07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 18, 2007

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.அல்லவை விடுத்து நல்லதை மட்டும் எடுத்து போய்க்கொண்டு இருந்தால்
பிரச்சினையே இல்லை.ஒருவர் நமக்கு மாற்றுக்கருத்து உள்ளவராய் இருப்பதாலேயே அவர் சொல்லும் நல்ல விஷயங்களையும்
ஏற்க மறுப்பது மடமை.

இராமாயணம்,மகாபாரதம்,பகவத்கீதை போன்ற இதிகாசங்களில் இலக்கியச் சுவையும் , உயர்ந்த தத்துவங்களும் நிரம்பியுள்ளன.
அதைக் கடைப்பிடிக்காமல் தங்கள் சுயநலத்திற்காக அதில் இடைச்செருகப்பட்ட மனுதர்மம் போன்றவற்றை மட்டும் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டு அதை வைத்து மக்களை அடக்கி,ஒடுக்கும் மனநிலையே இப்போதும் இருக்கிறது.

இந்து மதத்தில் உள்ள இந்த இழிநிலையை பெரியார் போன்றவர்கள் நேரடியாகவே எதிர்த்து போராடினார்கள்.
ஆனால் இந்து மதத்திற்குள்ளேயே இருந்து போராடி,அதிலுள்ள குறைகளைப் போக்க முடியும் என்று நம்புகிற நேர்மையாளர் பலர்
இருக்கின்றனர்.அவர்களில் ஒருவர் அரவிந்தன் நீலகண்டன்."RIGHT MAN IN THE WRONG PLACE" என்று கலைஞர் ஒருமுறை வாஜ்பாயைப்
பற்றி குறிப்பிட்டிருந்தார்.அது இவருக்கும் அப்படியே பொருந்தும்.
இவரது
http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_06.html

இந்தப்பதிவு அப்படியே மனதில் ஆணி அடித்து நின்று விட்டது.ராமர் பாலம் பற்றிய ஒரு நேர்மையான
ஆத்திகரின் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்து தன்னை வலதுசாரி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பதிவர் அதியமான்.பொருளாதாரம் பற்றிய இந்தக்கட்டுரை

http://athiyaman.blogspot.com/2005/05/to-communists-socialists-of-india.html

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தமிழில் அதிகமாக தொடர்ந்து எழுத வேண்டும் என்று அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

6 comments:

  1. //."RIGHT MAN IN THE WRONG PLACE" என்று கலைஞர் ஒருமுறை வாஜ்பாயைப்
    பற்றி குறிப்பிட்டிருந்தார்.//

    உடன்பிறப்பே!

    இதைச் சொன்னவர் அமரர் மாறன். வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக இருந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தபோது, அத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் "Right person in Wrong Party" என்று வாஜ்பாய்க்கு புகழாரம் சூட்டினார் அமரர் மாறன்.

    ReplyDelete
  2. //

    உடன்பிறப்பே!

    இதைச் சொன்னவர் அமரர் மாறன். வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக இருந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தபோது, அத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் "Right person in Wrong Party" என்று வாஜ்பாய்க்கு புகழாரம் சூட்டினார் அமரர் மாறன்.
    //

    ஆமாம் அதே நாளில் தான் ப.சிதம்பரம் இப்படி சொன்னார் "பசு தோல் போர்த்திய ஓநாய்" என்று வாஜ்பாய் - ஜ நோக்கி சுட்டினார்.
    (அத்வானி யை விட வாஜ்பாய் மிக ஆபத்தானவர் என்கிற புள்ளியை மிகச்சரியாக சுட்டிக்காட்டினார்)

    தி.மு.க வின் மிகப்பெரிய தவறு பா.ஜ.க வுடனாக கூட்டணி. அப்புறம் ஆங்காங்கே அவர்களை புகழ்வது.

    என்ன அரசியல் செய்கிறீர்கள் என்றே புரியவில்லை. நல்லாயிருக்குப்பா உங்கள் நிலை!

    ReplyDelete
  3. தகவல் பிழையை திருத்தியதற்கு நன்றி லக்கி.

    ReplyDelete
  4. //என்ன அரசியல் செய்கிறீர்கள் என்றே புரியவில்லை. நல்லாயிருக்குப்பா உங்கள் நிலை!//

    பாரி அரசு!

    திமுகவின் டெல்லி நிலைப்பாடுகள் குறித்த விவாதங்கள் உடன்பிறப்புகளால் இன்றும் காரசாரமாக விவாதிக்கப்படுவது உண்டு.

    என்னைப் பொறுத்தவரை 80 காங்கிரஸ் கூட்டு, 99 பாஜக கூட்டு இரண்டுமே திமுகவுக்கு தற்கொலை முயற்சி என்பேன்.

    ReplyDelete
  5. பாரி அரசு,

    //என்ன அரசியல் செய்கிறீர்கள் என்றே புரியவில்லை. நல்லாயிருக்குப்பா உங்கள் நிலை!//

    ஜனநாயக அரசியல்.எதிர்ப்பவர்களை அழித்து ஒழித்து விட இந்தியாவில் முடியாது.சமரசத்துக்கு ஒரு சவீதம் மட்டுமே வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது தான்

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது