07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 16, 2010

புதன்கிழமை எலி பதிலடி

பெரியவர்:கொஞ்ச நாளைக்கு முன்னாடி 123 ஒப்பந்தம் ஒன்னு போட்டிருக்கு 
எலி:123 ஒப்பந்தமா?
ஆமாம் கேளு,..

******************flash back************************* 
{ப்ளாக்பட்டியும் திரைக்கையும் சந்திக்கிறார்கள்.}
ஐயா ஆத்திர அவசரத்துக்கு கூட பதிவு எழுதக் முடியலையா? அதுனால கொஞ்சம் தொடர் பதிவு எழுத உரிமைக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.
சரி. 
ஒப்பந்தம் நம்பர் ஒன்னு, தொடர் பதிவுக்கு யாரை அழைச்சாலும் அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னாடி எங்களிடம் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும்.
ஒப்பந்தம் நம்பர் ரெண்டு, தொடர் பதிவுல யாருக்காவது விருது கொடுத்தா அதற்கு எனக்கு ஒரு பாராட்டு விழா கட்டாயம் எடுக்கணும்.
ஒப்பந்தம் நம்பர் மூனு, தொடர் பதிவுக்கு கமெண்ட் போடுபவர்கள் கட்டாயம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். 
ஒப்பந்தம் நம்பர் சைவர், எந்த தொடர் பதிவு போட்டாலும் முத்திரைத் தாள் வாங்கித்தான் பதிவு செய்யணும். இதுதான் 123 ஒப்பந்தம். வேற ஏதாவது டௌட்யிருக்கா?
....
என்ன டவுட்?
கும்மி அடிச்சுக்கலாமா?
மூனு நாளைக்கு ஒருமுறை அடிச்சுக்கலாம் முடிஞ்ச அளவு அடுத்தவுங்க நல்ல திட்டனும்.
****************************
எலி:கொடுமையா இருக்கே! அப்ப யாரும் தொடர் பதிவு எழுத மாட்டீங்களா?
பிலிகிரி கேம்ஸ்: அதுதான் இல்ல, சாவிக் கட்டையபோல திரைக்கைக்கும் படிக்கத் தெரியாது, அதனால அவன் கையெழுத்து வாங்கினது கொசு மருந்து ஒப்பந்தம்.
இங்க பாருங்க நம்ம ஐயா தீபாவளியை இனிக்க இனிக்க எழுதியிருக்கார் 
எலி: தீபாவளியா! எனக்கு இதுதான் முதல் தீபாவளி.
பிலிகிரி கேம்ஸ்:அதே போல நண்பர் ஒருவர் தனது முதல் தொடர் பதிவை இனிமையாக எழுதியிருக்காரு.
எலி: எந்த விஷயமும் முதல் முதலில் செய்வதில் இருக்கும் கட்டுக்கடங்காத பிரியமே தனிதான்.
பிலிகிரி கேம்ஸ்:ஆனால் இந்த சகோதரி தனது வாசிப்பு அனுபவித்தை படித்தால் உன்னையும் கட்டிப் போடும் 
எலி: கேட்கவே ரம்யமாயிருக்குதே !
பிலிகிரி கேம்ஸ்:சரி அப்ப போய் பார்த்துத்து வா! இதோ நம்ம நண்பர் நல்ல படங்களை லிஸ்ட் போட்டுருக்கார்.
எலி:இப்படி வரிசைப் படுத்துவதே தனி அழகு.
பிலிகிரி கேம்ஸ்:இங்க பாரு நம்ம சகோதரி துறை வாரியா வரிசைப்படுத்தப்பட்ட பிரபலங்கள் லிஸ்ட் கொடுத்துருக்காங்க. எங்க ஊர் பெண்களைப் பத்தி நல்லத் தெரிஞ்சுக்கோ.
எலி: நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டிடேங்க. கண்ட்ரோல் சார்,  எங்க சார் உங்க மகள் கதையோட ஹிரோயின், இன்னும் கண்ணுலையே காட்டலையே!
கண்ட்ரோல் பாண்டியன்:  ஏய் எலி ரொம்ப பேசுறான் இவன வில்லன்கிட்ட விட்டாத்தான் சரிப் படுவான். அந்த திரைக்கைக்கு எலி வந்துட்டான்னு ஒரு மெயில் அனுப்புங்க கேம்ஸ்.

{"எனது எலி வந்தாச்சா!" என்ற பின்னணி இசை ஒலிக்க, திரைக்கை எலியை சந்திக்க வருகிறான்.}  
எலி: ஹி ஹி 
திரைக்கை: ஏன் சிரிக்கிறன்னு தெரிஞ்சுக்கலாம?
எலி: ஆப்பு. கிட்னாப்பு 
திரைக்கை: கிட்னாப்பா! 
****flash back****
திரைக்கை: ஏய் நான் உன்னவிட வேகமா குதிர ஓட்டுவேன் பார்ப்போமா? ஏய் பா.ர்.போ.மா. நான் உன்ன கிட்னாப் பண்ணா எங்க ஜீரோ கோட்டைக்கு இட்லியாகிருவா?
எலி: ஹிம். நான் உன்னை கிட்னாப் பண்ணா எங்க ஆயாக் கடை இட்லிக்கு சட்னியாகிருவ  
**********************************
திரைக்கை: நம்ம தேர்தல் வாக்குறுதி மாதிரி நீ பிளாஸ்பேக்ல  பார்த்தா திரைக்கை வேற இப்ப பாக்கிற  திரைக்கை வேற எல்லாத்திலையும் 13 மடங்கு பயிற்சி எடுத்திருக்கேன். மோதிப் பார்ப்போமா!
திரைக்கை: ஏய் நாங்க எல்லாம் ஐடியாவை கடன் வாங்கியாவது ஆப்பு வைப்போம் டா!
எலி: ஏய் இந்த எலி தப்பா ஐடியா கொடுக்கிறவனுக்கும் சேர்த்து ஆப்பு வைப்பாண்டா. இவரோட இந்தப்பதிவைப் போல 
 திரைக்கை: ஏய் நாங்க கடிச்ச சக்க கூட மிஞ்சாது
எலி: நாங்க கடிச்ச புட்பாலும் தாங்காது  கடியா, பார்கிறய இங்க 
திரைக்கை: ஏய் நாங்க பொறந்த அன்னைக்கே தூள் கிளப்பிட்டோம்
எலி: ஏய் நாங்க பொறந்த அன்னைக்குன்னு பதிவ எழுதியே தூள் கிளப்பிட்டோம். 
திரைக்கை: ஏய் நான் தில்லாலங்கடிக்கே தில்லாலங்கடி
எலி: ஏய் தில்லாலங்கடிக்கு நாங்க கொடுத்த கட்டையடியை கொஞ்சம் பாரு 
திரைக்கை: ஏய் வழக்கமா வரவனில்ல நான் விளக்காம உனக்குச் சொல்ல!
எலி: ஏய் வழக்கமா வரதெல்லாம் நாங்க விளக்கமா சொல்லிட்டோம் அதனால் டிபரெண்ட யோசி! 
திரைக்கை: ஏய் நான் ...
எலி: நிறுத்துடா மொத மனிதரா வாழ இந்த புத்தக விமர்சனத்தைப் படி. அகத்தீயை புரிஞ்சுகோ 
திரைக்கை: ஏய் எனக்கு கோவம்  வந்திருச்சு. கோவம் வந்த கம்ப்யூட்டர் வைரஸ்ஸ கக்கும்னு தெரியாது!
எலி: ஏய் இந்த எலி ஆண்டி வைரஸ் கையால செருப்படி வாங்கினா எல்லாம் சரியாகிரும். 
எலி: போ போயி சாவிக் கட்டைக்கிட்ட சொல்லு ஜீரோ கோட்டைக்கு சீல் வச்சுட்டு பொழைக்கச் சொல்லு இல்ல அய்யாவோட நல்ல மருத்துவக்குறிப்ப பார்த்து ரெடியா இருக்கச் சொல்லு.
கண்ட்ரோல் பாண்டியன்: சபாஸ் நம்ம எலி பதிலடியில பின்னுறாரு.


திரைக்கையின் பதிலடி என்ன?
தொடரும்...

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/277780/
எடிட்டர் கார்னர்:

திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்.
செவ்வாய்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்.
இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்

11 comments:

  1. அன்பின் நீச்சல்காரன்

    அருமையான இடுகை - அறிமுகங்கள் எத்தனை எத்தனை - அததனையும் சென்று பார்த்து படித்து மறுமொழியும் இட்டு வந்தேன் - பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள் நீச்சல்காரன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அருமை நீச்சல் சார்
    இருங்க எல்லோரையும் பாத்துகினு வந்துடுறன்

    ReplyDelete
  3. Thank you for introducing my "thodar padhivu", நீச்சல்காரன் சார்.
    The way that you introduce is nice. :-)

    Thank you, Cheena Sir for your comment. :-)

    ReplyDelete
  4. நன்றி நீச்சல்காரன் என்னை அறிமுகப்படுத்தியதற்கு

    ReplyDelete
  5. மிகவும் மாறுபட்ட முயற்சியில் பல அறிமுகங்கள் இன்று . வாழ்த்துக்கள் நீச்சல்காரன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. மிக்க நன்றி.. என்னுடைய சரியான பதிவை தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தியமைக்கு ...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது