மதனும் ஆட்காட்டி விரலும்
மதன்,
நாங்க அஞ்சுபேர் மதன். நான் நடுவில். ரெண்டு அக்காக்கள், ரெண்டு தங்கைகள். ("போச்சுடா.. ஆரம்பிச்சிட்டார்யா, வெண்ரு" வென.. மணிஜி, d.r. அசோக் மாதிரி ஆட்கள் செறுமிக் காட்டுவார்கள்...காதில் வாங்க வேணாம். சரியா?) நாங்க அஞ்சு பேரும் கையில் உள்ள விரல்கள் போல என எடுங்களேன்.
நான் நடு விரல். கட்டையும், ஆட்காட்டியும் அக்காக்கள். மோதிரமும், சுண்டும் தங்கைகள். அதாவது மற்றவர்களை விட நான் உசரம். இப்படித்தான் ரொம்ப நாளாக நினைச்சுக்கிட்டு இருந்தேன். இதற்கு ஆப்பு வைத்தாள் புனிதாக்கா. ரெண்டாவது அக்கா (ஆட்காட்டி).
இருவருக்கும் நடந்த சண்டையில் நான் சிலேட்டை வச்சு மண்டையில் போட்டுட்டேன். ரத்தம் வரும் என்றெல்லாம் அப்போ தெரியாது மதன். காப்பித்தூள், சீனி என என்னென்னவோ அணை போட்டு பார்த்தாள் அம்மா. ஜம்பம் பலிக்கலை. தையல் போட வேண்டியதாகிப் போனது.
அப்பா வந்ததும் 'முள் கிரீடம்' தரித்த இயேசுவை பார்த்து விட்டார். " சேந்தியில் இருந்த வாளியை இழுத்திருக்கா, மண்டையில் விழுந்திருச்சு" என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அக்கா (ஆட்காட்டி) கட்டுச்சோற்றை அவிழ்த்து விட்டாள். சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த அப்பா, நிதானத்திற்கு வந்தார்.
"வாடா" வென கை பிடித்து அழைத்துப் போனார். நடு ஹாலில் அமரச்செய்தார்(சம்மணம் கூட்டி). சகோதரிகளையும் அழைத்தார். "கையை கட்ரா" என்றார். நானும் விவேகானந்தர் சைசுக்கு கட்டி வைத்தேன். ஒரு சாதனத்தை எடுத்து அக்காவிடம் கொடுத்தார். (சாதனமா?.. தென்ன ஓலையின் நடுவுல குச்சி இருக்கும்ல பாசு... எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கட்டி வச்சுருப்பாங்களே...அட, வீடு கூட கூட்டுவாங்களே...(ஹி..ஹி..இப்பவும் பெயர் சொல்ல கூச்சம்தான் மதன்)
"நச்சுன்னு நடு மண்டையில் போடு" என்றார்.
அக்கா அழத் தொடங்கிவிட்டாள். மற்ற சகோதரிகளும்! ஏன்...அம்மாவும் கூட! "நீ போடலைன்னா நான் போடுவேன்" என்றார். அக்கா பொத்தினாப்பில் போட்டாள். "இதுவா நச்சு?" என்றவர், "சத்தம் எனக்கு கேட்கணும்" என்றார். ஏழெட்டு அடி அக்கா அடித்துப் பார்த்தாள். அப்பாவிற்கு திருப்தியாகல போல. சாதனத்தை வாங்கிய அப்பா, போட்டார் ஒரு போடு.
சித்தம் கலங்கிப்போனது.
"நாலு புள்ளைகளும் எனக்கு எப்படியோ, அப்படித்தான் நீயும்" என்றார். அன்று தொட்டு இன்று வரையில் விரல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மதன். எந்த விரல் நான் என? (சித்தம் கலங்கியதால் கூட இருக்கலாம்).
அப்படி, ரியாத்திற்கு பயணமான ஒரு நாளில், காரில்... சும்மா அசால்ட்டா, உங்க 'உறங்கி விழித்த வார்த்தைகளை' கையில் எடுத்தேன். பயணத்தில் இருப்பது, கூட வந்த பிலிப்பினோ நண்பர்கள், முன்பு பார்த்த ரோடு, பாலை, ஒட்டகங்கள், பெட்ரோல் பல்க், இப்படி எல்லாமே out of focus ஆக தொடங்கியது.
அக்காவும், அப்பாவும் அடித்தது போல் அடித்துக் கொண்டே வந்தீர்கள். அதே சாதனம். அதே அடி.
ஒரு கவிதையில் இருந்து மற்றொரு கவிதைக்கு தாவ இயலவில்லை. மூணரை அல்லது நாலுமணி நேரம் ஆகும் கோபாரில் இருந்து ரியாத்திற்கு. தொகுப்பும், அதிர்வும் முடிஞ்ச பாடில்லை. ரியாத்தில் இறங்கியதும், அழை பேசியில் உங்கள் குரல் கேட்டதும் தான் ( அந்த நேரத்தில் அவ்வளவு தேவையாக இருந்தது உங்கள் குரல்) உதறல் சமனுக்கு வந்தது. முதல் தொகுப்பாயா இது உமக்கு?
hats off madhan!
***
சரி, இனி தொகுப்பிற்கு வரலாம்.
"அன்றாடங்கள் பரிசளிக்கும் கோபம், பரிதாபம், இயலாமை, ஆற்றாமை, இன்ன பிற போன்றவைகளக் கொட்டி வைக்க கவிதைகளை விட தோதான இடம், பாதுகாப்பான இடம் வேறேதும் இருக்க முடியுமா?" என்கிற உங்கள் 'என்னுரை' கேள்வி ரொம்ப பிடிச்சிருந்தது.
"மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுக துக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும், இந்த தொகுப்பில் என்னை கவர்கின்றன." என்றும், இன்னும் அழுத்தமாகவும், ஊடுருவும் திறனோடும் கவிதைகளை அணுகி இருந்த வா. மணிகண்டனின் முன்னுரை பார்த்து ஒரு மாதிரியான கிடு, கிடு எனக்கு.
இனி, இவரின் மூன்று கவிதைகள் ("என்னடா இவருக்கு மட்டும் மூணு?" என்று கேட்கலாம் லா & வி! போகட்டும்...கடைக்குட்டி! means, கடைசி புத்தகப் பார்வை...)
***
குறிப் பிறழ்வும் குப்புற படுத்தலும்
அவசரமாய் பகுடர் அப்பி
உதட்டில் இழுக்கியிருக்கும்
அடர் சிவப்பு கன்றாவி தொட்டெடுத்து
நெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்
தொழிலுக்கு முதல் போடுகிறார்கள்
ஒரு ஆறேழு திருநங்கைகள்.
பிறழ்ந்த குறியால்
நிகழ்ந்த குற்றத்தை
கழுவ வழியில்லாக்
கேடு அவர்களுக்கு.
சமூகம் செத்தால் சாகட்டும்.
பெற்றவர்களும் புறந்தள்ளிய வலி
குப்புற படுத்தெந்திருப்பதை விட
அதிகமில்லை.
***
இன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா ?
வெயிலில்லாத இன்று காலையில்
நான் காற்றடித்ததை பார்த்தேன்.
ஓடி வந்து கட்டிக் கொண்ட
குழந்தையை ஒத்து
மெதுவாய் துவங்கி
ஆவர்த்தன வேகமெடுத்து
ஆச்சரியம் சுரந்தூரியது எனக்குள்
உங்களுக்கு தெரியாது...
எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இன்று காற்றடித்தது என்று
அதுவும் அத்தனை இதமாக
அத்தனை மிருதுவாக
சுற்றியிருத்த செடி கொடி மரங்களின்
காற்றுக்கு ஆடும் தன்மை
எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
அவைகளும் சந்தொஷித்தன
காற்றைக் கண்டு
எப்படி வளர்ந்து விட்டது
தெரியுமா அது
இத்துனூண்டில் பார்த்தது
அப்படியே பாவாடையைப்
பரப்பிக் கொண்டு வந்து
இருப்பது இல்லாதது
என்று எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது.
காற்றை நோக்கிய
இன்று காலைய புன்னைகதான்
என்னுடைய மிக அழகானதாக
இருக்கக் கூடும்.
அதுசரி...
நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் காற்றை பார்த்தீர்களா?
***
பாடம்
சொட்டிச் சொட்டி
வீணாகாமல் இருக்க
நீர்க் குழாயின் கைப்பிடியை
இறுக்கி இறுக்கி
மூடி வைத்ததிலோ என்னவோ
திடீரென ஓர் நாள்
மரை தளர்ந்து விட்டது.
குழாயை மூடுகையில்தான் புரிகிறது
எந்தப் புள்ளியில்
இறுக்குதல் நிறுத்தப்பட்டிருந்தால்
நீரும் ஒழுகாது
மரையும் மழுங்காது
என்பது.
***
ஆயிற்று. இன்னும் கைவசம் காந்தியின் கூர்தலறம் பாக்கி. இன்னும் வாசிக்கலை என்பதால் பகிர இயலாது. வாசித்ததும் பகிரலாம்.
"நம்மாளுங்களும் அச்சில் பார்க்கட்டும் அவர்கள் எழுத்தை" என நினைத்த, முனைந்த, நண்பர்/பதிவர்/பதிப்பகர் வாசு (எ) அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா!
பதிவ நண்பர்களான நர்சிம், கேபிள்ஜி, பரிசல் தொகுப்புகள் நண்பர் சரவணனிடம் இருக்கிறது. அவர் வாசித்து, கைவசம் வந்ததும் பகிர விருப்பம். பார்க்கலாம். எல்லாம் கூடி வரட்டும்.
சரி மக்கா, நாளை பார்க்கலாம்...
***
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Wednesday, June 30, 2010
Tuesday, June 29, 2010
வலைச்சரம் - மூன்றாம் நாள் - புதன்
வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும்
கோவில் மிருகம்! (என்னா தலைப்பு பாஸ்!)
அழகர்சாமி தாத்தா பெரிய இக்கு பிடிச்ச மனுஷன் என்று அப்பாதான் அடிக்கடி சொல்வார். அப்பாவிற்கு ஒரு வேலை சொல்லியிருக்கிறார் தாத்தா. செய்ய தவறி இருக்கிறார் அப்பா. ஏன் என்று கேட்டதற்கு அப்பா சிரித்துக் கொண்டே ஏதோ மழுப்பி இருக்கிறார். அப்பதான் அப்பாவிற்கு இந்த கதையை சொன்னாராம் தாத்தா.
ஒரு அன்றாடங்காய்ச்சி. தனியன். அன்று வயித்துப் பாடு ஓடி அடையவில்லை, இரவு வரையில். மண்பானை நீரை மொண்டு குடிச்சு, வயிறு நிறைப்பி படுத்துவிட்டான். குடிசை வீடு. அங்கும் இங்குமாக கூரை விலகியதில் நிலவொளி வீட்டிற்குள் சிந்திக் கிடக்கிறது. கண்ணயரும் நேரத்தில் கூரையில் ஏதோ சத்தம். விழித்துப் பார்க்கிறான். கயிறு போட்டு திருடன் ஒருவன் இறங்கிக் கொண்டிருக்கிறான்.
தனியனுக்கு மனசிற்குள் கெக்கலிப்பு. "தாய்லி, நம்ம வீட்லயும் திருட ஒருத்தன் வர்றானேயா?" என்பதாக. "வாடி, வா.." என்று இருட்டுக்குள் படுத்திருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான். இறங்கிய திருடன் அங்குமிங்குமாக தேடியதில் ஒன்றும் சிக்கவில்லை. கடைசியாக அடுக்கு பானையை உருட்டுகிறான். கைப்பிடி கேப்பை(கேழ்வரகு) அதில் இருக்கிறது. கொண்டு போக எதுனா கிடைக்குமா என தேடுகிறான். சிந்திக் கிடக்கிற நிலவொளியை, துணி என நினைத்து அதில் கொட்டுகிறான். துணியை முடிஞ்சு முடிஞ்சு பார்த்துக் கொண்டிருந்த திருடனை பார்த்ததும் சிரிப்பு அடக்க முடியவில்லை தனியனுக்கு. வாய் விட்டு சிரித்து விடுகிறான்.
ஸ்தம்பித்த திருடன், இருட்டில் கிடந்த தனியனை பார்த்து சொன்னானாம்," வீடு வச்சுருக்கிற லெச்சனத்துக்கு சிச்சுக்கிறீர்களோ?"
இந்த அழகர்சாமி தாத்தாவின் தொணியை , அப்படியே விநாயகத்தின் கவிதைகளில் பார்கிறேன். எள்ளல், நையாண்டி, நமுட்டு சிரிப்பு, ஊம குசும்பு, இப்படி எல்லாவற்றையும் எட்டு பத்து வரிகளுக்குள் நிகழ்த்தி விடுகிறார். உண்மையில் வாசிக்கிற எனக்கு அவ்வளவு வலி ஏற்படுத்துகிறது. அவ்வலியில் இருந்து விடுபடவென விரக்தியாக சிரிக்கிறேன். பாருங்களேன், வலி ஒரு வகையான அனுபவம் எனில், எதிர் வினையாக எப்படி என்னால் சிரிக்க முடிகிறது? இந்த முரண்தான் நூலாசிரியரின் வெற்றியாகிறது.
மனித நேயமிக்க கோவில் மிருகம் என்று தொடங்குகிற கவிஞர் நிலா ரசிகன், என். விநாயக முருகனின் கோவில் மிருகம் நம் கண்முன்னே நடக்கும் அவலங்களை, நாம் மறந்து விட்ட மனித நேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது. எள்ளல் தன்மையுடன் எழுதப் பெற்றாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழலும் வலி வாசகனையும் முழுவதுமாக ஆட்கொள்ளுகிறது" என்று முன் வைக்கிறார்.
"கவிதைக்கான பாடு பொருளுக்கு நான் அதிகம் சிரமப் படவில்லை. பெரு நகரில் அலையும் முகம் தொலைத்த மனிதர்கள், மின்சார ரயிலில் பிச்சை எடுக்கும் சிறுமி, தொலைகாட்சி அபத்தங்கள், முடிவற்று நீளும் இரவு நேர பெரு நகர சாலைகள் என்று அன்றாடம் கவனிக்கும் எளிய அவதானிப்புகளை பாசாங்கு இல்லாமல் கவிதைக்குள் இழுத்துக் கொண்டேன்." என்று முன்னுரையில் பேசுகிறார் நூலாசிரியர்.
இந்த பாசாங்கு இல்லாமல் என்கிற வார்த்தையை மனசில் இருந்து எடுத்திருக்கவேணும். மனசில் இருந்து எடுக்கிற எதுவும் எளிதாக மனசுகளுக்கு கடத்த முடியும். இல்லையா?
இது நூற்றுக்கு நூறு நிகழ்ந்திருக்கிறது விநாயகம்!
இனி, இவரின் இரண்டு கவிதைகள்,
***
பூங்குழலி
மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்
பூ முடித்தால் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத்
தேனருவியென்று தொடங்கினாள்
தேனருவியின் வேகம் குறைந்தது
அம்மம்மா தம்பி என்று நம்பி
அடுத்த பாடல் பைசா பெறவில்லை
பூங்குழலி அசரவில்லை
மூன்றாவது பாடல் பாடினால்
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே
வரிசையாக பாடினால்.
திடீரென நிறுத்தினாள்
இரண்டு நிமிடம் கனத்த மௌனம்
பாட்டு தீர்ந்துவிட்டதா
பதறிப்போனது எனக்கு.
சற்று நேரம் தயக்கம் அவளிடம்
என்ன நினைத்தாளோ
பூங்குழலி உற்சாகமாய் பாடினாள்
பூ முடித்தால் இந்தப் பூங்குழலி
புதுச்சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்
நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை.
***
குடைக்காம்பு
அப்பாவின் மரணத்திற்குப்பின்
புது வீடு மாறி வந்ததில்
இடப் பிரச்சினை நிறையவே.
தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள்
கந்தல் துணிகள்
பழைய வாரப்பத்திரிக்கைகள்
யார் யாரோ அனுப்பிய
திருமண அழைப்பிதழ்கள்
துருவேறிய டிரங்க் பெட்டியொன்று
கூடவே முன்பொருநாள்
அம்மாவை அடிக்க
அப்பா பயன்படுத்திய
குடைக்காம்பு
எல்லாம் எடை போட்டு
சில்லரை வாங்கியதில்
குடைக்காம்பு மட்டும்
செல்லாதென்று திருப்பி தந்தான்
பழைய பேப்பர்க் காரன்
அம்மாவும் ஏனோ
அன்றைக்கும் தடுக்கவில்லை.
(உண்மையில், இந்த கவிதை வாசித்ததும் அழுதேன் விநாயகம்)
***
இத்தொகுப்பிற்கான சிறப்பான பார்வையை "இங்கு" பதிந்திருக்கிறார், கவிஞர் நாவிஷ் செந்தில்குமார்.

Monday, June 28, 2010
வலைச்சரம் - இரண்டாம் நாள் - செவ்வாய்
நீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்
நினைத்தது போல் ஒரு கவிதையை எழுதி முடிக்கிற சந்தோசத்தை விட, ஒரு கவிதையின் வாசிப்பில் நினைத்து பார்க்க முடியாத சந்தோசம் கிடைக்கிறது. அந்த சந்தோசத்தை, அனுபவத்தை அப்படியே பகிர முடிஞ்சதில்லை. சரி, நீங்களே சொல்லுங்களேன்..எப்படி பகிரலாம் சந்தோசத்தை? சட்டென ஒரு தேக்க நிலை, தலை சொறிவு நேர்கிறதா? இதே பிரச்சினைதான் எனக்கும்.
கவிதையில் என்னால் இதுவரை குறை கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அதாவது குறை என்று சொல்ல தெரிந்ததில்லை. "ஆம்புள்ள அத்தான் ஆவர்களுக்கு" என்று வருகிற லதாவின் கடிதத்தை, அன்புள்ள அத்தான் அவர்களுக்கு என்று ஆட்டோ மேட்டிக்காக கன்வர்ட் செய்து கொள்ள முடிகிறது. மனசு கொண்டு பார்த்தால் அ-னா, ஆவன்னா ஆகிறது. ஆவன்னா அ-னா ஆகிறது. இதை நீங்கள் என் பலம் என்றால், அதை நான் என் பலஹீனம் என்கிறேன். இதை நீங்கள் என் பலஹீனம் என்றால் வேண்டும் என்றே கூட அதுவே என் பலம் என்பேன்.
இப்ப நீங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இவனால், கவிதைகளுக்கு விமர்சனம் பண்ண முடியாது / தெரியாது என. இதுவே எனக்கும் வேணும். இந்த என் குறை அல்லது நிறை ரொம்ப சந்தோசமானது எப்ப தெரியுமா?
நேசன் தளத்தில், அண்ணன்/கவிஞர் ராஜசுந்தரராஜன் இப்படி உடைக்கிறார், "ஒரு கவிஞன் ஒரு நாளும் விமர்சகன் ஆக முடியாது. ஆகி விட்டால் அவனுக்கு கவிதையை பற்றி ஒரு இழவும் தெரியாது என்பதே சத்தியம். ஆனதினால், அதில் வரும் வார்த்தைகளை கொண்டல்லால் விளக்குவதற்கு வேறு வழி ஒன்னும் இல்லை" என்றதை வாசித்த போது, "என்னைப் பெத்தாரு" என்று அண்ணனை மானசீகமாக இரு கன்னம் வழித்து சொட சொட வென சொடக்கிக் கொண்டேன்.
அண்ணனை சொடக்கிக் கொண்டது போலவே, 'நீர்க்கோல வாழ்வை நச்சி' வாசித்து நிறையும் போது தங்கை லாவண்யாவின் கன்னங்களையும் அதே மானசீகமாக வழித்து சொடிக்கிக் கொண்டேன்.
அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தனித்தனி சொடுக்கா இருக்கு?
இவ்வளவுதான் இத்தொகுப்பு குறித்த என் பார்வை, விமர்சனம், அனுபவம்.
ஆதர்சர்களில் ஒருவரான கலாப்ரியா,"அன்பு, ப்ரியம், சிநேகம், ஆகியவற்றுடன், அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்த தொகுப்பு. அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது" என்று தொடங்கி தருகிறார்.
"எழுதுவதற்கான சூழலை வாய்க்க செய்து, மறு அன்னையாய் என்னை கவனித்துக் கொள்ளும் கணவர் மனோகரன், அன்பான அம்மா மனோன்மணி, பாசத்திற்குரிய வனிதா அக்கா, எனது பிரியங்களை உணர்த்த முடியாமல் போய்விட்ட அப்பா சுந்தரராஜன், என் நினைவில் வாழும் சித்ரா அக்கா, ஆகியோருக்கு துளி கண்ணீருடன் கலந்த அன்பு" என்று நூலாசிரியரும் கசியும் போது (purpose-ஆகவே இங்கு தங்கையை விலக்குகிறேன்) பின்வரும் கவிதைகளின் அடர்த்தி தொடங்க தொடங்குகிறது.
இனி, இவரின் இரண்டு கவிதைகள்...
***
என்னிடமிருந்து
நீ பறித்தெறிந்த வெட்கத்தை
திரைச்சீலை சூடிக்கொண்டது
விரலில் தொடங்கி விரல்வரை
முடித்திருந்த முத்தங்கள்
உயிரோடு முடிந்திருந்தது.
பாதியில் நீ முணுமுணுத்த
பாடலொன்று மீண்டும் மீண்டும்
எனக்கானதாகிப் போனது.
மிகப் பிடித்த மலரொன்றின் மணம் போல
உன் பாரம் என் மனதை
கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.
உன் மூச்சை உள் வாங்கி
ஒரு மோன நிலையில்
நான் இறந்திருந்தேன்.
மறுபடி நான் கண் விழ்த்தபோது
உன் பெயரை மட்டும்
உச்சரித்துக் கொண்டிருந்ததாகவும்
விழியில் வழிந்திருந்த துளி நீரை
நீயே துடைத்து விட்டதாகவும்
"ஏன் அழுதாய் என்றாய்?"
திரைச்சீலையிடமிருந்து வெட்கத்தை
மீண்டும் அள்ளியெடுத்துக் கொண்டு
"அழுதேனா என்ன?" என்றேன் சிரித்தபடி.
***
எதிர்பாராத நேரத்தில்
விசிலடிக்கும் குக்கருக்கும்
எதிர் பார்த்தே ஆனாலும்
கண் அயரும் ஒரு கணத்தில்
கூவும் இரயிலுக்கும்
குளியல் அறையில்
திடுமெனக் குதித்து
அகால ஒலியெழுப்பும்
குழாய் நீர்களுக்கும்
பண்டிகை தினத்தில்
எதிர்பாராத தருணங்களில்
வெடிக்கும் பேரொலிக்கும்
தினம் தினம் பயணித்தும்
வாகன முந்துதலில்
திடீரென நிறுத்தப்படும்
வாகன அதிர்வுகளுக்கும்
எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழுகுவதில்லை.
***
இக்கவிதை நூல் குறித்தான மிக சிறப்பான விமர்சனத்தை நந்தினி, லாவண்யாவின் தளத்தில் வைத்திருக்கிறார்கள். அதை வாசித்த போது எனையறியாது பொங்கி, பொங்கி வந்தது...அது, இங்கு.
இதே போல், நண்பர் நிலாரசிகனின், இத்தொகுப்பிற்கான நேர்மையான விமர்சனம் இது.

Sunday, June 27, 2010
வலைச்சரம் - முதல் நாள் - திங்கள்
வணக்கம் சீனா சார்!
நல்லாருக்கீங்களா?
ஒரு வாரத்திற்கு, நண்பர்களுடன் நண்பர்களாக அமர்ந்து கொண்டு பேசுவதற்கு இவ்வளவு பெரிய வீட்டை ஒதுக்கி தந்ததற்கு ரொம்ப நன்றி சார்!
"முதல் நாள் உங்களைப் பற்றியும், உங்கள் தளம்/இடுகை பற்றியும் பேசிக் கொள்ளலாம்" என சொன்னீர்கள்தான். 'இங்கு' ஒரு பட்டனை அமுக்கினா அங்கு போய் விழுந்திரலாம். அப்புறம் எதுக்கு சார் அங்குள்ளதை இங்கு பேச?
பத்திரிக்கை வச்சதும் ரொம்ப சந்தோசமாய் இருதது சார். போலவே, சற்று குழப்பமும். சந்தோசம் - "அட நம்மையும் சீனா சார் கூப்பிடுறாரே" என்பது. குழப்பம் - "யாரைப் பேச, யாரை விட?"
மாப்ள மதார் சிக்கந்தர் குடும்பம் மாதிரி ஆகிப் போச்சு சார், நம்ம குடும்பமும். மதார் சிக்கந்தருக்கு கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் பத்து பேர். இவனையும் சேர்த்து பதினொன்னு. "மாப்ள, ஒரு கிரிக்கெட் டீமே வீட்ல இருக்கீகளேடா" என்போம். திருமணத்திற்கு அழைப்பு வைக்கிற எல்லா நண்பர்களும் அனேகமாக சொல்வதுண்டு, "மாப்ள பத்திரிக்கை உனக்கு மட்டும்தான், குடும்பத்திற்கு இல்லை. மறு உலை வைக்க வச்சுராத மாப்ள" என்று. மாப்பிள்ளை சிரிப்பான். மாப்பிள்ளைகள் பேசி, மாப்பிள்ளைக்கு ஒரு போதும் வலிச்சதில்லை. அப்படி வலிச்சா அவன் மாப்பிள்ளையா?
போலவே, அப்பா, சித்தப்பா, சித்தப்சு, மாமா, மாம்சு, அண்ணா, அண்ணே, பங்காளி, பங்கு, என்ற குய்யோ முறையோ குடும்பஸ்தன் சார் நான். ஒரு குரல் விட்டால், குரல் குரல் குரல்... என எக்கோ வரும் குடும்பஸ்தன்.
ஒண்ணு செய்யலாம் சார்,
படிக்கிற காலத்தில், தலையணையை நெட்டு வாக்கில் உடம்பு சைசில் வச்சு, பொத்தினாப்ல போர்த்தி, சுவர் ஏறிக் குதிச்சு, செகன்ட் சோ பார்க்கப் போறது போல வாரேன். குடும்பத்திற்கு தெரியாமால் பார்த்துக்கிறது உங்க பொறுப்பு.
தீர்மானத்திற்கு வந்துரலாம் சார்!
இந்த ஒரு வாரம் நான் இதைத்தான் செய்யப் போறேன். நண்பர் சரவணன் ஊரில் இருந்து வரும் போது, மணிஜீ வாங்கித் தந்த முறுக்கு சீடைகளுடன், நம் பதிவ நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்தார். முதல் மூன்று நாள் அக்குழந்தைகளை கையில் எடுக்கிறேன். பிறகு நாலு நாள். தினம் ஏழு பேர் என இருபத்தி ஒருவர் பற்றி பேசலாம் என்பதாக அபிப்ராயம்.
இவ்வளவும் குடும்பத்திற்கு தெரிய வேணாம் சார். குய்யோ முறையோ என்ற என் குடும்பத்திற்கு. மதார் மாப்பிள்ளைக்கு சொல்றதுதான் சார் உங்களுக்கும்.
மறு உலை வைக்க வச்சுறாதீங்க சீனா சார்.
மீண்டும் நன்றி சார்!

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் தேவா, ஏற்ற பொறுப்பினை, மன நிறைவுடன் சிறப்பாகச் செய்து முடித்து நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 190 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல பதிவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார். அனைத்து அறிமுகங்களுமே புதிய பதிவர்கள்.
நல்ல முறையில் பணி நிறைவு செய்த நண்பர் தேவாவினை, வலைச்சரக் குழுவினர் சார்பினில், நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி, விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பா.ராஜாராம். இவர் கருவேலநிழல் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். பா.ரா என அன்புடன் அழைக்கபப்டுகிறார். தமிழ் மணம் விருதுகள் 2009ல் படைப்பிலக்கியம் பிரிவினில் தகப்பனாக இருப்பது இடுகைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். ஏறத்தாழ 140 இடுகைகள் இட்டிருக்கிறார். 2009 ஜூன் முதல் எழுதி வருகிறார். ஏறத்தாழ 300 பதிவர்கள் இவரைப் பின் தொடர்கின்றனர். கவிதைகள் அருமையாக எழுதுவார்.
நண்பர் பாராவினை வருக வருக - ஏற்ற பணியினை நன்கு நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில், வலைச்சரம் குழுவினர் சார்பினில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நட்புடன் சீனா

ஒரு சாந்தமான ஞாயிறுக்கிழமையில்......!
ஊனாய், உயிராய், ஜீனாய், ரத்தமாய், திசுக்களாய்,குணாதிசயத்தை நிர்ணயிக்கும் குரோமோசோம்களாய், எம்முள் விரவியிருக்கும் எம் மூதாதையர்களுக்கும், நித்தம் சுவாசிக்கும் பிராணின் மூலம் எம்மின் மூளை செல்களின் நினைவுப்பகுதியை செவ்வனே இயக்கி அங்கிருக்கும் செல்களுக்கு உயிரூட்டி நல்ல நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் எம்மைச் சுற்றியிருக்கும் பிரணனுக்கும், தொடருந்து வந்து என்னை பின்னூட்டமென்னும் நெருப்பின் மூலம் ஊக்குவித்த என்னை ஆதரிக்கும் தம்பிகள், நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனித்து, மறைந்து, மறைந்து, ஜனித்து என்று ஒரு இடைவிடாத ஒரு ஆட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஜனிப்பும் மறைதலின் மாறுவேசம். வாழ்வியல் நெறி போலவே...கடந்த ஞாயிறென்று ஜனித்து... வளர்ந்து... இந்த ஞாயிறு வலைச்சரத்தின் ஆசிரியர் பணியை நிறைவு செய்யும் போது...வாழ்க்கையின் ஒரு சிறு முன்னோட்டம் போலத்தான் எனக்குப் படுகிறது. எல்லா பயணங்களும் ஆர்ப்பட்டமாகத்தான் தொடங்கும்...கூச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஒரு அழகும் சந்தோசமும் இருக்கும் . காணும் இலக்கின், காட்சியின் சந்தோசத்தை விட... பயணத்தின் போது ஏற்படும் ஒரு மகிழ்ச்சி அதிகமாய் நெஞ்சு நிறைத்திருக்கும். இலக்கு நோக்கிய பயணத்தில்தான் மகிழ்ச்சி.....!
ஆர்ப்பாட்டமாய் தொடங்கிய வலைச்சர கடந்த ஞாயிறு....இன்று...மனதிலொரு அமைதியையும் நிதானத்தையும், பொறுமையையும் கொடுத்து இருக்கிறது. ஏன்? என்ன வென்று சொல்லத்தெரியவில்லை. என்னுடைய வலைப்பக்கத்தில் கூட 75 கட்டுரைகளிலும் எதோ சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்...இதுவரை சொல்ல நினைத்தது வெளியே வரவில்லை....அது வரும் வரை...எழுத்தும் தொடரும் என்று நினைக்கிறேன்.....! சரி....சரி..சுயபுராணாம் நிறுத்து...அறிமுகங்கள் எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்....இதோ.....
நான் 9 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்று அறிமுகம் செய்து கொண்டு நேற்று தனது இரண்டாவது இடுகையை வெளியிட்டிருக்கும் தம்பி யார் வேண்டுமானாலும் உதவட்டும் இவருக்கு, ஏதோ எழுதட்டும் ஆனல் ஒரு 13 அல்லது 14 வயதில் எழுத வந்திருக்கும் சிறுவனைப்
பாராட்டமல் இருக்க முடியாது.
நேற்றுதான் வலைப்பூ தொடங்கினார் இவர் முதல் கட்டுரைதான் எழுதியிருக்கிறார் ஆனால் எழுத்தின் வீச்சில் ஏதோ சாதிக்கப் போகிறார் என்பது மட்டும் எனக்கு பிடிபட்டது. நீங்கள் வேண்டுமானால் போய்பாருங்கள் இவர் ஏதேதோ பேசுவார் உங்களிடம் சுவாரஸ்யமாக.....
இவர் டாகுமெண்ட்ரி படம் எடுக்கும் இயக்குனர் அல்ல...! ஜனரஞ்சகமான ஒரு இயக்குனர்...ஆமாம் சென்டிமென்ட் இருக்கும், ஆக்ரோச சண்டை இருக்கும், காமெடி இருக்கும்..இதுதான் வரும் என்று கணிக்க முடியாத அளவிற்கு வாசிப்பாளனை சந்தோசப்படுத்த நினைக்கும் ஒரு கமர்சியல் பதிவர்தான் சுகுமார்ஜி.
காகித ஓடத்தில்
நம்மை பயணிக்கச் செய்யும் இவரின் கவிதைகளும் கட்டுரைகளும் நமக்குள் ஒரு ஏக்கத்தை வரவழைத்து விடுகின்றன. சப்தமின்றி நமக்குள் பிரளயத்தினை உண்ணு பன்ணக்கூடிய சக்தி மிகுந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரார்.
இவரின் வார்தைகளில் இருந்து பாயும் மின்சாரத்தை சந்தோசமாய் அனுமதித்து அனுபவியுங்கள்!
அரசியல் மற்றும் சமூக பார்வைகளை தம்மிடத்தே கொண்டுள்ள எரிதழல் , இயன்றவரை நடு நிலையான ஒரு நோக்கினை கொண்டிருக்கிறது. சுற்றி நடக்கும் அநீதிகளை தனது வார்த்தை நெருப்பின் மூலம் எரித்து விடய முயல்வது வாசித்துக் கொண்டிரும் போதே புலப்படும்.
யாரப்பா அங்கே...? இளைஞன் என்பதற்கு தவறான ஒரு வயது மதிப்பீடு வைத்திருப்பது...திருத்திக் கொள்ளுங்கள் அது வயது சம்பந்தமானது அல்ல மனது சம்பந்தமானது. சாமியின் மன அலைகள் உங்கல் அனைவருக்கும் ஊடுருவிச் செல்லட்டும். வாழ்க்கையின் அற்புதத்தை, சந்தோசத்தை எப்படி எல்லாம் நிறைவாய் வாழலாம் என்ற பாடத்தை கவனமாய் கற்றுத்தரும்.
ஈழத்திலிருந்து நிறைய தம்பிகள் அற்புதமாய் கவிதை சமைக்கிறார்கள். என்ன தம்பி எங்கே போய்ட்டு வந்தீங்கன்னு கேட்ட... இப்போதான் அண்ணா நைட் கிரிக்கெட் மேட்ச் விளையாடிட்டு வந்தேன் என்று சொல்லிக்கொண்டே...அற்புத கவிதைகளும் கட்டுரைகளும் சமைக்கிறார்க்ள். சந்தேகம் இருந்தால் இந்த தெருப்பாடகனிடம்
கேட்டுப்பாருங்கள்.
சூரியனின் வலைவாசலுக்கு
போனேன் அவர் புதிதாக எழுதிய ஒரு காதல் கவிதையை படித்தவுடன்....மீண்டும் ஒரு முறை பதின்மத்துக்குள் போகமாட்டோமா என்ற ஏக்கத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். அப்படி ஒரு இளமை துள்லல். வாசித்து விட்டு நீங்கள் காதலிக்கத் தொடங்குங்கள்...திருமணமானவராய் இருந்தால் மனைவியை..மற்றவர்கள்..உங்கள் இஷ்டப்படி.....
எல்லாம் சரிங்க.... சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுகள பாத்திருகீங்களா...? இவரின் படைப்பு முழுதும் உற்சாகம் கொப்பளிக்கும்....எப்பவுமே சந்தோசமாவே இருக்கிற ஒரு வாகையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். சீரியஸ் மேட்டரா இருந்தாலும்.....ஜாலியா சொல்லிட்டு போய்கிட்டே இருக்காருங்க....டெஸ்ட் பண்ணிப்பாருங்களேன்...ஹா..ஹா..ஹா எனர்ஜி பூஸ்டர்...இவர்!
இன்றைய அறிமுகங்களோடு எனது ஒரு வார ஆசிரியர் பணி நிறைவுக்கு வருகிறது. எனது பசிக்கு ஏற்ற இரையை வலைச்சரம் மூலம் திரு. சீனா ஐயா அவர்கள் கொடுத்தார்கள் அதே நேரத்தில் என் தந்தை ஸ்தானத்திலிருக்கும் திரு. சீனா ஐயாவை வலைச்சரமும் கொடுத்தது. எனவே இரண்டு பக்கமும் மகிழ்ச்சி.
திறமைசாலிகள் ஒவ்வொரு நொடியிலும் பிறந்து கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு விதமான தனித்திறமைகளுடன் பிரபஞ்சம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஏழு நாட்களிலும் எனக்கு கிடைத்த அனுபவம் என்னை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறது.
ஆக்ரோச பசியோடு வேட்டையாடுமாம் சிங்கம்...தன் இரையை அடைந்தவுடன் பசி தீர்ந்தவுடன்..சாந்த சொரூபியாய்..ஒரு தியான நிலையில் அமர்ந்து விடுமாம். அதற்குப் பிறகு எவ்வளவு பெரிய இரை வந்தாலும் சீண்டிப்பார்க்காதாம். அமைதியாய் தான் உண்ட இரையின் மயக்கத்தில் ஆனந்ததில் இருக்குமாம்....மீண்டும் பசி வந்தால் ஆக்ரோச வேட்டையை தொடங்குமாம். நான் இப்போது ஆனந்த மயக்கத்தில் இருக்கிறேன்.....இப்போது பசிக்க வில்லை...ஆனால் மீண்டும் பசி வருவது இயற்கையின் நியதி.....
எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது..!
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி...பணிவான நமஸ்காரங்களோடு.....விடைபெறுகிறேன்....!
அப்போ வர்ட்டா....!

Saturday, June 26, 2010
அட்டகாசமான சனிக்கிழமையில் ....அனுபவங்கள்...!
முதல் மூன்று நாள் படைப்புக்களை வெளியிட்டதற்கும் இன்று வெளியிடுவதற்கும் இடையே நிறையவே மனம் மாற்றமடைந்து இருக்கிறது. நல்ல வலைப்பூக்களை அறிமுகம் செய்வது ஒரு ஆத்மார்த்தமான பணி என்று என்னால் உணர முடிகிறது.
அறிமுகம் செய்யப்பட்ட புதிய பதிவர்களின் வலைப்பக்கங்களுக்கு நமது வாசகர்களும், சக பதிவர்களும் படையெடுத்துச் சென்று பின்னூட்டமிடல், தொடரல் என்று படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வுகளும் என் செவிக்கும் பார்வைக்கும் வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய் இருப்பது கண்டு நான் என் மனம் மேலும் உள் நோக்கிப் பயணிக்கிறது. படைப்புகளின் பிறப்பிடம் எது...?
அற்புதமாய் கவிதை சமைக்கிறது, கட்டுரையாய் கட்டியணைக்கிறது, ஒவ்வொருவரின் அனுபவத்திலும் ஒவ்வொரு விதமாய் வந்து ஒரு முகம் காட்டி படிப்பினையை கொடுக்கிறது, இந்த அனுபவத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து....உடம்பில் ஏறி அமர்ந்த உற்சாகம் சொடுக்கிய சாட்டையில் எங்கோ எட்டிப் பறக்கிறது மனம்.....! ஆனந்த ஒரு அனுபவமாய் போனது இந்த பணி....இதிலும் ஒரு காதலுணர்வு இருக்கிறது. ஆமாம் நல்ல படைப்புகளைக் கண்ட மனம் நாட்கள் கடந்து தன் காதலியைக் கண்டது போல குதிக்கிறது. பாரதி சொன்னது உண்மைதான்.....
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
வாருங்கள் உங்களையும் தலைமையின்பத்துக்குள் அழைத்துச் செல்கிறேன்......
ஒரு மழையின் பயணத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள் இவர். இவரின் தலைப்பே நம்மை தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அமைதிச் சாரல் ....மடிகனத்த மேகங்கள் சுமையிறக்கச் எங்கோ நகர்ந்து கொண்டிருக்கின்றனவாம். கவிதை செய்யும் பொழுதுகளில் எல்லாமே உயிர் பெற்று விடுகிறது என்பதை வாசிக்கும் போதே நம்மால் உணர முடியும்.
இவரை பாருங்கள் ஒரு கதை எழுதி அதில் ஒரு கருத்து சொல்லி....கருத்தில் சிந்திப்பை கரைத்து நமக்கு பார்வைகளுக்கு கொண்டு வருகிறார். ரொம்ப எதார்த்தமான கதை ஆனால் மிகப்பெரிய உண்மையை தன்னுள் புதைத்துவைதிருக்கிறது. இவர் வைத்திருக்கும் விளக்கம்
மெளனங்களின் மொழிபெயர்ப்பு....!தலைப்பே...கவிதைதான் ஆனால் நிஜத்திலும் அதைத்தான் இவர் செய்கிறார்.
இயல்பினை எழுதுவதும் இயல்பாக எழுதுவதும் சூழலை மனதுக்குள் கொண்டு வருவதும் ஒரு தேர்ந்த எழுத்துக்கான குணாதிசயங்கள். வினையூக்கி என்றால் வினையில் பங்கு பெறாது அந்த செயலை துரிதப்படுத்தும். இந்த வினையூக்கின் கதைகளும் ஆச்சர்யமாய் அந்த செயலைத்தான் செய்கின்றன். உங்களுக்குள் செலுத்திப்பாருங்கள் இந்த வினையூக்கியை அற்புதமான வினைகள் நடக்கும்.
பணம் சம்பாரிச்சு பணத்தை சாப்பிட முடியுமா? இந்த கேள்வியை நேரே கேட்டால் என்ன கேள்வி இது என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த கதை படித்துவிட்டு கேட்டால் அட ஆமாங்க..என்று தலையை சொறிவீர்கள்.... ஹாய் அரும்பாவூர் சினேகமாய் தோளில் கைபோட்டு பேசுவார்....சென்றுதான் பாருங்களேன் இவரின் தோட்டத்துக்கு.
சிந்திக்க கூட நேரமில்லாமல் ஓடும் இந்த டீசல் நாகரிகத்தில் நாம் இழந்தது எவ்வளவோ இருக்கிறது. எல்லா ஆதங்கங்களையும் ஒன்று திரட்டி தனது வலைப்பக்கத்தில் வைத்திருக்கிறார் இந்த வெள்ளை மனமும் சிவப்பு சிந்தனையும்
கொண்ட தோழர். வாசித்த பின் நீங்களே கூறுவீர்கள் இவர் வெள்ளை மனதுக்குச் சொந்க்காரர் என்று.
மாறிப்போய் விட்டது எல்லாமே...! பயன்பாடுகள் எதிர்மறையாகவும் உருவான நோக்கமும் மறந்து போய் சென்று கொண்டிருக்கின்றன என்று தன் சிறு கதையின் மூலம் சொல்லவருகிறார். வாசித்து வாசித்து அந்த வாசிப்பு கொடுத்த உத்வேகத்தில் வார்த்தைகள் இவரிடமிருந்து தெரித்து விழுந்திருக்கின்றன். பட்டிக்காட்டான் என்று சொல்லும் இவர் தன்னடக்கம் கொண்டிருந்தாலும் எழுத்துக்கள் மிரட்டுகின்றன.
நிறைய படித்து நிறைய சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் பன்முகப்பட்ட பரிமாணங்களை எடுக்கிறார்கள். உன்னைத் தேடி நான் என்று தலைப்பிட்டு தமது சிந்தனைகளை செதுக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இவர். பெண்ணியம், சமத்துவம், ஆன்மீகம் என்று பல களங்களை தொட முயல்கிறார். சிந்தனைவாதியான இவரின் எழுத்து நம்மையும் கூடவே சிந்திக்க வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கருத்துக்களை கூறுபவர்கள் கூறட்டும், கவிதை எழுதுபவர்கள் எழுதட்டும் நான் சினிமாக்களை விமர்சிக்கிறேன் என்றூ கீத்துக் கொட்டாய்
என்ற வலைப்பூ நடத்தும் தோழர் நினைத்திருக்கக்கூடும் ஆனாலும் ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, தமிழ் என்று தரம் பிரித்து அறிமுகம் செய்கிறார் தோழர். திரைப்படம் பற்றிய அறிவுக்கு சொடுக்கியே ஆக வேண்டிய ஒரு தளம்.
இந்த தம்பி எழுத ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆனால் இப்போதுதான் தன்னுடைய முத்திரையை பதிக்க ஆரம்பித்து இருக்கிறார். புன்னகைதேசம் என்ற பெயரில் அன்பால் இதயங்களை வெல்லத்துடிக்கும் வேகமாய் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி. இவரின் உயிரை வாசியுங்கள் கண்டிப்பாய் வேலை வேலை என்று அலையும் மனிதர்களுக்கு ஒரு விழிப்புணர்வைh கொண்டுவரும்.
சமையல், கவிதை, கட்டுரை என்று அனைத்தையும் பற்றிய பதிவுகளை இட்டு அன்பால் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டு போனவர் இவர். பன்முகப்பட்ட சிந்தனையுடன் கூடிய படைப்புகளை நம் கண்களுக்கு விருந்தாக்கியவர்...இவரின் சில கவிதைகளை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கிக் கொள்வதை யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று.
இயன்றவரை.. நல்ல படைப்புகளை இனங்கான முயன்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்த நாளின் மிகுதியான உங்களின் சந்தோசத்திற்கு இந்த வலைப்பூக்களும் கண்டிப்பாய் வலு சேர்க்கும்.....
அப்போ வர்ட்டா...!

Friday, June 25, 2010
தேடல் வெள்ளி....இதுதாங்க!
வாரம் முழுதும் ஒரு இயந்திர வாழ்க்கை. வார இறுதியில் ஒரிரு நாள் விடுமுறை அவற்றிலும் மிகைப்பட்ட குடும்பவேலைகள். சொடுக்கி விட்ட பம்பரமாய் அசுரத்தனமாய் சுற்றி சுழன்று வரும் தினசரி புயல்களுக்கு நடுவே எழுத்துக்களை படைப்பதற்கு...மனச்சாந்தம் வேண்டும் நிச்சயமாய்! விக்கித்துப் போய் நிற்கிறேன் ...!ஆமாம் நண்பர்களே...ஏதோ விளையாட்டாய் பதிவர்களை அறிமுகம் செய்யவேண்டி பல வலைப்பூக்களை மேய்ந்து முடித்ததில் ஒரு விசயம் தெளிவாக புரிந்தது.
பல ஜெயகாந்தன்களும், தி. ஜானகிராமன்களும், கல்கிக்களும், சுஜாதாக்களும், பாலகுமாரன்களும், வைரமுத்துக்களும், அப்துல் ரகுமான்களும்....அடையாளம் வேண்டி, ஒரு உந்து சக்தி வேண்டி...தமது எண்ணங்களை அற்புத படைப்புக்களாக்கி காத்திருக்கின்றனர்....! வலைப் பக்கங்களில் மிகுந்து விட்ட கூட்டணி ஓட்டரசியல் இவர்களை மேலே வராவிடாமல் அசுரனாய் அழுத்தி பிடித்து நிறுத்தியிருக்கிறது என்பது வருத்தமான உண்மை.
சரி மேட்டருக்கு வர்ட்டா..............
இப்படி யோசித்து யோசித்து வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய யாருமே இல்லாமல் விக்கித்துப் போய் வெறுமையாய் நின்றிருந்தேன். தோழி ரம்யா தொடர்பில் வந்தார்...இவரும் ஒரு தேடல் நிறைந்த முற்போக்குவாதிதான். எதார்த்தத்தை அற்புதமாக கவிதைகளுக்குள் கொண்டு வரக்கூடிய திறமை உள்ளவர் அதிகம் பேசி ஒன்றும் நடந்துவிடாது செயலில்தான் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். இவர் சொன்னார்...ஏன் இப்படி விக்கித்துப் போயிருக்கிறீர்கள் கவலைப்படாமால் உங்கள் பணியை தொடாருங்கள் என்று......
சரிங்க நல்ல வலைப்பூக்களை தேடபோகிறேன்...ஆமா நீங்க எங்க போறீங்க...இருங்க..டீ சாப்டுகிட்டெ கம்பெனி கொடுங்க பாஸ்...! உங்க கிட பேசிகிட்டே தேடுறேன்....!
சிலபேர பாத்தீங்கன்னா எப்பவுமே எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஒரு அலட்டலிருக்கும் ஆனால் வேறு சிலர பார்த்தீங்கன்னா வெறும்பய அப்டீன்ற மாதிரி இருப்பாங்க ஆனா கணிணியைப் பற்றி எழுதுவாங்க, நகைச்சுவை பற்றி எழுதுவாங்க, அரசியல் பற்றி எழுதுவாங்க...ஆனா ஒண்ணும் தெரியாத மாதிரி வெறும்பயன்னு சொல்லிக்குவாங்க...வேடிக்கையா இருக்குல்ல பாஸ்?
அதே மாதிரிதான் இன்னும் சில பேர் நீங்க ஏதாச்சும் கேள்விகளோட அலைஞ்சுகிட்டு இருக்கும் போது சார் ஒரு வார்த்தை சொல்லவான்னு கேட்பங்க...! நாமளும் ஒரு வார்த்தைதானே சொல்லுங்கன்னு சொல்லி கேட்க ஆரம்பிச்சா அடச்சே இவ்வளவு நல்ல செய்திகளையும் விழிப்புணர்வூட்டும் விதமா சொல்றாரேன்னு ஆச்சர்யமா பாக்க ஆரம்பிச்சுடுவோம்...இது எல்லொருக்கும் தெரிஞ்ச விசயம்தானே...?
உங்க மனதோடு மட்டும் ஒரு செய்தியை சொல்றேன் கேளுங்க...சில பேரு கவிதை எழுதுற ஸ்டைல பாத்தீங்கன்ன...எப்படிங்க இப்படி எல்லாம் என்று நீங்க கேள்வி கேக்காம இருக்க மாட்டீங்க...ஒண்ணுமே இல்லங்க... நிலா அப்படின்னு நீங்க தீம் கொடுத்த மூணாவது செகண்ட் கவிதை ரெடி..பண்ணக் கூடிய அளவிற்கு இங்கு திறமைசாலிகள் அதிகம்.
கவிதைன்னு சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வர்றது என்னோட தோழி நிலாமதிங்க . இவுங்க கூட அற்புதமா கவிதை எழுதிகிட்டே பல கட்டுரைகளும் எழுதிகிட்டு இருக்காங்க...! ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவென்றால்...எப்படி எல்லாமே செய்ய இவுங்களால முடியுதுன்னுதான்...
கொஞ்சம் நேரம் கம்பெனி கொடுங்க.. நீங்க என் கிட்ட பேசிகிட்டே இருந்தா நானும் உற்சாகம புதிய பதிவரையும் தேடிகிட்டே இருப்பேன்ல... இருங்க...ஒரு 10 நிமிசத்துல முடிசுடுறேன்.......
எழுத ஆரம்பிக்கிற நிறைய பேருக்கு தலைக்கனம் என்பதே இல்லை பாஸ். எழுத்து அமைவதலெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லிகிட்டே...பக்காவான கதை கட்டுரை, நகைச்சுவைன்னு அடிச்சு போய்கிட்டே இருக்கங்க...வாசிக்கனும்னு உக்காந்திட்டீங்கன்ன உங்கள அன்பால கட்டிப்போட்டிடும் இவுங்களோட எழுத்து.
கண்டிப்ப பாத்தீங்கன்னா அன்பு செலுத்துறத்துக்கும் ஆதிக்கம் செய்றதுக்கும் நம்முடைய இதய பூக்கள் நல்ல மலர்ச்சியில் இருக்கணும் பாஸ். அப்படி இருக்கிறவங்க....அற்புதமன விசயங்களை படைகிறவங்களாவும், நல்ல அனுபவங்களை எல்லோருக்கும் சொல்றவங்களாவும் இருக்காங்க... ! நான் சொல்வதில் உணமை இருக்கா இல்லையான்னு உங்கமனசாட்சியை கேட்டுப்பாருங்க...!
ரொம்ப நேரம் பேசிகிட்டே இருந்துட்டோம் ரெண்டு டீ வேற குடிச்சிட்டீங்க....வாங்க சாப்பிட்டு வந்து தேடுவோம். அட எங்க வீட்டு சமையல் எப்படி இருக்கும்னுதானே பயப்படுறீங்க..? கவலையேப் படாதீங்க...பாஸ் ! எங்க வீட்டுத் தங்கமணி சமையல் டவுட் எல்லாம் கிளியர் பண்ணிக்கிறது தோழி ஜலீலா கிட்டதான்....சமையல் குறிப்புன்னு மட்டும் இல்லாம, வீட்டுக்குத் தேவையான டிப்ஸ், குழந்தை வளர்ப்புன்னு எல்லாத்துக்கும் அவுங்க குடுக்குற ஆலோசனைகள்ளதான் எங்க வாழ்க்கை ஒடிட்டி இருக்கு......
ஒரு நிமிசம் சார் போன் அடிக்குது.....
ஹலோ... யாரு மாப்ஸ் நாஞ்சிலா? ஆமா வலைச்சரத்துல இன்னும் அப்டேட் பண்ணல...ஆமா என்னது நீங்களும் பதிவர்தானா? மூணுவருசமா எழுதிறீங்களா...சரி பாக்குறேன்..மாப்ஸ்...லிங்க் அனுப்புங்க...சரி...சரி.. வச்சிடவா...!
நம்ம நாஞ்சில் பிரதாப்
என்ன இன்னும் பதிவு போடலாயானு கேட்டு நையாண்டி பண்றாரு. நீங்கதான் பாக்குறீங்கள்ள எம்புட்டு நேரமா தேடுறேன் ஒண்ணும் அகப்படல....சரி நீங்கா வாங்க பாஸ் நாம சாப்பிட்டு வந்துடுவோம்... நான் வேண்ணா சீனா ஐயாகிட்ட உடம்பு சரியில்லேனு சொல்லி ஒரு லீவ் லெட்டர் கொடுத்துக்குறேன்.....!
அப்போ வர்ட்டா..!

Thursday, June 24, 2010
வித்தியாச வியாழனில்....இது என்னோட ஸ்டைல்..!
இரு கண்விழித்து யாம் எழுந்த காலைப் பொழுதினில் எமக்கு முன்னரே எழுதிருந்த சுயம் சொல்லியது இன்று முகமூடியற்ற வெளிப்பாடு வேண்டுமென்று.....! கனத்திருக்கும் நெஞ்சம் அதில் கனலாய் வெளிப்படும் எண்ணங்கள் இவற்றையெல்லாம் பதிவாய் மாற்றும் வித்தை தெரிந்த வித்தகர்களை, வாசிப்பாளனின் இதயம் கிழிக்கும் எழுத்தாளானை அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை வழங்கிய காலத்திற்கும், வலைச்சரத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி...இன்றைய நாளின் அறிமுகங்களை...உங்களுடம் பகிர விழைகிறேன்...
" சதி செய்த விதியின் ஆட்டத்தால் புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரி மயோ மனோவின் வலைப்பக்கத்தில் தவறி விழுந்த நான்... பற்றிய நெருப்பாய்...பாரதிதாசனின் கூற்றுப் போல இருப்புக் கூட்டின் கதவு உடைத்து வெளி வந்தேன். வாழ்க்கையில் வாழ முடியும்...வார்த்தைகளில்......முடியுமா? யோசிக்கிறீர்களா.....தோழர்காள்...? இந்த வலை நுழைந்து பாருங்கள்.... நெருப்பாய் எரியும் இந்த வலைப்பூ...!
வலைப்பூக்களில் நெருப்பெரிய வேண்டும் அதில் தீமைகள் எரிந்தே போகாட்டும் என்ற எண்ணம் கொண்டவர் இவர். ஆத்ம விசாரணையோடு கூடிய முற்போக்குச் சிந்தனைவாதி, புரட்சியோடு, பொதுவுடமை, பெண்ணுரிமை, காதல், அரசியல் என்ற பன்முகச் சிந்தனைவாதி கே.ஆர்.பி.செந்திலை வாசிக்க தவறிவிடாதீர்கள்.
தவறவிட்டு தவறவிட்டு வாழ்வில் எங்கோ வந்து சேர்ந்த மக்களுக்காக எழுத்தறிவிக்கும் இறைவனின் பணியில் ஈடுபட்ட தோழி ஜெயந்தி...அதை பாடினியாரில் திறம்பட எழுதி எழுத்தறிந்த மக்களுக்கும் விழிப்புணர்வு கொடுத்து நீங்களும் முடிந்த வரை கற்றுக் கொடுங்கள் என்று சொல்லாமல் சொன்னாரே...! கண்கள் பனிக்கவைத்த இவருக்கு இவருக்கு உங்கள் வாசிப்புதானே விருது....!
விருதுகள் என்பவை ஊக்குவிக்கும் ஒரு கேட்டலிஸ்ட் என்று சொல்லக்கூடிய வினையூக்கிகள். நல்ல பயனுள்ள கருத்துக்களையும் கூறிக்கொண்டு சக பதிவரையும் ஊக்குவிக்கும் ஒரு தாய்மையினை இயல்பாக கொண்டிருக்கும் ஜெய்லானி ....தானே அறியாமல் ஒரு சமுதாய நற்பணி செய்து வருகிறாரே...இவரின் விருதுகள் எத்தனையொ பேர் மனதை ஊக்குவித்திருக்கிறதே...! இவரின் பணியே ஒரு கவிதைதானே.....!
கவிதைதானே...யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணத்தில் எழுதாமல்...கவிதைகளுக்குள் உணர்வை ஒளித்துவைத்து வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்கும் தோழி ஷம்மி முத்துவேல் உடனடியாக அனைவர் கவனத்திற்கும் வரவேண்டிய ஒரு படைப்பாளி இவரின் கவிதை உணர்வுகளை முடிந்த வரை சுவாசியுங்கள்!
சுவாசிப்பது போல அனிச்சையாய் நம்மைச் சுற்றி நிகழும் நிகவுகளை கோர்வையாக்கிப் பார்த்து படிப்பினைகளுக்கு உயிரூட்டும் வித்தை தெரிந்த செல்ல நாய்க்குட்டி..! தொடர்கதைகளை அடுக்கி அடுக்கி கூடவே படிப்பினைகளையும் சொல்லத் தெரிந்த வித்தகர். இவரின் எல்லா பதிவகளும் சுவாரஸ்யத்தின் உச்சம் என்றால் மிகையாகாது.
மிகையாகாமல் இருக்கும் எல்லாம் அழகாக இருக்கும் என்று மிகைப்பட்ட எல்லாம் புறம் தள்ளிவிட்டு வெறுமையில் கவிதை செய்திருக்கும் தம்பி ஜீவன் பென்னி ! வலையுலகத்தில் தமது சிக்ஸர்களை அடிக்கத்துவங்கி இருக்கும் காலம் இது....! உங்களின் பார்வைகள் பதிய வேண்டிய பக்கம் இவருடையது.
இவருடையது அவருடையது என்று பிரித்தெடுக்க முடியாத தாய்த்தமிழை...என்னுடையது என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய சிறப்புக்குரிய முனைவர் குணசீலனை அறியாதவர் யாரும் இருக்க இயலாது. புற நானுறையும் அக நானுறையும், நன்னூலையும் என்னைப் போன்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து எம் தாய்த்தமிழின் இனிமையினை அகிலமெல்லாம் இருக்கும் நம் இனம் அறிய கதைக ளோடு...இலக்கணமும் சேர்த்து படிப்பிக்கும் இவர்... அனைவருக்கும் தமிழ் ஆசான். இந்த வலைப்பூவை சொடுக்குங்கள்…....தமிழன்னை உங்களைத் தாலாட்டுவாள்!
தாலாட்டு என்பது நாம் அறிந்த ஒரு இசை வடிவம்...சரி வரி வடிவம் தாலாட்டுமா?... தாலாட்டும்... தமிழ் அமுதன் என்ற ஜீவனை நீங்கள் பருகும் போது கண்டிப்பாய் தாலாட்டும். ஒரு கிளர்ந்தெழுந்த மனோ நிலையிலேயே அமுதன் எழுதுவதாக எனக்குபடுகிறது. பல படைப்புகள் செய்தவர் என்றாலும் மீண்டும் ஒருமுறை இவரின் கண்ணாடியில் போய் அனுபவ அறிவென்னும் முகம் பாருங்களேன்….!
பாருங்களேன் இந்த மகாராஜனை ஒரு சூப்பர் கலக்கல் வலைப்பூவின் சொந்தக்காரர். அது அது என்றில்லாமல் ஒரு பன்முகப்பட்ட பார்வை கொண்டவர். நல்ல வெயிலுக்கு நடுவே ஒரு தென்னந்தோப்பும் ஒரு சிறு நீரோடையும் கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது இவரது படைப்புக்கள். வேலை விட்டு வீடு திரும்பி அயர்ச்சியில் இருக்கிறீர்களா...? தட்டுங்கள் மகராஜனின் எண்ணச்சிதறலை...உங்களின் பார்வையின் வழியே ஓய்வு உங்களுக்குள் பரவும் அதிசயம் நிகழும்!
அதிசயம் தான் தன்னுடைய பெயர் சொல்லாமலேயே மாதம் ஒரிரு பதிவுகள் என்றாலும் அது நம்மை சரியாக நிறைவாக்கிச் செல்ல அமைதி அப்பாவால் முடிகிறது என்பது அதிசயம்தான். சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்....வாசித்தூப் பாருங்கள் அவர் மாற்ற முயல்வது எல்லாம் சதி செய்யும் விதியின் ஆட்டத்தைதான்......! "
செவி கொடுப்பீர் எம் மக்காள், வலை நுழைந்து பதிவர்களை ஏற்றம் செய்குக.....! விலைமதிக்க முடியா மணிக்கங்கள் வலைப்பூவினுள் மறைந்திருந்து உம்மின் வலி தீர்க்கும், வழி காட்டும், வெறுமையகற்றும், வெஞ்சினம் போக்கும்....எல்லாவற்றுக்கும் மேலாய் நல்ல நட்பு சமைக்கும்.
சமயமில்லை என்று நகராமல் சமயம் ஒதுக்கி உம்மின் விழி திறப்பீர்...! மெலிதாய் மனம் திறப்பீர்...! எழுத்துக்களின் மூலம் உம்முள் இறங்கும் அனுபவத்தை கிரகித்து....அதன் சுகத்தில் அறிவின் வெளிச்சத்தில்..ஆனந்தத்தில் சற்று நேரம் இமைபிரிக்க மறந்து... நெஞ்சோரம் தேக்கிவைத்த விசயஞானத்தின் சாரத்தை உம்மோடு கரையச்செய்து....அன்னம் பிரிக்கும் பால் போல...வார்த்தை சக்கைகளை புறம்தள்ளி...அனுபவக்குப்பைகளையும் காற்றில் பறக்கவிட்டு உணர்வாய் எஞ்சி நிற்கும் மிச்சத்தில்...கிறங்கி...கிறங்கி.... கிறங்கி மலர் தொலைந்து நிறையும் வாசம் போல் உம்மில் வாசனைகள் கொள்வீர்...தெளிந்ததொரு...வாழ்வு கொள்வீர்....எம் தோழர்காள்!
வெல்க நாடு !வெல்க நாடு!
வெல்க வெல்கவே…!
வீர சங்க நாதம் கேட்டு...
செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே
வெல்க வெல்கவே! வெல்க வெல்கவே...!
அப்போ.....வர்ட்டா...........!

Wednesday, June 23, 2010
கலக்கல் புதனில் வலைச்சர அவை கூடியது....!
ஃப்ளாஸ் பேக்:
தனியா பிளாக் வச்சி என்னவேன்னா நீ செய்யலாம்யா...ஒரு வாரம்...ஒரே வாரம் வலைச்சரத்துக்கு ஆசிரியரா இருந்து பாரு.....பதிவர்களையும் பதிவுகளயும் அறிமுகப்படுத்து....அப்போ தெரியும் இந்த ஆசிரியர் பதவி ஒரு முள் படுக்கை...இது உன்னால முடியாதுன்னு..... சொன்ன(சும்மா காமெடிக்கு தாங்க சொல்றேன்...! முழு சுதந்திரமும் ஆதரவும் கொடுக்கிறவர் ஐயாதான்) சீனா ஐயாவிடம் சபதம் போட்டு பில்டப் எல்லாம் கொடுத்து வலைச்சரத்துக்குள்ள வந்தாச்சு....... ! நைட் புல்லா தூங்காம டீரீம் அடிச்சதுல கிடைச்சதுதான் இந்த தீம்.........
வாங்க தீம் குள்ள போவோமா....
ராஜாதி ராஜா ராஜ மார்த்தாண்ட.." யோவ் யாருய்யா பில்டப் எல்லாம்... அது எல்லாம் ஒண்ணும் வேணாம்"
"....மன்னர் மருதுபாண்டி...வாழ்க..வாழ்க" அட எங்கயா போனீங்க எல்லாம் கூட்டத்த கண்ரோல் பண்ணுங்கப்பா...
ம்ம்ம்ம்...வலைச்சர அவை கூடட்டும்.......யாரங்கே...ஓ...காவாலாளி கபாலியா..ஏய்யா...எங்கய்ய அந்த அமைச்சர் புலிப்பாண்டி....? ....இதோ வந்து விட்டேன் மன்னா...கத்திக்கொண்டே ஓடிவருகிறார் நமது புலிப்பாண்டி.
ம்ம்ம்ம்ம் மன்னன் நான் வந்துவிட்டேன்.. நீ...தாமதமா? ஏய்யா லேட்டு....? மெதுவாய் சொன்னார் நம்ம பு.பா(புலிப்பாண்டி) இதுதான் மன்னா நடந்தது....! அட என்னய்யா நடந்தது...? ......மன்னா இதுதான் நடந்தது....!யோவ் பு.பா...என் பொறுமையை காலையிலேயே சோதிக்கிறாயா....தெளிவாகச் சொல்கிறாயா..இல்லை.....
இதுதாங்க நடந்துச்சு...பாலாசி எழுதியிருக்கிறாரே மன்னா அது நடந்துச்சு....! ஓ அப்படி விவரமா சொல்லிய்யா மட மந்திரி.
சரி... மாதம் மும்மாரி பொழிகிறதா...? ....பொழிகிறது மன்னா....ஈரோடு பக்கம் நல்லாவே பொழிகிறது.....! அது என்னய்ய ஈரோடு பக்கம் மட்டும்...ஸ்பெசல்....! மன்னா....ஈரோடு கதிரின் கோடியில் இருவர் படியுங்கள் தெளிவாக புரியும்..! மட மந்திரி நான் ஏற்கெனவே படித்துவிட்டேனய்யா..சரி..அதில் பிரதி எடுத்து... நாடு முழுவதும் பின்பற்றச் சொல்லி கெடுபிடி உத்தரவிடு....! .....சரி மன்னா !
ம்ம்ம் வேறு ஏதாவது செய்திகள் அமைச்சரே..!
நிறைய செய்திகள் இருக்கிறது மன்னா...வெள்ளையர் தேசத்தில் வசிக்கும் நமது நாட்டு பெண்ணொருத்தி வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டுக் கொண்டு... மிகச்சிறந்த கருத்துக்கள் கூறுவதாக நமது ஒற்றன் பாணன் கூறியுள்ளான் மன்னா...
அட...அப்படிய.. சிறப்பாய் ஏதாவது ஒன்று கூறும்....
இருக்கிறது மன்னா... நல்லது, கெட்டது தெரியுமா? என்று நம்மையே கேள்வி கேட்டு வாழ்வியல் சூத்திரங்களை சொல்வதாகக் கேள்வி......!
ஹா.. ஹா....ஹா...பலே...பலே...பலே....அமைச்சரே....இன்னும் கூறும்...வேறு...
பலாப்பழத்தில் பட்டறை நடத்திக் கொண்டிருக்கும் சங்கர் என்ற நமது தேச குடிமகன்...யாரும் சாமியாரக போகக்கூடாது என்றே...ம்ருதுளா என்று ஒரு கதை படைத்திருக்கிறார்!
நல்ல கருத்தய்யா... நானும் படித்திருக்கிறேன்....!
மன்னா... இப்போது எல்லாம் சிறு பிள்ளைகளை வேலைக்கு வைப்பது நமது தேசத்தில் குறைந்துள்ளது....குறிப்பாய் இந்த பட்டாசு தொழிற்சாலையில் நடக்கும் செய்திகளை கொலைகாரர்களாய் நாம் .. என்ற தலைப்பில் LK என்பவர் கவிதை வடிவில் சொல்லியிருக்கிறார்....அதற்கு பிறகு எல்லோருக்குமே பயம் மன்னா....!
சபாஸ்....இப்படி மக்களுக்குள்ளேயே விழிப்புணர்வூட்டிக் கொள்ளும் நிகழ்வுகள் நிறைய நிகழ வேண்டும்...ஆமாம் அமைச்சரே....இந்த திருநங்கையர் பற்றி விழுப்புணர்வூட்டச் சொல்லியிருந்தேனே...அது சம்பந்தமாக ஏதாவது.....
இருக்கிறது மன்னா... விஜய் என்றொரு தம்பி....நானும் உங்களை மாதிரி தானுங்க ...... என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்...அட்டகாசமான விழிப்புணர்வை அந்தக் கட்டுரை கொடுத்துள்ளது மன்னா..மேலும் விவசாயிகளுக்காக செளந்தர் என்ற தம்பி உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா?? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் விவசாயிகள் மத்தியில் கடும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது... மன்னா...!
சரி... அமைச்சரே.. பசி வயிற்றைக்கிள்ளுகிறது... நான் உணவருந்திவிட்டு வருகிறேன்.... நீயும் உணவருந்தி விட்டு வாரும்... நான் எப்போது வருகிறேனோ அப்போது எல்லாம் அவை டக் டக் என்று கூடட்டும்..சரியா.....! அப்புறம் ஒரு விசயம்... இப்போது எல்லாம் உணவருந்தும் முன் நமது சமையலாரர் மணியண்ணா? உணவருந்தி விட்டாரா என்று கேட்டுவிட்டுதான் சாப்பிடுகிறேன்... எல்லாம் நம்ம பாமரன் கொடுத்த அறிவுதான்....ஹா...ஹா...ஹா...!
(அவை தற்காலிகமாக கலைகிறது)
"
"
"
சில மணி நேரங்களுக்குப் பிறகு...
ஓ.. உணவு இடைவேளைக்குச் சென்று திரும்பும் நேரத்தில் கட்டையை சாய்த்துக் கொண்டு என்னய்யா எல்லோரும் உறக்கம்...
அவை கூடட்டும்..அட...அவை கூடட்டும்...அட பாவிங்களா....எந்திரிங்கடா....!
விழித்துக் கொண்ட அனைவரும்...மன்னர் மருது..பா... என்று ஆரம்பிக்க...ஏய்... நிறுத்துங்கள் உங்கள் பில்டப்புகளை! மந்திரியாரே...மாதம் மும்மாரி பொழிகிறதா...? மந்திரி பு.பா தலையைச் சொறிந்த படி...மனதுக்குள் அடங்கொய்யால ஒரு நாளைக்கு எத்தன தடவ கேப்ப...என்று நினைத்தவராய்..மன்னா மார்னிங்லேயே அப்டேட் பண்ணிட்டேனே பாஸ் என்று பாதி தூக்கத்தில் உளறினார்.
யோவ்...பு.பா.. நீ நகரு... எங்கே நமது கவிஞர் கடலை முத்து....? வந்தேன் மன்னா கேட்டு முடிக்கும் முன் வந்து நின்றார் கடலை...! யோவ் கடலை அரசவை இணையத்தில் எழுத பதிவர் பட்டியல் கேட்டேனே என்ன ஆச்சு.... ?
அது..ரெடி மன்னா...
இதைக் கொஞ்சம் படி மன்னா..
ம்ம்ம் நீயே கூறும் வாசிப்பு திறன் அதிகமிருந்தால் உம்மை எதற்கு வேலைக்கு வைக்கிறேன். நீ படி.... நான் கேட்கிறேன்....சரியா.... ஆணையிட்டார் மருது பாண்டி....கவிஞர் கடலை தொடங்கினார்....
கவிதை...அதுவும் செந்தமிழில் கவிதை தொகுக்க நேசமித்திரன் என்றொரு கவியை கண்டுபிடித்துளேன். தமிழில் விளையாடவும் தமிழோடு விளையாடவும் நன்கறிந்த புலவர் இவர்.
ஹா...ஹா...ஹா...பலே...பலே...சில காதல் கவிதைகள் சொல்லுமய்யா.. அந்தபுரத்தில் நுழைந்தால் ஒரே ஏச்சும் பேச்சுமாயிருகிறது ரசனை இல்லை என்று குறை. மனப்பாடம் செய்தாவது போய் அசத்துகிறேன்.
மன்னா.... பனித்துளி சங்கர் என்றொருவரை காதல் கவிதைகள் சொல்லவே அழைத்துள்ளேன்.... ! பாருங்கள் இனி அந்தபுரமே கதிஎன்று இருக்கப்போகிறீர்கள்
ஹி....ஹி....ஹி.....இருக்கட்டுமய்யா.... வேறு ஏதேனும்......
மன்னா அகல்விளக்கு என்ற பெயரில் எழுதி வருகிறார் ராஜா என்று ஒருவர்....சீனாவில் மஞ்சள் ஆற்றங்கரையில் நடந்த கொடூரத்தின் அவலத்தை கவிதைகளில் கொண்டு வந்துள்ளார்... இவரும் நமது கவி செய்யும் கொட்டாரத்தில் இருப்பார் மன்னா.
நல்லது....... நல்லது...சரி நாளை விடிவதற்குள் அரசவை இணையத்தில் எல்லாம் வந்தேற வேண்டும்....வலையேற்றம் செய்வதில் ஏதாவது பிரச்சினை என்றால் நமது ஆஸ்தான கணினி புலி சூர்யா கண்ணனிடம் ஆலோசனைகள் கேட்டுக்கொள்ளும்!
சரி நீர் செல்லும்....! கடலை முத்து சென்று அமர...மந்திரி பு.பா எழுகிறார்.
யோவ் பு.பா..ரொம்ப டயர்டா இருக்குய்யா.... நான் சென்று அந்தப்புரத்தில் ஓய்வெடுத்துக்கொள்கிறேன் அட பாவி மனுசா..இப்பதானே வந்த...அதுக்குள்ளயா டயர்டு?....மன்னராச்சே...)
யோவ் மந்திரி நான் டயர்டு என்கிறேன்... என்ன யோசனை...? ஆமா தொடர் எழுதுவதற்கு ஒருத்தரை கேட்டிருந்தேனே....
ஹே...ஹே...ஹே...மன்னா இதுதானே வேணாம்கிறது..... நீங்கள் கிளம்புகள் மன்னா...இல்லை என்றால் இங்கேயே தொடரும் போட்டு விடுவீர்கள்.......!
மன்னர் மருது பாண்டி வாழ்க..வாழ்க.....! (அட நிறுத்தங்கப்பு...முன்னால வாழ்கன்னு சொல்லவேண்டியது பின்னால ஆப்பு அடிக்க வேண்டியது....எமக்குத்தெரியாத அரசியலா.....)
பின் குறிப்பு: மனதில் தாக்கங்கள் ஏற்படுத்தும் பதிவுகளை வகையிட்டுள்ளேன்!
அப்போ நான் வர்ட்டா.....!

Tuesday, June 22, 2010
அதிரடி செவ்வாயில்....என்ன நடந்தது....?
விடுங்க சார் ....கண்டு பிடிச்சுடலாம் என்று இடிந்து போய் அழுது கொண்டிருந்த தொழிலதிபர் சகாயத்தை தேற்றிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ரொம்ப முக்கியமா பாதுகாத்து வச்சிருந்தேன் சார் இந்த தடவை நான் யூரோப் 3 நாள் பிஸினஸ் டூர் போறப்ப என் கூட கொண்டு செல்லவேண்டி பாதுகாத்து வைத்திருந்த பென் டிரைவ் அது. அது மட்டும் இல்லேன்னா என்னால இந்த டூரா நினைச்சு கூட பாக்கமுடியாது. புலம்பிக்கொண்டிருந்தார் அந்த 45 வயது மல்டி பிஸினஸ் மேன்.
கடைசியா நேத்து நைட் 10 மணிக்கு பாத்தேன்...11 மணிக்கு லைட்ட அணைச்சுட்டு தூங்க போகும் போது என் பிளாட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேட்டுச்சு ஓடிவந்து பார்த்தேன். அதே நேரத்தில் என்னோட செக்யூரிட்டி நமசிவாயம் என் கூட வந்து பார்த்தான்...ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு தேடினோம் யாரையும் காணோம்.அப்புறம் நான் போய் படுத்துட்டேன் சார்.
காலையில் காம்பவுண்டுக்குள் வரும்போதே செக்யூரிட்டி நமசிவாயத்தை பார்த்திருந்தார் விக்ரம். நல்ல திடகாத்ரமான ஆள் 55 வயது என்று சொல்ல முடியாத மனிதர்.. நல்ல விபூதி பட்டையும்...ஊதா நிற சட்டையும் முறுக்கி விடப்பட்ட...வெந்நிற முரட்டு மீசையும் என்று ஒரு அட்டகாசமான உறுதியோடு இருந்தார். இன்ஸ்பெக்டர் என்று கூட பாராமல் நின்று நிறுத்தி கேட்டு உறுதி செய்து அனுப்பினார்.
ஆமாம் அவசரம் என்றவுடம் மப்டியில் வந்தது என் தப்புதானே....முன்ன எல்லாம் செக்யூரிட்டிங்க...போலிஸ் மாதிரியே..சோல்டர் பக்கதுல ஒரு கையிறு கட்டி அதில் விசில் வச்சு இருப்பாங்க..இப்போ எல்லாம் மேக்ஸிமம் ஸ்டைலுக்காக ஒரு கயிறு பட்டையா.... ஒரு போலிஸ் லுக்குக்காக... நமசிவாயமும் ஒரு சிவப்பு பட்டைக்கயிறு அணிந்து இருந்தார். போலிஸ் என்றவுடன் அவர் அடித்த சல்யூட்டில் ரிட்டயர்ட் ஆர்மி வாசனை அடித்தது.
காலையில் நடந்ததை யோசித்துக் கொண்டே.....தொழிலதிபர் சகாயத்தை நோக்கி ...வேறு யாராவது வந்தாங்களா சார் வீட்டுக்கு என்று கேட்டார். இல்ல சார்.... என்றவர்.. ஆமாம் சார்.. கேபிள் டி.வி செக் பண்ற பையன் வந்துட்டு போனான்..இரவு ஒரு 8:30 போல் என்றார் வேகமாக.....! ஓ...அப்படியா....என்று கேட்டபடி...ஆமா அந்த பென்டிரைவ்ல என்னதான் சார் இருந்துச்சு....?தொழிலதிபர் சகாயம் சொல்ல மறுத்து விட்டார்...அது தொழில் சம்பந்தமான ரகசியம் சார். ஓ ..அப்படியா...சரி விடுங்க..என்று சொல்லிய இருபதாவது நிமிடம் கேபிள் பையன் அங்கு வரவழைக்கப்பட்டான்.....
உண்மைய சொல்லு...எங்க வச்சு இருக்க அந்த பென் டிரைவ...என்று விக்ரம் கேட்ட கேள்விக்கு திரு....திரு...வென்று முழித்தான் கேபிள் டி.வி. செல்வம். சார் பென் டிரைவ்னா இன்னா சார்..?அப்பாவியாய் கேட்டதில் அவனில்லை என்று புரிந்து விட்டாலும்...சரி நீ...போ என்று சொல்லிவிட்டு அவனை கண்காணிக்க ஆள் போட்டார் விக்ரம்.
விக்ரம் தொழிலதிபர் சகாயத்தை நோக்கி கேட்டார்.....சார்......... நீங்க தப்பா நினைக்கலேன்னா உங்க மனைவியை நான் விசாரிக்கலாமா....? உங்க இரண்டு பசங்களும்....டெல்லில படிக்கிறதா சொன்னீங்கள்ள...என்று பேச்சை இழுத்தபடியே அவரது மனைவியை விசார்க்கவேண்டும் என்பதை வலியுறுதினார். சார்.. .என் மனைவி எப்படி சார் எடுப்பா...என்று கேட்டதற்கு கொஞ்சம் கடுமையாகவே விக்ரம் சொன்னார்....மிஸ்டர். சகாயம் நான் காவல் அதிகாரி பல கோணத்தில் பார்க்க வேண்டும்...கேன் ஐ சீ யுவர் வைஃப் ப்ளீஸ்.........
38 வயது எஸ்தர் ரூபி என்ற முழுப்பெயர் கொண்ட எஸ்தர் சகாயத்தின் மனைவி இல்லத்தரசிதான். விக்ரம் கேட்ட பலவிதமான கேள்விகளையும் நிதானமாக எதிகொண்டு தெளிவாய் பதில் சொன்னதில் இவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தீர்மானித்த விக்ரம். மொத்தத்தில் குழம்பிப் போய் நின்றிருந்தார்........செக்யூரிட்டி நமசிவாயத்தை அழைத்து விசாரித்தார். வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை.....! ஏதோ சப்தம் கேட்டதாக சகாயம் சொன்னாரே....அது என்ன சப்தம் என்று கேட்டதற்கு நிறைய பூனைகள் அங்கு திரிவதாக சொன்னார் நமசிவாயம். " சார் நான் இந்த கேட் கிட்டதான் சார் நைட் முழுதும் இருக்கேன் என்ன தாண்டி யாரும் உள்ள வரமுடியாது சார்" என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு வேளை தொழிலதிபர் சகாயம் நம்மை குழப்புகிறாரோ என்று கூட சந்தேகம் வந்தது விக்ரமிற்கு...
" சார் உங்க.. ரூமா பாக்கலாமா என்று சந்தேகத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் விக்ரம்....உள்ளே போய் அவருடைய பெர்சனல் கம்ப்யூட்டர் டெஸ்க் என்று எல்லா இடத்தையும் துலாவிய விக்ரம் பார்வை பளிச்சென்று எதிலோ போய் பதிய....முகம் பிரகாசமானது......சரி சார் நான் ஸ்டேசனுக்கு கிளம்புறேன்....சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன்.......பறந்து விட்டார் விக்ரம்.
அன்று இரவே போலிஸ் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டார் செக்யூரிட்டி நமசிவாயம். மிஸ்டர் நமசிவாயம்...உண்மைய ஒத்துக்கொள்ளுங்க.....எங்க அந்த பென்டிரைவ்..? மரியாதையா சொல்லிட்டா பரவாயில்ல இல்லேன்னா நான் வயசானவர்னும் பார்க்க மாட்டென்...கோபம் காட்டினார் இன்ஸ்பெக்டர் விக்ரம். காலையில் சகாயம் சார் வீட்டுக்குள்ள வரும் போதே கவனிச்சேன்...என்னடா செக்யூரிட்டி தோள்ல கயிறு மட்டும் கட்டியிருக்காரே ஒரு வேல ஒரு ஸ்டைலா இருக்குமோன்னுதான் நினைச்சன்...சகாயம் சார் வீட்டுக்குள்ள கம்ப்யூட்டர் டேபிள் கிட்ட கிடந்த.. விசில பாத்தவுடனேதான் தோணுச்சு வாசல்ல நிக்கிற செக்யூரிட்டி விசிலுக்கு சகாயம் சார் ரூமுக்குள்ள என்ன வேலைன்னு.....சொல்லுங்க.....எங்க இருக்கு பென்டிரைவ்......
நமசிவாயம் பேசத்தொடங்கினார்... சார் என்னய மன்னிச்சுடுங்க.. நாந்தான் அந்த பென்டிரைவ் எடுத்தேன்.....அது எங்க வச்சிருக்கேன்னா.....சொல்லி முடித்த அரை மணியில் பென்டிரைன் விக்ரம் கையில்...! எதுக்கு எடுத்தார்னு விசாரிக்கும் முன்னாடி இதில் என்ன இருக்குன்னு பாத்துடுவோம்.....யாரும் பார்க்காத வகையில் பென்டிரைவ் எடுத்து தனது பிசியில் சொருகி.....கணிணியைத் தட்டிய....விக்ரம்...பென் டிரைவ் கிட்ட போய் டபுள் கிளிக் பண்ணி....விக்ரமின் கண்கள் விரியத்தொடங்கின.........ஓ மை காட்...ப்யூட்டி புல்....வாவ்...வாவ்.....ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான் விக்ரம்...!மெல்ல அதில் இருந்த விபரங்களை காப்பி பண்ணி விட்டு....விண்டோவை மூடிவிட்டு...... நமசிவாயத்தை நோக்கி நடந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.....
" ஏன் சார்...(மரியாதையோடு) இது உங்களுக்கு இந்த வயசுல எதுக்கு......கேட்டு முடிக்கும் முன் அழுது கொண்டே சொன்னார் நமசிவாயம். சார் நான் நல்ல குடும்பத்த சேர்ந்தவன். என் பையன் தான் சொல்லி இத எல்லாம் செய்யச்சொன்னான்...வயசான காலத்துல அந்த அயர்ச்சி தெரியாம இருக்கணுமேன்னுதான்..இல்லேன்னா தேடி தேடி பார்க்கணும் சார்......அது என்னால முடியாது ...விபரம் எல்லாம் தெரிஞ்சுகிட்டா நானும் ஒண்ணு ஆரம்பிச்சுடலாம்னுதான் சார்.........
அடப்பாவமே...பரிதாபத்தோடு அவரைப்பார்த்தபடி.... சரி உங்களுக்கு ஒரு காப்பி தர்றேன் உங்கள கூட்டிகிட்டு வந்தது உங்க முதலாளிக்குத் தெரியாது.....! நீங்க போய் நாளைல இருந்து வேலைய கண்டினியூ பண்ணுங்க....என்றான் சிரித்தபடி!சட்டையை மாட்டிக் கொண்ட நமசிவாயம் கும்பிட்டபடி....அவருக்கான ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு ஸ்டேசனை விட்டு நடக்க ஆரம்பித்தார்.
விக்ரம்....சிரித்தபடி வந்து மீண்டும் ஆசையோடு கம்ப்பூட்டரைத்தட்டினான்..
குழந்தைத் தொழிலாளர் பற்றி தோலுரித்துக் காட்டும்சாத்தூர் மாக்கான்
நான் யார் என்று சிந்திக்கத் தூண்டும்
GeeVee
மனிதத்தை மிளிர்ச்செய்யும்...பெரோஸ்
வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும்கோமாளி
புதிய கோணத்தில் குழந்தை தொழிலளர் பற்றி அலசும் மதுரை சரவணன்
பிரிதலை புரிதலோடு செய்யச் சொல்லும்
மனதோடு மட்டும்
ஆண்களின் கண்ணோட்டத்தை மாற்றச் சொல்லும்சிரிப்பு போலிஸ்
கவிதைகளால் ஆளுமை செய்யும்அ....ஆ!
மானுடத்தை மறந்து விட்டது ஏனோ? என கேள்வி கேதும்வெங்கட் நாகராஜ்
LKG அட்மிசன்....பெற்றோரின் மனோ நிலைபிச்சைப்பாத்திரம்
சினிமா..சினிமா..சினிமாதாராபுரத்தான்
தந்தையர் தின வாழ்த்துச் சொல்லணுமா...?கானகம்
கடவுளைக் காப்பாற்றியவனை....பருங்கள்!அடர் கருப்பு
மனிதம் சிலிர்த்தது...சின்னப்பயல்
யூஸ் அண்ட் துரோ...லைஃப் மாற வேண்டும்,,,,!அன்பேசிவம்
கவிதை அரசி..!Mubeen Sadhika
வலைப்பூக்களின் பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. பாவம் நமசிவாயம் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு, நிறைய நண்பர்களின் தொடர்புகள்...செய்தி மற்றும் கருத்துப் பரிமாற்றம் என்று தொடர்ந்து இயங்கினால் மனைவியை இழந்து மகன் வீட்டில் தனித்து இருக்கும் தமக்கு நேரம் செல்லும் மனசும் சந்தோசமாக இருக்கும் என்று நினைத்தார்..ஒரு நாள் தனது முதலாளி வலைப்பூக்களை துலாவிக் கொண்டு இருந்ததை பார்த்தவர்...அதன் லிங்க்களை பென் டிரைவில் காப்பி பண்ணியதை பார்த்திருக்கிறார். பூனையை விரட்டப் போனவருக்கு ஏற்பட்ட ஆசையில் அந்த பென் டிரவை எடுத்தவர்....காப்பி பண்ணி விட்டு காலையில் வைத்துவிடலாம் என்று நினைத்தார். காலையில் தன் முதலாளி போலீஸை கூப்பிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. வேறு ஏதோ முக்கிய தகவல் இருக்கும் போல என்று பயந்தவர் எப்படியாவது மாலையில் திருப்பி வைத்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்குள்....விக்ரமின் இன்டலிஜென்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டார்.
எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் மட்டும் என்ன..... அவரும் ஒரு பதிவர்தான்....புதிய வலைப்பூக்களின் தொடர்புகளைப் பார்த்தவுடன் அவர் ஒரு காப்பி எடுத்துவிட்டார்.
டிரிங்க்...டிரிங்க்...ட்ரிங்க்...போனை எடுத்த்த தொழிலதிபர் சகாயம் துள்ளினார்..கிடைச்சுடுச்சா ரொம்ப நன்றி மிஸ்டர் விக்ரம்....ஓ நீங்க ஒப்பன் பண்ணலியா...குட்...குட்....வெரிகுட்...!சரி நான் வந்து வாங்கிக்கிறேன் பென் ட்ரைவ....சரி சார்...வச்சிடுறேன் பை...பை....
துள்ளலுடன்....எஸ்தர் ஐ காட் மை பென் டிரவ் டார்லிங்க்.... ஐ வில் கோ அன்ட் கேட்ச் அப் ஃப்ரம் த போலீஸ்...ன்னு சொல்லிட்டு காரில் தாவியேறினார். அப்பாடா 3 நாள் யூரோப் போன கடுமையான வேலைகளுக்கும் மீட்டிங்க்கும் நடுவுல இந்த வலைப்பூக்கள்தான் நிம்மதி.
அதுவும் நல்ல வலைப்பூக்களை தேடுறதுலேயே நேரம் போயிடுது.... லேப்டப்புல பேவரைட்ல போட்டு வச்சா நாம என்ன படிக்கிறோம் எந்த தளத்துல உலாவுறோம்னு.வீட்டுல வைஃப் எடுத்து பார்க்குறாங்க...அதோட இல்லாம பிஸினெஸ் சம்பந்தமான பேவரிட்டே 100 க்கு மேல...அதனாலதானே பென் டிரைவ்ல தனியா வச்சுக்கிறோம்.
நிம்மதியா டக்குன்னு படிக்கிற மாதிரி நல்ல வலைப்பூக்களை மூணு நாளா தூங்காம காப்பி பண்ணி வச்சு காணமப்போனா....சும்மா எப்டி விடமுடியும்? ஒரு வி.ஐ.பி தொழிலதிபர் நான்......விட்ருவேனா..?
கடைசிவரை இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஏன் சகாயம் இந்த வலைப்பூக்களை காப்பி பண்ணி வச்சார்னு புரியல.....அட உங்களுக்கு புரிஞ்சுதுல்ல...அது போதும்....
சகாயத்தின் கார் சாலையில் பறந்து கொண்டிருந்தது....
பின் குறிப்பு: அடிக்கிறதுக்கு ஆள் அனுப்பிறாதீங்க...எல்லோரும் அருமையான பதிவர்கள்.....ஜாலியா படிச்சு என் ஜாய் பண்ணுங்க பாஸ்....!
அப்போ நான் வர்ட்டா...........!

Sunday, June 20, 2010
அறிமுகத் திங்கள்...!
என்னாச்சுப்பா...உலகம் பூரா இன்டர்னெட்ட தட்டுனா...ஆட்டோமேட்டிக்கா வலைச்சரம் பிளாக் பக்கம் போகுதாமே என்னா மேட்டரு?
" சிங்கத்த...சர்கஸ்ல பாத்திருப்ப, கூண்டுக்குள்ள பாத்துருப்ப, சினிமால பாத்திருப்ப, டி.வில பாத்திருப்ப....ஆனா தனியா காட்டுல வேட்டையாடி பாத்திருக்கியா....கோபமா...இரைய அடிக்கிறத பாத்திருக்கியா....பாத்தது இல்லேல்ல.... நேரா வலைச்சரத்துக்குள்ள போ......போய் பாரு....தேவான்னு ஒரு சிங்கம் ஆக்ரோசமா ஆசிரியர் பொறுப்பேற்றுகிட்டு....ஒரு வாரத்துக்கு ஆட்டம் போட நிக்கிற ஸ்டைல பாரு....ஆனா ஓரமா நின்னு பாரு தாங்க மாட்ட....இந்தியா, அமெரிக்கா...யூரோப், சிங்கப்பூரு, மலேசியா, யூ.ஏ.இ, இலங்கை, இன்னும் லிஸ்ட்ல இல்லாத எல்லா நாட்லேந்தும் யார் நெட்ட தொறந்தாலும்....வலைச்சரத்துக்குள்ள தானா வருவாங்க ஹா.......ஹா.....ஹா..........!"
அட..பில்டப் ஒவரா கொடுத்துட்டனா தப்பா நினைக்காதீங்க...அறிமுக சீனுல்ல அதான் இப்படி...(எத்தன தமிழ்படம் பாத்துருக்கோம்...!)
அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கும் இச்சமயத்தில் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... ஸ்ட்ரெய்ட்டா....மேட்டருக்கு வர்ட்டா.....!
வலைச்சரத்தின் நோக்கம் உன்னதமனது. மிகைப்பட்ட நல்ல இடுகைகளை எல்லோருக்கும் எடுத்துச் சென்று சேர்ப்பதோடு....அறிமுகப்படலம் என்ற திருவிழாவின் மூலம் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை வெளிச்சத்துக்கும் கொண்டுவருவது ஒரு அற்புதமான விசயம்.
பல பிரபல பதிவர்கள் கம்பெடுத்து சுற்றிச் சென்றுள்ள கலம் அதனுள் மெல்ல நுழைந்திருக்கும் சிறுவனாய் நான்...! என்னால் முடிந்த அளவிற்கு நல்ல படைப்பாளிகளை...வெளிச்சத்திற்கு கொண்டு வரவும்... நல்ல படைப்புகளை இனம் காணவும் முயலுகிறேன் உங்கள் ஆதரவோடு...(அட தொடர் இல்லங்க...இன்ரொக்டக்ஷன் தான் பயப்படாதீங்க.....)
என்னுடைய இடுகைகளில் எனக்கு எல்லாம் பிடிக்கும் என்றாலும்....ஒரு தகப்பனின் வலியை, பொறூப்புகளை மெலிதாய் உணர்த்தும் " இரண்டு இட்லி கொடுப்பா...." எழுதிக்கொண்டு இருக்கும் போதே எனக்கு கண்ணீரை வரவழைத்த ஒரு கட்டுரை.
ஹெல்மெட் மிக அவசியம் அது ஒரு குடும்பத்தில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கும் என்றெண்ணிய போது ஜனித்த" விபத்து..." என்ற சிறுகதை.
பயணங்களின் போது ஏற்படும் நடைமுறை சிக்கலை எண்ணி எழுந்த கோபத்தில் விளைந்த" பணம் தேவையில்லை மனமே போதும் ..." என்ற கட்டுரை.
மது அரக்கனைப் பற்றிய விழுப்புணர்வு சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்....மேல் வர்க்கத்தினர் எல்லாம் விழிப்புணர்வோடு அளவோடு மது அருந்தும் போது எமது மக்கள் விழிப்புணர்வின்றி அதிகம் குடித்து அழிகின்றனரே.....என்ற ஆதங்கத்தில் எரிய விட்ட..."பொன்னத்தாவின் புலம்பல்..." என்று சொல்லிக் கொண்டே சுயபுராணம் வளர்க்க விருப்பமில்லை தோழர்களே....
எம் சக தோழர்களும், தோழிகளும், அதி அற்புதமான படைப்புகளை படைத்துள்ளார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த வலைச்சரம் எனும் பெரு நெருப்பின் துணையோடும், உங்களின் ஆதரவோடும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயல்கிறேன்......!
தேவா...கவுண்ட் டவுன் ஸ்டார்ட்......!அடுத்த பதிவில்.... நீங்கள் சொடுக்குமிடமெல்லாம்...இருப்பார்கள் அற்புத பதிவர்கள்......!
இப்போதைக்கு....வர்ட்டா.....!

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் நீச்சல்காரன், ஏற்ற பணியினை சிறப்பாக நிறைவேற்றி, மன நிறைவுடன் இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் பல கதா பாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் மூலம் பல பதிவர்களை அறிமுகம் செய்து, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 70க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். இவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நமதருமை நண்பர்,ஜெயிக்கப்பிறந்தவனான தேவா. இவர் WARRIOR என்ற வலைப்பதிவினில் எழுதி வருகிறார். இவர் இது வரை எழுபதுக்கும் அதிகமான இடுகைகள் இட்டிருக்கிறார். பலவேறு தலைப்புகளில் எழுதி வருகிறார். இவரை எண்பதுக்கும் மேலான பதிவர்கள் பின் தொடருகின்றனர். மூன்றே மாதத்தில் இவர் வலையுலகில் ஒரு முக்கிய பதிவர் ஆகி விட்டார்.
நண்பர் தேவா துபாயில் ஒர் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குருக்கத்தி என்னும் கிராமம்.வரலாற்று நாவல்களில் அதீத ஆர்வமுடையவர். தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டவர். திருவாச்கம், தேவாரம், மணிமேகலை,நாலடியார், குறுந்தொகை, திருமந்திரம், சிலப்பதிகாரம் ஆகியவை இவரது வீட்டில் உள்ள சிறு நூலகத்தினை அலங்கரிக்கும் நூல்கள்.
நண்வர் தேவாவினை வருக வருக என வரவேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள்

ஞாயிற்றுக்கிழமை எலி நாடுதிரும்பல்
{அட்மின், கேம்ஸ், அட்டை, கரச்சான்,எலி ஆகிய ஐவர் குழு புதையல் எடுக்க கிளம்புகிறது}
பிலிகிரி கேம்ஸ்: எலி சீக்கிரம் வா கிளம்பனும்
எலி: இருங்க மலையேறுற ட்ராக் சூட் எடுத்துக்கிறேன்.
பிலிகிரி கேம்ஸ்: எலி நாம்ம புதையல் எடுக்க காட்டுக்குள்ள போகலை. நேர பிரவுசிங் சென்டர் போயி பாஸ்வேர்ட் கண்டுபிடுச்சு புதையலை டவுன்லோட் செய்யப்போறோம் அவளவுதான்.
எலி: ஓ அப்படியா! ஓகே
பிலிகிரி கேம்ஸ்: அப்புறம் முக்கியமான விஷயம் நாம புதையல் எடுக்கப் போறவிஷயம் சாவிக் கட்டைக்குத் தெரியக் கூடாது. புதையல் நம்ம கைக்கு வந்தபின்னாடி அத வச்சே இந்த சாவிக்கட்டைகிட்ட இருந்து விடுதலை வாங்கணும்.
அட்டை:சரி அந்த க்ளுவை பிரிச்சுப் படிங்க
எலி: ம் மோதல் கேள்வி பொங்கல் வைக்கும் பானை உடைந்தால் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?
எ) உடைந்த பானையை செலோடேப் போட்டு ஒட்டி பொங்கல் வைப்போம்
பி) பானை உடைந்ததற்குக் காரணம் அரசு தான் என்று அறிக்கைவிட்டுவிட்டு வேலை செய்யாமல் நிவாரண நிதிக்காக காத்திருப்போம்
சி) பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு கேசரி செய்வோம்
டி) பானை உடைந்த அனுபவம் என்று பதிவேழுதுவோம் ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடுங்க
"நான் தேடுன வரைக்கும் பதில் கிடைக்கல ஆனால் திருடன் மண்டை உடைக்கிற மாதிரி ஒரு பதிவு கிடைச்சுருக்கு "
"இங்க பாருங்க பொங்கல் மாதிரி ஒருத்தர் பின்னூட்டத்திலே படையல் வச்சுருக்காரு சபாஸ். "
"என்னப்பாருங்க பொங்கல் போனா என்ன இதோ பாட்டி வடை இருக்கே ஏதோ திங்க கிடைச்சதேனு போங்கப்பா!"
"எனக்கென்னமோ அறிக்கை விடுறதுதான் சரின்னு படுத்து காரணம் நம்ம பதிவர்கள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகள்ப்பா"
"யாராவது பானை உடைஞ்சா தண்ணிக் கொட்டும்னு யோசிச்சேங்களா? தண்ணியப் பத்தி பார்த்தபின்னாடி தான் தெரிஞ்சுச்சு"
எலி: சரி கடைசிய பதிலென்ன? ஒன்னு செய்வோம் பாயிண்டரம்மாவுக்கு போன் பண்ணி கேட்போம்....

//பாயிண்டரம்மா: எனக்குத் தெரிஞ்சு பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு சுடுதண்ணி வைக்கலாம். //
எலி: ம் பதில் ஆப்சன் இல்லையே! பதில் ஒரே கஷ்டமா இருக்கே பேசாம இதையே ஒரு பதிவாப் போடலாமா?
அட்டை:கண்டுபிடுச்சுட்டேன் பதில் 'டி' ...[எண்டர்].
கரச்சான்:ம் அதான் கரெக்ட் அடுத்த கேள்விய படிங்க
எலி: தமிழில் மொத்தம் எத்தனைப் பதிவர்கள் உள்ளனர்?
எ)ரெண்டு
பி)இருநூறு
சி)இரண்டாயிரம்
டி) தெரியாது.
"நான் இப்பவே சொல்லிட்டேன் நான் கணக்கில வீக்கு. இந்த மாதிரி நல்ல பதிவு முப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா நான் படிச்சிருப்பேன்."
"எனக்குத் தெரிஞ்சு ஒரு பதிவர் இந்தாங்க இவரும் பதிவர்தான் "
"இவர் சொல்றமாதிரி இத்தனை தினம் இருக்கு ஆனால் பதிவருக்குனு தனியா தினம் இருக்கா? அப்புறம் எப்படி கண்டுபிடிக்கிறது."
எலி: எனக்கென்னமோ இது கஷ்டமா கேள்வியாத்தெரியுது அதனால சாட்டிங் செய்து கண்ட்ரோல் சார்கிட்ட கேட்போம். .... **சார் இந்த கேள்விக்குப் பதிலை ஒரு யூஸ் அன் த்ரோ மெயிலில் அனுப்புங்க சார் ***
அட்டை:மெயில்ல அவருக்குத் தெரியாதுன்னு அனுப்பியிருக்கார் அப்ப தெரியாதுதான் பதில் .[எண்டர்]...ம்
கரச்சான்: அதான் கரெட் சபாஸ் அடுத்த கேள்வி,
பிலிகிரி கேம்ஸ்: கடைசி கேள்வி சரியா பதில் சொன்னா புதையல் இல்லாடி எல்லாம் போச்சு
எலி: பதில்களற்ற அடங்காத கௌரவ இலக்கியம் எது?
"எப்பா கேள்விக்கு களு எதுவும் கிடையாதா! அப்ப முடியாதுடா சாமி. மரண கேள்விடா "
"ம் தேடுங்க இதுக்கு பதில் கிடைச்சாத்தான் புதையல் விடாதீங்க.."
"ம் இலக்கியம் பத்தி இவரு அழகா சொல்லிருக்காரு இதா இருக்குமோ"
"இங்க பாருங்க பதில்களற்ற மடல் பத்தி நிறைவா இவர் சொல்லிருக்கார் இதையும் படிங்க "
"அடங்காத கவிதைய இவர் சொல்லிட்டாரு இதையும் படிங்க "
"கௌரவம் பற்றி புட்டு புட்டு வச்சுட்டாரு நம்ம பதிவர் இதையும் படிங்க "
எலி: ஏங்க பதில் இந்த நாலுல தான் இருக்கும். யோசிங்க ...
அட்டை:எனக்கென்னமோ இதுவாத்தான் இருக்கும் [எண்டர்]..
"ஐயையோ.. கம்ப்யூட்டரே எரர் ஆயிருச்சே! புதையல் போச்சா!"
"அட்டை புதையலை கோட்டை விட்ட "
"டேய் எதடா பதிலாக் கொடுத்த? "
அட்டை: நான் ... நான் ..இலக்கியம் அப்படிங்கிறதால இந்த சோப்பு டப்பாவ கவிதைனு நினைச்சு கொடுத்தேன் அதான் டோட்டலா போச்சு!
"போடா இவனே புதையல் எடுக்க வந்த நமக்கு டப்பாக் கூட மிஞ்சலையே! இனி இந்த சாவிக் கட்டைய எப்படி மிரட்டுறது! போச்சு எல்லாம் போச்சு! அந்த பேப்பர்ல வேற ஏதாவது எழுதியிருக்கா?"
"ம்.. இந்த கடிதத்தின் அஞ்சல் செலவு பராம்பரிப்பு http://tamilpoint.blogspot.com இந்த தளத்திற்கு வந்தால் இலவசமாக படிக்கலாம்."
"ச்சே! எதுக்கெல்லாம் விளம்பரம் கொடுக்கிறதுன்னு வெவஸ்தையே இல்லை. கட்டையால அடிப்பேன். "
"நான் கடைசியில செத்து பிழைச்சவன்டானு இவரப் போல பதிவு போடணும்னு நினைச்சேன் ஆனா செத்து தொலைஞ்சவனா ஆக்கிட்டேயே!"
"நான் இவர் சொல்ற டிப்ஸ் படி பிரபல பதிவராக ஆசைப்பட்டேனே இனி என்ன செய்ய? சாவிக் கட்டையோட கொடுமையிலேயே போக வேண்டியதுதான்."
"இது போல வித்தியாசமா நிறைய பாட்டை வச்சு கதை எழுத ஆசைப்பட்டேனே இப்ப என்ன செய்ய?"
"இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க ஆளில்லையா? இது போல ஒரு ஹீரோ இனி பிறந்து வருவானா?"
[[[க்ளைமேக்ஸ்சில் மழை எதிர் பார்த்து வராததால் மழைய பத்தி எல்லாரும் இங்க படிச்சுக்கோங்க - இப்படிக்கு கலை இயக்குநர்]]]
சாவிக் கட்டை: என்ன மேன் பார்க்குறீங்க! ஹீரோ வருவான்னு பாத்தா இந்த ஜீரோ கோட்டை சாவிக் கட்டை வந்துட்டான்னு பார்க்கிறீங்களா!
கவலைப் படாதீங்க சாவிக் கட்டை திருந்திட்டான். நான் உங்களுக்கு முன்னாடியே எங்க ஆட்களை வச்சு புதையலையும் எடுத்துட்டேன்.
"எடுத்தாச்சா!"
சாவிக் கட்டை: ஆமா, அந்த புதையல்குள்ள பஸ்ட் ஸ்டாண்டர்ட்லயிருந்து ப்ளஸ் டு வரையுள்ள தமிழ் புக்கு இருந்துச்சு .
திரைக்கை:ஆமா நானும் அவரும் எழுத்துக் கூட்டி படிச்சு தமிழ் கத்துகிட்டோம். அதைப் படிச்சதும் உங்க பதிவுகள் மேல இருந்த வெறுப்பு போயி பொறுப்பு வந்திருச்சு. படிச்சுப் பார்த்ததில உங்க பதிவெல்லாம் டாப்பு
திரைக்கை: இதைப் போல புதுப் பதிவர்களின் பதிவு இங்கிலீஸ்லையும் தமிழையும் இருப்பதால் ஈசியா படிச்சுட்டோம்.
திரைக்கை:அப்படியே தப்பு விட்டாலும் இந்த பதிவைப் படிச்சு திருத்திக்கிட்டோம்.
சாவிக் கட்டை:எல்லாத்துக்கும் காரணம் நம்ம எலிதான். எலிகிட்டையே கேளுங்க. நாங்க உங்க ஒப்பந்தங்களைஎல்லாம் எடுத்துட்டு வந்து தந்திருறோம். நல்ல நல்ல பதிவுகளெல்லாம் போடுங்க. நாங்களும் பதிவு எழுதுறோம். இப்போதைக்கு போயிட்டு வாறோம் [இருவரும் சென்று விடுகிறார்கள்.]
XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
"எலி, நீ என்ன பண்ண? "
எலி: நீங்க என்னை பதிவு போட சொன்னீங்களே அதனால சந்தையிலிருந்து ஸ்கூல் புக்க வாங்கி காபி பேஸ்ட் பண்ணலாம்னு வாங்கிகிட்டு வரவழியில சாவிக் கட்டை ஆட்கள் என்னை மறிக்க, நான் அதான் புதையல் என்று உரைக்க, அதை அவர்கள் பறிக்க, நான் ரசிக்க வீட்டுக்கு வந்திட்டேன். கடைசியா அந்த புத்தகம் உண்மையிலே அவர்களுக்கு ஒரு புதையல்தான். உண்மையான புதையலை விட உண்மையான மனிதர்கள் விலை மதிப்பற்றவர்கள் அது இங்க நடந்திருச்சு. அதனால இனி எல்லாருக்கும் மகிழ்ச்சி.
பிலிகிரி கேம்ஸ்: இந்தாங்க உங்களுக்குச் சேர வேண்டிய பேனா!
எலி:ரொம்ப நன்றி! நானும் கிளம்புறேன்! அடிக்கடி இந்த ஊருக்கு வாறேன்.
.
"பேனாவ எடுத்துட்டு பேப்பர விட்டுட்டுப் போறேங்களே"
எலி:பேப்பர் உங்களுக்கு
எடிட்டர் கார்னர்: | |
திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே புதன்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே வியாழக்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே விளம்பர இடைவேளை இங்கே சனிக்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர. அந்த பிளாக்கர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில, ப்ளாக்ஸ்பாட் காம்ப்ளெக்ஸ் கடைசி ஏரியா நம்மளோடது தான் http://neechalkaran.blogspot.com http://ethirneechal.blogspot.com ரெண்டாம் நம்பர் கூகிள் பஸ்ல ஏறி இந்த முகவரிய யார்கிட கேட்டாலும் சொல்லிருவாங்க மறக்காம வாங்க, வலைச் சரத்திலிருந்து விடை பெறுகிறேன். -நன்றியுடன் நீச்சல்காரன் |
Saturday, June 19, 2010
சனிக்கிழமை எலி சேட்டை
எலி: எம்மா இந்த புறாவா வறுக்கவா? இல்ல பொரிக்கவா?
பயிண்டரம்மா: புறாவா டேய் எலி இது மைனா டா
எலி: அப்படியா, டெக்னாலஜி ரொம்ப வளர்ந்திருச்சுமா புறாவா அனுப்பினா பொரிச்சு தின்னுருவோம்னு எவனோ மைனாவில தூது அனுப்பியிருக்கான். இருந்தாலும் பரவாயில்ல மைனாவ பிரியாணி போட்டுருவோம்.
பயிண்டரம்மா: தூதா! அது என்னனு சொல்லி?
எலி: இருங்க வாசிக்கிறேன், "அன்புக்குரிய வலைச்சர ஆசிரியருக்கு,
நான் ரொம்ப நாளா வலைச்சரத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீப காலமாக நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று ரீமிக்ஸ் என்கிற பேரில் இந்த வார ஆசிரியர் போடும் மொக்கையால் அட்கொள்ளா துயரில் டெம்ப்ரவரியாக படிப்பதை நிறுத்தியுள்ளேன். அதனால் அந்த ஆசிரியரை ஞாயறு மாலைக்குள் பணி நீக்கம் செய்ய வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். உடனே என்னக் காரணம் என்று நீங்கள் கேட்டால் மேலே படிக்கவும்.
ஏழாவது அறிவு என்று ஒரு பதிவர் அருமையாக கவிதைகளை எழுதுகிறார், சிறிய வரிகளில் சிறப்பாக சொல்லும் இவரை அறிமுகப்படுத்தவில்லை.
மன விழி என்று குறுகிய வரிகளில் நிறைவாக மனதில் தங்கும் வரிகளை எழுதும் இவரையும் அறிமுகப்படுத்தவில்லை
அனுபவ சித்தன் குறிப்பு என்று சிறு சிறு கவிதைகளை பெரிய ரசனையோடு எழுதும் இவரையும் அறிமுகம் செய்யவில்லை
தமிழனின் வாசல் என்று எட்டு வரிக்கவிதையை நளினத்தோடு எழுதும் ஒரு கவிஞரையும் அறிமுகம் செய்யவில்லை.
கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற மொழியோடு வார்த்தைகளால் நம்மைக் கட்டிப்போரும் ஒரு பதிவரையும் அறிமுகப்படுத்தவில்லை.
ஒற்றைச் சிறகின் பயணம் என்று வெகுநாட்களுக்கு முன்பு வரை சிறப்பாக எழுதிவந்த ஒரு பதிவரை அடையாளப்படுத்தவில்லை.
எளிய தலைப்புகளில் வலிய கருத்துக்களைச் சொல்லும் இந்த பதிவரையும் இனம் காட்டித் தரவில்லை.
ஆகையால் இவ்வார ஆசிரியரை கடுமையாக ......."
அட இது அட்ரஸ் மாறிவந்த கடிதாசி, நாங்கூட நமக்கு வந்ததோனு நினைச்சுட்டேன்.
பயிண்டரம்மா: ஆனால் இவர் குறிப்பிடுற பதிவர்கள் எல்லாம் சூப்பரு. சரி சரி மைனாவிலையே கட்டிவிடு சேர வேண்டிய இடத்தில சேர்ந்தா சரி.
எலி: அம்மா கட்டிவிட்டா அப்ப மைனா!
பயிண்டரம்மா: கட்டிவிடாலேனா நைனாகிட்ட சொல்லிருவேன்!
{ப்ளாக்பட்டி ஊர் போஸ்ட் மாஸ்டரிடம் போன் செய்து எலி கேட்கிறார்}
எலி: ஏப்பா போஸ்ட் மாஸ்டரே! வரிஅச்சு நகர்லயிருந்து ஏதாவது கடிதாசி வந்துச்சா?
போ.மா.: இல்லையே சார் ரெண்டு நாளா எந்த கடுதாசியும் வரலையே! சபாஸ் சூப்பரு.
எலி: ஹலோ இது போஸ்ட் ஆபிஸ்தான, எதுக்கு சபாஸ்?
போ.மா.:சாரி சார், கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன் இந்த மாணவியப் பத்திப் படிச்சுகிட்டுயிருந்தேன் அதான்.
எலி: சரி சரி கடுதாசி வந்தா அனுப்பிவையுங்க
போ.மா.:திருந்தவே மாட்டேங்களாட! ஒருதடவ சொன்னா தொரியாதா?
எலி: இங்க பாருங்க நான் என்ன கேட்டேன்னு இப்படி திட்டுறீங்க ?
போ.மா.:அய்யோ சாரி சார், விபத்துக்களைப் பத்திய அருமையான பதிவைப் படிச்சதும் கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன்.
எலி: சரி அப்படியே உங்க ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லிருங்க
போ.மா.:அதுக்கு சட்டத்தை தயிரியமா அனுகுங்க
எலி: சம்மந்தமில்லாம பேசிறீங்க எதுக்கு சட்டத்தை அணுகனும் இது குடியுரிமைதானே
போ.மா.:அய்யோ நான் உங்கள் சொல்ல சார், இணைய பாதுகாப்புப் பத்தி படிச்சேன்ன அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.
எலி: ஒக்கே என்ன வச்சு காமெடி பண்ணலைலே
போ.மா.:பார்த்தா பாவமாத் தான் இருக்கு
எலி: எனது பாவமிருக்கா சார் எனக்கு வந்தா கடுதாசிய படுச்சு பார்த்துட்டேங்களா
போ.மா.:சார் திரும்ப சாரி நான் மதுரை பெரியாஸ்பத்திரி பத்திப் படிச்சேனா அதான் கொஞ்சம் எமோசன்
எலி: சார் ரொம்ப கோவம் வரவைக்காதீங்க சார்
போ.மா.:நீ கோவப்பட்டால் நானும் கோவப்படுவேன்.
எலி: இப்ப என்ன சொல்லப் போறீங்க
போ.மா.:மறுபடியும் சரிசார் இந்த முன்னேற்ற பதிவைப் படிச்சதும் எமோஷன் ஆகிட்டேன்.
எலி: சரி வெண்ணை
போ.மா.:இங்க பாருங்க எலி, இப்படியெல்லாம் திட்டுனா உங்க கடுதாசிய கொடுக்க மாட்டேன்.
எலி: சார் நானும் ஒரு நல்ல கவிதைய படிச்சுட்டு அதோட பேரத்தான் சொன்னேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: என்ன எலி நம்ம பதிவர்களோட பதிவெல்லாம் வாசிச்சேங்களா?
எலி: ஆமா எதிரின்னு ஒரு பதிவப் படுச்சேன் உடனே சாவிக் கட்டைய மன்னிச்சுருலாம்னு தோனுச்சு
கண்ட்ரோல் பாண்டியன்: அய்யா! வில்லன் இல்லாட்டி கதை நகராதுய்யா அந்தப் பதிவு நிஜ வாழ்க்கைக்குப் போருந்தும்ய்யா
எலி: அப்புறம் திடீர் உறவுகளைப் பத்திப் படிச்சேன்யா அந்த திரைக்கைய நண்பனா ஆக்கிகலாமனு யோசிச்சேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: ஆக்கிக் கலாம் ஆனா திரைக்கை உன்னை புரிஞ்சுக்கனும்ல
எலி: அடுத்து கட்டபொம்மனைப் பற்றிப் படித்தேன்ய அப்படியே பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓடிருலாம்னு நினைச்சேன்யா
கண்ட்ரோல் பாண்டியன்: ஏப்பா எலி நம்ம கதைய முடிச்சுக் கொடுத்துட்டு என்கவேனாம் போ மகராசா
எலி: ஞாபகக் குறிப்பைப் பற்றிப் படிச்சேன்யா அந்த ஊருக்குப் போகலாம்னு நினைக்கிறேன்யா
கண்ட்ரோல் பாண்டியன்: இங்க பாரு நீ நல்ல நல்ல பதிவெல்லாம் படிக்கிற சரி ஆனால் நம்ம கதைக்கு ஏத்தமாதிரி மட்டும் நடந்துக்கோ
கரச்சான்: எலி வரிஅச்சு நகரிலிருந்து கடிதாசி வந்திருச்சு! வந்து பாரு.
எலி: சீக்கிரம் பிரி எங்க மாமனாரு என்ன சொல்லிருக்காருன்னு படி!
கண்ட்ரோல் பாண்டியன்: எ எலி உனக்கு இன்னம் அந்த நினைப்பு இருக்கா!
எலி: ஆமா ஒரு கதையினு இருந்தா எப்படியும் க்ளைமேக்ஸ்ல ஒரு ஹீரோயின் எனக்குத்தான். அப்புறம் ஒரு டுயட் அப்புறம் இது மாதிரி கலாய்க்கிற கவிதை எல்லாம் எழுதணும் அப்படின்னு காதல்கோட்டை ரேஞ்சுக்கு நினச்சுகிட்டுயிருக்கேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: உண்மையில இந்த கடுதாசியில் அந்த சாவிக் கட்டை தேடுற புதையலுக்கான பாஸ்வேர்ட் க்ளு இருக்கு இங்க பாரு எலி உன்னோட சேட்டையெல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு எங்களோட சேர்ந்து அந்த புதையல எடுக்கிற வழியப் பாரு அப்பத்தான் உனக்கு அந்த பேனாவைத் தருவோம்.
கண்ட்ரோல் பாண்டியன்: சரி அந்த வரிஅச்சு தலைவர் அட்மின்னுக்கு நாளைக்கு நம்ம ரெண்டு ஊரும் சேர்ந்து புதையலை எடுக்கலாம்னு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க
புதையல் வேட்டை நாளையுடன் நிறையும்...
எடிட்டர் கார்னர்: | |
திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும் செவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும் புதன்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும் வியாழக்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும் ப்ளாக்பட்டியை சேர்ந்த கதாப்பாத்திரங்கள். எலி கண்ட்ரோல் பாண்டியன் அட்டை கரச்சான், பயிண்டரம்மா: ஜீரோ கோட்டை சேர்ந்த கதாப்பாத்திரங்கள். சாவிக் கட்டை திரைக்கை வரிஅச்சு நகரச் சேர்ந்த கதாப்பாத்திரம் அட்மின் இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர -நீச்சல்காரன் |