Sunday, February 22, 2015

வலைச்சரம் 7ஆம் நாள்


இன்றைய பதிவில்

வாட்ஸப் ஐ கூகிள் குரோமிலும் பயன்படுத்தலாம் என இங்கே விளக்கம் அளித்துள்ளார் சகோ பிரகாஷ் .

முருங்கைகீரை பொடி கேள்விபட்டிருக்கிங்களா செய்முறையை திருமதி ராஜலஷ்மிம்மா சொல்லியிருகாங்க..

சரண்யாவின் கைவண்ணத்தை இங்கே பாருங்களேன்,தேவையில்லாமல் நாம் தூக்கி எறியும் பொருட்களில் அழகா செய்துருக்காங்க..

மோதகமும் அதிரசமும் என்ற தலைப்பில் நகைச்சுவையாக கில்லர்ஜி அவர்கள் எழுதியிருக்காங்க..

இயற்கை அழகு சாதனங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே..

குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் நிறைய இருக்கும் வலைப்பூ இது.

பழைய சாதத்தின் மகிமையை அழகா சொல்லியிருக்காங்க இங்கே...

தாம்பூலம் தரும் முறையை இங்கே மிகவும் அழகா பாரம்பரியத்தோடு சொல்லியிருக்காங்க..

சித்தமருத்துவபயன்கள்,மருத்துவங்கள் உள்ள வலைப்பூ இது.


மொட்டை மாடியில்  பாதுகாப்பாக தோட்டம் அமைப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க,மறக்காம போய் பாருங்க.

மாடியில் ஒரு உணவுத்தோட்டம் பற்றி சொல்வனத்தில் சொல்லியிருக்காங்க,வாங்க போய் பார்க்கலாம்.

உஷா  அவர்களின் வலைப்பூவில் ஏராளமான பயனுள்ள குறிப்புகள் இருக்கிறது.பாதாமின் பயன்கள் மற்றும் உணவு செய்முரைகள் எழுதியிருக்கிறார்.

என்ன நண்பர்களே இந்த வாரம் முழுவதும் பதிவுகளை ரசித்திருப்பிர்கள் என நம்புகிறேன்.இந்த வாய்ப்பினை எனக்களித்த சீனா ஐயாவுக்கும் சகோ பிரகாஷ்க்கும் நன்றியை தெரிவித்து விடை பெறுகிறேன்.வணக்கம் !!

Saturday, February 21, 2015

வலைச்சரத்தில் 6 ஆம் நாள்



இன்றைய வலைச்சரத்தில்...

எப்போழுதும் சிக்கன்,மட்டனில் தான் பிரியாணி செய்வோம்.ஒரு மாறுதலுக்கு மீனில் செய்து பாருங்களேன்.சுவை நன்றாக இருக்கும்.செய்முறை இங்கே..

ஸ்மார்ட்போன் கேமராவில் தெளிவாக படம் எடுப்பது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க.

திருவண்ணாமலை தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைகள் புண்ணியமாம்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

துரை செல்வராஜ் அவர்கள் சிவலாய தரிசனத்தை பக்தி மணத்தோடு அழகா எழுதியிருக்காங்க..

வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தகவல்கள் இங்கே நிறைய இருக்கு.

வீட்டு தோட்டம் போட விருப்பமா தகவல்கள் இங்கே இருக்கு..

விக்கிரமாதித்தன் கதைகளை சிறிய வயதில் ரத்னபாலா அம்புலிமாமா புத்தகத்தில் படித்ததோடு சரி,இங்கே தளிர் சுரேஷ் அவர்கள் விக்கிரமாதித்தன் கதை எழுதியிருகாங்க பாருங்கள்..

கோபத்தை விட‌  கொடுமை உண்டா என நீதிக்கதையுடன் அழகா விளக்கியிருக்கிறார் யாதவன் நம்பி அவர்கள்...



நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றி  முனைவர்  ஜம்புலிங்கம் அவர்கள் அழகாக சொல்லியிருக்கிறார்..



தோழி கௌசல்யா அவர்கள் தாம்பத்தியம் பற்றி ஒவ்வொரு பகுதிகளிலும் அழகா சொல்லியிருக்கிறார்.இந்த பகுதியை படித்து இப்படி கூட அழகா எழுதி சொல்லமுடியுமா என மிகவும் வியந்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் அவர்கள் ஏரிகளின் நகரம் என அழைக்கபடும் நைனிதால் பற்றி 20 பகுதிகளாக எழுதி இருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்.


மீதி நாளைய பதிவில்..




Friday, February 20, 2015

வலைச்சரத்தில் 5 ஆம் நாள்



இன்றும் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்

இந்து சமய குறித்த ஆன்மிக செய்திகள் உள்ள வலைப்பூ இது..
http://arivomaanmeekam.blogspot.in/

இந்த வலைப்ப்பூவில் இந்துசமயம் மற்றும் ஜோதிடம் குறித்த தகவல்கள் இருக்கு..
http://aanmikam.blogspot.in/




குறிப்பிட்ட தலைப்புக்கு விளக்கமளித்து அதர்கெற்ற திரைப்படபாடல்களை அளித்து வரும் இந்த வலைப்பூவில் நிறைய பாடல்கள் இருக்கு..






தமிழை பிழையின்றி பேச எழுத வேண்டுமா அப்போ இங்கே போய் பாருங்கள்



பாடும் நிலா திரைப்பட பிண்ணணி பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் உள்ள வலைப்பூ..


புதிர்க்கணக்குகள்,வார்த்தை விளையாட்டுக்கள் உள்ள வலைப்பூ இது..



திருக்குறள் பற்றிய சுவராஸ்யமான செய்திகள் இந்த வலைப்பூவில் இருக்கு.

வரலாற்று சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரத்தை படங்களுடன் அழகா சொல்லியிருககங்க மனோம்மா !!

தேன் மற்றும் லவங்கப்பட்டையின் மருத்துவ குறிப்புகளை ரஞ்சனிம்மா சொல்லியிருக்காங்க..


தானியம் மற்றும் பழ‌உணவுகள் கவனம் தேவை ,எதற்கு என இங்கே விளக்கம் கூறப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டினை நமக்கு இலவசமா சுற்றி காட்டியிருக்காங்க பிரியசகி,நீங்களும் அந்த கண்கொள்ளா காட்சியை பாருங்களேன்..

சகோ குமார் தொடர்கதை எழுதுவதில் வல்லவர்.80 பகுதிகளைக் கொண்ட கலையாத கனவுகள் தொடர்கதையை நீங்களும் படிங்களேன்..

மீதி நாளைய பதிவில்

Thursday, February 19, 2015

வலைச்சரத்தில் 4 ஆம் நாள்



இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்

தொப்பையை குறைக்க 14 வழிகளை இந்த வலைப்பூவில் வலைபதிவர் சொல்லியிருக்கிறார்,நீங்களும் போய் பாருங்களேன்.


கணினி பற்றிய ஏராளமான செய்திகள் நிறைய இருக்கு இந்த வலைப்பூவில்..


இந்து சமய கோயில்கள்,தகவல்கள் என ஆன்மிகம் செய்திகள் இடம்பெற்றுள்ள வலைப்பூ இது.

http://atmaanubhavangal.blogspot.com/

இயற்கை உணவு ,இயற்கை வாழ்வு ,இயற்கை மருத்துவ முறைகள் என இயற்கை வாழ்வோடு வாழ வழிகாட்டும் வலைப்பூ இது.

http://naturalfoodworld.wordpress.com/

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவரா ,அப்போ உங்களுக்கான வலைப்பூ இதோ..


சித்தர்கள் குறித்த செய்திகள்,தியான முறைகள் மற்றும் யோகா பயிற்சிகள் என நிறைய செய்திகளை சொல்லும் வலைப்பூ இது..
http://yogicpsychology-research.blogspot.in/

அனுராதா அவர்கள் கர்நாடகா கொல்லூரை இலவசமாக சுற்றி காண்பித்திருக்கிறாங்க...

பின்னூட்ட புயல் ரூபன் அவர்களின் தளத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதை போட்டிகள் பல நடத்தி விருதுகளும் பொடுப்பவர்.இவரின் தளம் இதோ..

துளசிம்மாவை தெரியதவங்க இந்த வலையுலகில் இருக்கமுடியாது.அவரால் எபப்டி அனுஅனுவாய் எழுத்தினை ரசித்து எழுதுகிறார் என பலமுறை வியந்ததுண்டு.நிறைய பயனுள்ள பதிவுகள் இருக்கு.இவரின் வலைப்பூ இதோ..

வை.கோ ஐயாவின் வலைப்பூ மிக சுவராஸ்யமானது.காஞ்சி மகா பெரியவரின் மகிமைகளை அழகா சொல்லிருக்கிறார்.நீங்களும் பாருங்களேன்..அவரின் வலைப்பூ இதோ!!

மீதி நாளைய பதிவில்

Wednesday, February 18, 2015

வலைச்சரத்தில் 3 ஆம் நாள்



இன்றைய வலைச்சரத்தில் நாம் பார்க்க போவது பொது வலைப்பூக்கள்

குழந்தை நல மருத்துவர் ஒருவரின் வலைப்பூ இது.இதில் குழந்தைநலம் குறித்த பல மருத்துவத் தகவல்கள் நிறைய இருக்கு.

http://doctorrajmohan.blogspot.com

இந்த வலைப்பூவில் இவர் கண்ட ஊர்களை பற்றி எழுதுகிறார்.அவரின் வலைப்பூ இதோ..

தாய்லாந்து பயணத்தை பற்றி எழுதியிருக்கிறார் பாருங்களேன்.

தமிழில் மருத்துவம் குறித்த ஆலோசனைகள் மர்றும் தகவல்களை வலைப்பதிவரான மருத்துவர் பதிவு செய்து வருகிறார்.

நிலக்கடலையின் பயன்களை பற்றி எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் என நீங்களே பாருங்கள்..


வலைப்பதிவர் சில சிறுகதைகள்,சில அனுபவங்கள் என்று இந்த வலைப்பூவில் எழுதி வருகிறார்.




இந்த வலைப்பூவில் ஏராளமான பொதுஅறிவு செய்திகள் இருக்கு.வலைப்பூவின் பெயரும் அருமை..

http://nampikkaii.blogspot.com

மதுரை பற்றிய தகவல்களை இவரது வலைப்பூவில்...

http://maduraivaasagan.wordpress.com


ஆரோக்கியத்தை பராமரிப்பதெப்படின்னு இந்த வலைப்பூவில் அழகா சொல்லியிருக்காங்க..

புள்ளிகோலம் போடுவது பற்றி இங்கே சொல்லியிருக்காங்க..

முரளிதரன் அவர்கள் கணிதத்தில் பெருக்கல்   முறையை சுலபமாக சொல்லிருக்கிறார்,நீங்களும் கற்றுக்கொள்ளுங்களேன்..

பின்னூட்ட புயல் தனபாலன்  சகோ தெரியதவங்க யாரும் இருக்க முடியாது.நிறைய பயனுள்ள பதிவுகளை எழுதி வருகிறார்.அவரது வலைப்பூ இதோ.

மீதி நாளைய பதிவில்.....

Tuesday, February 17, 2015

வலைச்சரத்தில் 2 ஆம் நாள்



இன்று  நாம் பார்க்க போவது சமையல் வலைப்பூக்கள்

நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க ஆனா என்னைப் பொறுத்தவரை உணவின்றி அமையாது நம் உயிர் அதனால் இன்றைக்கு நான் முதலிடம் தரப்போவது சமையல் வலைப்பூக்களுக்கே...


சமைக்கும் போது கவனம் சிதையாமல் சமைத்தாலே அந்த சமையல் ருசியாக இருக்கும்.

எடுத்தவுடனே இந்த சமையல் சமைத்தேன் சரியாக வரவில்லை என சொல்லாமல் அதில் எப்படி என்ன தவறு செய்தோம் என கண்டறிந்து பின் மறுபடியும் சமைத்தால் ஆஹோ ஒஹோ தான்.

சமைக்கும் போது அன்பு என்னும் சுவையையும் கலந்து சமைத்தால் சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்து நம்மை வாழ்த்துவதே இருக்கு அதற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பேன்.

சமைப்பது  ஒருகலை என்றால்  அதனை இன்முகத்துடன் பரிமாறுவதே தனிகலை.சுவையில்லாத உணவுகூட சுவையாயிருக்கும்.


அறுசுவை.காம் இந்த வலைப்பூவில் ஏராளமான குறிப்புகள்.இப்போ புதுமுயற்சியாக வீடியோ தொகுப்புகளை அறிமுகபடுத்தியிருக்காங்க.நீங்களும் போய் பாருங்களேன்.


வஞ்சீரம் மீன் குழம்பு மற்றும் வறுவல் பற்றி சுவையா எழுதியிருகாங்க சித்ரா அவர்கள்,ஸ்ஸ்ஸ் சொல்லும்போதே நாவூறுதே....

வேர்க்கடலை குழம்பு எப்படி செய்றதுன்னு சுவைபட சொல்லியிருகாங்க,நானும் செய்து பார்க்கனும்..

தக்காளியோதரை கேள்விபட்டிருக்கீங்களா,அது என்னன்னு தெரிஞ்சுக்க இங்க போய் கொஞ்சம் பார்த்துட்டு வாங்க...


மணத்தக்காளியில் செய்துருக்கீங்களா,நானும் செய்ததில்லை.அதை எப்படி செய்றதுன்னு நீங்களே போய் இங்க பார்த்துடுங்க.


பொரிச்சகரை சமையல் பெயரே வித்தியாசமா இருக்குல்ல..செய்முறை குறிப்பு இங்கே.


குடம்புளி சேர்த்து ஏஞ்சலின் அவர்கள் மீன் குழம்பு செய்துருக்காங்க இங்க வந்து நீங்களும் பாருங்க.இது பெரும்பாலும் கேரளாவில் மட்டுமே பயன்படுத்துவார்கள்.குடம்புளி உடம்புக்கு மிக நல்லது.

கொங்கு நாட்டு சமையல் குறிப்புகள் ஏராளமா இருக்கு இங்கே..

கதிர்வடை கேள்விபட்டிருக்கிங்களா,இல்லைன்னா செய்முறை குறிப்பு இங்கே இருக்கு வாங்க பார்க்கலாம்..

பெரும்பாலும் தூள் வெல்லம் கிடைப்பதில்லை,உருண்டை வெல்லத்தை ஈசியாக எப்படி துருவலாம் என இங்கு சொல்லியிருக்காங்க.இது ஒரு ஆங்கில வலைப்பூ.

மீதி நாளைய பதிவில்

Monday, February 16, 2015

வலைச்சரத்தில் என்னைப் பற்றி


முதலில் வலைச்சர ஆசிரியர் பதவியை தந்த சீன ஐயாவுக்கும் தமிழ்வாசி ப்ரகாஷ்க்கும் மிக்க நன்றி.

போன வருடமே சீனா ஐயா வலைச்சர பொறுப்பினை ஏற்க சொன்ன போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பின் சகோ பிரகாஷ் அழைத்ததும் ஏற்றுக்கொண்டேன்.

இப்போழுது என்னைப் பற்றி சொல்கிறேன்..

என் பெயர் மேனகா.சஷிகா என்னும் வலைப்பூவில் கடந்த 6 வருடத்திற்கும் மேலாக பல சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.கணவர் மர்றும் 2 குழந்தைகளுடன் பிரான்சில் வசிக்கிறேன்.ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக் வீட்டில் சமைத்த குறிப்புகளை பகிர்ந்து வந்தேன்,இப்போழுது வலைப்பூ என்னுடைய 3 வது குழந்தையாக கருதுகிறேன்.

இதில் சைவம்,அசைவம்,பேக்கிங்,வெளிநாட்டு சமையல் என நிறைய குறிப்புகளை நான் சமைத்து ருசித்ததையே பகிர்கிறேன்.

என்னுடைய குறிப்புகளில் எனக்கு மிக பிடித்தவை

லட்டு

தால் பக்வான்‍‍ - இது நம்ம ஊரு மைதா பூரிபோல தான் ஒரு மாறுதலுக்கு செய்து பாருங்களேன்,அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.

தாளி உணவு வகைகள்

அசைவ‌  பிரியாணி வகைகள்

சரவண பவன் சாம்பார் மற்றும் கார சட்னி

சிறுதானிய குறிப்புகள்

சட்னி வகைகள்

நாளை முதல் மற்ற பதிவர்களின் அறிமுகங்களை பார்க்கலாம்..

நன்றி!!

Sunday, February 15, 2015

சாஸிகா கிச்சன் மேனகா பொறுப்பில் இந்த வார வலைச்சரம்..!


வணக்கம் வலைச்சர நண்பர்களே...

வலைச்சரத்தில் இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், அதிக திறமையுடனும் செய்து முடித்துள்ளார். 

அவர் எழுதிய பதிவுகளில் தமது அனுபவங்களை சுவாரஸ்யமாய் பகர்ந்ததோடு பதிவர்கள் பலரையும் குறிப்பிட்டு சிறப்பான, சுவாரஸ்யமான வலைச்சர வாரமாக நமக்கு அளித்தார்.
அவர் எழுதிய ஏழு பதிவுகளில் 350 மறுமொழிகளும்,  2250 பக்கப்பார்வைகளும் கிடைத்துள்ளது. 
தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க "சாஸிகா கிச்சன்" என்ற வலைப்பூவை எழுதி வரும் மேனகா சத்யா அவர்களை அழைக்கின்றேன். அவர் தற்போது குடும்பத்துடன் பிரான்ஸில் வசித்து வருகிறார். அவர் தன் வலைப்பூவில் தான் சமைத்த, ருசித்த உணவுகள் பற்றிய செய்முறை குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.

மேனகா சத்யா அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன் அம்மாள்..
நல்வாழ்த்துக்கள் மேனகா சத்யா...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

கொஞ்சம் சோறு கொஞ்சம் சங்கீதம்!

வலைச்சரம் ஏழாம் நாள்
விடைபெறும் நேரம்!  


கொஞ்சம் சோறு 

சாப்பாடு என்று சொல்லும்போது எனக்கு எங்கள் இரண்டு நண்பர்கள் நினைவிற்கு வருவார்கள். முதலாமவர் பார்த்தசாரதி. என் கணவரின் அலுவலக நண்பர். அவர்கள் குழந்தைகளும் எங்கள் குழந்தைளும் ஒரே பள்ளி ஆகையால் குடும்பமே நட்பானது.
‘என்ன இன்னிக்கு தோசை கைல ஓட்டறது? உளுந்து அதிகமோ?’ என்பார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது முதல் தடவை இப்படி ஒரு காமென்ட் கேட்டு. அப்புறம் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது! அவரது மனைவியை முதல் தடவை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். ‘எப்பவுமே இப்படித்தானா?’ அவரும் சிரித்துக்கொண்டே ‘எப்பவும் இப்படித்தான்!’ என்றார்.

‘பருப்பு துகையல் என்றால் தொட்டுக்கொள்ள நீர்க்க கூட்டு பண்ணவேண்டும். கூட்டு என்றால் கெட்டியாக துகையல் அரைக்க வேண்டும். பொரிச்ச கூட்டு என்றால் புளித்துகையல். ரசம் என்றால் அப்பளம்....’ என்று வகை வகையாக சாப்பாடுதான் எப்பவுமே பேச்சின் மைய பொருளாக இருக்கும். எனக்கு ரொம்பவும் அதிசயமாக இருக்கும். ஆண்கள் சமையலறைப் பக்கமே போகக்கூடாது என்ற குடும்ப வழக்கத்தில் வந்த எனக்கு  இப்படி ஒரு ஆண் பேசுவது  விந்தையாகவே இருந்தது.

அடுத்த நண்பர் பாலக்ருஷ்ணன். இவர் சமையலில் எக்ஸ்பர்ட். விடுமுறை நாட்களில் தானே சமையல் செய்ய ஆரம்பித்துவிடுவார். ‘புருப்புசிலி என்றால் பொலபொலவென்று மணல் மணலாக இருக்கணும்’ என்பார்.  நான் இவரது மனைவியிடம், ‘நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவரே எல்லாம் செய்கிறாரே’ என்றேன். அதற்கு அவர், ‘நீங்க வேற! வெளியில் போய் சாப்பிடக்கூட விடமாட்டார். உனக்கு போரடிச்சா நான் பண்றேன் என்று வந்துவிடுகிறார். இவர் எப்போ வெளியூர் போவார்னு காத்திருந்து நானும் என் பெண்ணும் போய் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவோம்’ என்றார்.

கொஞ்சம் சங்கீதம்

எனக்கு தெரிந்த மூன்று பாட்டு ஆசிரியைகள் பற்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். முதல் ஆசிரியை திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன். புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பாட்டு டீச்சர். குரல் ரொம்ப நன்றாக இருக்கும். அனுபவித்துப் பாடுவார். நிறைய தியாகராஜ கீர்த்தனைகள் சொல்லிக் கொடுத்தவர்.

இரண்டாவர் திருமதி சரோஜா. இவரிடம் நான், என் பெண், பிள்ளை எல்லோரும் பாட்டு கற்றுக்கொண்டோம். அண்ணாநகரில் இருந்தவர். நிறைய நடன நாடகங்கள் போட்டிருக்கிறோம் இவர் இயக்கத்தில். ஒருமுறை  கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. தசாவதார நடனம். முதல்நாள் அங்கு போய் ரிஹர்சல் பார்க்கப் போயிருந்தோம். அந்த மேடையைப் பார்த்த உடனே நான் டீச்சரிடம் இந்த மேடையில் உட்கார்ந்து ஒரு பாட்டுப் பாடி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையின் நடுவில் உட்கார்ந்து பாடினேன். அதுதான் எனது முதல் கடைசி மேடைக் கச்சேரி!

மூன்றாமவர் இங்கு பெங்களூரில் எங்களுக்குக் கிடைத்த பாட்டு டீச்சர் திருமதி லக்ஷ்மி நரசம்மா. எனது தீவிர ஆர்வத்தைப் பார்த்து தனது பாட்டு நோட்டையே என்னிடம் தூக்கிக் கொடுத்தவர். என்ன பாட்டு வேணுமோ காப்பி பண்ணிக்கோங்க. நான் சொல்லித் தருகிறேன்’ என்றார்.  ஒரே ஒரு பிரச்னை பாட்டுக்கள் எல்லாம் கன்னட மொழியில்! நான் அப்போதுதான் அந்த மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். அதனால் என் கன்னட மொழிப் புலமை வளரவும் இந்த பாட்டு நோட்டு உதவியது!

இத்தனை கற்றுக்கொண்டும் பயிற்சி இல்லாததால் (பாடப்பாட ராகம்; மூட மூட ரோகம் என்பது போல) என் பாட்டு நின்று போய்விட்டது. ஆனால் இசையை ரசிக்கிறேன். அது போதுமே!

இன்றைய வலைச்சரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் எனக்கு எழுதுவதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள். என்னுடைய எழுத்துக்களுக்கு தவறாது வந்து கருத்துரை சொல்பவர்கள். இவர்களுடைய எழுத்துக்களுக்கு நான் ரசிகை. வலைச்சரத்தின் கடைசி நாளான இன்று இவர்களை இங்கு கௌரவிப்பதில் பெருமை கொள்ளுகிறேன்.
************************************************************************

அதிகமாக திருப்பூர் பற்றித்தான் எழுதுவார். அங்கு நூற்பாலையில் பொதுமேலாளராக இருப்பதால். அவற்றைவிட தனது குடும்பத்தைப் பற்றி ஒரு தந்தையாக, மகனாக அவர் எழுதும் பதிவுகள் நான் அதிகம் விரும்புபவை. நல்ல நண்பர். நல்ல நல்ல வலைத்தளங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்.  ‘தினமும் ஒருமணி நேரம் இணையத்தில் நல்ல தளங்களாகத் தேடிப்பிடித்து படியுங்க’ என்பார்.

"ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா" என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.

தொலைவில் இருப்பதால் தன் குழந்தைகளுக்கும், தன் அம்மாவிற்கும் தொடர்பில்லாமல் இருக்கும் நிலை பற்றிப் பேசுகிறார் இந்தப் பதிவில்.


‘வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்கிறார் இந்தப் பதிவில்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவு இது.

*****************************************************************************

இவரும் மிகப்பிரபலமான வலைப்பதிவர். தினம் ஒரு பதிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. ஆனால் எழுதினால் அன்று இவரது வலைப்பதிவு ஹவுஸ்ஃபுல் தான்!
பின்னூட்ட புயல் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.
பொதுவாக திருக்குறளை வைத்து பதிவுகள் எழுதுவார். திருக்குறளுடன் திரைப்பாடல்களும் இடம் பெறும். ISO பற்றிய பதிவுகளும் உண்டு.
இப்போது புதிய/பழைய பதிவர்களுக்கு ‘லிங்கா...?’ என்று தொழில்நுட்பம் கற்றுத் தருகிறார்.  
சென்ற ஆண்டு பதிவர் விழா சிறக்க இவரது உழைப்பும் முக்கியக் காரணம்.

வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் அத்தனை தளங்களும் இவருக்குத் தெரிந்தவையே. ஒன்றிரண்டு புதிது என்றால் நாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ளலாம். பெரிய மீசையின் பின் ஒளிந்திருக்கும் நல்ல மனிதர்.

****************************************************************************

இவரை அறியாதவர்கள் வலையுலகத்தில் இல்லை. கோவில் 
கோவிலாகப் போய் ‘ஹையோ.....ஹையோ’ என்று தெய்வங்களை
தரிசித்துவிட்டு வருபவர்.


நான் மிகவும் விரும்பிப்படிக்கும் தளம். பயணக் கட்டுரைகள், இவர் 
இருக்கும் நியுசிலாந்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எப்பவுமே
 பிசியாக இருக்கும் இவரது தளம். மெல்லிய நகைச்சுவையுடன் ஒரு 
விவரம் விடாமல்  தான் பார்த்த இடங்களைப் பற்றி எழுதுவார் இந்த 
வலைப்பதிவாளர் துளசி கோபால்.  

சுமார் பத்து வருடங்களாக வலைப்பதிவு செய்துவருகிறார்.  இவரது 
வலைப்பதிவுகளை ஆரம்பகாலத்திலிருந்து  படிக்க ஆரம்பித்திருக்கிறேன். 
அப்படி படிக்க விருப்பம் இருக்கிறவர்களுக்கு இந்த சுட்டி உதவும்.

*************************************************************************

மொத்தம் ஐந்து ஆசிரியர்கள். ஒவ்வொரு வாரம் பாசிடிவ் செய்திகள் 
போடுவது ஸ்பெஷாலிட்டி. நான் ரொம்ப விரும்பிப் படிப்பது ‘திங்க’ 
கிழமைப் பதிவுகள் தான். இந்த முறை மாறுதலாக ஒரு ஆராய்ச்சி 
செய்திருக்கிறார், ஸ்ரீராம். அலேக் அனுபவங்களும் அருமையாக இருக்கும்.

*******************************************************************
வரிக்கு வரி நகைச்சுவை யுடன் எழுதும் பாலகணேஷ் – இன் 
வலைத்தளம். போன வருடம் இவரது சரிதாயணம் புத்தகம் 
(வலைபதிவில் எழுதியது) வெளியாகியது. விடாமல் சிரித்து மனதை 
லேசாக்கிக் கொள்ள சிறந்த வலைத்தளம்.


மேய்ச்சல் மைதானம் என்று இன்னொரு தளமும் வைத்திருக்கிறார்.
***********************************************************************

ரேவதி நரசிம்மன் என்கிற வல்லி இந்த வலைப்பூவின் சொந்தக்காரர்.

சிரிப்பாலேயே நம்மை கவர்ந்து விடுவார்.

தனது அம்மாவின் பிறந்த நாளன்று தாயின் நினைவாக அவருடன்  போய் 

சென்னை எதிராஜ் கல்லூரியில் தான் சேர்ந்ததை நினைவு கூர்கிறார்.



நமக்கு எத்தனை வயதானாலும் நம் அம்மா அப்பா என்றால் தனி பாசமும், 

பிணைப்பும் இல்லையா?
*********************************************************************************

ஹுசைனம்மா


‘இப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்’ பார்ட்டி என்பது இவரது கணவர் தான். அவர் மேற்கொண்ட டயட் பற்றி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க சிரிக்க எழுதுகிறார்.


சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன? என்று கேட்கிறார். மேலே படித்துப் பாருங்கள்.

*************************************************************************

கீதா சாம்பசிவம்


ஆம்ஆத்மி கட்சின்னா இவங்களுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! இவங்க சொல்லியிருப்பதும் நிஜம் என்றாலும், கொஞ்சம் பாஸிடிவா யோசனை பண்ணுங்க, ப்ளீஸ்!

சமையலை ரசிச்சு ரசிச்சு எழுதறாங்க!

கீதாவும் 2005 லிருந்து பதிவு எழுதுகிறார். முதலிலிருந்து இரண்டு மூன்று பதிவுகள் படித்திருக்கிறேன். தொடர்ந்து படிக்க வேண்டும். 

இவரது மற்ற தளங்கள்
கண்ணனுக்காக
சாப்பிடலாம் வாங்க
பேசும் பொற்சித்திரமே
என் பயணங்களில்
ஆன்மீக பயணம்

******************************************************************************

ராஜலக்ஷ்மி பரமசிவம் அரட்டை என்ற தளத்தில் எழுதுபவர்.
அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் வீட்டிற்குப் போனபோது ஸ்மோக் டிடெக்டரால் தான் பட்ட அவஸ்தையை நகைச்சுவையாக வர்ணிக்கிறார்.
இவரது இரண்டு மின்னூல்கள் வெளி வந்திருக்கின்றன. இவரது கதாபாத்திரங்கள் ராசியும் விஷ்ணுவும் பதிவுலகில் பிரசித்தி பெற்ற தம்பதி.

ஊஞ்சல் என்ற தனது சமீபத்திய பதிவில் ‘சோம்பலாயிருந்தது. உடல், மனம்  இரண்டும் தான்’ என்று எழுதியிருந்தார். சீக்கிரமே மறுபடி எழுத ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் எழுதவில்லை.

மிக விரைவில் இவர் இந்த மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் பதிவுலகில் வலம் வர வாழ்த்துக்கள்!
********************************************************************

மனோ சாமிநாதன் முத்துச்சிதறல்

இவரது வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கும் முத்துக்களில் சில:
அனுபவ முத்துக்கள், ஓவிய முத்துக்கள், கவிதை முத்துக்கள், குறிப்பு முத்துக்கள், கைவினைக்கலை முத்துக்கள், சமையல் முத்துக்கள், சிந்தனை முத்துக்கள், சிறுகதை முத்துக்கள், மருத்துவ முத்துக்கள், முத்துக்குவியல் ரசித்த முத்துக்கள்


‘ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!’ என்கிறார்.

இவரது ஓவிய முத்துக்களிலிருந்து
இந்தப் புன்னகை என்ன விலை?

தனது சமீபத்திய வலைச்சர வாரத்தில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ராகம் என்று மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். ரொம்பவும் ரசித்தேன். 

*****************************************************************************.

ராதா பாலு – எழுத்துலகில் எனது நீண்ட நாளைய தோழி. இன்னும் நேரில் பார்த்ததில்லை. நிறைய பத்திரிகைகளில் எழுதுகிறார். பல வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார். அந்த அனுபவங்களையும் எழுதுகிறார்.

‘புத்தகங்களைப் படிப்பதும்,அறிந்தவற்றையும்,அனுபவங்களையும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள்.கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நான் எழுதிய கதை,கட்டுரை,ஆலய தரிசனம்,சமையல் குறிப்புகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகின்றன.  அவற்றின் தொகுப்பே இந்த வலைப்பூ.சமையல் குறிப்புகளை அறுசுவைக் களஞ்சியத்தில் காணலாம்’ என்று சுய அறிமுகத்தில் கூறுகிறார்.

எண்ணத்தின் வண்ணங்கள் என்று இன்னொரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்.

சமையல் குறிப்பிற்காக அறுசுவை களஞ்சியம் என்ற தளம் வைத்திருக்கிறார்.
*******************************************************************************

ரூபன்: ரூபனின் எழுத்துப் படைப்பு  என்ற தளத்தின் சொந்தக்காரர். நம் திண்டுக்கல் அண்ணாச்சியின் வலையுலகத் தம்பி. கவிதைப் போட்டி, கதைப் போட்டி என்று நடத்தில் வலையுலகை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர். ஒரு முறை இவர் நடத்திய போட்டிக்கு நடுவராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு. அழகிய தாளில் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் எனக்கு அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்தது.
தனது தளத்தில் சிறுகதைகளும், கவிதைகளும் எழுதி வருகிறார். வயதில் இளையவராகிய இவருக்கு வெகு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கிறேன்.

*******************************************************************************

திருமதி இராஜராஜேஸ்வரி ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர். சமீபத்தில் உடல்நிலை சரியில்லை என்று எழுதியிருந்தார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக கட்டாய ஓய்வில் இருப்பதாக தனது இந்தப்  பதிவில் சொல்லியிருந்தார். பிறகு தகவல் எதுவுமில்லை. பதிவர்கள் யாருக்காவது அவரை வலைப்பதிவிற்கு வெளியே தெரியுமா என்று தெரியவில்லை. யாருடனாவது அவர் தொடர்பில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. மிக விரைவில் அவர் குணமாகி மறுபடியும் வலையுலகில் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பை முடிக்கிறேன்.

இந்த ஒருவாரம் என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.


எனது வலைத்தளத்தில் தொடர்ந்து சந்திக்கலாம்.