Saturday, June 13, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

13ம் திருநாள்

13.06.2015


67. இறை வணக்க + 
இயற்கை வணக்க
 இடுகைகள்:


ஞானத்தலைவி கோதை-34


கருத்தான கருவேப்பிலை-35



செல்லப்பிராணிகள்-36






68. திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்
வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)


  

நம்பிக்கைக் கீற்று 
மீட்டிட வருவானோ?


வேர்களை மறவா விழுதுகள்


புற்றுநோயைப் புரையோட விடலாமா?


69. திரு.  ரியாஸ் அஹமத் அவர்கள்
வலைத்தளம்: நுனிப்புல்லில் ஓர் பனித்துளி


கொலை + தற்கொலை = சிறை
[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும் 
அவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]

விஸ்வரூபம் விஷப்பரீட்சையே
[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும் 
அவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்

இசை ஆர்வமுண்டோ? வாங்க நீங்களும் பாடலாம்

மீண்டும் ஒரு காதல் Take off


70. திரு. தியாகராஜா சிவநேசன் அவர்கள்
வலைத்தளம்: தனிமரம்

உருகும் பிரெஞ்சுக் காதலி - அறிமுகம்
மலையகத்தில் முகம் தொலைத்தவன் - 1

நிஜம் சொல்லும் கதை



71.  திரு. விமலன் அவர்கள்
வலைத்தளம்: சிட்டுக்குருவி

  

தரைதொட்ட வண்ணத்துப்பூச்சி
பூப்பதெல்லாம்
பிரம்படி

இவர் இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

 
1) காக்காச் சோறு
3) வேர்களற்று
 
4) பூப்பதெல்லாம்
5) பந்தக்கால்


72. கவிஞர் திரு. நா. முத்துநிலவன் அவர்கள் 
வலைத்தளம்: வளரும் கவிதைகள்



இதுவரை இவர் தமிழில் மூன்று நூல்கள் 
வெளியிட்டுள்ளார்கள் எனத்தெரிகிறது. 


பட்டதாரி தமிழாசிரியராகவே 
பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி 
சமீபத்தில் பணிஓய்வு பெற்றவர்.

மிகச்சிறப்பான எழுத்தாளர் ... கவிஞர் ...
தொலைகாட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி 
கலந்துகொள்ளும் மிகச்சிறப்பான பேச்சாளரும்கூட.

தமிழ் ஆர்வம் மிக்க இவரின் வலைப்பக்கம் 
ஏராளமான பதிவுகள் தாராளமாக உள்ளன.

சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த ஒரு பதிவு இதோ:

பணி ஓய்வு பெற்றேன், நன்றி, வணக்கம்.

அதில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

”எந்த வேலையாக இருந்தாலும் தன்னார்வமாய் அதைச் செய்யும் போது கிடைக்கும் மனநிறைவு, 

பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப்பெருமையில் நிச்சயம் கிடைக்காது.” 





எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது, 


இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்“ 









தமிழ் எழுத்தாளர்களுக்கும்,  




வாசகர்களுக்கும் ஓர் இனிய செய்தி !









துணைவியார் திருமதி டோரதி அவர்களுடன் 

”ஞானாலயா” திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.


oooooOooooo


இவர்களைத் தொடர்பு கொள்ள 

திரு. பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

oooooOooooo


இவர்களின் வாழ்க்கை வரலாறு +

சமூக சேவைகளை அறிய





தற்கால இன்னொரு ’உ.வே.சா’ மற்றும் 

தமிழ்நூல் தகவல் களஞ்சியமான

புதுக்கோட்டை “ஞானாலயா” 



திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் 



’75ஆம் அகவை - பவளவிழா’



15.08.2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

-oOo-






இந்த இனிய விழாவினையொட்டி


15.08.2015 மற்றும் 16.08.2015 ஆகிய இருநாட்களுக்கு



புதுக்கோட்டையில் 



நூல்கள் மற்றும் மலர் வெளியீடுகள் என



பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.



தமிழ் எழுத்தாளர்கள் + வாசிப்பை நேசிப்பவர்கள் என

அனைவரின் பங்கும் ஏதாவது ஒரு வகையில்



வரவேற்கப்படுகிறது.


-oOo-



இந்த இனிய விழாவினைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய


விழாவின் ஒருங்கிணைப்பாளர்

நண்பர் ’வைகறைவாணன்’ அவர்களுடன் 


9445182142


அலைபேசியில்

 தொடர்பு கொள்ளவும்.








ஓர் முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

சில தவிர்க்க இயலாத காரணங்களால் 
இன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை 
நிறைவு செய்துகொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன். 


இதுவரை எனக்கு, வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற 
வாய்ப்பளித்த வலைச்சர நிர்வாகிகளுக்கு
என் அன்பான இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.


நாளை அறிவிக்கப்பட உள்ள 
அடுத்தவார வலைச்சர ஆசிரியர் அவர்களை
வருக! வருக!! வருக!!! 
என இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்கிறேன்.

இதுவரை வலைச்சரத்திற்கு தினமும் வருகை தந்து 
எனக்கு ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ள 
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் 
என் மனம் நிறைந்த இனிய நன்றிகளை 
அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 வலைச்சரத்தில் அன்றாடம் என்னால் இதுவரை
அடையாளம் காட்டப்பட்டவர்களின்
வலைத்தளங்களுக்குச் சென்று, 
தினமும் தகவல் தெரிவித்து உதவிய 
திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
திரு. புதுவை வேலு அவர்கள்
ஆகிய மூவருக்கும் என் கூடுதல் ஸ்பெஷல் 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சரம் இன்றுபோல என்றுமே ஜொலிக்க
பதிவர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு 
அளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நாளை முதல் வழக்கம்போல் என் 
வலைத்தளத்தினில் 
நாம் தினமும் சந்தித்து மகிழ்வோம். 








என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]




55 comments:

  1. அன்பால் அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்லும் அய்யா வைகோ அவர்களது வலைச்சரம் பணி சீரும் சிறப்புமாய் அமைந்தது என்றே சொல்லலாம்!
    இன்னும் ஏராளமான பதிவர்களை அவர் அறிமுகம் செய்வார் என்று எதிபார்த்து சற்று ஏமாற்றம் அடைந்துதான் போனேன். அனைத்து பதிவர்களுக்கும் குழலின்னிசையின் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்!
    அய்யா வைகோ அவர்களுக்கும், வலைச்சரத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    தம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @yathavan nambi

      :) அனைத்துக்கும் மிக்க நன்றி, நண்பரே. நாளை என் வலைத்தளத்தினில் நாம் மீண்டும் சந்திப்போம் :)

      நட்புடன் VGK

      Delete
  2. வலைச்சர வாரத்திற்கு இனிய நன்றி.
    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்!

    ReplyDelete
    Replies
    1. @kovaikkavi

      :) மிக்க நன்றி, மேடம். நாளை என் வலைத்தளத்தினில் நாம் மீண்டும் சந்திப்போம் :)

      நட்புடன் VGK

      Delete
  3. வலைச்சரப்பணி தொடரும் என நினைத்து இருந்தேன் இன்றுடன் விடைபெறுவது கண்டு மனம் வேதனையடைகின்றது ஐயா கோபு அவர்களே!வலைச்சரம் மீண்டும் கலகலத்து தங்களினால் இனிதே பணி ஆற்றியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  4. சாமானிய வழிப்போக்கன் தனிமரத்தையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வாசகர்களிடையே தோப்பாக்கியதுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. @தனிமரம்

      வாங்கோ, வணக்கம்.

      //சாமானிய வழிப்போக்கன் தனிமரத்தையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வாசகர்களிடையே தோப்பாக்கியதுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ஐயா!//

      தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      Delete
  5. மீண்டும் வழமைபோல தங்கள் வலையில் சந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. @தனிமரம்

      //மீண்டும் வழமைபோல தங்கள் வலையில் சந்திப்போம்//

      :) மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, அவசியம் சந்திப்போம் :)

      Delete
    2. தனிமரம் Sat Jun 13, 04:02:00 AM

      //வலைச்சரப்பணி தொடரும் என நினைத்து இருந்தேன் இன்றுடன் விடைபெறுவது கண்டு மனம் வேதனையடைகின்றது ஐயா கோபு அவர்களே!//

      தங்களின் மனவேதனைக்கான மருந்து ஒருவேளை நாளை என் வலைத்தளத்திற்கு வருகை தந்தால் கிடைக்கலாமோ என்னவோ, முயற்சி செய்யுங்கள். கட்டாயம் ஏதும் இல்லை.

      //வலைச்சரம் மீண்டும் கலகலத்து தங்களினால் இனிதே பணி ஆற்றியமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.//

      :) கலகலப்பான தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, நண்பரே :)

      அன்புடன் VGK

      Delete
  6. முத்து நிலவன் அவர்களின் பணி ஓய்வு பதிவு நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி Sat Jun 13, 04:15:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முத்து நிலவன் அவர்களின் பணி ஓய்வு பதிவு நன்றாக இருந்தது.//

      அவர் சொல்லியுள்ளவைகளில் சில என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்ததால் எனக்கும் அது மிகவும் பிடித்த்திருந்தது.

      :) மிக்க நன்றி :)

      Delete
  7. இன்று என்னுடன் அறிமுகமான வலையுறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @தனிமரம் Sat Jun 13, 04:50:00 AM

      //இன்று என்னுடன் அறிமுகமான வலையுறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி. அனைவர் சார்பிலும் என் அன்பு நன்றிகள்.

      Delete
  8. என்ன பொசுக்குனு 35 லேருந்து 22 போயிடுச்சு!

    எப்படியாயினும் சிறப்பாகச் செய்தீர்கள். அது உங்களுக்குப் புதிதும் இல்லை.

    இன்றைய பகிர்தலில் விமலன் அவர்கள் தளத்துக்கும், முத்துநிலவன் ஸார் தளத்துக்கும் சிலமுறை சென்றுள்ளேன்.

    நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //என்ன பொசுக்குனு 35 லேருந்து 22 போயிடுச்சு!//

      நல்லதொரு கேள்வி. மீண்டும் இங்கு வந்து உங்களுக்காக மட்டுமல்ல, அனைவருக்காகவும் நிச்சயம் நான் பதில் அளிப்பேன்.

      //எப்படியாயினும் சிறப்பாகச் செய்தீர்கள். அது உங்களுக்குப் புதிதும் இல்லை.//

      இன்னும் இந்தத் திருவிழா முற்றிலும் முடியவில்லையே, ஸ்ரீராம். அது மேலும் வெற்றிகரமாக, மேலும் சிறப்பாக, மேலும் பேரெழுச்சியுடன் நான் திட்டமிட்டபடியே தொடரும்.

      ஆனால் இங்கு அல்ல. என் வலைத்தளத்தினில் ... அதுவும் நாளைமுதலே. :)

      //இன்றைய பகிர்தலில் விமலன் அவர்கள் தளத்துக்கும், முத்துநிலவன் ஸார் தளத்துக்கும் சிலமுறை சென்றுள்ளேன். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      :) மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம் :)

      என்றும் அன்புடன்
      VGK

      Delete
  9. மிகச் சிறப்பாக அனைவரையும் அறிமுகம் செய்து
    வலத்தளத்திற்கும் வலைச் சரத்திற்கும்
    புத்துயிர் ஊட்டியமைக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S Sat Jun 13, 06:09:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகச் சிறப்பாக அனைவரையும் அறிமுகம் செய்து
      வலத்தளத்திற்கும் வலைச் சரத்திற்கும்
      புத்துயிர் ஊட்டியமைக்கு மனமார்ந்த
      நல்வாழ்த்துக்கள்//

      இடையில் 10 வாரங்களாக ஓடாமல் பட்டறையில் கிடந்த ’வலைச்சரம் என்ற பேருந்தை’ ஏதோ நானே முன்னின்று மெக்கானிக் போல சரிசெய்து மீண்டும் ஓட வைத்துள்ளதில் எனக்கும் ஓர் தனி மகிழ்ச்சியே.

      தங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
  10. பாராட்டிற்கு உரியவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) மிக்க நன்றி :)

      Delete
  11. வழக்கம்போல் பதிவர் அறிமுகம் அருமை. தங்களின் தொழில்நுட்ப உத்தி எங்களை அதிகம் கவர்ந்திருந்தது. நன்கு விறுவிறுப்பாக படித்துக் கொண்டிருந்தபொழுது ஆசிரியப்பணியை நிறைவு செய்வதாக எழுதியமை மனதிற்கு ஏதோ குறையாகத் தோன்றியது. தங்கள் மூலமாக பலரை அறிய வாய்ப்பு கிடைத்தது. தங்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள உதவிய வலைச்சரப் பொறுப்பாளர்களுக்கும், பணியை செவ்வனே நிறைவு செய்த தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம், தங்களது வலைப்பூவில். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூக்களைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/
    http://drbjambulingam.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. @Dr B Jambulingam

      வாங்கோ, முனைவர் ஐயா, வணக்கம்.

      //நன்கு விறுவிறுப்பாக படித்துக் கொண்டிருந்தபொழுது ஆசிரியப்பணியை நிறைவு செய்வதாக எழுதியமை மனதிற்கு ஏதோ குறையாகத் தோன்றியது.//

      தங்களுக்குக் குறையாக தோன்றியது நிறையாக மாற்றப்பட உள்ளது, என்னால் நாளைமுதல் என் வலைத்தளத்தில். எனவே கவலைப்படாதீர்கள் :)

      // தங்கள் மூலமாக பலரை அறிய வாய்ப்பு கிடைத்தது.//

      மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.

      //நாளை சந்திப்போம், தங்களது வலைப்பூவில்.//

      நிச்சயமாக சந்திப்போம், ஐயா.

      அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  12. வணக்கம் ஐயா,என்னயும் என்போன்ற வலைப்பதிவர்களையும் அறிமுகம் செய்ததற்கும்,சிறப்பித்ததற்குமாய்/

    ReplyDelete
    Replies
    1. Vimalan Perali Sat Jun 13, 07:30:00 AM


      வாங்கோ, வணக்கம்.

      //வணக்கம் ஐயா, என்னையும் என்போன்ற வலைப்பதிவர்களையும் அறிமுகம் செய்ததற்கும், சிறப்பித்ததற்குமாய்//

      தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  13. அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) மிக்க நன்றி, My Dear DD Sir :)

      Delete
  14. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள். வலைச்சர பணி முடிவது கண்டு வருத்தமாக இருந்தாலும், நிறைவாக செய்துள்ளீர்கள் சார். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. @ADHI VENKAT

      வாங்கோ வணக்கம். தங்களின் முதல் தூண்டுதல், மறைமுகமாக எனக்குக் காலத்தினால் செய்த பேருதவிகள், இங்கு அன்புடன் வருகை தந்து நிறைவாகப் பாராட்டியுள்ளது என அனைத்துக்கும் என் அன்பான இனிய நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  15. தினமும் அறியாத பல புது புது பதிவர்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. வலையுலகில் நீண்ட கால அனுபவம் இருப்பதாலே அது முடிகிறது. இன்னும் ஏராளமான பதிவர்களை தெரிந்து கொள்ளலாம் என்று மனம் மகிழ்ந்த நேரத்தில், வலைச்சர ஆசிரியர் பணியிலிருந்து விடைபெறுவது வருத்தத்தை தருகிறது. ஆனாலும் சிறப்பாக பணி புரிந்தமைக்கு வாழ்த்துக்கள் அய்யா!
    தங்கள் வலைதளத்தில் தொடர்ந்து சிந்திப்போம்.
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. S.P. Senthil Kumar Sat Jun 13, 08:04:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தினமும் அறியாத பல புது புது பதிவர்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. வலையுலகில் நீண்ட கால அனுபவம் இருப்பதாலே அது முடிகிறது.//

      :) தங்கள் புரிதலுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      // இன்னும் ஏராளமான பதிவர்களை தெரிந்து கொள்ளலாம் என்று மனம் மகிழ்ந்த நேரத்தில், வலைச்சர ஆசிரியர் பணியிலிருந்து விடைபெறுவது வருத்தத்தை தருகிறது.//

      வருந்த வேண்டாம் நண்பரே. இந்த இனிய அன்றாடத் திருநாள் நாளை முதல் என் வலைத்தளத்தினில் தொடரத்தான் உள்ளது.

      ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ..... நான் ..... நான்’ :)

      // ஆனாலும் சிறப்பாக பணி புரிந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //தங்கள் வலைதளத்தில் தொடர்ந்து சிந்திப்போம்.//

      தொடர்ந்து சிந்திக்கவே வேண்டாம். :) என் வலைத்தளத்தினில் நாளை முதல் கண்டிப்பாக நாம் சந்திப்போம் :))))))

      //த ம +1//

      :) மிக்க நன்றி :)

      அன்புடன் VGK

      Delete
  16. மிகச் சிறப்பாக பதிவர்களை அறிமுகம் செய்து கொன்டிருக்கும்போது இப்படி ஒரு அறிவிப்பு மனதை வருந்தச் செய்தது, இது எதிர்பார்த்தது தான் என்றாலும் ! அனுபவங்கள் எப்போடும் நம்மை புடம் போடத்தானே செய்கிறது! திரும்ப பல மடங்கு சுறுசுறுப்புடன் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து அசத்துங்கள்!

    தினமும் மருத்துவமனை செல்வதாக‌ப் படித்தேன். சுவர் இருந்தால் தான் சித்திரம். முதலில் உங்கள் உடல் நலத்தை நன்கு கவனித்துக்கொண்டு, பிறகு வலைத்தளத்தை கவனியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனோ சாமிநாதன் Sat Jun 13, 09:37:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிகச் சிறப்பாக பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு அறிவிப்பு மனதை வருந்தச் செய்தது,//

      வருந்தவே வேண்டாம். நாளை முதல் என் வலைத்தளத்தினில், இதன் தொடர்ச்சியாக அனைவரையும் அடையாளக் காட்டி சிறப்பிக்க உள்ளேன்.

      // இது எதிர்பார்த்தது தான் என்றாலும் ! //

      இது 10.06.2015 வரை என்னால் சற்றும் எதிர்பார்க்கப்படாதது மட்டுமே. அதன்பின் மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் இன்று முதல் மட்டுமே எனக்கு விடுதலை கிடைத்தது. எல்லாம் நன்மைக்கே. :)

      //அனுபவங்கள் எப்போதும் நம்மை புடம் போடத்தானே செய்கிறது! //

      நிச்சயமாக ! தாங்கள் சொல்லியுள்ளது மிக அருமையான அனுபவமொழி. மிக்க நன்றி, மேடம்.

      //திரும்ப பல மடங்கு சுறுசுறுப்புடன் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து அசத்துங்கள்!//

      இவ்வாறு இனிமையாகச் சொல்லி ஊட்டமும், உற்சாகமும், உத்வேகமும் அளித்துள்ளீர்கள். :)

      எல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகளின் எண்ணங்கள் போலவே இனிதாக நடக்கட்டும். மிக்க நன்றி, மேடம்.

      //தினமும் மருத்துவமனை செல்வதாக‌ப் படித்தேன்.//

      ஆம். பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு நபர்களுக்காகவும் செல்லத்தான் வேண்டியுள்ளது. என்ன செய்வது? :(

      //சுவர் இருந்தால் தான் சித்திரம்.//

      நான் இப்போதெல்லாம் சுவற்றில் சித்திரம் வரைவதை நிறுத்திக்கொண்டு விட்டேன் :) பேப்பரில் மட்டுமே வரைந்து வருகிறேன். :))

      //முதலில் உங்கள் உடல் நலத்தை நன்கு கவனித்துக்கொண்டு, பிறகு வலைத்தளத்தை கவனியுங்கள்!//

      தங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி, மேடம். 05.07.2015க்குப் பிறகு மீண்டும் நீண்ட ஓய்வு எடுத்துக்கொள்வதாக உள்ளேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான + ஆறுதலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன்
      VGK

      Delete
  17. வலைச்சர வாரத்தை சிறப்பித்த தங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.பணியை தொடரமுடியாமல் போனதை இட்டு வருந்துகிறேன். நன்றி ! வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. @Iniya

      வாங்கோ .... வணக்கம்.

      //பணியை தொடரமுடியாமல் போனதை இட்டு வருந்துகிறேன்.//

      வருந்தாதீங்கோ, ப்ளீஸ். நாளை முதல் இதே பணி என் வலைத்தளத்தில் இன்னும் ஜே ஜே என்று தொடரத்தான் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  18. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று வலைச்சரத்தில் தாங்கள் அறிமுகம் செய்த வலைப் பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இவர்களில் ரியாஸ் அஹமத் அவர்கள் எனக்கு இன்றுதான் உங்கள் மூலம் அறிமுகம். இவர் தவிர மற்ற பதிவர்களின் பதிவுகளை அடிக்கடி படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    உடல்நலம் காரணமாக மருத்துவனைக்கு நீங்கள் சென்று வந்த போதும், வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்று திறம்படவே செய்தீர்கள். இதற்காக எனது நன்றி. உடல்நலம், மனநலம் பேணவும். இனி உங்கள் வலைத்தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.

    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. @தி.தமிழ் இளங்கோ

      வாங்கோ சார். வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும், என் உடல்நலம் + மனநலம் பற்றிய அக்கறைகளுக்கும், மேலும் தாங்கள் இந்த 13 நாட்களாக எனக்காகச் செய்துவரும் பல்வேறு மறைமுக உதவிகளுக்கும், இனி என் வலைத்தளத்தில் என்னை சந்திப்பதாகச் சொல்லியுள்ள இனிய செய்திக்கும், த.ம.9க்குமாகச் சேர்த்து அனைத்துக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடனும் நன்றியுடன் தங்கள்,
      VGK

      Delete
  19. நாள்தோறும் தொகுப்புகள் - அருமையாக வெளியிடப்பட்டன.
    தாங்கள் - இன்றுடன் பணியினை நிறைவு செய்வது சற்று வருத்தம் தான்..

    எனினும் - தங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. @துரை செல்வராஜூ

      வாங்கோ Brother, வணக்கம்.

      //தாங்கள் - இன்றுடன் பணியினை நிறைவு செய்வது சற்று வருத்தம் தான்..//

      சற்றும் வருந்தவே வேண்டாம். நாளைமுதல் என் வலைத்தளத்தினில் திருநாள் கொண்டாட்டங்கள் தொடர உள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும் ’வாழ்க நலம்’ என்ற அழகான ஆறுதலான வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  20. இன்றய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள். ஏற்றுக்கவண்ட பணியினை மிக சிறப்பாக நிறைவேற்றியிருக்கீங்க. பாராட்டுகள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் Sat Jun 13, 11:18:00 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.//

      ஓக்கே, மிக்க நன்றி.

      //ஏற்றுக்கொண்ட பணியினை மிக சிறப்பாக நிறைவேற்றியிருக்கீங்க. பாராட்டுகள் நன்றி.//

      ஏற்றுக்கொண்ட பணியில் சுமார் மூன்றில் ஒருபாகம் தான் நிறைவேறியுள்ளது. அதற்குள் பாராட்டுகளா ? ஓக்கே.

      நாளை முதல் நம்ம வீட்டுக்கு வாங்கோ. :)

      பிரியமுள்ள கோபு

      Delete
  21. இன்றைய அறிமுகங்களில் திரு ரியாஸ் அஹமது அவர்களின் தளம் மட்டும் நான் சென்றதில்லை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இடையிலேயே ஆசிரியர் பணியில் இருந்து விடைபெற்றது வருத்தம் அளித்தாலும் தங்களின் உடல்நலம் முக்கியம் என்பதை உணர்ந்து ஆறுதல் அடைகின்றேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      :) அனைத்துக்கும் மிக்க நன்றி. நாளை முதல் இந்தத் திருநாள் என் வலைத்தளத்தினில் இனிதே தொடர உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே :)

      Delete
  22. இன்றைய அறிமுகங்களில் கவிஞர் முத்துநிலவன் ஐயாவை நன்கறிவேன். அவர் பதிவுகள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். ஒரு மாதம் என்று சொல்லிவிட்டு இடையிலேயே ஆசிரியர் பொறுப்பு முடிவுக்கு வருவதறிந்து வருத்தம் தான். ஆனால் உடல்நலம் தான் மிகவும் முக்கியம். தினமும் கண்விழித்துப் பதிவுகளை வெளியிடுவது மிகவும் சிரமம் என்பதை அனுபவ பூர்வமாக அறிவேன். இன்று அறிமுகமாகும் அனைவருக்கும் பாராட்டுக்கள்! சுவையாக இரண்டு வாரங்கள் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள்! த ம வாக்கு 11.

    ReplyDelete
    Replies
    1. @Kalayarassy G

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான பல அனுபவக் கருத்துக்களுக்கும், த ம 11க்கும் என் இனிய நன்றிகள், மேடம்.

      நாளை முதல் இந்த இனிய திருநாள் என் வலைத்தளத்தினில் இனிதே தொடர உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே :)

      நன்றியுடன் கோபு

      Delete
  23. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கோபு அண்ணா
    இங்கே இல்லைன்னா அங்கேன்னு சொல்லிட்டீங்க.
    எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya Sat Jun 13, 03:23:00 PM

      வாங்கோ ஜெயா, :) வணக்கம்மா.

      //இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //கோபு அண்ணா, இங்கே இல்லைன்னா அங்கேன்னு சொல்லிட்டீங்க. எல்லாம் நன்மைக்கே.//

      நம் வீடு என்றால் நம் இஷ்டப்படி ஜாலியாக இருக்கலாமே ஜெயா :)))))

      மேலும் இதில் நம் அடிப்படை எதிர்பார்ப்புகள்படி வலைச்சரப் பொறுப்பேற்க முன்வந்திருக்கும் ஒரு புதுநபரை வரவேற்று, வாய்ப்பளித்து, அவரைப்பற்றியும், அவரின் சிறப்பான பல புதிய அறிமுகங்கள் பற்றியும் நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் இது நமக்கு அமைந்திருப்பதில் மேலும் மகிழ்ச்சியே !

      எல்லாம் நன்மைக்கே .... ஜெயா ! :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  24. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! 5 வாரங்கள் வலைச்சர ஆசிரியராகபணியாற்றுவீர்கள் என நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தபோது இரண்டே வாரத்தில் சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவு செய்து விடைபெறுவது அதிர்ச்சியாய் உள்ளது. இந்த இரண்டுவாரமும் பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி Sat Jun 13, 06:18:00 PM

      வாங்கோ, சார். வணக்கம்.

      //இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! 5 வாரங்கள் வலைச்சர ஆசிரியராகபணியாற்றுவீர்கள் என நினைத்து மகிழ்ச்சியாய் இருந்தபோது இரண்டே வாரத்தில் சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவு செய்து விடைபெறுவது அதிர்ச்சியாய் உள்ளது.//

      ஆமாம் சார். இதில் சில தவிர்க்க இயலாத காரணங்கள் உள்ளன. எனினும் இதையே நாளைமுதல் என் வலைத்தளத்தினில் தொடரலாம் என நினைத்துள்ளேன்.

      //இந்த இரண்டுவாரமும் பணியை சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துகள்!//

      :) மிக்க நன்றி, சார் :)

      Delete
  25. அய்யா இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஆயினும் தங்கள் உடல் நலனுக்காக,,,,,,,,,
    தாங்கள் வலைச்சரத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள், அது பொலிவு பெறும் இனி,
    தங்களுக்கு என் நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. @mageswari balachandran

      வாங்கோ, வணக்கம்.

      //தாங்கள் வலைச்சரத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள், அது பொலிவு பெறும் இனி//

      மிகவும் சந்தோஷம். அதுபோதும் எனக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள்.

      Delete
  26. 13 தினங்களில் பழைய கலகலப்பான வலைச்சரத்தை தங்கள்மூலம் உணர்ந்தேன். சீரிய பணி செய்தமைக்கு வாழ்த்துகள்!

    ஞானாலயா பற்றிய தகவல்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட்டது சிறப்புக்குரியது ஆகும்.

    வலைச்சரத்தின் புதிய ஆசிரியரை வாழ்த்தி, வரவேற்ற தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    இறைநாட்டப்படி, தங்கள் வலைப்பூவில் தொடர்வோம்.

    (அ. வே. : உடல் நலம் பேணுங்கள்!)

    tm. 13.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sat Jun 13, 09:28:00 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //13 தினங்களில் பழைய கலகலப்பான வலைச்சரத்தை தங்கள்மூலம் உணர்ந்தேன். சீரிய பணி செய்தமைக்கு வாழ்த்துகள்! //

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //ஞானாலயா பற்றிய தகவல்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட்டது சிறப்புக்குரியது ஆகும்.//

      :) இதனை எனக்கு நினைவூட்டிய கவிஞர் திரு. நா. முத்துநிலவன் சாருக்கு என் நன்றிகள்.

      //வலைச்சரத்தின் புதிய ஆசிரியரை வாழ்த்தி, வரவேற்ற தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.//

      மிக்க மகிழ்ச்சி. அது நம் கடமையல்லவா !

      //இறைநாட்டப்படி, தங்கள் வலைப்பூவில் தொடர்வோம். (அ. வே. : உடல் நலம் பேணுங்கள்!)
      tm. 13.//

      13 உள்பட அனைத்துக்கும் என் அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  27. ஓ! இத்தனை சீக்கிரமா! எனினும் தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும் சார்....தொடர்கின்றோம்....

    அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இதில் முதல் இருவரைத் தவிர மற்றவர்களின் தளத்திற்குச் செல்வதுண்டு....

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா !
    வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் !

    ReplyDelete
  29. இன்று ராஜியைத் தவிர அனைவரும் புதிய பதிவர்கள். முத்து நிலவன் சார் கேள்விப்பட்டிருக்கிறேன். பதிவுக்குச் சென்றதில்லை. :)

    புதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.

    மேலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஆதி, வேலு சகோ, இளங்கோ சகோ ஆகியோருக்கும். வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி :)

    மிகச் சிறப்பாக இப்பணியை நிறைவேற்றிய விஜிகே சாருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

    வலைச்சரத்தை மீண்டும் ஒளிரச் செய்தமைக்கு நன்றிகள். :)

    ReplyDelete