07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 11, 2009

வேடந்தாங்கல்

பாரதியும் வள்ளுவனும்

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல
வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை,வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையாராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!




தம்பியுடையான் படைக்கு அஞ்சான் எனச்சொன்னார்கள் மூத்தோர்
ஆனால் இங்கு எனக்கு வாய்த்த தம்பி படையுடன் நான் அஞ்சி அஞ்சி வாழறேனுங்க....ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்
அப்ப நீங்க அதுங்களுக்கு அக்காவான்னு உடனே கேட்டுடுவீங்களே....

ஆமாங்க ஐந்தும் அழகான ராட்சனுங்க....என்னை வம்புக்கு இழுத்து அள்ளித்தின்னு கடைசியா அடிப்பாங்க ஒரு டயலாக் சும்மா தான் கலாய்க்கிறோம் உங்க கவிதைன்னா ரொம்ப பிடிக்குமுன்னு ம்ம்ம்ம்ம் அந்த வஞ்சப்புகழ்ச்சியில்
வீழ்ந்தவ தாங்க....என்ன இருந்தாலும் என் தம்பிங்க தங்க கம்பிங்க(ஆமா இத சொல்லைன்னா அப்புறம் எல்லாம் அண்ணாக்களை துணைக்கு அழைத்துக்
கொண்டு வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துடுவாங்க.....



ஆம் வாலுன்னா வாலு அப்படி ஒரு வாலு ஆனால் இந்த அக்காவை ரொம்ப பிடிக்கும் ஆனால் எப்பப் பாரு கிண்டலடிக்கும் இந்த வம்பு...கவிதை என்றால் காதா தூரம் ஓடுவார் நகைச்சுவையாய் எழுத வல்லவர் இவர் ஆனால் நான் எழுதுவது எல்லாம் எழுதல்ல என்று சொல்வார்..இப்போது இதை நான் டைப் பண்ணிட்டு இருந்தாலும் இது நான் தானா? நான் செத்தவளா? சாகலையா? இல்லை நான் பார்க்கலையா?ன்னு எனக்கே இன்னும் தெரியலை என்னடா இவ உளரான்னு தானே பார்க்கறீங்க நான் சொல்ற இந்த தலத்திற்கு போங்க தெரியும்..
அதுவரை ஆவியாத்திரியற இந்த பாவி உங்க கண்ணுக்கு எல்லாம் தெரியமாட்டேன்
பழகுதலுக்கு இனியானவர் அழகான அன்பு தம்பி இவர்

எழுதுவது எல்லாம் எழுத்தல்ல
சுரேஷ் குமார்
கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..
என்னாது இது..?
அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!




இவர் நமக்கு மட்டுமே புதியவர்....வலையுலகில் எப்போதோ பயணம் செய்ய வந்தவர்....இவரும் அணுகாத பதிவுகளே இல்லை குறிப்பிட்டு சொல்ல முடியாத படி அனைத்துமே அற்புதம் அவசியம்....இவர் கவிதைகள் பல கண் கலங்க வைத்திருக்கிறது இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அருமை நண்பர் குணா அவர்கள்..இங்கு இப்படி ஒரு சிறந்த பதிவரை நமக்கு அளித்தமைக்கு நான் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.இவர் ஒரு சிறந்த மருத்துவரும் கூட....
இவர் தான் ஜீவநதி ஜீவராஜ்
கலங்குகின்றோம் கண்பாருங்கள்.....

தனித்து விடப்பட்டவர்கள்....



இந்த வலைப்பூ எனக்கு அண்ணன் தம்பி மகன் மகள் நட்பு என எல்லா உறவுகளையும் தந்திருக்கிறது....இவர் எனக்கு மகன் தம்பி தோழன் சமயத்தில் ஆசான்....மிகவும் இளையவரான இவர் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை எந்த ஒரு தலைப்பூ தந்தாலும் நொடி நேரம் போதும்
இந்த வயதில் இத்தனை அறிந்து வைத்து இருப்பது இவரது திறமைக்கு சான்று....
அடிக்கடி கோவம் சண்டை போட்டுக் கொள்வோம் ஆனால் நொடி கூட நிலைக்காது ஒரு முறையாவது என்னை திட்டிவிடுங்கள் என்பார்.ஏனோ மனம் வராது இவர் எழுத்துக்கள் வெளிக்கொணரப்பட்டால் வலையுலகத்தில் ஒரு வெளிச்சம் மறைந்திருந்ததை அறிவோம். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்....எதையும் தாங்கும் இவரது பக்குவம் எனக்கென்று வருமோ தெரியாது என்னை சமாதானப்படுத்தி தேற்றும் என் அம்மா இவன்...
இவர் தான் இது ஒரு கனவுக்காரனின் பக்கம் ரங்கா.இவரது சில பதிவுகள்
பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-2.
வெயிடிங்க்...!!!
உன் விழிகள்.. என் வழிகள்!!
அந்த மழை காலத்தில் ஒரு மதிகெட்டவன்..!!



புதிய வரவான இவர்..இது வரை கொடுத்துள்ள பதிவுகள் எல்லாம் நலமே....
இவரும் என்னை வம்புக்கு இழுப்பதில் வல்லவர்....என்னை அக்கா என அழைத்த அண்ணன் இவர்....சண்டை எல்லாம் சும்மா தான்....இவருடன் வெகு சமீபத்தில் தான் எனக்கும் அறிமுகம் ஆனால் புது முகம் என்றே தோன்றாத அளவு ஒன்றிப் போய்விடும் எதார்த்தம் இவருடைய கவிதை ஒன்று படித்தேன் அத்தனை தேன் சுவையாய் இருந்தது அது..விரைவில் வலைபூ உலகில் பிரபலமாவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை..இவரை அறிமுகப்படுத்துவதில்
நான் பெருமைக் கொள்கிறேன்....
இவர் தான் ஷஃபிக்ஸ்"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் .இவரது சில பதிவுகள் இங்கு
<>இப்படிக்கு கவிதை
<>அவள் விழிகள்










அமைதி தழுவும் அன்பு முகம் என் எல்லாப் பதிவும் அவசியம் படித்து விடுவார்
எனக்கும் வெறும் பின்னுட்டத்தில் தான் பழக்கம்.. சமுதாய சிந்தனை அதிகம் உள்ளவர்..அதிகம் கிராம பிண்ணனியிருக்கும்..சமுக அவலங்களைச் சுட்டிக் காட்டி
பதிவிடுவார்..இவர் எல்லாரும் அறிந்த முகமே...இன்னும் நிறைய சொல்ல நினைக்கிறேன் ஆனால் அத்தனை பழக்கமில்லை இவருடைய பதிவுகள் அனைத்தும் படித்திருக்கிறேன்...இவருடைய தலத்தின் பெயரே இவர் பெரியோர்களை எப்படி மதிப்பவர் என்று நம்மால் கணிக்க முடியும்.இவர் தான் ஞானசேகரன் அம்மா அப்பா
இவருடைய பதிவுகளில் சில இங்கு அறிமுகப்படுத்துகிறேன்...

என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்
செல்லம்மாள்.. (வலைப்பதிவர்கள் பங்கேற்கும் சிறுகதை போட்டிக்காக)




இந்த புதுமுகம் நம் வலைப்பூவில் இன்று பொலிவு முகம் வந்த சில நாட்களில் அபரீத வளர்ச்சி வேகம் வேகம் வேகம் இதான் இவரின் எல்லை ..ஒரு பிரசவத்தில் தாய் பல பிள்ளைகளை பிரசவிப்பது போல் தான் ஒரு நாளைக்கு எத்தனை எத்தனை பதிவுகள் ஆம் அத்தனை கற்பனை ஊற்றை கொண்டவர் இந்த மருத்துவர்...என் அன்பு தம்பியும் கூட..எங்கு அதர்மம் நடந்தாலும் அஞ்சாது பதிவாய் போடும் இந்த சிங்கம் இளங்கன்று பயமறியாது என்பதற்கு இவர் சரியான சான்று...அக்காவிடம் என் நேரமும் வம்பளக்கும் என் பதிவினை பாராட்ட தவறியது இல்லை...பிறரை ஊக்கிவிப்பதிலும் நட்பு பாராட்டுவதிலும் மிகையானவர்...துறு துறுவென இருக்கும் இவர் ஒரு மாயத்தீ என நான் அழைக்கும் மாயாதி
கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்
இவருடைய பதிவுகளில் சில இங்கு அறிமுகப்படுத்துகிறேன்...
குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு

உன் வீடு
ஒரு பதிவருக்காய் வழிந்த என் கவிதை....





வலைப்பூவின் புதுப்பூ அல்ல ஏற்கனவே வாசம் வீசிக் கொண்டு இருக்கும் மலர் இவர் எனக்கு இங்கு மேலும் ஒரு சிறந்த தோழி கிடைத்திருக்கிறார் என்ற பெருமிதம்
இவர் கதைகளில் பெண்மை பேசும் விந்தை ஆம் அத்தனை அழகாக பெண்களின் நிலையை தன் கதையில் சொல்லியிருக்கிறார் நான் இங்கு தரும் இவருடைய அந்த பதிவைப் பார்த்தால் நீங்களும் இதைத் தான் நினைப்பீர்கள் இவரும் எனக்கு
புதுமுகம் என்பதால் இன்னும் அதிகம் சொல்ல முடியவில்லை அதனால் என்ன
இனி மேல் நாங்கள் தான் நெருங்கிய தோழிகளாயிற்றே அறிந்துக் கொள்(ல்)வோம் ஹிஹி ஹி கவிதை சொல்லி உங்களை....
இவர் தான் ஜெஸ்வந்தி மெளனராகங்கள்
இவருடைய பதிவுகளில் சில இங்கு அறிமுகப்படுத்துகிறேன்...
நான் அழுது கொண்டே சிரிக்கிறேன்..
நான் இப்ப ஏன் கண் கலங்குகிறேன்



இவர் ஒரு பெண் விரியுரைவாளார் இவரை நான் எப்போதுமே
வியந்தே பார்ப்பேன் நானெல்லாம் எதற்கு எனத் தோனும் இவரும் ஒரு தமிழ் ஆசிரியர்,,, தமிழ் பற்றி தான் இவருடைய அதிக அளவு பதிவுகள் இருக்கும்
என்னுடைய பதிவுகள் இவர் படிக்க அவை பெருமை கொண்டன.... இனி உங்களோடு நானும் இவர் பதிவை தொடர்ச்சியாக படிக்கப் போகிறேன்.இதோ இவர் பதிவில் சில
கல்பனாசேக்கிழார்முனைவர் கல்பனா சேக்கிழார் இவருடைய பதிவுகளில் சில இங்கு அறிமுகப்படுத்துகிறேன்...

இளைய சமுதாயமே சிந்திப்பீர்
சொற்பொருள்
வாழும்கலை

90 comments:

  1. கவிதையில்லாமல் தமிழின் பதிவா.... இதற்கு நன்றி....பதிவர்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நான்காவது நாள் தானே uncle...

    ReplyDelete
  4. ஜீவநதி மற்றும்

    முனைவர் கல்பனா சேக்கிழார்

    இவர்கள் இருவரையும் படித்ததில்லை

    இனி படிப்போம், நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. sandhya said...

    நான்காவது நாள் தானே uncle...\


    உண்மை தான்


    சரி


    நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நான்காம் நாள் வாழ்த்துக்களுங்கோவ்..

    ReplyDelete
  7. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அக்கா..

    ReplyDelete
  8. //
    கவிதை என்றால் காதா தூரம் ஓடுவார்
    //
    என்னதான் உண்மையா இருந்தாலும் இவ்ளோ ப்ராங்க்கா பப்ளிக்ள பரப்பிவெக்ககூடாது..

    ReplyDelete
  9. அற்ப்புதமான பாடும் பறவைகள் கூட்டத்தில் எனது பெயரையும் இடம்பெறச்செய்ததர்க்கு முத்தமிழ் அரசியாருக்கு மனமகிழ்ச்சியுடன் நன்றிகள். இந்த வலைப்பூந்தோட்டத்திர்க்கு நீங்கள் என்றுமே அக்காத்தான் அரசியாரே!!

    எனக்கு இந்த அழகிய தோட்டத்தை அறிமுகப்படுத்திய நவாஸ் அவர்களுக்கும், அவரை தொடர்ந்து இருகரங்களாய் அன்போடு ஆதரித்த அபூஅஃப்சர் மற்றும் ஜமாலுக்கும் எனது ஆக்கங்களை தொடரும் அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் வளர உங்கள் ஆதரவை என்றும் வேண்டுகிறென்.

    ReplyDelete
  10. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
    நன்றி அக்கா..

    ReplyDelete
  11. நான்காம் நாள் வாழ்த்துக்கள். மயாதி, ஷஃபி தவிர மற்ற அனைவருமே எனக்கு புதியவர்கள். கண்டிப்பாக எல்லோரையும் படிக்கணும். (பின்னூட்டம் போடும் வேலை அதிகாமாகுதுப்பா)

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. இன்றைய சூப்பர் ஸ்டார்கள் சுரேஷ் குமார், ஜீவராஜ், ரங்கா, ஞானசேகரன், மயாதி, ஜெஸ்வந்தி மற்றும் கல்பனாசேக்கிழார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வேடந்தாங்களுக்கு ஓசியில டூர் போய்ட்டு வந்தமாதிரி ஃபீலிங்ஸ்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

    அட 4 வது நாள் தான் இப்படி சொன்னேன், எப்பூடி?

    ReplyDelete
  16. ஆணியை புடுங்க வேண்டியது இருக்கு ஆகையால் மற்றவை பிறகு....

    ReplyDelete
  17. நட்புடன் ஜமால் said...
    ஜீவநதி மற்றும்

    முனைவர் கல்பனா சேக்கிழார்

    இவர்கள் இருவரையும் படித்ததில்லை

    இனி படிப்போம், நன்றி பகிர்வுக்கு.

    ஆம் இங்கு அத்தியாவசியான பதிவுகள் உண்டு அவசியம் படியுங்கள் நன்றி ஜமால்....

    ReplyDelete
  18. सुREஷ் कुMAர் said...
    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அக்கா..

    அக்காவுக்கு ஹிந்தி தெரியுமே..... நீ சுரேஷ் குமார் தானா எப்படி? என் திறமை...

    ReplyDelete
  19. सुREஷ் कुMAர் said...
    //
    கவிதை என்றால் காதா தூரம் ஓடுவார்
    //
    என்னதான் உண்மையா இருந்தாலும் இவ்ளோ ப்ராங்க்கா பப்ளிக்ள பரப்பிவெக்ககூடாது..

    பின்ன எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு எப்படி நழுவ விடுவது...

    ReplyDelete
  20. ஷ‌ஃபிக்ஸ் said...
    அற்ப்புதமான பாடும் பறவைகள் கூட்டத்தில் எனது பெயரையும் இடம்பெறச்செய்ததர்க்கு முத்தமிழ் அரசியாருக்கு மனமகிழ்ச்சியுடன் நன்றிகள். இந்த வலைப்பூந்தோட்டத்திர்க்கு நீங்கள் என்றுமே அக்காத்தான் அரசியாரே!!

    எனக்கு இந்த அழகிய தோட்டத்தை அறிமுகப்படுத்திய நவாஸ் அவர்களுக்கும், அவரை தொடர்ந்து இருகரங்களாய் அன்போடு ஆதரித்த அபூஅஃப்சர் மற்றும் ஜமாலுக்கும் எனது ஆக்கங்களை தொடரும் அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் வளர உங்கள் ஆதரவை என்றும் வேண்டுகிறென்.

    ஆம் உண்மையாவே இது நன்றி நவில சிறந்த இடமே..தம்பி..ஷ்ஃபிக்ஸ் பறவை மேலும் சிறந்த பாடல்கள் பாட விழையும் தமிழ்...

    ReplyDelete
  21. S.A. நவாஸுதீன் said...
    நான்காம் நாள் வாழ்த்துக்கள். மயாதி, ஷஃபி தவிர மற்ற அனைவருமே எனக்கு புதியவர்கள். கண்டிப்பாக எல்லோரையும் படிக்கணும். (பின்னூட்டம் போடும் வேலை அதிகாமாகுதுப்பா)

    ஒரு நிமிஷம் எங்க திருந்திட்டீங்களோன்னு நினைச்சிட்டேன்பா...

    ReplyDelete
  22. ஷ‌ஃபிக்ஸ் said...
    வேடந்தாங்களுக்கு ஓசியில டூர் போய்ட்டு வந்தமாதிரி ஃபீலிங்ஸ்

    நேரில் பார்த்த ஃபீஸ் வசூல் பண்ணிடுவோம்ல....

    ReplyDelete
  23. இதுபோன்ற ஒரு தொகுப்பைத் திரட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள். முதலில் உங்களின் கடின் உழைப்பிற்கு நன்றி தமிழ். மற்றும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ஆறாம் நாள் வாழ்த்துகள்.. தோழி,

    உங்களின் இனிய தமிழில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்....

    ReplyDelete
  25. ஊமையாராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    கண்டிப்பாக அரசியாரே....

    ReplyDelete
  26. ஆனால் இங்கு எனக்கு வாய்த்த தம்பி படையுடன் நான் அஞ்சி அஞ்சி வாழறேனுங்க....ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்
    அப்ப நீங்க அதுங்களுக்கு அக்காவான்னு உடனே கேட்டுடுவீங்களே....


    பின்னே கேட்காமல் இருப்போமா...

    ReplyDelete
  27. கவிதை என்றால் காதா தூரம் ஓடுவார் நகைச்சுவையாய் எழுத வல்லவர் இவர் ஆனால் நான் எழுதுவது எல்லாம் எழுதல்ல என்று சொல்வார்..

    ஆனால் அற்புதமான எழுத்தர்

    ReplyDelete
  28. அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.. படங்களுடம் அருமையாக உரையும் கொடுத்து அறிமுகம் செய்யும் பாங்கு நன்றாக உள்ளது. வழ்த்துகளுடம்

    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  29. //தமிழரசி said...

    ஷ‌ஃபிக்ஸ் said...
    வேடந்தாங்களுக்கு ஓசியில டூர் போய்ட்டு வந்தமாதிரி ஃபீலிங்ஸ்

    நேரில் பார்த்த ஃபீஸ் வசூல் பண்ணிடுவோம்ல....//

    ஃபீஸ் வாங்கிகோங்க, ஆனா உங்களோட கவிதய படிச்சுத்தான் ஆகவேண்டும்னு பெரிய தன்டனையெல்லாம் கொடுத்துராதிங்க.

    ReplyDelete
  30. " உழவன் " " Uzhavan " said...

    இதுபோன்ற ஒரு தொகுப்பைத் திரட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள். முதலில் உங்களின் கடின் உழைப்பிற்கு நன்றி தமிழ். மற்றும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    அதனால என்னங்க..எல்லாம் என் நண்பர்களுக்காகத் தானே என எண்ணும் போது இன்னும் கொடுத்திருக்கலாமே எனவே தோன்றும்.. நன்றி உழவன் உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு...

    ReplyDelete
  31. ஷ‌ஃபிக்ஸ் said...
    இன்றைய சூப்பர் ஸ்டார்கள் சுரேஷ் குமார், ஜீவராஜ், ரங்கா, ஞானசேகரன், மயாதி, ஜெஸ்வந்தி மற்றும் கல்பனாசேக்கிழார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    நீங்க மட்டும் என்ன ஷஃபி நண்பர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவைப் போட்டே அசத்திட்டீங்க...

    ReplyDelete
  32. ஆ.ஞானசேகரன் said...
    அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.. படங்களுடம் அருமையாக உரையும் கொடுத்து அறிமுகம் செய்யும் பாங்கு நன்றாக உள்ளது. வழ்த்துகளுடம்

    ஆ.ஞானசேகரன்

    நன்றி சேகர்...

    ReplyDelete
  33. sakthi said...
    ஆனால் இங்கு எனக்கு வாய்த்த தம்பி படையுடன் நான் அஞ்சி அஞ்சி வாழறேனுங்க....ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்
    அப்ப நீங்க அதுங்களுக்கு அக்காவான்னு உடனே கேட்டுடுவீங்களே....


    பின்னே கேட்காமல் இருப்போமா...

    ஹஹஹ்ஹாஹா

    ReplyDelete
  34. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    இன்றைய சூப்பர் ஸ்டார்கள் சுரேஷ் குமார், ஜீவராஜ், ரங்கா, ஞானசேகரன், மயாதி, ஜெஸ்வந்தி மற்றும் கல்பனாசேக்கிழார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    நீங்க மட்டும் என்ன ஷஃபி நண்பர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவைப் போட்டே அசத்திட்டீங்க...//

    அது என் கடமை அக்கா, எங்களுக்கும் தமிழ்ரசியல் தெரியும்ல...

    ReplyDelete
  35. //தமிழரசி said...
    " உழவன் " " Uzhavan " said...

    இதுபோன்ற ஒரு தொகுப்பைத் திரட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள். முதலில் உங்களின் கடின் உழைப்பிற்கு நன்றி தமிழ். மற்றும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    அதனால என்னங்க..எல்லாம் என் நண்பர்களுக்காகத் தானே என எண்ணும் போது இன்னும் கொடுத்திருக்கலாமே எனவே தோன்றும்.. நன்றி உழவன் உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு...//

    ஆமாம் இந்த முயற்சிக்கு பாராட்டியே ஆகவேண்டும்!!

    ReplyDelete
  36. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    இன்றைய சூப்பர் ஸ்டார்கள் சுரேஷ் குமார், ஜீவராஜ், ரங்கா, ஞானசேகரன், மயாதி, ஜெஸ்வந்தி மற்றும் கல்பனாசேக்கிழார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    நீங்க மட்டும் என்ன ஷஃபி நண்பர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவைப் போட்டே அசத்திட்டீங்க...//

    அது என் கடமை அக்கா, எங்களுக்கும் தமிழ்ரசியல் தெரியும்ல...

    அக்கான்னு சொன்னா அடிவாங்க போறீங்க நீங்க வேணாம் அழுதுடுவேன்...ஹிஹிஹி...

    ReplyDelete
  37. //தமிழரசி said...
    அக்கான்னு சொன்னா அடிவாங்க போறீங்க நீங்க வேணாம் அழுதுடுவேன்...ஹிஹிஹி...//

    அந்த கடமைத்தான் நாங்க செய்கிறோமே உங்கள் உதவியால்!!

    ReplyDelete
  38. naangalum vanthutomla vazthu solla

    நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  39. ama en photo poda porenu neen eaan amma sollala

    ada antha mail photo sonnen

    rompa azaka iruku da

    ReplyDelete
  40. நட்புடன் ஜமால் said...
    ஆறாம் நாள் வாழ்த்துகள்

    annaku iniku ennachi

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. sandhya said...
    நான்காவது நாள் தானே uncle...


    ithai naan vanmayaka kanikiren

    thagachi

    ReplyDelete
  43. மிக்க நன்றி தமிழரசி அவர்களே
    நன்றி குணா

    நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியவிதம் அருமை..

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  44. இவர்களை நான் ஆழ்ந்து படித்ததில்லை!!

    ReplyDelete
  45. //
    தேவன் மாயம் said...

    இவர்களை நான் ஆழ்ந்து படித்ததில்லை!!
    //
    அஃகாங்.. இவர் இதுவரைக்கும் எங்களை ஆழ்ந்துபடிக்களைய்ய்ய்ய்ய்ய்ய்..

    அவருக்கு கடை அட்ரஸ் தெரியாதுன்னு நெனைக்கிறேன்..
    இப்போ நீங்க கொடுத்துட்டிங்கள்ள.. பாப்போம்..

    ReplyDelete
  46. //
    தமிழரசி said...

    सुREஷ் कुMAர் said...
    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அக்கா..

    அக்காவுக்கு ஹிந்தி தெரியுமே..... நீ சுரேஷ் குமார் தானா எப்படி? என் திறமை...
    //
    ஒங்க தெறமதான் ஒலகத்துக்கே தெரியுமே அக்கா..

    ஆமா, அதுல டமிழ், இங்கிலிபீஸ்லகூடத்தான் இருக்கு..

    ஒடனே டமிழ் தெரியும்..
    இங்கிலிபீஸ் தெரியும்னு ஒரு இடுக போடுவிங்களோ..

    ReplyDelete
  47. //सुREஷ் कुMAர் said...
    //
    தேவன் மாயம் said...

    இவர்களை நான் ஆழ்ந்து படித்ததில்லை!!
    //
    அஃகாங்.. இவர் இதுவரைக்கும் எங்களை ஆழ்ந்துபடிக்களைய்ய்ய்ய்ய்ய்ய்..

    அவருக்கு கடை அட்ரஸ் தெரியாதுன்னு நெனைக்கிறேன்..
    இப்போ நீங்க கொடுத்துட்டிங்கள்ள.. பாப்போம்..//

    கடைன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது, அக்கா எங்கே அந்த ஷாப்பிங் வவுச்சர், நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு பின்னூட்டம் இடுறோம்!!

    ReplyDelete
  48. உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்றி தோழி. இத்தனை பேரை அறிமுகம் செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருப்பீர்கள். நன்றி என்ற ஒரு சொல்லில் முடித்து விட முடியாது. ஆனால் உங்களைப் புகழ்ந்து கவிதையும் எழுதத் தெரியாது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. எதையும் தாங்கும் இவரது பக்குவம் எனக்கென்று வருமோ தெரியாது என்னை சமாதானப்படுத்தி தேற்றும் என் அம்மா இவன்...

    குட்

    ரங்கா....


    அழகான அறிமுகம்

    ReplyDelete
  50. என்னை அக்கா என அழைத்த அண்ணன் இவர்....சண்டை எல்லாம் சும்மா தான்....இவருடன் வெகு சமீபத்தில் தான் எனக்கும் அறிமுகம் ஆனால் புது முகம் என்றே தோன்றாத அளவு ஒன்றிப் போய்விடும் எதார்த்தம் இவருடைய கவிதை

    ஆம் தமிழ் அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரர்....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. // தமிழரசி said...
    " உழவன் " " Uzhavan " said...

    இதுபோன்ற ஒரு தொகுப்பைத் திரட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு உழைத்திருப்பீர்கள். முதலில் உங்களின் கடின் உழைப்பிற்கு நன்றி தமிழ். மற்றும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
    //

    நானும் கூவிக்கிறேன்

    ReplyDelete
  52. ஜீவநதி மற்றும்

    முனைவர் கல்பனா சேக்கிழார்

    இவர்கள் இருவரையும் படித்ததில்லை

    இனி படிப்போம், நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  53. //ஜெஸ்வந்தி said...
    உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்றி தோழி. இத்தனை பேரை அறிமுகம் செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருப்பீர்கள். நன்றி என்ற ஒரு சொல்லில் முடித்து விட முடியாது. ஆனால் உங்களைப் புகழ்ந்து கவிதையும் எழுதத் தெரியாது
    //

    அந்த முயற்சி செய்திடாதீங்கோ அப்புறம் பதில் கவிதை வந்துவிடும் ஹா ஹா

    ReplyDelete
  54. //தேவன் மாயம் said...
    இவர்களை நான் ஆழ்ந்து படித்ததில்லை!!
    //

    ஆழ்ந்து படிக்கிறேன் என்று
    வீழ்ந்து விடாதீர் (அவர்களுடைய எழுத்துக்கலை சொன்னேன்)

    ReplyDelete
  55. //sandhya said...
    நான்காவது நாள் தானே uncle...//

    சந்தியாவுமா பின்னூட்டம் போடுது

    யப்பா! நமக்கு ஒருவாட்டி கூட பின்னூட்டம் இட வில்லை பாத்தியா உங்க அம்மான்னா பின்னூட்டம் போடுவியா எங்களுக்கு கிடயாதா?

    ReplyDelete
  56. வணக்கம்ம்ம்ம்ம் டீச்சர்

    நாலாவது நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. மலர் கண்காட்ச்சி

    கனிக்கூட்டம்

    வேடந்தாங்கல்

    எப்படிங்க தமிழ் வித்தியாசமா அறிமுகப்படுத்திட்டீங்க சூப்பர்

    ReplyDelete
  58. இன்று அறிமுகமான சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  59. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ஒரே ஒரு இடுகையை மாலைநேரத்தில் வெளியிடுங்களேன்.

    கடைசியில் வந்து பின்னூட்டம் போட
    வார்த்தைகளை தேட வேண்டியிருக்கு.

    நண்பர் நவாஸ் மாதிரி அலுவலகத்தில் இருந்தா பரவாயில்ல,
    தினம் தினம் கடலுக்குள்ள போயிட்டு வரவேண்டியிருக்கு...

    என் கவிதையால் மேடை அமைப்பேன்னு சொல்லிட்டு பெரிய மாநாடே நடத்துறீங்க...

    நடத்துங்க.

    ReplyDelete
  60. இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

    அறிமுகப்படுத்திய அக்காவுக்கு நன்றிகள்.

    மலர்கண்காட்சி,கனிக்கூட்டம் வரிசையில் இந்த வேடந்தாங்கல் பறவைகளும் அழகு.

    ReplyDelete
  61. மகளே தமிழ்.

    சொல்ல வார்த்தைகள் இல்லை.

    அழகோவியமாய் திகழ்கிறது இந்த நான்காம் நாள் பதிவு.

    எப்போதும் போல் இன்றும் கலக்கிட்டீங்க போங்க ரகம்.

    //ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்//

    தனியா வா இருக்கு உனக்கு. எங்களை பார்த்தா வானரமாவா தெரியிது..

    ReplyDelete
  62. //எழுத்துக்கள் வெளிக்கொணரப்பட்டால் வலையுலகத்தில் ஒரு வெளிச்சம் மறைந்திருந்ததை அறிவோம். //

    இப்படி உசுப்பேத்தி..உசுபேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறாங்கப்பா.

    ReplyDelete
  63. //எதையும் தாங்கும் இவரது பக்குவம் எனக்கென்று வருமோ தெரியாது என்னை சமாதானப்படுத்தி தேற்றும் என் அம்மா இவன்...//

    நா..அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

    நீ வைத்த ஐஸில் எனக்கு ஜன்னியே வந்து விட்டது.

    அவ்வ்வ்வ்வ்!!!

    ReplyDelete
  64. ஜெஸ்வந்தி அக்காவின் ரசிகன் நான்.

    அவரை பற்றி எழுதி பெருமை படுத்திய தமிழரசிக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  65. //யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல
    வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்,//

    தமிழரசி போல்..

    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.
    உண்மை,வெறும் புகழ்ச்சியில்லை,

    ReplyDelete
  66. உங்க அன்பு தம்பி சுரேஷ்குமார நான் நேர்ல பார்த்திருக்கேன்!

    சும்மா சினிமா ஸ்டார் கணக்கா இருக்காரு!

    ReplyDelete
  67. வணக்கம் தமிழரசி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.என்னைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.தொடரட்டும் நம் நட்பு.

    ReplyDelete
  68. ஆறாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  69. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  70. சிறப்பானா அறிமுகங்கள் தோழி
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  71. முனைவர் சே.கல்பனா said...
    வணக்கம் தமிழரசி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.என்னைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.தொடரட்டும் நம் நட்பு.

    நல்வார்த்தை சொன்னீர்கள் கல்பனா தொடரட்டும் நம் நட்பென்று... நன்றி

    ReplyDelete
  72. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    அக்கான்னு சொன்னா அடிவாங்க போறீங்க நீங்க வேணாம் அழுதுடுவேன்...ஹிஹிஹி...//

    அந்த கடமைத்தான் நாங்க செய்கிறோமே உங்கள் உதவியால்!!

    ஹஹஹ்ஹ நல்லா அழுங்க...

    ReplyDelete
  73. gayathri said...
    ama en photo poda porenu neen eaan amma sollala

    ada antha mail photo sonnen

    rompa azaka iruku da

    ரொம்பத்தான் லொல்லு..வாலுப்பெண்ணே...

    ReplyDelete
  74. gayathri said...
    sandhya said...
    நான்காவது நாள் தானே uncle...


    ithai naan vanmayaka kanikiren

    thagachi

    ஹஹஹ அண்ணாவை அங்கிளுன்னு சொன்னதும் கோவமா? சின்னப் பொண்ணு தானே...

    ReplyDelete
  75. த.ஜீவராஜ் said...
    மிக்க நன்றி தமிழரசி அவர்களே
    நன்றி குணா

    நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியவிதம் அருமை..

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    பாராட்டுக்கு நன்றி ஜீவா...

    ReplyDelete
  76. ஜெஸ்வந்தி said...
    உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்றி தோழி. இத்தனை பேரை அறிமுகம் செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருப்பீர்கள். நன்றி என்ற ஒரு சொல்லில் முடித்து விட முடியாது. ஆனால் உங்களைப் புகழ்ந்து கவிதையும் எழுதத் தெரியாது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    உண்மை வெறும் புகழ்ச்சியில்லை...

    ReplyDelete
  77. அபுஅஃப்ஸர் said...
    //ஜெஸ்வந்தி said...
    உங்கள் அழகான அறிமுகத்துக்கு நன்றி தோழி. இத்தனை பேரை அறிமுகம் செய்ய நீங்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருப்பீர்கள். நன்றி என்ற ஒரு சொல்லில் முடித்து விட முடியாது. ஆனால் உங்களைப் புகழ்ந்து கவிதையும் எழுதத் தெரியாது
    //

    அந்த முயற்சி செய்திடாதீங்கோ அப்புறம் பதில் கவிதை வந்துவிடும் ஹா ஹா

    ம்ம்ம்ம்ம் எல்லாருமே ஒரு மார்க்கமாத் தான் இருக்கீங்க பராபட்சமில்லாமல் என்னை போட்டு தாக்குங்க...

    ReplyDelete
  78. பிரியமுடன்.........வசந்த் said...
    //sandhya said...
    நான்காவது நாள் தானே uncle...//

    சந்தியாவுமா பின்னூட்டம் போடுது

    யப்பா! நமக்கு ஒருவாட்டி கூட பின்னூட்டம் இட வில்லை பாத்தியா உங்க அம்மான்னா பின்னூட்டம் போடுவியா எங்களுக்கு கிடயாதா?

    ஆமா என்னமோ சந்தியா என்னை பாராட்டுவது மாதிரி சொல்லாத வசந்த்...அவங்க உங்க ப்லாக்குக்கு தான் ரசிகை..

    ReplyDelete
  79. sarathy said...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ஒரே ஒரு இடுகையை மாலைநேரத்தில் வெளியிடுங்களேன்.

    கடைசியில் வந்து பின்னூட்டம் போட
    வார்த்தைகளை தேட வேண்டியிருக்கு.

    நண்பர் நவாஸ் மாதிரி அலுவலகத்தில் இருந்தா பரவாயில்ல,
    தினம் தினம் கடலுக்குள்ள போயிட்டு வரவேண்டியிருக்கு...

    என் கவிதையால் மேடை அமைப்பேன்னு சொல்லிட்டு பெரிய மாநாடே நடத்துறீங்க...

    நடத்துங்க.

    காரெக்டா சொன்ன சாரதி.. நம்மாள எல்லாம் நவாஸ் மாதிரி இருக்கமுடியாது....அப்படி என்னப்பா கடலுக்குள்ள வேலை மீனா இல்லை முத்தா எதை தேடறேள்...

    ReplyDelete
  80. அ.மு.செய்யது said...
    இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

    அறிமுகப்படுத்திய அக்காவுக்கு நன்றிகள்.

    மலர்கண்காட்சி,கனிக்கூட்டம் வரிசையில் இந்த வேடந்தாங்கல் பறவைகளும் அழகு.

    என்ன இன்று அமைதியின் வடிவமாய் செய்யது என் தம்பித் தானா?

    ReplyDelete
  81. பிரியமுடன்.........வசந்த் said...
    மலர் கண்காட்ச்சி

    கனிக்கூட்டம்

    வேடந்தாங்கல்

    எப்படிங்க தமிழ் வித்தியாசமா அறிமுகப்படுத்திட்டீங்க சூப்பர்

    அட என்னயிருந்தாலும் உன்னை அடிச்சிக்க ஆளில்லையே வசந்த்...இப்ப எழுத்துக்களிலும் சும்மா அசத்தறீங்க...

    ReplyDelete
  82. ரங்கன் said...
    மகளே தமிழ்.

    சொல்ல வார்த்தைகள் இல்லை.

    அழகோவியமாய் திகழ்கிறது இந்த நான்காம் நாள் பதிவு.

    எப்போதும் போல் இன்றும் கலக்கிட்டீங்க போங்க ரகம்.

    //ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்//

    தனியா வா இருக்கு உனக்கு. எங்களை பார்த்தா வானரமாவா தெரியிது..

    எல்லாம் தூரமாயிருக்கீங்க என்ற தைரியத்தில் சொல்லிப்பூட்டேன்..ஹைய்யோ கடவுளே காப்பாத்தேன்....

    ReplyDelete
  83. ரங்கன் said...
    //எழுத்துக்கள் வெளிக்கொணரப்பட்டால் வலையுலகத்தில் ஒரு வெளிச்சம் மறைந்திருந்ததை அறிவோம். //

    இப்படி உசுப்பேத்தி..உசுபேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறாங்கப்பா.

    ஹஹஹ்ஹஹா ஏன்ப்பா இப்படி ரகசியத்தை அம்பலமாக்கிற...

    ReplyDelete
  84. ரங்கன் said...
    //எதையும் தாங்கும் இவரது பக்குவம் எனக்கென்று வருமோ தெரியாது என்னை சமாதானப்படுத்தி தேற்றும் என் அம்மா இவன்...//

    நா..அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

    நீ வைத்த ஐஸில் எனக்கு ஜன்னியே வந்து விட்டது.

    அவ்வ்வ்வ்வ்!!!

    அடப்பாவி நல்லதுக்கு காலமில்லை...

    ReplyDelete
  85. ரங்கன் said...
    //யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல
    வள்ளுவர் போல். இளங்கோ வைப்போல்,//

    தமிழரசி போல்..

    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.
    உண்மை,வெறும் புகழ்ச்சியில்லை,

    கொன்னுப்புடுவேன்....

    ReplyDelete
  86. ரங்கன் said...
    ஜெஸ்வந்தி அக்காவின் ரசிகன் நான்.

    அவரை பற்றி எழுதி பெருமை படுத்திய தமிழரசிக்கு நன்றிகள் பல.

    பாவிப்பயலே சாட்டிங்ல நானுன்னு சொன்ன.....ஹிஹிஹி நம்ம கிட்ட வச்சிக்காத எப்படி மாட்டிவிட்டேன் பார்...

    ReplyDelete
  87. வால்பையன் said...
    உங்க அன்பு தம்பி சுரேஷ்குமார நான் நேர்ல பார்த்திருக்கேன்!

    சும்மா சினிமா ஸ்டார் கணக்கா இருக்காரு!

    சும்மாவா பின்ன என் தம்பி அழகில் என்ன மாதிரி....

    ReplyDelete
  88. RAMYA said...
    சிறப்பானா அறிமுகங்கள் தோழி
    வாழ்த்துக்கள்!!

    நன்றி ரம்யா...

    ReplyDelete
  89. sakthi said...
    ஆனால் இங்கு எனக்கு வாய்த்த தம்பி படையுடன் நான் அஞ்சி அஞ்சி வாழறேனுங்க....ஒன்று இரண்டு இல்லை கிட்ட தட்ட ஒரு ஐந்து வானரங்கள்
    அப்ப நீங்க அதுங்களுக்கு அக்காவான்னு உடனே கேட்டுடுவீங்களே....


    பின்னே கேட்காமல் இருப்போமா...

    சக்தி அவங்க கூட கூட்டணி வைக்காதே....

    ReplyDelete
  90. மிக்க நன்றி தமிழரசி! சில நாட்களாக வலைப்பதிவுகளை வாசிக்க நேரமிருக்கவில்லை காரணம் நாங்கள் சாத்வீகப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருப்பதுதான்."அனுபவத்தில்" அந்தப் போராட்டம் பற்றிய செய்தி பார்த்திருப்பீர்கள்.
    மீண்டும் நன்றி!
    மீண்டும் வந்து கலக்கும்வரை
    அன்புடன் தணிகாஷ்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது