07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 19, 2007

வண்ண மாலை 2 - தமிழ் மாலை

எந்த இனத்தில் பிறந்தாலும் தாய் மொழிபற்று என்பது இல்லாதிருக்க முடியாது, எழுத்து இல்லாத பல மொழிகளும் தங்கள் மொழி பெருமையை இழக்கக் கூடாதென்று ஆங்கில எழுத்தைக் கொண்டு எழுத பழகி இலக்கியங்களுக்காகவும், தொடர்பு ஆவணங்களுக்காகவும் அவற்றை பயன்படுத்தி வருகின்றன. தோன்றிய காலம் அறிய முடியாத நமது தமிழ் மொழியின் பெருமையை வெளிநாட்டில் இருந்து கிருத்துவ மதம் பரப்ப வந்த பாதிரிமார்கள் ஆராய்ந்து சொல்லி இருக்காவிட்டால் நமது மொழி சென்ற நூற்றாண்டில் காணாது போயிருக்கும் அல்லது மலையாளம் போன்று உயிரை (சொற்களையும்) உடலையும் ( எழுத்துக்களையும்) இழந்திருக்கும். நல்ல வேலை காப்பாற்றப்பட்டு நம்கையில் இருக்கிறது. அதை பாதுகாப்புடன் மேலும் வளர்த்து, வளம் சேர்த்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது நம் கடமை.

பதிவுகள் எழுத ஆரம்பிக்கும் முன் எனக்கு தமிழ் மொழி பிடிக்கும், ஆனால் அதன் தொண்மையோ, பெருமையோ எதுவும் தெரியாது இருந்தது. 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்ற பொதுவான தமிழின உணர்வு மட்டும் இருந்தது. தேவநேய பாவாணர் மற்றும் பல தமிழறிஞர்களின் நூல்களை படிக்க ஆரம்பித்ததும் தான் தமிழின் பெருமையே தெரிய ஆரம்பித்தது. பலபற்றியங்களில் எழுதினாலும் தமிழ் குறித்து எழுதும் போது எனது கட்டுரைகள் எனக்கு உண்மையான மன நிறைவை தருகின்றன.

இறந்து போன மொழிகளை எந்த மொழியிலாவது ஒட்டவைத்து ஒட்டுண்ணியாக வளர்க்க முடியுமா ? நாள் தோறும் கடவுள் காதில் போட்டு வைத்தாலாவது சிதையாது இருக்குமோ என்று அவற்றின் பற்றாளர்கள் நினைக்கும் போது, உண்மையிலேயே தத்துவங்கள், இலக்கியங்கள், புதினங்கள் என அனைத்தையும் இளமை மாறாது வைத்திருக்கும் தமிழை பொறாமையால் அவர்கள் தூற்றத் துவங்கும் போது நாம் ஏன் சரியான பதிலடி கொடுக்கக் கூடாது என முற்படுவது தேவையற்றதுதான். தூற்றுபவர்களை புறம் தள்ளுவோம். நம்மொழியை வளர்த்து ஏற்றம் பெறுவோம். ஆங்கிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்வலைப் பக்கங்கள் இருப்பது நமக்கு பெருமைதருவதாகும். 'மெல்லத் தமிழினி சாகுமோ அச்சம்' இனி தேவை இல்லை 'தமிழ்தம் வளர்ச்சியில் அணை போட இனி எவருண்டு ?' என்று காட்டுவோம்.


தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை முதன் முதலில் வலைப்பதிவுகளில் படித்தேன் என்றால் அது நம் மதிப்பிற்குரிய வளவு இராமகி ஐயாவின் பதிவுகளைத்தான். முன்றாண்டுகளுக்கு மேலாக எழுதி குவித்திருக்கும் கட்டுரைகளைப் பார்க்கையில் வேற்று மொழிகளுக்கு வேராக போன தமிழ் சொல் திரும்பவும் உருமாறி திரும்பி இருக்கிறது என்று கண்டு கொண்டேன். தமிழ் கூட்டுச் சொற்களான அப்பும் இழிதலும் ஒற்றைச் சொல்லாக வடமொழியில் அபிஷேகமாகி மீண்டும் தமிழில் அபிடேகம் என்று திரிந்து போனதும், அபிடேகம் வடசொல் என கருதி அதற்கு முழுக்கு போட்டுவிட்டு 'குடமுழுக்கை' புதிய தனித் தமிழ் ஆக்கிக் கொண்டது போன்ற பல சுவையான தகவல்களையும், பாவாணருக்கு முற்றிலும் மாறுபட்டு புதிய சிந்தனைகளில் இராமகி ஐய பல வட சொல் மற்றும் ஆங்கில சொற்களுக்கு தமிழ் வேர்ச் சொல் கண்டுள்ளார் ( காட்டு : தமிழ்: காசு > ஆங்கிலம் : கேஷ் ). இராமகி ஐயாவின் இடுகைகள் அனைத்தும் தமிழார்வளர்களும், தமிழ் பற்றாளர்களும், தமிழன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆழ்ந்த பற்றியங்களை ( விசயம்) கொண்டது.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூக்களில் தமிழ் குறித்த பல இடுகைகள் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. மேலும் அவரது வலைப்பூவில் பல தமிழாய்வளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பற்றாளர்கள், சிந்தனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பல இடம் பெற்று இருக்கின்றன. கால்டு வெல் ஐயா அவர்களைப் பற்றி மிக அழகான கட்டுரை வரைந்து தொகுத்துள்ளார். தமிழ் தேனிக்கள் மொய்யக் கூடிய வலைப்பூக்களில் தமக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கிறார் இளங்கோவன் ஐயா.

மற்றும் எனது நண்பர்களான 'சொல்லின்' செல்வர்கள் மகரந்தம் ஜி.ராகவன் மற்றும் கூடல் குமரன் ஆகியோரின் தமிழ் சொல் மீள் அறிமுக ஆக்கங்கள் சிறப்பானவை. நானும் அதே வலைப்பூவில் சில ஆக்கங்களை எழுதி இருக்கிறேன்.

மேலும் பதிவர் ஜெகத் மற்றும் குமரிமைந்தன் ஆகியோர் தமிழர் பண்பாடு குறித்து மிக்கவையாகவே ( அதிகமாகவே) எழுதி வருகின்றனர்.

2 comments:

  1. தனித் தமிழிற்காகப் பாடுபடும் வலைப் பதிவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய இந்தப் பதிவு நிறைவாக உள்ளது நண்பரே!

    அவர்கள் அனைவருமே பாராட்டப் பட வேண்டியவர்கள்தான். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றீர்கள்.

    பாராட்டுக்கள் (இது உங்களுக்கு!)

    ReplyDelete
  2. /SP.VR.சுப்பையா said...
    தனித் தமிழிற்காகப் பாடுபடும் வலைப் பதிவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய இந்தப் பதிவு நிறைவாக உள்ளது நண்பரே!

    அவர்கள் அனைவருமே பாராட்டப் பட வேண்டியவர்கள்தான். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றீர்கள்.

    பாராட்டுக்கள் (இது உங்களுக்கு!)
    //

    சுப்பையா ஐயா,

    பாராட்டுக்கு மிக்க நன்றி. மற்றவர்களுக்கான உங்கள் பாராட்டும் சென்றுவிடும். தபாலுக்கு தனி கட்டணம் கொடுத்துவிடுங்கள் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது