தொழில் நுட்ப வல்லுனர்கள்
தகவல் தொழில் நுட்பம் குறித்த பதிவுகளைப் பற்றிப் பேச வேண்டுமானால் ஒரு ஆங்கிலப் பதிவைக் குறிப்பிடாமல் முடியாது.
வலைப்பதிவுகள் blog என்ற வடிவில் உருவாகும் முன்பே, 1997ல் ஒரு கணினியியல் மாணவன் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்த தளம் பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள், லட்சக் கணக்கான பதிவு செய்த வாசகர்கள், கோடிக் கணக்கைத் தாண்டி விட்ட பின்னூட்டங்கள் என்று வணிக முறையில் பணம் ஈட்டும் தளமாக விளங்குகிறது.
தளம்
உருவான கதை
தலைகீழாக வகுத்தாலும் தமிழில் பல்வேறு நுட்பங்களை பொறுமையாக விளக்கும் வவ்வாலின் பதிவுகள் தமிழ் பதிவுலகுக்கு ஒரு நல் முத்து.
சமீபத்திய இடுகை
ஏதாவது பாலத்தில் போகும் போது, கட்டிடங்களைப் பார்க்கும் போது சாதாரணமாகக் கடந்து விடுகிறோம். மனித வரலாற்றின் ஆரம்பங்களிலிருந்தே மலர்ந்து இன்று முதிர்ந்து நிற்கும் கட்டிடக் கலையின் நுணுக்கங்களையும் அனுபவங்களையும் கொடுத்து வரும் வடுவூர் குமாரின் இடுகைகள் தவற விடக் கூடாதவை.
திறவூற்று மென்பொருள் பாவிப்பவர்களுக்கு ஒரு உதவிக் கருவூலம் மயூரனின் பதிவு
|
|
நன்றி மா.சி.
ReplyDeleteநான்கில் இரண்டு என் விருப்பமும் கூட.
வவ்வாலும்,மயூரனின் வலைப்பக்கங்கள்.
வணக்கம் குமார்,
ReplyDeleteslashdotம் போய்ப் பாருங்க. தினமும் அரை மணி நேரம் அங்கே செலவழிச்சால் தகவல் தொழில் நுட்பத்தில் பல புரிந்து கொள்ளலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்
மா.சி,
ReplyDeleteஆகா நீங்களும் நம்மை சுட்டிக்காட்டி இருக்கிங்களே, நன்றி!
நீங்கள் சொன்னப்பதிவுகளில் முதல் ஒன்றை தவிர மற்றவற்றை நானும் அவ்வப்போது பார்ப்பதுண்டு, அதுவும் வடுவூர் குமார், கட்டிடம், லினக்ஸ் என்று வித்தியாசமான தளங்களில் செயல்படுவார்.
வணக்கம் வவ்வால்,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் இணையத்தில் தமிழில் விபரம் தேடுபவர்களுக்கு அறிவுக் கருவூலமாக விளங்கும் பதிவுகளில் ஒன்றாக இருக்கும். தொடர்ந்து பல இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
மா சிவகுமார்