அரசியல் சரவெடி!
தமிழ் வலைப்பதிவுகளில் மிக அதிகமான பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் துறை அரசியல் துறை. சங்கராச்சாரியார் கைது, தமிழக சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, குஷ்பு-கற்பு-அரசியல் பிரச்சினை, இடஒதுக்கீடு, மதுரை தினகரன் வன்முறை என்று பல விவகாரங்களில், பல தலைப்புகளில் காரசாரமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை வலைப்பதிவாளர்கள் ஆணித்தரமாக பதிந்து வருகிறார்கள். பதிவுலக அரசியலும் பட்டையைக் கிளப்பி வருகிறது :-)))))
இடையில் திமுக, பாமக, கம்யூனிஸ இயக்கங்கள், இந்துத்துவா இயக்கங்கள் மற்றும் இதர அரசியல், மனித உரிமை அமைப்புகளின் ஆதரவாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கொள்கைகளை பரப்பவும் இத்தளத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நேரடியாக தன்னை அதிமுக ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு அதிமுகவின் கொள்கைகளை நியாயப்படுத்தக்கூடிய ஒரு வலைப்பதிவர் தோன்றுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் சுனாமியாக உருவெடுத்த சில பதிவுகளை பார்ப்போமா?
அடிக்கடி நான் வாசித்து மகிழும் தொடர்பதிவு இது. ஒரு கைதேர்ந்த பத்திரிகையாளரின் லாவகத்துடன் தோழர் முத்து (தமிழினி) எழுதிய இந்தப் பதிவுகள் வலையுலகில் பலரின் கவனத்தை அவர் பால் திருப்பியது.
சொக்க தங்கமா "சோ" ராமசாமி-- பாகம் 1
சொக்க தங்கம் "சோ" வை உரசிப்பார்ப்போம் -பாகம் -2
சொக்க தங்கம் சோ பாகம் -3(இறுதி)
அருண் வைத்தியநாதன் அவர்களின் இப்பதிவு சோ குறித்த மற்றொரு பரிமாணத்தை காட்டுகிறது.
போற்றுதலுக்குரிய பல்கலை வித்தகர் சோ
தோழர் அசுரனிடம் யாருமே வாதம் செய்ய முடியாது. அப்சல் குறித்து அவர் எழுதிய இந்த கட்டுரை சூப்பர் டூப்பர் ஹிட்
அப்சலும் - அரசியல் ஓட்டாண்டிகளும் - அடிவருடிகளும்
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான உரத்த குரலுக்கு சொந்தக்காரர் தோழர் குழலி. அவருடைய இந்தப் பதிவு இடஒதுக்கீடு குறித்த பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியத்துக்கு இணையானது.
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு
நான் தொடர்ந்து வாசிக்கும் ஈழப்பதிவர் அண்ணன் சபேசன் அவர்களின் அசத்தலான கட்டுரை இது. ஒருவேளை உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்கிறாரோ?
கலைஞர் பற்றிய ஒரு பார்வை!
நான் அடிக்கடி கூகிளில் அதிகம் தேடுவது ஈழம், பெரியார் என்ற இருவார்த்தைகளை தான். ஈழப்போராட்டம் குறித்த எனக்கு மாறுபாடான கருத்துக்களை கொண்டிருந்தாலும் மயக்கவைக்கும் மேஜிக் எழுத்துக்களுக்கு சொந்தக்காரரான ஷோபாசக்தி அவர்களின் விரிவான கட்டுரை ஒன்று இதோ :
ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும் - ஷோபா சக்தி
#=@->*& பார்ட்டி வெளியே மிதக்கும் அய்யாவுக்கு இன்னா நக்கலுய்யா :-)
நாடு
இப்போதெல்லாம் ரொம்ப நக்கலாக பேசிக்கொண்டிருக்கும் பொட்டீக்கடையும் ஒரு காலத்தில் சீரியஸாக அரசியல் பேசியவர் தான்
நான் இந்தியனா?
நகைச்சுவையாக அரசியல் பேசுவதில் வல்லவர் உடன்பிறப்பு. எதிர்காலத்தில் இவர் மிகச்சிறந்த பத்திரிகை காலம்னிஸ்டாக வரக்கூடிய வாய்ப்புண்டு.
தமிழக பந்த் பற்றி பொதுநலவாதிகள்
நிறைய சரக்கு இருந்தாலும் கட்டுப்பாடற்ற எழுத்துநடையின் காரணமாக உண்மைத்தமிழனின் பதிவுகளை வாசிப்பதில் ஆயாசம் ஏற்படுகிறது. எனினும் அவரது இந்தப் பதிவு பல செய்திகளை கொண்டது. என்ன வழக்கம்போல கொஞ்சம் நீளம் :-)
மாயாவதியின் மாயாஜாலம்
வழக்கம்போல ஒரு டிஸ்கி : என்னைக் கவர்ந்த அரசியல் பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் சில பதிவுகளை மட்டுமே இடநெருக்கடி கருதி குறிப்பிட்டிருக்கிறேன். குறிப்பிட்ட பதிவுகளை தவிர மற்ற பதிவுகள் எனக்கு பிடிக்காதவை என்று யாரும் கோள் மூட்ட வேண்டாம் :-)
|
|
No comments:
Post a Comment