07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 17, 2007

மாலை வண்ண மாலை...

ஒருவார கால வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைப்பு அனுப்பிய வலைச்சரம் குழுவினருக்கு நன்றி. வலைச்சரம் என்பது எனது பார்வையில் வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவாளர் ஒருவர் தமக்கு பிடித்த வலைப்பதிவுகளை தொகுத்து வழங்குவது என்பதாக இதுவரை கண்டு கொண்டதில் இருந்து தெரிகிறது. எனவே குறிபிட்ட இந்த மாலை தொடுப்பில் இருப்பதை தனிப்பட்ட பதிவரைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ற அளவில் மட்டுமே பார்க்கலாம் மற்றபடி சிலபதிவுகளுக்கு கொடுக்கும் சர்டிபிகேட் என்று கொள்ள முடியாத படித்ததில் பிடித்த ரகமான தொகுப்பு என்று கொள்ளலாம். அந்த வகையில் சிலர் பூக்களை சர(ள)மாக மிக அழகாக தொகுத்து வழங்கினார்கள். அந்த வகையில் நான் படித்து மகிழந்த வலைச்சர தொகுப்பில் ஆசிரியர் சுப்பையா அவர்களின் வலைச்சரம் மிக அழகாக தொகுக்கப்பட்டு இருந்தது. தமக்கு கொடுப்பட்ட பணியை மிக அழகாக செய்திருந்தார். அது போல் பல்வேறு ஆசிரியர்களின் தொகுப்புகள் தோரணமாக வலைச்சர மேடையை அலங்கரித்திருக்கிறது.

நான்கு வாரத்திற்கு முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரமாக இருந்ததால் திரும்பவும் மற்றொரு ஒருவார கால தொகுப்பிற்கு பொறுப்பு ஏற்பது கொஞ்சம் அயர்சியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தமிழமண நட்சத்திரம் போல் வாரம் முழுவதும் புதிய இடுகைகளை எழுத வேண்டிய தேவை இங்கு இல்லை என்பதாலும், ஏற்கனவே எழுதிவைத்து ஒப்பிக்க வேண்டிய ஒரு நிலையும் தேவை இல்லை என்பதாலும், எப்படியும் வாரத்திற்கு ஏழுபதிவுகள் என எதையாவது எழுதி போட்டு 'நச்'சமுடிவதால் இந்த பணி கடினமாக இருக்காது என்றே நினைக்கிறேன். சித்தரமும் கைப்பழக்கம்.. பதிவு எழுதுவது ஒரு மயக்கம்...எழுதி பழகிவிட்டால் கை அரிப்பை நிறுத்த முடியாது என்ற உன்னத நிலையை பலரும் அடைந்திருப்பது போலவே நானும் அடைந்திருக்கிறேன் :))

இந்த ஒருவார ஆசிரியர் பணியில் 'வண்ண மாலை' என்ற தொகுப்பில் ஒவ்வொன்றாக தருகிறேன். உடன் பதிவர்கள் அனைவரும் அணிந்து மகிழ வேண்டும். வாய்பளித்த வலைச்சரம் குழுவினருக்கும், நம் பதிவுகலக கொள்கை சார் பதிவர், சாராத பதிவ நண்பர்கள் அனைவருக்கும் உடன் (சக) பதிவர் என்ற முறையில் முன்கூட்டிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வண்ண மாலை ... வானவில்லின் வர்ண ஜாலம் [வருண ஜாலம் அல்ல :)] ஆரம்பம்.





அன்புடன்,

கோவி.கண்ணன்

4 comments:

  1. வர்ண மாலையை காண காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. அடித்து ஆடுங்கள் கண்ணன்!
    உற்சாகம் தந்து கை தட்ட நம் வகுப்புக் கண்மணிகளையும் வரச்சொல்லி யிருக்கிறேன.

    ReplyDelete
  3. //Collapse comments

    வடுவூர் குமார் said...
    வர்ண மாலையை காண காத்திருக்கிறோம்.
    //

    குமார்,

    வண்ண மாலை 'முடிந்த' அளவில் சாற்றுகிறேன்.

    நன்றி !

    ReplyDelete
  4. //SP.VR.சுப்பையா said...
    அடித்து ஆடுங்கள் கண்ணன்!
    உற்சாகம் தந்து கை தட்ட நம் வகுப்புக் கண்மணிகளையும் வரச்சொல்லி யிருக்கிறேன.
    //

    சுப்பையை ஐயா,

    மிக்க நன்றி. கண்மணிகள் எல்லோரும் களேபரத்தில் 'அடித்து' ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே எங்கே வரப் போகிறார்கள்.

    :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது