உயிர் எழுத்துக்கள் மூன்று
தலைப்பை ஆசான் டைப்படித்ததும் கோவிஞ்சாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
"வாத்யாரே.. நீ பெரியாளாக்கீறேப்பா... இவ்ளோ நாளா நான் தமிழ்ல உசுர் எழுத்து அதிகமா இருக்குதுன்னு நெனெச்சுக்கிட்டிர்ந்தேன்...
உனக்கெப்படி இப்படி"
"கோயிஞ்சாமி, தமிழ்ல நிறைய்ய இலக்கியங்கள் இருக்குது. ஆனா நம்மாளுங்க திருக்குறளையும், ராமாயணத்தையும் விட்டா உதாரணம் காட்ட வேற எதையும் தொட மாட்டேங்கிறாங்க."
"நீ என்னப்பா... எப்பவுமே தாடிய விட்டுக்கொடுக்காம பேசுவ.. இப்போ இப்படி ஜகா வாங்கிட்ட?"
"கோயிந்த், நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே... திருக்குறள படிக்குற எல்லோருமே அத்தோட நிறுத்தாம பண்டைய இலக்கியங்களையும் படிக்கணும்னு சொல்ல வர்றேன்"
"நீ வேற வாத்தியாரே, நம்ம இம்சை ரவி ஏற்கனவே தேவையில்லாத பாடத்த நடத்துன வாத்தியார் மேல ஆசிட் ஊத்தனும்னு அலையறாரு. இந்த நேரத்துல நீ வேற இப்படி பழச பத்தி ஆரம்பிச்சா ஆசிட், பினாயில்ன்னு கைக்கு கிடைச்சத எடுத்துக்கினு வந்திடப் போறாரு.."
"ஒரு விஷயம் தெரிஞ்சுக்கனும் கோயிந்த், எந்த ஒரு விஷயத்தையும் வெளியில இருந்து பாக்குறப்ப அது கஷ்டமாத்தான் தெரியும். ஆங்கிலத்தை உலகமொழியா மாத்துனதுல தமிழோனட பங்கு இல்லைன்னு நினைக்குறியா.. !
நாம நம்ம இலக்கியத்த வளர்க்காம வேற யாரு செய்வா?
நம்ம இலக்கியத்துல இல்லாத காதலையா நீ சேக்ஸ்பியரோட ஹாம்லெட்ல தேடப்போற... இல்லை நம்ம ராஜாக்கள் வீரத்தை விட நெப்போலியன் எந்த விதத்துல பெரியவனா காட்டப்போறே..?"
"அய்யோ மன்னிச்சுக்க வாத்தியாரே... தமிழன் வாழ்க..
இப்போ ஒத்துக்குறியா.. சரி இன்னிக்கு எந்த பதிவு சொல்லப்போறேன்னு இவ்வளவு பில்டப்பு..."
'அடப்பாவி.. நான் உணர்ச்சிவசப்பட்டு பேசறத கிண்டல் பண்றியா..
அருணா ஸ்ரீநிவாசனோட அலைகள்ங்கற பதிவுல கேள்விகள் ஆயிரம்ங்கற படைப்ப படிச்சுப்பாரு.. அப்பத்தான் உனக்கு புத்தி வரும்.."
"அதுக்கில்ல வாத்தியாரே... தமிழ வளர்க்கணும்ன்னு சொல்றப்ப ஒரு விஷயம் புரியல எனக்கு.. அத்த யார் அழிக்கப்போறா, நாம வாழ வைக்கிறதுக்கு.."
"இதுக்கு நான் பதில் சொல்றதவிட ஜெசிலா மேடம் எழுதுன தமிழ் சாகடிக்கப்படுகிறதாங்கற பதிவு படிச்சா உனக்கே எல்லாம் புரியும்.."
"சரி ஆசான்.. எனக்கும் இலக்கியத்துமேல ஆச வந்து அத்த படிக்கனும்னு வை. யாராண்ட போறது. எதுனா ஐடீயா கொடு.... இத்த சாக்கா வச்சிக்குனு உன்னோட கிளாஸ்லயே 5வதா என்னயும் உக்கார வச்சிடாதே..!"
"சொல் ஒரு சொல் ங்கற பதிவுக்கு போய் எல்லா பதிவயும் படி.. பிறமொழி சொல் கலப்பில்லாம எத்தனை வார்த்தைகளை நாம பேச முடியும்ன்னு வகைப்படுத்தியிருக்காங்க...
இது 4 பேர் கொண்ட குழு பதிவு... இவங்களோட பதிவுல செருங்கற பதிவு நகைச்சுவையா கருத்து சொல்றாமாதிரி அமைச்சிருப்பாங்க.. உனக்கு ஏதாவது இலக்கியத்தப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவங்க பதிவுல ஒரு பின்னூட்டம் போடு.. பதில விக்கிப்பசங்க மாதிரி தேடித்தருவாங்க.."
"எனக்கு கூட ஒரு இலக்கியப்பாட்டு தெரியும் வாத்யாரே...
ஓராயிரம் யானை கொன்றால் பரணின்னு ஒரு பாட்டு கேட்டிருக்கேன், இதுக்கு என்ன அர்த்தம், பரணின்னு பேர வைக்க 1000 யானைய கொல்லணுமா?"
"அதுக்கு அர்த்தம் அது இல்ல கோவிந்த்.. அந்த காலத்துல போர்ல ஜெயிச்ச மன்னர்களை புகழ்ந்து கவிஞர்கள், பாணர்கள்லாம் பாட்டு பாடி பரிசு வாங்கிப்போவாங்க.. அப்படி ஒரு கவிஞர் எழுதுன கலிங்கத்துபரணிங்கற நூல்ல மன்னன் வீரத்தோட சண்டைபோட்டு ஜெயிச்சதுக்காக இந்த பரணிப்பாட்டு எழுதினாங்க...."
"பொன்ஸ் அக்கா ஒரு யானைக்கு அடிப்பட்டாலே வருத்தப்படுவாங்க.
1000 யானய கொன்னது தெரிஞ்சா என்ன செய்வாங்க...!
நான் மறந்துட்டேன் பாத்தியா... அதென்ன உயிர் எழுத்துக்கள் மூன்று.. அத்த சொல்லு வாத்திய்யாரே.."
"அது ஒண்ணுமில்ல கோவிந்த்... யோசிப்பவர் ஸ்டைல்ல நானும் ஒருபதிவு போடலாம்ன்னு நினைச்சேன். அதான் இப்படி"
"எப்படி?"
"உயிர்-ங்கற வார்த்தையில இருக்குற எழுத்து எத்தனை?"
"மூணு"
"அதான் தலைப்பு.."
|
|
உய்ர்' எழுத்து மூனுன்னா -
ReplyDeleteஅப்ப மெய்' எழுத்து இரண்டா?
என்ன ஸ்வாமி தில்லால்லங்கடி ஆட்டமா இருக்கே?
எந்த ஊர் ஆட்டம் இது?
ஹி..ஹி.. அடுத்த பதிவுக்கு போட இருந்த தலைப்ப இப்படி வெளிப்படுத்திட்டீங்களே :)
ReplyDeleteநைனா! கட்சீ வரீல நமக்கு ஃபுல்லா அர்ச்சு போச்சுமா? இப்டி ஒரு ஸ்டைலு நம்ம கைலகீறது இம்புட்டு நாளா நமக்கே தெரியாம பூட்ச்சே!!!;)
ReplyDeleteபரவாயில்லீங்க.. யோசிப்பவரே.. உங்க சங்கத்துல சொன்னா யோசிச்சு கொட்டப்போறாங்க :))
ReplyDelete