க நவகவிதை 
என்கிறார் பாரதி தம் கவிதைகள் குறித்து.

கவிமையமோ, சொற்கட்டோ, உணர்வுக்குவியமோ ஏதோ ஒன்றின் மூலம் என் மனம் ஈர்த்த கவிதைகளை இன்றைய பதிவில் காணவிருக்கிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக… இங்கே படையலாகின்றன கவிஞர்களின் படைப்பாக்கத்துக்கு சான்றாய் ஒரு சில கவிப்பருக்கைகள்!














சில கவிதைகள் எளிய வரிகளால் எளிதில் மனந்தொட்டு ரசிக்கவைக்கும். சில கவிதைகள் வாசித்து முடித்து பல மணி நேரங்கள் மனத்துக்குள் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். சில சிம்மாசனம் போட்டே அமர்ந்துவிடும். சில கவிதைகளோ ஒருமுறைக்கு பலமுறை வாசித்தறிய வேண்டிய உட்பொருளுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தந்து வசப்படுத்தும் கவிதைகள் உள்ளன. புதுமையாகவும், அழகியல் தன்மையுடனும் எளிய வரிகளாலும் கோக்கப்பட்டிருக்கும் கவிதைகள் எளிதில் மனம் நுழைந்துவிடும். 


இப்படியான சிறப்பம்சம் கொண்ட மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளும் ஏராளமாய் வாசிக்கக் கிடைத்தாலும் பதிவின் நீளம் கருதி சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். கவிதைகளை ரசிக்கும் நட்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. 

40 comments:

  1. இனிய வணக்கம் சகோதரி...
    கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிப்பொருளே.
    சிறந்த வரிகளுடன் ஆரம்பித்த இன்றைய பதிவு மிக அருமை..

    தற்கால புதுக்கவிதை எழுத்தாளர்களில் என்னை அதிகம் கவர்ந்தவர் பிரமிள்...

    உயிர் நீர்
    ஊரும் கிணறா
    உடல்?
    உயிர் தானென்ன?
    வானைக் கிழித்த
    ஆதிப் பெருமால்
    நிலத்தில் பதித்த
    விழுது
    உடலோ?
    விழுதைத் தொட்டு
    விழுங்க முனைந்து
    ஊர்ந்து உதிர்ந்து
    விழும் நத்தை...

    என்ன ஒரு அருமையான எண்ண ஊற்று அவரது கவிதைகள்...
    ====
    இன்றைய கவிதை பதிவர் அறிமுகங்களில் சிலர் எனக்குப் புதியவர்கள்.
    நிச்சயம் தொடர்கிறேன் அவர்களை.
    ===
    அறிமுகம் செய்த உங்களுக்கும் அறிமுகமானோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் பிரமிளின் அழகிய கவிதையோடு இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      Delete
  2. இன்றைய பதிவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  3. கவிதைகளை நன்கு ரசித்து உள்வாங்கிச் சுவைக்க வேண்டும். இன்று இருக்கும் அவசர வேலைகளால் அது இயலாத காரியம். பின்னர் இந்த கவிதைத் தோட்டத்துக்குள் நுழைகிறேன். நானறிந்த சுந்தர்ஜி போன்ற அசத்தும் ஆசாமிகளுடன் உங்களை அசத்திய ஆசாமிகளைத் தந்திருப்பீர்கள் என்பதை அறிந்த நம்பிக்கையுடன் இந்தத் தொகுப்பிற்காய் உங்களை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நம்பிக்கை கண்டு மகிழ்கிறேன். நன்றி கணேஷ்.

      Delete
  4. வணக்கம்
    சகோதரி

    இன்று கவிஞர்கள் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  5. //கவிதைகள் என்பவை சோர்ந்த கணங்களில் ஒரு தாயைப் போல பரிவுடன் நம்மைத் தூக்கி நிறுத்துபவை. ......................................................................................................................
    மொத்தத்தில் கவிதை என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட நம் வாழ்வியல் யதார்த்தம். //

    கவிதையைப்பற்றி சொல்லியுள்ள ஆரம்ப முதல் பத்தியே மிகவும் அருமை.

    //கவிஞனின் கண்களுக்கு காணும் பொருளெல்லாம் கவிப்பொருளே. அற்பமென்று எதுவும் இல்லை. யாவும் அற்புதமே. //

    உண்மையே. :)

    அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    சிறப்பானவர்களை சிறப்பாக இங்கு அடையாளம் காட்டியுள்ள தங்களுக்கு நன்றிகள்.


    //13. எனக்கு ஒரு கவிதையின் இறுதி வாக்கியம் போதும் முழுக் கவிதையின் நுனி அகப்பட என்று அழகிய கவிதை வரிகளால் அசத்துகிறார் சுந்தர்ஜி. கைகள் அள்ளிய நீரில் கணக்கிலா கவித்துளிகள். //

    ஸ்பெஷல் நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துரைக்கும் ஸ்பெஷல் நன்றிகளுக்கும் அன்பான நன்றிகள் கோபு சார்.

      Delete
  6. சகோதரி! இன்றுதான் வலைச்சரம் கண்டேன்!வாழ்த்துகள்! அனைத்துப் பதிவுகளையும் படித்தேன் !புதியவர் அறிமுகம் மிகவும் நன்று! வாழ்க அவர்கள்! வளர்க மேலும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. கவிதையைப்பற்றி நீங்கள் சொன்னது அருமை.
    கவிமணி அவர்களின் கருத்தும், கவிதை பகிர்வும் அருமை.
    இன்று இடம்பெற்ற கவிதை பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையான கவிதைகளை தொகுத்து அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
      உருவெ டுப்பது கவிதை;
      தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
      தெரிந்து ரைப்பது கவிதை!

      எமக்குத்தொழில் கவிதை
      என்றார் பாட்டுக்கொரு புலவர் பாரதி..!

      அருமையான கவிதைத்தொகுப்புகள்.. வாழ்த்துகள்.

      Delete
    2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கோமதி மேடம்.

      Delete
    3. தங்கள் வருகைக்கும் ரசித்திட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  8. கவிபற்றிய தங்கள் சிறப்பான கருத்துக்களை சொல்லி, மிக நல்ல கவிதை தளங்களை இன்றையநாளில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
    அறிமுகமாயிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      Delete
  9. கவித்துவமான தளங்களின் அணிவகுப்பு..
    அறிமுகமாகியுள்ள பதிவர்களுக்கும் தொகுத்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. கவிதை பற்றி எத்தனை அழகாய் இங்கு எடுத்துரைத்தீர்கள்!
    அதுவே நல்ல கவிப்பொருளாகக் காண்கிறேன்!..
    அத்தனை பதிவர்களும் மிக அருமை! சென்று பார்க்கின்றேன்!

    அறிமுகப்படுத்திய உங்களுக்கும்
    அறிமுகப் பதிவர்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி இளமதி.

      Delete
  11. கவிதைகள் பல நேரங்களில் அந்தரங்க உள்ளக் கிடக்கைகளின் வெளிப்பாடு.எல்லோராலும் எல்லாக் கவிதைகளையும் ரசிக்க முடியாது. குறிப்பிட்டிருந்த கவிதைகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையே சாட்சி. நான் அறிந்தவரை குமுறும் உள்ளங்கள் கவிதைகளை வெளிப்படுத்துகின்றன.கவிதைகளைத் தேடிப்பிடித்து அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கவிதை பற்றிய தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. அருமையான கவிஞர்களைத் தேடி தொகுத்து இரக்கிறீர்கள்.
    சென்று பார்க்கிறேன்.
    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அருணா செல்வம்.

      Delete
  13. சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்.

      Delete
  14. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  15. பதிவர்களுக்கு வாழ்த்துகள்.எடுத்து காட்டிய விதம் அருமை நன்றி தோழி.

    ReplyDelete
  16. கவிதை பற்றிய உங்கள் முன்னுரை மிக அருமை.

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  17. பெயர் சொன்னாலே போதும்
    தரம் எளிதில்...
    நீங்கள் அறிமுகம் செய்தால் அருமையான தளங்களாகத்தான் இருக்க வேண்டும்
    தொடர்கிறேன் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கமிகு வரிகளுக்கு மிகவும் நன்றி மது.

      Delete
  18. அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  19. அச்சச்சோ கீதா..... இப்பத்தான் கவனிக்கிறேன்.திறமையானவர்களோடு என் பெயரும் இருக்கு.மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் உங்களுக்கு !

    ReplyDelete
  20. என் கவிதையைக் கொண்டாடும் அனைவருக்கும் நன்றிகள். ஒரு காலத்தின் யாழ்ப்பாணத்து அம்மாக்களுக்கு கிடைக்கும் பெரு மரியாதையாகத் தான் நான் உங்கள் பாராட்டுக்களைப் பார்க்கிறேன். அனைவருக்கும் என் அன்புக்கினிய நன்றிகள். அக்கா கீத மஞ்சரிக்கு என் அன்புகள். இத்தனை நாள் தாண்டி காண்பதில் குற்றவுணர்வு கொள்கிறேன்.

    ReplyDelete
  21. கவிதையை ரசித்ததிற்கும் அறிமுகத்திற்கும் நன்றி!

    ReplyDelete